Daily Archives: மார்ச் 5th, 2012

எளிய பொருட்களில் அரிய விஷயங்கள்!

ஒரு வயலின் கம்பியில் வடிவெடுத்தது முதல் டேப் ரிக்கார்டர். இரண்டு அடுப்புக் கரித் துண்டுகளில் உருவெடுத்தது முதல் மைக்ரோபோன். இவற்றையெல்லாம் கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், உலகின் எல்லாப் பெரிய கண்டுபிடிப்புகளும் இப்படித்தான் உருவாகின.

எண்ணத்தைச் செயலாக்கும் திறன் விஞ்ஞானிக்கு இன்றியமையாததாகும். ஒருவன் அறிவில் சிறந்தவனாக இருக்கலாம். சிறப்புக்குரிய பல கருத்துகளைக் கொண்டவனாக இருக்கலாம். ஆனால் அந்தக் கருத்துகள் நடைமுறையில் செயல்படுத்தப்படாத வரையில் வெறும் யோசனைகளாகவே இருக்கும். கண்டுபிடிப்புகள் ஆவதில்லை.

நம்மிடம் விஞ்ஞான யோசனைகள் இருந்தாலும் அவற்றைச் செயல்படுத்த நிறையப் பணம் வேண்டும், பெரிய ஆய்வுக்கூடத்தை நிறுவ வேண்டும் என்று நாம் நினைக்கலாம். ஆனால் விஞ்ஞான வரலாற்றைப் பார்க்கும்போது உலகில் தோன்றிய பல அரிய பெரிய கண்டுபிடிப்புகள் யாவும் சாதாரண விஷயங்களில் தோன்றியவையே என்பது விளங்கும். ஒருவருடைய திறமையும், சமயோசிதமுமே அவரது கருத்துக்கு உயிரூட்டும்.

கருத்துக்கு எளிதில் உருவளிக்கும் மதிநுட்பமே செயல்திறனாகும். டேப் ரிக்கார்டரின் கதை அத்தகையதே. டேப் ரிக்கார்டரின் தத்துவத்தை முதன்முதலில் கண்டவர் பால்சன் என்பவர். ஒருநாள் அவருக்கு ஓர் எண்ணம் உதித்தது. `உருக்குத் துண்டில் ஏற்றப்பட்ட காந்த சக்தி நிலையானதாக அமைகிறது. உருக்குத் துண்டை மின்சக்தி கொண்டு காந்தமாக ஆக்கலாம். அப்படியானால், ஏன் மாறுபடும் ஒலி மின்சாரத்தை (Voice currents) மாறுபடும் நிலைக்காந்தப் பகுதிகளாக ஓர் உருக்குக் கம்பியில் பதிக்கக் கூடாது? இதுதான் அவருடைய எண்ணம். ஆம்! ஒரு புதிய கருத்து.

கருத்தைச் செயல்படுத்த வேண்டாமா? அவரிடம் பெரிய சோதனைக்கூடம் இல்லை. அவர் பணக்காரரும் கிடையாது. ஆனால் அதுபற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை.

அவரது வீட்டில் உருக்கால் ஆன வயலின் கம்பி ஒன்று, கேட்பாரற்று ஒரு மூலையில் கிடந்தது.

அதை எடுத்து, இரண்டு ஆணிகளுக்கு இடையில் இறுகக் கட்டினார். தேனிரும்பு ஆணி ஒன்றின் மேல் செப்புக் கம்பி சுற்றிய நிலை மின்காந்தத் தலை (Temporary Electromagnetic Head) ஒன்றையும் தயாரித்தார். அந்த மின்காந்தத்தை ஒரு மைக்ரோபோன் பேட்டரி சர்க்யூட்டில் இணைத்தார். மைக்கின் முன் பேசியபடியே கம்பிச்சுருள் சுற்றிய ஆணியை வயலின் கம்பியின் மேல் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு நகர்த்தினார்.

பின்னர் பேட்டரியையும், மைக்கையும் எடுத்துவிட்டு அந்த இடத்தில் ஒரு பெல் ரிசீவரை பொருத்தினார். இப்போது ரிசீவரை தன் காதில் வைத்து திரும்பவும் ஆணியை வயலின் கம்பியின் மேல் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு இழுத்தார்.

என்ன ஆச்சரியம்! அவர் முதலில் பேசிய சொற்கள் ரிசீவரில் மெதுவாகக் கேட்டன. ஆம், கம்பியில் அவை நிலைக்காந்தப் பகுதிகளாகப் பதிந்துவிட்டன. பால்சனின் எண்ணம், செயல்முறையில் நிரூபணமானது. முதல் டேப் ரிக்கார்டரும் பிறந்தது.

அதே போல ஹயூ என்பவர் இரு கரித்துண்டுகளை ஒரு பலகையின் மேல் பதித்தார். கரித் துண்டுகளுக்கு இடையில் மற்றொரு கரித்துண்டை தளர்வாக இணைத்தார். அதை ஒரு பேட்டரி, ரிசீவர் சர்க்யூட்டில் இணைத்தார்.

நடுவில் இணைத்திருந்த கரித்துண்டுக்கு அசைவு ஏற்படும்போதெல்லாம் அது ஒலி அலையாக ரிசீவரில் பிரதிபலிப்பதைக் கண்டார். கரித்துண்டுகளுக்கு அருகில் ஒரு கடிகாரத்தை வைத்தார். `டிக்… டிக்…’ என்று கடிகாரத்தின் ஓசை ரிசீவரில் துல்லியமாகக் கேட்டது. முதலாவது மைக்ரோபோனும் உருவானது.

குழந்தைகளை சாப்பிடச் சொல்லி நச்சரிக்காதீங்க !

உணவு உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளை சாப்பிடு, சாப்பிடு என்று நச்சரித்தால் அவர்கள் வழக்கமாக உண்ணும் அளவை விட குறைவகாகவே சாப்பிடுகிறார்கள் என்று ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கட்டாயப்படுத்தக்கூடாது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளின் உணவு பழக்க, வழக்கங்கள் குறித்து அமெரிக்காவில் உள்ள பெனிசில்வேனியா மற்றும் அப்பலாச்சியன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். 4 வயது முதல் 8 வயதுடைய குழந்தைகள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அப்போது ஆய்வில் கலந்து கொண்ட 4 வயது குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் சாப்பிடச் சொல்லி நச்சரிகத்ததால் வழக்கமாக அவர்கள் சாப்பிடும் அளவைவிட குறைவாகவே சாப்பிட்டுள்ளனர்.

உணவின் மீது வெறுப்பு

குழந்தைகளை நச்சரிப்பதால் அவர்களுக்கு உணவு மீது வெறுப்பு வருகிறது. அதனால் அவர்கள் குறைவாக சாப்பிடுகின்றனர். அவ்வாறு குறைவாக சாப்பிட்டால் அவர்களின் உடல் நலம் தான் கெடும். பெற்றோர்கள் நச்சரிக்காமல் இருந்தால் அவர்களுக்கு சாப்பிட்டு பழக்கம் இல்லாத உணவைக் கொடுத்தாலும் அவர்கள் நன்றாக சாப்பிடுவார்கள் என்று அந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குழந்தைகள் மனநல மருத்துவர் ரிச்சேர்ட் உல்ப்சன், குழந்தைகளை சாப்பிடச் சொல்லி நச்சரிக்கவும் கூடாது. அதே சமயம் அவர்களாகவே சாப்பிடட்டும் என்று விட்டுவிடவும் கூடாது. அன்பாகக் கூறினால் அவர்கள் கேட்டுக்கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.

மார்ச் 8ல் இணையம் முடக்கப்படுமா?

அமெரிக்க அரசின் புலனாய்வுத் துறை தன் தளத்தில் விடுத்த எச்சரிக்கையால், பலர் கதிகலங்கி உள்ளனர். மார்ச் 8 அன்று எப்.பி.ஐ.(FBIFederal Bureau of Investigation) என அழைக்கப்படும் அமெரிக்க புலனாய்வுத் துறையின் தளம் மூடப்படும் என்ற செய்தி பரவலாகப் பல வலைமனைகளில் பரவி வருகிறது. இதற்குக் காரணம் டி.என்.எஸ். சேஞ்சர்(DNS Changer) என்னும் வைரஸ் தான். இது ஒரு ட்ரோஜன் (Trojan) வகை வைரஸ். இதன் அளவு 1.5 கிலோ பைட்ஸ் . இதனை OSX.RSPlug.A மற்றும் OSX/Puper என்ற பெயர்களாலும் அழைக்கின்றனர். இது பெரும்பாலும் வீடியோ கோடக் பைல் போல, பாலியல் தளங்களில் காட்டப்படுகிறது. வீடீயோ பைல்களைப் பார்க்கும் ஆர்வத்தில், கோடக் குறியீடு தேவை என்ற செய்தியின் அடிப்படையில், பலர் இதனை டவுண்லோட் செய்து விட்டு மாட்டிக் கொள்கின்றனர்.
இதில் மிக வேடிக்கையும் அதிர்ச்சியும் தரும் செய்தி என்னவென்றால், அமெரிக்காவின் பார்ச்சூன் (Fortune 500) நிறுவனங்கள் என்று கருதப்படும் முதல் 500 நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்களின் சர்வர்களை, இந்த வைரஸ் தாக்கியுள்ளது. அமெரிக்க அரசின் பல துறைகளின் தளங்களிலும் இது காணப்படுகிறது.
பல நாடுகளில் பரவி உள்ள இந்த வைரஸ், தான் அடைந்துள்ள கம்ப்யூட்டர் மூலம் இன்டர்நெட் பிரவுஸ் செய்திட முயற்சிக்கையில், பயன்படுத்துபவர் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் தளத்திற்கு மாறாக, பாலியல் சார்ந்த தளங்களுக்கு அவர்களை இழுத்துச் செல்கிறது. இந்த தளங்கள் சைபர் கிரிமினல்களின் கட்டுப் பாட்டில் உள்ள தளங்களாகும். இதன் பின்னர், கம்ப்யூட்டரைப் பயன்படுத்து பவரை தங்கள் வசம் வைத்துக் கொண்டு தகவல்களை இவர்கள் திருட ஆரம்பிப்பார்கள்.
அல்லது தவறான சாப்ட்வேர் தொகுப்புகள் மற்றும் பிற வசதிகளைத் தருவதாகக் கூறும் தளங்களுக்குச் சென்று, இந்த வைரஸை உருவாக்கியவர்களுக்குப் பணத்தைப் பெற்றுத் தருகிறது. இதற்குக் காரணம், பாதித்த கம்ப்யூட்டரில் உள்ள டி.என்.எஸ். சர்வரின் செட்டிங்ஸை இந்த வைரஸ் மாற்றிவிடுவதே காரணம். கம்ப்யூட்டரில் உள்ள ‘NameServer’’ ரெஜிஸ்ட்ரி கீயினை வேறு ஒரு ஐ.பி. முகவரிக்கு இது மாற்றுகிறது. இதனால், அந்த கம்ப்யூட்டர் இணைய தளங்களைத் தேடுகையில், மாற்றப்பட்ட டி.என்.எஸ். சர்வர் தரும் போலியான தளங்கள் நமக்குக் காட்டப்படுகின்றன.
அது மட்டுமின்றி, கம்ப்யூட்டர்களில் பதியப்பட்டுள்ள வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களை செயல் இழக்கச் செய்கிறது. பாதுகாப்பிற்கான அப்டேட் பைல்களைத் தரவிறக்கம் செய்திடாமல் தடுக்கிறது. இதனை எதிர்கொண்டு அழிக்க, பல தொழில் நுட்ப வல்லுநர்கள் தொடர்ந்து புரோகிராம்களை வடிவமைத்து வருகின்றனர். ஆனால், இதுவரை இதனை நீக்கும் சாத்தியக் கூறுகள் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.
நம் கம்ப்யூட்டரில் இது உள்ளதா என எப்படி அறிவது? நீங்கள் குறிப்பிட்ட முகவரியினை டைப் செய்து தளத்தை எதிர்பார்க்கையில், அதே போல தோற்றம் கொண்ட இன்னொரு தளம் உங்களுக்குக் காட்டப்பட்டாலோ, அல்லது வேறு ஒரு தளத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு, அதில் நீங்கள் கேட்காத சில புரோகிராம்கள் இருப்பதாகக் காட்டப்பட்டாலோ, உங்கள் கம்ப்யூட்டரில் இந்த வைரஸ் வந்து அமர்ந்துவிட்டது என்று பொருள்.
நாம் கொடுக்கும் இணைய முகவரிகள், முதலில் டொமைன் நேம் சர்வர்களுக்குச் செல்கின்றன. அங்கு அந்த முகவரிகளுக் கான தள எண்கள் பெறப்பட்டு, அவை மூலம் தான் நமக்கு தளங்கள் பெறப்பட்டு காட்டப்படுகின்றன. இந்த டொமைன் நேம் சர்வர்களின் பணிகளைப் பாதிக்கும் வேலையைத் தான் இந்த வைரஸ்கள் செய்கின்றன. இது ஏற்கனவே 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் கண்டறிந்த போது அடக்கப்பட்டது. ஆனால் இப்போது பல நாடுகளில் உள்ள கம்ப்யூட்டர்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது மார்ச் 8 ஆம் நாள் அன்று தன் முழு வேகத்தைக் காட்டி, இணைய தளங்களை முடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பின்னணியின் அடிப்படையில் தான், அமெரிக்கப் புலனாய்வுத் துறை தன் இணைய தளத்தை மார்ச் 8 அன்று மூடும் என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
இந்த வைரஸ் நம் கம்ப்யூட்டரைப் பாதித்துள்ளதா? வந்து அமர்ந்துள்ளதா? என்று அறிய இணைய தளத்தில் பல புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. http://www.avira.com/en/supportforhomeknowledgebasedetail/kbid/1199 என்ற முகவரியில் கிடைக்கும் புரோகிராம் இதில் ஒன்று. ஆனால் வைரஸை நீக்குவதில் இந்த புரோகிராம் வெற்றி அடைய முடியவில்லை. ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத் தயாரித்து வழங்கும் பல நிறுவனங்கள், இந்த வைரஸை அழிப்பது சிரமம் என்று அறிவித்துள்ளனர். இதனால், மார்ச் 8 அன்று இன்டர்நெட் பல கம்ப்யூட்டர்களுக்குக் கிடைக்காது என்கின்றனர். அப்படியானால், இதற்குத் தீர்வு தான் என்ன? வழக்கம் போல, ஹார்ட் டிஸ்க்கில் உள்ள டேட்டா பைல்களை நகல் எடுத்து வைத்துவிட்டு, மீண்டும் ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்து, சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளை அமைப்பதுதான் ஒரே வழி என்கின்றனர் பலர்.
சிகிளீனர் மற்றும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைக் கொண்டு இந்த வைரஸ் தொகுப்பினை நீக்கினாலும், மீண்டும் அடுத்த முறை கம்ப்யூட்டரை இயக்குகையில் இந்த வைரஸ் காணப் படுகிறது. இணையத்தில் இத்தகைய புரோகிராம்களை வழங்கும் சாப்ட் பீடியா (Softpedia) நிறுவனம் தன் தளத்தில், இந்த வைரஸை நீக்க ஒரு புரோகிராமினை http://mac.softpedia.com/get /Security/DNSChangerRemovalTool.shtml என்ற முகவரியில் தருகிறது. இதன் பெயர் DNSChanger Removal Tool. இந்த தளம் சென்று இதற்கான புரோகிராமினை டவுண்லோட் செய்து இயக்கவும். இயங்கத் தொடங்கியவுடன், முகப்பு பக்கத்தில் Scan என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்தால், கம்ப்யூட்டர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, டி.என்.எஸ். சேஞ்சர் வைரஸ் இருந்தால், தகவல் தெரிவித்து, அதனை நீக்கவா என்று ஆப்ஷன் கேட்கிறது. சரி என ஆப்ஷன் கொடுத்த பின்னர் வைரஸ் நீக்கப்படும். பின் மீண்டும் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்து பயன்படுத்த வேண்டும்.
அமெரிக்க அரசின் புலனாய்வுத் துறையின் இணைய தளத்தில் இந்த வைரஸ் இருப்பதனை சோதனை செய்திட ஒரு டூல் தரப்பட்டுள்ளது. இதனை https://forms.fbi. gov/checktoseeifyourcomputerisusingrogueDNS என்ற முகவரியில் காணலாம். இந்த தளம் சென்று உங்கள் டி.என்.எஸ். சர்வரின் இணைய தள முகவரியைத் தர வேண்டும். அதன் பின்னர், , “Your IP corresponds to a known rogue DNS server, and your computer may be infected. Please consult a computer professional.” என்ற செய்தி கிடைத்தால், உங்கள் கம்ப்யூட்டரில் இந்த வைரஸ் புகுந்துள்ளது என்று பொருள். இதனை நீக்க நீங்கள் வேறு தள உதவியைத் தான் நாட வேண்டும்.
http://www.fbi.gov/news/stories/2011/november/malware_110911/DNSchangermalware.pdf என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில், எப்படி இந்த வைரஸை கண்டறியலாம் என்பதற்கான குறிப்புகள் அடங்கிய பி.டி.எப். கோப்பு கிடைக்கிறது. இதுவும் அமெரிக்க அரசின் எப்.பி.ஐ. தளமாகும். டவுண்லோட் செய்து முழு விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
காஸ்பெர்ஸ்கி என்ற ஆண்ட்டி வைரஸ் நிறுவனம் தன் தளத்தில் இந்த வைரஸை நீக்கும் உதவியை வழங்குகிறது. http://support.kaspersky.com/ downloads/utils/tdsskiller.exe என்ற முகவரி யில் உள்ள இந்நிறுவன தளத்தில் இருந்து, tஞீண்ண்டுடிடூடூஞுணூ.ஞுதுஞு என்ற பைலை தரவிறக்கம் செய்து, அதனை இயக்க வேண்டும். கம்ப்யூட்டர் முழுமையும் சோதனை செய்திட விருப்பம் தெரிவிக்க வேண்டும். வைரஸ் இருந்தால், நிச்சயம் அதனை நீக்குவதாக இந்த தளம் அறிவிக்கிறது.

நன்றி-கம்ப்யூட்டர் மலர்

உறவை சிதைக்கும் போட்டி உலகம்

குழந்தையாக இருந்தபோது உடை, தின்பண்டம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறோம். பாசமாக பழகுகிறோம். வளர்ந்த பிறகு எல்லாவற்றுக்கும் கணக்குப் பார்க்கிறோம், சண்டை போடுகிறோம். வளர வளர எதிர்ப்புணர்ச்சியும் வளர்கிறது. ஏன்?

குழந்தையாக இருக்கும்போது பெற்றோரின் அன்பிற்காகப் போட்டியிடுகிறோம். மாணவப் பருவத்தில் படிப்பு, விளையாட்டில் போட்டி போடுகிறோம். வளர்ந்ததும் மற்றவரின் கவனம் கவருவதற்காகவும், சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து பெறுவதற்காகவும் போட்டியிடுகிறோம்.

இப்படி வாழ்க்கையின் பெரும் பகுதி போட்டி போடுவதிலேயே கழிகிறது. அதனால் பொறாமை எண்ணம் நம் உடன்பிறப்பாகவே உள்ளுக்குள் வளர்ந்து விடுகிறது. அதுவே அன்புறவை சீர்கெடுக்கிறது. வளர்த்த பெற்றோரையே வாடி நிற்கும் அளவுக்கு தவிக்கவிடும் கல்நெஞ்சக்காரர்களாக மாறிவிடுகிறோம். இதனால் உடன் பிறந்த சகோதரர்களையும் `நீயா, நானா?’ பார்த்து விடுவோம் என்று பகையாளி போல் பார்க்க வைக்கிறது.

வெற்றி பெறாதவர், வெற்றி பெற்றவரைப் பார்த்து பொறாமைப்படுகிறார், வலியவர் எளியவரை கேலி செய்கிறார், இருப்பவர் இன்னும் பெரியவரை எண்ணி ஏக்கப்
படுகிறார். மனமெங்கும் பொறாமையும், பகையுணர்வுமே விஞ்சி நிற்கிறது.

ஏன் நமக்குப் பொறாமை வருகிறது? ஏன் குடும்பங்கள் பிரிந்து போகின்றன? இந்தக் கேள்விகளுக்கு காரணம் ஒன்றே ஒன்றுதான். விட்டுக் கொடுக்காமை தான்.

பிரச்சினை சிறியதாக இருக்கும்போதே அதை நாம் பேசித் தீர்ப்பதில்லை. அது பெரிதாகிய பின் அதை சாதாரண முறைகளில் பேசித் தீர்ப்பது சிக்கலாகி விடுகிறது.

நமது குறைகளை ஏற்றுக்கொண்டு நாம் மன்னிப்புக் கேட்பதில்லை. நாம் முரண்படும்போது முரட்டுத்தன சிந்தனைக்கு தயாராகி விடுகிறோம். அண்டி வாழும்போது அடிவருடிகளாகவும் மாறி விடுகிறோம். நாம் கேள்விப்படும் தகவல்களை பரிசோதித்துப் பார்ப்பதற்குப் பதிலாக அப்படியே நம்பி விடுகிறோம். வதந்தியை நம்பி முடிவெடுக்கிறோம், சொந்தங்களைக் கண்டிக்கிறோம். மரியாதை கொடுத்தால் தான் கிடைக்கும் என்பதை மறந்து விடுகிறோம். இவையெல்லாம் பிரச்சினை பெரிதாவதற்கு முக்கியக் காரணங்கள்.

பலவீனமானவர்களைச் சுரண்டும், பணக்காரர்களை அண்டி வாழும் நமது பலவீனத்தை நம்மால் கட்டுப்படுத்த முடிவதில்லை. நமக்கும் பல நேரங்களில் மன்னிக்கும் குணத்தை விட பழி வாங்குவதே சரியென்று படுகிறது, நாமும் ஒருநாள் வயோதிகர்களாக மாறுவோம் என்பதை இன்றைய பொழுதுவரை நாம் மறுக்கிறோம். எதையும் எதிர்த்து மார் தட்டுகிறோம். இவையெல்லாம் நாம் சரியான மனிதனில் இருந்து நழுவி சராசரிகளில் ஒருவனாக வாழ்வதற்கு முக்கியக் காரணமாகிறது.

கூட்டமாக வாழ்வதுதான் மனித இயல்பு, அதனால்தான் நமது குடும்பங்களுக்கு வெளியிலும் நாம் நம் உறவைத் தேடுகிறோம். நண்பர்கள், உறவினர்கள் இருந்தால்தான் நமக்கு முழுமை உணர்வு கிடைக்கிறது. உறவைக் கவனமாகப் பாதுகாக்காவிட்டால் வாழ்வு கசந்துவிடும். உறவு பேணுவதை எப்படிச் செய்வது?

`எனக்கு முன்னால் நடக்காதே நான் பின் தொடரமாட்டேன். எனக்குப் பின்னால் நடக்காதே நான் வழிகாட்ட மாட்டேன். என்னோடு கூட நட, என் நண்பனாய் இரு’, அறிஞர் ஆல்பர்ட் காம்யூவின் அற்புத வரிகள் இவை.

மனிதர்களுக்கு எப்போதுமே `தான்’ என்ற அகங்காரம் உண்டு. அவனால் முன்னால் இருப்பவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது, பின்னால் வருபவர்களை அரவணைத்துச் செல்ல முடியாது. தனக்கு சமமாக நட்பு பாராட்டுபவனிடம் மட்டும் அவன் சாதுவாக இருக்கிறான். இதுவே மனித சுபாவம்.

மனிதன் இயல்பே இப்படி இருப்பதால் யாருமே அப்பழுக்கற்றவர் அல்ல. இருந்தாலும் நீங்கள் திறந்த மனதுடன் இருங்கள். அன்பாகப் பேசுங்கள். ஒவ்வொருவர் முன்னுரிமையும் வேறுபடும், எனவே ஒவ்வொருவர் உறவிலும் இடைவெளியும் பேணுங்கள். மனித உறவில் சூழ்ச்சி கூடாது. மற்றவரின் குறைகளை மன்னிப்பதால் பதிலுக்கு நாமும் மன்னிக்கப்படுவோம்.

“நீ அன்பாக இருப்பதாலும், இரக்கமாக நடந்து கொள்வதாலும் உன்னை பிறர் கோழை என்று எண்ணக்கூடும். இருந்தாலும் நீ அன்புடன் இரு” என்று காந்திஜி
சொன்னதைப்போல, நாம் உறவு பேணுவோம். மனத்தளவிலும் உயர்வு பெறுவோம்.

பணம் எப்படி செலவாகும்

பணம் என்பதும், பொருள் என்பதும் ஒரே இடத்தில் தங்கி இருப்பதில்லை. அது, ஒவ்வொரு இடமாக போய்க் கொண்டே இருக்கும். சிலரிடம் உள்ள செல்வம், நல்ல காரியங்களுக்கு செலவிடப்படும். கோவில், கும்பாபிஷேகம், குளம் வெட்டுதல் போன்ற பொதுநல காரியங்களுக்கு செலவிடப்படும்; சிலரிடம் உள்ள பணம், நல்ல காரியங்களுக்கு செலவிடப்படாமல், தீய வழிகளில் செலவிடப்படும்.
ஒரு தாசியின் மகள், தன் தாயைப் பார்த்து, “ஏம்மா… இப்படி பணமுள்ளவர்கள் எல்லாம், பணத்தைக் கொண்டு வந்து நம்மிடம் கொட்டுகின்றனரே… இதற்கு நாம் என்ன புண்ணியம் செய்திருக்கிறோம்…’ என்று கேட்டாளாம். அதற்கு அந்தத் தாய், “இதற்கெல்லாம் நாம் எந்த புண்ணியமும் செய்யவில்லை. இப்படிப்பட்ட பணமுள்ளவர்களுக்காகத் தான், பகவான், கள்ளையும், சூதையும், நம்மையும் படைத்தான்!’ என்றாளாம்.
மிதமிஞ்சி பணமுள்ளவன் என்ன செய்கிறான்? சூதாட்டம், குதிரைப் பந்தயம் மற்றும் தாசி வீடு என்று போகிறான். கையிலிருந்த பணம், பொருளை இழந்த பின்னும் புத்தி வருவதில்லை. கள்ளு கடைக்குப் போகும் பழக்கமுள்ளவன் என்ன செய்கிறான்? வீட்டில் உள்ள நகை, வெள்ளிசாமான்களை விற்றோ, அடகு வைத்தோ, கள்ளுக்கடைக்குப் போய், கையிலிருந்த பணத்தைத் தொலைத்து விட்டு வருகிறான்.
எப்படியாவது பணம் தேட வேண்டும். விபசாரி வீட்டுக்கோ, கள்ளுக் கடைக்கோ, சூதாட்டத்துக்கோ போக வேண்டும் என்ற வெறியில் இருக்கிறான். கையில் கிடைக்கும் பணத்துக்குத் தகுந்தபடி, அந்தந்த இடத்துக்குப் போய், பணத்தை தொலைத்து விட்டு வருகிறான். ஆக, இந்த மாதிரி ஆட்களுக்காகத் தான், பகவான், கள்ளையும், சூதையும், விபசாரிகளையும் படைத்துள்ளான் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.
அந்த விபசாரி நல்ல அனுபவசாலி போல் இருக்கிறது. அதனால் தான் இப்படிச் சொல்லியிருக்கிறாள். இதிலிருந்து என்ன தெரிகிறது? நல்வழியில் வந்த பணம், நல்ல வழியிலும், தவறான வழியில் வந்த பணம், தவறான வழியிலும் தான் செலவாகும் என்பது புரிகிறது தானே!

மாசி மகம்

பொதுவாக மாசி மகம் என்பது ஒரு நீராடல் விழா. பழந்தமிழர் காலத்தில் இருந்தே இந்த நீராடல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இக்காலத்தில் சைவ, வைணவ ஒற்றுமை விழாவாகவும் இது கொண்டாடப்படுகிறது. சிவபெருமானிடம் இருந்து மாலை மரியாதைகளைப் பெருமாள் பெற்றுக் கொள்வதும், தான் அணிந்த மாலை பரிவட்டங்களைச் சிவபெருமானுக்கு அளிப்பதையும் இன்றும் கும்பகோணம் சென்றால் தரிசிக்கலாம். பின்னர் இருவரும் சேர்ந்து மாலை, பரிவட்டங்களை தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு அளிப்பார்கள்.

கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளும், திருப்பாதிரிப் புலியூர் பாடலீஸ்வரரும் ஒன்று கூடி எழுந்தருளுவார்கள்.

ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கிள்ளைக் கடற்கரைக்கு பெருமாள் தீர்த்தவாரிக்காக வரும் போது, இஸ்லாமியர்கள் அவருக்குப் பட்டு சார்த்தி வழிபடும் வழக்கம் இன்றும் வழக்கத்தில் உள்ளது. ஆக, ஒற்றுமையின் விழாவாகவும் மாசி மகம் திகழ்கிறது.