Daily Archives: நவம்பர் 27th, 2011

மழை நேரங்களில் மின் விபத்துகள்

* மழை நேரங்களில் ஏற்படும் சிரமங்கள் ஏராளம். அன்றாட வாழ்க்கையை வெகுவாகப் பாதிக்கும் மழை, வேறு சில ஆபத்துகளையும் ஏற்படுத்தலாம். அவற்றில் முக்கியமானது மின் விபத்துகள். சமைக்க, தண்ணீர் சுட வைக்க, துணி துவைக்க, தேய்க்க, காற்று வாங்க என மின்சாரத்தின் பயன்பாடுகள் அதிகம். மழை நேரத்தில் வயர் இணைப்புகள் பாதிக்கப்படுவது, மின்கம்பங்கள் சாய்வது என விபத்துகள் ஏற்பட்டு மழை நீர், ஈரப்பதத்தின் மூலம் மின்சாரம் கடத்தப்பட்டு இழப்புகளையும் ஏற்படுத்துகிறது.

* மின் விபத்துகளை தடுக்க, சுவிட்சுகள் மற்றும் மின் சாதனங்களை இயக்கும்போது கவனமாகப் பயன்படுத்த வேண்டும். உலர்ந்த காலணிகளை அணிந்து கொள்வது, மின்சாரம் உடல்வழியாக கடத்தப்பட்டு தரையை அடைவதை தடை செய்து மின்விபத்தை தடுக்கும். வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தும்போது தண்ணீர் சூடாகி விட்டதா என்பதை மின்சுவிட்சை ஆப் செய்த பிறகுதான் பரிசோதிக்க வேண்டும். மின்அடுப்பையும் மின்சாரம் கடத்தாத இடத்தில் வைத்து பாதுகாப்பாக பயன்படுத்துங்கள்.

* சில இடங்களில் வீடுகளுக்கு மிக அருகே மின்கம்பிகள் சென்று கொண்டிருக்கும். அவை தொடும் தூரத்தில் இருந்தால் அவற்றை கைகளாலோ, கம்புகளாலோ தொடக்
கூடாது. கல்லெறிதல், தண்ணீர்கொட்டுவது, பொருட்களை அதன்மீது படும்படி பயன் படுத்துவது ஆபத்தை விளைவிக்கும். வீட்டுக்குள் மின்இணைப்பு வயரிங் செய்து பல ஆண்டுகள் ஆகியிருந்தால் மழை நேரத்தில் மின்காப்பு (இன்சுலேசன்) பாதிக்கப்படலாம். இதனால் மின்ஒழுக்கு ஏற்பட்டு `ஷாக்` அடிக்க வாய்ப்பிருக்கிறது. பாதிப்புகளை உடனடி யாக சரி செய்துவிட வேண்டும்.

* விபத்தால் இதயத்துடிப்பு நின்று போயிருப்பவர்களுக்கு செயற்கை சுவாச முறையுடன் இதய இயக்க முதலுதவியும் அளிக்க வேண்டும். மார்புக் கூட்டின் மையப் பகுதிக்கும், இடதுபுறத்துக்கும் இடையில் கையை வைத்து அழுத்த வேண்டும். நிமிடத்துக்கு சுமார் 40 முறை இப்படி செய்யலாம். அதே நேரம் செயற்கை சுவாசமும் அளிக்கப்பட வேண்டும்.

* துண்டான வயர்களை `டேப்’ கொண்டு ஒட்டிப் பயன்படுத்துவது, தரமற்ற உபகரணங் களைப் பயன்படுத்துவது போன்றவை மழைநேரத்தில் மின்விபத்தை ஏற்படுத்தலாம். பல்புகள் பியூஸ் போய்விட்டால் சுவிட்சை ஆப் செய்துவிட்டு, மர பெஞ்ச் மீது காலணி அணிந்து நின்று கொண்டு பல்பை மாற்ற வேண்டும். ரெப்ரிஜிரேட்டர், ஏ.சி., மிக்சி ஆகியவை பயன்படுத்துவதிலும் கவனம் தேவை. இவற்றில் மின்கசிவு ஏற்பட்டு தீப் பிடிக்க வாய்ப்புண்டு. மின்காப்பு பாதிக்கப்பட்டு வீணாகும் மின்சாரம் வெப்பசக்தியாக வெளியேறும்போது தீப்பிடிக்கிறது.

* வீட்டிற்கு வெளியே நிகழும் மின்விபத்துகளும் அதிகம். மின்கம்பங்களில் கல்லெறி வது, ஏறிவிளையாடுவது, மின்கம்ப இணைப்புக் கம்பியில் மாடுகட்டுவது போன்றவை கிராமப்புறங்களில் பழக்கமாக இருக்கிறது. நகர்ப்புறங்களிலோ மின்கம்பங்களை ஒலி பெருக்கி கட்ட, பந்தல்காலாக பயன்படுத்துகிறார்கள். இவையாவும் மின்விபத்துகளை தூண்டும். மரக்கிளைகள் மின்வயரில் உரசுவது, கிளைகள் முறிந்து வயரில் விழுவது, மண் அரிப்பால் மின்கம்பங்கள் சாய்ந்துவிடுவது போன்றவை மின்விபத்துகளுக்கு காரண மாகி விடும்.

* மின்விபத்துகளை தவிர்க்க மின்கம்பிக்கும் கட்டிட உச்சிக்கும் 2.4 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். கட்டிடத்திற்கு பக்கவாட்டில் வயர் சென்றால் 1.219 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். அதற்கும் குறைவான இடைவெளி இருந்தால் மின்காப்பு பயன்படுத்த வேண்டும். விவசாயக் கிணறுகளில் மோட்டாரை இறக்கி ஏற்றுவது, எர்த் கம்பிகளை சரியாக இணைக்காமல் விடுவது, எலி, அணில் போன்ற உயிரினங்களால் வயர்கள் சேதம் அடைவது ஆகியவற்றால் விபத்துகள் ஏற்படலாம். எனவே கவனம் தேவை.

* எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் எதிர்பாராமல் விபத்துகள் நிகழலாம். எனவே முதலுதவி முறையை தெரிந்து வைத்திருப்பது நல்லது. விபத்தை அறிந்ததும் முதலில் மின்இணைப்பை துண்டிக்க வேண்டும். மரப்பெஞ்சு, நாற்காலி, ரப்பர், பாய் போன்ற மின் கடத்தா பொருட்களின் மேல் செருப்பு அணிந்து நின்று கொண்டு, தோல், கயிறு, துணி, காகிதம், சாக்கு உதவியுடன் மின் சாதனத்திலிருந்து விபத்துக்குட்பட்டவரை விலக்க வேண்டும்.

மின் விபத்தில் சிக்கி மீட்கப்பட்டவரை உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டும். மூச்சு குறைவாக இருந்தால் உடனே செயற்கை சுவாசம் அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் வாய் அல்லது மூக்கில் தன்னுடைய வாயால் ஊதி காற்றை செலுத்துவது நேரடி சுவாச முறையாகும். முதுகு தரையில் படும்படி படுக்க வைத்து, தலையை நன்கு பின்னோக்கி சாய்த்துப் பிடித்து சுவாசமளிக்க வேண்டும். மார்பு நன்கு உயரும் வரை நிமிடத்திற்கு சுமார் 20 முறை சுவாசமளிக்கலாம்.

* மின்தாக்குதலால் உடலில் சருமம் தீய்ந்து புண் ஏற்படலாம். அவர்களுக்கும் முதலில் செயற்கை சுவாசம் அளிக்க வேண்டும். பிறகு எரிபுண்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக, கொப்புளங்கள் பாதிக்கப்படாமல் ஆடைகளை களைய வேண்டும். உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரினால் புண்களை நனைக்க வேண்டும். அதே நீரில் நனைத்த துணியை புண்ணின் மீது கட்ட வேண்டும். அவரால் சாப்பிட முடிந்தால் இனிப்பான டீ கொடுக்கலாம்.

* உப்புக்கரைசல் தயாரிக்க முடியாத பட்சத்தில் தூய துணியால் மின் எரிபுண்களை கட்டலாம். காயத்தில் இருந்து ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தால் அதைக் கட்டுப்
படுத்த வேண்டும். அதிகமாக சுத்த ரத்தம் வெளியேறும் போது, இதயத்துக்கும் காயத்திற் கும் இடையில் இதயத்தின் அருகே துணியால் அழுத்திக் கட்டுப்போட வேண்டும். அசுத்த ரத்தம் வெளியேறினால் புண்ணின் அருகிலேயே கட்டுப்போடலாம். காயத்தின் மேல் பஞ்சை வைத்து கட்டுப்போட வேண்டும். துணியும் பஞ்சும் கிருமிகள் அற்றனவாக இருக்க வேண்டும்.

வீட்டிற்கு வெளியே நிகழும் மின்விபத்துகளும் அதிகம். மின்கம்பங்களில் கல்லெறி வது, ஏறிவிளையாடுவது, மின்கம்ப இணைப்புக் கம்பியில் மாடுகட்டுவது போன்றவை கிராமப்புறங்களில் பழக்கமாக இருக்கிறது. நகர்ப்புறங்களிலோ மின்கம்பங்களை ஒலி பெருக்கி கட்ட, பந்தல்காலாக பயன்படுத்துகிறார்கள். இவை யாவும் மின்விபத்துகளை தூண்டும். மரக்கிளைகள் மின்வயரில் உரசுவது, கிளைகள் முறிந்து வயரில் விழுவது, மண் அரிப்பால் மின்கம்பங்கள் சாய்ந்துவிடுவது போன்றவை மின்விபத்துகளுக்கு காரண மாகி விடும்.

* மின்விபத்துகளை தவிர்க்க மின்கம்பிக்கும் கட்டிட உச்சிக்கும் 2.4 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். கட்டிடத்திற்கு பக்கவாட்டில் வயர் சென்றால் 1.219 மீட்டர் இடை வெளி இருக்க வேண்டும். அதற்கும் குறைவான இடைவெளி இருந்தால் மின்காப்பு பயன்படுத்த வேண்டும். விவசாயக் கிணறுகளில் மோட்டாரை இறக்கி ஏற்றுவது, எர்த் கம்பிகளை சரியாக இணைக்காமல் விடுவது, எலி, அணில் போன்ற உயிரினங்களால் வயர்கள் சேதம் அடைவது ஆகியவற்றால் விபத்துகள் ஏற்படலாம். எனவே கவனம் தேவை.

நெத்திலி கிரிஸ்பி வறுவல்

தேவையானவை

நெத்திலி மீன் – 1/2 கிலோ

எலுமிச்சம்பழம் (சாறு) – 2 கரண்டி

மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்

தனியாத்தூள் – 3 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

எண்ணெய் – போதுமான அளவு

உப்பு – தேவைக்கேற்ப

அரிசி மாவு – 2 கைப்பிடி

மைதா மாவு – 1 கைப்பிடி

சோளமாவு – 1 கைப்பிடி

கறிவேப்பிலை – 2 கொத்து

செய்முறை

* நெத்திலியைச் சுத்தம் செய்து கொள்ளவும். மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து கலவையாக்கவும்.

* நெத்திலியுடன் இந்த மாவு, மசாலா கலந்து சிறிது நீர் சேர்த்துப் பிசையவும். தேவைப்பட்டால் கலர் சேர்த்துக் கொள்ளலாம்.

* எண்ணையைக் காய வைத்து காய்ந்ததும் நெத்திலி மீனை சிறிது சிறிதாகப் போட்டு பொறித்து எடுக்கவும்.

செப்’ தாமு

மூலிகை மருத்துவம்: மூலிகை பூமராங்

பூமராங் என்ற கருவி எங்கிருந்து கிளம்பியதோ அதே இடத்திற்கு, அதே வேகத்துடன் திரும்பி வரும் சிறப்புடையதாகும். அதுபோலத்தான் நமது நாட்டிலுள்ள பல மூலிகைகள் வெளிநாடுகளுக்கு சென்று புதிய மருந்துகளாக மாற்றப்பட்டு, நமக்கே திரும்பி வருகின்றன. இந்தியாவிலுள்ள பல மூலிகைகள் ஆராய்ச்சி செய்யப்பட்டு, வெளிநாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் மருந்துகளாக மாற்றப்பட்டு, நமக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவின் மூலிகை ஏற்றுமதி சந்தை அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் இந்திய மூலிகைகளின் தேவை அதிகரிப்பதால் மலை மற்றும் வனப் பகுதிகளில் காணப்படும் மூலிகைகள் இயற்கை வளம் குன்றாமல் சேகரிக்கப்பட்டு, ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உயிருக்கு ஆபத்தாக கருதப்படும் நோய்களில் புற்றுநோய் முதலிடத்தை வகிக்கிறது. என்ன, ஏது என்று கண்டறியும் முன்னரே உடலுக்குள் பல்கி, பெருகி, வேரூன்றி, பரவி, அங்கங்களை பாதித்து, உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் புற்றுநோய்க்கு உலகளவில் மூலிகை மருந்துகளின் தேடல் அதிகரித்து வருகிறது. ஆரம்பகட்ட புற்றுநோயை எளிதில் குணப்படுத்த முடிவதால் ரத்தப் புற்றுநோய், மார்பு புற்றுநோய் மற்றும் ஹாட்கின்ஸ் புற்றுநோய் கட்டிகளுக்கு மூலிகைகளின் பங்கு சிறப்புமிக்கதாகும். இவை செல் பிரிதல் மற்றும் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, ஆபத்தான புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை குறைத்து, நோய் எதிர்ப்பு

சக்தியை அதிகரித்து, புற்று நோயின் தீவிரத்தை குறைக்கின்றன. மேலும் புற்றுநோய் சிகிச்சையின்பொழுது ஏற்படும் மனபாதிப்பை நீக்கி, மன அமைதியை உண்டாக்குகின்றன. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் பலவிதமான நவீன மருத்துவமுறைகள் வந்துவிட்டபோதிலும், மருத்துவவசதி, விழிப்புணர்ச்சியின்மை மற்றும் பொருளாதார வசதியின்மையால் பெரும்பாலான புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிய முடிவதில்லை. நம்மைச் சுற்றியுள்ள வேதிப் பொருட்களின் ஆதிக்கம், கதிர்வீச்சு பாதிப்புகள், ரசாயன உரங்கள், பல்வேறு விதமான பூச்சிக்கொல்லிகள், புற்றுநோயை தூண்டும் வேதி மருந்துகள், பரம்பரை போன்றவற்றால் தோன்றும் பல்வேறு விதமான புற்றுநோய்களை கட்டுப்படுத்த நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதுடன் இயற்கை சூழலையும் பாதுகாக்க வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பல்வேறு விதமான புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றால் தோன்றும் நுரையீரல், கல்லீரல் புற்றுநோய்களை நமது பழக்க வழக்கத்தின் மூலம் நமக்கு வராமல் காத்துக்கொள்ள முடியும்.

ஆஸ்பிரின், சாலிசிலிக் அமிலம், அட்ரோபின், பெத்தடின் போன்ற பல உயிர்காக்கும் மருந்துகளும் மூலிகைகளின் பரிணாம வளர்ச்சிதான். அதுபோல்தான் புற்றுநோய்க்காக உலகளவில் சிறப்பாக பயன்படும் மூலிகை நித்தியகல்யாணி. கத்தரான்தாஸ் ரோசியஸ் என்ற தாவரவியல் பெயர்கொண்ட அப்போசினேசியே குடும்பத்தைச் சார்ந்த சிறுசெடிகளின் வேர் மற்றும் இலைகளிலுள்ள வின்கிரிஸ்டின், வின்பிராஸ்டின் போன்ற வேதிச்சத்துக்கள் புற்றுநோய் செல்களை அழிக்கின்றன. ரத்தத்தில் கொழுப்பு செல்கள் படிவதை தடுத்து, ரத்த அழுத்தத்தை குறைக்கின்றன. குடல் மற்றும் மலவாய் புற்றுநோய் வராமல் தடுத்து, குடலில் தோன்றும் ரத்தக்கசிவை நிறுத்துகின்றன.

நித்தியகல்யாணி வேரை நன்கு அலசி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, உலர்த்தி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கிராம் அளவு எடுத்து 200 மில்லி நீரில் 3 மணி நேரம் ஊறவைத்து 3 முதல் 7 நாட்கள் குடித்துவர குடலில் தோன்றும் ரத்தக்கசிவு நீங்கும். இந்த நீரைக்கொண்டு ஆறாத புண்களையும் கழுவி வரலாம். ஸ்டியடோரியா என்னும் ஒரு வகை கழிச்சலில் நமது உடலின் கொழுப்பானது மலத்தில் வெளியேறுகிறது. நாம் உண்ணும் உணவிலுள்ள கொழுப்பானது, என்சைம்களால் கிரகிக்க முடியாமல்

மலத்தோடு வெளியேறும் இந்த கழிச்சலை நிணக்கழிச்சல் அல்லது ஊன் கழிச்சல் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. வேகாத பொருட்கள், செரிக்கக் கடினமான உணவுகள், சுகாதாரமற்ற தண்ணீர் ஆகியவற்றால் செரிமான என்சைம்கள், பித்தநீர் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டு இந்நோய் உண்டாவதாகவும், இவற்றில் 11 வகைகள் உள்ளதாகவும் சித்தமருத்துவ நூல்கள் குறிப்பிட்டுள்ளன. பித்தநீர் பாதை மற்றும் கணையப்பாதையில் அடைப்பு ஏற்படுவதாலும், சில வகையான கொழுப்பை கரைக்கும் மருந்துகளினாலும், சர்க்கரை நோயின் தீவிர நிலையிலும் உணவிலுள்ள கொழுப்பானது கிரகிக்கப்படாமல் எண்ணெய் போன்று, மலத்துடனோ அல்லது தனியாகவோ மலவாய் வழியாக வெளியேறுவதாக நவீன அறிவியல் குறிப்பிடுகிறது. இதற்கு முத்து, பவளம், பலகரை போன்ற மருந்துகளை
வழங்கலாம் என சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. ஆரம்ப நிலையில் இந்த நோயை கண்டறியாவிட்டால் உடல் இளைத்து, மிகவும் பலஹீனம் தோன்றிவிடும். ஆகவே மலத்துடன் கொழுப்பு சென்றாலோ அல்லது எண்ணெய் போன்ற மலம் வெளியேறினாலோ முறையான மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்,
மதுரை. 98421-67567.