Daily Archives: மார்ச் 11th, 2012

எல்லாம் முடிஞ்சி போச்சி ஒரு தம் போடலாம்!

தாம்பத்ய உறவு என்பது களைப்பு ஏற்படுத்தாத ஒரு போர். அந்த போர்க்களத்தில் வெற்றிக்காக தோற்பதும், தோல்விகளை சந்தோசமாக அங்கீகரிப்பதும் அன்றாக வாடிக்கை. காதல் போர்க்களத்தில் தம்பதியர் உற்சாக விளையாட்டு முடிந்தவுடன் என்ன செய்கின்றனர் என்று சுவையான ஒரு ஆய்வு ஒன்று சமீபத்தில் நடைபெற்றுள்ளது. அதில் பெண்கள் முத்தமிட விரும்புவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் ஆண்கள் பலரும் ரிலாக்ஸ்சாக புகைப் பிடிப்பதை விரும்புவதாக கூறியுள்ளனர். ஜர்னல் ஆக் செக்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள சுவையான அந்த ஆய்வு முடிவு உங்களுக்காக.

அரவணைப்பு அவசியம்

உறவின் தொடக்கத்தில் துணையை உற்சாகப்படுத்த ஆண்கள் முத்தமிடுகின்றனர். ஏனெனில் உறவின் திறவுகோல் முத்தம்தானே. அப்போது வெட்கப்பட்டு விலக்கும் பெண்கள் கூட உறவு முடிந்ததும் முத்த மழையால் குளிப்பாட்டி விடுகின்றனராம். உறவு முடிந்த களைப்பில் கட்டி துணையை கட்டிக்கொண்டு உறங்குவது, கையால் வருடுவது என ஆசையை வெளிப்படுத்துகின்றனராம் பெண்கள்.

தம் போட விருப்பம்

அதேசமயம் ஆண்கள் பலரும், அதான் எல்லாம் முடிந்தாகிவிட்டதே ரிலாக்ஸ்சாக ஒரு தம் போடலாம் என்று வெளியில் கிளம்பிவிடுகின்றனராம். இன்னும் சிலர் தண்ணீர் குடிப்பது, சாப்பிடுவது அல்லது கம்மென்று போர்த்தி படுத்து உறங்குவது போன்றவைகளை செய்கின்றனராம் இவ்வாறு தெரிவிக்கிறது அந்த ஆய்வு முடிவு.

எக்ஸெல் எழுத்தின் அளவு

மற்ற அப்ளிகேஷன் சாப்ட்வேர் போலவே எக்ஸெல் தொகுப்பிலும் எழுத்தின் அளவு பாய்ண்ட் என்றே குறிப்பிடப்படுகிறது. ஒரு பாய்ண்ட் என்பது ஏறத்தாழ ஓர் அங்குலத்தில் 72ல் ஒரு பங்கு. ஒரு செல் அல்லது செல்லில் உள்ள தகவல் ஒன்றின் எழுத்தின் அளவினை மாற்ற வேண்டிய திருப்பின் நாம் டூல் பாரினைப் பயன்படுத்துகிறோம். டெக்ஸ்ட் சம்பந்தமான டூல்களுக்கு இடது பக்கம் (பாண்ட் டூலின் வலது பக்கம்) பாய்ண்ட் அளவின் பீல்டு கட்டம் உள்ளது. இந்த பீல்டின் வலது பக்கம் உள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்தால் எழுத்தின் பாய்ண்ட் அளவுகள் பலவற்றைக் காணலாம். டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்துவிட்டு இந்த சைஸை மாற்றினால் எழுத்துக்களின் அளவு மாறி இருப்பதனைக் காணலாம்.
ஆனால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். கிளிக் செய்தால் கீழ் நோக்கி விரியும் அளவுகளில் மட்டுமே எழுத்தின் அளவை மாற்ற முடியும் என்பதல்ல. அளவு கட்டத்தில் சென்று எழுத்தின் அளவை கீ போர்டு வழியாக டைப் செய்து அமைக்க முடியும். எக்ஸெல் தொகுப்பினைப் பொறுத்தவரை 1 முதல் 409 புள்ளி வரை இதனை அமைக்க முடியும். (இது உங்கள் பிரிண்டரின் திறனைப் பொறுத்தது) முழு எண் அளவில் மட்டுமின்றி பாதி அளவிலும் இந்த எழுத்தின் அளவை அமைக்கலாம்.

கண் பார்வையைத் தூண்டும் முட்டைகோஸ்

இயற்கையின்  அருட்கொடைகள் அனைத்தும் மனிதனுக்கு ஏதோ வகையில் பயன்பட்டு வருகிறது.  உலகில் மனிதன் தன் தேவைக்காக இயற்கையை அதிகம் பயன்படுத்துகிறான்.

மனித இனம் தோன்றிய காலம் முதலே அவர்களுக்கு காய், கொடி, கீரை, பழம் என பல வகைகளில் இயற்கையானது உணவளித்து வருகிறது.

இதையே சித்தர்களும் ஞானிகளும், அன்றாடம் உண்ணும் உணவின் மூலம் எப்படி ஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்வது என்பதையும், அவற்றை எக்காலங்களில் உண்ணவேண்டும், எப்படி உண்ணவேண்டும் என்பதை தெளிவாகக் கூறியுள்ளனர்.

இப்படி அன்றாட உணவில் நாம் சேர்த்துக்கொள்ளும் காய்கள், கீரைகள், பழங்களின்  மருத்துவக் குணங்களை நம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம்.  அந்த வகையில் நாம் அடிக்கடி உபயோகிக்கும் முட்டைகோஸ் பற்றி தெரிந்து கொள்வோம்.

முட்டை கோஸ் கீரை வகையைச் சேர்ந்தது.  இதன் கொழுந்து உருண்டையாகக் காணப்படும்.  இதனையோ உணவாகப் பயன்படுத்துகிறோம்.

இதில் உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன.  உடலுக்கு ஊட்டம் தரும் உணவாகும்.  உடல் வளர்ச்சிக்கு முட்டை கோஸ்  மிகவும் சிறந்தது.

முட்டைகோஸின் மேல் பகுதியில் மூடியிருக்கும் முற்றிய காய்ந்த இலைகளை நீக்கிவிட்டு சிறிதாக நறுக்கி பாசிப்பயறுடன் சேர்த்து கூட்டாகவோ அல்லது பொரியலாகவோ செய்து சாப்பிடலாம்.

முட்டைகோஸ் உண்பதால் ஏற்படும் நன்மைகள்

கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும்.  கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும்.  இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது.

மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.

சரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.

வியர்வைப் பெருக்கியாக செயல்படும்.  சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.

எலும்புகளுக்கு வலு கொடுக்கும்.  இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.

நரம்புகளுக்கு வலு கொடுக்கும்.  நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.  உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.

உடல் சூட்டைத் தணிக்கும்.  நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும்.  குடல் சளியைப் போக்கும்.  இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

தலைமுடி உதிர்வதைக் குறைக்கும்.  மயிர்க்கால்களுக்கு பலம் கொடுக்கும்.

முட்டைகோஸின் பயன்களை அறிந்து அதனை நம் உணவில் சேர்த்து நீண்ட ஆரோக்கியம் பெறுவோமாக..!

நன்றி – ஹெல்த் சாய்ஸ்