காரட் மசாலா இட்லி


தேவையானவை

வெங்காயம் (நறுக்கியது) – 1/2 கப்
காரட் (துருவியது) – 1/2 கப்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
கறிமசாலா தூள் – 1/2 டீஸ்பூன்
துருவிய சீஸ் – 1/4 கப்
கடுகு, உளுந்தம் பருப்பு – தாளிக்க
பச்சைக் கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
இட்லி மாவு – தேவைக்கேற்ப

செய்முறை

* வாணலியில் சிறிது எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பை தாளிக்கவும்.

* தொடர்ந்து பொடியாக நறுக்கிய வெங்காயம், காரட் துருவல் சேர்த்து வதக்கவும்.

* அத்துடன் மிளகாய் தூள், மசாலா தூள், துருவிய சீஸ் சேர்த்து பச்சைக் கொத்தமல்லி, உப்பு சேர்த்து மசாலா தயார் செய்து கொள்ளவும்.

* இட்லி தட்டில் குழியில் சிறிது மாவை ஊற்றி அதன் மேல் சிறிதளவு மசாலா கலவையை போட்டு அதற்கு மேல் இன்னும் சிறிதளவு இட்லி மாவு ஊற்றவும். இப்படியே எல்லாக் குழிகளிலும் இட்லி மாவு வார்க்கவும்.

* வேக வைத்து எடுத்தால், ருசியான `ஸ்டப்டு இட்லி’ ரெடி. தேங்காய்ச் சட்னி இந்த இட்லிக்கு ஏற்றது.

கீதா தெய்வசிகாமணி

%d bloggers like this: