Daily Archives: பிப்ரவரி 18th, 2012

கிட்டார் இசைக்கக் கற்றுக்கொடுக்கும் தளம்

சிறுவனாய் இருந்து இளைஞனாய் உருவெடுக்கையில், பலருக்கும் ஏதேனும் ஓர் இசைக்கருவியை இசைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்வம் வரும். இன்றைய பள்ளிக் கல்வி பலத்த போட்டியின் அடிப்படையில் அமைந்துள்ளதால், அதற்கு பள்ளி மாணவர்களால் நேரம் ஒதுக்க இயல வில்லை. கல்லூரி மாணவர்களுக்கும் இதே பிரச்னைதான்.
இவர்களுக்கு உதவிடும் வகையில், கிட்டார் கற்றுக் கொடுக்கும் தளம் ஒன்றினை அண்மையில் இணையத்தில் பார்க்க முடிந்து. இதன் முகவரி http://www.vanderbilly. com. மிகச் சிறந்த கிட்டார் இசைக் கலைஞர் ஒருவரால் உருவாக்கப்பட்டு, பாடங்களும் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் தரப் பட்டுள்ளன. Video Vault என்ற தலைப்பின் கீழ் கிளிக் செய்தால், இந்த பாடங்களுக் கான பைல்கள் கிடைக் கின்றன. ஒவ்வொரு பாடமும் ஒரு வீடியோ பைலுடன் காட்டப் படுகிறது. நம் கையில் கிட்டாரினை வைத்துக் கொண்டு அதனை மீண்டும் மீண்டும் பார்த்துக் கற்றுக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றைப் பார்த்தவுடனேயே, இதனை மட்டுமே நீங்கள் அடிக்கடி பயன்படுத்தி, கிட்டார் இசைக்கக் கற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என முடிவு செய்துவிடுவீர்கள். அல்லது, இதில் தரப்பட்டுள்ள அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் பதில்கள் (FAQ)பிரிவினை முதலில் படிக்கலாம். இந்தப் பிரிவு, இணைய தளத்தின் மேல் வலது பக்கம் உள்ளது. பாடல்கள், இசைக்கும் வழிகள் எனப் பலவகை தலைப்புகளில் இந்த கேள்வி பதில்கள் அமைக்கப் பட்டுள்ளன.
முதலில் உங்களுக்கான இலவச அக்கவுண்ட் ஒன்றை நீங்கள் ஏற்படுத்திக் கொண்டு, இந்த பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம். நீங்களே ஒரு கிட்டார் இசைக் கலைஞராக இருந்தால், நீங்களும் சில பாடங்களுக்கான வீடியோ பைலை உருவாக்கி அப்லோட் செய்திடலாம்.
வீடியோ பாட பைல்கள் Instructional, Performance, Embedded, All Selections என்ற பிரிவுகளில் காட்டப்படுகின்றன. இதுவும் நமக்கு உதவியாய் உள்ளது. Gear reviews, tips and tricks, and guitar news ஆகிய பிரிவுகளில் கூடுதல் தகவல்களும், கிட்டார் இசைப்பதில் டிப்ஸ்களும் கிடைக்கின்றன. இசைக் கலைஞர்களுக்கு இது ஓர் சிறப்பான வழிகாட்டி. கிட்டார் இசைப்பதில் ஆர்வம் இல்லை என்றாலும், ஆன்லைனில் ஒரு கலையைச் சொல்லிக் கொடுக்கும் வழிமுறையை இந்த தளத்தின் வடிவமைப்பிலிருந்துகற்றுக் கொள்ளலாம். எதற்கும் ஒரு முறை இந்த தளத்தைப் பாருங்கள்.

சிறிதளவு மனஅழுத்தம் தேவைதான்!

“தலைப்பைப் பார்த்தாலே, என்னது இது என அழுத்தமாகக் கேள்வி கேட்கத் தோன்றும். ஆனால், சிறிதளவு அழுத்தம் அதாவது மன அழுத்தம் என்பது வாழ்க்கையில் வெற்றி கொள்ளத் தேவைதான்,’ என்கிறார் மனநல மருத்துவர் ஆனந்த்பாலன்.
“மன அழுத்தம் எல்லோருக்குள்ளும் இருப்பதுதான். அதற்கு எல்லோருமே ஆளாகிறோம். மிதமான மன அழுத்தம் இருக்கும்போது, அவர்கள் செய்யும் வேலையைத் துரிதமாகவும், அற்புதமாகவும் செய்து முடிக்க அது உதவுகிறது. உதாரணத்துக்கு, நாளைக்கு ஒரு நேர்முகத் தேர்வுக்குச் செல்ல வேண்டும் என்று இருந்தால், இன்று தோன்றும் அந்த மிதமான மன அழுத்தம் அவரை நேர்முகத் தேர்வுக்குச் சரியாகத் தயார் செய்ய வைக்கவும், உடைகளை கசங்கல் இல்லாமல் அணிந்து கொள்ளவும் ஊக்குவிக்கும். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எதிர்நோக்கும் மாணவனுக்கு, இந்த மிதமான மன அழுத்தம், காலையில் சீக்கிரம் எழுந்து, படிக்க வைக்க உதவும். மன அழுத்தம் என்பது இரண்டு நிலையில் வரும். முதலாவது eustress என்போம்; இது மிக மிக நல்ல மன அழுத்தம். ஒருவரின் முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை புரிவது இது தான். மற்றொன்று, disstress இதைத்தான் வரம்பு மீறிய சங்கடமான மன அழுத்தம் என்கிறோம்’ என மனஅழுத்ததின் வகைகளைப் பற்றிக் கூறிய மருத்துவர், “மன அழுத்தம் எல்லாருக்குமே வரக்கூடியது. இதை எப்படிச் சமாளிப்பது என்றுதான் தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர, எப்படித் தவிர்ப்பது என்பது எடுத்துக் கொள்ளக்கூடாது’ என்கிறார்.
“மன அழுத்தம் ஒருவருக்குச் சமாளிக்கவே முடியாத அளவு அதிகமாகி விட்டால், அவருக்கு மன பதற்றம் (anxiety) அல்லது மனச்சோர்வு (depression) வருவதற்கு வாய்ப்பு அதிகமாகி விடும். தினம் 45 நிமிடம் காலையில் நடைப் பயில்பவர்களுக்கும், யோகா, பிராணாயாமம் செய்பவர்களுக்கும், சரியான உணவை சரியான நேரத்தில் சாப்பிட்டு, சரியாகத் தூங்கி எழுந்து கொள்பவர்களும் தங்களை அறியாமல் தாங்களே மன அழுத்தத்தை மிக அழகாகச் சமாளித்து வருகிறார்கள்.
மனச் சோர்வை வெவ்வேறு சூழலில் எல்லோருமே அனுபவிக்கிறோம். ஆனால், காரணமே இல்லாமல், மனச்சோர்வு வரும்போது அது மனச்சோர்வு நோயாகவே மாறி விடுகிறது. பரீட்சையில் மதிப்பெண் குறைந்து விட்டால் மனச்சோர்வு ஏற்படுவது இயற்கையே. அதைப்போலவே வியாபாரத்தில் திடீர் நஷ்டம் ஏற்பட்டாலும் மனச்சோர்வு வரும். ஆனால், தன் வீட்டு நாய்க் குட்டி இறந்து விட்டதற்காக ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முற்பட்டால், அது மனச்சோர்வு நோயின் வெளிப்பாடு என்பதை உணர வேண்டும்.
அடுத்தது, மனப்பதற்றம். இதுவும் எல்லோருக்கும் தோன்றுவது இயற்கையே. திடீரென்று “டமால்’ என சத்தம் கேட்டால், நம்மை அறியாமலேயே நம் கை கால் உதறுவது, இதயம் வேகமாகத் துடிப்பது, வியர்த்துக் கொட்டுவது எல்லாம் நடக்கும். ஆனால், காரணமே இல்லாமல், இனம் புரியாமல் எதற்கெடுத்தாலும் பயப்படுவது, பதற்றப்படுவதும், நாள் பூரா, ஞாயிற்றுக் கிழமைகளில் கூடப் பட பட என இருப்பதை anxiety disorder அதாவது மனப்பதற்ற நோய் என்று சொல்லுவோம்.
மன நோயின் தீவிரத்தைப் பொறுத்து stress management செய்யச் சொல்லிக் கொடுப்பது அல்லது மன வழி (counselling) சிகிச்சை கொடுப்பது அல்லது மருந்து, மாத்திரைகளைக் கொடுத்து அவர்களின் மன நோயைக் குணமாக்க முடியும்’ என்கிறார் டாக்டர் ஆனந்த் பாலன்.

நன்றி-கல்கி

ஹெல்ப் வேணுமா?

ஆபீஸிலோ வீட்டிலோ செம பிஸியாக ஒரு வேலை பார்த்து கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று போன் ஒலிக்கிறது. அல்லது யரோ கதவை தட்டி எக்ஸ்கியூஸ் மீ சார், அர்ஜெனன்டா ஒரு விஷயம் பேசனும் என்கிறார்கள் என்ன செய்வீர்கள். இந்த சூழ்நிலையில் நம்மில் பெரும்பாலானோர் எரிமலை போல் வெடித்து விடுவோம். பிஸியா இருக்கேன்னு தெரியுதுல்ல? ஏன் டிஸ்டர்ப் பன்றீங்க? எல்லாம் அப்புறமா பார்க்கலாம் என்று தட்டிக்கழித்து விடுவோம்.
நியாயம் தானே? ஒரு வேலையை மும்முரமாக செய்து கொண்டிருக்கும்போது இது பேனாற தொந்தரவுகளால் கவனம் கலைகிறது. வேகம் குறைகிறது. கடைசியில் எல்லாமே சொதப்பி விடுகிறது. அது சரி. ஆனால் நீங்கள் வேலையில் கவனமாக இருக்கும் போது ஒருவர் உங்களை தொந்தரவு செய்கிறாதர் என்றால் அவருகு“கு என்ன அவசரமா யார் கண்டது? அதற்காக எப்போதும் அடுத்தவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்க முடியுமா? அப்புறம் என்னுடைய வேலைஎப்படி நடக்கும்?
பெரிய தலைவர்கள், மேலாளர்கள் வெற்றி பெற்றவர்களை கவனித்து பார்த்தால் அவர்களும், ஒரு நாளைக்குபதினெட்டு மணி நேரமோ அதற்கு மேலோ பிஸியாக வேலை செய்கிறவர்களாக தான் இருப்பார்கள். ஆனால் அதே சமயம் அவர்களுக்கு கீழே உள்ளவர்களிடம் சார் எப்படி? என்று விசாரித்தால் ரொம்ப நல்ல மனுஷன் சார், அவர் எவ்ளோ வேலையா இருந்தாலும் சரி நாங்க ஒரு விஷயம்ன்னு போய் நின்னா காது கொடுத்து கேட்பார். நல்ல பதிலா சொல்லி அனுப்புவார் என்று பாராட்டுவார்கள் இது எப்படி சாத்தியம்?
இந்த சூட்சுமத்தை சொல்லித்தருகிற புத்தகம் ஒன்று சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. டச் பாயின்ட்ஸ் என்ற அந்த புத்தகத்தின் ஆசிரியர்கள், டக்ளஸ் கனன்ட் மற்றும் மெட்டெ நார்கார்ட்
அதென்ன டச் பாயின்ட்?
ஒருவர் நமக்கு பிடித்தாற் போய் ஏதாவது செய்து விட்டால் நெஞ்சை தொட்டு விட்டார் என்று சொல்கிறோம்தானே? அது போன்ற நிகழ்வுகளை தான் இந்த புத்தகம் டச் பாயிண்ட் என்று குறிப்பிடுகிறது,. உதாரணமாக உங்களுடைய நண்பர் ஒரு வர் ஏதோ விஷயத்தில் உதவி கேட்டு வருகிறார். ஆனால் நீங்களோ, அலுவுலக வேலை ஒன்றில் சிக்கி கொண்டிருக்கிறீர்கள். அதனால் என்ன? மேனேஜர்கிட்ட ஒன் ஹவர் பர்மிஷன் கேட்டாப் போச்சு என்று உ:தனே கிளம்புகிறீர்கள். அவருக்கு வேண்டிய நுதவியை செய்து தருகிறீர்கள். இதை அவர் என்றைக்கு மறக்க மாட்டார் உங்களுக்கு ஒரு டச் பாயிண்ட் தினந்தோறும் இது போல் அலுவலகத்தில் வீட்டில் வெளியில என்று நீங்கள் ஏராளமான டச் பாயிண்ட்களை ஸ்கோர் பண்ணலாம். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று எல்லோரிடமும் இதற்காக நீங்கள் அதிக நேரமும் செலவிட வேண்டிருக்காது. மற்ற வேலைகளோடு இதையும் கவனித்து கொள்ளலாம்.
டச் பாயிண்ட்களை ஸ்கோர் பண்ணுதவதற்காக மூன்று ஸ்டெப்களை சொல்லித்தருகிறது இந்த புத்தகம். 1. கேள்வி, 2. சிந்தனை, 3. முன்னேற்றம்
முதலில் உஞ்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களிடம் வந்து எனக்கு ஓர் உதவி வேண்டும் என்று கேட்கும்வரை காத்திருக்காதீர்கள். அதற்கு முன்னால் நீங்களே அவர்களுடைய முகக் குறிப்புகள், உடல் மொழி போன்றவற்றை கவனித்து வலியசென்று ஏதாச்சும்“ ஹெல்ப் வேணுமா? என்று கேட்க பழகுங்கள்.
அடுத்து இரண்டாவது கட்டம்: பிரச்னையை எப்படி தீர்க்கலாம். என்று உங்களுடைய கருத்துகளை ஆலோசனைகளை சொல்வது அனுடவங்கதைள பகிர்ந்து கொள்வது இது பற்றி அவர் மேலும் யாரிடம் உதவி பெறலாம் என்பது குறித்து சிந்திப்பது.
மூன்றாவது கட்டம் முன்னேற்றம் அதவாது அந்த பிரச்னை என்ன ஆச்சு? தீர்ந்ததா அல்து இன்னும் தொடர்கிறதா? அது பற்றி அக்கறையோடு விசாரித்து தெரிந்து கொள்வது
நீங்கள் வாடகைக்கு வீடு தேடிக்கொண்டிருகிறீர்கள். யாரிடமோ, பேச்சு வாக்கில் அஐத சொல்கிறீர்கள். அர் தனக்குஊ தெரிந்த ஒரு வீட்டு தரகரை சிபாரிசு செய்கிறார்.
ஒரு வாரம் கழித்து அவரை மீண்டும் சந்திக்கிறீர்கள். என்ன சார்? அந்த புரோக்கரை போய் பார்த்தீங்களா? அவர் ஹெல்ப் பண்ணாரா? வீடு கிடைச்சதா என்றுரு விசாரிக்கிறார். யோசித்து பாருங்கள். உங்களுக்கு அப்படியே உச்சி குளிர்ந்து விடாதா? நாளைக்கு அவருக்கு ஒரு பிரச்னை என்றால் தலைகீழாக நின்றாவது உதவி செய்யமாட்டீர்களா?
இதே விஷயத்தை நீங்களும், செய்து பாருங்ணகள்.உங்களது டச் பாய்ன்ட் ஏறிக்கொண்டே போகும்.

இல்லத்தரசியா? நிதி ஆலோசகரா?

வீட்டின் செல்வ செழிப்புக்கு உறுதுணையாகும் பெண்கள், வீட்டுப்பராமரிப்பில் மட்டுமே பெண்கள் கவனம் செலுத்தி வந்த காலங்கள் எல்லாம் பழங்கதையாகிப்போயிற்று. நாகரீக உலகில் ஆண்களின் சேமிப்புகளை முறையாக முதலீடு செய்வதற்கும் செல்வம் சேர்க்கும் அவர்களது முயற்சியில் உதவிடவும் இன்றைய பெண்கள் தயாராகி வருகின்றனர்.

வீட்டின் சேமிப்பை வளப்படுத்துவதில் ஆண்களின் முதல் சொத்தாக விளங்குவது அவர்களது இல்லத்தரசிகளே. செல்வ வளம் சேர்ப்பதில் ஆண்களின் நிதி ஆலோசகராக விரும்பும் பெண்மணி நீங்களானால், இந்த கட்டுரை உங்களுக்காகத்தான். தொடர்ந்து படியுங்கள். இதோ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில நிதி நிர்வாக நுட்பங்கள். இதை தெரிந்து கொண்டால் பணம் சேர்ப்பதில் உங்கள் கணவருக்கு நீங்கள் சிறந்த துணையாக முடியும்.

திட்டமிடுங்கள்

எதற்கும் திட்டமிடுவது தான் முதல் படி. `திட்டம் சரியாக இருந்தால் பாதி வெற்றி அடைந்தாயிற்று’ என்னும் ஆங்கில பழமொழியை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் செலவுகளை- அடிப்படை செலவுகள், அதிக அவசியமல்லாத செலவுகள், சொத்துக்கள் மீதான முதலீட்டு செலவுகள் மற்றும் சேமிப்புக்கள் என வகைப்படுத்திக்கொள்ளுங்கள்.

மளிகை, மருந்து, வாடகை, வீட்டுப்பணியாள் சம்பளம், கல்விக்கட்டணம், மின் கட்டணம், டெலிபோன் கட்டணம் போன்றவை அடிப்படை செலவுகளாகும். சுற்றுலா, சினிமா, உணவு விடுதிகளுக்கு செல்லுதல் போன்றவை அதிக அவசியமல்லாத செலவுகளாகும். வீட்டுக்கடன், வாகன கடன் மற்றும் தனி நபர் கடன் ஆகியவை சொத்துக்கள் வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகளாகும். தங்க ஆபரணங்கள், வங்கி டெபாசிட்டுகள், பங்கு வர்த்தக முதலீடுகள் போன்றவை சேமிப்புகளாகும்.

மேற்சொன்ன ஒவ்வொரு இனத்திற்கும் அடுத்த மாதம் எவ்வளவு பணம் தேவைப்
படும் என்பதை முன்னதாக திட்டமிட்டு அந்தந்த தொகையை தனித்தனியே எடுத்து வையுங்கள்.

வரவோ செலவோ அவற்றை தனித்தனியாக எழுதி வையுங்கள். என்னென்ன வகைக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை சரியாக எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

உதாரணமாக பேப்பர்காரர், காய்கறிக்காரர், பால்காரர், சலவை தொழிலாளி இவர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை, வீட்டுப்பணியாளருக்கு கொடுத்த முன்பணம், வங்கியில் செலுத்த வேண்டிய பணவிடை, மற்றும் காசோலை பற்றிய தகவல்களை ஞாபகமாக எழுதி வையுங்கள். அந்தந்த செலவுகள் முடிந்ததும் அதையும் மறக்காமல் குறிப்பெடுங்கள்.

ஒவ்வொரு இனத்துக்கும் நீங்கள் திட்டமிட்ட செலவு அதனை மிகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவேளை ஒரு இனத்தில் நீங்கள் திட்டமிட்டதை விட அதிகமாக செலவு செய்து விட்டதாக தெரிய வந்தால், வேறு ஏதாவது ஒரு செலவை நிறுத்தவோ அல்லது குறைக்கவோ முடியுமா என்று பாருங்கள்.

பல நேரங்களில் உபரி வருமானத்தை எவ்வாறு செலவு செய்வது என்பதில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதுண்டு. உதாரணமாக, போனஸ் பணத்தில் தனக்கொரு செல்போன் அல்லது லேப்டாப் அல்லது கேமராவை வாங்கலாமென கணவர் நினைக்கும் போது, தங்க ஆபரணங்கள் வாங்குவதே சரி என மனைவி கருதலாம். இதுபோன்ற தருணங்களில் எதற்கு முக்கியத்துவம் தருவது என்பதை இருவரும் கலந்து பேசி முடிவெடுப்பது நல்லது.

கல்வி, மருத்துவம் மற்றும் உணவுக்கு முன்னுரிமை தருவது மிகவும் சரியானது. செலவுகளை கட்டுப்படுத்தி மாதாந்திர வருமானத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேமிக்க கற்றுக்கொண்டால் அவற்றை சிறப்பான அளவில் முதலீடு செய்யலாம்.

அதிக தேவையற்ற செலவுகள், வாகன மற்றும் தனி நபர் கடன்களை கட்டுப்படுத்தினால் சேமிப்பதொன்றும் கடினமானதல்ல. சேமிப்புகள் வளரும் போது அவற்றை சொத்துக்களாக மாற்றிக்கொள்ளலாம்.

சரி. வருவாயை பெருக்குவது எப்படி?

மொத்தமாக வாங்குங்கள். முடிந்த வரை பேரம் பேசி வாங்குங்கள். தள்ளுபடி விலையில் பொருட்கள் கிடைக்கும் போது வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கணவர் சேமிக்கும் விதங்களை தெரிந்து வைத்திருங்கள். சேமிப்பின் வளர்ச்சியை கண்காணியுங்கள். சேமிப்பின் வளர்ச்சி எதிர்பார்த்த விதத்தில் இல்லாமல் போனால் அவற்றை மாற்றி லாபகரமான இனங்களில் மறு முதலீடு செய்யுங்கள். அதே நேரம் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை கவனத்தில் கொண்டு முதலீடுகளை மேற்கொள்ளுங்கள்.

நீங்களும் நிதி ஆலோசகர் தான் இல்லத்தரசிகளே!