Advertisements

Daily Archives: பிப்ரவரி 20th, 2012

செல் தேர்வும் செயல்பாடும்

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் ஒரு செல்லைத் தேர்ந்தெடுக் கிறோம். பின்னரே இன்னும் பல செல் களைத் தேர்ந்தெடுத்திருக்கலாமே என்று எண்ணுகிறோம். இந்த நீட்டிப்பு ஒரு செல்லாக இருக்கலாம்; அல்லது முழு வரிசையாக இருக்கலாம்; அல்லது வரிசையில் உள்ள கடைசி தகவல் உள்ள செல்லாக இருக்கலாம். வெவ்வேறு வகையான இந்த நீட்டிப்புகளுக்கான ஷார்ட் கட் கீகளை இங்கு காணலாம்.
1. ஒரு செல் நீட்டிக்க – SHIFT+arrow key
2. அதே நெட்டு வரிசை (column) அல்லது படுக்கை வரிசையில் (row) உள்ள டேட்டா உள்ள கடைசி செல்வரை – CTRL+SHIFT+arrow key
3. அந்த படுக்கை வரிசையின் தொடக்கம் வரை – SHIFT+HOME
4. ஒர்க் ஷீட்டில் தொடக்கம் வரை நீட்டிக்க – CTRL+SHIFT+HOME
5. ஒர்க் ஷீட்டில் கீழாக வலது மூலையில் உள்ள பயன்படுத்திய செல் வரை நீட்டிக்க – CTRL+SHIFT+END
6. மேலும் கீழாக உள்ள ஒரு ஸ்கிரீன் வரை உள்ள செல்களுக்கு நீட்டிக்க – SHIFT+PAGE DOWN
7. மேலும் மேலாக உள்ள ஒரு ஸ்கிரீன் வரை உள்ள செல்களுக்கு நீட்டிக்க – SHIFT+PAGE க்க
8. இந்த நீட்டிக்கும் வசதியை அமல்படுத்தவும் நிறுத்தவும் – F8
9. இந்த தேர்வுடன் இன்னொரு ரேஞ்ச் செல்களை இணைக்க SHIFT+F8 அழுத்த வேண்டும். இதனை அழுத்தும் முறை குறித்துப் பார்க்கலாம். இதன் பின் நீங்கள் இணைக்க விரும்பும் செல்களின் ரேஞ்ச் தொடங்கும் இடத்தில் ஆரோ கீகள் மூலம் கர்சரைக் கொண்டு செல்லவும். எப் 8 கீயை அழுத்தவும். அதன்பின் ஷிப்ட் + ஆரோ கீகள் மூலம் இணைக்க விரும்பும் அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக் கவும்.
10.கமெண்ட் உள்ள அனைத்துசெல்களையும் தேர்ந்தெடுக்க CTRL+/
தேர்ந்தெடுக்கப்பட்ட செல் தொகுதிக்குள் எப்படி கர்சரை நகர்த்தலாம் என்பது குறித்தும் இங்கு பார்க்கலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட செல் தொகுதிக்குள் மேலும் கீழுமாகச் செல்ல – Enter
தொகுதிக்குள் கீழிருந்து மேலாகச் செல்ல Shift+Enter அழுத்தலாம்.
இடது வலதாகச் செல்ல, அல்லது ஒரே ஒரு நெட்டு வரிசை தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தால் கீழாக ஒரு செல் செல்ல – TAB
வலது இடதாகச் செல்ல, அல்லது ஒரே ஒரு நெட்டு வரிசை தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தால்மேலாக ஒரு செல் செல்ல – Shift+TAB
தேர்ந்தெடுக்கப்பட்ட செல் தொகுதியில் கடிகாரச் சுற்று வழியில் ஒவ்வொரு மூலைக்கும் செல்ல – Ctrl+period
வலது பக்கம் தொடர்ச்சியாக இல்லாத செல்களுக்கிடையே செல்ல – Ctrl+Alt+ Right Arrow
இடது பக்கம் தொடர்ச்சியாக இல்லாத செல்களுக்கிடையே செல்ல – Ctrl+Alt+ Left Arrow

Advertisements

முதலீட்டுக்கு முன் 5 கேள்விகள்!


இன்று எல்லோரிடமும் முதலீட்டு ஆர்வம் இருக்கிறது. பாடுபட்டுச் சம்பாதிக்கும் பணத்தைச் சரியான திட்டங்களில் முதலீடு செய்து, நியாயமான வருவாயைப் பெற வேண்டும் என்று எண்ணுகிறோம்.

ஆனால் எந்தத் திட்டத்தைத் தேர்வு செய்வது என்பதில்தான் நமக்குப் பொறுமையும், திறமையும் இருப்பதில்லை. எனவே, தெரிந்த நண்பர்கள் அல்லது அறிந்த முதலீட்டு ஆலோசகர்கள் கூறும் திட்டங்களில் கண்ணை மூடிக்கொண்டு பணத்தைப் போட்டு விடுகிறோம். குறிப்பிட்ட திட்டத்துக்கான விண்ணப்பப் படிவத்தை நிதானமாகப் படித்துப் பார்க்கக்கூட நமக்கு பொறுமை இருப்பதில்லை. ஆனால், இது சரியல்ல.

நீங்கள் முதலீடு செய்யப் போகும் நிறுவனத்தில் எழுப்ப வேண்டிய 5 அவசியமான கேள்விகள் இவை:

1. எனது பணத்தை எங்கே முதலீடு செய்யப் போகிறீர்கள்?

இது சாதாரணமான கேள்வியாகத் தோன்றினாலும், நிச்சயமாகக் கேளுங்கள். அப்போதுதான் எத்தனைவிதமான பதில்கள் வருகின்றன என்று அறிவீர்கள். உங்கள் பணமானது பட்டியலிடப்பட்ட பங்குகள், பட்டியலிடப்படாத பங்குகள், அரசுப் பத்திரங்கள், தனியார் பத்திரங்கள், ரியல் எஸ்டேட் என்று எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்யப்படலாம். உங்கள் பணத்தை நிர்வகிக்கும் நிறுவனமே நேரடியாக அல்லது பிற நிறுவனங்களின் வாயிலாக அவற்றில் முதலீடு செய்யலாம். ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளில் உங்கள் பணம் முதலீடு செய்யப்பட்டால் அதன் விவரங்களைக் கேட்டறியுங்கள். உங்களின் நிதி நிறுவனம், `ரிஸ்க்’ பற்றி கவலைப்படாமல், `ரிட்டர்னை’ மட்டும் கணக்கில் கொண்டு முதலீடு செய்தால் நீங்கள் கொஞ்சம் யோசிப்பது நல்லது.

2. எது, எந்தளவு மோசமாகப் போகலாம்?

உங்களின் நிதி நிறுவனம் ஒரு குறிப்பிட்ட பிரிவில் முதலீடு செய்கிறது என்றால், அப்பிரிவில் முந்தைய காலச் செயல்பாடுகள் எவ்வாறு இருந்திருக்கின்றன, அதில் `மோசமான ஆண்டு’ எது என்று கேட்டறியுங்கள். அந்தப் பிரிவில் `ரிஸ்க்’ இருக்கிறது என்றால் அது எந்தளவுக்கு மோசமாகப் போகக்கூடும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

3. கட்டணம் எவ்வளவு?

உங்கள் பணத்தை நிர்வகிப்பதற்கு குறிப்பிட்ட நிதி நிறுவனம் வசூலிக்கும் கட்டணம் எவ்வளவு என்பதைக் கேட்டறிந்துகொள்ளுங்கள். `ரிட்டர்னில்’ பங்கு என்றால், குறிப்பிட்ட நிறுவனம் அதில்தான் கவனமாக இருக்கும். `ரிஸ்க்’ பற்றி அதிகமாக அலட்டிக்கொள்ளமாட்டார்கள். உங்கள் பணத்துக்கு ஒரு லாபத்தை ஈட்டித் தரும் அதேவேளையில், அதைப் பாதுகாக்க வேண்டியதும் நிதி நிறுவனத்தின் பொறுப்புதான். அவர்கள் தடாலடியாக `ஆக்ஷனில்’ இறங்குவதை நீங்கள் அனுமதிக்க முடியாது.

4. நிபந்தனையின்றி எனது பணத்தைத் திரும்பப் பெறலாமா?

நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பணத்தைத் திரும்ப எடுக்க வேண்டாம் என்றுதான் முதலீடு செய்கிறீர்கள். ஆனால் திடீரென்று மனம் மாறினால்? அவசரமாகப் பணம் தேவைப்பட்டால்? அபராதக் கட்டணம், தாமதம், நிபந்தனைகள் என்று பணத்தைத் திரும்பப் பெறுவதில் சங்கடங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? எப்படிப் பார்த்தாலும் அது உங்கள் பணம்தானே? அதைத் திரும்பப் பெறுவதற்கு ஏன் தண்டனை விதிக்கப்பட வேண்டும்? இவ்விஷயத்தை நன்கு தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.

5. எப்போதெல்லாம், எந்த அளவுக்குத் தகவல் தெரிவிப்பீர்கள்?

எனது முதலீடு குறித்த விவரங்களை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை, எந்த அளவு விவரமாக எனக்குத் தெரிவிப்பீர்கள் என்று கேளுங்கள். அவர்கள் தகவல் தரும் முறை, நீங்கள் புரிந்துகொள்ளும் விதமாக இருக்குமா, அதுகுறித்த விஷயங்களை நாங்கள் உங்களைக் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொள்ள நேரம் ஒதுக்குவீர்களா என்று கேளுங்கள்.

கேரட் பால் அல்வா

குழந்தைகள் சத்தான உணவு சாப்பிட போராட்டம் செய்கிறார்களா? அவ்வப்போது கேரட் பால் அல்வா செய்து கொடுத்துப் பாருங்களேன். பால் குடிக்க மறுக்கும் குழந்தைகள்கூட இந்தப் பால் அல்வா விரும்பி சாப்பிடுவார்கள். அப்படியே அத்தியா வசிய ஊட்டச்சத்தான வைட்டமின் `ஏ` குழந்தைக்கு கிடைத்த மாதிரி இருக்கும். செய்முறை இதோ…

தேவையானவை

மசித்த கேரட் – ஒரு கப்

பால் – ஒரு கப்

சர்க்கரை – ஒரு கப்

நெய் – 1/2 கப்

முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்

செய்முறை

* கேரட்டை நன்றாக துருவி வேக வைத்து மசித்துக் கொள்ளவும். மசித்த கேரட்டை அளந்து கொள்ளவும். ஒரு கப் மசித்த கேரட்டிற்கு மற்ற பொருட்களின் அளவு போதுமானது. முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக்கி நெய்யில் வறுத்து எடுத்து வைக்கவும்.

* கனமான வாணலியை காய வைத்து மசித்த கேரட், பால், சீனி, எல்லாவற்றையும் இட்டு கிளற வேண்டும். கலவை கெட்டியானதும் நெய் சிறிது சிறிதாக விடவும்.

* பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு கொண்டு வரும்போது இறக்கி வைத்து வறுத்த முந்திரிப் பருப்பு மற்றும் ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

* இந்த கேரட் அல்வா விருந்தின்போது பரிமாற ஏற்றது.

கம்ப்யூட்டருக்கான பாதுகாப்பான மின்சக்தி

இன்றைய உலகில் நாம் பல டிஜிட்டல் சாதனங்களையே நம்பி இருக்கிறோம். அவை இயங்காமல் போனால், உடனே நம் அன்றாடப் பணிகள் முடங்கிப் போகின்றன. இதனாலேயே இதற்கு மின் இணைப்பு தருவதிலும், அவற்றைச் சீராக வைத்துக் கொள்வதிலும் நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. நம் கம்ப்யூட்டருக்கான மின்சக்தி தரும் சாதனங்களை எப்படி, எந்த வகையில் அமைத்து இயக்க வேண்டும் என இங்கு காணலாம். அவற்றின் மூலம் கிடைக்கும் மின்சக்தியின் தன்மை குறித்தும் சில விவரங்களை இங்கு பார்ப்போம்.

ஸ்பைக்ஸ், சர்ஜஸ் என்பவை எதைக் குறிக்கின்றன?
டிஜிட்டல் சாதனங்களுக்கு வரும் மின்சாரம் சீராக இருக்க வேண்டும். வரையறுக்கப்பட்ட வழக்கமான வோல்டேஜ் அளவை விட்டு அதிகமாக இருந்தால் அது அதிக வோல்டேஜ் (Over Voltage) ஆகும். அதுபோல் வோல்டேஜ் அளவு குறைவாக வருவது குறைவான வோல்டேஜ் (Under Voltage) ஆகும்.
அதிக வோல்டேஜ் பிரிவில் ஸ்பைக்கும், சர்ஜும் வருகின்றன. இந்த இரண்டுக்கும் இடையே சிறு வேறுபாடு உண்டு. மிக அதிக வோல்டேஜ் திடீரென வந்து உடனடியாக மறைந்து போவதை ஸ்பைக் என அழைக்கிறார்கள். ஐட்ணீதடூண்ஞு என்றும் இதைக் குறிப்பிடலாம். மிக அதிக வோல்டேஜ் சற்று அதிகமான நேரம் (பொதுவாக நொடியில் 1/20 பங்கு) இருந்தால் அதை சர்ஜ் எனக் குறிப்பிடுகின்றனர்.
வோல்டேஜ் அளவு ஆபத்தான அளவுக்கு, சற்று காலத்திற்க்கு, குறுகிய நேரத்திற்குக் குறைந்து போவது Brownout ஆகும். Sags என்றும் இதைக் கூறுவார்கள். இதைப் பார்த்துதான் கம்ப்யூட்டர்கள் பயப்பட வேண்டும். சுத்தமாக மின் இணைப்பு துண்டாவதை Blackout எனலாம். எலக்ட்ரோமேக்னடிக் அல்லது ரேடியோ அலை அல்லது வேறு ஏதாவது சிக்னலால் மின் இணைப்பில் இரைச்சல்கள் போன்றவை கலந்து விடலாம். இதை Line Noises என அழைக்கின்றனர். மிகக் குறைந்த நேரத்தில் ஏற்புடைய அளவை விட மிகக் குறைந்த அளவுடன் கூடிய வோல்டேஜ் இதனால் கிடைக்கும்.

பவர் கண்டிஷனிங்:
மின்சாரம் எப்போதும் சீராக வரும் என்று சொல்ல முடியாது. ஏற்ற, இறக்கத்துடன், இரைச்சல் போன்றவற்றை சுமந்து கொண்டுதான் மின்சாரம் நமக்குக் கிடைக்கிறது. Spikes, Surges, Brownouts, Blackouts, Noise என்பவை எல்லா சாதனங்களுக்கும், குறிப்பாக கம்ப்யூட்டர்களுக்கு கேடு விளைவிப்பவை. இவை இல்லாமல் சீரான மின்சாரத்தை வழங்க சில சாதனங்கள் உள்ளன. அவை கொடுக்கிற பாதுகாப்பை Power Conditioning அதாவது மின்சாரத்தை நிலைப்படுத்துதல் எனக் குறிப்பிடுகின்றனர்.

பவர் கண்டிஷனிங் செய்ய என்ன தேவை?
பவர் கண்டிஷனிங் செய்திட பல சாதனங்கள் நமக்குக் கிடைக்கின்றன. இவை Surge Supressors, Spike Busters, Isolation Transformers, Servo Stabiliser, Constant Voltage Transformers or Uninterruptible Power Supply System என அழைக்கின்றனர். நாம் பயன்படுத்தும் சாதனத்திற்கேற்பவும், நமக்கு மின்சாரம் எப்படி வழங்கப்படுகிறது என்பதற் கேற்பவும் தேவையான சாதனத்தை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

எந்த சாதனம் சிறந்தது?
மேற்படி சாதனங்களுள் சிறந்தது யுபிஎஸ் என்ற Uninterruptable Power Supply சாதனமே. ஸ்பைக், சர்ஜ், பிரவுன்அவுட், பிளாக்அவுட் போன்றவற்றை கையாளும் திறன்பெற்றது இந்த யு.பி.எஸ். ஆகும்.

மின்சாரம் தடைபடும் பொழுது எப்படி யுபிஎஸ்ஸால் மின்சாரத்தை வழங்க முடியும்?
நல்ல கேள்வி. யு.பி.எஸ்.ஸில் பேட்டரி உண்டு. அத்துடன் பேட்டரி சார்ஜர் மற்றும் இன்வெர்ட்டர் ஆகியவையும் யு.பி.எஸ். ஸில் உண்டு. பேட்டரியில் இருந்து வெளியாகிற Direct Current மின்சாரத்தை கம்ப்யூட்டருக்குத் தேவையான Alternating Current மின்சாரமாக மாற்றுகிற வேலையை இன்வெர்ட்டர் செய்கிறது. வழக்கமான மின் இணைப்பு தடைப்பட்டவுடன்,பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர் மூலம் இதனால் கம்ப்யூட்டருக்கு மின்சாரம் கிடைக்கிறது.

பேட்டரி தனது சக்தியை இழந்தால் என்ன செய்ய?
மின் இணைப்பு துண்டானவுடன், கம்ப்யூட்டருக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் பொறுப்பு பேட்டரியின் மேல் விழுகிறது. மின்சக்தியைத் தரத் தொடங்கும் பேட்டரி சிறிது சிறிதாக தனது மின்சக்தியை இழந்து கொண்டிருக்கும். இந்த நேரத்தில் வழக்கமான மின்சாரம் வந்துவிட்டால் கவலையில்லை. யுபிஎஸ்ஸில் உள்ள பேட்டரி சார்ஜர், பேட்டரியை சார்ஜ் செய்ய ஆரம்பித்து விடும்.
மின் இணைப்பு துண்டாகி, பேட்டரியினால் கம்ப்யூட்டர் இயங்கி கொண்டிருக்கிறது. வழக்கமான மின் இணைப்பு இன்னும் வரவில்லை என வைத்துக் கொள்வோம். குறிப்பிட்ட அளவுக்கும் கீழ் பேட்டரியின் சக்தி இறங்கி விட்டால், பலத்த ஒலியை எழுப்பி உங்களை யுபிஎஸ் எச்சரிக்கும். அப்போது கம்ப்யூட்டரை ஆப் செய்யுங்கள். யுபிஎஸ்ஸையும் ஆப் செய்யுங்கள்.

எவ்வளவு நேரம் யுபிஎஸ்ஸால் மின் இணைப்பு துண்டான சூழ்நிலையில் தாக்குப்பிடிக்க முடியும்?
அது உங்களது யுபிஎஸ்ஸின் பேக்கப் நேரத்தைப் பொறுத்தது. 5 நிமிட பேக்கப் யு.பி.எஸ்.ஸால், மின்சாரம் துண்டான பின்பு 5 நிமிடங்கள் தாக்கு பிடிக்க முடியும். அதிக நேரம் பேக்கப் கொண்ட யுபிஎஸ்என்றால் அதன் விலை சற்று கூடுதலாக இருக்கும். பேட்டரியும் பெரியதாக இருக்கும்.

பேட்டரி நேரம் போக யுபிஎஸ்ஸில் வேறு ஏதாவது கவனிக்க வேண்டிய விஷயம் உள்ளதா?
எவ்வளவு Kilo Volt Ampere திறன் கொண்ட யுபிஎஸ் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு கம்ப்யூட்டருக்கு 0.5 kva யுபிஎஸ் போதும். பல கம்ப்யூட்டர்களை யுபிஎஸ்ஸில் இணைப்பதாக இருந்தால் அதிக கேவிஏ கொண்ட யுபிஎஸ்ஸை வாங்க வேண்டும்.

என்ன பேட்டரியை பயன்படுத்துகிறார்கள்?
கார்களுக்கு பயன்படுத்துகிற பேட்டரி, லெட்-ஆசிட் பேட்டரி, நிக்கல்-காட்மியம் மற்றும் மூடப்பட்டு பராமரிப்பு தேவையற்ற பேட்டரி எனப் பல வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான சிறு யுபிஎஸ்களில் SMF(Sealed Maintenace Free) பேட்டரிகளே பயன்படுத்தப்படுகின்றன. 5 முதல் 7 வருடங்கள் வரை இவை உழைக்கும்.

யு.பி.எஸ்.ஸில் பிரிவுகள் உண்டா?
Online, Offline or Line interactive என மூன்று வித யுபிஎஸ்கள் கிடைக்கின்றன. மின் இலாகா வழங்கும் மின்சாரம் நேரடியாக கம்ப்யூட்டருக்கு ஆஃப் லைன் யுபிஎஸ்ஸில் வழங்கப்படுகிறது. மின்சாரம் தடைப்பட்டால் மட்டுமே பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர் மூலம் கம்ப்யூட்டருக்கு சீரான மின்சாரம் செல்லும். மின் இலாகா வழங்கும் மின்சாரம் கிடைத்துக் கொண்டிருந்தாலும், ஆன் லைன் யுபிஎஸ் எப்பொழுதுமே பேட்டரி மற்றும் இன்வெர்ட்டரை சார்ந்தே உள்ளது. இவை வழங்குற மின்சாரம் மட்டுமே கம்ப்யூட்டருக்கு அனுப்படும். Ferroresonat Transformer கொண்ட இன்டெராக்டிவ் யுபிஎஸ் சீரான வோல்டேஜை கம்ப்யூட்டருக்கு வழங்கும்.

எது மலிவானது?
ஆஃப்லைன் யுபிஎஸ்தான் மலிவானது. ஆன்லைன் யுபிஎஸ்ஸின் விலை சற்று கூடுதல். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட விலையில் இன்டராக்டிவ் யுபிஎஸ் கிடைக்கும்.

பிரிண்டரை யுபிஎஸ்ஸில் இணைக்கலாமா?
யு.பி.எஸ் ஸின் திறன் மற்றும் இணைக்கிற பிரின்டரைப் பொறுத்து இதற்கான விடை உள்ளது. பொதுவாக லேசர் பிரின்டரை யு.பி.எஸ்.ஸில் இணைக்கக் கூடாது. மற்ற பிரின்டர்களை இணைக்கலாம். ஆனால் உங்களிடம் அதிக கே.வி.ஏ. கொண்ட யுபிஎஸ் இருக்க வேண்டும்.

விண்டோஸ் 7 சிஸ்டர் – வரையறை மாற்ற

ங்கள் கம்ப்யூட்டர் நீங்கள் மட்டு மின்றி, பலரும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதா? இதனால் மற்றவர்கள் ஒரு சில புரோகிராம்களை மட்டுமே பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? சில புரோகிராம்களை அவர்கள் திறந்து இயக்கக் கூடாது எனத் திட்டமிடுகிறீர்களா? விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான வழிகளைத் தருகிறது. கீழ்க்காணும் வழிமுறை களைக் கையாண்டால், குறிப்பிட்ட புரோகிராம் களை மட்டுமே, மற்றவர்கள் கையாளும் வகையில் அமைக்கலாம். (உங்களிடம் இருப்பது விண்டோஸ் 7 ஹோம் பதிப்பு என்றால், இதனைச் செயல்படுத்த முடியாது.)
விண்டோஸ் ஸ்டார்ட் மெனு செல்லுங்கள். அங்கு “gpedit.msc” என டைப் செய்திடவும். பின்னர் “Enter” அழுத்துங்கள். இங்கு கிடைக்கும் User Configuration பட்டியில் “Administrative Templates” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது ஒரு புதிய பட்டியல் கிடைக்கும். இதில் “System” என்ற போல்டரில் கிளிக் செய்திடவும்.
இனி வலது பக்கம் இருக்கும் பிரிவில், கீழாகச் சென்று “Run only specified Windows applications” என்பதனத் தேர்ந்தெடுக்கவும். இங்கு “Enabled” என்று உள்ள ரேடியோ பட்டனில் செக் செய்திடவும். அடுத்து ஆப்ஷன் தலைப்பில் உள்ள “Show” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
இப்போது “Show” டயலாக் பாக்ஸ் கிடைக்கும். மற்ற பயனாளர்களுக்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க, ஒவ்வொரு வரியிலும் அப்ளிகேஷன் பெயர் களை அமைத்து, பின்னர் “OK” பட்டனைக் கிளிக் செய்திடவும். எடுத்துக்காட்டாக, ஒருவருக்கு பயர்பாக்ஸ் பிரவுசர் இயக்கும் அனுமதி வழங்க, ஒரு வரியில் FireFox.exe என எழுதவும். பிற பயனாளர்கள் இது போல அனுமதி வழங்கப்படாத புரோகிராம்களை இயக்க முற்படுகையில் இந்த புரோகிராம் இயங்க தடை அமைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி கிடைக்கும். பாதுகாப்பினை நாடும் உங்கள் விருப்பமும் நிறைவேறும்.

ஸ்டார்ட் மெனுவில் உள்ள கேம்ஸ் நீக்க
உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்யப்படுகையில், இதனுடன் வரும் சில விளையாட்டுக்கள், ஸ்டார்ட் மெனுவில் சேர்க்கப்பட்டு, மாறா நிலையில் இருக்கும். இவை தேவைப் படாதவர்கள், “இது எதற்கு ஸ்டார்ட் மெனுவில்?’ என்று கவலைப்படுவார்கள். கேம்ஸ் வேண்டுமென்றால், ஆல் புரோகிராம்ஸ் சென்று, தேவையானதைத் தேர்ந்தெடுத்து இயக்கலாமே! என்று எண்ணுவார்கள். எனவே ஸ்டார்ட் மெனுவில் இருந்து இவற்றை நீக்கும் வழிகளை இங்கு காணலாம்.
ஸ்டார்ட் மெனு சென்று சர்ச் பாக்ஸில் %AllUsersProfile%\Microsoft\Windows\Start Menu\ என டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது ஸ்டார்ட் மெனுவில் உள்ளவை லோட் செய்யப்படும். இந்த இடத்தில் தான், விண்டோஸ் 7 அனைத்து பயனாளர்களுக்குமான புரோகிராம்களின் ஷார்ட்கட் அமைப்பினைப் பதிந்து வைக்கிறது. விண்டோஸ் 7 உங்களிடம் இந்த ஷார்ட்கட் கீகளை ஒருவருக்கா அல்லது அனைத்து பயனாளர்களுக்கும் வைத்துக் கொள்ளவா? என்று கேட்கும். விண்டோஸ் கேம்ஸ்களுக்கான ஷார்ட்கட் அனைவருக்குமாக வைக்கப்பட்டிருக்கும். பின்னர் என்டர் தட்டியவுடன், விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும். இதில் “Programs” என்ற போல்டரில் டபுள் கிளிக் செய்திடவும். “All Programs” என்பதன் கீழ் உள்ள அனைத்து புரோகிராம்களும் பட்டியலிடப்படும். இதில் “Games” என்ற போல்டருக்குச் செல்லவும். அதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் “Cut” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், இந்த போல்டரை டெஸ்க்டாப் அல்லது டெஸ்க்டாப் உள்ளாக ஏதேனும் ஒரு போல்டருக்குள் வைக்கவும். இனி கேம்ஸ் போல்டர் விண்டோஸ் 7 ஸ்டார்ட் மெனுவில் இனிமேல் கிடைக்காது.

விண்டோஸ் 7 யூசர் படம் மாற்ற
விண்டோஸ் இயக்கம் தொடங்கியவுடன், அதில் உள்ள பயனாளர்களின் அக்கவுண்ட் காட்டப்பட்டு அவர்களுக் கான படங்களும் தோன்றும். சிலர் இதில் தங்களின் போட்டோக்களை இணைத்திருப்பார்கள். சிலர் எதுவும் இல்லாமல் வைத்திருப்பார்கள். ஒரு சிலர் தங்களுக்குப் பிடித்த வேறு படங்களை அமைத்திருப்பார்கள்.
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் யூசர் அக்கவுண்ட்ஸ் பிரிவில் சற்று நேரம் இயங்கினால், இதில் என்ன என்ன மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று அறியலாம். அதில் ஒன்று, கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்களுக்கான அக்கவுண்ட்டில் காட்டப்படும் படங்களை மாற்றுவது. இதனை எப்படி மேற்கொள்வது என்று பார்க்கலாம்.
ஸ்டார்ட் மெனு சென்று, சர்ச் பீல்டில் கிளிக் செய்து அதில் “User Accounts” என டைப் செய்து என்டர் தட்டவும். இந்த தேடலுக்கான முடிவுகள் கிடைக்கும் பட்டியலில், “manage another account” என ஒரு லிங்க் கிடைக்கும். இதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது புதிய டயலாக் திரை காட்டப்படும். இது கண்ட்ரோல் பேனலில் எழுந்து வரும். இதில் எந்த யூசர் அக்கவுண்ட்டிற்கு படத்தினை மாற்ற வேண்டுமோ, அந்த அக்கவுண்ட்டில் டபுள் கிளிக் செய்திடவும். அடுத்து, அக்கவுண்ட் எடிட் செய்வதற்கான வழி காட்டப்படும். இதில் Change the picture என்பதில் கிளிக் செய்திடவும். இனி, இன்னொரு புதிய டயலாக் திரை காட்டப்படும். இதில் விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் வரும் மாறா நிலையில் உள்ள படங்கள் காட்டப்படும். இதிலிருந்து ஒரு படத்தினைத் தேர்ந் தெடுக்கலாம். அல்லது பிரவுஸ் செய்து நீங்கள் விரும்பும் படத்தினை, அது வைக்கப்பட்டுள்ள போல்டரிலிருந்து தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுத்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி மீண்டும் விண்டோஸ் சிஸ்டத்தை இயக்கினால், மாற்றப்பட்ட படம் அதற்கான யூசர் அக்கவுண்ட்டுடன் காட்டப்படும்.

தோற்றமும் வண்ணமும் மாற்ற
விண்டோஸ் 7 சிஸ்டத்தில், விண்டோஸ் காட்டப்படும் காட்சியின் தன்மையையும், வண்ணங்களையும் எப்படி மாற்றலாம் என்பதைக் காணலாம். குறிப்பாக டாஸ்க் பார், ஸ்டார்ட் மெனு, பாப் அப் விண்டோஸ் இவற்றினை அழகாககவும், கண்களைக் கவர்ந்திடும் வகையில், நாம் விரும்பும் வழியில் வைத்திருக்கவே நாம் விரும்புவோம். அந்த மாற்றங்களை மேற்கொள்வது எப்படி எனக் காணலாம்.
விண்டோஸ் வண்ணங்கள் மற்றும் தோற்றத்தினை மாற்ற விரும்பினால், விண்டோஸ் 7 ஸ்டார்ட்டர் மற்றும் ஹோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிப்புகளில், முதலில் கண்ட்ரோல் பேனல் திறந்து அதில் உள்ள display ஐகானில் கிளிக் செய்திட வேண்டும். இனி, இடது புறம், வண்ணங்கள் அடங்கிய பிரிவிற்கான லிங்க் கிடைக்கும். இதில் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் விண்டோவில் advanced பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு விண்டோஸ் அளவு, அதற்கான ஐகான், வண்ணம், வடிவம் (size, icon, font, color and format) ஆகியவற்றை மாற்றுவதற்கான வழிகள் தரப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம். நம் விருப்பப்படி அனைத்தையும் தேர்ந்தெடுக்கலாம். அனைத்து மாற்றங்களையும் மேற்கொண்ட பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், அல்டிமேட் புரபஷனல் மற்றும் என்டர்பிரைஸ் பதிப்பு எனில், டெஸ்க் டாப்பில் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் மெனுவில், personalize என்பதில் கிளிக் செய்திடவும். இதில் விண்டோ கலர் (window color) என்பதில் கிளிக் செய்தால் புதிய விண்டோ காட்டப்படும். இதில் விண்டோவின் வண்ணம், ஒளி ஊடுறுவும் வகையினை (transparency) மாற்றி அமைப்பது, வண்ணத்தின் அழுத்த அளவை மாற்றுவது, வண்ணங்களை கலந்து அமைப்பது போன்ற வற்றிற்கான வசதிகளைக் காணலாம். இவற்றை மாற்றிய பின்னர், advanced என்பதனைத் தேர்ந்தெடுத்தால், எழுத்து வகை, ஐகான் அளவு, ஐகான் வடிவம் ஆகியவற்றை மாற்றுவதற்கான லிங்க்ஸ் கிடைக்கும். அனைத்தையும் விருப்பம் போல் மாற்றிவிட்டு, save changes என்பதில் கிளிக் செய்து வெளியே றினால், மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் அனைத்தும் அமல்படுத்தப்பட்டிருப் பதனைக் காணலாம்.

சிவனை வழிபட நல்ல நேரம் எது?

பிரதோஷ காலம் என்பது என்ன? சிவ தரிசனம் செய்ய, அது ஏன் விசேஷமாகச் சொல்லப்படுகிறது?
சிவனை வழிபட ஏற்ற காலம் மாலை நேரம்; அதிலும் சிறந்தது சோமவாரம்; (திங்கட்கிழமை) அதிலும் சிறந்தது மாத சிவராத்திரி, அதிலும் சிறந்தது பிரதோஷ காலம். பிரதோஷ காலத்தில் சிவதரிசனம் செய்பவர்கள், எல்லா தேவர்களையும் தரிசித்த பலனையும் பெறுவர்.
பிரதோஷ காலத்தில், சகல தேவர்களும், சிவதரிசனம் செய்ய வந்து விடுகின்றனர். அதனால், நம் வீடுகளில் தெய்வ வழிபாடு பிரதோஷ காலத்தில் அவசியமில்லை.
பிரதோஷ காலங்களில் சிவதரிசனம் செய்வதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் கிடைக்கும்; சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்; சோமாஸ் கந்த மூர்த்தியை தரிசிப்பதால், இந்திரனுக்கு சமமான புகழ் கிட்டும்; பிரதோஷ காலத்தில் சிவாலயத்தில் செய்யப்படும் எந்த கைங்கர்யமும் பலவாகப் பெருகி, அளவற்ற பலனை கொடுக்கும்.
பிரதோஷ காலத்தில் சிவன் கோவில் வழியாகப் போனான் ஒருவன். போகும்போது வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டே போனான். வெற்றிலை பாக்கு போட்ட பிறகு, விரலில் கொஞ்சம் சுண்ணாம்பு இருந்தது.
அதை வழியிலிருந்த சிவன் கோவில் சுவரில் தடவி விட்டுப் போனான். ஆனால், அதுவே பெரும் புண்ணியமாகி விட்டது.
இவன் தடவிய சுண்ணாம்பு, மதில் சுவரில் இருந்த ஒரு சிறிய பள்ளத்தை அடைத்து விட்டது. உடனே, சிவன் கோவிலில், கைங்கரியம் செய்த புண்ணியம் இவனுக்கு சேர்ந்து விட்டது.
இப்படியாக சிவ கைங்கர்யம், வழிபாடு எல்லாவற்றுக்குமே புண்ணியம் சொல்லப்படுகிறது. சிவன் கோவிலில், “சோம சூத்ர பிரதட்சணம்…’ என்று ஒன்று உண்டு. இது, கொஞ்சம் சிக்கலானது. புரிந்து கொள்வது கூட சிரமம்; புரிந்து செய்தால் புண்ணியம்.
பிரதோஷ காலத்தில் சிவ தரிசனம் செய்வது புண்ணியம். ¬முன் மண்டபத்தில் உள்ள நந்தியின் கொம்புகள் வழியாக சிவலிங்க தரிசனம் செய்ய வேண்டும் என்பது சாஸ்திரம்.
சிரமப்பட்டாவது பிரதோஷ காலத்தில், சிவதரிசனம் செய்தால் புண்ணியம் கிடைக்கும்.

துக்கம் தொடாதவனே யோகி

கடைசியாக முடிவுரைக்கும் நான் காஞ்சிப் பெரியவர்களின் உதவியை நாடுகிறேன்.

`என்னது! பெரியவர்கள் உரையைப் போட்டே பக்கத்தை நிரப்புகிறாயா? எழுதுவதற்குச் சோம்பேறித்தனமா?’ என்று கேட்கிறீர்களா?

இல்லை. நான் எதைச் சொல்ல விரும்புகிறேனோ, அதைப் பெரியவர்கள் முன்பே சொல்லியிருக்கிறார்கள்.

அதையே என்னுடைய பாஷையில், பேத்து மாத்துப் பண்ணுவதை விட, அப்படியே கொடுத்து விடுவது மரியாதை என்பதால் கொடுக்கிறேன்.

பெரியவர்களின் அரிய விஷயங்களைத் தேடி அலைய முடியாதவர்கள், இதன் மூலம் பயனடையட்டும் என்று நான் கருதுகிறேன்.

இப்போது `அர்த்தமுள்ள இந்து மதம்’ வரிசை, ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டது.

பெரியவர்களின் அற்புதக் கருத்துக்களை இதன் மூலம் பரப்புவது என் ஆசை.

இந்த கருவூலங்களைப் பரவலாக இளைஞர்களிடம் விநியோகிப்பது என் நோக்கம்.

இவற்றைப் படிப்பதன் மூலம், பெரியவர்கள் உரைகளை இளைஞர்கள் தேடிப் படிப்பார்கள் என்பது உறுதி.

துக்கத்தைக் குறைப்பதற்கும், ஒரு யோகத்தைக் கடைப்பிடிப்பதற்கும். அவர் சொன்ன வழிகளை மட்டுமே இதில் நான் எடுத்துத் தருகிறேன்.

அவர்கள் சொல்கிறார்கள்:

`நாம் எல்லோரும் பரம்பொருளைப் பற்றிய உண்மையான ஞானத்தைப் பெற முயல வேண்டும்.

இந்த ஞானம் என்பது என்ன?

பரம்பொருளைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்பதுதான்.

அந்த ஒன்று தான் இத்தனையாகவும் தோன்றுகிறது. இத்தனையான தோற்றங்களிலேயே மனதைச் செலுத்திக் கொண்டிருந்தால், சஞ்சலம், ஏற்றத்தாழ்வு இவற்றால் உண்டாகும் கஷ்டங்கள் எல்லாம் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும்.

இத்தனை தோற்றத்திலிருந்தும் மனதைத் திருப்பி, இவற்றுக்குக் காரணமான ஒன்றையே அறியத் தொடங்கினால், எண்ணமும் பலவாறாக ஓடி அவதிப்படாமல் சஞ்சலங்கள் ஓயும்.

ஓடுற வஸ்து என்று பின் சலிக்கவோ, ஏற்றத் தாழ்வுக்கோ இடம் ஏது? அந்த நிலையிலேயே நித்திய சுகத்தைப் பெறலாம். அந்த நிலையைத்தான் ஞானம் என்கிறோம்.’

`உலக வாழ்வில்கூட, சுகம் வருவது போலிருக்கிறது. ஆனால், அது நிச்சயமாக நிலைத்து இருப்பதில்லை.

வெளியிலிருந்து வருகிற சுகத்தை, நாம் எப்படிச் சாசுவதமாக்கிக் கொள்ள முடியும்? வெளியிலிருந்து வருவது நமக்கு ஸ்வாதீனப் படாமல், நம் கைவிட்டு ஓடியும் விடும். அப்போது, அதனால் கிடைக்கிற சுகமும் போகத்தான் செய்யும்.

இப்படித்தான் அந்த நிமிஷம் சுகமாக இருப்பது அடுத்த நிமிஷமே மறைகிறது. அடர்ந்த மரத்தின் கிளைகள் ஆடுகிறபோது, இடுக்கு வழியாக கொஞ்சம் வெளிச்சம் வந்து பாய்ந்து விட்டு, அடுத்த நிமிஷமே நிழல் வந்து மூடிக்கொள்வது போலத்தான், உலகத்தின் துன்பத்துக்கு நடுவில் கொஞ்சம் சுகம் தலையை எட்டிப் பார்த்து விட்டு ஓடி விடுகிறது.

நிரந்தர சுகம் என்பது, உலகத்துக்கு காரணமான ஒன்றை அறிவதுதான்.

உலக வாழ்வில் சகல மனிதர்களுக்கும், அளவில்லாத கஷ்டங்கள் உண்டாகத்தான் செய்யும். பணக்காரன், பெரிய பதவியில் இருப்பவன் கஷ்டமில்லாமல் இருப்பதாக மற்றவர்கள் நினைக்கலாம். அப்படி நினைத்துத் தாங்களும் அவர்களைப் போல பணமும் பதவியும் பெறப் பாடுபடலாம்.

ஆனால், பணக்காரனை பதவியில் உள்ளவனைக் கேட்டால் தெரியும். அவனுக்கு எத்தனை கஷ்டங்களென்று.

நாம் திண்ணையில் இருக்கிறோம். விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடோ, சுளுக்காவதோடோ போய் விடும்.

பணக்காரனும், பதவிக்காரனும் மாடி மேல் இருக்கிறார்கள். எனவே, அவர்கள் விழுந்தால் எலும்பெல்லாம் முறிந்து போகும். பிராணாபத்து ஆகும்.

ஒருவனுக்குப் பணமும், பதவியும் உள்ளபோதே அதனால் உண்டாகிற சிறிது சுகத்தோடு, தன் பணம் பதவி போகக் கூடாது என்ற கவலை, சுகத்தை விட அதிகமாக இருக்கிறது.

இதனால் தான் உலகத்தில் எவனுமே தான் சந்தோஷமாக இருப்பதாகச் சொல்லக் காணோம்! ஒவ்வொருவனும் தானே மகா புத்திசாலி, தானே ரொம்ப அழகு என்று நினைத்துக் கொண்டிருப்பது போல, அதிகம் துக்கமுள்ளவனும் தானே என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்.

துக்கம் நம் உடன்பிறப்பு, நம் பூர்வ கர்மவினையின் பயனாக இந்த துக்கங்களுக்கு, நாம் முன்னமேயே விதை போட்டிருக்கிறோம். இதிலிருந்து தப்ப வழியில்லை.

ஆனால், கர்மத்தினால் ஏற்படும் கஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டு, சாந்தமாக இருக்க வழி உண்டு. புதிதாகக் கர்ம மூட்டையைப் பெருக்கிக் கொண்டு எதிர்காலத்தில் கஷ்டத்தை அதிகமாக்கிக் கொள்ளாமலிருக்க வழி உண்டு. முதலில் சொன்ன ஞானம் அந்த வழி.

சித்தப்பிரமை பிடித்த ஜடமாகி விட்டால் கஷ்டம் தெரிவதில்லை. பைத்தியத்தின் கஷ்டம் வேரூன்றி நிற்பதில்லை. ஆனால், சித்தப்பிரமையில் நித்திய ஆனந்தமும் இல்லை. தூக்கத்தில் துக்கமுமில்லை. ஆனால், தூக்கத்தில் சுகமாக இருக்கிறோமென்று அறிவும் இல்லை.

ஞானிதான் எப்போதும் விழிப்பிலேயே இருக்கிறான். அவனது தேகத்தில் சிரமங்களே இராது என்பதில்லை. ஆனால், அவனுடைய மனத்தில் கிலேசமே இராது. வெளியே இருக்கிற சிரமம் அவன் உள்ளே பாதிப்பதில்லை.

துக்கம் என்பதே தன்னைத் தொடாமல் எவன் ஒருவன் இருக்கிறானோ, அவன் யோகி. பாபம், அதாவது மனத்தின் அசுத்தந்தான் துக்கத்திற்குக் காரணம்.

மனதில் உள்ள அசுத்தங்கள் எல்லாம் நீங்கினால், அது தானாகவே பரமாத்மாவின் பக்கம் திரும்பி விடும். ஒழுங்கினாலும், கட்டுப்பாட்டினாலும் தான் மனத்தின் அசுத்தங்களை அகற்ற முடியும்.

இந்தச் சரீரக் கூட்டிலிருந்து ஆத்மா பிரிந்து போவதற்கு முன்பு, சரியான கல்வியின் மூலமும் அப்பியாசத்தின் மூலமும் கட்டுப்பட்டு, ஒழுங்காக வாழ்ந்து அசுத்தங்களைப் போக்கிக் கொண்டு விட வேண்டும். அப்படி செய்து ஜயித்தால், கடைசியில் தேக வியோகமே பரமாத்மாவுடன் சேர்ந்து விடுகிற யோகமாகி விடும்.

யோகிக்கு அடையாளம் என்ன? பரமாத்மாவைச் சேர்ந்து விட்ட அவனது மனசு, வேறு எதையுமே சேர்த்துக் கொள்ள நினைக்காது.

மனசு அதற்கப்புறம் ஓடவே கூடாது. அப்படி ஆகிவிட்டால் தான், அதற்கப்புறம் இப்போது இந்த மனசினால் நமக்கு உண்டாகி இருக்கிற அத்தனை தொந்தரவுகளும் தொலைந்து போகும். அந்த நிலையைப் பெறுவதற்கு எதைச் சேர வேண்டும்? மனது எதிலிருந்து உற்பத்தியாயிற்றோ அதைத்தான் சேர வேண்டும்.

மனது, அதன் மூலத்தில் சேர்ந்து விட்டால் அங்கே அப்படியே கரைந்து போய்விடும்; அப்புறம் ஓடாது. அதுவே சகல தொந்தரவுகளிலிருந்தும் விடுபட்ட நிலை.

நதி இருக்கிறது. அதன் மூலம் உண்டான இடம் என்ன? சமுத்திரம். சமுத்திர ஜலம்தான் ஆவியாகப் போய், வேறொரு இடத்திலிருந்து நதியாக ரூபம் எடுக்கிறது. அந்த ஆறு ஓடாத ஓட்டமில்லை. இப்படி ஓடி ஓடிக் கடைசியில், தன் மூலமான சமுத்திரத்தில் வந்து விழுகிறது. அப்புறம்? அதற்குத் தனி ரூபம் உண்டா? ஓட்டம் உண்டா? ஒன்றும் இல்லை.

இப்படி நதிகளுக்கெல்லாம் மூலமாக இருந்து, முடிவில் அவற்றைத் தன்னிலே சேர்ந்துக் கொள்கிற சமுத்திரம் மாதிரி, தம் மக்களை எல்லாம் முடிவான சேர்க்கையில், யோகத்தில் தன்னோடு கரைத்துக் கொள்கிற ஒன்று இருக்கிறதா என்றால் இருக்கிறது; சமாதி நிலையில் ஞானிகள், யோகிகள் தங்கள் தனி மனசைக் கரைத்து விட்டு, வெளிப்பிரக்ஞையே இல்லாமல் இருக்கும் போது, அந்த வஸ்துவை விட்டு விட்ட மாதிரி நமக்குத் தோன்றினால் கூட உண்மையில் இது நீங்காத சேர்க்கைதான். உள்ளூர அந்தச் சேர்க்கையின் அனுபவமேதான்.

அவர் வெளிப் பிரக்ஞையோடு இருப்பது மாதிரி நமக்குத் தோன்றுகிற போது கூட, அதை அடைய வேண்டும் என்ற ஆசை எதுவுமே அவருக்கு இல்லை. ஏதாவது ஒன்று தனக்கு வேண்டுமென்று, கொஞ்சம் கொஞ்சம் ஒருவனுக்குத் தோன்றி விட்டால் கூட, அவன் யோகியில்லை. அவன் ஸ்வாமியைச் சேரவில்லை என்று அர்த்தம்.

யோகியின் அடையாளத்தை வேறு விதமாகவும் சொல்லலாம். அவனுடைய சித்தம் பரமாத்மாவிடமே நிலைத்து விட்டது என்றால், அதற்கப்புறம் எந்தப் பெரிய துக்கம் வந்தாலும் அது துளி கூட ஆடக் கூடாது. அசையக்கூடாது. அழக்கூடாது. இப்படியில்லாமல் சித்தம் கொஞ்சம் சலித்து விட்டால் கூட, அவன் பரமாத்மாவை அடையவில்லை என்றே அர்த்தம்.

யோகிக்கு அநேக துக்கம் வரும்; அதாவது ஊர் உலகத்துக் கெல்லாம் அது துக்கமாகத் தோன்றும். ஆனால், அவனுக்குத் துக்கம் லவலேசமும் தெரியாது. பட்ட கட்டை மாதிரி இருப்பான். பட்ட கட்டை என்பது கூடச் சரியல்ல. அது உணர்ச்சியே இல்லாத நிலையல்லவா? யோகி ஒருத்தன்தான், பூரண பிரக்ஞையோடு இருக்கிறவன். அவன் ஸ்தானந்தனாக இருக்கிறவன். அது வேண்டும், இது வேண்டும் என்பதே இல்லாமல் சதா ஆனந்தமாக ஒருவன் உட்கார்ந்து கொண்டிருந்துவிட்டால் அது தான் யோகம்.

அவனுக்கு ஸ்வபாவமாகவே கருணை மாத்திரம் சுரந்து கொண்டிருக்கும், யாரிடத்திலும் கோபம் வெறுப்பு வராது. இன்னொரு பிராணிக்குத் தன்னால் இம்மியும் ஹிம்சை வரக்கூடாது என்கிற எண்ணம் மட்டுமே இருக்கும்.

வெளி உலகத்தின் பார்வைக்கு, அவன் என்னென்ன காரியம் செய்தாலும் அதிலெல்லாம் அவனுக்குத் `தான் செய்கிறோம்’ என்ற அகங்கார எண்ணமே இராது. சொந்தப்பற்றே இல்லாமல் பரம காருண்யம் மட்டுமே அவனுடைய காரியங்களில் இருக்கும். வெளியே பார்க்கிற காரியம் கடுமையாக இருந்தாலும் கூட, உள்ளுக்குள்ளே அதுவும் பரம காருண்யம் தவிர வேறாக இராது.

மகா யோகியான பரமேஸ்வரன் இப்படித்தான் சம்ஹாரம் செய்கிறார். நமக்கு அது கொடுமையாகத் தெரியலாம்.

ஒவ்வொரு ஜீவனும் எத்தனை பாப ஜீவனாயிருந்தாலும் சிறிது காலமாவது கர்ம கதியிலிருந்து விடுதலை அடைந்து தன்னிடம் லயித்திருப்பதற்கு அவர் சம்ஹாரம் செய்கிறார். தினமும் நமக்குத் தூக்கத்தைக் கொடுத்து, அந்த நேரத்தில் சுக துக்கங்களிலிருந்து நமக்கு விடுதலை தருகிற மாதிரி, இந்தச் சரீரம் விழுந்த பின்னும் கொஞ்ச காலம் சிரம பரிகாரம் தருகிறார்.

தினமும் தூங்கிவிட்டு மறுநாள் விழித்துக் கொண்டு பழையபடி நல்லது கெட்டதுகளில் விழுகிற மாதிரி இச் சரீரம் போய்ச் சிரம பரிகாரம் ஆனபின், இன்னொரு சரீரத்தில் விழித்துக் கொள்கிறோம். இந்த அலைச்சல், புனரபி மரணம்- கூடாது.

இந்தச் சரீரம் போனால், இன்னொரு முறை சரீரம் வரக் கூடாது. அப்படிச் செய்து கொள்ள வேண்டும். கட்டுப்பாடு, ஒழுங்கு, பரம கருணை, தபஸ், பூஜை, யக்ஞம், தானம் எல்லாம் அதற்குத்தான்.

குழந்தையாக இருக்கிற காலத்தில் இருந்தே இவற்றில் எல்லாம் பழக்கம் வேண்டும். அப்படிப் பழகினால்தான். கோடானுகோடி ஜனங்களை இந்த மாதிரி படிப்படியாக உயர்த்துவதற்கு முயன்றால்தான் எங்கேயாகிலும் ஒரு யோகி, ஒரு ஞானியாவது பூரணமாக உண்டாவார். அப்படி ஒருத்தர் உண்டாவதுதான் இத்தனை மனுஷ்ய சிருஷ்டிக்கும் பலன்.’

ஆகவே,

நிம்மதியற்ற மனிதனாக நீங்கள் இல்லாமல் ஒரு யோகியாக, ஞானியாக மாறுங்கள்.

கோடிக்கணக்கான மக்களைப் பழக்குவதற்குக் குருவாக மாறுங்கள்.

இந்திய சமுதாயத்தை ஆனந்த மயமான சமுதாயமாக்க ஒத்துழையுங்கள்.

உள்ளத்தில் உண்மை ஒளியைக் காண்பதற்கு உலகத்திற்கு வழிகாட்டுங்கள்.