Daily Archives: பிப்ரவரி 17th, 2012

தாம்பத்ய வாழ்க்கையில் தடுமாறாமல் இருக்க பேசி புரிஞ்சுக்கங்க

தெளிவான நீரோட்டம் போல சென்றுகொண்டிருக்கும் வாழ்க்கைப்பாதையில் சின்ன சின்னதாய் சலசலப்புகள் ஏற்படுவது வாடிக்கை. அவ்வப்போது எழும் புகைச்சல்களை ஊதி பெரிதாக்காமல் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பேசினால் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்கின்றனர் உளவியலாளர்கள். தாம்பத்ய வாழ்க்கையிலும் ஏற்படும் தடுமாற்றங்களை சமாளிக்க அவர்கள் தரும் ஆலோசனைகள்

பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்

அன்றாட வாழ்வில் அலையலையாய் வரும் குடும்ப பிரச்சனைகளில் கணவன் மனைவியரிடையில் கருத்துவேறுபாடுகள் ஏற்படுவது இயற்கை. இது மனச்சோர்வுகள், மன இறுக்கங்கள் போன்றவை ஏற்படும். இத்தகைய ஆழ்ந்த மனப்பாதிப்புகள் தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரி. எனவே அவற்றை நீடிக்க விடாமல் பரஸ்பரம் பேசித் தீர்க்க வேண்டும். ஏனெனில் மனஒற்றுமை ஏற்படாமல் உடல்களால் மட்டும் இணைவது நல்லதல்ல என்கின்றனர் உளவியலாளர்கள்.

அவசரம் ஆகாது

தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம். இசைப்பதும், ரசிப்பதும் மென்மையாய் நிதானமாய் அமைய வேண்டும் அவசரங்களால் தாம்பத்தியம் அரைகுறையாக அலங்கோலமாக ஆகிவிடும். எனவே உறவுக்கு முன் இனிமையான உரையாடலும், உணர்வுப்பறிமாறலும், முன்விளையாடலும் உறவு முழுமைபெற உதவும்.

மருந்து வேண்டாம்

உணவு உண்ட ஒரு மணிநேரத்திற்குள் உடலுறவு செய்வது கூடாது. இதனால் மூட்டு உபாதைகளும், வேறு பல உடல்நலக்கோளாறுகளும் ஏற்படும்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியைப் பாதிக்கக்கூடிய அலோபதி மருந்துகளை உண்ணக்கூடாது.

சத்தான உணவுகள்

தாம்பத்ய வாழ்க்கையின் தொடர் வெற்றிக்கு கணவன், மனைவி இருவரின் உடல்நலமும் மனநலமும் முக்கியம். அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த – புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்த உணவுகளையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். உயிர்ச்சத்துக்களை அதிகம் தரும் சத்தான காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் உண்ண வேண்டும். தாம்பத்ய உறவிற்கு ஏற்க உணவுப்பொருட்களை அவ்வப்போது சேர்த்துக்கொள்ள வேண்டும்.

புரிந்து கொள்ளுங்கள்

தம்பதியரிடையே தாம்பத்திய தாகம் ஒரே அலைவரிசையில் இருப்பதில்லை.ஆணுக்கு ஆவல் அடிக்கடி ஏற்படும். பெண்ணுக்கு விருப்பமில்லாதபோது தொல்லை தரக்கூடாது என்றெண்ணி அடக்கிக்கொள்கிறான். இது தொடர்கதையானால் மனைவி மீது ஒருவித வெறுப்பு ஏற்படுவது தவிர்க்கமுடியாது. எனவே பெண்கள் ஆண்களின் மனநிலையறிந்து இயன்றளவு தங்களை சரிசெய்துகொள்ளுவது இல்லறத்தை இனிக்கச் செய்யும். அடிக்கடி உறவுக்கு ஆசைப்படும் பெண்களும் உண்டு.ஆண்கள் அவர்களது விருப்பம் அறிந்து உதாசீனப்படுத்தாமல் தங்களை சரி செய்து கொள்ள வேண்டும். பரஸ்பர மனவிருப்பம், தேவை அறிந்து உடல் எழுச்சியை வரவழைத்து தாம்பத்தியம் மேற்கொள்வது தம்பதியரிடம் என்றென்றும் இறுக்கமான பிணைப்பையும், இணைப்பையும் உறுதிப்படுத்தும்.

வரையறை தேவை

எதற்குமே ஒரு எல்லை உண்டு. அது தாம்பத்திற்கு மிகவும் அவசியம்.அடிக்கடி வரைமுறையின்றி உறவு கொள்ள விரும்புவது ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும். தாம்பத்திய உறவில் ஏதாவது ஒரு வரையறையைக் காலப்போக்கில் தம்பதியர்கள் தாங்களாகவே நிர்ணயம் செய்துகொள்வது முக்கியம். வயது அதிகமாகும் போது. … தாம்பத்திய உறவு இயலாமல் போய்விடுமோ என்ற அச்சம் தேவையற்றது. உடலுறுவுக்கு வயது ஒரு தடை அல்ல என்கின்றனர் உளவியலாளர்கள். தாம்பத்தியத்தில் எந்திரத்தனங்களும், எல்லைமீறல்களும் இனிமை தராது என்கின்றனர் அவர்கள்.

விருப்பங்களை வெளிப்படுத்துங்கள்

அன்றாட சமையலில் சுவை அறிந்து கேட்பது மனித இயல்பு. அதுபோல அந்தரங்கமான வாழ்க்கையிலும் விருப்பத்தை உணர்த்த வேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள். இப்படிப்பேசினால் அநாகரீகம் அப்படிச் செய்தால் அநாகரீகம் என்று எண்ணத் தேவையில்லை. இருவரது விருப்பங்களில் ஆரோக்கியமான அனைத்துமே, சுகமான அனைத்துமே பாலியல் வாழ்க்கை நெறிப்படி சரியானதுதான்.

புதிய குரோம் பிரவுசர்

கூகுள் நிறுவனம் தன் புதிய குரோம் பிரவுசர் (பதிப்பு Chrome 17.0.963.26) சோதனைப் பதிப்பினை வெளியிட்டுள்ளது. வேகமான பிரவுசிங் அனுபவத்தினை வழங்குதல், முழுமையான பாதுகாப்பினை உறுதி செய்தல் என்ற இரண்டு இலக்குகளில் இதனைத் தயார் செய்துள்ளதாக கூகுள் நிறுவன தலைமைப் பொறியாளர் தெரிவித்துள்ளார். முன்பு முகவரி கட்டத்தில் இணைய தள முகவரி யினை இடுகையில், அவை ஏற்கனவே குக்கீகளில் பதிவு செய்யப்பட்டிருந்தால், முழுமையாக நமக்குக் காட்டப்பட்டு, நாம் என்டர் செய்தவுடன் கிடைக்கும். தற்போது முகவரிகளுக்கான சொற்களை இடுகை யிலேயே, அவற்றை உணர்ந்து அந்த இணையப் பக்கத்தினை பின்புலத்தில் காட்டும்படி பிரவுசர் வடிவமைக்கப் படுகிறது. கூகுள் இதனை இன்ஸ்டண்ட் சர்ச் என்ற வசதியாகத் தன் தேடுதளத்தில் கொடுத்தது. இப்போது பிரவுசரில் கிடைக்க இருக்கிறது.
பாதுகாப்பினைப் பொறுத்தவரை, பிரவுசரின் தொழில் நுட்பம் கெடுதல் விளைவிக்கும் இணைய தளங்களை மட்டும் சோதனை செய்திடாமல், தரவிறக்கம் செய்யப்படும் இயக்கத்திற்கான பைல்களையும் (Executable Files) சோதனை செய்து, அவை மோசமானவையாக இருந்தால், தடை செய்திடும்.
மேலே சொல்லப்பட்டவை இன்னும் சோதனை முறையில் தான் உள்ளது எனவும், முழுமையான வசதி விரைவில் கிடைக்கும் எனவும் கூகுள் அறிவித்துள்ளது.

வேர்ட் பார்மட்டிங் மாற்ற

வேர்ட் டெக்ஸ்ட்டில் சில குறிப்பிட்ட சொற்களை மற்ற சொற்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட அழுத்தமாக, அடிக்கோடு, சாய்வு மற்றும் வேறு சில பார்மட்களில் அவற்றை அமைத்திருப்போம். அமைத்த பின்னர், இந்த பார்மட்டிங் தேவை இல்லை என எண்ணினால், இவற்றை மொத்தமாக நீக்க வேண்டுமென்றால், இதனைத் தேர்வு செய்து மெனு பார் சென்று ஒவ்வொரு ஐகானாகக் கிளிக் செய்வோம். இதற்குப் பதிலாக இரண்டு ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம். பார்மட்டிங் நீக்கி எளிமையான டெக்ஸ்ட் மட்டுமே தேவைப்படும் சொற்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். பின் கண்ட்ரோல் + ஷிப்ட்+இஸட் (Ctrl+Shft+Z) அழுத்துங்கள். மொத்தமாக பார்மட்டிங் அனைத்தும் நீக்கப்படும். வேர்ட் உள்ளாக ResetChar என்ற கட்டளையை அமல்படுத்துகிறது. இதனை கண்ட்ரோல் + ஸ்பேஸ் பார் அழுத்தியும் மேற்கொள்ளலாம்.
இதே போல ஏதேனும் பாரா பார்மட்டிங் செய்திருந்தால், அந்த பார்மட்டினை நீக்க பாராவினை செலக்ட் செய்து கண்ட்ரோல் + க்யூ (Ctrl+Q) அழுத்துங்கள்.
டெக்ஸ்ட் ஒன்றுக்கு சாதாரண நார்மல் ஸ்டைல் இருந்தால் போதும் என்று எண்ணினால், உடனே அதனைத் தேர்ந் தெடுத்து கண்ட்ரோல்+ஷிப்ட்+என் (Ctrl+Shft+N) அழுத்தவும்.

ஆரஞ்சு மகிமை

எல்லா சீசனிலும் மக்களை தேடி வரும் பழங்களுள் ஒன்று… ஆரஞ்சு. பல நோய்களை முன்கூட்டியே வராமல் தடுக்கும் மகத்துவமும் இதில் உண்டு.

சில உணவுகளை சாப்பிட்டதும் அவை உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்தி பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்கின்றன. இதனால் உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன.

இந்த பித்த நீர், ரத்தத்தில் கலந்து ரத்தத்தில் உள்ள இரும்புச் சத்துக்களை அழித்து விடுகிறது. இதனால் ரத்தம் அசுத்த மடைகிறது. மேலும், பித்த நீர், தலைக்கேறி கண் பார்வை நரம்புகளை பாதிப்படையச் செய்கிறது. அதோடு ஞாபக மறதியும் ஏற்படுகிறது. சருமத்தை பாதித்து சுருங்கச் செய்கிறது. தலைமுடி நரைக்கச் செய்கிறது.

இதுபோல் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகளை 300 கலோரி அளவு சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து ரத்தத்தை பரிசோதித்துப் பார்த்தால் பித்த நீர் அதிகம் சுரந்து ரத்தத்தில் கலந்திருப்பதை அண்மையில் கண்டறிந்துள்ளனர்.

இந்த பித்த நீர் அதிகம் சுரப்பதை தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழங்களில் முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது ஆரஞ்சு. ஆரஞ்சு பழச்சாறு சாப்பிட்டவர்களின் ரத்தத்தில் பித்த நீரில் அளவு குறைவாக இருப்பது ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆரஞ்சு பழச்சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கிறது. உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கிறது.

ஸோ… ஆரஞ்சை எங்கேப் பார்த்தாலும் `மிஸ்’ பண்ணிடாதீங்க…

மகா சிவராத்திரி மகிமை

மகா சிவராத்திரியை பற்றி ஏராளமான கதைகள் புராணத்தில் உள்ளன. அவற்றை கேட்பதும், படிப்பதும் கூட புண்ணியம் தரும். பிரம்மோத்திர காண்டத்தில் கூறப்பட்டுள்ள ஒரு கதை இது.
சண்டன், ஒரு வேடன், அப்பாவி அவன் காட்டில் வேட்டையாடுவதையே தொழிலாக கொண்டிருந்தான். காட்டில் அலையும் விலங்குகளையும், பறவைகளையும் வேட்டையாடி பிடித்து அவற்றை விற்று ஜீவனம் செய்து வந்தான். அவனுக்கு சண்டிகா என்ற மனைவி இருந்தாள். ஒரு நாள் அடர்ந்த காட்டிற்குள் விலங்குகளை தேடி அலைந்து கொண்டி
ருந்த போது, வானுயர்ந்த ஒரு பெரிய வில்வ மரத்தினடியில் அன்லர்ந்த பூவாய், அழகிய சிவலிங்கம் ஒன்று புதியதாய் தோன்றி இருப்பதை கண்டான். அது ஒரு சுயம்பு லிங்கம்.
சிவலிங்கத்தை கண்டதும் அவனுக்கு மெய்சிலிர்த்தது. அவனுள் அன்பும், பக்தியும் பெருகி கரைபுரண்டோடியது. தீயை கண்ட மெழுது போல் மனமுருகினான். வைத்த கண் வாங்காமல் மெய் மறந்து சிவலிங்கத்தையே பார்த்து கொண்டிருந்தான். பார்க்க பார்க்க பரவசம். அவனை ஆட்கொண்டது அவனையுமறியாமல் அவன் கண்களில் ஆன்ந்த கண்ணீர் பெருகி வழிந்தது. அவன் உள்ளம் பெறற்கரிய பெருஞ்செல்வத்தை பெற்றது போல் குதூகலத்தால் குதித்து கூத்தாடியது தன்னை மறந்தான் தன் நிலை மறந்தான்.
தானே தோன்றிய சிவலிங்கத்திற்கு பூஜை எப்படி செய்ய வேண்டும். இறைவனை எப்படி வயங்க வேண்டும். எண்öன்னன் உபசாரங்கள் செய்ய வேண்டும்? என்னவெல்லாம் படைக்க வேண்டும் என்ற விவரமெல்லாம் அவனுக்கு தெரியாது. ?எதுவுமே தெரியாத ஒரு அப்பாவி வேடன் அவன். அப்போது அங்கே சிங்க கேது என்ற மன்னன் வந்தான். வேட்டையாட கானகம் வந்தவன். தன் பரிவாரங்களைற பிரிந்து, வழி தெரியாமல் அலைந்து கொண்டிருந்தவன் வேடன் சண்டன் இருக்குமிடம் வர நேர்த்தது. கானகத்தை நன்கறிந்து வேடனை கெண்ட மன்னனுக்கு மிகுந்த சந்தோஷமேற்பட்டது. வேடனை கொண்டு கானக வழியை கண்டுபிடித்து என நம்பினான்.
மன்னன் சிங்ககேது வந்ததை கூட அறியாமல் சிவலிங்கத்தையே பார்த்து கொண்டிருந்த சன்டனை பாரத்து வேடா, இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? வழி தவறி வந்து விட்டேன் காட்டை விட்டு வெளியேற வேண்டும் வழிகாட்டுஎன்று கேட்க, மன்னன் குரல் கேட்டு சண்டன் உணர்வு வரப்பெற்றான். அரசே, என்னை மன்னியுங்கள் பாராமுகமாய் இருந்து விட்டேன். என்னுடன் வாருங்கள் வழிகாட்டுகிறேன் என்றான்,. தொடர்ந்து மகாராஜா இங்கே இருக்கும். சிவலிங்கத்தை எப்படி பூஜிக்க வேண்டும்என்பதை எனக்கு விளக்கமாய்கூறுங்கள் என்று மிகுந்த பணிவுடன் மன்னனிடம் கேட்டான் சண்டன்.
உடனே மன்னன் பரிகாசமாய் வேடனே, உன் தோல் பையில் தண்ணீர் கொண்டு வந்து சிவலிங்கத்தின் மீது :ஊற்று. சுடலையில் வெந்த சாம்பலை கொண்டு வடந்து சிவலிங்கத்துக்கு பூசு. கைக்கு கிடைக்கிற பூக்களையெல்லாம் கொண்டு வந்து சிவலிங்கத்தின் மேல் வை. நீ உண்ணும் உணவை கொணடு வந்து நிவேதனமாக வை. விளக்கேற்றியவை. இரு கை கை கூப்பி கும்பிடு போடு என்று அலட்சியத்தோடு கூறினான். மன்னன் சொன்ன விவரங்களையெல்லாம் சண்டன் கவனமாக கேட்டு கொண்டான்.
எதுவும் தெரியாமலும், தன்னை அறியாமலும் எசய்யும் சிவராத்திரி வழிபாடு கூடப பலன் தரும். இப்படி அறியாமல் செய்த பூஜைக்கே பலனுண்டு. என்றால் சிவராத்திரியை அறிந்தே பூஜை செய்பவர்களுக்கு ம், ஆலயம் சென்று முறையே வழிபாடு செய்பவர்களுக்கும் எத்தகைய புண்ணியம் வந்து சேரும். என்பதை எண்ணி பாருங்கள்.
எனவே சிந்தை மகிழ சிவபுராணம் ஓதி சிவன் அருளால் அவன் தாள் பணிந்து பிறவி பெரும் பிணி தீர்ப்போம்.