Daily Archives: நவம்பர் 26th, 2011

பார்த்ததும்… ஆண்களை `கணக்கு’ போட்டுவிட முடியுமா?

ரு ஆண் எப்படிப்பட்டவர் என்பதை, பார்த்த உடனே ஒரு பெண்ணால் கண்டு பிடித்து விட முடியுமா?

– `கூர்மையாக உற்றுநோக்கி, உள்ளுணர்வையும், அறிவையும் பயன்படுத்தி சிந்தித்தால், மூன்றே மூன்று நிமிடங்களில் அந்த ஆண் எப்படிப்பட்டவர் என்பதை கணித்து விடலாம்’ என்கிறார்கள், சில கில்லாடி பெண்கள்.

– `அதெப்படி முடியும்? ஒருவரது குணாதிசயங்கள் அவரது முகத்தில் எழுதியா ஒட்டப்பட்டிருக்கிறது? உள்ளத்தில் அத்தனை தீய எண்ணங்களையும் வைத்துக் கொண்டு வெளித்தோற்றத்தில் நல்லவன் போல் நடப்பவர்களை கணிக்க எப்படி மூன்று நிமிடம் போதும்?’ என்று கேட்பவர்கள் ஏராளம்.

– `நான்கு வருடங்கள் காதலித்தும் அவனது உண்மையான குணத்தை தெரிந்துகொள்ள முடியாமல் ஏமாந்து போனேனே’ என்று புலம்பும் பெண்களும் இருக்கிறார்கள்.

புதிதாக நம்மிடம் அறிமுகமாகும் ஒருவரை நாம் ஓரளவு தெரிந்து கொள்ளவே குறைந்தது இரண்டு மாதம் பிடிக்கும். இந்த இரண்டு மாதத்திற்குள் அவரது நடவடிக்கைகள் ஓரளவுக்கு நமக்கு அத்துபடியாகும். அவரது விருப்பு-வெறுப்பு என்ன மாதிரியானது என்பதை இந்த காலகட்டத்திற்குள் கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள முடியும். ஆனாலும் அவரை முழுமையாக தெரிந்து கொள்ள முடியுமா என்பது சந்தேகம் தான். காரணம், ஒரு மனிதனின் பலவீனம் என்பது எப்போதாவது தான் முகங்காட்டும். அதுவரை ஒரு பொய்த்தோற்றத்திலேயே புன்னகையை ஒட்ட வைத்துக்கொண்டு நடமாடிக் கொண்டிருப்பார்கள்.

சில பெண்கள் சட்டென காதல் வலையில் விழுந்து விடுவார்கள். காரணம் காதலனாக அவளால் அறியப்பட்ட இளைஞன் மார்டனாக, பார்த்த மாத்திரத்தில் கவரும் தோற்றத்தில் நுனிநாக்கில் ஆங்கிலத்தை தவழவிட்டபடி காணப்படுவது தான். நாலு மாத நட்பில் அந்தப் பெண்ணிடம் `அவன் யார்? எந்த ஊர்? பெற்றோர் எங்கிருக்கிறார்கள்? அவன் குடும்ப பின்னணி என்ன?’ என்று கேட்டுப் பாருங்கள்.

பாதிக்கேள்விக்கு அந்தப் பெண்ணிடம் விடையிருக்காது. டிப்-டாப்பாக இருக்கும் ஒருவன் நல்லவனாகத்தான் இருப்பான் என்ற எண்ணம் அந்த பெண்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அதுவே நட்பு தாண்டி காதல் வரை போகிறது. இந்த காதல் கிளைமாக்சின் உச்சக்கட்டமாக, ஒரு அரையிருட்டு லாட்ஜில் அந்தப்பெண்ணுடனான காதல் நுகர்வோடு அவன் தன்இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு விடுகிறான். அப்படியே புதிய இடம், புதிய சூழலில் அடுத்த விட்டில்பூச்சியை குறி வைக்கத் தொடங்கி விடுகிறான். ஏமாந்த பெண்ணும் மனதுக்குள் அவனை சபித்தபடி பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளைக்காக காத்திருக்கத் தொடங்கி விடுகிறாள்.

நாலு மாதமாகியும் ஒரு பெண்ணால் தன் நேசிப்புக்குரியவன் எப்படிப்பட்டவன் என்பதை கண்டு கொள்ள முடியாமல் போகும்போது, மூன்று நிமிடத்தில் ஒருவனை எப்படி சரியாக கணிக்க முடியும்?

ஆனால் இன்றைய பெண்களில் பலர் புத்திசாலிகள். வலிய நட்புதேடி வரும் இளைஞர்களைக் கூட மிக எளிதில் தங்கள் நட்புக்கூடாரத்தில் அனுமதிப்பதில்லை. அப்படியே அவன்பழக்கவழக்கம் பிடித்தாலும் சில மாதங்கள் டீலில் விட்டு அப்புறமே `ஹாய், ஹலோ’வுக்கு வருகிறார்கள். இந்த காலகட்டத்திற்குள் அவசரம் காட்டும் இளைஞர்கள் தங்கள் இரையில் சிக்கும் வேறு பெண்கள் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பிக்கொண்டு வேறு பக்கமாக திரும்பிப் போய்விடுகிறார்கள்.

இப்போது ஆண்களை, பெண்கள் புரிந்துகொள்வதற்கு செல்போன்கள் பெரிய அளவில் உதவுகிறது. இரவு-பகல் பாராமல் அவன் பேசும்போது, அவனது பலவீனங்களில் ஏதாவது ஒன்று கொஞ்சமேனும் வெளிப்பட்டு விடுகிறது. அதில் உஷாராகிவிடும் பெண்கள் அப்படியே அவனை `கட்’ செய்துவிடுகிறார்கள்.

மாதக்கணக்கில் பழகியே ஆண்களின் கேரக்டரை கணிக்கமுடியாது போகும்போது, மூன்று நிமிடத்தில் ஒருவரை கணித்து விட முடியும் என்பதை சிறந்த நகைச்சுவையில் ஒன்றாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும்.

தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை!

`சாதித்த பிறகே திருமணம்’ என்பது இப்போதைய இளைஞர்களின் தாரக மந்திரமாகி வருகிறது. இப்படி கூறியே பலர் முப்பது, முப்பத்தைந்து வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

படிப்பு, நல்ல வேலை, பதவி உயர்வு, நல்ல சம்பளம் என்பதையே வாழ்வின் குறிக்கோளாக வைத்து ஓடிக் கொண்டிருக்கிறோம். இலக்கை அடைந்து திரும்பிப் பார்க்கையில் நம் கையில் அனைத்தும் இருக்கும்… இளமையைத் தவிர!

15 வயதிற்குள்ளாகவே, இளமைப்பருவத்தில் அடியெடுத்து வைத்து விடுகிறோம். ஆனால் 30, 35 வயதுவரை வாழ்க்கை வசதிக்காக உடல் தேவையை பூர்த்தி செய்யாமல் இயற்கைக்கு எதிராக வாழ முற்படுகிறோம்.

நம் நாட்டில் `செக்ஸ்` என்பது கெட்ட வார்த்தையாக பார்க்கப்படுகிறது. உடலுறவு பற்றி பேசுவது அசிங்கம். திருமணத்திற்கு முன்பு ஆணும், பெண்ணும் இணைவது கலாசார சீர்கேடு என சுழற்றும் சமூக சாட்டைக்கு பயந்து நமது உடலியக்க தேவைகளை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு வாழ்கிறோம். தாமதமான திருமணம் உடல் ரீதியாக வும், உளவியல் ரீதியாகவும் கூட பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. தாமதமாக திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. கருத்தரிக்க தாமதம். அப்படியே கருத்தரித்தாலும் சுகப்பிரசவம் கேள்விக்குறி என்ற நிலை.

காலதாமதமாக திருமணமானவர்களுக்கே அதிகமாக சிசேரியன் பிரசவம் நடக்கிறது. பாட்டி காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்தவர்கள் அறுவைச் சிகிச்சையை அறிந்த தில்லை. அவர்கள் ஆரோக்கியமான வயதில் திருமணம் செய்து கர்ப்பமடைந்தனர். எளிதாக குழந்தை பெற்றுக் கொண்டனர். அதிகமாக சுகப்பிரசவங்களே நடந்தன.

இன்று, இயந்திரங்கள் வேலைகளைச் செய்வதால் இளைய தலைமுறையினர் உடலு ழைப்பை உணர வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது. படிப்பு, வேலை, சொந்த காலில் நின்ற பிறகே இல்லறம் என்றெல்லாம் கூறி திருமணத்தை தாமதமாக செய்து கொள்கி றார்கள்.

வயது முதிர்வடையும்போது உடல் வளைந்து கொடுக்கும் தன்மையை இழக்கிறது. இடுப்பெலும்பு வளைந்து கொடுக்கும் வயதைத்தாண்டி திருமணம் செய்துகொள்ளும்போது அநேக பெண்களுக்கு `சிசேரியன்` அவசியமாகி விடுகிறது.

ஆண்கள், தாமதமாக திருமணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தால் தவறான பழக்கம் உடையவர்களாகிறார்கள். அதனால் திருமண சமயத்தில் வீரியம் குறைந்து தந்தையாகும் தகுதியை பலர் இழக்கின்றனர்.

இயற்கை இச்சைகளை தீர்ப்பதற்காக செக்ஸ் புத்தகம், பலான படங்கள், இணைய தள தேடல் என மாற்று வழிகளில் இன்றைய இளைஞர்கள் பயணப்படும் பின்னணியில், தள்ளிப்போடப்படும் அவர்கள் திருமணம் இருக்கிறது. இதனால் தற்காலிக உணர்வுத் தேவைகளை முறைகேடாக அணுகப்போய், அதனால் எயிட்ஸ் அதிகரிப்பு, கள்ளக்காதல் போன்ற கலாசார சீரழிவும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

அதற்காக இன்றைய காலத்தில் மீண்டும் 15 வயதிற்குள் பால்ய விவாகம் செய்வது சாத்தியமில்லை. ஆனால் இளம் பருவத்தில் திருமணம் செய்து வைக்கும் வழக்கத்திற்கு மாற முயற்சிக்கலாம். இன்றைய இளைய தலைமுறை கல்வியில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். நல்ல படிப்பு, அதற்கேற்ற வேலை, கைநிறைய சம்பளம் என்று ஒரு லட்சியத்தை மனதில் பதித்துக்கொண்டு அதை சாதித்தும் விடுகிறார்கள். இப்படிப்பட்டவர் கள் படிப்புக்கேற்ற வேலை கிடைத்ததும் அதற்கு மேலும் தள்ளிப்போடாமல் தாமதமின்றி திருமணம் செய்து கொள்வது அவசியம்.

இளம்வயதில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளின் பெற்றோர் நல்ல ஆரோக்கிய மாக இருப்பார்கள். அதனால் பிறக்கப்போகும் தங்கள் பேரன், பேத்திகளை அவர்கள் தங்கள் பொறுப்பில் பார்த்துக் கொள்வார்கள். இதனால் தலையாய பிரச்சினையான குழந்தை வளர்ப்பது கூட தம்பதிகளுக்கு சாதாரண விஷயமாகி விடுகிறது. இந்த யதார்த் தம் புரிந்தால் இளம்வயதில் இல்லறமே நல்லறம் என்பது ஆணியடித்த மாதிரி மனதில் பதிவாகி விடும். ஆகவே படிப்பை முடித்ததும் `கையில வேலை…அப்பவே கல்யாணம்’ னு வாழ்க்கையில செட்டிலாகப்பாருங்க!

வேர்ட் டிப்ஸ்-மெனு தேர்வும் நீக்கலும்

மெனு தேர்வும் நீக்கலும்
வேர்டில் ஒரு மெனுவினைக் கிளிக் செய்து திறந்துவிட்டீர்கள். பின்னர் அது வேண்டாம் என்று எண்ணி அதனைக் கேன்சல் செய்து மீண்டும் டாகுமெண்ட்டில் கர்சர் இருந்த இடத்திற்கு வர எண்ணுகிறீர்கள். என்ன செய்யலாம்? இதற்கு மூன்று வழிகள் உள்ளன.
1. எஸ்கேப் கீயை இரண்டு முறை தட்டவும். முதல் முறையில் மெனு மறையும். ஆனால் கர்சர், மெனு மீதாக இருக்கும். இரண்டாவது முறை தட்டுகையில் கர்சர் டாகுமெண்ட்டில் விட்ட இடத்தில் நிற்கும்.
2. மெனுமீது மீண்டும் ஒரு முறை கிளிக் செய்தால் மெனு மறையும்.
3. மெனுவிற்கு வெளியே டாகுமெண்ட்டில் எங்கு கிளிக் செய்தாலும் மெனு உடனே மறைந்துவிடும்.

முன்பு எங்கு எடிட் செய்தோம்?
ஒரு பெரிய வேர்ட் பைலை எடிட் செய்கிறீர்கள். இன்னொரு அவசர காரியத்தை மேற்கொள்ள பைலையும் வேர்டையும் மூடிச் செல்கிறீர்கள். திரும்ப சில மணி கழித்து வந்து வேர்டையும் அந்த பைலையும் திறந்து எடிட் செய்திட உட்கார்ந்தால் கடைசியாக எங்கு எடிட் செய்தோம் என்று நினைவில்லை. கவலை வேண்டாம். ஷிப்ட் + எப் 5 (Shift + F5) அழுத்துங்கள். இறுதியாக நீங்கள் எடிட் செய்த இடத்திற்கு கர்சர் செல்லும். மறுபடியும் அழுத்தினால் அதற்கு முந்தைய எடிட் இடத்திற்குச் செல்லும். இப்படியே மூன்று இடத்திற்குச் செல்லும். அதன்பின் அழுத்தினால் என்ன ஆகும்? மீண்டும் விட்ட இடத்திற்கே வரும்.

உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம்

டல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர் ஏராளம். கொஞ்சம் குண்டாக வேண்டும் என்று ஆசைப்படுவோர் கூட, உடல் எடை அதிகமுள்ளவரின் அவஸ்தைகளைக் கேட்டால் கொஞ்சம் அரண்டு தான் போவார்கள். நிற்க கஷ்டம், நடக்க கஷ்டம் என்று அவர்களின் தொல்லைகள் நீளும். இன்னொரு புறம் தேவையில்லாத வியாதிகள் ஒன்றன்பின் ஒன்றாக தொற்றத் தொடங்கும்

***

ணவுப்பழக்கத்தில் அதிக கவனம் செலுத்தாததுதான் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம். துரித உணவுகள், நொறுக்குத் தீனிகளை கண்டபடி தின்றுவிட்டு எடை கூடியபிறகு `டயட்’ என்ற பெயரில் உணவைக் குறைத்துக் கொள்பவர்கள் ஏராளம். நடைபயணம், ஓட்டம், நீச்சல், விளையாட்டுகள் என்று வேறு சில முயற்சிகளில் இறங்கி எடையைக் குறைக்க ஆசைப்படுபவர்களும் உண்டு. மருந்து மாத்திரைகள், சத்துமாவுகள், பழங்களை சாப்பிட்டு சிலர் பயன் தேடுகிறார்கள்.

***

த்தனையோ வழியில், எவ்வளவோ பேர் எடையைக் குறைக்க ஓடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உடல் எடைப் பிரச்சினை உலகம் முழுவதும் இருக்கிறது. இந்தியாவிலும் எடைகூடியவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். ஆனால் மேற்கத்திய நாடுகளில் குண்டு உடல்காரர்கள் மிகுதி. அவர்களின் பிரச்சினையை குறைக்க அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில் உடல் எடையைக் குறைக்க சுலபமான வழியை அறிமுகப்படுத்தினார்கள்.

***

7 நாட்களுக்கு உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் சுமார் 6 கிலோ வரை எடை குறையும் என்று அந்த ஆய்வு முடிவில் உறுதியளிக்கப்பட்டது. அந்த ஆய்வின்படி முதல்நாள் முழுக்க முழுக்க பழ வர்க்கங்களை மட்டும் உண்ண வேண்டும். ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, மாதுளை, தர்பூசணி, சப்போட்டா என்று எந்தப் பழங்களை வேண்டுமானாலும் சாப்பிடலாம். தண்ணீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி மிகவும் நல்லது. ஆனால் வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.

***

ரண்டாம் நாள் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ருசிக்காக உப்பு, காரம் சேர்த்துக் கொள்ளலாம். வயிறு நிரம்ப சாப்பிடலாம். காலையில் உருளைக்கிழங்கு மட்டும் சாப்பிட வேண்டும். காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுபவர்கள் எண்ணெய், தேங்காய் சேர்க்கக்கூடாது. மூன்றாவது நாள் பழங்கள், காய்கறிகள் கலந்து சாப்பிட வேண்டும். அன்றைய தினம் உருளைக்கிழங்கு, வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.

***

நான்காவது நாள் வாழைப்பழமும், பாலும் தான் சாப்பாடு. அதிகபட்சமாக 3 டம்ளர் பாலும், 8 பழங்களும் உண்ணலாம். விரும்பினால் காய்கறி சூப் ஒரு கப் சாப்பிட்டுக் கொள்ளுங்கள். ஐந்தாம் நாள் சிறிதளவு (ஒரு கிண்ணம்) அரிசி சாதம் சேர்க்கலாம். மீதி பசிக்கு பெரிய தக்காளிப் பழங்கள் 6 சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் பசியெடுத்தால் தண்ணீர் தான் குடிக்க வேண்டும். வழக்கத்தைவிட கூடுதலாக 4 டம்ளர் (மொத்தம் 12 டம்ளர்) தண்ணீர் பருக ஆய்வு அறிவுறுத்துகிறது.

***

றாம் நாள் சிறிது அரிசி சாதமும், மீதிக்கு காய்கறிகளும் சாப்பிடுங்கள். காய்கறிகளை வேக வைத்தோ, பச்சையாகவோ வயிறு நிரம்ப சாப்பிடலாம். ஏழாவது நாள் ஒரு கப் சாதம் – காய்கறிகளுடன், பழ ஜூஸ் பருகுங்கள். மற்ற நாட்களில் பழங்களை ஜூஸ் செய்து சாப்பிடக்கூடாது. அவ்வளவுதான் டயட் முடிந்தது. 8-ம்நாள் எடை இயந்திரத்தில் ஏறிப் பாருங்கள். மாற்றம் தெரியும் என்கிறது அந்த ஆய்வு.

***

ந்த டயட் முறைக்கு வேறு கட்டுப்பாட்டு விதிகள் இல்லை என்பது சிறப்பானது. டீ, காபி சாப்பிடுபவர்கள் பால், சர்க்கரை தவிர்த்து பருகலாம். டீயில் எலுமிச்சை பிழிந்து சாப்பிட்டால் நல்லது தான். எண்ணெய் தவிர்த்து வருவது சிறந்த பலன் தரும். முடியாத பட்சத்தில் ஒரு டீஸ்பூன் எண்ணை சேர்த்துக் கொள்ளலாம். முதல் இரண்டு நாட்களில் சேர்க்கும் பழங்கள், காய்கறிகள் உடலுக்கு போதிய ஆற்றலை வழங்கும்.

***

3-வது நாளில் இருந்து கொழுப்பு எரிக்கும் பணி உடலில் நடைபெறுகிறது. அதை நீங்களே உணர முடியும். நான்காம் நாளில் சேர்க்கப்படும் வாழைப்பழம், உடல் இழக்கும் பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் கிடைக்க உதவுகிறது. 5-ம் நாள் அதிகப்படியான தண்ணீர் சேர்க்கப்படுவது உடல் உறுப்புகளை சுத்தம் செய்யும். சிறிது அரிசி சாதம் சேர்ப்பதால் 5, 6-வது நாட்களில் உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறது. 7-வது நாளில் மாற்றங்களின் பலனை உடல் சுறுசுறுப்பில் இருந்து உணரலாம்.

***

மெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வு மையம் இந்த ஆய்வை மேற்கொண்டது. பிரசித்தி பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், ஆய்வை அங்கீகரித்து தங்கள் ஊழியர்களின் எடை குறைப்பிற்காக கடைப்பிடிக்க வைத்தது. அதற்கு நல்ல பலன் கிடைத்ததால் அது `ஜெனரல் மோட்டார்ஸ் டயட்’ என்று அழைக்கப்படுகிறது. மேலும் எடை குறைய விரும்புபவர்கள் 3 நாள் இடைவெளிவிட்டு மீண்டும் இதே டயட் முறையை கடைபிடிக்கலாம் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுர்வேதம்: நெய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா?

பெரும்பாலான மக்கள், நெய் வெறும் கொழுப்பு மட்டும் நிறைந்த, ரத்தக் கொழுப்பை உயர்த்தும் குணம் உடையது என்ற தவறான எண்ணத்துடன், உணவில் நெய்யை அறவே சேர்ப்பது இல்லை. ஆனால் ஆயுர்வேதத்தில், நெய்யினை உணவில் தினந்தோறும் எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. நெய் ஒரு மிகச் சிறந்த போஷாக்கான, மருத்துவ குணம் வாய்ந்த பொருள். வாயு மற்றும் பித்த சம்பந்தமான நோய்களுக்கு, நெய் மிக முக்கியமான மருந்து.

ஆய்வு: ஐம்பத்து ஏழு வயதான ஒருவருக்கு, தோள் மூட்டில் கடுமையான வலி இருந்தது. கைகளை முழுவதுமாக தூக்க முடியவில்லை. அவருடைய உணவு வழக்கத்தில், கொழுப்பற்ற அல்லது மிகக் குறைந்த கொழுப்பே இருந்தது. கறிகாய்களை மிக அதிக அளவிலும், மிளகாய்களை அதிகமாகவும் உண்ணும் பழக்கம் இருந்தது. அவருக்கு ரத்தக் கொழுப்பு மிகவும் அதிகமாக இருந்ததால், நெய்யைச் சேர்க்காமலும், எண்ணெய் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளாமலும், மிகவும் கவனமாக இருந்தார். நவீன மருத்துவத்தில் அவருக்கு ரத்தக் கொழுப்பினைக் குறைக்க, மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் இதுவரையில், அவர் அதை எடுக்கத் தொடங்கவில்லை. அவருடைய நடைமுறைகள் மற்றும் வழக்கங்களை வறண்ட மற்றும் கொழு ப்பு / எண்ணெய் பசையற்ற உணவு, குளிர் சாதன வசதி பொருத்தப்பட்ட அறைகளில் வேலை, (மிளகாய் நிறைந்த) காரமான உணவு, அடிக்கடி பிரயாணம் போன்றவற்றால் வாயு மிகவும் சீற்றமடைந்ததால், தோளில் வலி கடுமையாக இருந்தது. மேற்கூறிய முரணான வழக்கங்களை கைவிடுமாறு அறிவுறுத்தப்பட்டது. சிகிச்சையாய், உட்கொள்ளுவதற்கு நெய் மருந்து பரிந்துரைக்கப்பட்டது. காலை மற்றும் மாலையில், வேளைக்கு 15 ட்டூ கொடுக்கப்பட்டது. நெய் என்ற பெயரைக் கேட்டவுடனேயே அவர் கவலைப்பட்டார். தன்னுடைய ரத்தக் கொழுப்பின் நிலை என்ன ஆகுமோ என பயந்தார். சீற்ற மடைந்த வாயுவினால் பாதிக்கப்பட்ட தோளுக்கு, இதுவே உகந்த மருந்து என்று, திரும்பவும் உறுதிப்படுத்தப்பட்டது.

அடுத்த ஐந்து வாரங்களுக்கு, அவர் நெய் மருந்தை ஒழுங்காக உட்கொண்டார். உணவிலும் நெய் சேர்த்துக் கொண்டார். 5-6 வாரங்களில், ஏறக்குறைய ஒரு கிலோ, நெய் மருந்தாகவும், உணவாகவும் உண்டு முடித்தார். இதற்குள் அவர், ரத்தக் கொழுப்பு அளவினைக் குறித்து மிகுந்த கவலையுடன் இருந்தார். ஃஐகஐஈ ககீOஊஐஃஉ எனும் சோதனையை எடுத்த போது, ஆச்சரியப்படும் வகையில் அவருடைய கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசராய்டு அளவுகள், நெய் மருந்தால் குறைந்ததாகத் தெரிந்தது.

சோதனையின்படி, எல்லா அளவுகளும் விரும்பத்தக்க அளவுகளுக்கு குறைவாகவே உள்ளன. ஏஈஃ சிறு அளவு குறைந்தாலும், விரும்பத்தக்க அளவைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளது. ரத்தக் கொழுப்பு குறைந்தது நெய் மருந்தை உட்கொண்டதால், வாயுவினால் ஏற்பட்ட வலி தீர்ந்ததுடன், ரத்தக் கொழு ப்பும் குறைந்தது. நெய் அனேக சிறந்த குணங்களைக் கொண்டது. நெய் அறிவு, ஞாபக சக்தி, நுண்ணறிவு, ஜீரண சக்தி, பலம், ஆயுள், விந்து, கண்பார்வை இவற்றை அதிகரிக்கும். சிறுவர், முதியோர், மகப்பேறு, உடல் ஒளி, மிருதுத் தன்மை, குரல் இவற்றுக்குச் சிறந்தது. மார்புவலி, உடல் இளைப்பு, அக்கி என்னும் தோல் நோய், ஆயுதம், நெருப்பு இவற்றால் துன்புற்ற உடல் போன்றவற்றுக்கும் சிறந்தது. வாதம், பித்தம், நஞ்சு, மனக்கலக்கம், உடல் வறட்சி, முகத்தில் தெளிவின்மை, காய்ச்சல் ஆகியவற்றை நெய் நீக்கும். நெய் இத்தனை நல்ல குணங்களையுடையது. இவ்வளவு சிறந்ததோர் உணவை, இன்றைய மக்கள், இது ஒரு கொழுப்பு என்று ஒதுக்கி விட்டனர்.

டாக்டர் கிரிஜா
சஞ்சீவனி ஆயுர்வேத மருத்துவ மையம்
sanjeevani foundation @gmail.com