Monthly Archives: ஜனவரி, 2012

‘அதுக்கு’ ஏத்த நேரம் ‘ஏழரை மணி’தானாம்!!

காலைநேரத்தில் தம்பதிகள் உறவில் ஈடுபடுவது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதோடு அன்றைய தினம் முழுவதையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது ஆய்வு முடிவு.

தம்பதியர்கள் உறவில் ஈடுபடுவதற்கு ஏற்ற நேரம் என்பது குறித்து இத்தாலி நாட்டில் உள்ள தம்பதியரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு முடிவில் காலை ஏழரை மணிக்கு உறவில் ஈடுபடுவது ஆரோக்கியமானது என்று கண்டறியப்பட்டது. காலை நேரத்தில் உறவு கொண்டால் அன்றைய தினம் உற்சாகமாக இருக்குமாம்.

காலை நேரத்தில் என்னதான் பரபரப்பு இருந்தாலும், பாலுணர்வை தூண்டும் ஹார்மோன் சுறுசுறுப்பாக இருக்குமாம். எனவே காலை நேரத்தில் உறவில் ஈடுபடுவது ஆரோக்கியத்தோடு ஆர்கசத்தையும் அதிகரிக்கும் என்கின்றார் ஆய்வில் ஈடுபட்ட செக்ஸாலஜிஸ்ட் சுஸி ஹெமான். அது சரி ஆபீஸ் போற அவசரத்தில அதுக்கு எங்க நேரம் என்கிறீர்களா? ஆய்வு இத்தாலியில தான் நடந்திருக்கு நம் ஊரில் இல்லை.

வேகத்தில் ஒளியை மிஞ்சும் நியூட்ரினோ

உலகிலேயே ஏன் பிரபஞ்சத்திலேயே அதிவேகத்தில் செல்லக்கூடியது ஒளி. இது நேற்று வரையான விடையாக இருந்தது. ஆனால் இன்று விடை மட்டுமல்ல அறிவியல் கொள்கையும் மாறிப்போயிருக்கிறது. காரணம் நியூட்ரினோ (Neutrino). அறிவியல் கண்டு பிடிப்புகள் உண்மையானவை என்றாலும் காலத்திற்கேற்ப, ஆழ்ந்த ஆராய்ச்சிகளின் பயனாக, மாற்றமடையக் கூடியவை அல்லது அதிநுட்ப, மிகவும் துல்லியமான முடிவுகளை கொடுக்கக்கூடியவை. அவ்வகை யில் ஒளியின் வேகமே வேகங்களின் இறுதியாக, எல்லையாக இருந்தது. இந்த எல்லையைத்தான் நியூட்ரினோவின் வேகம் மாற்றியமைத் திருக்கிறது.
ஒளியை ஓடி தோற்கச் செய்த  நியூட்ரினோக்கள் எங்கிருக்கின்றன? நம்மிடையேதான். கண்களுக்கு புலப்படதாவையாக அரூபிகளாக. நம்முடைய உடலே சில சமயம் நியூட்ரினோக்களை உற்பத்தி செய்கின்றது என்பதை நம்ப முடிகிறதா? ஆனால், உண்மை. நம் உடல் உற்பத்தி செய்கின்றது. நமக்கு அவற்றை காணவோ, உணரவோ முடியாது. நம்மைச் சுற்றி கண்ணுக்கு புலப்படாதவையாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற கண்களுக்கு புலப்படாத துகள்கள் இருபதாம் நூற்றாண்டில் அணு இயற்பியலுக்கு வழி வகுத்ததுடன், பொருட்களின் மிகச்சிறிய அலகு வரை மனிதனின் அறிவினை எட்டிப் பார்க்கச் செய்தது. அது போலத்தான் இயற்பியலில் நியூட்ரினோக்களின் வேகம் பற்றிய கண்டுபிடிப்பு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவிருக்கிறது.
இப்பிரபஞ்சத்தில் நம்மைச் சுற்றி சாதாரணமாக நிலவுவதும், ஆனால் நமக்கு யாதொரு விதத்திலும் அறிந்து கொள்ள இயலாமல் இயங்குவதும் நியூட்ரினோ என்னும் துகள்களாகும். சாதாரணமாக காற்றினை துளைத்துக்கொண்டு செல்வதைப் போல நியூட்ரினோக்கள் பூமியை துளைத்துக் கொண்டு செல்லும் ஆற்றல் படைத்தவை. இதனை கண்டுபிடித்து அரை நூற்றாண்டு ஆகிவிட்ட போதிலும் நியூட்ரினோக்களை குறித்த நம்முடைய தகவல் மிகக்குறைவே. நம்மைச் சுற்றியுள்ள நியூட்ரினோக்களில் ஒரு சிறிய அளவு பூமிக்கடியில் ரேடியோ ஆக்டிவ் மூலத்தினின்று வெளிப்படுபவை. நம் உடலிலுள்ள எலும்புகளில் காணப்படும் மிகக் குறைவான அளவு ரேடியோ ஆக்டிவ்  சக்தியுள்ள பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆகிய மூலங்கள் உண்டாக்குபவை. ஆனால் மிக அதிகமான அளவு நியூட்ரினோக்கள் சூரியனி லிருந்து வருபவை நியூட்ரான் களேயாகும். தற்போது நிகழ்த்தப்பட்ட சோதனையை பார்க்கும் போது சூரியனின் கதிர்கள் நம்மை வந்தடைவதற்கு முன்பே நியூட்ரினோக்கள் நம்மை தொட்டுவிடும். மேலும் நியூட்ரினோக் களின் ஊடுருவும் சக்தி அபாரமானது. சூரியனைக் கூட ஊடுருவி பார்க்க முடியும். ஆச்சர்யமான தகவல்தான்.

1980-இல் மின்சுமையில்லாத, எடை யில்லாத துகள்கள் அணுவின் உட்கருவிலிருந்து பீட்டா கதிர்களுடன் வெளிவருகின்றன என்று முதன்முதலில் உல்ப்காங்பௌலி (Wolfgang Pauli) என்னும் அறிவியல் விஞ்ஞானி கூறினார். இந்த துகள்களை நியூட்ரான் என்றழைத்தார். ஆனால் 1932-ஆம் ஆண்டு ஜேம்ஸ் சாட்விக் அணுக்கருவிலிருந்து புரோட்டானுடன் இணைந்து நியூட்ரான் என்னும் துகளை கண்டறிந்தார். பௌலி முன்வைத்த கருத்தில் யதார்த்தத்தில் இருவகை யான நியூட்ரல் துகள்கள் இருந்தது. ஒன்று  அணுவின் உட்கருவில் புரோட்டானுடன் காணப்படுவது.  இது அணுசக்தி அறிவியலின் அடிப்படையான நியூட்ரான் துகள்.

மற்றொன்று பீட்டா துகள்களுடன் வெளி வரும் உருவமற்ற மின்சுமையற்ற, எடையற்ற ஒரு துகள். அதாவது பூஜ்யம் என்றுகூட கூறலாம். என்ரிகோ பெர்மி இத் துகளுக்கு அரை சுழற்சி உண்டென்று கண்டறிந்தார். அணுவின் உட்கருவில் சீனியரான நியூட்ரானிலிருந்து இதனை வேறுபடுத்தி அறிய பெர்மி நியூட்ரினோ என்று பெயரிட்டார்.

நியூட்ரினோவை கண்டுபிடித்த முறை
OPERA (Oscillation Project with Emulsion- Tracking Apparatus) என்னும் கூட்டமைப்பு நியூட்ரினோக்களின் ரகசியத்தை கண்டறிவதற் காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. அது ஜெனீவாவிலுள்ள செர்ன்  (CERN)ஆராய்ச்சி கூடத்தில் சூப்பர் புரோட்டான் சிங்க்ரோட் ரானில் உண்டாக்கப்படுகின்ற நியூட்ரினோக் களை இத்தாலியில் கிரான்சாசோ LGNS  என்னும் புவிக்கு அடியில் அமைந்துள்ள ஆராய்ச்சிகூடத்திற்கு, பூமிக்கடியில் 733 கி.மீ. தொலைவு செலுத்தக் கூடிய வகையில் எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகும். டௌ நியூட்ரினோக்களுக்கும் மியூவான் நியூட்ரி  னோக்களுக்கும் இடையே நடக்கும் அலை யுறுதல்  (Oscillation)  நிகழ்ச்சியை துல்லியமாக இந்த ஆராய்ச்சியினால் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. செர்ன் (CERN)-ல் ஒரு தரத்திலுள்ள நியூட்ரினோவை உண்டாக்கி விட்டால் அது வேறொரு வகையான நியூட்ரி னோவாக கிரான் சாசோவில் சென்றடை கின்றதா என்பதைத் தான் இப்பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. நியூட்ரினோவின் வேகத்தை பற்றிய தகவல்களை (அ) உண்மை களை கண்டுபிடிப்பதுதான் இவ்வாராய்ச்சியின் முக்கிய நோக்கம்.
நியூட்ரினோக்களின் வேகத்தினை கண்டு பிடிக்க செர்ன் ஆய்வுக்கூடம் வேகப்பரி சோதனையை மேற்கொண்டது. இதன்படி ஓரிடத்திலிருந்து நியூட்ரினோ புறப்பட்டு குறிப்பிட்ட மற்றொரு இடத்தினை அடைவதற்கு எடுத்துக் கொள்ளும் கால அளவு எவ்வளவு என்பதனை கண்டுபிடிப்பது. இரு இடங்களுக்கிடையேயான தூரத்தை நியூட்ரினோ துகள் கடக்க எடுத்துக்கொண்ட நேரத்தினால் வகுக்க கிடைப்பது அதன் வேகம் என்ற எளிய பரிசோதனையைத்தான் செர்ன் கையாண்டது. ஆனால் இப்பரி சோதனையின் ஒவ்வொரு கட்டமும் அவ்வளவு எளிமையானதாக இருக்கவில்லை. நியூட்ரினோ என்னும் கண்ணுக்கு புலப்படாத துகள் புறப்படும் நேரத்தினையும் அது இலக்கினை வந்தடையும் நேரத்தினையும் துல்லியமாக கவனிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஒரு சவாலான காரியமாக இருந்திருக்கிறது. உண்மையில் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்ற நியூட்ரினோக்களை கண்டறிவதே கடினமான விஷயம்தான். கடந்த மூன்று வருட காலத்தில் ஆய்வுக் குட்படுத்தக்கூடிய வகையிலான 16000 நியூட்ரினோ துகள்களையே செர்ன் பிடித்துள்ளது என்பதனை மட்டும் அறிந்தால் போதும், இதிலுள்ள சிரமம் எளிதில் விளங்கும்.
உயர் ஆற்றல் கொண்ட புரோட்டான் கற்றைகளை பெரிய கிராபைட் கட்டுகளின் மீது மோதச் செய்யப்படும்போது வித்தியாச மான அளவுகள் கொண்ட சிறிய அணுக்கள் உற்பத்தியாகின்றன.

அவற்றில் சில சிறிய அணுக்களாக மாறி நியூட்ரினோக்களாக உருவாகின்றது. செர்ன் ஆய்வுக்கூடத்தில் உருவாகும் இந்த நியூட்ரி னோக்கள் பூமியின் அடியில் நேர்க்கோட்டில் பயணித்து கிரான்சாசோ ஆய்வுக் கூடத்தை வந்து சேரும். உருவான அனைத்து அணுக் களும் பூமிக்கடியில் தொலைதூரம் செல்லக் கூடிய ஆற்றல் பெற்றிருப்பதில்லை. குறைவான ஆற்றல் கொண்டவை இடையிலேயே நின்றுவிடும். செர்னிலிருந்து புறப்படும் மியூவான் நியூட்ரினோக்கள் இடையில் டௌ(Tau) நியூட்ரான்களாக மாறுகின்றன. இது மீண்டும் பழைய நிலைக்கே திரும்புவதனால் ஒரு அலை வுறுதலை ஏற்படுத்துகின்றது. உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோக்கள் கிரான் சாசோவினை வந்தடையும்போது அவை நியூட்ரினோ டிடெக்டர் (கண்டு பிடிப்பான்) என்னும் கருவியினால் பிடிக்கப் படும். நியூட்ரி னோக்கள் செர்ன் ஆய்வகத்திலிருந்து புறப் படும் கால அளவுகளின் வரை படத்தினையும், கிரான்சாசோவில் நியூட்ரினோக்கள் வந்தடை கின்ற கால அளவுகளின் வரை படத்தினையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அவை புறப்பட்ட மற்றும் சென்றடைந்த காலஅளவும் கணக்கிடப்படுகிறது.

இந்த ஆய்வில் இரு ஆய்வுக்கூடங்களுக் கிடையேயான தூரத்தைக் கடக்க 2.4 மில்லி செகண்டு கால அளவு மட்டுமே ஆனது. கால மாற்றம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் ஒரே சமயத்தில் இரு இடங்களில் நேரம் மாறுபடும். இந்த வித்தியாசமான இரு இடங்களில் நேரங்களும் ஒருங்கிணைந்து செயல்படச் செய்வது ஆய்வில் மிக முக்கிய மான பாகமாகும். ஏடநGPS (Global Positioning System)  வழியே இந்த ஒருங்கிணைப்பு செய்யப்படுகிறது. ரேடியோ அலைகளின் வழியாக இரு இடங் களுக்கிடையே தொடர்பை நிலைநிறுத்திக் கொண்டு இது நடைபெறுகிறது.
இவ்வாறு நடத்திய பரிசோதனையில் நியூட்ரினோக்களின் வேகம் ஒளி வெற்றிடத்தில் செல்லும் வேகத்தைவிட 60 நானோ செகண்டுகள் முன்னே சென்றது. அதாவது ஒளியின் வேகம் 29, 97, 92, 458 மீ/  செகண்டு. நியூட்ரினோவின் வேகம் 29, 97, 98, 454 மீ/ செகண்டு. வித்தியாசம் 5996 மீ/ செகண்டு. ஒரு செகண்டில் ஒளியைக் காட்டிலும் 5996 மீட்டர் நியூட்ரினோ முன்னே சென்றிருக்கும். உண்மையிலேயே நியூட்ரினோ ஒளியின் வேகத்தை மிஞ்சுகிறதா? இல்லை தவறான கணக்கா? என நம்பிக்கை வராத அறிவியலர்கள் 15000 முறை இச்சோதனையை திரும்பத் திரும்பச் செய்து பார்த்தனர். அனைத்து முறையும் ஒரே முடிவுதான் கிடைத்தது. இதனை சிறிது தயக்கத்திற்கு பின்னர்தான் அறிவி யலர்கள் வெளி உலகுக்கு அறிவித்தனர். ஏன் அவ்வாறு செய்தனர் என்பதற்கு காரணம் உண்டு.
கடந்த இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியலராக கருதப்படுபவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இவருடைய சிறப்பு ஒப்புமை கோட்பாட்டின் (Special General Relativity Theory)  அடிப்படை விஷயங்களில் ஒன்று ஒளியின் வேகம். பிரபஞ்சத்தில் மிகவும் வேகமானது ஒளியின் வேகம் எனவும் அதனைவிட வேகத்தில் போக யாரும் முயற்சி செய்ய வேண்டாம் எனவும், அப்படி முயன்றாலும் முடியாது என கூறியவர் ஐன்ஸ்டீன்.  இருபதாம் நூற்றாண்டு அறிவியலர்கள் தங்களுடைய சொந்த சிந்தனையில் ஆராய்ந்தார்கள் என்பதனைவிட 1905-இல் ஐன்ஸ்டீன் முன்வைத்த சிறப்பு ஒப்புமைக் கோட்பாட்டை பின்பற்றி சிந்தித்தனர் என்பதே பொருத்தமாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் ஒரு நூற்றாண்டு முழுவதும் இயற்பியலில் நிகழ்ந்த சிந்தனைகள் அனைத்தும் ஒளியின் வேகத்தினை  எல்லை யாகக் கொண்டே இருந்தன. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் உண்மை மாறுகின்றது. மேலும் ஒரு நூற்றாண்டு கால பாடங்கள் அத்தனையும் திருத்துவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. என்றாலும் புதிய அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கு தக்கவாறு மாறித்தானே ஆக வேண்டும். உலகில் மாறாதது என்று ஒன்றுமில்லை.

வந்துவிட்டது செயற்கை கண்கள்!

கண் பார்வை என்பது வாழ்க்கைக்கான ஒளி போன்றது. பார்வையின்மையால் பாதிக்கப்படுவோரின் எதிர்காலம் இருண்டு போகும் என்பது நிதர்சனம். விபத்துகளில் கை,கால் இழந்தவர்களுக்கு செயற்கை கை, கால்களை கொடுத்துள்ள நவீன மருத்துவ தொழில் நுட்பங்கள் இன்னும் கண் பார்வை இல்லாதவர்களுக்கு செயற்கை கண்களை கொடுக்கவில்லை.

இந்த குறையை நிவர்த்தி செய்ய ஒரு செயற்கை கண் கருவியை கண்டுபிடித்திருக்கிறார் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தின் வெய்ல் மருத்துவ கல்லூரியின் நரம்பியல் விஞ்ஞானியும் பேராசிரியருமான ஷீலா நீரென்பெர்க்.

பிம்பங்களை கவர்ந்து கிரகிக்கும் `என்கோடர்’ மற்றும் பிம்பத்தின் தகவல்களை மூளைக்கு எடுத்துச்செல்லும் `ட்ரான்ஸ்டியூசர்’ என இரு பகுதிகளை கொண்டது இந்த செயற்கை கண் கருவி. அடிப்படையில், சேதமடைந்த விழித்திரையின் செயல்பாட்டினை செய்யும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த கருவிக்கு `விழித்திரை செயற்கை கருவி’ என்று பெயர்.

பொதுவாக, கண்கள் பார்க்கும் பிம்பங்களின் தகவல்கள் விழித்திரையிலுள்ள `போட்டோ ரிசெப்டர்’ என்னும் உயிரணுக்கள் மூலம் சேகரிக்கப்படும். பின்னர் அவை ரசாயன சமிக்ஞைகளாக மூளைக்கு எடுத்துச்செல்லப்பட்டு, மூளையிலுள்ள `காங்க்ளியான் உயிரணுக்கள்’ மூலம் புரிந்துகொள்ளப்படும். இது கண் பார்வைக்கு தேவையான அடிப்படை உயிரியல் நிகழ்வுகள்.

ஆனால், கண் பார்வை இல்லாதவர்களின் விழித் திரைகள் சேதமடைந்திருக்கும். இதனால், பிம்பங்களின் தகவல்கள் சேகரிக்கப்படுவதும், அவை மூளைக்கு எடுத்துச்செல்லப்படுவதும் தடைபடுகிறது.

இந்த இரு உயிரியல் நிகழ்வுகளையும் மேற்கொள்ளும் வண்ணம் ஷீலா நீரென்பெர்க்கின் செயற்கை கருவி உருவாக்கப்பட்டுள்ளது. விழித்திரையின் `போட்டோ ரிசெப்டர்’ உயிரணுக்களின் வேலையை `என்கோடர்’ கருவியும், சேகரிக்கப்பட்ட தகவல்களை மூளையின் காங்க்ளியான் உயிரணுக்களுக்கு எடுத்துச்செல்லும் வேலையை `ட்ரான்ஸ்டியூசரும்’ செய்கின்றன.

இந்த செயற்கை கண் கருவியை கொண்டு, முதற்கட்ட பரிசோதனை எலிகளின் மீது மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட எலிகளால் ஒரு குழந்தையின் முகத்தை தெளிவாக பார்க்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், முந்தைய செயற்கை கண் கருவிகளால் பிரகாசமான வெளிச்சம் மற்றும் கோடுகளை மட்டுமே பார்க்க முடிந்தது. சுவாரசியமாக, நரம்பியல் ஆய்வாளர் ஷீலா நீரென்பெர்க்கின் செயற்கை கண் கருவியால் ஒரு குழந்தையின் முழு முகத்தையும் தெள்ளத் தெளிவாக பார்க்க முடிகிறது. ஒரு செயற்கை கண் கருவியால் முகம் பார்க்க முடிவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக, இந்த ஆய்வின் நோக்கம் மூளையுடன் தொடர்பு கொள்வதற்கான வழிகளை கண்டறிவதும், மூளையின் மொழியை புரிந்துகொள்வதும். இந்த நோக்கம் முழு வெற்றியடையும் பட்சத்தில் காது கேளாமை மற்றும் இன்னபிற நரம்பியல் குறைபாடுகளையும் சரிசெய்து விட முடியும் என்பது மகிழ்ச்சியான செய்தி.

எலிகளின் மீதான ஆய்வில் முழு வெற்றியடைந்துள்ள இந்த செயற்கை கண் கருவி, மனிதர்களுக்கும் பார்வை அளிக்கும் நாள் இன்னும் சில வருடங்களிலேயே வந்துவிடும் என்று நம்பிக்கை அளிக்கிறார் நரம்பியல் ஆய்வாளர் ஷீலா நீரென்பெர்க்.

செயற்கை கை, கால்கள் போல செயற்கை கண் கருவியின் வருகை, விபத்துகள் மற்றும் நோய்களால் பாதிக்கப்படும் மனிதர்களின் இயல்பு வாழ்க்கையை அவர்களுக்கு முழுமையாக மீட்டெடுத்து தந்துவிடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை!

முனைவர் பத்மஹரி

நரையே என்னிடம் நெருங்காதே

முடிக் கால்களில் தோன்றும் மெலனின் பற்றாக்குறையை கட்டுப்படுத்தி, மெலனின் அழிவை தடுத்து, நரைமுடிகளை நெருங்க விடாமல் தடுக்கும் அற்புத மூலிகை கரும்பூலா. முகம் பார்க்கும் கண்ணாடியில் நரைமுடிகளை பார்த்தவுடனேயே வயதாகிவிட்ட உணர்வும், சோர்வும் தோன்றிவிடுவதுண்டு. கரிய நிறமுடையவர்களை விட சிவந்த மற்றும் மாநிறமுடையவர்களுக்கு, வெள்ளை நிற முடி, விரைவில் ஏற்படுகிறது. இந்தியர்களுக்கு, 30 வயதுக்கு மேல், நரைக்கத் துவங்குவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இப்போது, 20 வயதிற்கு முன்பாகவே, சிலருக்கு நரை துவங்கி விடுகிறது. இது இளநரை என்று அழைக்கப்படுகிறது. மனித ரோமத்திலுள்ள மெலனின் என்னும் கரிய நிறப் பொருளானது ரோமத்திற்கு கறுப்பு நிறத்தைக் கொடுக்கிறது. இந்த மெலனின், முடியின் வேர்க் கால்களில் குறையத் துவங்குவதால், கறுப்பு நிறமற்ற முடி முளைக்கத் துவங்குகிறது.
மெலனினை உற்பத்தி செய்யும் செல்கள், முடியின் அடியிலும், தோலிலும், கறுப்பு நிறமிகளை சேமித்து வைக்கின்றன. இந்த செல்களின் உற்பத்தி குறைந்து, மெலனின் அற்ற செல்கள் வளர்வதால், நரைமுடி தோன்ற ஆரம்பிக்கிறது. நரைமுடி, முதுமையின் அடையாளமாக கருதப்படுவதால், நரைக்க ஆரம்பித்ததும், வயோதிகத்தை நினைத்து, பயமும், சோர்வும் ஏற்படுகிறது. இதை சரிசெய்ய, முடிக்குச் சாயம் பூசத் துவங்கி விடுகிறோம். அமோனியா, காரியம் கலந்த சாயங்கள், பல கெடுதல்களை ஏற்படுத்துகின்றன. நரைமுடியை வேருடன் பிடுங்குவதால், மெலனின் இல்லாத செல்கள், அருகிலுள்ள முடிகளின் வேர்க்கால்களில் சிதறி, அங்கு பெருகி, மீண்டும் நரைமுடியை அதிகப்படுத்துகின்றன.

ஆகவே நரைமுடிகளை பிடுங்காமல், கீழ்பாகம் வரை, வெட்டி மறைத்துக் கொள்வது நல்லது. தைராய்டு குறைபாடு, பி12 வைட்டமின் குறைபாடு, வெண்படை போன்ற தோல் நோய்கள், ஊட்டச்சத்து குறைபாடு, கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய், புகைப்பழக்கம், புரதச்சத்து குறைபாடு, பரம்பரை ஆகியவை, நரை ஏற்படக் காரணங்களாக அமைகின்றன.

தலையில் பொடுகு அதிகம் தோன்றினால், அவை வேர்க்கால்களை அடைத்து, மெலனின் உற்பத்தியை குறைத்து, நரையை அதிகப்படுத்துகின்றன.

* தலையை அலசி குளிப்பதற்காக பயன்படுத்தும், சில வேதிப்பொருள் கலந்த வீரியமிக்க ஷாம்புகள் மற்றும் முடி அலசிகளிலுள்ள ஹைட்ரஜன் பெராக்சைடு, வேர்க் கால்களை சேதமடையச் செய்து, கறுப்பு நிறமிகளை அழித்து, நரைமுடிகளை அதிகப்படுத்துகின்றன. புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து குறைவினால், முடியின் கறுமை நிறம் மங்கி, செம்பட்டை நிறம் தோன்றுகிறது. நாளடைவில் இதுவே, நரைமுடிக்கு காரணமாக அமைகிறது. நரைமுடி அதிகரிப்பதற்கு, பி.சி.எல்., என்ற ஜீன்கள் காரணமாக இருப்பதாக, அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண்களை விட ஆண்களுக்கே, முடி மிக கறுப்பாக காணப்படுகிறது.கரும்பூலாவின் குணம்முடிக் கால்களில் தோன்றும் மெலனின் பற்றாக்குறையை கட்டுப்படுத்தி, மெலனின் அழிவை தடுத்து, நரைமுடிகளை நெருங்க விடாமல் தடுக்கும் அற்புத மூலிகை கரும்பூலா.இந்தச் செடியின் இலைகள் மற்றும் பழங்களில் உள்ள குளோஜிடோனால், பிட்டுலின் மற்றும் பிரிடெலின் வேதிப்பொருட்கள், நரைமுடிகளுக்கு காரணமான மெலனின் அழிவை தடுத்து, கறுப்பு நிறத்தைக் கூட்டி, இளநரை ஏற்படாமல் தடுக்கின்றன.

கரும்பூலா பழம் மற்றும் இலைகள், நெல்லிக்காய், மருதோன்றி இலைகள், கறிவேப்பிலை இலைகள், அவுரி இலைகள் ஆகியவற்றை இடித்து, 500 மி.லி., சாறெடுத்துக் கொள்ள வேண்டும். கடுக்காய் தோலை, ஒன்றிரண்டாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். 500 மி.லி., தேங்காய் எண்ணெயுடன் சாறு மற்றும் கடுக்காய் தோல் பொடியை கலந்து, கொதிக்க வைத்து, சாறு வற்றியதும் வடிகட்டி, சூடு ஆறியபின், மூடிய பாத்திரத்தில் எடுத்து வைத்து, 15 நாட்கள் சென்றதும், மீண்டும் ஒருமுறை வடிகட்டி, தலையில் தேய்த்து வர, நரைமுடி வராமல் தடுக்கும் மற்றும் இளநரை மாறும்.

பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள்!

மரியாதை நிமித்தமாகவும், அன்பை வெளிப்படுத்துவதாகவும் மலர்களைக் கொடுப்பது உலகெங்கும் ஆண்டாண்டு கால வழக்கமாக உள்ளது. கொடுக்கும் மலர்களின் வண்ணம் ஒவ்வொன்றுக்கும் ஓர் அர்த்தம் உண்டு.

உதாரணமாக, சிவப்பு மலர்கள் காதல், மரியாதை, நேசம், தைரியம் ஆகியவற்றையும், இளஞ்சிவப்பு வண்ண மலர்கள் முழுமையான மகிழ்ச்சி, நளினம், நன்றியுணர்வு அல்லது பாராட்டு ஆகியவற்றோடு நேசத்துக்கான விண்ணப்பமாகவும் கருதப்படுகின்றன.

வெள்ளைநிறப் பூக்கள், கள்ளங்கபடமற்ற தன்மை, தூய்மை, ரகசியம் அல்லது மவுனம் ஆகியவற்றையும், பீச் அல்லது பவழ வண்ண மலர்கள் உற்சாகம், ஆசை, மகிழ்ச்சியான அடக்கம், வெட்கம் ஆகியவற்றையும் வெளிப்படுத்துகின்றன. கருஞ்சிவப்பு வண்ணம், நேசத்தோடு கூடிய நம்பிக்கை, கற்பு ஆகியவற்றை அறிவிக்கிறது.

விதவிதமான பூக்கள், அதைப் பெறுபவர் களுக்கு உரிய ஒரு தனியான செய்தியையும் வெளிப்படுத்துகின்றன. ரோஜா மலர்கள், `நான் உன்னை விரும்புகிறேன் என்பதைத் தெரிந்துகொள்’ என்றும், கார்னேஷன் பூக்கள், `நீ அழகாக இருக்கிறாய், உன்னைப் பார்த்து நான் பெருமிதம் அடைகிறேன்’ என்றும், டபோடில் பூக்கள், `நீ தைரியசாலி என்பதோடு, நல்லவன்’ என்பதையும், சாமந்தி, `நான் உனக்கு உண்மையாக இருப்பேன்’ என்பதையும், கிளாடியோலி, `உன் குணத்தைக் கண்டு நான் பெருமிதம் அடைகிறேன்’ என்றும், ஐரிசஸ், `என் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் அனுப்புகிறேன்’ என்றும், ஆர்க் கிட் மலர்கள், `நீ என் இதயத்தில் இருக்கிறாய்’ என்றும், ஸ்னேப் டிராகன்ஸ், `நான் உன்னை விரும்புகிறேன்’ என்றும், சூரியகாந்திப் பூக்கள், `என் எண்ணங்கள் தூய்மையானவை’ என்றும், டூலிப் மலர்கள், `நான் உன்னை விரும்புவதை அறிவிக்கிறேன்’ என்றும் சொல்கின்றன.

எக்ஸெல்: ஷார்ட்கட் கீகள்

CTRL+SPACEBAR – கர்சர் இருக்கும் நெட்டு வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.
SHIFT+SPACEBAR – கர்சர் இருக்கும் படுக்கை வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.
CTRL+HOME – ஒர்க் ஷீட்டின் தொடக்கத் திற்கு செல்ல
CTRL+END – ஒர்க்ஷீட்டின் இறுதிக்குச் செல்ல
SHIFT+F3 – பார்முலாவில் ஒரு பங்ஷனை ஒட்ட
CTRL+A – பார்முலா என்டர் செய்கையில் பங்ஷன் பெயர் டைப் செய்தவுடன் பார்முலா பேலட்டைக் காட்டும்
CTRL+A – பார்முலா என்டர் அல்லது எடிட் செய்யாதபோது அனைத்தையும் தேர்ந்தெடுக் கும்.
CTRL+‘ – (சிங்கிள் லெப்ட் கொட்டேஷன் மார்க்) செல் வேல்யூ மற்றும் செல் பார்முலா வை அடுத்தடுத்துக் காணலாம்.
F11 or ALT+F1 – அப்போது உள்ள ரேஞ்ச் சார்ந்து சார்ட் தயார் செய்யப்படும்.
CTRL+; – (செமிகோலன்) தேதியை இடைச் செருக
CTRL+: – (கோலன்) நேரத்தை இடைச் செருக
CTRL+ENTER – தேர்ந்தெடுக்கப்பட்ட செல் ரேஞ்சில் அப்போதைய என்ட்ரி உருவாக்க
F5 – Go To டயலாக் பாக்ஸ் காட்ட
CTRL+1– ஊணிணூட்ச்t இஞுடூடூண் டயலாக் பாக்ஸ் காட்ட
CTRL+C – காப்பி செய்தல்
CTRL+V – ஒட்டுதல்
CTRL+Z – செயல்படுத்தியதை நீக்க
CTRL+S – சேவ் செய்திட
CTRL+P – பிரிண்ட் செய்திட
CTRL+O – புதிய பைல் திறக்க போல்டரைக் காட்டும்

பெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு

குறைந்த செலவில் அதிக சத்துக்களைத் தருபவை கீரைகள். உயிர் சத்துக்களும், இரும்பு சத்தும் அதிகம் கொண்டவை. கீரைகளை சமைத்து உண்ணும் பலரும் தண்டினை எரிந்து விடுகின்றனர். கீரைகளின் நிறம் பச்சையாக இருந்தாலும் அவற்றின் தண்டுகள் சிவப்பு, பச்சை,நீலம் வெள்ளை பலவகை நிறத்துடன் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் பலவித மருத்துவ குணங்களை கொண்டுள்ளன.

பச்சைத்தண்டு

கீரைத்தண்டினை பருப்பு சேர்த்து சாம்பார் வைத்தோ, தனியோ பொறியல் செய்தோ சாப்பிடலாம். ரத்தமாக போகும் பேதியை நிறுத்தும் தண்மை இதற்கு உண்டு. காரம் சேர்க்காமல், உப்பு போட்டு வேகவைத்து சாப்பிடலாம். சீக்கிரம் குணமாகும்.

செங்கீரைத்தண்டு

பச்சைக் கீரைத் தண்டினைப் போலவே செங்கீரைத்தண்டினை சமைத்து சாப்பிடலாம். இது பித்தம் தொடர்புடைய அனைத்து நோய்களையும் போக்கும். உடல் சூட்டினை கட்டுப்படுத்தும்.

பெண்கள் நோய் குணமாகும்

பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய நோயான பெரும்பாடு நோய்க்கு செங்கீரைத்தண்டு சிறந்த மருந்தாகும். அதிக ரத்தம் வெளியேறி சத்துக்கள் குறைந்து காணப்படுபவர்களுக்கு,செங்கீரைத்தண்டினை சமைத்து தர பெரும்பாடு நோய் குணமடையும். செங்கீரைத் தண்டானது மாதவிடாய் காலத்தில் மிகுதியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும். எரிச்சல் வலி வேதனைகளைப் போக்கும்.

வெண்கீரைத் தண்டு

வெண்கீரைத் தண்டினை சமைத்து சாப்பிட நீர்க்கடுப்பும், மூலக்கடுப்பும் குணமடையும்.

யார் சாப்பிடக்கூடாது

கீரைத்தண்டில் பெருமளவு இரும்புச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் அடங்கியுள்ளன. இது குளிர்ச்சியைத் தரக்கூடியது. எனவே சீதள தேகம் உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது. எண்ணெய் தேய்த்து குளித்த நாள் அன்று இதனை சாப்பிட சளி பிடிக்கும்.

அடிஸன் நோய்!

அலுவலகத்தில் இருந்து வீடு வரும் அவர் சோர்ந்து காணப்படுகிறார். அலுவலகத்தில் வேலை செய்யும்போது கூடச் சோர்வு ஏற்படுகிறது. ரத்த ஓட்டம் குறைகிறது. சில நேரங்களில் வாந்தியும் ஏற்படுகிறது. தோல் வறண்டு, நிறம் மாறுகிறது. சில நாட்களாகத் தனது உடலில் வலிமை குறைந்த மாதிரி உணர்கிறார்.

இவை எல்லாவற்றுக்கும் என்ன காரணம் என்று கேட்டு மருத்துவரிடம் செல்கிறார். அப்போதுதான், அட்ரினல் சுரப்பி சரியாகச் சுரக்காமல் போனதால்அவருக்குப் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக மருத்துவர் கூறுகிறார்.

இந்த நோய்க்கு என்ன காரணம் என்பதை அடிஸன் என்பவர் முதன்முதலில் கண்டறிந்து வெளியிட்டார். அட்ரினலின் சுரப்பியில் பாதிப்பு ஏற்பட்டு, அதன் சுரப்புத் தன்மை குறைவதால் இப்பிரச்சினை ஏற்படுகிறது என்று அவர் தெரிவித்தார். அதனால் `அடிஸன் நோய்’ என்று இதற்குப் பெயர் சூட்டப்பட்டது.

அடிஸன் நோய் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது. இது ஆண்களைத்தான் பெரும்பாலும் பாதிக்கும். நோயாளிகளுக்குப் பலவீனம், தோல் வறண்டு போதல், சோர்வு முதலியவை உண்டாகும். பிறகு சிறிது சிறிதாக அது அதிகரித்துக்கொண்டே போகும். உற்சாகம் குறையும். வளர்ச்சி இல்லாமல் மெலிந்துவிடுவார். தசைகள் ஒடுங்கிவிடும். கையில் `ஜில்’லென்று ஆகிவிடும்.

ஆரம்ப நிலையாக இருந்தால், சாதாரணமாக உணவில் உப்பைக் குறைத்துச் சாப்பிட்டாலே போதும். விரைவில் குணம் ஏற்பட்டுவிடும். டாக்டர் நிர்ணயிக்கும் அளவில் கார்ட்டிசோன் மாத்திரைகளை உட்கொண்டாலே போதும்.

ஆனால் சோர்வடையும் அனைவருமே தங்களுக்கு அடிஸன் நோய் ஏற்பட்டிருப்பதாகக் கருதக் கூடாது. இது ஒரு சிலருக்கு மட்டுமே ஏற்படக் கூடியது. எனவே மருத்துவரை நாடாமல் நோயை முடிவு செய்துவிடக் கூடாது.
நன்றி-தினத்தந்தி

பரவும் புது விஷயம்: மனைவிக்கு வீட்டு வேலையில் உதவுகிறார்கள், ஆண்கள்!

வீட்டு வேலை என்றதும் நினைவுக்கு வருபவர்கள் பெண்கள் தான். காரணம், பெண்கள் அப்படி பழக்கப்பட்டு விட்டார்கள்.

ஆனால் இன்று ஆண்களுக்கு சரியாக பெண்களும் வேலைக்குப் போய் சம்பாதிக்கத் தொடங்கி விட்டார்கள். வேலைக்குப் போய் களைத்து வரும் பெண்களிடம், வீட்டு வேலையையும் நீ தான் செய்யவேண்டும் என்று அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் சொன்னால் எப்படி இருக்கும்? வேலைச்சுமையோடு மனச்சுமையும் சேர்ந்து அந்தப்பெண் மனம் நொறுங்கி விட மாட்டாளா? ஆண்களும் தங்கள் குடும்பத்துக்கு உதவும் விதத்தில் வீட்டு வேலையில் பங்கெடுத்துக் கொள்வது ஒன்றும் தகாத செயல் இல்லையே?

`உத்தியோகம் புருஷ லட்சணம். வீட்டு வேலை ஸ்திரீ லட்சணம்’ என்பது அந்தக்கால வாக்கு. ஆனால் இன்றைக்கு தான் நிலைமை தலைகீழாகி விட்டதே. வீட்டு வாசல்படி கூட தாண்டாத பெண்கள் இன்று ஆண்களுக்கு சற்றும் சளைக்காமல் அவர்களும் கடுமையாக உழைக்க ஆரம்பித்து விட்டார்கள். வீட்டு வேலைகளை இருவரும் பகிர்ந்து கொள்வதில் தான் இனிமையான வாழ்க்கையே இருக்கிறது.

இன்றைய பெண்களின் நிலையை புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவ முன்வரும் ஆண்கள் குடும்பத்திற்கே ஒரு வரப்பிரசாதம் தான். வெளியில் வேலை செய்து களைத்து வீட்டிற்கு வரும் பெண்களுக்கு, வீட்டில் தனக்கு உதவ ஒருவர் இருக்கிறார் என்ற நினைப்பே நிம்மதியை தரும். அதை விடுத்து, `வீட்டு வேலை பெண்களுக்கானது. வேலை முடித்து எப்போது வீட்டுக்கு வந்தாலும் அவர்கள் தான் அதை செய்ய வேண்டும்’ என்ற வாதம் பெண்களை மன அழுத்தத்தில் கொண்டு விட்டு விடும். இந்த மன அழுத்தம் நாளடைவில் பல்வேறு நோய்களாக உருவெடுக்கும் அபாயம் உண்டு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

வீட்டு வேலைகள் ஆண்களுக்கு பழக்கப்படாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் மனமிருந்தால் மார்க்கமுண்டு. குடும்ப சுமைகளில் தனக்கும் பங்கு இருக்கிறது என்ற மனிதாபிமான உணர்வு ஒரு ஆணிடம் இருக்குமானால் வீட்டு வேலைகள் ஒன்றும் கடினமில்லை. சமைத்த உணவை டிபன் பாக்ஸில் போடலாம். குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்யலாம், காய்கறி நறுக்கலாம், துணி உலர்த்தலாம். இப்படி பல வேலைகள் செய்யலாம்.

இதில் முன்னேற்றமாக இப்போது பல ஆண்கள் சமைக்கவும் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள். இது மிகவும் நல்ல விஷயம். இது மனைவிக்கு உதவுவதற்கு மட்டுமல்ல. அவர்களுக்கும் சமயத்தில் பயன்படும். வெளியூர்களில் சென்று தங்கும் நிலைமை ஏற்பட்டால் வாய்க்கு ருசியாக சாப்பிட இந்த சமையல் கைகொடுக்கும்.

காலத்திற்கு ஏற்ப ஆண்கள் மாறிக்கொண்டு இருப்பது மகிழ்ச்சியான விஷயம் தான். ஆனாலும் இன்னும் சில ஆண்கள் மாறாமல் அதிகார பிரியர்களாகவே இருக்கிறார்கள். “டிபன் ரெடியா, என்னோட சாக்ஸ் எங்கே? டவல் எங்கே? சாவி எடு. எத்தனை தடவை சொல்றது, இத இங்கே வைக்காதேன்னு, சீக்கிரம் வா…” என்பது போன்ற பல கட்டளைகளை நிமிடத்துக்கு நிமிடம் பிறப்பித்து கொண்டே இருப்பார்கள். இதனால் பெண்களுக்கு ஏற்படும் மன உளைச்சலை பற்றி அவர்களுக்கு கவலையில்லை. அவர்களுக்கும் நம்மைப் போல வெளியிலும், வீட்டிலும் பல கடமைகள் இருக்கிறது என்பதை ஏனோ மறந்து செயல்படுகிறார்கள். இதன் விளைவு, மனைவியின் எரிச்சலுக்கு ஆளாகி குடும்பத்தின் நிம்மதிக்கு உலை வைத்து விடுகிறார்கள்.

சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு செயல்படும் மனிதனால் தான் வெற்றிகரமான ஒரு வாழ்க்கையை வாழ முடியும். குடும்பத்தினரின் மன மகிழ்ச்சிக்கும், உடல் நலத்திற்கும் இதுவே ஆதாரமாக இருக்கிறது. வெளிநாடுகளில் மக்கள் இதை உணர்ந்து செயல்படுகிறார்கள். பெண்களின் மன உளைச்சலுக்கு காரணமாக இருப்பது வேலைப்பளு தான் என்பதை கண்டறிந்து அதற்கு தீர்வாக வேலை பகிர்வு ஒன்றுதான் சரியானது என்று மனநல நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.

குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்த பெண்கள் முன் வந்திருக்கும் இந்த தருணத்தில், ஆண்களும் அவர்களுக்கு அனுசரணையாக வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வது தானே முறை. இதற்காக ஒரு சட்டமோ, உத்தரவோ போட முடியாது. இது ஒரு மனிதாபிமான அடிப்படையிலான செயல். குடும்ப நலனுக்காக ஆண்கள் தங்களை மாற்றிக்கொள்வது ஆரோக்கியமான சமுதாய மலர்ச்சிக்கான ஆரம்பம்.

வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ள முடியாத, அல்லது போதுமான அவகாசம் இல்லாத ஆண்கள் குறைந்தபட்சம் தங்களுடைய வேலைகளை மட்டுமாவது தாங்களே செய்ய பழகிக்கொள்ள வேண்டும். அமைதியான குடும்ப வாழ்க்கைக்காக ஆண்கள் வீட்டு வேலைகளை செய்வது தவறொன்றும் இல்லையே!

***

எளிய வைத்திய முறைகள்… உடல் மெலிந்தவர்களுக்கு…


பொதுவாக உடலில் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசிய சத்துக்களும் வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் போதுமான அளவு இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இச்சத்துக்கள் குறையும்போது உடல் பலவீனமடைகிறது. இவற்றைப் போக்க மருந்து மாத்திரைகள் உண்பதை விட உணவில் அதிகளவு காய்கறி பழங்கள் கீரைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். மதிய உணவில் மோர் சாப்பிடவேண்டும்.

· வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது. அதுபோல் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பாலில் சிறிது சுக்கு தட்டிப்போட்டு காய்ச்சி அருந்த வேண்டும். வாழைப்பழம், கொய்யாப்பழம் சாப்பிடலாம்.

· நோயினால் பாதிக்கப்பட்டு உடல் பலம் குறைந்தவர்கள் அருகம்புல்லை நன்கு சுத்தம் செய்து அரைத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பனைவெல்லம் கலந்து காலை மாலை டீ காஃபிக்கு பதிலாக அருந்தி வந்தால் உடல் பலவீனம் நீங்கும்.
· பச்சை பயறை நீரில் ஊறவைத்து முளை கட்டிய பின் அதனை லேசாக அவித்து சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்.

· பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்தி வந்தால் உடல் பலம் பெறும்.

· சோற்றுக் கற்றாழை மடலை எடுத்து அதன் மேல் தோலை நீக்கி, உள்ளிருக்கும் சதைப் பகுதியை நன்கு நீர் விட்டு அலசி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்.

· தூதுவளை பொடியை தேனில் கலந்து 1 ஸ்பூன் அளவு காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் நன்கு பசியைத் தூண்டும். இளைத்த உடல் தேறும். இதை உடல் பலவீனமான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

· கொண்டைக் கடலை 10 எடுத்து இரவு சுத்தமான நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து கடலையை மென்று சாப்பிட்டு நடைபயிற்சியோ உடற்பயிற்சியோ செய்து வந்தால் மெலிந்த உடல் தேறும். சோர்வு நீங்கும்.

· தேவயான அளவு பேரிச்சம் பழம், தேன் இவற்றோடு கற்கண்டும் சேர்த்து லேகியப்பதமாகச் செய்து வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர மெலிந்த தேகம் பருக்கும்.

· முருங்கை இலைக்கொத்தின் ஈர்க்குகளை எடுத்து சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து சூப் செய்து அருந்தி வந்தால் கை கால் உடல் அசதி நீங்கும். உடல் பலம் பெறும். உடலைத் தேற்ற சிறந்த டானிக் இது.

· உடல் பலவீனமடைந்து தேறாமல் நோஞ்சான் போல் உள்ளவர்களின் உடல் பலமடைய தூதுவளை, பசலைக்கீரை சிறந்த நிவாரணி. இவற்றைப் பக்குவப்படுத்தி உண்டு வந்தால் உடல் பலமும், தேக ஆரோக்கியம் கிடைக்கும்.

· முதல் வாரத்தில் தூதுவளைக்கீரை, அடுத்த வாரத்தில் பசலைக்கீரை..

அதேபோல் அடுத்த வாரத்தில் தூதுவளைக் கீரை என மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் பலவீனம் நீங்கி தேக ஆரோக்கியம் கிடைக்கும்.