Daily Archives: நவம்பர் 25th, 2011

மழைக்காலத்தில் வரும் தொற்று நோய்கள்

டைபாய்ட் காய்ச்சல்

கிருமி : சல்மோனெலி டைபி (Salmonilla Typhi) இந்த கிருமி மிகவும் பொதுவானது.

பரவும் முறை: அசுத்தமான உணவு, குளிர்பானங்கள், குடிநீர் வழியே பரவும்.

ஆரம்ப அறிகுறிகள்: காய்ச்சல், பொதுவான மாறுபட்ட உடல் சோர்வு, உடல் நல மாற்றம், வயிற்று வலி, வயிற்றிலும் அல்லது மார்பிலும் சிலருக்கு அரிப்பு தோன்றும். “ரோஸ் ஸ்பாட்’ என்றழைக்கப்படும் சிறு சிவப்புப் புள்ளிகளின் தோற்றம், வயிற்றில் குறிப்பிட்ட இடத்தில் பலவீனம், மலத்தில் ரத்தம், குளிர், பதற்றம், நிலையற்ற மனநிலை, தீவிர மயக்க நிலை, மெதுவான சோம்பல் நிலையுடன் சோர்வாகக் காணப்படும், உடலில் சோர்வு மற்றும் தளர்ச்சி, பலவீனம்.

பரிசோதனைகள்: முழுமையான ரத்தப் பரிசோதனை (CBC)
முதல் வாரம் – ரத்த வளர்சோதனை (Blood Culture)
இரண்டாவது வாரம் – ப்ளோரசன்ட் உடல் எதிர்பிகள் (Fluroscent Antibody)
மூன்றாவது வாரம் – ரத்த அணுக்கள் (குறைவுபடும்) (Low Platelet Count)
நான்காவது வாரம் – மலம் வளர் சோதனை (Stool Culture)

விளைவுகள்: குடலில் ரத்தக் கசிவு, குடலில் துளை ஏற்பட்டு ரத்த வெளியேற்றம், சிறுநீரகம் செயலிழத்தல்

தடுப்பு முறைகள்: குடிநீர்க் காய்ச்சிக் குடித்தல், சுகாதாரமான முறையில் உணவு வழங்குதல், கழிவுகளை அப்புறப்படுத்துதல், உடல்நல முறைகளைப் பின்பற்றுதல்.

கிருமி : லெப்டோஸ்பைரா பாக்டீரியா (ஃஞுணீtணிண்ணீடிணூச் ஞச்ஞிtஞுணூடிச்)

பரவும் வழி : அதிக எண்ணிக்கையாக கொறிவிலங்கு (கீணிஞீஞுணtண்) பிராணிகளின் சிறுநீர் மூலம் பரவும்.

அறிகுறிகள் : 4 முதல் அல்லது 14 நாள் அன்று நோயின் அறிகுறி தென்படும்.

முதல்நிலை : (சளிக்காய்ச்சல் (ஊடூத) போல் தென்படும்) வறட்டு இருமல், அதிகமான காய்ச்சல், பயங்கர தலைவலி, உடல் வலி, வாந்தி, பேதி, உடலில் நடுக்கம்.

இரண்டாம் நிலை : மூளை காய்ச்சல், ஈரல் பாதிப்பும், மஞ்சள் காமாலை, சிறுநீரக செயலிழப்பு.

பரிசோதனைகள் / நோயறியும் ஆய்வுகள் : – ரத்த அணtடிஞணிஞீடிஞுண் அறிதல், – முழுமையான ரத்தப் பரிசோதனை (இஆஇ), – பெருமூளைத் தண்டு வட மண்டலம் (இகுஊ ஊடூதிடிஞீ), – ஈரல் செரிமானப் பொருள் வகை அறிதல், – சிறுநீர் சோதனை

விளைவுகள்: – மூளைக் காய்ச்சல், ரத்த கசிவு: ஹெப்படைடிஸ் அ வைரஸ்

ஹெப்படைடிஸ் அ வைரஸ்

கிருமி : ஹெப்படைடிஸ் அ வைரஸ் Hep A.Virus

பரவும் முறை : வெளி உணவகங்களின் மூலம் உணவு உண்பதாலும், அசுத்தமற்ற முறையில் உணவு தயாரிப்பதன் மூலம், மலக்கழிவுகளால் ஏற்படும். சாக்கடை நீர்க் கலப்பினாலோ, கழிவுப் பொருட்களினால் உண்டாகிய காய், கனிகள் உண்பதன் மூலம் பரவ வாய்ப்பு உண்டு. நோய்த் தாக்கப்பட்டவரின் ரத்தம் அல்லது மலம் மூலம் பரவும்.

அறிகுறிகள் : தீவிரமற்ற வைரசு எனினும், அதன் தாக்கம் குறிப்பாக, பெரியவர்களுக்கும் பல மாதங்கள் வரை நீடிக்கும். கருமையான சிறுநீர், மயக்கம், தோலரிப்பு, பசியின்மை, காய்ச்சல், வெளிர் அல்லது வண்ணமில்லா மலம், மஞ்சள் நிறத் தோல், கண்கள் மஞ்சளாகி காமாலை காணப்படும்.

பரிசோதனை: மருத்துவ பரிசோதனையின் போது, ஈரல் வீக்கமும் அதன் பாதிப்பும் மருத்துவர் கண்டறிவார்.

ரத்த பரிசோதனைகள்: ரத்தத்திலுள்ள அகுகூ, அஃகூ அளவுகள் அதிகரித்திருக்கும், ரத்தத்தில் அணtடி ஏஅங காணப்படும், ரத்தத்தில் அணtடி ஏச்தி ணிஞூ ஐஞ்M வகை காணப்படும், ஈரல் செயல் சோதனை.

விளைவுகள்: ஆயிரத்தில் ஒருவருக்கு அச்சுறுத்தும் ஹெப்படைடிஸ் உயிர்க்கு அச்சமூட்டும்.

தடுப்பு முறைகள்: நோய்க் கிருமி பரவாமல் உரிய முறைகளை மேற்கொள்ளல். கைகளைச் சுத்தமாகக் கழுவவும். சுத்தமற்ற நீரையும், உணவையும் தவிர்க்கவும். தடுப்பு ஊசி, இந்நோய் பரவியிருக்கும் இடங்களுக்குச் செல்லுமுன் இந்த தடுப்பு ஊசி போட்டுக் கொண்டால் பாதுகாப்புக் கொடுக்கும். பயணிப்பவர் கடைப்பிடிக்க வேண்டியவை: பால் பொருட்களைத் தவிர்த்தல். பச்சையாகவோ அல்லது குளிரூட்டப்பட்ட இறைச்சி மற்றும் மீனைத் தவிர்க்கவும்.

டாக்டர் பிரபுராஜ்

ஆரோக்கியம் காக்கும் கைப்பட்டை!

ஒருவர், கூட்டுக் குடும்பத்தில் வசிக்கிறார் என்றால், அவர் எப்போது சாப்பிட வேண்டும், எப்போது உறங்க வேண்டும், உடலை எவ்வாறு பேண வேண்டும் என்று பெரியவர்கள் அறிவுரை கூறிக்கொண்டே இருப்பார்கள்.

இன்று மனிதர்கள் தனித்தனித் தீவுகளாகிவிட்ட நிலையில், அதற்கான வாய்ப்புக் குறைவு. இந்நிலையில், பெரியவர்களின் பொறுப்பை ஒரு `கைப்பட்டை’ எடுத்துக்கொண்டுவிட்டது.

சுமார் 6 ஆயிரம் ரூபாய் விலையுள்ள இந்தக் கைப்பட்டையை மணிக்கட்டில் அணிந்துகொண்டால், அது அவரது சாப்பாடு, தூக்க முறைகள், உடற்பயிற்சி முறை போன்றவற்றைக் கண்காணிக்கும். அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கணினி மென்பொருள் வாயிலாக, குறிப்பிட்ட நபர் எப்படி ஆரோக்கியமாக இருப்பது என்று தனிப்பட்ட ஆலோசனையை வழங்கும்.

இந்தக் கைப்பட்டையை உருவாக்கியிருக்கும் நிறுவனமான `ஜாபோன்’, `இது ஒரு நீடித்து உழைக்கக்கூடிய, கவர்ச்சிகரமான, தண்ணீரால் பாதிக்கப்படாத உபயோகமான பொருள்’ என்று பெருமையடித்துக்கொள்கிறது. இந்தப் பட்டையில் உள்ள அசைவு உணர்வி (மோசன் சென்சார்), இதை அணிந்திருப்பவர் எடுத்து வைக்கும் அடிகள், எரிக்கப்படும் கலோரிகள், நடக்கும் தூரம், `சும்மாயிருந்த’ நேரத்துடன் ஒப்பிடுகையில் வேலை அல்லது பயிற்சிகளில் ஈடுபட்ட நேரம் ஆகியவற்றைப் பதிவு செய்துகொள்ளும். அத்துடன், ஒருவர் தூங்கும் நேரம், அது ஆழமான தூக்கமா, மேலோட்டமான உறக்கமான என்பன போன்ற விஷயங்களும் பதிவாகும்.

இதெல்லாம் போதாது என்று தோன்றினால், ஒருவரை அவர் சாப்பிடும் உணவை புகைப்படம் எடுக்கும்படி இந்த `ஐபோன் அப்ளிக்கேஷன்’ கூறும். அதன்மூலம் குறிப்பிட்ட நபர் சாப்பிட வேண்டிய உணவு, தேவையான அளவைக் கூறும்.

கம்ப்யூட்டர்ப் புதியவரா? பேக்கப் எடுக்கப்பட வேண்டிய முக்கியமான பைல்கள்

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் அதில் உள்ள டேட்டாவினை குறிப்பிட்ட கால அவகாசத்தில் அல்லது தினந்தோறும் பேக்கப் எடுத்து வைக்க முயற்சிப்பதே இல்லை. இதற்குக் காரணம் நம் கம்ப்யூட்டர் என்ன நின்றா போய்விடும்? என்ற தவறான எண்ணப் போக்குதான். இந்த தவற்றைப் பலர் செய்கின்றனர். முக்கியமான பைல் களைப் பேக்கப் எடுப்பதில்லை. ஒரு சிலருக்கோ முக்கிய மான பைல்கள் எவை என்று தெரிவதில்லை.
எந்தெந்த பைல்களை எல்லாம் பேக்கப் எடுக்க வேண்டும்? நீங்கள் உருவாக்கிய எல்லா பைல்களையும் (வேர்ட், எக்செல், அக்சஸ், பவர்பாயிண்ட் பைல்கள்) பேக்கப் எடுக்க வேண்டும். எழுத்து வகைகள், ஐகான்கள், கர்சர்கள், வால்பேப்பர்கள், தீம்கள், ஸ்கிரீன்சேவர்கள், எம்பி3 பைல்கள், வீடியோ பைல்கள் என இண்டர்நெட்டில் இருந்து டவுன்லோடு செய்த எல்லா பைல்களையும் பேக்கப் எடுக்க வேண்டும். இமெயில்கள், இமெயில்களின் விதிகள், பேவரிட் தளங்கள், முகவரி புத்தகங்கள், நண்பர்கள் பட்டியல்கள் என இண்டர்நெட் சேவைகள் தொடர்பானவற்றையும் பேக்கப் எடுக்க வேண்டும். இவற்றை பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.

உங்களது பைல்கள்:
எம்எஸ் வேர்ட், எம்எஸ் எக்செல் போன்ற பெரும்பாலான அப்ளிகேஷன்கள் வழியாக நீங்கள் உருவாக்குகிற பைல்களை My Documents என்ற போல்டரில்தான் கம்ப்யூட்டர் சேமிக்கும். எனவே இந்த போல்டரைப் பேக்கப் எடுக்க வேண்டும்.
விண்டோஸ் எக்ஸ்பி கம்ப்யூட்டர்களில் படங்களை My Pictures போல்டரிலும், ஆடியோ பைல்களை My Music போல்டரிலும், வீடியோ பைல்களை My Video போல்டரிலும் போட்டு வைக்கும். இந்த போல்டர்கள் எல்லாமே My Documents போல்டரின் கீழ்தான் வருகின்றன. எனவே My Documents போல்டரை பேக்கப் எடுத்தால் இவையும் தாமாகவே பேக்கப் ஆகிவிடும்.

மைக்ரோசாப்ட் ஆபீஸ் செட்டிங்:
மைக்ரோசாப்ட் ஆபீஸ் அப்ளிகேஷனைப் பயன்படுத்துகிறவர்கள் பல செட்டிங்களை அங்கு கொடுத்திருக்கலாம். மெனு, டூல்பார், டெம்ப்ளேட் போன்ற செட்டிங்கள், இமெயில் விதிகள் எனப் பலவற்றை பேக்கப் எடுக்க Save My Settings Wizard என்ற ஒன்றை ஆபீஸ் எக்ஸ்பி தந்துள்ளது. ஆபீஸ் எக்ஸ்பி சிடி டிஸ்க்கில் உள்ள இதை நிறுவினால் மைக்ரோசா ப்ட் ஆபீஸ் தொடர்பான எல்லா செட்டிங்குகளையும் பேக்கப் எடுக்கலாம்.

எழுத்து வகைகள்:
பல அப்ளிகேஷன்களை உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவும் பொழுது அவை தங்களுக்கு வேண்டிய எழுத்து வகைகளை உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவி இருக்கும். இண்டர்நெட்டில் இருந்து பல எழுத்து வகைகளை உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுன்லோடு செய்திருப்பீர்கள். C:/windows போல்டரின் கீழ் Fonts என்ற பெயரில் உள்ள போல்டரில்தான் எல்லா எழுத்து வகைகளும் காணப்படும். இதை பேக்கப் எடுங்கள்.

இன்டர்நெட் விவரங்கள்:
இன்டர்நெட் வெப் தளங்களில் நீங்கள் நுழைந்தவுடன் இந்த தளங்களுக்கு மீண்டும் வர வேண்டும் என்ற ஆவல் பிறக்கலாம். அப்படிப்பட்ட தளங்களை நினைவில் வைத்துக் கொள்ளும்படி பிரவுசருக்கு தெரிவிக்க முடியும். இதற்காகவே Bookmarks அல்லது Favorites என்ற மெனு பிரவுசரில் காணப்படும்.
பிரவுசருக்கு அடையாளம் காட்டப்பட்ட வெப் தளங்களின் பட்டியல் Bookmarks அல்லது Favoritesல் சேமிக்கப்பட்டிருக்கும். இந்த பட்டியலை பேக்கப் எடுக்க வேண்டும். எப்படி பேக்கப் எடுப்பது என்பது பிரவுசரை பொறுத்து மாறுபடும். எடுத்துக்காட்டாக இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் File=>Import and Export கட்டளை மூலம் அந்த பேவரிட் பட்டியலை ஒரு பைலில் சேமித்து பின்பு அந்த பைலை பேக்கப் எடுக்க வேண்டும்.
உங்களுக்கு வந்துள்ள இமெயில்களை நீங்கள் பேக்கப் எடுக்க வேண்டும். மேலும் உங்கள் இமெயில் அக்கவுண்ட் பற்றிய விவரங்கள், முகவரி புத்தகம், இமெயில் வடிகட்டல் விதி, சிக்னேச்சர் போன்றவற்றையும் பேக்கப் எடுக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் இமெயில் புரோகிராமில் எப்படி பேக்கப் எடுப்பது என்பதை தெரிந்து கொண்டு அதன்படி செயல்படுங்கள்.
விண்டோஸின் Find அல்லது Search கட்டளை மூலம் BMP, JPG, JPEG, GIF, SCR, WAV, MDI, MP3, MPG, DAT போன்ற பைல்கள் கம்ப்யூட்டரில் எங்குள்ளன என்று தேடி அவற்றை பேக்கப் எடுப்பது நல்லது.

பட்டினி கிடக்கும் 10 வயதுப் பெண்கள்!

ஒரு கிராம் அளவு கூட `எக்ஸ்ட்ரா’ சதை இல்லாமல் கச்சிதமாகத் தோன்ற வேண்டும் என்பதில் ஆண்களை விட பெண்களுக்கு ஆர்வம் அதிகம்தான். அதிலும் இளம்பெண்களிடம் இந்த மோகம் தீவிரமாக இருக்கும்.

ஆனால் தற்போது அதிர்ச்சி அளிக்கும் விஷயம், பள்ளி செல்லும் சுமார் 10 வயதுப் பெண்கள் கூட `ஸ்லிம் பியூட்டி’யாகத் தோன்ற வேண்டும் என்று பட்டினி கிடந்து உடலை வருத்திக்கொள்கிறார்கள் என்பதுதான். 10- 11 வயதுப் பெண்களில் மூன்றில் ஒரு பங்குக்கு மேற்பட்டோர், பட்டினி கிடப்பது போன்ற கடுமையான வழிகள் மூலம் `பென்சில்’ தோற்றத்தை அடைய முயற்சிக்கிறார்களாம்.

இதுதொடர்பாக 83 ஆயிரம் பள்ளி மாணவிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். அவர்கள் அனைவரும் 10 வயது மாணவிகள். அவர்களில் மூன்றில் ஒரு பங்குக்கு மேற்பட்டவர்கள் காலை உணவு சாப்பிட்டிருக்கவில்லை. இன்னும் மோசம், அவர்களில் 24 சதவீதம் பேர், முந்திய நாள் மதிய உணவையும் தவிர்த்திருந்தனர்.

இளம்பெண்கள் வயது கூடக் கூட, அவர்கள் உணவைத் தவிர்க்கும் ஆர்வமும் கூடுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 14- 15 வயதுப் பெண்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் தங்கள் உடல் எடையைக் குறைக்கவும், அதற்கு ஒரு தொடர்ச்சியான முறையைப் பின்பற்றவும் விரும்புகிறார்கள்.

“இளம்பெண்களுக்குத் தோற்றம் குறித்த கருத்தை உருவாக்குவதில் ஊடகங்கள் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால் அதற்காக பெண்கள் ஆரோக்கியமற்ற வழிகளை நாடுவதுதான் கவலையளிக்கும் விஷயம்” என்கிறார், இந்த ஆய்வில் ஈடுபட்ட டாக்டர் லாரா வைன்ஸ்.

முட்டைக்கோஸ் சீஸ் கோலா


விருந்தின்போது பிரியாணி, பிரைடு ரைஸ் பரிமாறுவது வழக்கமாக இருக்கிறது. இவற்றுக்கு பரிமாற ஏற்ற துணைக் குழம்புதான் முட்டைக்கோஸ் சீஸ்கோலா.

தேவையானவை

முட்டைக்கோஸ் – 100 கிராம்
பன்னீர் – 50 கிராம்
உருளைக்கிழங்கு – 200 கிராம்
பச்சை மிளகாய் – 4
பிரெட் துண்டுகள் – 2
எலுமிச்சம் பழச்சாறு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ரொட்டித் தூள் – 6 ஸ்பூன்
ரீபைண்ட் எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

* முட்டைக்கோசையும், பச்சை மிளகாயையும் பொடியாக அரியவும். பன்னீரை துருவிக் கொள்ளவும். உருளைக் கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.

* முட்டைக்கோசுடன், மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய், பன்னீர் சேர்த்து பிரட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து மசித்துப் போடவும். தொடர்ந்து எலுமிச்சம் பழச்சாறு, தேவையான உப்பு சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருண்டைகளை ரொட்டித் தூளில் புரட்டி எடுக்கவும்.

* வாணலியில் ரீபைண்ட் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இது தக்காளி, சில்லி சாஸுடன் சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

கீதா தெய்வசிகாமணி