Daily Archives: மார்ச் 10th, 2012

எப்போதும் என்ன நினைப்பு? ஆணுக்கு செக்ஸ் ; பெண்ணுக்கு உணவே பிரதானம்

எப்ப பாத்தாலும் சாப்பாட்டு நினைப்புதானா? என்று பெண்கள் சிலரை கேலி செய்வதுண்டு. நிஜமாகவே பெரும்பாலான பெண்கள் உணவு குறித்தே சிந்தித்து கொண்டிருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உறவில் ஈடுபடுவதை விட உணவுக்கே முக்கியத்துவத்துவம் தருவதாக தெரிவிக்கிறது அந்த ஆய்வு முடிவு. அதேசமயம் ஆண்கள் அடிக்கடி செக்ஸ் பற்றிய நினைப்பிலேயே ஆழ்ந்திருப்பதாகவும் அந்த ஆய்வு முடிவு குறிப்பிட்டுள்ளது.

ஒகியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத்துவ இயல் பேராசிரியர் மேற்கொண்ட ஆய்வு முடிவில், ஆண்களுக்கு ஏழு செகண்டுக்கு ஒருமுறை செக்ஸ் பற்றிய நினைப்பு ஏற்படுவதாகவும் ஒரு வாரத்திற்கு 8 ஆயிரம் முறை செக்ஸ் பற்றி சிந்திப்பதாகவும் கண்டறிந்துள்ளார்.

ஆண்களுக்கு ஆசை அதிகம்

163 பெண்கள் மற்றும் 120 ஆண்களிடம் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முறையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களிடம், அத்தியாவசியமான உணவு, தூக்கம், செக்ஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது நாளொன்றுக்கு சராசரியாக 19 முறை செக்ஸ் பற்றி நினைப்பதாக ஆண்கள் தெரிவித்தனர். ஒருசில ஆண்கள் நாளொன்றுக்கு 388 முறை செக்ஸ் பற்றி நினைப்பதாகவும், அதைப்பற்றி பேசுவதாகவும் தெரிவித்துள்ளனர். உண்ணும் உணவு பற்றி 18 முறையும், உறங்குவது பற்றி 11 முறையும் சிந்தனை எழுவதாக தெரிவித்துள்ளனர்.

பெண்களுக்கு உணவு பிரதானம்

இளம் பெண்கள் நாளொன்றுக்கு 15 முறை உணவு குறித்து சிந்திப்பதாகவும், செக்ஸ் பற்றி 10 முறை சிந்திப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஒரு சில பெண்கள் மட்டுமே நாளொன்றுக்கு 140 முறை செக்ஸ் பற்றி சிந்திப்பதாகவும், அதைப்பற்றி பேசுவதாகவும் தெரிவித்துள்ளனர். பசியின் போது உணவைப் பற்றியும், சோர்வின் போது உறக்கத்தைப் பற்றி சிந்திக்கும் இளைஞர்கள் செக்ஸ் பற்றி அநேக நேரங்களில் சிந்திப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவு ஆங்கில மருத்துவ இதழ் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

நோட்பேட் ஒரு தகவல்

வழக்கமாக நோட்பேடினை நாம் சில கம்ப்யூட்டர் மொழிகளில் புரோகிராம் எழுதப் பயன்படுத்துவோம். சில டெக்ஸ்ட் பைல் களை எழுதப் பயன்படுத்துவோம். அப்படிப் பயன்படுத்துகையில் அதில் உள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்துகிறோமா என்றால் அது தான் இல்லை. நோட்பேட் வேர்ட் மாதிரி பார்மட்டிங் வசதிகள் அவ்வளவாக இல்லாத ஒரு சாப்ட்வேர் தொகுப்பு என்று தானே எண்ணிக் கொண்டிருக்கின்றோம். அதில் உள்ள ஒரு வசதியை இங்கு பார்ப்போம். நோட்பேடில் ஒரு பைலை உருவாக்கியோ அல்லது உருவாக்கிய பைலைத் திறந்து எடிட் செய்திடும்போதோ “Ctrl+g” என்ற கீகளை அழுத்தினால் எந்த வரிக்கு நீங்கள் செல்ல விரும்புகிறீர்கள் என்று ஒரு டயலாக் பாக்ஸ் வரும். அதில் எந்த வரி என்று எண்ணை அடித்தால் அந்த வரிக்கு உங்கள் கர்சர் எடுத்துச் செல்லப்படும். ஆனால் இந்த வசதியைப் பயன்படுத்துமுன் நீங்கள் ஒரு சிறிய காரியம் செய்ய வேண்டும். பார்மட் (“Format”) மெனு சென்று அதில் வரும் மெனுவில் Word Wrap என்ற வசதிக்கு முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிட வேண்டும்.

வெற்றிலையின் மகிமை!

இந்திய மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று, வெற்றிலை. அது நல்ல தருணங்களின் சின்னம். திருமணம், வழிபாடு முதலியவற்றில் முக்கிய இடம் பெறுவது வெற்றிலை. சுபகாரியங்களில் வெற்றிலை `தாம்பூலம்’ என்ற சிறப்புப் பெயர் பெறுகிறது.

மருத்துவ குணம் வாய்ந்த வெற்றிலை, வரலாற்றுக் காலத்திலேயே புகழ்பெற்றுத் திகழ்ந்திருக்கிறது. 1500 ஆண்டுகளுக்கு முன்பே வெற்றிலை போடும் பழக்கம் இருந்து வந்திருப்பதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. பண்டைக் காலத்துப் பெண்கள் தமது அழகுப் பொருட்களில் வெற்றிலைக்கு முக்கியமான இடத்தைக் கொடுத்தனர்.

அரசர்களும் வெற்றிலையைப் போற்றிப் பயன்படுத்தினர். உதாரணமாக, மொகலாய மன்னர்கள் இதற்கு ஏற்றம் தந்தனர். மொகலாய அரச பரம்பரையைச் சேர்ந்தவர்களுக்கு மொகலாய மன்னர்கள் வெற்றிலை போடுவதற்காகத் தனியாக மானியமே அளித்துவந்தனர்.

அழகான வெற்றிலைப் பேழையில் வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு மட்டுமின்றி கிராம்பும், வேறு வாசனைப் பொருட்களும் சேர்ந்திருக்கும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த தாம்பூலம், தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட இலைகளில் பொதியப்பட்டிருக்கும். அந்த மரியாதை, மொகலாய அரச பரம்பரையைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் கிடைக்கும்.

மொகலாய மன்னர்கள் வெற்றிலைப் பழக்கத்துக்காக பெரும் பணத்தைச் செலவு செய்தனர். ஷாஜகான் மன்னர் தனது மகளின் தாம்பூலச் செலவுக்காக சூரத் மாநிலத்தின் வருவாய் முழுவதையும் ஒதுக்கி வைத்தாராம்.

ராஜதந்திர விஷயங்களிலும் வெற்றிலை இடம்பெற்றது. பெர்ஷியாவின் ஷா மன்னர், இந்தியாவை தனது ஆட்சிக்கு உட்படுத்த எண்ணம் கொண்டிருந்தார். அதை அறிந்த மொகலாய மன்னர் அவுரங்கசீப், ஷா மன்னரைத் திருப்தி செய்யும்பொருட்டு அவருக்கு உயர்ந்த ரக வெற்றிலையை அனுப்பி வைத்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

புதிய கண்டங்களையும், நிலப்பகுதிகளையும் கண்டுபிடித்து வந்த மார்க்கோபோலோ, ஷான் மார்ஷ் போன்ற சர்வதேசப் பயணிகள் இந்திய மக்களின் வெற்றிலை போடும் பழக்கத்தைப் பற்றி சுவையான கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர்.

பல கவிஞர்கள் வெற்றிலையின் புகழைப் பாடியிருக்கின்றனர். ஆகவே இறவாத இலக்கியங்களிலும் வெற்றிலை இடம்பெற்றிருப்பது அதன் சிறப்பைக் காட்டுகிறது. வெற்றிலை கொடி வகையைச் சேர்ந்தது. அது படர்வதற்கு ஆதரவு வேண்டும். எனவே தென்னை, கமுகு போன்றவற்றுடன் வெற்றிலையைப் பயிரிடுகிறார்கள். வெற்றிலைச் சாகுபடி ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த தொழிலாகும்.

வெப்பப் பிரதேசங்களில் வெற்றிலை அதிகம் பயிராகிறது. இதற்கு எப்போதும் நிழலும், தண்ணீரும் தேவைப்படுகின்றன. வறட்சிப் பகுதிகளைத் தவிர இந்தியாவில் ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலும் வெற்றிலை பயிராகிறது.

வழுக்கையிலும் முடி வளரும்!

பெரும்பாலான ஆண்களுக்கு பரம்பரைத் தன்மை காரணமாக தலையில் வழுக்கை ஏற்படுகிறது. வழுக்கை விழுந்தால் அந்த இடத்தில் திரும்பவும் முடி வளராது என்பதுதான் உண்மையே தவிர, முடியே முளைக்காது என்று சொல்ல முடியாது. அதனால், தகுதியான சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் வழுக்கை உள்ள இடத்திலும் முடியை வளரச் செய்ய முடியும். என்றாலும், அதில் வளர்ச்சி குறைவாகத்தான் இருக்கும்.

அதற்கு என்ன செய்யலாம்?

* எலுமிச்சம்பழ விதைகளை நல்ல மிளகுடன் சேர்த்து அரைத்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்துப் பசைபோல் ஆக்குங்கள். இதனை வழுக்கை உள்ள இடத்தில் தினசரி ஒன்றிரண்டு தடவை ஒரு சில வாரங்களுக்குத் தேய்த்து வாருங்கள். இப்படிச் செய்வதால் சம்பந்தப்பட்ட இடத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளருவதை ஊக்கப்படுத்தும்.

* அதிமதுரத்தைப் பொடித்து, குங்குமப்பூவுடன் சேர்த்து பாலில் கலந்து பசைபோல் ஆக்கவும். இதைத் தூங்கப் போகும்போது வழுக்கை உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைத்து விடும். இது, முடி உதிர்வதையும் தடுக்கும். பொடுகையும் போக்கும்.

* ஆலமர விழுது, தாமரை வேர் – இந்த இரண்டையும் சேர்த்துப் பொடியாக்க வேண்டும். இந்த இரண்டு பொடியையும் தலா சுமார் 200 கிராம் எடுத்து, அதை 400 கிராம் தேங்காய் எண்ணெயில் சேர்த்து, பொடி கருமை நிறம் அடையும் வரை காய்ச்சி எடுத்து பத்திரப்படுத்தவும். இந்த எண்ணெயை வழுக்கை உள்ள இடத்தில் தினசரி ஒன்றிரண்டு தடவை தேய்த்து மசாஜ் செய்து வந்தால் முடி வளர ஆரம்பித்து விடும்.