Daily Archives: பிப்ரவரி 14th, 2012

வேர்ட் பார்மட்டிங் மாற்ற

வேர்ட் டெக்ஸ்ட்டில் சில குறிப்பிட்ட சொற்களை மற்ற சொற்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட அழுத்தமாக, அடிக்கோடு, சாய்வு மற்றும் வேறு சில பார்மட்களில் அவற்றை அமைத்திருப் போம். அமைத்த பின்னர், இந்த பார்மட்டிங் தேவை இல்லை என எண்ணினால், இவற்றை மொத்தமாக நீக்க வேண்டு மென்றால், இதனைத் தேர்வு செய்து மெனு பார் சென்று ஒவ்வொரு ஐகானாகக் கிளிக் செய்வோம். இதற்குப் பதிலாக இரண்டு ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம். பார்மட்டிங் நீக்கி எளிமையான டெக்ஸ்ட் மட்டுமே தேவைப்படும் சொற்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். பின் கண்ட்ரோல் + ஷிப்ட்+இஸட் (Ctrl+Shft+Z) அழுத்துங்கள். மொத்தமாக பார்மட்டிங் அனைத்தும் நீக்கப்படும். வேர்ட் உள்ளாக ResetChar என்ற கட்டளையை அமல் படுத்துகிறது. இதனை கண்ட்ரோல் + ஸ்பேஸ் பார் அழுத்தியும் மேற்கொள்ளலாம்.
இதே போல ஏதேனும் பாரா பார்மட்டிங் செய்திருந்தால், அந்த பார்மட்டினை நீக்க பாராவினை செலக்ட் செய்து கண்ட்ரோல் + க்யூ (Ctrl+Q) அழுத்துங்கள். டெக்ஸ்ட் ஒன்றுக்கு சாதாரண நார்மல் ஸ்டைல் இருந்தால் போதும் என்று எண்ணினால், உடனே அதனைத் தேர்ந் தெடுத்து கண்ட்ரோல்+ஷிப்ட்+என் (Ctrl+Shft+N) அழுத்தவும்.

கணக்கு கூட போடுகிறது புறா!

குடத்தில் இருக்கும் குறைவான தண்ணீரை குடிக்க, அதில் கற்களை தூக்கி போட்டு தண்ணீர் மேலே வரவைத்து குடிக்கும் காக்கையை பற்றி படித்திருக்கிறோம். ஆற்று நீரில் விழுந்து தத்தளித்து கொண்டிருக்கும் எறும்பை காப்பாற்ற, ஒரு அரச மர இலையை தூக்கி போடும் புறாவை பற்றியும் படித்திருக்கிறோம். ஆனாலும் நாம் பறவைகளை ஐந்தறிவுள்ள உயிரினங்களாக கொஞ்சம் இளக்காரமாகத்தான் பார்க்கிறோம்.

ஆனால், `பறவைகளும் நம்மைப்போல புத்திசாலிகள் தான்’ என்கின்றன சமீபத்திய சில ஆய்வுகள். உதாரணமாக, வளைந்து போன பேப்பர் கிளிப்புகளை ஆயுதமாக மாற்றும் திறனுள்ள கேளடோனியன் காக்கைகள் மற்றும் ஜாடிக்குள் இருக்கும் குறைவான தண்ணீரை மேலே கொண்டு வர, அதில் கற்களை தூக்கி போடும் `ரூக்ஸ்’ (ஒரு வகையான காக்கை இனம்) காக்கைளைச் சொல்லலாம்.

இதுவரை, நாம்தான் கணக்கில் புலி என்று நினைத்துக்கொண்டிருந்தோம். இப்போது நமக்கு போட்டியாக புறாக்களும் களத்தில் குதிக்கின்றன என்கிறார் நியூசிலாந்திலுள்ள ஒடாகோ பல்கலைக்கழக உளவியல் ஆய்வாளர் டேமியன் ஸ்கார்ப்.

தேனீக்கள் உள்ளிட்ட பல உயிரினங்களுக்கு எண்களை புரிந்துகொள்ளும் சிறு திறன் இருப்பதாக ஆய்வு கள் சொல்கின்றன.

கடந்த 1998 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ரீசஸ் இன குரங்குகளுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் இத்தகைய மேலதிக கணித திறனை உருவாக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டது. இதுபோல புறாக்களுக்கும் கணித திறன் இருக்கிறதா என்று பரிசோதிக்க எண்ணினார் ஆய்வாளர் டேமியன் ஸ்கார்ப்.

புறாக்களின் கணித திறனை கண்டறிய, ஒன்று, இரண்டு அல்லது மூன்று பொருட்கள் கொண்ட குழுக்கள் புறாக்களுக்கு திரையில் காண்பிக்கப்பட்டது. அந்த குழுக்களை ஒன்று முதல் அதிக எண்ணிக்கை வரை அலகால் கொத்தி அவற்றால் வரிசைப்படுத்த முடிகிறதா என்று பரிசோதிக்கப்பட்டது. இந்த பரிசோதனைக்காக புறாக்கள் சுமார் ஒரு வருட காலம் பயிற்சி எடுத்துக்கொண்டன.

இத்தகைய திறன் புறாக்களுக்கு அடிப்படையிலேயே இருக்க வாய்ப்பு உள்ளது என்றாலும், பொருட்களின் நிறம், வடிவம் அல்லது அளவு இவற்றின் அடிப்படையில் குழுக்களை இனம் பிரிக்காமல், எண்ணிக்கை அடிப்படையில்தான் இனம் பிரித்து சொல்கின்றன என்பதை திட்டவட்டமாக, ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவே இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால், முக்கோணம், செவ்வகம் மற்றும் முட்டை வடிவம் உள்ளிட்ட பல வடிவங்களை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

புறாக்களும் கணக்கில் கெட்டிதான் என்று நிரூபிக்க இதுவும் போதவில்லை. அதனால், அவற்றுக்கு அறிமுகமான எண்களான ஒன்று, இரண்டு மற்றும் மூன்றை தவிர்த்து அதைவிட பெரிய, புறாக்களுக்கு அறிமுகம் இல்லாத எண்கள் உள்ள குழுக்கள், தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கும் வண்ணம் திரையில் காண்பிக்கப்பட்டது.

இந்த ஆய்வில், சிறியது முதல் பெரியது வரையிலான எண்ணிக்கை உள்ள குழுக்களை புறாக்கள் சரியாக கொத்தின. ஆக, புறாக்கள் வெவ்வேறு எண்ணிக்கை உள்ள குழுக்களை குத்துமதிப்பாக கூட கொத்தி இருக்கலாம் என்று யாரும் சொல்ல முடியாது என்று அடித்துச் சொல்கிறார் டேமியன்.

அப்புறமென்ன, சரியாக கணக்கு போடும் ரீசஸ் குரங்குகளை போல புறாக்களும் கணக்கில் புலியாகத்தான் இருக்கின்றன என்பது தெளிவானது. ஆனால், சுலபமான கேள்விகளுக்கு சரியான விடை எழுதி சற்று கடினமான கேள்விகளுக்கு விடை எழுத திணறும் நம்மைப்போலவே புறாக்களும் திணறியிருக்கின்றன.

உதாரணமாக, இரண்டு குழுக்களுக்கு இடையிலான எண்ணிக்கை 2 மற்றும் 8 என பெரிதான வித்தியாசத்துடன் இருந்தபோது சரியாக கணக்கு போட்டன புறாக்கள். ஆனால், குழுக்களுக்கு இடையிலான எண்ணிக்கை வித்தியாசம் 5 மற்றும் 6 ஆக இருந்தபோது சொதப்பிவிட்டன. ஆக மொத்தத்தில், புறாக்களும் கணக்கு போடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

`அட, குரங்குகள் கூட கணக்கில் புலிதான் என்பது ஆச்சரியமாக இருக்கிறதே என்று எண்ணினேன். குரங்குகளைப் போல புறாக்களும் கணக்கில் கெட்டிதான் என்று தெரியவந்த போது அசந்து போனேன்’ என்கிறார் குரங்குகளின் கணித திறனை ஆய்வு செய்த நரம்பியல் ஆய்வாளர் பிரான்னான்.

முனைவர் பத்ம ஹரி

எம்.எஸ் ஆபீஸ் ட்யூனிங்

உங்கள் விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டர் எளிதாகவும் விரைவாகவும் இயங்கிக் கொண்டிருக் கலாம். ஆனால், அதில் இயங்கும் மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பினால், பிரச்னைகள் ஏற்பட்டு, விண்டோஸ் இயத்தின் வேகத்தினை மட்டுப்படுத்தலாம். அது போன்ற பிரச்னைகள் வராமல் இருக்க பல வழிகள் உள்ளன. இங்கு சில காட்டப் பட்டுள்ளன. வேர்ட், எக்ஸெல் மற்றும் பவர்பாய்ண்ட் தொகுப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு டிப்ஸ் தரப்படுகிறது.
1. வேர்டின் மாறா எழுத்துருவை மாற்றுக: கலிப்ரி (Calibri) என்ற எழுத்துவகை 11 என்ற அளவில் மாறா நிலையில் உள்ளதா? நார்மல் டெம்ப்ளேட்டினை மாற்றுவதன் மூலம் இதனை மாற்றலாம். Home டேப்பில், Styles என்னும் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். Normal என்னும் பாக்ஸில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Modify என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் டயலாக் பாக்ஸ் மூலம் விருப்பப்படும் எழுத்துருவினையும், அதற்கான பார்மட்டிங் கூறுகளையும் தேர்ந்தெடுக்கவும். இதன் பின்னர் New Documents based on this Template என்று இருப்பதில் கிளிக் செய்து பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இதனால் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சில பிரச்னைகளைச் சந்திப்பது தீர்க்கப்படும்.
2.எக்ஸெல்-ஆட்டோமேடிக் கால்குலேஷன் நிறுத்துக: உங்களுடைய ஒர்க்புக் மிகவும் அதிகமான பார்முலாக்கள், கணக்கீடுகள் நிறைந்தனவாக உள்ளதா? ஒரு எண்ணை மாற்றினால், எக்ஸெல் தானாகவே நூற்றுக்கணக்கான கணக்குகளில் மாற்றம் ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதா? அப்படியானால், தானாகக் கணக்கிடும் செயல்முறையினை நிறுத்தி வைக்கலாமே! இதற்கு Options டயலாக் பாக்ஸ் செல்ல வேண்டும். இதற்கு File டேப் சென்று, பின்னர், இடது பிரிவில் Options தேர்ந்தெடுக்கவும். இந்த டயலாக் பாக்ஸ் கிடைத்தவுடன், அதன் இடது பிரிவில் Formulas தேர்ந்தெடுக்கவும். ஒர்க்புக் கால்குலேஷன்களுக்கு Manual என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.இதில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் பைலை சேவ் செய்யாத வரையில் அல்லது எப்9 அழுத்தாத வரை இந்த எண்கள் சரியாக இருக்காது.
3. பவர்பாய்ண்ட் ஏன் திறக்கப்படவில்லை? நீங்கள் பாடுபட்டு தயாரித்த பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் பைலை, ஒரு பிளாஷ் ட்ரைவில் பதிவு செய்து, இன்னொரு இடத்தில், மற்றொரு கம்ப்யூட்டரில் மாற்றி, டபுள் கிளிக் செய்து இயக்குகிறீர்கள். அது இயங்க மறுக்கிறது. ஏன்? பல காரணங்கள் இருக்கலாம். முதலாவதாக, நீங்கள் தயாரித்த பிரசன்டேஷன் பைல் .pptx என்ற வகையில் இருக்கலாம். ஆனால், நீங்கள் அதனைத் திறக்க முயற்சிப்பதோ, ஆபீஸ் தொகுப்பின் பழைய பதிப்பாக இருக்கலாம். இது போன்ற பிரச்னையைத் தவிர்க்க, உங்கள் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் பைலை பழைய ஆபீஸ் பார்மட்டிலேயே (.ppt) சேவ் செய்து வைக்கலாம். புதிய ஆபீஸ் தொகுப்பு களில், (ஆபீஸ் 2007, 2010) இதற்கான வசதி உள்ளது.

குரு பக்தி என்றால் என்ன?

குரு என்றால் அவருக்கு சீடர்கள் இருக்க வேண்டும். குருவும், எல்லா கலைகளிலும் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்; தபோபலம் மிகுந்தவராக இருக்க வேண்டும். அப்படி ஒரு குரு இருந்தார். அவருக்கு, நான்கு சீடர்கள் இருந்தனர்.
ஒரு நாள் சீடர்களைப் பார்த்து, “நான் காசிக்குப் போய் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும்; என் னால் நடக்க முடியாது. என்னை, நீங்கள் நால்வரும் சுமந்து, காசியில் விட்டு விடுங்கள்…’ என்றார்.
சீடர்கள் நால்வரும் அவரை சுமந்து நடந்தனர். இப்படி அவர்கள் செல்லும் போது, கொஞ்ச தூரம் போனதும், “என்னால் முடியவில்லை…’ என்று சொல்லி, மூன்று சீடர்கள், ஒவ்வொருவராக பாதி வழியிலேயே நின்று விட்டனர். நாலாவது சீடன் மட்டும் சிரமப்பட்டு குருவை சுமந்து போய் காசியில் விட்டு விட்டு அவரை வணங்கி நின்றான்.
அப்போது, “அப்பனே… நீ தான் உண்மையான சீடன். எனக்கு நடக்க முடியாத அளவுக்கு எந்த நோயுமில்லை; உங்களை சோதிக்கவே அப்படி நடித்தேன். இதோ பார், என் கால்கள் நன்றாகவே உள்ளன…’ என்று சொல்லி, நடந்து காண்பித்தார் குரு.
“நீ மட்டும் குருபக்தியின் காரணமாக என்னை சுமந்து வந்ததால், உனக்கு எல்லா கலைகளும் பூர்ணமாக சித்தியாகும். என்னை விட்டு விட்டுப் போன மூன்று சீடர்களுக்கும், நான் கற்றுக்கொடுத்த கலைகள் மறந்து போகும்…’ என்றார்.
அதே போல் அவரை சுமந்து வந்த சீடன், எல்லா கலைகளிலும் உயர்ந்து, ராஜ சபையில் ஒரு வித்வானாக அமர்ந்தான். மற்ற மூன்று சீடர்களும் எல்லா கலைகளையும் மறந்து, தெருத்தெருவாக அலைந்து, திண்டாடினர்.
குரு – சீடன் என்றால், குரு என்ன சொல்கிறாரோ அதை சீடன் @கட்க வேண்டும்; அவர் என்ன செய்யச் சொல்கிறாரோ அதைச் செய்ய வேண்டும்.
கிருஷ்ணன் கூட, குருகுலவாசம் செய்தார்.
சாந்தீபினி முனிவரிடம் வேதம் பயின்றார்.
வேத ஸ்வரூபியான கிருஷ்ணனே குருகுல வாசம் செய்தது எதற்காக? நாமும் அதே போல் குருகுல வாசம் செய்யவேண்டும் என்ற எண்ணம், மற்றவர்களுக்கும் தோன்றட்டுமே என்று தான். இதெல்லாம் அந்தக் காலம்; இப்போது அப்படி இல்லையே!