Daily Archives: நவம்பர் 28th, 2011

சிட்டுக்குருவியின் `சேதி’ தெரியுமா?

ரம், செடி, கொடிகளும், எண்ணிலடங்கா தாவர இனங்களும், பிராணிகளும், பறவைகளும், பூச்சிகளும், புழுக்களும், பூக்களும், புல் பூண்டுகளும், மனிதனின் ரசனைக் குரிய எழிலார்ந்த காட்சி பொருட்கள் மட்டுமல்ல. அவைகள் ஒவ்வொன்றும் மற்றொன்றின் உயிர் வாழ்விற்கு அடிப்படை தேவையாக அமைந்துள்ளன.

உதாரணமாக, புறா இனத்தை சேர்ந்த சுமார் 25 கிலோ எடை கொண்ட “டோடோ” என்னும் பறவைகளை மனிதர்கள் வேட்டையாடி, வயிறு புடைக்க தின்று, அந்த பறவை இனத்தையே முற்றிலுமாய் அழித்துவிட்டார்கள். அதன் காரணத்தால் காடுகளில் செழித்து வாழ்ந்திருந்த “கல்வாரியோ மேஜர்” என்னும் மர இனம் முழுவதும் மண்ணில் இருந்து அழிந்து விட்டது.

அந்த மரத்தின் கனிகளை புசித்து ஜீரணித்து, அதன் கொட்டைகளை தனது ஜீரண நீரினால் மிருதுவாக்கி அதை கழிவாக வெளியேற்றி மண்ணிலே போட்டு கொண்டு இருந்த “டோடோ’ பறவைகள் பூமியில் இல்லாமல் போன காரணத்தால், அந்த கல்வாரியோ மேஜர் மர இனமும் இல்லாமல் போய்விட்டது. அதன் வித்துக்கள் இயற்கையின் இயக்கத்தால் செயல்பட்டு, மண்ணிலே புதைந்து மறு உரு எடுத்து கனி தரும் மரங்களாக காட்சியளிக்க வழியில்லாமல் போய்விட்டது.

`பல்லுயிர் சுழற்சி’ என்னும் இயற்கையின் விதிமுறை இயக்கத்திற்கு இவ்வாறு ஏற்பட்டு வருகின்ற இடையூறுகளுக்கு மேற்கண்ட அழிவுகள் ஒரு அடையாளமாகும். மேலும் அதைப்போன்ற ஒரு சம்பவம் தான் சிட்டுக் குருவி இனத்தின் அழிவாகும். அதற்கு செல்போன் டவர்களில் இருந்து எழும்பும் “எலெக்ட்ரோ மேக்னட்” கதிர்வீச்சுகள் மட்டுமே காரணம் அல்ல. மனிதனின் உயிர் வாழ்விற்காக மண்ணில் விதைக்கப்படுகின்ற உணவு தானிய விதைகளின் அணுக்கரு மாற்ற செயல் திட்டங்களின் எதிர் விளைவுகளாலும் அந்த பல்லுயிர் சுழற்சிக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது.

இந்த காலத்தில் அப்படிப்பட்ட விஞ்ஞான தொழில் நுட்பங்களை கொண்டு உற்பத்தி செய்யப்படுகிற விதைகளை கொண்டு விவசாயம் செய்து பெறப்படுகின்ற தானியங்கள், மனிதனுக்கு மட்டுமின்றி சிட்டுக்குருவிகளுக்கும் உணவாகின்றன. அப்படிப்பட்ட விஞ்ஞான தொழில் நுட்பத்தின் எதிர்விளைவுகளை ஒரு வேளை, மனிதனால் ஏற்றுக்கொள்ள முடியும் என்று வைத்துக்கொள்வோம். அதேபோல் சிட்டுக்குருவிகளும், தேனீக்களும் அதை ஏற்றுக்கொள்ளும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்களா? அப்படி கணக்கு போட்டால் அது, தப்புக்கணக்கு ஆகி விடுமல்லவா? அந்த எதிர்பார்ப்பு, இலவு காத்த கிளியின் கதைக்கு ஒப்பாகி விடும்.

“பல்லுயிர் சுழற்சி” என்ற இயற்கையின் விதிமுறையில் புல்லுக்கும் கூட முக்கிய பங்கு உண்டு. அப்படியிருக்க, அந்த கண்ணோட்டத்தின் அடிப்படையில் சிட்டுக்குருவி இனம் அழிவதை யாரும் அலட்சியம் செய்யக்கூடாது. விஞ்ஞானிகள் கூடி விவாதித்து, போர்க்கால நடவடிக்கையை மேற்கொண்டு அந்த அழிவை தடுத்திடவேண்டும். அத்தகைய அழிவுகளுக்கு எதிராக அறிவாயுத யுத்தம் செய்திட அணி திரளவேண்டியதும் அவசியமானதாகும். அதைப்போலவே, கதிர்வீச்சின் தாக்குதலை எதிர்த்து நிற்க இயலாத தேனீக்களுக்கு ஆதரவாகவும் பாதுகாப்பு படை அமைக்கப்படவேண்டும்.

உலகின் மிகப் பெரிய அக்வேரியம்

நீர் வாழ் உயிரினங்களின் அருங் காட்சிச் சாலையினை ஆங்கிலத்தில் அக்வேரியம் (Aquarium) என அழைக் கிறோம். உலகிலேயே மிகப் பெரிய அக்@வரியம் அமெரிக்காவின் ஜியார்ஜியா மாநிலத்தில், அட்லாண்டா என்னும் நகரில் உள்ளது. இதனைக் காண http://www.wonderfulinfo.com/amazing/georgia_aquarium/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
இந்த நீர் வாழ் உயிரினங்களின் அருங்காட்சியகத்தில் 85 லட்சம் காலன் நீரில், 500க்கும் மேற்பட்ட உயிர்வகை இனங்களில், 1,20,000க்கும் மேற்பட்ட நீர் வாழ் விலங்குகளைக் காணலாம். இது நவம்பர் 2005ல் மக்களுக்குத் திறக்கப்பட்டது. உலகிலேயே நீர்வாழ் இனங்களைக் காண அமைக்கப்பட்ட ஜன்னல்களில், இங்கு உள்ள ஜன்னல் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் உயரம் 23 அடி. அகலம் 61 அடி. இரண்டடி தடிமன் உடைய கண்ணாடி ஜன்னலைக் கொண்டது. இதன் முன் நின்று ஆயிரக்கணக்கான நீர் வாழ் இனங்களைக் காண்பது ஓர் அரிய அனுபவம். நேரடியாக அட்லாண்டா செல்ல முடியாவிட்டாலும், இணைய தளம் சென்று இதனைக் காணலாம்.

கவர்ச்சியான கைகளுக்கு…

நகங்களை அழகுற வெட்டி, பூச்சு போட்டு அழகுபடுத்தும் கலைக்கு, “மானிகூர்’ என்று பெயர். “மானிகூர்’ செய்ய சில கருவிகள் தேவை. கியூட்டிக்கிள் சாப்டர், ஆரஞ்ச் ஸ்டிக், நெயில் பைல், எமரி பேப்பர், அஸ்டிரிஞ்ஜன்ட் லோஷன், க்ளென்சிங் லோஷன், மசாஜ் க்ரீம், நகப் பூச்சு பஞ்சு போன்றவற்றை பயன்படுத்தலாம்.

நல்ல ஆரோக்கியத்துடனும், பளபளப்புடனும் தென்படும் நகங்கள், கைகளுக்கு கவர்ச்சி தரும். மனித உடம்பின் ஆரோக்கியம் நகங்களில் தென்படும். நல்ல ஆரோக்கியமுடைய நகம், இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும். உடம்பில் இரும்புச் சத்துக் குறைவாக இருந்தால், நகங்கள் நிறத்தை இழந்து, வெளிறி விடும். நகங்களில் நகப் பூச்சு “மானிகூர்’ செய்வதற்கு முன், பூச்சு ரிமூவர் உபயோகித்து, அகற்ற வேண்டும். நகப் பூச்சை தொடர்ந்து உபயோகிப்பதால், நகங்கள் மஞ்சளாக தோற்றமளிக்கும். சற்று எலுமிச்சம் பழச்சாறு தேய்த்து, 10 நிமிடத்திற்கு பின், பஞ்சால் துடைத்து எடுத்தால், மஞ்சள் தோற்றம் அகன்று விடும். நகப் பூச்சை அகற்றிய பின், நக முனைகளை வெட்டி சரி செய்ய வேண்டும். ஒரு, “நெயில் பைல்’ உபயோகித்து, மென்மையாக தேய்த்த பின், எமரி பேப்பரில் மீண்டும் தேய்த்து, நகங்களை அரை வட்ட வடிவமாக்க வேண்டும்.

நக முனைகளை சுரண்டி சரி செய்வதற்கு, “நெயில் பைல்’ உபயோகிக்க வேண்டும். பிளேடு போன்ற கருவிகளை உபயோகிப்பதால், நக முனைகள் சிதைந்து போகும். பைல் செய்து வடிவுப்படுத்திய நகங்களில், “க்ளென் சிங்க் லோஷன்’ தேய்க்க வேண்டும். பத்து நிமிடத்துக்குப் பின் பஞ்சால் துடைத்து விட்டால், நக இடுக்குகளில் உள்ள அழுக்குகள் நீங்கி விடும். அப்படியும் போகாத நகத்தின் உள்ளிருக்கும் அழுக்குகளை, சோப்புத் தண்ணீரில் மூழ்க வைத்து, பஞ்சால் துடைக்கவும். பிறகு, ஆரஞ்ச் ஸ்டிக்கில், பஞ்சு சுற்றி, நகத்தின் உள்ளிருக்கும் அழுக்குகளை நீக்க வேண்டும். “க்ளென்சிங் லோஷனை’ துடைத்த பிறகு, “ஹாண்ட் லோஷன்’ க்ரீம் ஏதாவது ஒன்றை கைகளில் தடவ வேணடும். ஐந்து நிமிடம் கழித்து, பஞ்சை உபயோகித்து, “ஹாண்ட் லோஷனை’ துடைத்து, களையவும்.

நக எனாமல் பூசிக் கொண்டால், நகங்கள் நன்கு தோற்றமளிக்கும். தண்ணீராலும் மற்றும் வேறு கறைகளாலும் பாதிக்கப்படாமலும் இருக்கும். நகப் பூச்சை இளக்குவதற்கு, நகப் பூச்சு ரிமூவரைச் சேர்க்கக் கூடாது. அவ்வாறு செய்தால், நகத்திலிட்ட பூச்சு உரிந்து போய்விடும். நக எனாமல் காய்ந்த பின் ஒருமுறை லேசாக, “கிளியர் நெயில் வார்னிஷ்’ பூச வேண்டும். இது, நகங்களின் பளபளப்புக்கு உதவும். தினமும் இரவு உறங்குவதற்கு முன், நகங்களில் கியூட்டிகல் கிரீமை அழுத்தி தேய்த்து வந்தால், நகங்களின் கவர்ச்சி அதிகரிக்கும். இரண்டு தேக்கரண்டி லானோலின், இரண்டு தேக்கரண்டி டால்கம் பவுடர், ஐந்து சொட்டு பாதாம் எண்ணெய் ஆகியவற்றைக் கலக்க வேண்டும். இது ஒரு சிறந்த க்யூட்டிகல் கிரீம். இரண்டு மேஜைக்கரண்டி வாசலைன் மற்றும் அரை தேக்கரண்டி கிளிசரின் கலந்தால், நல்லதொரு க்யூட்டிகல் கிரீம். சிவந்த நிறமுடையவர்கள் அழுத்தமான கலரில் உள்ள நகப் பூச்சு உபயோகிக்க வேண்டும். சிவப்பும், இளஞ்சிவப்பும் இவர்களுக்கு பொருத்தமானவை; மஞ்சளும், சாம்பல் நிறமும் பொருத்தமில்லாதவை.

கருமை நிறமுடையவர்களுக்கு, கருஞ்சிவப்பு, மஞ்சள் மற்றும் சாம்பல் நிறங்கள் பொருத்தமானவை. மூன்லைட், கிளியர் பேர்ல் போன்ற நிறங்களும் பொருத்தமுடையன ஆகும். கோடை காலங்களில் விரல்களும், நகங்களும் உலர்ந்து போக வாய்ப்பு உண்டு. ஹேண்ட் கிரீம் தடவிக் கொண்டால் வறட்சி நீங்கி விடும். ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணெய், 20 சொட்டுக்கள் கிளிசரின், அரை தேக்கரண்டி லானோலின் ஆகியவற்றை கலந்தால், சிறந்த ஹேண்ட் கிரீம் தயார். நகங்களை அழகுபடுத்த நெயில் லாக்கர் பூசும் போது, அந்த நிறம் லிப்ஸ்டிக்கின் நிறத்தை ஒட்டி இருப்பது போல் பூசிக் கொள்ளலாம்.
டிப்ஸ்..

  • நகத்தை அஸ்ட்ரின்ஜென்ட் லோஷன் பஞ்சால் துடைத்து, அதன் பிறகு நகப் பூச்சை போட வேண்டும். நகத்தில் ஈரம் இருக்கும் பொழுது, பூச்சு போடக் கூடாது.
  • நகப் பூச்சை போடுவதற்கு முன், ஒரு கோட், “கிளியர் வார்னீஷ்’ தடவ வேண்டும். வார்னீஷ் காய்ந்த பிறகு நகப் பூச்சை பூச வேண்டும். நகப் பூச்சு விரைவில் உதிராதிருக்க கிளியர் வார்னீஷ் உதவும்.
  • நகப் பூச்சை அடர்த்தியாக போடக் கூடாது. இரண்டு அல்லது மூன்று தடவை லேசாக பூச வேண்டும். நன்றாக காய்ந்த பிறகு தான் மறுமுறை பூச வேண்டும்.
  • நகத்திற்கு பூச்சு போடுவதற்கு முன், நகக் கண்களில் கொஞ்சம் வாசலினோ அல்லது கோல்டு கிரீமோ போட வேண்டும். பூச்சு நன்கு உலர்ந்த பின், வாசலினை துடைத்து விட வேண்டும். இவ்வாறு செய்தால் பூச்சு நகக் கண்களில் படாமல் தடுக்க முடியும்.
  • நகத்திற்கு போடும் போது, நகக் கண்களின் இரு புறத்திலும் ஒரு மில்லி மீட்டர் இடைவெளி விட்டு பட்டையாக போட வேண்டும். இது, நகங்களின் நீளம் கூடுதலாகத் தோற்றமளிக்க உதவும்.
  • நக எனாமல் பூசிக் கொண்டால், நகங்கள் நன்கு தோற்றமளிக்கும். தண்ணீராலும் மற்றும் வேறு கறைகளாலும் பாதிக்கப்படாமலும் இருக்கும்.
  • நகப் பூச்சை இளக்குவதற்கு, நகப் பூச்சு ரிமூவரைச் சேர்க்கக் கூடாது. அவ்வாறு செய்தால், நகத்திலிட்ட பூச்சு உரிந்து போய்விடும்.

தக்காளி பிரைடு ரைஸ்

தேவையானவை

பாசுமதி அரிசி – 1 கப்

பெரிய வெங்காயம் – 1

தக்காளி பெரிய சைஸ் – 2

புதினா (ஆய்ந்தது) – கப்

இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

தேங்காய் பால் – 1 கப்

தண்ணீர் – 1 கப்

உப்பு – தேவையான அளவு

முந்திரிப்பருப்பு – 10

பட்டை, கிராம்புத்தூள் – 1/2 டீஸ்பூன்

நெய், எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை

* தக்காளி, புதினா, பச்சைமிளகாய், நறுக்கிய வெங்காயத்தில் சிறிது ஆகியவற்றை மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.

* வாணலியில் நெய், எண்ணெய் கலவையை விட்டு பட்டை, கிராம்புத்தூள் போட்டு தாளித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிவக்க விடவும்.

* பிறகு நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

* வதங்கியதும் அரைத்த தக்காளி விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

* குக்கரில் பாசுமதி அரிசியைப் போட்டு, வதக்கிய கலவையைச் சேர்க்கவும். அத்துடன் தேங்காய்ப்பால், தண்ணீர் தலா ஒரு கப் சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து மூடி வைத்து வேகவிடவும்.

* வெந்ததும் தக்காளி பிரைடு ரைஸ் ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள வெங்காய தயிர் பச்சடி ஏற்றது.

கீதா தெய்வசிகாமணி

கீமா பொடிமாஸ்

தேவையானவை

கொத்துக்கறி – 1/4 கிலோ

நல்லெண்ணெய் – 5 டீஸ்பூன்

வெங்காயம் – 2

இஞ்சி – சிறு துண்டு (விழுதாக்கவும்)

மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப அரைக்க

மிளகாய் வற்றல் – 3

மிளகு – 10

தனியா விதை – 2 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை

* மசாலா சாமான்களை வறுத்துப்பொடி செய்யவும்.

* குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும். தொடர்ந்து சுத்தம் செய்த கறியைப் போட்டு வதக்கவும்.

* கொத்துக்கறி வதங்கியதும், தூள் செய்த மசாலா பொடியைச் சேர்த்து நீர் ஊற்றி போதுமான உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

* கொத்துக்கறி நன்கு வெந்ததும், குறைந்த தீயில் வைத்து நன்கு டிரை ஆனதும் துருவிய தேங்காய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

`செப்’ தாமு