Daily Archives: மார்ச் 19th, 2012

முத்தம் கொடுக்கப் போறியளா?…யோசிச்சுக்குங்க..!

முத்தம் பற்றியும், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் ஒரு பெரிய பட்டியலே போட்டுள்ளனர் நம்மவர்கள். உணர்ச்சிகரமான நரம்புகள் உதட்டில் அதிகம். அதனால் தான் உதட்டை தொட்டவுடன் உணர்வுகள் கிளம்பி எழுகின்றன. உதட்டை விரலில் தொடுவதை விட உதட்டால் தொடுவதால் அநேக நன்மைகள் விளைகின்றனவாம். அதாவது முள்ளை முள்ளால் எடுப்பது போல உணர்ச்சிகளை உணர்ச்சிகளால் தூண்டுவது. அதே சமயம் முத்தமிடுவதன் மூலம் நோய்கள் பரவுதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

30 வாட்ஸ் மின்சாரம்

ஆணும், பெண்ணும் காதல் வயப்பட்டு இதழோடு இதழாக ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொள்ளும் முத்தத்தில் இருவர் உடலிலும் 30 வாட் மின்சாரம் உற்பத்தி ஆகிறதாம். (ஆகா மின்சார உற்பத்திக்கு இப்படி ரொமான்டிக்கான ஒரு வழி இருக்கப்பா..இத விட்டுட்டு எங்கெங்கையோ கரண்ட்டை தேடுறாய்ங்களே..)

மனிதர்கள் தங்கள் உடலில் அதிகமாக உள்ள கலோரிகளை குறைப்பதற்கு என்னென்னவோ உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். ஆனால் ஆணும் பெண்ணும் சேர்ந்து 15 நிமிடம் தொடர்ந்து கொடுத்துகொள்ளும் இதழ் முத்தத்தில் 30 கலோரிகள் குறைகிறது. இது அரைமணி நேராம் மாய்ந்து மாய்ந்து நடக்கும் நடைபயிற்சிக்கு சமமானது. முத்தம்தான் உடலுறவுக்கான முதல் தூண்டுதல். உதடு பிரியாமல் கன்னத்தில் கொடுக்கும் முத்தத்தைவிட, உதடு பிரிந்து உதடுகளில் கொடுக்கும் முத்தத்திற்கு ஆரோக்கியம் அதிகம்.

முத்தம் மூலம் நோய் பரவும்

அதே சமயம் முத்தம் கொடுப்பதன் மூலம் நோய்கள் பரவுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் லயோலா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முத்தம் மூலம் ஹெச்1என்1, சளி, காய்ச்சல், வைரஸ் நோய்களை பரப்புகிறதாம். அதுவும் இந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் அதிக அளவிலான இளைய தலைமுறையினர் இந்த நோய்தாக்குதலுக்கு ஆளாவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குளிர் காலத்தில் தொற்றுநோய்கள் பரவுவது ஒருபுறம் இருக்கையில் முத்தமிடுவதன் மூலமும், ஜோடியாக ஷாப்பிங்மால், சினிமா தியேட்டர், ஓட்டல்கள் போன்ற இடங்களுக்கு செல்வதன் மூலமும் தொற்றுக்கிருமிகள் எளிதில் பரவி நோய் தாக்குதல் அதிகமாவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த காலத்தில் நோய் பரவுவதை தடுக்க சத்தான பழங்கள், டானிக்குகள் போன்றவைகளை உட்கொள்ளலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

எனவே உதடுகளை ரெடி செய்வதற்கு முன்பு ஒரு தடவைக்கு நூறு தடவை யோசிச்சுக்குங்க..அம்புட்டுதேன்..!

Please don’t delete this without forwarding. Let it reach the 120 Crores Indians and the remaining if any. Kindly, share this valuable information wherever possible.

Please don’t delete this without forwarding.
Let it reach the 120 Crores Indians and the remaining if any.
Kindly, share this valuable information wherever possible.

1. If you see children Begging anywhere in INDIA , please contact:
“RED SOCIETY” at 9940217816. They will help the children for their studies.

2. Where you can search for any BLOOD GROUP, you will get thousand’s
of donor address. www..friendstosupport.org

3. Engineering Students can register in www.campuscouncil.com to
attend Off Campus for 40 Companies.

4. Free Education and Free hostel for Handicapped/Physically
Challenged children.
Contact:- 98420625019894067506.

5. If you find any important documents like Driving license, Ration
card, Passport, Bank Pass Book, etc., missed by someone, simply put
them into any near by Post Boxes. They will automatically reach the
owner and Fine will be collected from them.

6. By the next 10 months, our earth will become 4 degrees hotter than what it is now. Our Himalayan glaciers are melting at rapid rate. So
let all of us lend our hands to fight GLOBAL WARMING.
-Plant more Trees.
Don’t waste Water & Electricity.
-Don’t use or burn Plastics

7. It costs 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all
Human beings on earth.
“TREES DO IT FOR FREE”
“Respect them and Save them”

8. Special phone number for Eye bank and Eye donation: 04428281919
and 04428271616 (Sankara Nethralaya Eye Bank). For More information
about how to donate eyes plz visit these sites. http://ruraleye.org/

9. Heart Surgery free of cost for children (0-10 yr) Sri Valli Baba
Institute Banglore. 10.
Contact : 9916737471

10. Medicine for Blood Cancer!!!!
‘Imitinef Mercilet’ is a medicine which cures blood cancer. Its
available free of cost at “Adyar Cancer Institute in Chennai”. Create
Awareness. It might help someone.
Cancer Institute in Adyar, Chennai
Category: Cancer
Address:
East Canal Bank Road , Gandhi Nagar
Adyar
Chennai -600020
Landmark: Near Michael School
Phone: 044-24910754 044-24910754 , 044-24911526 044-24911526 ,
044-22350241 044-22350241

11. Please CHECK WASTAGE OF FOOD
If you have a function/party at your home in India and food gets
wasted, don’t hesitate to call 1098 (only in India ) – Its not a Joke,
This is the number of Child helpline.
They will come and collect the food. Please circulate this message
which can help feed many children.
AND LETS TRY TO HELP INDIA BE A BETTER PLACE TO LIVE IN
Please Save Our Mother Nature for
“OUR FUTURE GENERATIONS”

Please don’t delete this without forwarding.
Let it reach the 
120 Crores Indians and the remaining if any.
With Warm Personal Regards,
-S.KADHIRAVAN, Ph.D.
Associate Professor & Head i/c,
Department of Psychology,
Periyar University,
Salem- 636 011,
Tamil Nadu.

வேகமாக இணையத்தில் உலாவ

இணையப் பயன்பாடு 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டிய ஓர் அம்சமாக நம் வாழ்க்கை முறை மாறி வருகிறது. எதனை வேண்டுமானாலும், இணையம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம், தெரிந்து கொள்ளலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே இணைய இயக்கம் எந்த அளவிற்கு வேகமாக இருக்க முடியுமோ, அந்த அளவு வேகத்தினை நாம் விரும்புகிறோம். ஒவ்வொருவரும் தங்கள் பிரவுசரில் இணைய தளங்கள் மிக வேகமாக இறங்கி, இயக்க தயாராக இருக்க வேண்டும் எனவே விரும்புகின்றனர். பத்துக்கும் மேற்பட்ட டேப்களில் இணைய தளங்களைத் திறந்து வைத்து, அவை அனைத்தும் குறிப்பிட்ட தளங்களைக் காட்ட வேண்டும் எனவே எதிர்பார்க்கின்றனர். இது சாத்தியமா? சாத்தியமோ இல்லையோ, சில ட்யூனிங் தந்திரங்களைக் கையாண்டால், நிச்சயம் ஓரளவிற்கு கூடுதலான வேகத்தில் இணைய அனுபவம் கிடைத்திடுவதனைக் காணலாம். அந்த நடவடிக்கைகளை இங்கு பட்டியலிடலாம்.

1. வேகமான பிரவுசரைப் பயன்படுத்துக: நமக்குக் கிடைக்கும் அனைத்து பிரவுசர்களும் ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. இப்போதைக்கு நமக்குக் கிடைக்கும் பிரவுசர்களில் இயங்கும் வேகத்தினை மட்டும் அடிப்படையாக வைத்துப் பார்த்தால், கூகுள் தரும் குரோம் பிரவுசர் முதல் இடத்தைப் பிடிக்கிறது. நீங்கள் ஏற்கவே பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் வாடிக்கையாளராக இருந்தால், குரோம் பிரவுசரைப் பயன்படுத்திய முதல் நாளிலேயே, அதன் கூடுதல் வேகத்தை உணர்வீர்கள். குரோம் பிரவுசரில், முகவரிகளுக்கான கட்டத்தையே தேடலுக்கான கட்டமாகவும் பயன்படுத்தலாம்.

2. பிளாஷ் இயக்க நிறுத்தம்: அனைத்து பிரவுசர்களும் இப்போது பிளாஷ் இயக்கத்துடன் இணைந்து செயல்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த தொழில் நுட்பம் இல்லாமல் இயங்குவது முழுமையாக இருக்காது. எனவே பிளாஷ் இயக்கம் நமக்கு அனைத்து பிரவுசர்களிலும் கிடைக்கிறது. ஆனால் பிரச்னை என்னவெனில், பிளாஷ் சற்று வேகம் குறைவாகவே இயங்குகிறது. இதனால், பிரவுசர் இயங்கும் வேகமும் தாமதப்படுகிறது. எனவே, பிளாஷ் இயக்கத்தினை நிறுத்தி வைத்து, நமக்குத் தேவைப்படுகையில் மட்டும் அதனை இயக்க வேண்டும். இதற்கு ஒவ்வொரு பிரவுசருக்கும் ஒரு எக்ஸ்டன்ஷன் புரோகிராம் உதவிடுகிறது. குரோம் பிரவுசருக்கான பிளாஷ் பிளாக் (Flash Block) https://chrome.google.com/webstore/detail/ gofhjkjmkpinhpoiabjplobcaignabnl என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. பயர்பாக்ஸ் பிரவுசருக்கான பிளாஷ் பிளாக் https://addons.mozilla.org/enUS/firefox/addon/flashblock/என்ற முகவரியில் கிடைக்கிறது.

3. தற்காலிக பைல்களுக்கு தனி டிஸ்க்: ராம் நினைவக டிஸ்க் இயக்கம், ஹார்ட் டிஸ்க் இயக்கத்தினைக் காட்டிலும் கூடுதல் வேகம் கொண்டதாக இருக்கும். எனவே, இணைய உலாவின் போது உருவாக்கப்படும் தற்காலிக பைல்களுக்கு, ராம் நினைவக டிஸ்க்கினைப் பயன்படுத்துவது, பிரவுசரின் இயக்க வேகத்தினைக் குறைக்கும். அதற்குப் பதிலாக, இந்த பைல்களுக்கு வேறு வகை நினைவகத்தினைப் பயன் படுத்தலாம். இதற்கான தேர்ட் பார்ட்டி புரோகிராமினைப் பயன்படுத்தலாம்.

4. டூல் பார்களை நீக்குக: பிரவுசர்களில் கிடைக்கும் டூல்பார்கள் நம் மானிட்டர் திரையின் பெரும் இடத்தினை எடுத்துக் கொள்கின்றன. இவற்றை நீக்குவதன் மூலம் நமக்கு இணைய தளத்தினைக் காண அதிக இடம் கிடைக்கிறது. இந்த டூல் பார்கள், டேட்டாவினை அனுப்பிப் பெறும் பின்புலப்பணியில் ஈடுபடுவது நமக்குத் தெரியாது. இவற்றை மூடிவிட்டால், அல்லது பயன்பாட்டினை நிறுத்திவிட்டால், பிரவுசரின் பணி ஒருமுகப்படுத்தப்பட்டு வேகப்படுத்தப் படும். எனவே அதிக எண்ணிக்கையில் டூல்பார்களை வைத்திருந்தால், பிரவுசரின் வேகம் குறையும் என்பது உண்மையாகிறது. இவற்றைக் குறைக்கலாம்.

5. விண்டோ வேண்டாம்; டேப் போதும்: அதிக எண்ணிக்கையில் டேப்களைத் திறந்து வைத்துப் பயன்படுத்துவது சிக்கல்களை ஏற்படுத்தலாம். ஆனாலும், வேகமான இயக்கத்திற்கு இவை பெரிதும் உதவுகின்றன. ஒரே விண்டோவில், பல இணைய தளங்களுக்கான டேப்களை வைத்து இயக்குகையில், இவற்றை நிர்வகிப்பது எளிதாகிறது. தேவைப்படாதவற்றை மினி மைஸ் செய்து, தேவைப்படும் தளம் உள்ள விண்டோவினை மட்டும் திறந்து வைத்து இயக்குவது, பிரவுசருக்கான இயக்க வேகத்தினை அதிகப்படுத்தும். அது மட்டுமின்றி, குரோம் போன்ற பிரவுசர்களில் ஒவ்வொரு டேப்பும் தனி இயக்கமாக மேற்கொள்ளப்படுகிறது. இதனால், ஒரு தளம் கொண்ட இணைய தொடர்பு கிராஷ் ஆனாலும், மற்ற டேப்புகளுக்கான இணைய இயக்கம் வேகத் தட்டுப்பாடு இன்றி இயங்கிக் கொண்டு இருக்கும்.

`ஆம்புலன்ஸ்’


1809-ல் பிரெஞ்சுக்காரர்கள் போர்க்களத்தில் காயமடைந்த போர்வீரர்களைக் குணப்படுத்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். நடக்க முடிந்தவர்கள் அல்லது ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லக்கூடியவர்களைப் போர்க்களத்துக்கு அருகிலேயே ஒரு கூடாரம் அமைத்து உடனடியாகச் சிகிச்சை அளித்தனர்.

பிரெஞ்சு மொழியில், நடப்பது என்பதற்கான சொல் `ஆம்புலேர்’ (Ambulare). அதற்கு இணையான ஆங்கிலச் சொல் ஹஙுஸஙீக். 1242-ல், `உதவி வேண்டுவோருக்கான புகலிடம்’ என்ற பொருளில் `ஹாஸ்பிடல்’ என்ற சொல் வழங்கி வந்தது. `ஆம்புலன்ஸ்’ என்பதற்கான நேரடி மொழிபெயர்ப்பு- `உதவி வேண்டுவோர் நடந்தோ, சுமக்கப்பட்டோ சென்றடையும் இடம்’ என்பதாகும். 19-ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் கிரிமியாவில் நடைபெற்ற போரில் குதிரைகளால் இழுக்கப்பட்ட வாகனங்களில், காயமடைந்த போர்வீரர்களை முதல்முறையாக மருத்துவமனைகளுக்கு எடுத்துச் சென்றனர். அந்த வாகனங்கள் `ஆம்புலன்ஸ்’ என்று அழைக்கப்பட்டன.

1600- 1613-ம் ஆண்டுகளில் கனடாவின் அகேடியாவில் போர்டு ராயல் துறைமுகத்தில் சிக் பே (sick bay) என்ற முதல் மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டது. செயின்ட் ஜூன் டீ டீயு ஆர்டரை சேர்ந்த இருவர் அதை நடத்தி வந்தனர்.

வியப்பைத் தரும் விண்டோஸ் 8

மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடுத்த பதிப்பின் சோதனைத் தொகுப்பினை, சென்ற பிப்ரவரி 29 அன்று, நுகர்வோர்களுக்கு வெளியிட்டுள்ளது. வெளியான முதல் நாளே, பத்து லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் இத்தொகுப்பு தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனைப் பெற விரும்புபவர்கள் http://windows.microsoft.com/ enUS/windows8/download என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். தங்களிடம் உள்ள கம்ப்யூட்டரில் இந்த சோதனைப் பதிப்பினைப் பதிந்து இயக்க முடியுமா என்று அறிந்துகொள்ள விரும்புபவர் களுக்குப் பல இணைய தளங்கள் பதில் அளித்துள்ளன. அவற்றில் http://news.cnet. com/830110805_35738793375/canmypcrunthewindows8betatestbuild/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் தெளிவாகத் தகவல்கள் உள்ளன.
சென்ற செப்டம்பரில், இந்த சிஸ்டத்தின் சோதனை பதிப்பு, விண்டோஸ் இயக்கத்திற்கென அப்ளிகேஷன் புரோகிராம்களைத் தயாரிப்பவர்களுக்கென தரப்பட்டது. இருப்பினும், விரும்பும் யார் வேண்டுமானாலும், இறக்கிக் கொள்ளும் வகையில் இந்த பதிப்பு கிடைத்தது.
விண்டோஸ் 8 சிஸ்டம் தரும் புதிய வசதிகள் எவை என இங்கு பார்க்கலாம்.
ஒரு முற்றிலும் புதிய கம்ப்யூட்டிங் அனுபவத்தினைத் தருவதாக விண்டோஸ் 8 இருக்கும் என மைக்ரோசாப்ட் அறிவித்தது போலவே அனைத்தும் புதிய, எதிர்பாராத அனுபவங்களே இந்த சிஸ்டம் மூலம் நமக்குக் கிடைக்கின்றன. கடந்த இருபது ஆண்டுகளில் விண்டோஸ் சிஸ்டத்தில் நாம் கற்பனையில் கூட பார்க்க இயலாத விஷயங்கள் இப்போது கிடைக்கின்றன. ஸ்டார்ட் பட்டனுடன் ஸ்கிரீன், வால் பேப்பர், பைல்களுக்கான ஐகான் என இருந்து வரும் டெஸ்க்டாப் முற்றிலும் மாற்றம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதனை மெட்ரோ (Metro) என மைக்ரோசாப்ட் அழைக்கிறது. சிறிய ஓடுகள் அடுக்கி வைக்கப்பட்டது போல தோற்றத்திரை கிடைக்கிறது. இதனை கீ போர்ட், மவுஸ் வழியாக மட்டுமின்றி, தொடுதிரையாகவும் இயக்கலாம். இதனால் இந்த இன்டர்பேஸ் வகையை, டெஸ்க்டாப் பெர்சனல் கம்ப்யூட்டர் மட்டுமின்றி, மொபைல் சாதனங்களிலும் பயன்படுத்தலாம். இதுவரை கீ போர்ட், மவுஸ் இயக்கியவர்கள், இனி படிப்படியாக தொடுதிரைக்கு மாறிவிடு வார்கள். ஸ்டார்ட் பட்டனுக்குப் பதிலாக, ஸ்டார்ட் ஸ்கிரீன் கிடைக்கிறது. இடது கீழாக முன்பு ஸ்டார்ட் பட்டன் இருந்த இடத்தில், மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால், சிறிய ஸ்டார்ட் ஸ்கிரீன் பாப் அப் ஆகிறது. அல்லது அந்த இடத்தில் ரைட் கிளிக் செய்தால், ஏற்கனவே நாம் பழகிப் போன Programs and Features, Network Connections, Device Manager, Command Prompt, Task Manager, Control Panel, Windows Explorer, Search, மற்றும் Run ஆகிய பிரிவுகள் கிடைக்கின்றன.
சார்ம்ஸ் பார் (Charms Bar): விண்டோஸ் 8 இயக்கத்தின் அடிப்படைக் கட்டமைப்பில் ஒன்று சார்ம்ஸ். சிஸ்டம் கமாண்ட்ஸ் மற்றும் செட்டிங்ஸ் அண்ட் சர்ச் (Settings, Search, Devices) என முக்கிய கட்டளைப் பெட்டிகள் இங்கு கிடைக்கின்றன. உங்கள் விரலை அல்லது மவுஸ் கர்சரை, திரையின் மேல் வலது மூலைக்குக் கொண்டு சென்றால், சர்ச் மற்றும் ஷேர் வசதியுடன், மற்ற சாதனங்கள் மற்றும் செட்டிங்ஸ் மேற்கொள்ள வழி கிடைக்கிறது. இவை உங்கள் அப்ளிகேஷன்களை இணைத்தும் இயக்குகிறது. எடுத்துக்காட்டாக, நீங்கள் இணையத்தில் உலா வந்து கொண்டி ருந்தால், அதில் கிடைக்கும் லிங்க் ஒன்றை உங்கள் நண்பர்களுக்குத் தெரிவிக்க எண்ணினால், இந்த சார்ம்ஸ் மீது தடவினால் போதும். உடனே உங்கள் இமெயில் கிளையண்ட் புரோகிராம் திறக்கப்படும். அல்லது பேஸ்புக், ட்விட்டர் போன்ற புரோகிராம்கள் இயக்கப்படும். வழக்கமான இடது புறம் கீழாக உள்ள ஸ்டார்ட் பட்டன் இல்லை.
செட்டிங்ஸ்: இதுவரை இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையில் நமக்கு பலவகை யான செட்டிங்ஸ் வழிகள் கிடைக்கின்றன. குறிப்பாக டேப்ளட் பிசிக்களில் கிடைப்பது போல இவை தரப்பட்டுள்ளன.
கேம்ஸ்: இரண்டு கேம்ஸ் இணைந்து தரப்படுகின்றன. பின்பால் (Pinball FX 2) மற்றும் சாலிடேர் கிடைக்கின்றன. சாலிடேர் விளையாட்டை திரையைத் தொட்டு விளையாட முடிகிறது. ஆனால் பலரும் விரும்பும் மைன்ஸ்வீப்பர் (Minesweeper) இல்லை.
எக்ஸ்புளோரர்: பழைய வகை டெஸ்க்டாப் இன்னும் கிடைக்கிறது. குறிப்பாக எக்ஸ்புளோரர் மிக வேகமாக இயங்குகிறது.
எக்ஸ்பாக்ஸ் லைவ்: சில எக்ஸ்பாக்ஸ் கேம்ஸ், லைவ் ஹப் என நம்மை இழுக்கும் விஷயங்கள் இதில் கிடைக்கின்றன. முழுமையாக வெளியிடப்படுகையில் இன்னும் அதிகமாக இதில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
சீதோஷ்ணநிலை: அன்றைய சீதோஷ்ண நிலை காட்டும் வசதி, சிஸ்டத்தில் இணைந்து கிடைக்கிறது. சீதோஷ்ண நிலை வரும் நேரத்தில் எப்படி இருக்கும் மற்றும் சீதோஷ்ண நிலைக்கான மேப் ஆகியவையும் அழகாகக் காட்டப்படுகின்றன. இதே போல மேப்ஸ் வசதியும் தரப்பட்டுள்ளது. இதில் இன்னும் முன்னேற்றம் தேவை.
பி.டி.எப். மற்றும் எக்ஸ்.பி.எஸ். பைல்களைக் கையாள, இதனுடன் ஒரு ரீடர் தரப்படுகிறது. சில அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்டி ருந்தாலும், சிஸ்டத்தில் இணைத்துத் தரப்படுவது குறிப்பிடத்தக்கது.
அப்ளிகேஷன்களுக்கான டைல்ஸ் திரையை ஆக்ரமித்துக் கொண்டிருந்தால், நாம் இயக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களை எங்கு பார்ப்பது? ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன் புரோகிராம் களை இயக்குகிறீர்களா! அவற்றைப் பார்க்க வேண்டுமா? சிலவற்றின் இயக்கத்தினை நிறுத்த வேண்டுமா? உங்கள் விரலை அல்லது கர்சரை திரையின் இடது மேல் மூலைக்குக் கொண்டு செல்லுங்கள். கிளிக் செய்தவுடன், அப்போது நீங்கள் இயக்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம் கள் காட்டப்படும். எந்த புரோகிராமினை நிறுத்த வேண்டுமோ, அதனை இழுத்து வந்து கீழாக விட்டுவிட்டால் போதும். நிறுத்தப்படும்.
செமாண்டிக் ஸூம் (Semantic Zoom): நீங்கள் இயக்கும் புரோகிராம்கள் குறித்து இன்னும் அறிய வேண்டுமா? கண்ட்ரோல் பட்டனை அழுத்திக் கொண்டு, மவுஸ் வீலைச் சுழற்றுங்கள். உங்களுக்கு செமாண்டிக் ஸூம் கிடைக்கும். உங்கள் அனைத்து அப்ளிகேஷன்கள் குறித்தும் ஒரு மேம்போக்கான தோற்றம் கிடைக்கும். இவற்றைக் குழுவாக அமைக்கலாம்; அவற்றின் பெயரை மாற்றலாம்.
உங்களுடைய அப்ளிகேஷன்கள் குறித்த அண்மைக் காலத்திய மாற்றங்கள் குறித்த அறிவிப்புகள் Toast notifications எனத் தரப்படுகின்றன. இதில் கிளிக் செய்தால், நேரடியாக அவற்றிற்குச் செல்லலாம். அல்லது கவனிக்காமல் விட்டுவிட்டால், சிறிது நேரத்தில் தானாகவே மறைந்துவிடும்.
போட்டோ லைப்ரேரி: போட்டோஸ் அப்ளிகேஷனில் கிளிக் செய்தால், பிரபலமான பேஸ்புக் மற்றும் பிளிக்கர் (Facebook and Flickr) தொடர்பு ஏற்படுகிறது. ஸ்கை ட்ரைவும் இதில் காட்டப்படுகிறது. எங்கு உங்கள் போட்டோக்கள் இருக்கின்றன வோ, அங்கு சென்று தொட்டு தடவி, அல்லது மவுஸ் கிளிக் செய்து, தேவைப்பட்ட மாற்றஙக்ளை மேற்கொள்ளலாம்.
விண்டோஸ் 8 சிஸ்டம் காட்டும் பைல் ட்ரான்ஸ்பர் டயலாக் பாக்ஸ் சிறப்பான மாற்றங்களைக் கொண்டுள்ளது. பைல் மாற்றப்படும் வேகம், மாற்றுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நேரம் எனக் காட்டுவதோடு, டூப்ளிகேட் பைல்களைக் கண்டறிய சிறப்பான வசதிகளையும் கொண்டுள்ளது.
விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் கிடைக்கும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10, முற்றிலும் புதிய தோற்றம் மற்றும் பயன்பாட்டுடன் உள்ளது. திரையின் முழு இடமும் நம் இணைய தளப் பக்கங்களுக்கே தரப்பட்டுள்ளது. டேப்களும் மற்ற கண்ட்ரோல் ஸ்விட்ச்களும் நமக்குத் தேவைப்படும் போது தலையைக் காட்டிப் பின்னர், பின்னணியில் சென்று விடுகின்றன. பிரவுசரின் இயங்கும் வேகம் இதுவரை இல்லாத அளவில் உள்ளது. புதிய பிரவுசர்களுக்கான தரம் மற்றும் வரையறைகளுடன், எச்.டி.எம்.எல்.5 சப்போர்ட் செய்திடும் வகையில், இது இயங்குகிறது.
கம்ப்யூட்டர் இயக்கத்தில் பிரச்னை ஏற்பட்டு, விண்டோஸ் புதியதாகப் பதிந்து இயக்கப்பட வேண்டும் என்றால், சிஸ்டம் சிடி தேடி அலைய வேண்டியதில்லை. எந்த பைலையும் இழக்காமல், மீண்டும் இன்ஸ்டால் செய்திட, இந்த சிஸ்டத்திலேயே வசதி தரப்பட்டுள்ளது.
இதில் தரப்பட்டிருக்கும் விண்டோஸ் டிபன்டர் (Windows Defender) கெடுதல் விளைவிக்கும் புரோகிராம் எது நுழைந்தாலும், உடனே அதனை அறிந்து நீக்கிடும் வேலையை மேற்கொள்கிறது. நம்மிடம் வேறு ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு இருந்து, நாம் அதனை இயக்கினால், விண்டோஸ் டிபன்டர் பின்னணிக்குச் சென்று அமைதியாக இருந்து விடுகிறது. இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் விண்டோஸ் 8 ஒரு சோதனைப் பதிப்புதான். இறுதி வெளியீட்டிற்கு முன்னர், நிச்சயம் பயன் தரும் மாற்றங்கள் சில இருக்கும்.

நார்ச்சத்து…

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது முதுமொழி.  பொதுவாக மனிதர்களுக்கு நோய் உண்டாவதற்கு முக்கியக் காரணம்  மனச்சிக்கலும், மலச்சிக்கலும் என்கின்றனர் சித்தர்கள்.  மனச்சிக்கலை சீராக்க யோகாசனம், தியானம், மற்றும் சரப்பயிற்சி உதவும்.  ஆனால், மலச்சிக்கலை சீராக்க சீரான உணவு முறை மட்டுமே உள்ளது.

எளிதில் சீரணமாகும் உணவுகளில் ஒன்றுதான் நார்ச்சத்து மிகுந்த உணவு வகைகள்.  நார்ச்சத்து மிகுந்த உணவுகளே மலச்சிக்கலை போக்கக் கூடியது.  மேலும் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களை உட்கிரகிக்கும் தன்மையும் கொண்டது.

நார்ச்சத்து மிகுந்த உணவுகளில் செல்லுலோஸ், ஹெமி செல்லுலோஸ், பெக்டின், லிக்னின் போன்றவை நிறைந்துள்ளன. இவை உணவை எளிதில் சீரணிக்கும் நொதிகளாகும்.

நார்ச்சத்து இருவகைப்படும்.  அவை,

நீரில் கரையும் நார்கள் (Soluble fiber)

நீரில் கரையாத நார்கள் (Insoluble fiber)

நீரில் கரையும் நார்கள்

இவை நீரில் கரையக்கூடியவை.  இரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்தைக் குறைத்து இரத்தத்தின் பசைத் தன்மை அதாவது கடினத் தன்மையைத் தடுக்கிறது.  இதனால் இரத்த அழுத்த நோயின் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் குறைக்கிறது.

நீரில் கரையாத  நார்கள்

செரிமான மண்டலத்தில் உணவுப் பொருட்களின் செரிமானத்தைத் தூண்டி, உணவைச் செரிப்பித்து மலத்தை அதிகளவு வெளியேற்ற உதவுகிறது.

இரைப்பை, சிறுகுடல் பகுதியில் உள்ள கார்போ-ஹைட்ரேட்டை குளுக்கோஸாக மாற்றப்படுவதின் வேகத்தை நார்கள் குறைக்கின்றன.  இதனால் உடலில் அதிகளவு சர்க்கரை, கொழுப்பு சேர்வது குறைக்கப்படுகிறது.

நார்கள் குடலினுள் அதிகளவு நீரை உட்கிரகிக்கச் செய்கின்றன.  இதனால் வயிறு நிறைந்ததுபோல் உணர்வு ஏற்படும்.  இத்தன்மை உண்ணும் உணவின் அளவைக் குறைக்கிறது.  இதுவே உடல் எடை குறையவும் காரணமாகிறது.

மேலும் நார்கள் பித்த உப்புகள் (Bile salt) கொழுப்பு போன்றவற்றை குடல் உட்கிரகிக்கச் செய்யவிடாமல் தடுத்து வெளியேற்றுகிறது.  இதனால் குடலில் புண், அஜீரணக் கோளாறு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

நார்கள் இரத்தத்துடன் கலந்து அடர்த்தி குறைந்த லிப்போ புரதத்துடன் இணைந்த கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதால் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

புற்றுநோய்  தடுப்பு

நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் அதிகம் உட்கொள்பவர்களுக்கு GIT (Gastro Intestinal Tract) உணவுக் குழலில் புற்றுநோய் உண்டாவததைத் தடுப்பதாக அண்மைய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.  நார்கள் குடலின் உள் பகுதியில் உணவை சீரணித்து மீதப் பொருளை மலமாக்கி வேகமாக வெளியேற்ற உதவுகிறது.  இதனால் மலச்சிக்கல் நீங்குகிறது.  புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுப் பொருட்களை மலத்துடன் சேர்த்து வெளியேற்றுவதால் புற்று நோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

தேவையற்ற நச்சுப் பொருள்களை நீக்க

நார்கள் அதிகளவு நீரை உட்கிரகிப்பதால் உண்ணும் உணவில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்களை எளிதாக மலத்துடன் வெளியேற்றுகின்றன.

நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்கள் செரிமான மண்டலத்தில் மாற்றம் அடைவதற்கு நார்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.

மாவுப் பொருள் சர்க்கரைப் பொருளாக மாற்றப்பட்டு, அது புரதம், அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலம், கிளிசரோல் ஆக மாற்றமடைகிறது.  இத்தகைய மாற்றத்தை சீராக செயலாற்ற நார்கள் மிகவும் உதவுகின்றன.

ஒரு நாளைக்கு நார்ச்சத்து 28-35 கிராம் அளவு தேவைப்படுகிறது.

இவை கீரைகள், பசுமையான காய்கறிகள், பழங்கள் இவற்றில் அதிகமுள்ளது.  அதுபோல் அதிகம் தீட்டப்படாத அரிசி, கோதுமை, பார்லியில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளன.

எனவே நலமான வாழ்வுக்கு நார்ச்சத்து மிகவும் அவசியமான ஒன்றாகும்

நன்றி- ஹெல்த் சாய்ஸ்