Daily Archives: நவம்பர் 23rd, 2011

அரவணைப்புகளையும், முத்தங்களையும் விரும்பும் ஆண்கள்!

செக்ஸ் உறவை விட நிறைய முத்தமும், அரவணைப்புகளும், தழுவுதல்களும்தான் ஆண்களின் முக்கிய விருப்பமாக இருக்கிறதாம். அதேசமயம், பெண்களைப் பொறுத்தவரை செக்ஸ் உறவில்தான் அதிக நாட்டம் இருக்கிறதாம்.

இந்த வித்தியாசமான தகவலை ஒரு ஆய்வு முடிவு சொல்லியுள்ளது. இதுவரை இதை உல்டாவாகத்தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் ஆண்களுக்கு செக்ஸ் உறவை விட தங்களது காதலி அல்லது மனைவி தங்களுக்கு அதிக அளவில் முத்தமிடுவதையும், கட்டித் தழுவுவதையும்தான் அதிகம் விரும்புகிறார்களாம்.

அதேசமயம், பெண்களைப் பொறுத்தவரை அதிக அளவிலான செக்ஸ் உறவையே தங்களது பார்ட்னர்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்களாம்.

ஒன்று முதல் 51 ஆண்டு காலம் இணைந்து வாழும் 5 நாடுகளைச் சேர்ந்த 1000 தம்பதிகளை இந்த ஆய்வுக்காக பேட்டி கண்டு அவர்கள் மூலம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

ஆய்வு முடிவுகளின்படி, திருமணமாகி 15 ஆண்டுகளைப் பூர்த்தி செய்து விட்ட பெண்களுக்கு செக்ஸ் உறவு குறித்த நல்ல அறிவும், ஞானமும் ஏற்படுகிறதாம். இந்த விஷயத்தில் ஆண்களை விட பெண்களுக்குத்தான் செக்ஸ் குறித்த முழுமையான ஞானம் இருப்பதாக தகவல் கூறுகிறது.

செக்ஸில் ஆண்களுக்கு எது அதிகம் பிடிக்கிறது என்ற கேள்விக்கு நிறைய முத்தமுமம், கட்டிப் பிடிப்புகளும்தான் என்று பெரும்பாலான ஆண்களிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது. அடிக்கடி தங்களை மனைவியர் கட்டிப் பிடிப்பது மிகவும் பிடித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

அதேசமயம், முத்தம் மற்றும் கட்டிப்பிடிப்புகளை பெண்கள் அதிகம் பொருட்படுத்துவதில்லையாம். மாறாக, செக்ஸ் உறவுகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள்.

என்னதான் கட்டிப்பிடிப்புகளும், முத்தங்களும் அதிகம் பிடித்தமானவையாக இருப்பதாக ஆண்கள் கூறினாலும் கூட செக்ஸ் உறவுகளுக்கும் அவர்கள் முக்கியத்துவம் தருகிறார்களாம். ஆணும் சரி, பெண்ணும் சரி செக்ஸ் உறவு என்பது நிம்மதியான மகிழ்ச்சியைத் தரும் அனுபவமாக அது இருப்பதாக பொதுவான கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு இந்தியாவில் நடத்தப்படவில்லை. எனவே இந்தியர்களின் மன நிலை குறித்த அளவீடாக இதை எடுத்துக் கொள்ள முடியாது. இருந்தாலும், நீடித்த மகிழ்ச்சிக்கும், அளவில்லாத நிம்மதிக்கும், செக்ஸ் உறவு மட்டுமல்லாமல், சின்னச் சின்ன முத்தங்கள், அன்பான கட்டித் தழுவல்களும் அவசியம் தேவை என்பது முக்கியமானது.

அழகுக் கலையில் செய்யக் கூடாதவை

தினமும் தலைக்கு ஷாம்பூ போட்டுக் குளிக்காதீர்கள். தலையின் இயற்கையான எண்ணெய் பசையை போக்கி விடும். வேலை காரணமாக தினமும் தலைக்குக் குளிக்க நேர்ந்தால், குழந்தைகளுக்கான ஷாம்பூ அல்லது மிதமான ஷாம்பூ பயன்படுத்தவும். எலுமிச்சம் பழத்தை பிழிந்து, ஜூஸ் எடுத்து, முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள் என்று சில அழகுக் குறிப்புகளில் சொல்லப்படுகிறது. ஆனால், எலுமிச்சம் பழத்தோல் அல்லது ஜூசை முகத்தில் அப்படியே தடவக் கூடாது; தோல் அலர்ஜியாகி விடும். பால் அல்லது பேஸ் பேக்குடன் கலந்து தான் உபயோகிக்க வேண்டும். பரு இருப்பவர்கள் முகத்தை மசாஜ் செய்யக் கூடாது; பரு காய்ந்து விட்டதா என்று கிள்ளிப் பார்க்கவும் கூடாது. எண்ணெய் பசை தோலுள்ளவர்கள், முகத்தை சுத்தப்படுத்த சோப்புக்கு பதில் தயிர் உபயோகிக்க கூடாது. மோர் அல்லது பால், எலுமிச்சை சாறு அல்லது பேஸ் வாஷ் கொண்டே முகத்தை சுத்தப்படுத்த வேண்டும்.

இவர்கள் முகத்துக்கு உபயோகிக்கும் பவுண்டேஷனை நீண்ட நேரம் பூசிக் கொண்டிருக்கக் கூடாது. பருக்கள் மற்றும் கரும்புள்ளி வந்து விடும். தினமும் தலைக்கு ஷாம்பூ போட்டுக் குளிக்காதீர்கள். தலையின் இயற்கையான எண்ணெய் பசையை போக்கி விடும். வேலை காரணமாக தினமும் தலைக்கு குளிக்க நேர்ந்தால், குழந்தைகளுக்கான ஷாம்பூ அல்லது மிதமான ஷாம்பூ பயன்படுத்தவும். முகத்தின் மீது நேரடியாக ஐஸ் கட்டி வைக்கவே கூடாது. அப்படி செய்தால், மிக மெல்லிய மேல்புறம் பாதிக்கப்படும். ஐஸ் கட்டியை பஞ்சு அல்லது துணிக்குள் வைத்து, முகத்தில் ஒற்றி எடுக்கலாம். அதேபோல், அதிக சூடான வெந்நீரிலும் முகம் கழுவக் கூடாது.

புருவத்துக்கு மையிடும் ஐ-புரோ பென்சிலை வைத்து கண்ணுக்குள் மையிடக் கூடாது. வறண்ட தோல் கொண்டவர்கள், வெள்ளரி துருவல் அல்லது ஜூசை அப்படியே முகத்தில் பூசக் கூடாது; பேஸ் பேக் எதனுடனாவது கலந்துதான் பூச வேண்டும். இவர்கள், அப்படியே உபயோகிக்காமல் புதினா விழுது, முல்தானி மட்டியுடன் கலந்து உபயோகிக்கலாம். டூவீலரில் செல்லும் போது முடியை அப்படியே பறக்க விடக் கூடாது. அழுக்கு சேர்ந்து முடி கொட்ட ஆரம்பித்து விடும். காட்டன் துணியால் தலையை சுற்றி கட்டிக் கொள்ளலாம்.

தலைமுடி ஈரமாக இருக்கும் போது வாராதீர்கள்; முடி உடைந்து விடும். முகம் கழுவியபின், டவலால் முகத்தை இழுத்துத் துடைக்காதீர்கள்; ஒற்றி எடுப்பதே உத்தமம். இரவில் உபயோகிக்கும் நைட் கிரீமும், மாய்ச்சுரைசரும் கூட கண்ணைச் சுற்றி பூசக் கூடாது. இந்தப் பகுதியில் எண்ணெய் சுரப்பிகளுக்கான துளைகள் கிடையாது. அதனால், கண்ணைச் சுற்றிலும் உப்பிப் போகும் வாய்ப்பு இருக்கிறது. கொதிக்க, கொதிக்க வெந்நீரில் குளிக்கக் கூடாது. உடலில் அத்தனை வியர்வை துளைகளும் திறந்து கொண்டு விடும். நாள் முழுக்க வியர்வை கொட்டும் அழுக்குகள் சுலபமாக அந்த துவாரங்களில் தங்கி அடைத்துக் கொண்டு விடும். முகத்தில் கரும்புள்ளிகளும் வரும், வெந்நீரில் குளித்தால், கடைசியாக உடல் முழுக்க படும்படி இரண்டு குவளை பச்சைத் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். அக்குளில் பவுடர் போடக் கூடாது. முக்கியமான வியர்வை சுரப்பிகள் அங்கே இருக்கின்றன. பவுடர் இந்த வியர்வைத் துளைகளை மூடி விடுவதால், வியர்வை வெளிவர முடியாமல், துர்நாற்றம் வீசும். எண்ணெய் பசை தோலுள்ளவர்கள் ஐஸ்கிரீம், எண்ணெய், நெய் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அழகுக்கு முக்கிய எதிரி மலச்சிக்கல்; இது, தோலின் பொலிவை பாதிக்கும். வாய் நாற்றம் ஏற்படும். தினசரி ஏதாவது ஒரு கீரை, பச்சை காய்கறி, பழங்கள் சாப்பிட வேண்டும்.

சுறா பூண்டு குழம்பு

மீன்களில் சுறா தனிசுவை கொண்டது. கெட்டியான பதத்தில் குழம்பு தயாரித்து ருசித்துப் பாருங்கள், அனைவரும் நிறைய சாப்பிடுவதோடு, அடுத்த முறை எப்போது வைப்பீர்கள் என்று கேட்கத் தொடங்கிவிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

சுறா – 1/2 கிலோ (எலும்பு, தோல் நீக்கியது)
பூண்டு – 3 (முழு அளவு)
மிளகுத்தூள் – 3 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
புளி – எலுமிச்சம் பழ அளவு (கரைக்கவும்)
வெந்தயம் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
வெங்காயம், தக்காளி – 200 கிராம் (நறுக்கியது)
பச்சைமிளகாய் – 3 கீறியது
கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – 1/2 கட்டு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

* ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

* வெங்காயத்தைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். உரித்த பூண்டு, தக்காளி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

* பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் இவற்றைச் சேர்த்து சிறிது நீர் விடவும். போதுமான உப்பு சேர்க்கவும்.

* சுறாவைச் சேர்த்து வேக விடவும்.

* சுறா வெந்தவுடன் புளிக்கரைசலைச் சேர்க்கவும். அத்துடன் சீரகம், மிளகுத்தூள் ஆகியவற்றையும் சேர்த்து குழம்பு நன்கு திக்கானதும், கொத்தமல்லி இலை தூவி இறக்கிப் பரிமாறவும்.

செப்’ தாமு

வேகமான இயக்கம் – எது உண்மை?

பெர்சனல் கம்ப்யூட்டரின் இயக்க வேகத்தை எப்படி அதிகப்படுத்துவது என்பது நம் அனைவரின் இலக்காக எப்போதும் உள்ளது. இது குறித்து பல கருத்துக்களும், இலவச ஆலோசனைகளும் நமக்கு இணையத் திலும், நண்பர்களி டத்திலும் கம்ப்யூட்டர் இதழ்களிலும் கிடைக்கின்றன. இருப்பினும் வழக்கமாக நமக்குக் கிடைக்கும் சில செய்திகளை மீண்டும் ஒருமுறை எண்ணிப் பார்க்கையில் பல தகவல்கள் ஆதாரமின்றி இருப்பதாகவே தோன்றுகிறது. அவற்றை இங்கு காணலாம்.
1. அதிக ராம் மெமரி வேகத்தை அதிகரிக்கும்: இது உண்மையே; ஆனால் இப்போது அல்ல. விண்டோஸ் 95, விண்டோஸ் 98 மற்றும் எக்ஸ்பி இயக்கங்களில் இது உண்மையே. இப்போது வரும் கம்ப்யூட்டர்கள் எல்லாம், குறைந்தது 2ஜிபி ராம் மெமரியுடன் வருகின்றன. இது நம் வேலைகளுக்கு போதுமானது. மேலும் ராம் மெமரியை அதிகப்படுத்துவதனால், குறிப்பிடத்தக்க அளவில் வேகம் அதிகரிக்காது என்பதே உண்மை. ராம் மெமரியின் மொத்த அளவு எவ்வளவு என்பதைக் காட்டிலும் அது எப்படி பல அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கிடையே பிரிக்கப்படுகிறது என்பதே மிக முக்கியம். இரண்டு அல்லது மூன்று வழிகளுடன் குறைந்த அளவேயான ராம் மெமரி, ஒரு வழியுடன் அதிக அளவு ராம் மெமரியைக் காட்டிலும் வேகமாகவே இயங்கும்.
2. அதிக core கொண்ட சிப் – அதிக வேகம்: பெரும்பாலான கம்ப்யூட்டர் பணிகளுக்கு, Two cores சிப்களே போதுமானது. இன்னும் அதிகமான cores அடங்கிய சிப்களை வாங்குவது பணத்தை வீணாக முடக்குவதே ஆகும். மிகவும் கணிப்புகள் அல்லது பன்முறை இயக்கங்கள் கொண்ட அப்ளிகேஷன்களை அடிக்கடி பயன் படுத்தினால் மட்டுமே நமக்கு அதிக cores கொண்ட சிப் தேவை.
3. ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஆண்ட்டி மால்வேர் இயக்கத்தினை நிறுத்து: மிகவும் வேகமாக உங்கள் சிபியு இயங்க வேண்டும் என்றால், ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஆண்ட்டி மால்வேர் இயக்கங்களை நிறுத்தி வைப்பது நல்லது என்று பலமுனை அறிவுரைகள் கிடைக்கின்றன. இதுவும் பழைய கம்ப்யூட்டர்களுக்கே பொருந்தும். ஆனால் இப்போது வரும் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களில் மல்ட்டி-கோர் (multicore processor) ப்ராசசர்கள் இணைக்கப்பட்டு, அவை மிக அதிகமான வேகத்துடன் இயங்குவதால், இந்தப் பிரச்னை தலை எடுப்பதில்லை. எனவே மேலே கூறப்பட்ட புரோகிராம்கள் எந்நேரமும் பின்னணியில் இயங்கினாலும், வேகம் பாதிக்கப்பட மாட்டாது. ஒரே நேரத்தில், பல்வேறு பணிகளைச் சமாளிக்கும் வகையில் புதிய ப்ராசசர்கள் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன.
4. ரெஜிஸ்ட்ரியின் அதிக பட்ச திறன் தரும் புரோகிராம்கள்: ரெஜிஸ்ட்ரியைச் சீரமைத்துத் தரும் புரோகிராம்களை இயக்கினால், கம்ப்யூட்டரின் இயக்க வேகம் கூடும் என்று ஒரு கூற்றும் உண்டு. பழைய கம்ப்யூட்டர் களில் கூட இந்த புரோகிராம்களினால், மிகக் குறைந்த அளவிலேயே வேகம் கூடுகிறது. புதிய கம்ப்யூட்டர்களில் இந்த புரோகிராம் களினால், எந்த வகையிலும் வேகம் அதிகப்படுத்தப்படுவதில்லை. ரெஜிஸ்ட்ரியின் தேவையற்ற வரிகளை நீக்குவது, ரெஜிஸ்ட்ரி புரோகிராமின் அளவினை வேண்டுமானால் குறைக்கலாம்; கம்ப்யூட்டரின் செயல் வேகத்தினை அதிகப்படுத்துவதில்லை.
5. பிரவுசர் ஹிஸ்டரியை, கேஷ் மெமரியை காலி செய்திடுக: இது எந்த வகையிலும் கம்ப்யூட்டரின் செயல் வேகத்தினை அதிகப்படுத்தப் போவதில்லை. பிரவுசர் ஹிஸ்டரியை நீக்குவது, நம் பிரவுசிங் குறித்த பதிவுகளை நீக்கும். குக்கீஸ் மெமரியில் இடம் பிடிப்பதில்லை என்பதால், அவற்றை நீக்குவதும் வேகத்தினைத் தராது. கேஷ் மெமரியை நீக்குவது வேகத்தை அதிகப்படுத்தாது; மாறாக, நம் பிரவுசிங் வேகத்தை மந்தப்படுத்தும். ஏனென்றால், பிரவுசர், அனைத்தையும் மீண்டும் ஒருமுறை சம்பந்தப்பட்ட இணைய தளங்களிலிருந்து இறக்க வேண்டியதிருக்கும்.
அப்படியானால், பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றின் வேகத்தை அதிகப்படுத்தும் வகையில் கம்ப்யூட்டரில் எந்த ட்யூனிங் வேலையும் மேற்கொள்ள முடியாதா? என நீங்கள் கேள்வி கேட்கலாம். கீழே உறுதியாக வேகத்தினை அதிகப்படுத்தக் கூடிய சில வழிகள் தரப்படுகின்றன. இவை சோதனை செய்யப்பட்டு நிரூபிக்கப்பட்டவையும் கூட.
1. செக்டிஸ்க் டிஸ்க் ரிப்பேர் புரோகிராம்: உங்களுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டமும், டேட்டாவும் உங்கள் ஹார்ட் ட்ரைவில் பதியப்பட்டு தங்குகின்றன. சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் கழிந்த பின்னர், முறையற்ற வழியில் பெர்சனல் கம்ப்யூட்டரின் இயக்கத்தை நிறுத்துவதாலும், மற்றும் சில காரணங்களினாலும், ஹார்ட் டிஸ்க்கின் சில இடங்களில், மோசமான பாதிப்புகள் ஏற்பட்டு, அந்த இடத்தில் உள்ள டேட்டா படிக்கப்பட முடியாமல் போகலாம். இந்த டேட்டா, உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சம்பந்தப்பட்டது எனில், உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்க சற்று அதிக நேரம் ஆகலாம். இது போன்ற பிரச்னைகளை டிஸ்க் செக்கிங் புரோகிராம் மூலம் சரி செய்துவிடலாம்.
விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறந்து சி ட்ரைவ் என்பதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Tools டேப் தேர்ந்தெடுக்கவும். இதில் “Check now” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இந்த விண்டோவில் உள்ள இரண்டு பாக்ஸ்களிலும் டிக் அடையாளம் உள்ளதை உறுதி செய்து கொள்ளவும். அதன் பின்னர் Start என்பதில் கிளிக் செய்திடவும். உங்கள் ட்ரைவின் கொள்ளளவின் அடிப்படையில் இதற்குச் சற்று நேரம் ஆகலாம். உங்கள் சி ட்ரைவ் இந்த வகையில் ஸ்கேன் செய்யப்படுகையில், வேறு எந்த வேலையையும் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. இவ்வாறு ஸ்கேன் செய்யப்படும் முன், கம்ப்யூட்டர் தானாகவே ரீஸ்டார்ட் ஆகித்தான் செயல்படத் தொடங்கும். இதே போல மற்ற ட்ரைவ்களுக்கும் ஸ்கேன் மேற்கொள்வது நல்லது.
இதே வேலையை ரன் கட்டத்தில், Chkdsk C: என்ற கட்டளை கொடுத்தும் மேற்கொள்ளலாம்.
இந்த வழி தான் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள பழுதடைந்த செக்டார் பிரிவுகளை சரி செய்திடும் சிறந்த வழி ஆகும்.
2. தேவையற்ற டேட்டாவினை நீக்குக: பல புரோகிராம்களைத் தொடர்ந்து இன்ஸ்டால் செய்வதனால், நம் கம்ப்யூட்டரின் இயக்க வேகம் குறையத் தொடங்கும். எனவே நமக்கு ஒரு காலத்தில் தேவைப்பட்ட, இப்போது நாம் தொடாத புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்வது நல்லது. இதனை முறையான அன் இன்ஸ்டால் மூலம் செய்திட வேண்டும். இதனால் நீக்கப்படும் புரோகிராம் சார்ந்த அனைத்து பைல்களும் நீக்கப்படும்.
அடுத்தபடியாக, கம்ப்யூட்டர் தன் இயக்கத்தின் போது ஏற்படுத்திக் கொள்ளும் தற்காலிக பைல்களை நீக்க வேண்டும். இதற்கு System Tools என்ற போல்டரில், Accessories என்ற பிரிவில் இருக்கும் Disk Cleanup என்ற புரோகிராமினைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் எந்த ட்ரைவ் சுத்தப்படுத்தப்பட வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுத்து இந்த கட்டளையை இயக்கலாம். இந்த செயல்பாடு, டிஸ்க்கை ஸ்கேன் செய்து, எந்த பைல்களை நீங்கள் நீக்கலாம் என்று உங்களுக்கு வழி காட்டும். நீங்களும் தேவையற்ற பைல்களைத் தேர்ந்தெடுத்து நீக்கலாம். இதன் மூலம் தேவையற்ற ஒரு புரோகிராம் சார்ந்த அனைத்து பைல்களையும் நீக்கலாம்.
3. ஹார்ட் ட்ரைவினை டிபிராக் செய்திடுக: டிஸ்க்கில் இருக்க வேண்டிய டேட்டா பைல்கள் குறித்து முடிவு எடுத்து, தேவையற்ற டேட்டாவின நீக்கிய பின்னர், Disk Defragmenter புரோகிராமினை இயக்கலாம். இதன் மூலம் பல இடங்களில் சிதறலாகப் பதியப்பட்ட பைலை ஒன்றிணைக்கலாம். இதனால் பைல் ஒன்றைத் தேடுவதன் நேரம் குறையும். கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகரிக்கும். இதற்கு விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறந்து, சி ட்ரைவ் மீது ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் Tools டேப்பில் கிளிக் செய்து “Defragment now” பட்டன் மீது கிளிக் செய்திடவும். இந்த விண்டோவில் காணப்படும் இரண்டு செக் பாக்ஸ் களிலும் டிக் அடையாளம் இருப்பதனை உறுதி செய்து கொள்ளவும்.
இந்த செயல்பாட்டினை, நீங்கள் கம்ப்யூட்டரில் உருவாக்கும் பைல்களின் எண்ணிக்கைகளுக்கேற்ப, வாரம் ஒருமுறை அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை எனக் கால வரையறை செய்து கொண்டு மேற்கொள்ளலாம்.
4. ட்ரைவர் பைல்களை மேம்படுத்துக: ஹார்ட்வேர் தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்தும், தங்கள் சாதனங்களின் இயக்கத்தில் ஏற்படும் பிரச்னைகளின் அடிப்படையில், அவற்றை இயக்கும் ட்ரைவர் பைல்களை மேம்படுத்து கின்றன. எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில், பெர்சனல் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் அனைத்திற்குமான ட்ரைவர் புரோகிராம்களை, அந்த நிறுவனங்களின் தளங்களுக்குச் சென்று அப்டேட் செய்திட வேண்டும்.
5. சாலிட் ஸ்டேட் டிஸ்க்கினை பயன்படுத்துக: இந்த மாற்றத்தினை இப்போது அனைவராலும் மேற்கொள்ள முடியாது என்றாலும், இதனை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். தற்போதைய சுழலும் ஹார்ட் டிஸ்க்குகளுக்குப் பதிலாக, அண்மைக் காலமாக, சாலிட் ஸ்டேட் டிஸ்க் என்று ஒரு வகை ஹார்ட் டிஸ்க் பழக்கத்திற்கு வந்து கொண்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், எத்தனை மாதங்கள், ஆண்டுகள் இதனைப் பயன் படுத்தினாலும், இதன் செயல் வேகம் குறையாது. டேட்டா டிபிராக் செய்தல் என்னும் பேச்சுக்கே இதில் இடமில்லை. மிகவும் குறைவான மின்சக்தியை இது பயன்படுத்துகிறது. இது செயல்படுகையில் இதன் எந்த பகுதியும் நகர்ந்து செயல் படுவதில்லை என்பதால், இந்த டிஸ்க் எந்தவிதமான அதிர்ச்சிக்கும் ஆளாவதில்லை.
ஆனால், இதன் விலை நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் ஹார்ட் டிஸ்க்கினைக் காட்டிலும் அதிகம் என்பதால், பலரும் இதனை வாங்கிப் பயன்படுத்தத் தயங்குகின்றனர். ஒரு சிறிய அளவிலான (30 ஜிபி) சாலிட் ஸ்டேட் டிஸ்க் வாங்கி, கம்ப்யூட்டரை பூட் செய்திடப் பயன்படுத்தலாம்.
மேலே சொன்ன கூற்றுக்களும் மேலாகச் சில அடிப்படையற்ற தகவல்களும், நிஜமான தீர்வுகளும் கம்ப்யூட்டர் இயக்க உலகில் உலவுகின்றன. இவற்றை அடையாளம் கண்டு, அவற்றின் உண்மைத் தன்மையை அறிந்து கொண்டு இயங்குவது நல்லது.

40 வயதைக் கடந்த பெண்ணா நீங்கள்? உஷார்!

பெண்களில் பாதிப்பேர், 80 வயதில் முதுகெலும்பு முறிவு ஏற்பட்டவர்களாக உள்ளனர். முதுகெலும்பின் மூட்டு பகுதி வரிசை உருக்குலைந்து போய்விடும். இதனால் மூட்டுகள் தேய்மானம் அடைகிறது. இது முதுகெலும்பில் மூட்டு அழற்சியையும், வலியையும் உண்டாக்குகிறது.

பெண்களுக்கு மாத விடாய் நின்ற பின்னரும், ஆண்களை வயோதிகத்திலும் அச்சுறுத்தும் நோய், எலும்பு வலுவிழத்தல் நோய் (ஆஸ்டியோபோரோசிஸ்). எலும்புகள் வலு விழப்பதால் நாம் அன்றாட வேலைகளை செய்யும்போது கூட, எலும்பு முறிவு ஏற்படும் ஆபத்து உள்ளது. எலும்பு முறிவு ஏற்பட்டால், நமது இயக்கம் முடக்கப் படுகிறது. எனவே, எலும்பு வலுவிழத்தல் நோயை, ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து, உரிய நிவாரணம் பெறுவது அவசியமாகிறது.
எலும்புகள் திரட்சியாகவும் அடர்த்தியாகவும் இருக்கும் வரை தான் வலுவாக இருக்கும். எலும்பு அடர்த்தி மற்றும் வலிமையை பராமரிப் பதற்கு, கால்சியம் சத்து மிக அவசியம். நாம் சாப்பிடும் உணவிலிருந்து கால்சியம் சத்தை உட்கிரகிக்க, எலும்பு செல்களின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்த, இயல்பான எலும்புகளை உருவாக்க, வைட்டமின், “டி’ இன்றியாமையாதது.

எலும்பு ஓர் இயக்காற்றல் கொண்ட உயிருள்ள திசு. நமது உடல் இடை விடாது, புதிய எலும்பை உருவாக்குகிறது. பழைய எலும்பை நீக்குகிறது. குழந்தைப் பருவத்தில், உடலில் இருந்து நீங்கும் எலும்பை விட, புதிதாக உருவாகும் எலும்பு அதிகம். இதனால், எலும்பு வளர்கிறது. ஆனால், 40 வயதுக்கு மேல், புதிதாக உருவாகும் எலும்பை விட, உடலில் இருந்து கழியும் எலும்பு, அளவில் அதிகமாக இருக்கும். இதனால் எலும்பின் திரட்சி, அடர்த்தி குறைந்து வலுவிழக்கிறது. இதுவே ஆஸ்டியோபோரோசிஸ் நோய் (எலும்பு வலுவிழத்தல் நோய்) என அழைக்கப் படுகிறது.
நாற்பது வயதுக்கு பின் ஆண், பெண் இருபாலாருக்கும், எலும்பு அடர்த்தி குறையத் துவங்கும். ஆனால், பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு, எலும்பு அடர்த்தி வேகமாக குறையத் துவங்கும்.

காரணம் என்ன?: பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் (பெண் ஹார்மோன்) உடலில் எலும்புகளை உருவாக்க துணைபுரிகிறது. எலும்புகள் இளம் வயதில் அதிக அடர்த்தியாக இருந்தால், வயதாகும் நிலையில், எலும்புகள் மெதுவாக வலுவிழக்கும். ஆனால், இளமையில் எலும்பின் அடர்த்தி போதுமான அளவு இல்லையெனில், 40 வயதை கடக்கும்போது, பாதிப்பு அதிகமாக இருக்கும்.

எலும்பு வலுவிழப்பதற்கு பொதுவான காரணங்கள்

*பெண்ணாக இருப்பது.
*ஆசிய இனத்தவராக இருப்பது.
*மெலிந்த மற்றும் சிறிய உடலமைப்பு.
*பாரம்பரியம்.
*புகை பிடித்தல்.
*மது அருந்துதல்.
*உடற்பயிற்சி இல்லாமை.
*உணவில் மிக குறைவான கால்சியம்.
*உணவிலிருந்து ஊட்டச் சத்துகள் சரியாக உறிஞ்சப்படாமை.
*பெண் ஹார்மோன் (ஈஸ்ட்ரோஜன்) குறைவாக சுரத்தல்.
*மாதவிலக்கு இல்லாத பெண்கள்.
*மூட்டு அழற்சி, நாட்பட்ட கல்லீரல் நோய்கள்.
*அதிகமாக தைராய்டு சுரத்தல்.
*வைட்டமின், “டி’ பற்றாக்குறை.

அறிகுறிகள்: ஆரம்ப நிலையில் அறிகுறிகள் இருக்காது. ஆனால், எலும்பு வலு குறையக் குறைய அறிகுறிகள் தெரியும். முதுகு வலி, உயரம் குறைதல், கூன் விழுதல், முதுகெலும்பு, மணிகட்டு, இடும்பு எலும்பு அல்லது மற்ற எலும்புகளில் முறிவு ஏற்படுதல்.
இருமினால் கூட முறியும்… எலும்புகள் வலு விழந்து மிகவும் பலவீன மடைந்து விட்டால், சிறு உயரத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டால் கூட எலும்பு முறிவு ஏற்படும். கனமாக பொருள்களை தூக்கினால் கூட, எலும்பு முறியும் ஆபத்துண்டு. சிலருக்கு இருமும்போது கூட எலும்பு முறிவு ஏற்படும். வழக்கமாக எலும்பு முறிவு ஏற்பட்டால், சிறிது நாள்களில் எலும்பு வளர்ந்து வழக்கமான நிலையை அடையும். ஆனால், ஆஸ்டியோபோரோசிஸ் நோய் ஏற்பட்டு, எலும்பு முறிந்தால், எலும்பு சேர்ந்தால் கூட மீண்டும் எலும்பு முறிவு ஏற்படும் ஆபத்துள்ளது. முதுகெலும்பில் எலும்பு முறிவு ஏற்படும்போது , முதுகுத் தண்டின் எலும்பு உயரம் குறை கிறது. இவை அழுத்த எலும்பு முறிவுகள் என்றழைக்கப்படுகின்றன. முதுகெலும்பில் ஏற்படும் முறிவு கூன் போட காரணமாக அமைகிறது. பெண்களில் பாதிப்பேர், 80 வயதில் முதுகெலும்பு முறிவு ஏற்பட்டவர்களாக உள்ளனர். முதுகெலும்பின் மூட்டு பகுதி வரிசை உருக்குலைந்து போய்விடும். இதனால் மூட்டுகள் தேய்மானம் அடைகிறது. இது முதுகெலும்பில் மூட்டு அழற்சியையும், வலியையும் உண்டாக்கு கிறது.

பரிசோதனைகள்: ஆஸ்டியோபோரோசிஸ் நோயை ஆரம்ப நிலையில் கண்டுபிடிப்பது முக்கியம். பெண்கள் மாதவிடாய் நிற்கும் முன், பரிசோதிப்பது நல்லது. பாரம்பரியத்தில் யாருக்காவது நோய் இருந்தால், எலும்பின் அடர்த்தியை பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். எலும்பு அடர்த்தியை கொண்டு, ஆஸ்டியோபோரோசிஸ் நோய் வருவதற்கான வாய்ப்புகளை கண்டுபிடித்து விடலாம். “டூயல் எனர்ஜி எக்ஸ்-ரே அப்சார்ப்ஷியோமெட்ரி’ சோதனை மூலம் எலும்பு அடர்த்தியை சரியாக கணக்கிடலாம். சாதாரண எக்ஸ்-ரே மூலமும் கண்டுபிடிக்க முடியும். ஆனால், 30 சதவீத பாதிப்புக்கு பிறகே, எக்ஸ்-ரே மூலம் அறிய முடியும். பாரம்பரியத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் இருந்தால், முன்னதாகவே மாதவிடாய் வந்தவர்கள், மெலிந்த உடல்வாகு கொண்டவர்கள் எலும்பு அடர்த்தி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கட்டுப்பாட்டுக்குள் வைப்பது எப்படி?: நம் உடலில் போதிய அளவு கால்சியம் உள்ளதா எனத் தெரிந்து, குறைவாக இருந்தால் டாக்டரின் ஆலோசனைக்கு ஏற்ப தேவையான கால்சியம் எடுத்துக் கொள்ள வேண்டும். பால், முட்டை, பச்சை காய்கறிகளில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. கொழுப்பு நீக்கப்பட்ட பால் 4 டம்ளர் குடிப்பதால், 1,200 மி.கி., கால்சியம் சத்து கிடைக்கிறது. கால்சியம் சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால் மட்டும் போதாது.
உணவில் உள்ள கால் சியம் சத்தை கிரகித்து கொள்ள வைட்டமின் “டி’ அவசியம். வைட்டமின் “டி’ சத்தை சூரிய ஒளியிலிருந்து நம் உடல் கிரகித்துக் கொள்கிறது. அதுதவிர முட்டையின் மஞ்சள் கரு, கடல் மீன், ஈரல் ஆகியவற்றில் வைட்டமின் “டி’ உள்ளது. எலும்பை வலுவாக்க உடற்பயிற்சிகள் முக்கிய பங்காற்றுகின்றன. இருப்பினும் நோய் பாதிக்கப்பட்டவர்கள், டாக்டரின் அறிவுரைப்படியே உடற் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். புகைப்பிடிப்பதை கண்டிப்பாக நிறுத்திவிட வேண்டும்.

டாக்டர் ராஜேஸ்வரி,
எலும்பு மற்றும் மூட்டு நோய் சிகிச்சை நிபுணர்,
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, சென்னை

மன்னரும் துறவியானார்-பட்டினத்தார் வரலாறு

`கட்டிய ஆடையுடனேயே உங்களோடு புறப்படுகிறேன் சுவாமி!’ என்றார்.

`தென்நாட்டுத் திருத்தலங்களை ஒருவன் தரிசிக்க ஆரம்பித்தால், பிறகு அவனுக்கு எந்த ஆசையும் வராது, புறப்படு!’ என்றேன்.

வாரிசு இல்லாத நாட்டை, காவலர்கள் கையில் ஒப்படைத்தார். இருவரும் வாசல் வரை வந்தோம்.

எதிரே குதிரையில் பட்டத்து ராணியின் சடலம் வந்தது.

ஏற்கெனவே அவளது ஆணவத்தால் ஆத்திரமுற்றிருந்த ஜனங்கள், துரோகமும் செய்தாள் என்பதால் கல்லால் அடித்துக் கொன்று விட்டார்கள்.

பத்ரகிரி குதிரை அருகே வந்தபோது, அந்தச் சடலம் அவர் காலடியில் விழுந்தது. அதிலிருந்து விலகி என்னைத் தொடர்ந்தார்.

அரண்மனை வெளிப்புற வாசலில் நின்று முதன் முதலாகப் பிச்சை கேட்டார்; பிறகு வீதி தோறும் பிச்சை.

இதிலே அதிசயம் என்னவென்றால் வடமொழி, தென் மொழி இரண்டிலேயுமே அவர் கைதேர்ந்தவராக இருந்ததுதான்.

உஜ்ஜைனியைச் சேர்ந்த ஒரு மன்னர். சிருங்காரக் களியாட்டங்களில் ஈடுபட்ட நிலையிலும் தமிழ் மொழியைப் பழுதறக் கற்றிருந்தது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.

சோழ மண்டலத்திலிருந்து குடியேறிய தமிழ்ப்பெரும் புலவர் ஒருவரிடத்தில் தமிழ் கற்றிருந்தார் பத்ரகிரியார்.

கல்லாதவன் கற்க விரும்பினால், அவன் முதலில் கற்பது தமிழைத்தானே!

தமிழிலும் இனிமையான மொழியை உலகம் இன்னும் காணவில்லையே!

ஒவ்வொரு வீட்டின் முன் நின்றும், `அன்னமிடுங்கள் தாயே!’ என்று அவர் கேட்ட தொனியே எனக்குச் சுகமாக இருந்தது.

தனது மன்னனை கண்ணீரோடு அனுப்பியது உஜ்ஜைனி.

வந்து கொண்டே இருந்தோம். வழியில் ஒரு சிறிய காளி கோயில். இரவில் அங்கே தங்கலாம் என்று உள்ளே நுழைந்தோம்.

`திருவமுது தயாராக இருக்கிறது!’ என்றான் பரிசாரகன்.

உணவு கொண்டோம். காளியின் சந்நிதானத்தில் தலை வைத்துத் துயிலத் தொடங்கினோம்.

நள்ளிரவு. ஒரு நாயின் முனகல் கேட்டது. மெதுவாக நான் எழுந்து பார்த்தேன். கோயிலின் கிழக்கு மூலையில் ஒரு நாய் குட்டி போட்டிருந்தது.

`நாய் பல குட்டி போடும்’ என்பார்கள். ஆனால், அந்த நாயோ ஒரு குட்டி போட்டிருந்தது. அதுவும் பெண் குட்டி.

அந்தக் குட்டியை நான் கையிலெடுத்ததும், நாய் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு இறந்து விட்டது.

எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. அந்த நாய்க்குட்டி வேறு யாருமல்ல; பத்ரகிரியாரது பட்டத்து ராணியின் மறுபிறவி.

தீயவர்களை ஆண்டவன் உடனேயே திருப்பி அனுப்புகிறான், பாவ விமோசனத்துக்காக.

`சுவாமி, இதை எங்கேயோ பார்த்தது போலிருக்கிறது?’ என்றார் அவர்.

அது மறுபிறப்பு என்பதற்கு வேறு சாட்சி எதற்கு?

காலையில் அங்கிருந்து நாங்கள் புறப்பட்டோம்.

பத்ரகிரியார், எனது பரமானந்த சீடராகப் பின் தொடர்ந்தார்.

உஜ்ஜைனி காளி கோயிலில் எனது திருவோட்டைத் தட்டிவிட்ட பிறகு, நான் புது ஓடு வாங்கவில்லை.

`விமலர் தந்த ஓடுண்டு அட்சய பாத்திரம்’ என்று நான் பாடியது, என்னுடைய இரண்டு கைகளையே.

ஓடு வாங்காத நான், எங்கேயும் கற்றரையைத் துடைத்து அதிலேயே சாப்பிட்டு வந்தேன்.

ஓரிடத்தில் நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, என்னிடம் வந்து பிச்சை கேட்டான் ஒரு பஞ்சப் பரதேசி. நான் சொன்னேன், `அப்பா நான் ஒரு ஆண்டி! அதோ உட்கார்ந்திருக்கிறான் ஒரு பணக்காரன்! அவனைக் கேள்!’ என்று.

உடனே பத்ரகிரியார் ஓடிவந்து, `என்ன சுவாமி, என்னைப் பணக்காரன் என்கிறீர்கள்!’ என்றார்.

`பின் என்னப்பா? என்னிடம் என்ன இருக்கிறது? உனக்குச் சொந்தமாக ஒரு ஓடும் நாயும் இருக்கின்றனவே!’

பத்ரகிரியார் ஓட்டைத் தூக்கி ஏறிந்து நாயைத் துரத்தினார். ஓடு பட்டு அந்த நாய் இறந்தது; அதன் பாவக் கதையும் முடிந்தது.

பிறகு இருவரும் வந்து கொண்டிருக்கும் வழியில் ஒரு கரும்புக் காட்டருகில் அமர்ந்தோம்.

பசி அதிகம். இரண்டு கரும்புகளை எங்களுக்குக் கொடுத்தார் ஒரு நாட்டுப்புறத்தவர்.

கரும்பைக் கடித்த போது, அடிக்கரும்பு இனித்தது. நுனிக் கரும்பு கசந்தது.

`ஏன் இப்படி?’ என்று தெரியாதவன் போல் கேட்டேன், அந்த நாட்டுப்புறத்தவரை.

`வாழ்க்கையில் தொடக்கம் இனிமை, முடிவில் அவலம்!’ என்றார் அவர்.

சொல்லிவிட்டுப் போயே போய்விட்டார் அவர்.

சிவபெருமானே அப்படி வந்ததாகத்தான் கருதி, நான் இந்தக் கரும்பைச் சுமந்து கொண்டிருக்கிறேன்.

அந்தத் தத்துவத்தைக் குறிக்கவே, நான் இந்தக் கரும்பைச் சுமந்து கொண்டிருக்கிறேன்.

இருவினை அகன்று எய்திய ஞானம், இறைவனை எங்களுக்குக் காட்டித் தந்திருக்கிறது.

செல்வம் செல்வம் என்று பேயாக அலைந்த என் தமக்கையும் அவள் கணவனும் எனக்கிழைத்த தீமைகளால் பெரு நோய்ப்பட்டு மாண்டனர். அவளது குழந்தைகள், திருக்காளத்தியில் நான் இருந்த போது என்னிடம் வந்து ஆசி பெற்றுப் போயினர்.

இது எங்களுக்கு ஞானம் பிறந்த கதை.

சம்சாரத்தில் உழன்று, அந்த ஞானத்தை அடைய முயற்சியுங்கள்.

எல்லாம் வல்லவன் இறைவன்.

பிறப்புக்கு முன்பும், இறப்புக்குப் பின்பும் பொறுப்பேற்றுக் கொள்கிறவன் அவனே.

தாயின் வயிறும், சுடுகாடுமே அவனது அரசாங்கங்கள். அதனால்தான் சுடுகாட்டில் அவன் ருத்திர தாண்டவம் ஆடுகிறான்.

`ஓம் நமசிவாய’ என்று உரத்த குரலில் கூறுங்கள்.

மூன்று விரல்களும் நன்றாகப் பதியும்படி திருநீறுபூசுங்கள்.

அந்த மூன்று கோடுகளும் பிறப்பு, இறப்பு, இடைப்பட்ட வாழ்வு மூன்றையும் குறிக்கும்.

`ஓம் நமசிவாய’ என்று முடித்தார், பட்டினத்தார்.

திருக்காளத்தி அவரையும் பத்ரகிரியாரையும் பிரியாவிடை கொடுத்து அனுப்பியது.

(பட்டினத்தார், பத்ரகிரியார் பாடல்களில் நான் விரும்பும் பாடல்களை மட்டும் தந்திருக்கிறேன். இதில் பாட பேதமோ, இலக்கணப் பிழையோ இருக்குமானால் நான் படித்த பதிப்புகளின் குற்றமே தவிர, என் குற்றமல்ல.)

பட்டினத்தார் புலம்பல்

மென்று விழுங்கி விடாய்கழிக்க நீர்தேடல்

என்று விடியும் எனக்கு எங்கோவேநன்றி

கருதார் புரமூன்றும் கட்டழலால் சென்ற

மருதாஉன் சந்நிதிக்கே வந்து.

கண்டம் கரியதாம்; கண்மூன்று உடையதாம்

அண்டத்தைப் போல அழகியதாம்தொண்டர்

உடல்உருகத் தித்திக்கும் ஓங்குபுகழ் ஒற்றிக்

கடலருகே நிற்கும் கரும்பு.

ஓடுவிழுந்து சீப்பாயும் ஒன்பதுவாய்ப் புண்ணுக்கு

இடுமருந்தை யான்அறிந்து கொண்டேன்கடுஅருந்தும்

தேவாதி தேவன் திருவொற்றியூர்த் தெருவில்

போவார் அடியிற் பொடி.

வாவிஎல்லாம் தீர்த்தம்; மணல்எல்லாம் வெண்நீறு

காவனங்கள் எல்லாம் கணநாதர்;பூவுலகில்

ஈது சிவலோகம் என்றென்றே மெய்த்தவத்தோர்

ஓதும் திருவொற்றி யூர்.

ஆரூரர் இங்கிருந்த அவ்வூர்த் திருநாளென்று

ஊரூர்கள் தோறும் உழலுவீர்! நேரே

உளக்குறிப்பை நாடாத ஊமர்காள் நீவீர்

விளக்கிருக்கத் தீத்தேடு வீர்.

எருவாய்க்கு இருவிரல்மேல் ஏர்உண்டு இருக்கும்

கருவாய்க்கோ கண்கலக்கப் பட்டாய்! திருவாரூர்த்

தேரோடும் வீதியிலே செத்துக் கிடக்கின்றாய்

நீரோடும் தாரைக்கே நீ!

எத்தனைஊர் எத்தனைவீடு எத்தனைதாய்? பெற்றவர்கள்

எத்தனைபேர் இட்டழைக்க ஏன்என்றேன்நித்தம்

எனக்குக் களையாற்றாய் ஏகம்பா; கம்பா

உனக்குத் திருவிளையாட் டோ?

அத்திமுதல் எறும்பீ றானவுயிர் அத்தனைக்கும்

சித்தம் மகிழ்ந்தளிக்கும் தேசிகாமெத்தப்

பசிக்குதையா! பாவியேன் பாழ்வயிற்றைப் பற்றி

இசிக்குதையா காரோண ரே!

பொய்யை ஒழியாய்; புலாலை விடாய்; காளத்தி

ஐயரை எண்ணாய்; அறம்செய்யாய்;வெய்ய

சினமே ஓழியாய்; திருவெழுத்தைந்து ஓதாய்;

மனமே உனக்கென்ன மாண்பு?

மண்ணும் தணல்ஆற வானும் புகைஆற

எண்ணறிய தாயும் இளைப்பாறப்பண்ணுமயன்

கையாறவும் அடியேன் காலாறவும் காண்பார்

ஐயா! திருவை யாறா!

காலன் வருமுன்னே கண்பஞ் சடையுமுன்னே

பாலுண் கடைவாய்ப் படுமுன்னேமேல்விழுந்தே

உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே

குற்றாலத் தானையே கூறு!

சிற்றம் பலமும் சிவனும் அருகிருக்க

வெற்றம் பலம்தேடி விட்டோமேநித்தம்

பிறந்தஇடம் தேடுதே பேதைமட நெஞ்சம்

கறந்தஇடம் நாடுதே கண்!

தோடவிழும் பூங்கோதைத் தோகைஉனை இப்போது

தேடினவர் போய்விட்டார் தேறியிருநாடிநீ

என்னை நினைத்தால் இடுப்பில் உதைப்பேன்நான்

உன்னை நினைத்தால் உதை!

வாசற் படிகடந்து வாராத பிச்சைக்குஇங்

காசைப் படுவதில்லை அண்ணலே!ஆசைதனைப்

பட்டிறந்த காலமெல்லாம் போதும் பரமேட்டி

சுட்டிறந்த ஞானத்தைச் சொல்.

நச்சவரம் பூண்டானை நன்றாய்த் தொழுவதுவும்

இச்சையிலே தான்அங் கிருப்பதுவும்பிச்சைதனை

வாங்குவதும் உண்பதுவும் வந்துதிரு வாயிலில்

தூங்குவதும் தானே சுகம்.

இருக்கும் இடம்தேடி என்பசிக்கே அன்னம்

உருக்கமுடன் கொண்டு வந்தால் உண்பேன்பெருக்க

அழைத்தாலும் போகேன் அரனே! என்தேகம்

இளைத்தாலும் போகேன் இனி.

விட்டுவிடப் போகுதுயிர்! விட்டஉடனே உடலைச்

சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார்அட்டியின்றி

எந்நேர மும்சிவனை ஏற்றுங்கள்; போற்றுங்கள்;

சொன்னேன் அதுவே சுகம்.

ஆவியோடு காயம் அழிந்தாலும் மேதினியில்

பாவி என்று நாமம் படையாதே!மேவியசீர்

வித்தாரமும் கடம்பும் வேண்டா மடநெஞ்சே

செத்தாரைப் போலே திரி.

வெட்ட வெளியாய் வெளிக்கும் தெரியாது!

கட்டளையும் கைப்பணமும் காணாது!இட்டமுடன்

பற்றென்றால் பற்றாது; பாவியே நெஞ்சில்

அவன் இற்றெனவே வைத்த இனிப்பு.

இப்பிறப்பை நம்பி இருப்பாயோ நெஞ்சமே!

வைப்பிருக்க வாயில்மனை இருக்கச்சொப்பனம்போல

விக்கிப்பற் கிட்டக்கண் மெத்தப்பஞ்சிட்டு அப்பைக்

கக்கிச்செத் துக்கொட்டக் கண்டு.

மேலும் இருக்க விரும்பினையே! வெண்விடையோன்

சீலம் அறிந்திலையே! சிந்தையே!கால்கைக்குக்

கொட்டையிட்டு மெத்தையிட்டு குத்திமொத்தப் பட்டஉடல்

கட்டையிட்டுச் சுட்டுவிடக் கண்டு.

ஒன்பது வாய்த் தோல்பைக்கு ஒருநாளைப் போலவே

அன்புவைத்து நெஞ்சே அலைந்தாயே!வன்கழுக்கள்

தத்தித்தத் திச்செட்டை தட்டிக்காட் டிப்பிட்டுக்

கத்திக்குத் தித்தின்னக் கண்டு.

இன்னம் பிறக்க இசைவையா நெஞ்சமே?

மன்னரிவர் என்றிருந்து வாழ்ந்தாரைமுன்னம்

எரிந்தகட்டை மீதில் இணைக்கோ வணத்தை

உரிந்துருட்டிப் போட்டது கண்டு!

முதற்சங்கு அமுதூட்டும்! மொய்குழலார் ஆசை

நடுச்சங்கு நல்விலங்கு பூட்டும்!கடைச்சங்கம்

ஆம்போ ததுஊதும்! அம்மட்டோ, இம்மட்டோ,

நாம்பூமி வாழ்ந்த நலம்?

எத்தனை நாள்கூடி எடுத்த சரீரம்இவை?

அத்தனையும் மண்தின்ப தல்லவோ?வித்தகனார்

காலைப் பிடித்துமெள்ளக் கங்குல்பகல் அற்றிடத்தே

மேலைக் குடியிருப் போமே!

எச்சிலென்று சொல்லி இதமகிதம் பேசாதீர்

எச்சில் இருக்கும் இடம்அறியீர்எச்சில்தனை

உய்த்திருந்து பார்த்தால் ஒருமை வெளிப்படும்; பின்

சித்த நிராமயமா மே!

எத்தனைபேர் நட்டகுழி? எத்தனைபேர் தொட்டமுலை?

எத்தனைபேர் பற்றி இழுத்தஇதழ்?நித்தம்நித்தம்

பொய்யடா பேசும்புவியின் மடமாதரை விட்டு

உய்யடா! உய்யடா! உய்!

இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே

ஒருத்தருக்கும் தீங்கினை எண்ணாதே!பருத்ததொந்தி

நம்மதென்று நாமிருப்ப நாய்நரி பேய்கழுகு

தம்மதென்று தாமிருக்கும் தான்!

எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்

முத்தர்மனம் இருக்கும் மோனத்தேவித்தகமாய்க்

காதிவிளை யாடிஇரு கைவீசி வந்தாலும்

தாதிமனம் நீர்க்குடத்தே தான்!

மாலைப் பொழுதில்நறு மஞ்சள் அரைத் தேகுளித்து

வேலை மெனக்கிட்டு விழித்திருந்துகுலாகிப்

பெற்றாள்; வளர்ந்தாள்; பெயரிட்டாள்; பெற்றபிள்ளை

பித்தானால் என்செய்வாள் பின்?

பத்ரகிரியார் புலம்பல்

முத்திதரும் ஞானமொழியாம் புலம்பல் சொல்

அத்தி முகவன்தான் அருள்பெறுவ தெக்காலம்?

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டெரித்துத்

தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவ தெக்காலம்?

நீங்காச் சிவயோக நித்திரை கொண்டே இருந்து

தேங்காக் கருணைவெள்ளம் தேக்குவதும் எக்காலம்?

தேங்காக் கருணைவெள்ளம் தேங்கியிருந் துண்பதற்கு

வாங்காமல் விட்டகுறை வந்தடுப்ப தெக்காலம்?

ஓயாக் கவலையினால் உள்ளுடைந்து வாடாமல்,

மாயாப் பிறவி மயக்கறுப்ப தெக்காலம்?

மாயாப் பிறவி மயக்கத்தை ஊடறுத்துக்

காயா புரிக்கோட்டை கைக்கொள்வ தெக்காலம்?

சேயாய்ச் சமைந்து செவிடூமை போல்திரிந்து

பேய்போல் இருந்துஉன் பிரமைகொள்வ தெக்காலம்?

பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்த பெண்ணைத்

தாய்போல் நினைத்துத் தவம்முடிப்ப தெக்காலம்?

கால்காட்டிக் கைகாட்டிக் கண்கள் முகம்காட்டி

மால்காட்டும் மங்கையரை மறந்திருப்ப தெக்காலம்?

பெண்ணினல்லார் ஆசைப் பிரமையினை விட்டொழித்துக்

கண்ணிரண்டும் மூடிக் கலந்திருப்ப தெக்காலம்?

வெட்டுண்ட புண்போல் விரிந்த அல்குல் பைதனிலே

தட்டுண்டு நிற்கை தவிர்வதும் எக்காலம்?

தந்தை, தாய், மக்கள் சோதரரும் பொய்யெனவே

சிந்தைதனில் கண்டு கிறுகிறுப்ப தெக்காலம்?

வம்படிக்கும் மாதருடன் வாழ்ந்தாலும் மன்னுபுளி

யம்பழமும் ஓடும்போல் ஆவதினி எக்காலம்?

பற்றற்று நீரில் படர்தா மரை இலைபோல்

சுற்றத்தை நீக்கிமனம் தூரநிற்ப தெக்காலம்?

சல்லாப லீலையிலே தன்மனைவி செய்தசுகம்

சொல்லாரக் கண்டெனக்குச் சொல்வதினி எக்காலம்?

மரும அயல்புருடன் வரும்நேரம் காணாமல்

உருகு மனம்போல் என்உள்ளம் உருவதும் எக்காலம்?

தன்கணவன் தன்சுகத்தில் தன்மனம்வே றானதுபோல்

என்கருத்தில் உன்பதத்தை ஏற்றுவதும் எக்காலம்?

கூடிப் பிரிந்துவிட்ட கொம்பனையே காணாமல்

தேடித் தவிப்பவள்போல் சிந்தவைப்ப தெக்காலம்?

எவ்வனத்தின் மோகம் எப்படியுண் டப்படிபோல்

கல்வனத் தியானம் கருத்துவைப்ப தெக்காலம்?

கண்ணால் அருவி கசிந்து முத்துப் போல் உதிரச்

சொன்ன பரம்பொருளைத் தொகுத்தறிவ தெக்காலம்?

ஆக மிகவுருக, அன்புருக, என்புருகப்

போக அனுபூதி பொருத்துவதும் எக்காலம்?

நீரில் குமிழ்ப்போல் நிலையற்ற வாழ்வைவிட்டுன்

பேரில் கருணைவெள்ளம் பெருக்கெடுப்ப தெக்காலம்?

அன்பைஉருக்கி, அறிவை அதன் மேல்புகட்டித்

துன்ப வலைப்பாசத் தொடரறுப்ப தெக்காலம்?

மனதைஒரு வில்லாக்கி, வான்பொறியை நாணாக்கி

எனதறிவை அம்பாக்கி, எய்வதினி எக்காலம்?

கடத்துகின்ற தோணிதனைக் கழைகள்குத்தி விட்டாற்போல்

நடத்துகின்ற சித்திரத்தை நான்அறிவ தெக்காலம்?

நின்றநிலை பேராமல், நினைவில்ஒன்றும் சாராமல்

சென்றநிலை முக்திஎன்று சேர்ந்தறிவ தெக்காலம்?

பொன்னும் வெள்ளியும்பூண்ட பொற்பதத்தை உள்அமைத்து

மின்னும் ஒளிவெளியே விட்டடைப்ப தெக்காலம்?

அருணப்பிரகாசம் அண்டம் எங்கும் போர்த்தது போல்

கருணைத் திருவடியில் கலந்துநிற்ப தெக்காலம்?

பொன்னில் பலவிதமாம் பூடணம்உண் டானதுபோல்

உன்னில் பிறந்து உன்னில் ஓடுங்குவதும் எக்காலம்?

நாயில் கடைப்பிறப்பாம் நான்பிறந்த துன்பம்அற

வேயில் கனல்ஒளிபோல் விளங்குவதும் எக்காலம்?

சூரியனின் காந்தஒளி சூழ்ந்துபஞ்சைச் சுட்டதுபோல்

ஆரியநின் தோற்றத்து அருள்பெறுவ தெக்காலம்?

இரும்பில் கனல்மூட்டி இவ்வுருபோய் அவ்வுருவாய்க்

கரும்பில் சுவைரசத்தைக் கண்டறிவ தெக்காலம்?

கருக்கொண்ட முட்டைதனை கடல்ஆமை தான்நினைக்க

உருக்கொண்ட வாறதுபோல் உனைஅடைவை தெக்காலம்?

வீடுவிட்டுப் பாய்ந்து வெளியில் வருவார்போல்

கூடுவிட்டுப் பாயும் குறிப்பறிவ தெக்காலம்?

கடைந்த வெண்ணெய்மோரில் கலவாத வாறதுபோல்

உடைந்து தமியன்உனைக் காண்பதுவும் எக்காலம்?

இருளை ஒளிவிழுங்கி ஏகஉருக் கொண்டாற் போல்

அருளை விழுங்கும்இருள் அகன்றுநிற்ப தெக்காலம்?

மின்எழுந்து மின்ஒடுங்கி விண்ணில் உறைந்தாற்போல்

என்னுள்நின்று என்னுள்ளேயே யான்அறிவ தெக்காலம்?

கண்டபுனல் குடத்தில் கதிர்ஒளிகள் பாய்ந்தாற்போல்

கொண்ட சொரூபமதைக் கூர்ந்தறிவ தெக்காலம்?

பூணுகின்ற பொன்அணிந்தால் பொன்சுமக்கு மோஉடலைக்

காணுகின்ற என்கருத்தில் கண்டறிவ தெக்காலம்?

செம்பில் களிம்புபோல் சிவத்தை விழுங்கமிக

வெம்பிநின்ற மும்மலத்தை வேறுசெய்வ தெக்காலம்?

ஆவியும் காயமும்போல் ஆத்துமத்து நின்றதனை

பாவி அறிந்துமனம் பற்றிநிற்ப தெக்காலம்?

ஊமை கனாக்கண்டு உரைக்கறியா இன்பம்அதை

தாம்அறிந்து கொள்வதற்கு நாள்வருவ தெக்காலம்?

எள்ளும் கரும்பும் எழுமலரும் காயமும்போல்

உள்ளும் புறமும்நின்று உற்றறிவ தெக்காலம்?

அன்னம் புனலை வகுத்தமிழ்தை உண்பதுபோல்

என்னை வகுத்துன்னை இனிக்காண்ப தெக்காலம்?

அந்தரத்தில் நீர்பூத்து அலந்தெழுந்த தாமரைபோல்

சிந்தைவைத்துக் கண்டு தரிசிப்ப தெக்காலம்?

பிறப்பும் இறப்பும் அற்றுப் பேச்சும்அற்று மூச்சும்அற்று

மறப்பும் நினைப்புமற்று மாண்டிருப்ப தெக்காலம்?

மன்னும் பரவெளியை மனவெளியில் அடைத்தறிவை

என்னுள் ஒரு நினைவை எழுப்பிநிற்ப தெக்காலம்?

தன்உயிரைக் கொண்டு தான்திரிந்த வாறதுபோல்

உன்உயிரைக் கொண்டு இங்கு ஒடுங்குவதும் எக்காலம்?

சேற்றில் கிளைநாட்டும் திடமாம் உடலைஇனிக்

காற்றில்உழல் சூத்திரமாய்க் காண்பதினி எக்காலம்?

என்வசமும் கெட்டு இங்கிருந்த வசம்அழிந்து

தன்வசமும் கெட்டுஅருளைச் சார்ந்திருப்பது எக்காலம்?

தன்னை மறந்து தலத்து நிலைமறந்து

கன்மம் மறந்து கதிபெறுவ தெக்காலம்?

என்னை என்னிலே மறைந்தே இருந்த பதிமறந்து

தன்னைத் தானேமறந்து தனித்திருப்ப தெக்காலம்?

தன்னையும் தானேமறந்து தலைவாசல் தாழ்போட்டே

உன்னை நினைத்துள்ளே உறங்குவதும் எக்காலம்?

இணைபிரிந்த போதில்அன்றி இன்பமுறும் அன்றிலைப்போல்

துணைபிரிந்த போதுஅருள்நூல் தொடர்ந்துகொள்வ

தெக்காலம்?

ஆட்டம்ஒன்றும் இல்லாமல் அசைவுற்றும் காணாமல்

தோட்டம்அற்ற வான்பொருளைத் தேடுவது எக்காலம்?

முன்னை வினையால் அறிவு முற்றாமல் பின்மறைந்தால்

அன்னை தனைத்தேடி அமுதுண்ப தெக்காலம்?

கள்ளுண்டவர்போல் கனிதரும் ஆனந்தம் அதால்

தள்ளுண்டு நின்றபடி தடைப்படுவ தெக்காலம்?

நான்என்ற ஆணவமும் தத்துவமும் கெட்டொழிந்தே

ஏன்என்ற பேச்சுமின்றி இலங்குவதும் எக்காலம்?

நான்அவனாய்க் காண்பதெல்லாம் ஞானவிழியால் அறிந்து

தான் அவனாய் நின்று சரண் அடைவ தெக்காலம்?