Daily Archives: மார்ச் 22nd, 2012

வந்துடுச்சு `செயற்கை இறைச்சி’!

எதை எதையோ புதிது புதிதாக உருவாக்கும் விஞ்ஞான உலகம், இப்போது `செயற்கை இறைச்சி’யையும் தயாரித்து வியக்க வைத்திருக்கிறது.

ஆலந்தின் மாஸ்டிரிக்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மார்க் போஸ்ட், கால்நடை ஸ்டெம் செல்களில் இருந்து இந்த செயற்கை இறைச்சியை உருவாக்கியிருக்கிறார். இந்த ஆண்டு இறுதியில், அதாவது அக்டோபர் மாதத்தில் இவர் உருவாக்கிய இறைச்சியால் ஆன `ஹாம்பர்கர்’ தயாராகப் போகிறது.

செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட 3 ஆயிரம் இறைச்சிப் புரதப் பட்டைகளால் ஆன அந்த இறைச்சி பர்கர்தான் இதுவரை தயாரிக்கப்பட்ட பர்கர்களிலேயே மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும்.

ஹெஸ்டன் புளூமென்தான் என்ற புகழ்பெற்ற சமையல்காரரால் தயாரிக்கப்படப் போகும் அந்த இறைச்சியை உண்ணவிருக்கும் அதிர்ஷ்டசாலி (?) யார் என்று தெரியவில்லை.

இந்தச் செயற்கை இறைச்சியை உருவாக்குவது தொடர்பான சவால்களை கடந்த ஆறாண்டுகளாக விஞ்ஞானிகள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். கால்நடைத் தசைகளில் இருந்து ஸ்டெம்செல்களை பிரித்தெடுப்பது, அவற்றை ஆய்வகத்தில் வளர்ப்பது, தசை இழைப் பட்டைகளாக உருவாக்கி, செயற்கைக் கொழுப்புச் செல்களுடன் சேர்த்து உண்ணத்தக்கதாக மாற்றுவது எல்லாமே கடினமான பணிகள்.

மேலும், இதற்கு நிஜமான இறைச்சியைப் போல இளஞ்சிவப்பு நிறம் கொடுப்பது, சமைப்பதற்கும், சாப்பிடுவதற்கும் ஏற்ற தன்மையில் கொண்டுவருவது, இறைச்சியைப் போல உணரவும், சுவைக்கவும் வைப்பது எல்லாம் பிற சவால்கள்.

உலகின் எதிர்கால உணவுத் தேவைக்கு இச்செயற்கை இறைச்சி சரியான தீர்வாக அமையும் என்று விஞ்ஞானிகள் கூறும் அதேநேரம், மக்கள் இதை எந்த அளவு ஏற்றுக்கொள்வார்கள், இது என்னென்ன பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.

புல்லட் எண்களை பார்மட் செய்திடலாம்

நீங்கள் வேர்ட் தொகுப்பில் செயல் படுகையில் அடிக்கடி ஆட்டோமேடிக் எண்கள் அமைக்கும் வசதியினைப் பயன்படுத்துகிறீர்களா? எப்போதாவது இந்த எண்களின் ஸ்டைலை மாற்ற வேண்டும் என்று முயற்சித்திருக்கிறீர்களா? அல்லது இந்த இடத்தில் இவை இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்பட்டிருக்கிறீர்களா? எண்களின் ஸ்டைல், அமையும் இடம், விதம் எல்லாவற்றையும் நம்மால் நம் விருப்பப்படி மாற்றி அமைக்க முடியும். அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம். முதலில் Format மெனு செல்லவும். அதன் பின் Bullets and Numbering என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இந்த விண்டோ திறக்கப்பட்டவுடன் அதில் காட்டப்படும் பலவகை எண் வகைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால் இந்த எண்களுக்கான ஸ்டைலை மாற்ற கஸ்டமைஸ் விண்டோவினைத் திறக்க வேண்டும். அதற்கு ஏதேனும் ஒரு நம்பர் விண்டோவினைத் திறக்க வேண்டும். இவ்வாறு தேர்ந்தெடுத்தவுடன் Customize பட்டனைக் கிளிக் செய்திடுங்கள். இந்த விண்டோவில் உங்கள் விருப்பத்திற்கான அனைத்து செட்டிங் வசதிகளையும் காணலாம். மேலே இருக்கும் Number format என்ற பிரிவின் மூலம் உங்கள் பாண்ட், நம்பர் ஸ்டைல், எங்கு இந்த எண்கள் அமைய வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். Number position என்ற பிரிவில் எப்படி எண்கள் டாகுமெண்ட் டெக்ஸ்ட்டுடன் அலைன் (இடது, வலது அல்லது நடுப்புறமாக) செய்யப்பட வேண்டும் என்பதனை முடிவு செய்திடலாம். Text position பிரிவு நம்பர் பட்டியலுடன் டெக்ஸ்ட் எங்கு அமைய வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். டேப் ஸ்பேஸ் எவ்வளவு தூரத்தில் எண்கள் அடுத்து டெக்ஸ்ட் அமைய வேண்டும் என்பதனை அமைக்கிறது. அனைத்தும் உங்கள் விருப்பப்படி செட் செய்த பிறகு OK கிளிக் செய்து பின் மீண்டும் Bullets and Numbering விண்டோவிற்குச் செல்லுங் கள். இங்கு நீங்கள் செட் செய்த அமைப்பு நீங்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவான ஒரு விண்டோவாக அமைக்கப்பட்டிருக்கும். இங்கு மீண்டும் ஓகே கிளிக் செய்து உங்கள் டாகுமெண்ட்டிற்குத் திரும்புங்கள். இனி நீங்கள் விரும்பியபடி ஆட்டோமேடிக் எண்கள் அமையும்.

மலரும் மருத்துவமும் குங்குமப்பூ…

பூக்கள் வாசனைக்காகவும், பூஜைக்காகவும் மட்டுமே உகந்தது என்று பலர் நினைக்கின்றனர்.  அது தவறான எண்ணம்.  இந்தப் பூக்களில் மருத்துவமும் நிறைந்துள்ளது.

இத்தகைய மருத்துவத் தன்மை கொண்ட பூக்களை நுகரும்போது உடலுக்கு நன்மையளிக்கிறது.  இதனால்தான் நம் முன்னோர்கள் நறுமணம் மிக்க மலர்களை பூஜைக்கு பயன்படுத்தினர்.

மலர்களைப் பயன்படுத்தி நோய்களை நீக்கும் முறைதான் மலர் மருத்துவம்.  இந்த மலர் மருத்துவம் தற்போது பிரசித்திப் பெற்றாலும், ஆதி காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மலர்களில் குங்குமப் பூவும் ஒன்று.
குங்குமப்பூவைப் பற்றி அறியாத பெண்கள் இருக்க மாட்டார்கள்.  கருவுற்ற தாய்க்கு குங்குமப் பூ கொடுத்து வந்தால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்று குங்குமப்பூவை பாலில் கலந்து கொடுப்பார்கள்.  குழந்தை சிகப்பாகப் பிறக்கிறதோ இல்லையோ, ஆனால் ஆரோக்கியமான சுகப்பிரசவமாக குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மை.

குங்குமப் பூ இணூணிதண் இனத்தைச் சேர்ந்தது.  இதன் பூக்களில் உள்ள இதழ்களும் மகரந்தமுமே மருத்துவத் தன்மை கொண்டவை.  இதனை நீரிலிட்டால் சிறிது நேரத்தில் நீர் முழுவதும் செம்மஞ்சள் நிறமாக மாறும்.  இது மேற்காசிய நாடுகளிலும் இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்திலும் பயிராகிறது.

இதற்கு ஞாழல் பூ, காஸ்மீரகம் என்ற பெயர்களும் உண்டு.

Tamil    – Kungumapoo

English    – Saffron

Sanskrit    – Kumkuma

Malayalam    – Kugamapoo

Telugu    – Kumkumapoova

Hindi    – Kesar

குங்குமப்பூ வைக்கண்டால் கூறுகொண்டை பீனசநோய்

தங்குசெவித் தோடஞ் சலதோடம்-பொங்கு
மதுரதோ டந்தொலையும் மாதர் கருப்ப
உதிரதோ டங்களறும் ஒது
– அகத்தியர் குணவாகடம்

பொருள் – நீர் வேட்கை, மேகநீர், தலைவலி, கண்ணில் விழுகின்ற பூ, கண்ணோய், வாந்தி, மூக்கில் நீர் வடிதல், நீரேற்றம், கருப்பை அழுக்கு போன்றவற்றைப் போக்கும்.

மருத்துவப் பயன்கள்

காய்ந்த குங்குமப்பூவை பாலில் கலந்து கொதிக்க வைத்து கருவுற்ற மூன்றாம் மாதத்திலிருந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுத்து வந்தால் குழந்தை ஆரோக்கியமாக வளரும்.  தாய்க்கும் சிசுவிற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். சுகப்பிரசவம் ஆக அதிக வாய்ப்புண்டு.

கர்ப்பிணிகளுக்கு இரத்தத்தில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி அதிகளவு இரும்புச்சத்தை உட்கிரகிக்கச் செய்து உடலுக்கு பலம் கொடுக்கும்.  சிசுவிற்கு சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாதவாறு காக்கும்.

ஆண், பெண் இருபாலரும் குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்தலாம். ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். பெண்களுக்கு கருப்பையில் உள்ள தேவையற்ற அழுக்குகளைப் போக்கி கருப்பையை வலுவாக்கும்.  மாதவிலக்கு சுழற்சியை சீராக்கும்.

கண் பார்வையை தெளிவாக்கும்.  40 வயதைத் தாண்டியவர்களுக்கு உண்டாகும் வெள்ளெழுத்தைப் போக்கும்.  கண்களில் பூ, புரை போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

தலையில் நீரேற்றம், தலைவலி, மூக்கில் நீர் வடிதல் போன்றவற்றைப் போக்கும். நுரையீரல் சளியை நீக்கும்.

அஜீரணத்தைப் போக்கி நன்கு பசி உண்டாக்கும்.

நன்றி- ஹெல்த் சாய்ஸ்