Daily Archives: நவம்பர் 24th, 2011

முகத்திற்கு அழகு தரும் பொட்டு

நெற்றியில் பொட்டிட்ட பிறகு கன்னத்திலோ, முகவாய் பகுதியிலோ ஒரு சிறு சந்துப்புள்ளி வைப்பது நம் நாட்டு வழக்கம். இது, முக அழகுக்கு மேலும் மெருகூட்டும். இதை, திருஷ்டி பொட்டு என்றும் சொல்வர்.

குங்குமத்தை சாதாரணமாக நெற்றியிலிட்டுக் கொள்வதை விட, கொஞ்சம் வெள்ளை வாசலைன் முதலில் இட்டு, அதன் மீது குங்குமத்தை பொட்டிட்டால், பொட்டு நீண்ட நேரம் அழியாமல், புத்தம் புதிதாக இட்டது போலக் காட்சி தரும். நெற்றியில் ஏதாவது வண்ண சாந்து அல்லது குங்குமத்தால் பொட்டு இட்ட பிறகு, அதைச் சுற்றி வேறு வண்ணத்தில் ஒரு கோடு தீட்டிக் கொண்டால், திலகம் எடுப்பாக இருப்பதோடு, அழகாகவும் தோற்றமளிக்கும். இந்நாளில் பிளாஸ்டிக் ஷீட்களை வட்ட வடிவில் பொட்டுகளாக கத்தரித்து விற்பனை செய்கின்றனர். மற்றும் கவர்ச்சிகரமான வண்ணங்களில் பொட்டுகளை அச்சடித்தும் விற்கின்றனர். அவற்றை வாங்கி நெற்றியில் ஒட்டிக் கொண்டு விடலாம். பொட்டிடும் சிரமம் குறையும். நெற்றியில் பொட்டிடும் போது, நுணுக்கமான வேலைப்பாடு இருக்கத் தேவையில்லை. பளிச்சென பார்த்த மாத்திரத்திலேயே கண்களைக் கவரும் வண்ண அமைப்புடன் இருந்தால் போதும்.

சாந்தை உபயோகித்து பொட்டிடும் போது, பொட்டிட்ட பிறகு முகப்பவுடர் பூசிக் கொள்வது, முகத்தைப் பளிச்சென தோற்றுவிக்கும். ஆனால், குங்குமம் உபயோகிக்கும் போது, முதலில் பவுடர் பூசி விடுவது தவிர்க்க இயலாதது. எனினும், பொட்டிட்ட பிறகு, மிக எச்சரிக்கையுடன் முகத்தில் மற்றுமொரு தடவை பவுடரை லேசாக ஒற்றிக் கொள்ளலாம்.

நெற்றி விசாலமாக அமையப் பெற்ற பெண்கள், பெரிய பொட்டாக வைத்துக் கொண்டால்தான் பாந்தமாக இருக்கும். குறுகிய நெற்றியை பெற்றவர்களோ, சிறிய அளவிலேயே பொட்டிட்டு கொள்வதுதான் அழகாக இருக்கும். அகன்ற நெற்றியுடைய பெண்கள் மேல் நோக்கி, நீண்ட வாக்கில் கோடாக இழுத்துக் கொள்வது அழகூட்டுவதாக அமையும்.
நெற்றியில் பொட்டிட்ட பிறகு கன்னத்திலோ, முகவாய் பகுதியிலோ ஒரு சிறு சந்துப்புள்ளி வைப்பது நம் நாட்டு வழக்கம். இது, முக அழகுக்கு மேலும் மெருகூட்டும். இதை, திருஷ்டி பொட்டு என்றும் சொல்வர். மிகவும் சிவந்த நிறமுடைய பெண்கள், கரு நிறச் சாந்தால் பொட்டு இட்டால், மிகவும் அழகாக இருக்கும். கருநிறச் சாந்து பொட்டிட்டுக் கொண்டால், எந்த மாதிரி வண்ண உடை அணிந்தாலும், பொருத்தமாகவே இருக்கும். இவர்கள் குங்குமம் இட்டுக் கொள்வதாக இருந்தால், ஆழ்ந்த நிறமாக பார்த்து இட்டுக் கொள்ள வேண்டும்.

டிப்ஸ்: ஸ்டிக்கர் பொட்டு வைத்தபடியே தூங்கி விடாதீர்கள்; அந்த இடமே அலர்ஜி ஆகிவிடும்.

*பஞ்சு, டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றால் அப்படியே முகத்தை துடைக்கக் கூடாது; நனைத்துதான் துடைக்க வேண்டும்.
* கை, கால் நகங்களை, “வி’ வடிவத்தில் வெட்டாதீர்கள்; உடைந்து விடும். ரொம்பவும் ஒட்ட, ஒட்ட வெட்டவும் கூடாது. கீழே சதை நோக்கி வளர ஆரம்பித்து விடும்.
* நகத்தால் வெறுமனே முகத்தின் கரும்புள்ளிகளை நீக்க முயலக் கூடாது. நகத்தைச் சுற்றி டிஷ்யூ பேப்பரை அல்லது மெல்லிய துணியை விரலில் சுற்றிக் கொண்டு தான் நீக்க வேண்டும்.
* பழுத்த பருவையும், வெறும் விரல்களால் அழுத்தக் கூடாது. பஞ்சு அல்லது டிஷ்யூ பேப்பரை விரலில் சுற்றிக் கொள்ள வேண்டும்.
* வெறும் காலுடன் சகதியில் அல்லது ஈரத் துணியில் அதிக நேரம் இருக்கக் கூடாது. சேற்றுப்புண் மாதிரி நோய் தொற்று ஏற்படும். பாத வெடிப்பின் வழியாகவும் கிருமிகள் உடம்பினுள் செல்லும்.
* வறண்ட தோல் உடையவர்கள் அடிக்கடி சோப்பு போட்டு, முகம் கழுவக் கூடாது. பால் அல்லது தயிர் தடவியோ அல்லது பேஷ் வாஷ் உபயோகித்தோ முகம் கழுவலாம்.
* முகத்துக்கு மேக்-அப் போடும் போதும், பேஸ்பேக் போடும் போதும் கழுத்தை கவனிக்காமல் விடக் கூடாது. முகமும், கழுத்தும் தனித்தனியான கலர்களில் தெரியும்.
* ஒவ்வொரு முறை நகரத்துக்கு பாலிஷ் போடும் போதும், இடையே ஒரு நாள், நகம் சுவாசிக்க ஓய்வு தரவேண்டும். இல்லையெனில், நகம் மஞ்சள் கலராகிவிடும்.

அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்’ ஆகலாம்!

உங்களுக்கு `ஸ்லிம்’ ஆக ஆசை இருக்கிறதா? அப்படியென்றால், சூரியன் உதயம் ஆன பிறகும் இழுத்து மூடிக்கொண்டு தூங்குவதை விடுத்து, அதிகாலையிலேயே விழித்தெழுங்கள் என்கிறது ஒரு ஆய்வு.

அதிகாலையில் எழுபவர்கள் தங்களுக்கான வேலையை சுறுசுறுப்பாக செய்வதோடு தங்கள் குழந்தைகளையும் பள்ளிக்கு விரைவாக அனுப்பி வைப்பதும், விடிய விடிய வேலை பார்த்துவிட்டு வீடு திரும்புபவர்கள் மன அழுத்தத்தினாலும், உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுவதும் இந்த ஆய்வில் தெரிய வந்தது.

மேலும், இந்த ஆய்வில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் அவர்களின் உறங்கும் பழக்கம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

அவர்களில் அதிகாலையில் எழுபவர்கள் சராசரியாக காலை 6.58 மணிக்கு தாங்கள் துயில் கலைந்து எழுவதாக தெரிவித்தனர். நள்ளிரவையும் தாண்டி தாமதமாக படுக்கைக்கு உறங்கச் செல்லும் வழக்கம் கொண்டவர்கள் சராசரியாக 8 மணி 54 நிமிடத்திற்கு எழுவதாக சொன்னார்கள்.

வார இறுதி நாட்களில் மகிழ்ச்சியுடன் இரவில் அதிக நேரம் பொழுதை கழிக்கும் இளைஞர்கள் காலையில் 7 மணி 47 நிமிடத்திற்கு எழுந்திருப்பதாக தெரிவித்தனர்.

ஆய்வின் முடிவில், அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள், தாமதமாக கண்விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், ஸ்லிம் உடல்வாகு கொண்டவர்களாகவும் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

காரட் மசாலா இட்லி


தேவையானவை

வெங்காயம் (நறுக்கியது) – 1/2 கப்
காரட் (துருவியது) – 1/2 கப்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
கறிமசாலா தூள் – 1/2 டீஸ்பூன்
துருவிய சீஸ் – 1/4 கப்
கடுகு, உளுந்தம் பருப்பு – தாளிக்க
பச்சைக் கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
இட்லி மாவு – தேவைக்கேற்ப

செய்முறை

* வாணலியில் சிறிது எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பை தாளிக்கவும்.

* தொடர்ந்து பொடியாக நறுக்கிய வெங்காயம், காரட் துருவல் சேர்த்து வதக்கவும்.

* அத்துடன் மிளகாய் தூள், மசாலா தூள், துருவிய சீஸ் சேர்த்து பச்சைக் கொத்தமல்லி, உப்பு சேர்த்து மசாலா தயார் செய்து கொள்ளவும்.

* இட்லி தட்டில் குழியில் சிறிது மாவை ஊற்றி அதன் மேல் சிறிதளவு மசாலா கலவையை போட்டு அதற்கு மேல் இன்னும் சிறிதளவு இட்லி மாவு ஊற்றவும். இப்படியே எல்லாக் குழிகளிலும் இட்லி மாவு வார்க்கவும்.

* வேக வைத்து எடுத்தால், ருசியான `ஸ்டப்டு இட்லி’ ரெடி. தேங்காய்ச் சட்னி இந்த இட்லிக்கு ஏற்றது.

கீதா தெய்வசிகாமணி

ஜார்ட் (Jarte) ன வேர்ட் ப்ராசசர்

லிடுர்ட்பேட் மற்றும் நோட்பேட் பற்றி அறிந்திருப்பீர்கள். பலரும் பயன் படுத்தி வருவீர்கள். இவற்றிற்கு மாற்றாக நமக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு வேர்ட் ப்ராசசர் ஜார்ட். இது இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது. ஆனால், இதில் கூடுதலாகப் பல வசதிகள் கிடைக்கின்றன. பைல்களை PDF மற்றும் HTML பார்மட்டில் அனுப்பலாம். இவற்றை DOC, RTF மற்றும் TXT என்ற பார்மட்களில் சேவ் செய்திடலாம்.
இதன் இன்னொரு சிறப்பு, இதில் மெனு தேர்ந்தெடுக்க கிளிக் செய்திடத் தேவை யில்லை. அதாவது, கர்சரை மெனு அருகே கொண்டு சென்றாலே, மெனு விரிந்து கொடுக்கிறது. ஐகான்கள் மற்றும் பிற மெனுக்கள் கிடைக்கின்றன. இதிலிருந்து தேவையானவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். இதனை நீங்கள் விரும்பவில்லை என்றால், வழக்கம்போல கிளிக் அடிப்படையிலான இயக்கத்திற்கு மாறிக் கொள்ளலாம்.
இதன் இன்டர்பேஸ் மூன்று வகைகளில் கிடைக்கிறது. அவை Minimal (NotePad போல), Compact, மற்றும் Classic ஆகும்.
இதன் சில அம்சங்களைக் காணலாம். word, page, line மற்றும் character ஆகியவற்றை எண்ணி அறியலாம். தேதி, நேரம், படங்கள், ஹைப்பர்லிங்க், டேபிள், ஸ்பெஷல் கேரக்டர்கள், ஈக்குவேஷன்கள், ஆப்ஜெக்ட்டுகள் ஆகியவற்றை விரும்பும் இடத்தில் இணைக்கலாம். டிக்ஷனரி, தெசாரஸ் ஆகியவற்றுடன் ஸ்பெல் செக் வசதி தரப்பட்டுள்ளது. பல பைல்களை இயக்கினால், அவற்றை அடையாளம் கண்டு கொண்டு இயக்க டேப் வசதி தரப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் வேர்ட் மற்றும் ஓப்பன் ஆபீஸ் ரைட்டர் பயன்படுத்தி சலிப்பு கொண்டவர்களுக்கு இந்த ஜார்ட் டெக்ஸ்ட் எடிட்டர் வித்தியாசமாகவும், வசதிகள் பல கொண்டதாகவும் இருக்கும்.
இதன் இன்னொரு முக்கிய அம்சம் இதன் வேகம். மிக வேகமாகத் திறக்கப்பட்டு, இயக்கத்திற்குக் கிடைக்கிறது. இது மற்ற எந்த வேர்ட் ப்ராசசரிலும் கிடைக்காத ஒரு வசதி. மைக்ரோசாப்ட் வேர்ட் புரோகிராம் இயங்க எவ்வளவு நேரம் ஆகிறது என்பதனை நாம் ஏற்கனவே அறிந்து வைத்துள்ளோம். அந்த பிரச்னை இங்கு இல்லை. நான்கு விநாடிகளில் இந்த ஜார்ட் புரோகிராம் இயங்கத் தொடங்குகிறது.
இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்வதும் இன்ஸ்டால் செய்வதும் மிக மிக எளிது. இதனை ஒரு யு.எஸ்.பி. ட்ரைவில் பதிந்தும் இயக்கலாம்.
http://download.cnet.com/Jarte/30002079_410212778.html என்ற இணைய தள முகவரியிலிருந்து இதனை இலவசமாக டவுண்லோட் செய்து இயக்கலாம்.