Daily Archives: பிப்ரவரி 24th, 2012

இல்லறம் இனிக்கவில்லையா?

“ஆணோ, பெண்ணோ திருமணம் முடிக்காமல் வாழும் வாழ்க்கை பாதி வாழ்க்கை தான்” – ரிச்டர்.

முழுமையான இன்பம் பெற ஒவ்வொருவரும் அவசியம் திருமணம் செய்து கொள்ள வேண் டும் என்பதை ரிச்டர் போலவே, சான்றோர் பலரும் வலியுறுத்தி உள்ளார்கள்.

ஆனால் திருமணம் முடிக்காதவர்கள் இன்பத் திற்கு ஏங்குவதுபோலவே, திருமணம் செய்தவர் களும் `இல்லற வாழ்வு இன்பம் தராதா?’ என்று ஏங்கும் நிலையில் குடும்பம் நடத்துகிறார்கள். `திருமணத்திற்குப் பிறகு என் நிம்மதியே போச்சு` என்று புலம்பும் ஆண்களும், “என்னை உன் தலையில கட்டி வச்சுட்டாங்களே?” என்று முணுமுணுக்கும் பெண்களும் ஏராளம். இவர்க ளுக்கு வாழ்க்கையே, “ஓட ஓட தூரம் கொறை யல… போகப் போக ஒண்ணும் புரியல” என்கிற கதைதான்.

இல்லற வாழ்க்கையை சிறப்பாக நடத்து கிறோமா? இல்வாழ்க்கை இனிக்காததற்கு என்ன காரணம்? என்பதை அறிய ஒரு சிறிய பரிசோதனை…

உங்களுக்குள் கருத்து வேறுபாடோ, அல்லது துணைவர் தன்னை ஏமாற்றுவதாக சந்தேகமோ எழுகிறதா?

அ). இல்லை, ஆ). ஆம்.

வாக்குவாதத்தில் ஈடுபடுகிறீர்களா?

அ). சில நேரங்களில், ஆ). நாங்கள் பேசிக் கொள்ள ஆரம்பித்தாலே வாக்குவாதம் பிறந்து விடுகிறது

துணைவருக்கு காயம் ஏற்படுகிறது, அப்போது உங்கள் மனதில் என்ன தோன்றும்?

அ). ஓ மை காட், சீக்கிரம் சரியாகி விட வேண்டும். ஆ). சின்னக் காயம் தானே, அதுக்குப்போய் உயிர் போனமாதிரி பதறுகிறீர்களே? என்பேன்.

தம்பதியரில் ஒருவர் காதலை வெளிப்படுத்தும்போது..

அ. இவர் (இவள்) நம்மீது எவ்வளவு அன்பைப் பொழிகிறார் என்று கவனிப்பேன், ஆ). யோசனையுடன் பக்கத்திலிருப்பவரை பார்த்துக் கொண்டிருப்பேன்.

விவாகரத்து எண்ணம் உங்கள் மூளையில் உதித்திருக்கிறதா?

அ). ஆமாம், எப்போதாவது தோன்றும். ஆ). ஆமாம், அவரை விவாகரத்து செய்யலாம் என்று நினைப்பேன். ஏனென்றால் இதைவிட சிறந்த வாழ்க்கை எனக்கு கிடைக்கும் என்ற எண்ணம் இருக்கிறது.

உங்கள் விடைகளில் `அ’ பதில் மிகுந்திருந்தால்…

உங்கள் இல்லற வாழ்வில் சிக்கல் இல்லை. ஆனால் இல்லறத்தை இன்னும் இனிதாக நடத்திச் செல்ல முடியும்.

செல்லச் சண்டையிடுவது உறவுகளுக்குள் பலத்தை ஏற்படுத்தும். இல்லற வாழ்க்கையில் இதை ஊடல் என்பார்கள். சின்னச்சின்ன சண்டைகளும், அதைத் தொடர்ந்து பிணக்கை மறந்து செலுத்தும் அன்புப் பொழிவும் தான் குடும்ப வாழ்க்கையை இனிக்கச் செய்கிறது. உறவாடும் பண்பு தான் ஒருவரை மற்றவர்களை விட அன்பில் உயர்த்திக்காட்டும். அதை உணர்ந்து கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் இனிமையாக உறவாட வேண்டும். பிரிவை வளர்க்கும் நெருப்பு விவாதங்களை தவிர்க்க வேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் நிச்சயம் இனிய இல்லறம் நடத்துவீர்கள்.

விடை `ஆ’வை அதிகமாக தேர்வு செய்த தம்பதியர்…

உங்கள் இல்லற வாழ்க்கை குழப்பம் நிறைந்ததாக இருக்கிறது. இருவருமே இல்லறத்தில் வெறுப்புணர்வுடன் காணப்படுகிறீர்கள். உங்கள் துணை கண்ணில் படுவதையே விரும்பா தவராக இருக்கிறீர்கள். அந்த உணர்வே உங்களை வெகு தொலைவுக்கு பிரித்து வைத்திருக்கிறது.

துணைவர் மீதான உங்கள் வெறுப்புக்கு என்ன காரணம் என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். அதுகுறித்து அவரிடம் விவாதிப்பதன் மூலம் உங்கள் பிரச்சினைக்கு நீங்களே தீர்வு காண முடியும். அது முடியாத பட்சத்தில் இருவரும் குடும்பநல ஆலோசகரை அணுகுங்கள்.

`ஆணும் பெண்ணும் உடலால் இணைவது திருமணமல்ல. உணர்ச்சிகளாலும், சிந்தனை களாலும் இணைவதே திருமணம்’ என்று’ காண்டேகர் சொல்லியதை இம்மாதிரி தம்பதிகள் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது!

நன்றி-தினத்தந்தி

அழகான கண்களுக்கு.

..  அழகான குழந்தையின் ரகசியம் இருப்பதாக கருதப்படும் குங்குமப்பூவை பயன்படுத்தி அழகான மேனியழகையும் பெறலாம். அதற்கு சில டிப்ஸ்…

>குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம். இந்த முறையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்குமப் பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணெய் கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தொடர்ந்து சில நாட்களுக்கு பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் மறைந்து விடும்.

மேலும், நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத் தருகிறது.

ஒருவரது முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகுந்த கண்கள்தான். அப்படிப்பட்ட கவர்ச்சியான கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள். உங்களுக்கு பட்டாம்பூச்சி போல படபடக்கும் அழகான இமைகள் அமைய இந்த குங்குமப்பூ கலவையை அடிக்கடி பூசி வரலாம்.

செக்ஸ் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் காயடிக்க : ரஷ்ய பார்லிமென்ட் ஒப்புதல்

சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு, ரசாயன மருந்து செலுத்தி காயடிக்க, ரஷ்ய பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது.
ஐரோப்பாவில், குறிப்பாக போலந்து, போர்ச்சுக்கல் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில், செக்ஸ் குற்றவாளிகளுக்கு காயடிக்கும் தண்டனை அளிக்கப்படுகிறது. சமீபத்தில், ஜெர்மன் நாட்டிலும், இந்த தண்டனை பரவலாக பின்பற்றப்படுகிறது. இதற்கு, ஐரோப்பிய கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ரஷ்யாவில், கடந்த 2010ம் ஆண்டில் சிறுவர்கள் அதிக அளவில் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். அதிகரித்து வரும் இந்த குற்றத்தை கட்டுப்படுத்த, சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு, ரசயான மருந்தை செலுத்தி காயடிக்க வைக்க, ரஷ்ய பார்லிமென்டின் மேல்சபை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த குற்றம் தொடர்பாக, சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் தண்டனையை குறைக்கக் கோரினாலோ, அல்லது பரோலில் செல்ல கோரிக்கை வைத்தாலோ, அவர்களை காயடித்து தண்டனையை குறைக்கவும், புதிய சட்டத் திருத்த மசோதா வழி செய்துள்ளது.ரஷ்யாவில், தற்போதைய செக்ஸ் குற்றங்களுக்கு, மன நல சிகிச்சை மற்றும் அபராதம் அளிக்கும் நடைமுறை உள்ளது. இனி, சிறுவர்களிடம் மேற்கொள்ளப்படும் செக்ஸ் குற்றங்களுக்கு, ரசாயன முறையில் காயடித்தல், ஆயுள் தண்டனை ஆகிய தண்டனைகள் வழங்கப்பட உள்ளன.

நன்றி-தினமலர்

பணத்தால் மகிழ்ச்சியை `வாங்கலாம்’!

தத்துவார்த்த ரீதியாகப் பேசுபவர்கள், `பணத்தால் பொருட்களை வாங்கலாம்… மகிழ்ச்சியை வாங்க முடியுமா?’ என்று கேட்பார்கள். ஆனால், `பணத்தால் நிச்சயம் மகிழ்ச்சியை வாங்க முடியும்’ என்று கூறி, நீண்ட கால விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள் நிபுணர்கள்.

ஒரு மனிதரை திருப்தியாக உணர வைப்பதில் பணம் ஒரு மிக முக்கியக் காரணியாகத் திகழ்கிறது என்கிறார்கள் அவர்கள். உலகம் முழுவதும் உள்ள ஒரு டஜன் கல்வி வல்லுநர்கள் பணம் குறித்து ஆராய்ந்தார்கள். அவர்கள், தாங்கள் 126 நாடுகளில் இருந்து திரட்டிய தகவல்களின் அடிப்படையில் மேற்கண்ட முடிவுக்கு வந்தனர்.

ஒருவர் எந்த அளவு செல்வம் சேர்த்திருக்கிறாரோ அந்த அளவு அவரது மகிழ்ச்சி கூடுகிறது என்கிறார்கள். செல்வம் சேரச் சேர மகிழ்ச்சி ஓர் உச்சபட்ச நிலையுடன் நின்று போகிறது என்ற பொதுவான கருத்தையும் அவர்கள் மறுக்கிறார்கள்.

ஒருவர் எவ்வளவுதான் செல்வம் வைத்திருந்தாலும், மேலும் 20 சதவீதத்துக்கு வருமானம் கூடக் கூட அவரது மகிழ்ச்சியும் அதிகரித்துக்கொண்டே போகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

“திருப்திக்கு ஓர் எல்லை இருக்கிறது என்றால், அந்த எல்லையை எட்டும் வகையில் எந்த நாடும் செழுமையாக இல்லை. மிகப் பெரும் பணக்காரர்களிடம் நாங்கள் கணக்கு எடுத்துள்ளோம். பணக்கார மனிதர்கள் தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியாக உள்ளார்கள் என்பதே உண்மை” என்று ஆய்வாளர்கள் முடிவுரையாகக் கூறுகிறார்கள்.

வந்து விட்டது `நவீன மாத்திரை’

நமக்கு உடல் உழைப்பு குறைந்து, உற்றார் உறவினரை சார்ந்து வாழத் தொடங்கிவிட்டாலே பிரச்சினைதான். ஏனென்றால், `எப்போது இவரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம்’ என்று சிந்திப்பவர்கள் அதிகரித்துவிட்ட காலமிது. இது போதாதென்று வயோதிகத்துடன் சேர்த்து நோய்களாலும் பாதிக்கப்பட்டால் கேட்கவே வேண்டாம். வீட்டுப் பெரியவர்களின் நிலைமை மேலும் திண்டாட்டம் தான்.

காரணம், அன்றாட உணவு மட்டுமின்றி வேளாவேளைக்கு அந்த மாத்திரை, இந்த மாத்திரை என்று சில பல மாத்திரைகளை தவறாமல் சாப்பிட்டே ஆக வேண்டும். தவறினால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.

இத்தகைய பிரச்சினைகளால் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் நம் தாத்தா, பாட்டிகளின் வயிற்றில் பாலை வார்க்க வந்துவிட்டது `ஸ்மார்ட் பில்’ என்றழைக்கப்படும் புத்திசாலி மாத்திரை! இதற்கு ஹீலியஸ் மாத்திரை என்று பெயர்.

ஒருவர் எப்போது மாத்திரை உட்கொள்கிறார், அதன் அளவு என்ன, அடுத்த மாத்திரையை அவர் எப்போது உட்கொள்ள வேண்டும், அவருடைய இதயத்துடிப்பு மற்றும் உடல் வெப்ப அளவு என்ன என்பன போன்ற பல விவரங் களை நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் சேகரித்துக்கொடுக்கிறது இந்த புத்திசாலி மாத்திரை. அது மட்டு மல்லாமல், நோயாளி நன்றாக உறங்குகிறாரா, உடற்பயிற்சி செய்கிறாரா, இல்லையா? போன்ற கூடுதல் விவரங்களையும் கூட சேகரிக்கும் திறனுள்ளது இந்த மாத்திரை என்பது இதன் கூடுதல் விசேஷம்!

அமெரிக்காவின் `புரோட்டியஸ் பயோ மெடிக்கல்’ என்னும் நிறுவனம், அதிபுத்திசாலித்தன மான இந்த தொழில்நுட்பத்தை உலகுக்கு பரிசளித்திருக்கிறது.

அது சரி, இந்த `ஸ்மார்ட் பில்’லை பயன்படுத்துவது எப்படி?

நோய்களுக்கான மாத்திரைகளுடன் சேர்த்து, கரையும் தன்மையுள்ள மைக்ரோ சிப் அல்லது சென்சாருடைய ஒரு மாத்திரையையும் நோயாளியை உட்கொள்ள வேண்டும். மாத்திரைகளுடன் வயிற்றுக்குள் செல்லும் இந்த மைக்ரோ சிப், வயிற்றிலுள்ள அமிலங்களால் கரைக்கப்படும்போது, அதிலிருந்து உருவாகும் டிஜிட்டல் சிக்னல் கையில் அல்லது தோளில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு பட்டைக்கு அனுப்பப்படுகிறது.

வயிற்றிலிருந்து பட்டைக்கு வரும் டிஜிட்டல் சிக்னல்கள் வாசிக்கக்கூடிய விவரங்களாக டீகோட் செய்யப்படுகின்றன. பின்னர் இந்த விவரங்களை நோயாளிகளும், மருத்துவர்களும் தங்கள் கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட் போனில் டவுன்லோடு செய்துகொண்டு தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளலாம்.

பிரிட்டனில் விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த ஹீலியஸ் மாத்திரை, இதயக் கோளாறுகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு பிரத்தியேகமாக அளிக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், பிற நோயாளிகளைக் காட்டிலும் இவ்விரு வகையான நோயாளிகளும் விதவிதமான பல மாத்திரை மறக்காமல் உட்கொள்ள வேண்டியவர்கள்.

இதய மற்றும் நீரிழிவுக்கான மாத்திரைகளுடன் சேர்த்து, 5 மாத்திரைகளை உடைய அட்டையில் ஹீலியஸ் மாத்திரைகள் கிடைக்கும். அவற்றின்மேல் அரிசி அளவுடைய ஒரு சென்சார் ஒட்டப்பட்டிருக்கும்.

முக்கியமாக, 5 அல்லது அதற்கும் மேற்பட்ட வித்தியாசமான மாத்திரைகளை, மூன்று வேளைகளும் மறக்காமல் உட்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் வயதான நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வயதான நோயாளிகள், ஞாபக மறதியால் உட்கொள்ளத் தவறும் மாத்திரைகளின் மதிப்பு 400 மில்லியன் பவுண்டு (சுமார் 3ஆயிரம் கோடி) என்று கூறப்படுகிறது. இதனால் 50 சதவீதம் நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சை பலன் கிடைப்பதில்லை என்கிறது ஒரு புள்ளி விவரம்.

இத்தகைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகும் ஹீலியஸ் மாத்திரையை, வருகிற செப்டம்பர் மாதம் முதல் விற்பனை செய்ய இருக்கிறது பிரிட்டனின் லாய்டு பார்மசி நிறுவனம்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஷாட்கட் கீ தொகுப்புகள்

F1 – உதவி பெற
F3 – சர்ச் பேனல் இயக்கவும் மூடவும்
F4 – அட்ரஸ் பார் கீழ் விரிக்க
F5 – அப்போது பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தினை ரெப்ரெஷ் செய்திட; மீண்டும் புதியதாய் இறக்கம் செய்திட.
F6 அட்ரஸ் பாருக்கு போகஸ் செய்திட
F11 – முழுத் திரைப் பயன்பாட்டினை இயக்கவும், நிறுத்தவும்.
Alt + (Left Arrow) – ஹிஸ்டரியில் பின்னோக்கி செல்ல; பேக் ஸ்பேஸ் கீ செயல்பாடுதான் இது
Alt + (Right Arrow)– ஹிஸ்டரியில் முன்னோக்கி செல்ல
Ctrl + A – அனைத்தையும் தேர்ந்தெடுக்க
Ctrl + C – தேர்ந்தெடுத்ததனை காப்பி செய்திட
Ctrl + E – தேடலுக்கான பேனல் கிடைக்கும்
Ctrl + F – இணையப் பக்கத்தில் தேடலுக் கான செயல்பாடு
Ctrl + H – ஹிஸ்டரி பேனல் இயக்கவும் மூடவும்
Ctrl + I – பேவரிட்ஸ் பேனல் மூடவும் இயக்கவும்
Ctrl + L – ஒரு பைலைத் திறக்க
Ctrl + N – புதிய பிரவுசர் விண்டோ ஒன்றைத் திறக்க
Ctrl + P – பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தினை அச்சில் எடுக்க
Ctrl + R– எப்5 கீ அழுத்திக் கிடைக்கும் ரெப்ரெஷ் பயன்பாடு
Esc – ஓர் இணையப் பக்கம் கம்ப்யூட்டரில் கிடைத்துக் கொண்டி ருக்கையில், அந்த செயல்பாட்டினை நிறுத்த
Ctrl + D – அப்போது பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தினை பேவரிட்ஸ் தளப் பட்டியலில் சேர்த்திட
Doubleclick (on a word) – ஒரு சொல்லில் டபுள் கிளிக் செய்தால், அந்த சொல் தேர்ந்தெடுக்கப்படும்
Tripleclick (on a word) – ஒரு வரி முழுவதும் தேர்ந்தெடுக்க
Wheel click – மெதுவாக பக்கம் ஸ்குரோல் முறையில் இயங்கிட
Hold Ctrl + Scroll Wheel forward – இணையப் பக்க டெக்ஸ்ட்டின் எழுத்தின் அளவை அதிகரிக்க
Hold Ctrl + Scroll Wheel backward – இணையப் பக்க டெக்ஸ்ட்டின் எழுத்தின் அளவைக் குறைக்க
Click one point then hold down Shift and then click another – தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு இடங்கள் நடுவே உள்ளனவற்றைத் தேர்ந்தெடுக்க

காய்கறி மக்காச் சோள சூப்

காய்கறிகள் சாப்பிட மறுக்கும் குழந்தையாகட்டும், நோயிலிருந்து மீண்ட சத்து குறைபாடுள்ள முதியவராகட்டும், அலைச்சலால் சோர்ந்து விடும் குடும்பத்தலைவராகட் டும், ஓயாத உடல் உழைப்பால் சத்து இழக்கும் இல்லத்தரசியாகட்டும், அனைவருக்கும் தேவை இயற்கை காய்கறிகளில் உள்ள வைட்டமின்களும், தாதுப்பொருட்களும். இதை உங்களுக்கு எளிதாகத் தரவல்லது, காய்கறி மக்காச்சோள சூப்.

தேவையானவை

பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 4 பல்
காரட் – 2
நறுக்கிய பீன்ஸ் – 1/2 கப்
துருவிய கோஸ் – 1/2 கப்
பட்டாணி – 2 டேபிள்ஸ்பூன்
மக்காச்சோள முத்துக்கள் – 1/2 கப்
ஜவ்வரிசி மாவு – 1 டீஸ்பூன்
உப்பு – 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்

செய்முறை

* வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் மூன்றையும், சிறிது எண்ணெயில் வதக்கி, நைசாக அரைத்துக் கொள்ளவும்.

* பொடியாக நறுக்கிய காய்கறிகளுடன், மக்காச்சோளம், வெங்காய விழுது சேர்த்து 1/2 கப் தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். ஆனால் குழைய விடக்கூடாது.

* ஜவ்வரிசி மாவை 2 கப் தண்ணீரில் கலந்து கொழகொழவென கண்ணாடி பதத்திற்கு வரும்வரை கஞ்சியாக காய்ச்சவும்.

* அதனுடன் சர்க்கரை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.

* சூப் சற்று திக்காக இருக்க வேண்டுமானால், 1 டீஸ்பூன் மக்காச் சோள மாவை தண்ணீரில் கரைத்து, அதை சூப்புடன் கலந்து கொதிக்க விடவும்.

* சுவையான காய்கறி மக்காச்சோள சூப் தயார்.

தெய்வக் குழந்தையாக மாறும் பக்தர்கள்!

 

திருநெல்வேலி மாவட்டத்தில் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ள திருத்தலம் உவரி. இங்குள்ள சுயம்புலிங்க சுவாமி கோவில் புகழ்பெற்றது.

இங்கு வரும் பக்தர்கள் தங்கள் கஷ்டங்களை இறைவனிடம் முறையிட்டு பலன் அடைந்த பிறகு பல வழிகளில் தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.

சிலர் 41 நாட்கள் விரதம் இருந்து காவடி எடுத்து வந்து சுயம்புலிங்கத்திற்கு அபிஷேகம் பூஜைகள் செய்து வழிபடுகின்றனர்.

இன்னும் சிலர் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சுவாமியின் பெயரை ஒட்டி முதல் தலைமுடி இறக்கி முடி காணிக்கை செலுத்துகின்றனர்.

ஆடு, மாடுகள், தென்னங்கன்றுகளை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்துவதையும் காண முடிகிறது.

குடும்பத்தில் யாருக்காவது கஷ்டங்கள் வந்தால், அந்த குறிப்பிட்ட குடும்ப உறுப்பினரை சுயம்பு லிங்க சுவாமியின் குழந்தையாக கருதி, குறிப்பிட்ட காலம் வரை அவரை காப்பது சுயம்பு லிங்கத்தின் பொறுப்பு என்று நம்பிக்கையுடன் வேண்டிக் கொள்கின்றனர். இவ்வாறு நேர்ந்து கொள்வதால் அவர்களது கஷ்டங்கள் கூடிய விரைவில் நிறைவேறி விடுகிறது.

பின்பு விலைக்கிரயம் அல்லது படி பணம் என்று பெயரில் குறிப்பிட்ட தொகையை கோவிலில் செலுத்தி நேர்த்திக் கடன் செய்கின்றனர்.