Daily Archives: பிப்ரவரி 26th, 2012

முத்தம் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்கள்

காதலர்களோ, தம்பதியரோ முதலில் அவர்களின் அன்பை வெளிப்படுத்தும் அற்புத பாஷை முத்தம். முத்தத்தின் வெளிப்பாடு என்பது அன்பின் பரிமாற்றம் தான் என்றாலும், அதை கொடுக்கிறவர்களைப் பொறுத்தும், வாங்கிக் கொள்கிறவர்களைப் பொறுத்தும் மாறுபடுகிறது.

முத்தத்தில் வித்தியாசம்

ஒரு கணவன் தன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு. கணவன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்தில் பாசத்துடன், காமமும் சேர்ந்தே இருக்கும். ஆனால், காதலர்களுக்குள் இந்த முத்தம் பரிமாறிக்கொள்ளப்படும் போது இந்த அன்பு, காமத்துடன் இன்னொன்றும் வந்து சேர்கிறது. அதுதான் எதிர்பார்ப்பு. துணை அடுத்து என்ன செய்யப் போகிறான் அல்லது என்ன செய்யப் போகிறாள் என்ற எதிர்பார்ப்பு காதலர்களுக்குள் இருப்பதால் அவர்கள் பரிமாறிக்கொள்ளும் முத்தத்தில் இனம் புரியாத ஈர்ப்பு இருக்கிறது.

இப்போதெல்லாம் முத்தத்தை எப்படி கொடுத்தால் `கிக்` அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சிகளே நடத்தப்படுவதால் பல வகையிலான முத்தங்கள் தோன்றிவிட்டன. உதாரணமாக உதட்டோடு உதடு கவ்வும் `பிரெஞ்சு கிஸ்”. இந்த முத்தத்தின் போது என்னென்ன மாற்றங்கள் இருவரது உடலுக்குள்ளும் நிகழ்கின்றன என்று ஒரு ஆய்வு மேற்கொண்டார்கள்.

முத்தத்தில் வேறுபாடு

பாலுறவின்போது ஆண், பெண் இருவரும் அடையும் உச்சக்கட்டத்தை, இந்த முத்தத்தை பரிமாறிக் கொள்ளும் போதும் அடையலாம் என்பதை நிரூபித்தது, அமெரிக்காவில் நடத்தப்பட்ட அந்த ஆய்வு. அந்த ஆழமான முத்தத்தை பரிமாறும் போது, அதை பரிமாறும் ஆண்பெண் இருவரது பால் சுரப்பிகளும் தூண்டப்படுவது அப்போது தெரிய வந்தது. பிரெஞ்சு கிஸ் இதழ்களோடு நின்று விடுவதில்லை மோகத் தீ பலமாக வீசி, இருவரது உடல்களும் பின்னிப் பிணைந்து விடுகின்றன. இன்றைய இளசுகள் இந்த முத்தத்தைத்தான் துணையிடம் விரும்புகிறார்களாம்.

முத்தத்திற்கு மரியாதை

ஒவ்வொரு நாட்டினர் இடையேயும் முத்தம் வேறு வேறு வழிகளில் கையாளப்படுகிறது. பயன்படுத்தும் வழிகள் பலவாக இருந்தாலும், அந்த முத்தத்தால் கிடைக்கும் சுகப்பரவசம் எல்லாம் ஒன்றாகவே இருக்கிறது. பிற நாட்டினரைக் காட்டிலும் பிலிப்பைன்ஸ் காதலர்கள், நம்மவர்கள் காதலுக்கு மரியாதை செய்வதுபோல் முத்தத்திற்கு தனி மரியாதை கொடுக்கிறார்கள்.

அவர்களுக்குள் காதல் தோல்வி ஏற்படும்போதும் கூட, முத்தத்திற்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கிறார்கள். அதாவது, காதலியானவள் தனது உள்ளாடையையும், காதலன் அவனது உள்ளாடையையும் அவர்களுக்குள் பரிமாறிக்கொண்டு பிரிந்து விடுகிறார்கள். அதன்பின்னர், இருவரும் சந்தித்துக் கொள்வதே இல்லை. அதேநேரம், காதலி அல்லது காதலன் பற்றி எண்ணம் வரும்போதெல்லாம், அவள் அல்லது அவன் கொடுத்த உள்ளாடையை முத்தமிட்டு, தங்களது மனப்பாரத்தை இறக்கிக் கொள்கிறார்களாம்.

சர்க்கரையும் சாராயம் போன்றதே!


சர்க்கரையும் சாராயம் (ஆல்கஹால்) போன்று உடம்புக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதே. எனவே மதுபானத்தைப் போல சர்க்கரை அளவுக்கும் அரசுகள் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ராபர்ட் லஸ்டிக் தலைமையிலான குழு இவ்வாறு குரல் கொடுக்கிறது.

இவர்கள் கூறுகையில், “சர்க்கரையானது, அதிகப் பருமன், இதய நோய், புற்றுநோய், ஈரல் பாதிப்புகள் போன்ற பல்வேறு உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. எனவே சர்க்கரை விற்பனையைக் கட்டுப்படுத்தும் வகையில் புகையிலை, மதுபானம் போல இதற்கும் வரி, கட்டுப்பாடு விதிக்க வேண்டும்” என்கிறார்கள். அதேநேரம், சர்க்கரைக்கான தேவையையும், விநியோகத்தையும் குறைப்பது மலை போலக் கடுமையான விஷயம்தான் என்றும் இவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

பொதுநலத்தைக் கருத்தில் கொண்டுதான், பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை, குறிப்பிட்ட வயதுக்குக் கீழே மதுபானம் அருந்தத் தடை, பொது இடங்களில் ஆணுறை வழங்கும் எந்திரம் போன்றவற்றை அரசாங்கங்கள் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சர்க்கரை விஷயத்திலும் நடவடிக்கை எடுக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சர்க்கரையின் பல்வேறு வகைகளான, சுக்ரோஸ், பிரக்டோஸ், ஏன், குளுக்கோஸ் மற்றும் கரும்பிலிருந்து தயாரிக்கும் சர்க்கரையும் கூட புகையிலை, மதுபானம் அளவுக்குத் தீங்கு விளைவிப்பவை என்கிறார்கள்.

அமெரிக்காவில் மட்டும் மக்கள்தொகையில் சரிபாதிப் பேர் உரிய எடையை விட அதிக எடை உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் பாதிப் பேர், அளவுக்கு மிக அதிகமான எடையால் அவதிப்படுகிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு சர்க்கரை ஒரு முக்கியக் காரணமாகத் திகழ்வதாக மேற்கண்ட ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் சர்க்கரை, உடம்புக்கு அதிகமான தீங்கை ஏற்படுத்தும் என்பதை சில ஆய்வாளர்கள் ஏற்க மறுத்து வருகிறார்கள்.

பேஸ்புக்கில் இந்தியாவிற்கு இரண்டாவது இடம்

பேஸ்புக் இணைய தளத்தில், அதிக அளவில் பயனாளர்களைக் கொண்டுள்ள பட்டி யலில், அமெரிக்காவிற்கு அடுத்த படியாக, இந்தியா இரண்டாவது இடத்தைக் கொண்டுள்ளது. இதுவரை இந்தோனேஷியா இரண்டாவது இடத்தைக் கொண்டிருந்தது. தற்போது இந்தோனேஷியாவின் 4.35 கோடி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலான எண்ணிக்கையில் இந்திய பயனாளர்கள் இருப்பதால், இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை 4.49 கோடி ஆகும். இந்தியாவில் இன்டர்நெட் பயன் படுத்துபவர்கள் 10 கோடி எனப் பார்க்கையில், இவர்களில் 44% பேர் பேஸ்புக் தளத்தில் இயங்குகிறார்கள். ஒரே ஒரு இணைய தளம் இந்த அளவிற்கு ஒரு நாட்டிலிருந்து வாடிக்கையாளர்களைப் பெற்றிருப்பது அதற்குப் பெருமை தான்.
இன்டர்நெட் என்றாலே, பேஸ்புக் தான் என்ற அளவிற்கு இந்திய இன்டர்நெட் மக்களிடையே ஒரு இமேஜ் ஏற்பட்டுள்ளது. ட்ரெயின், பஸ் என எதில் பயணம் செய்தாலும், அங்கு யாராவது ஒருவர் பேஸ்புக் தளம் குறித்து பேசுவதனை அறியலாம். நண்பர்களுக்கிடையே உரையாடுகையில், ஆம் அவன் இந்த செய்தியை என் பேஸ்புக் தளத்தில் போட்டிருந்தான் என்ற பேச்சைக் கேட்கலாம். போகிற போக்கில் இந்தியாவில் இமெயில் எனப்படும் மின்னஞ்சல் பயன்பாட்டினை பேஸ்புக் தளப்பயன்பாடு மிஞ்சிவிடும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்தியாவிற்கு எப்படி இரண்டாவது இடம் கிடைத்தது? என்ற கேள்வி எழலாம். சீனாவில் பேஸ்புக் இணைய தளம் தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் தான் இந்திய பயனாளர்களின் எண்ணிக்கை பெரியதாக உள்ளது.
120 கோடி ஜனத்தொகையுடனும், இதில் 10 கோடி இணைய பயனாளர்களுடனும், இந்தியா இன்னும் பல தனிச் சிறப்பு பெற்ற இடத்தினைப் பெறும் வாய்ப்புகளைப் பெற்றுள்ளது.