Daily Archives: மார்ச் 24th, 2012

கை கோர்த்துச் சொல்லுங்கள் காதலை…!

இல்லற வாழ்க்கையில் ஆரோக்கியமான தாம்பத்திய உறவு அவசியமானது. அது மகிழ்ச்சியோடு தம்பதியரிடையே உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும். எனவே இல்லற வாழ்க்கையில் இடைவெளி ஏற்படாமல் இருக்க பெண்களுக்கு ஆலோசனைகளை கூறியுள்ளனர் உளவியல் நிபுணர்கள்.

வேண்டியதை கேளுங்கள்

உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை கேட்பது தவறில்லை. ஒருவேளை தவறாக நினைத்து விடுவாரோ என்ற அச்ச உணர்வும் அவசியமில்லை. உங்களின் தேவையை தவறாமல் தெரிவிக்கலாம், அதனால் உங்களவர் கூடுதல் உற்சாகமடைவார் என்கின்றனர் உளவியாலாளர்கள்.

ஆரோக்கியம் அவசியம்

உடலை கவனமாக பராமரிக்கவேண்டும். அது ஆரோக்கியம் கூட. எனவே உடலை சுத்தமாக பராமரிப்பதோடு சுகாதாரமாகவும் இருக்கவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள். தினசரி குளித்து அதற்கேற்ப பெர்ப்யூம் போட்டாலே அந்த வாசனையே தெரிவித்துவிடும் உங்களின் தேவையை.

கை கோர்த்து தெரிவியுங்கள்

ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பு பரிபாஷை உண்டு. தனியான தருணங்களில் சந்திக்கும் போது உங்களின் தேவையை கைகோர்த்து தெரிவிக்கலாம். அந்த நெகிழ்ச்சியுடனே, ஒரு வித எதிர்பார்ப்புடனே அன்றைய தினம் கழியும். மனதிலும், உடலிலும் உற்சாக பேட்டரி உற்பத்தியாகும்.

உற்சாக விளையாட்டு

உறவின் போது எப்பொழுதுமே அவர்தான் தொடங்கவேண்டும் என்று காத்திருக்க வேண்டாம். முன் விளையாட்டுக்களை நீங்கள் தொடங்கினால் உங்களவர் உற்சாகமடைவார். அவரின் ஆர்வத்தை அதிகரிக்கும்.

அழகாய் உணருங்கள்

இது மிகவும் முக்கியமானது. நீங்கள் எப்பொழுதுமே உங்களை அழகானவராய் உணருங்கள். ஏனெனில் உங்களவருக்கு நீங்கள்தான் உலக அழகி. அந்த எண்ணமே உங்களை உற்சாகமுடன் செயல்பட வைக்கும்.

யோகசனம்

தினசரி யோகா செய்வது உடல் ஆரோக்கியத்தோடு மனம் ஆரோக்கியமடையும் உறவிற்கு உற்சாகம் தரும் எனவே தினசரி யோகா செய்வது நலம் என்கின்றனர் நிபுணர்கள்.

பாதுகாப்பான உறவு

நமது உடல் நலத்திற்கு ஏற்ப பாதுகாப்பான உறவினை மேற்கொள்ளவேண்டும் என்பது உளவியல் நிபுணர்களின் மேலான அறிவுரையாகும். இவற்றை பின்பற்றினால் உங்களவர் உங்களின் தலையணை மந்திரத்திற்கு கட்டுப்படுவது உறுதி என்கின்றனர் நிபுணர்கள்.

கண்களை அழகாக்கும் கலர் லென்ஸ்

னித உடலில் கவர்ச்சி பிரதேசம் கண்கள். உணர்வுகளையும், உண்மைகளையும் வெளிப்படுத்தும் மிகச்சிறந்த உறுப்புகள் அவை. முகத்தின் மெருகிற்கு முத்திரை பதித்தது போல் இருக்கும் கண்கள் ஆரோக்கியமாகவும், அழகாகவும் ஜொலிக்கவேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். அதனால் எல்லோரும் கண்களுக்கு அதிக முக்கியத் துவம் கொடுக்கிறார்கள்.

கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க, பார்வை குறைபாட்டை கண்டறிந்து கண்ணாடி கள் அணிந்தனர். பின்பு கான்டாக்ட் லென்சுகள் அணிந்தனர். இரண்டும் வேண்டாம் என்று கருதுகிறவர்கள் லேசர் சிகிச்சை பெற்றுக்கொள்கிறார்கள். இப்போது உச்சி முதல் பாதம் வரை அழகை விரும்பும் பெண்கள், உடைக்கு தக்கபடி கலர்கலரான காஸ்மெட்டிக் கான்டாக்ட் லென்சுகளை பொருத்திக்கொள்கிறார்கள். அதில் டிஸ்போசபிள் லென்சுகளும் வரத் தொடங்கிவிட்டன.

அது தொடர்பான கேள்விகளும் – பதில்களும்:

கான்டாக்ட் லென்ஸ் என்றால் என்ன?

பார்வை குறைபாட்டிற்காக கண் ணாடி அணிவது பலநூறு வருடங் களாக நடைமுறையில் உள்ளது. கண்ணாடிக்குப் பதிலாக கண் ணின் மேல்புறத்தில் பொருத்தப் படும் ஒரு மெல்லிய சாதனம் `கான்டாக்ட் லென்ஸ்’ எனப்படுகி றது. இந்த கான்டாக்ட் லென்ஸ் ஒரு குறிப்பிட்ட வகை `பாலிமர் களை’ பயன்படுத்தி தயாரிக்கப்படு கிறது. இதை எளிதாக கண்ணில் பொருத்தவும், அகற்றவும் இயலும்.

கண்ணாடிக்கும்- கான்டாக்ட் லென்ஸ்க்கும் என்ன வித்தியாசம்?

கண்ணாடி அணிந்திருக்கும் ஒருவர், பார்வை குறைபாட்டிற்காக அதை அணிந்திருக்கிறார் என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள். கண்ணாடி அணிவதால் சிலரது வெளித் தோற்றத்திலும், அழகிலும் மாற்றம் ஏற்படும். கண்ணாடி அணிவதை சிலர் அசவுகரியமாக வும் கருதுவார்கள். கண்ணாடியை மிக கவனமாக பாதுகாக்கவும் வேண்டும். இதனை அணிவதால் மூக்கின் மேல்பகுதியிலும், முகத்திலும் தழும்பும் உருவாகலாம். சிலர் முக்கியமான வேலைக்கு செல்லும்போது கண்ணாடியை மறந்து வீட்டிலே வைத்துவிட்டு சென்று, அவஸ்தைபடுவதும் உண்டு.

கான்டாக்ட் லென்ஸ் அணிந்து இருப்பதை மற்றவர்களால் எளிதாக கண்டறிய முடியாது. கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள், கண்ணாடி அணியவேண்டியதில்லை. கான்டாக்ட் லென்ஸ் அணிவதன் மூலம் மிக துல்லியமான பக்கவாட்டு பார்வையை பெறலாம். ஒருவர், மிக அதிகமான `பவர்’ கொண்ட கண்ணாடி அணியும்போது கண்ணாடி மிக தடினமாக வும், பார்வை தெளிவு இல்லாமலும் இருக்கும். கான்டாக்ட் லென்ஸ் அணிந்தால், பார்வை துல்லியமாகும்.

கான்டாக்ட் லென்சில் எத்தனை வகைகள் உள்ளன?

கான்டாக்ட் லென்சை பல்வேறு காரணங்களுக்காக நாம் உபயோகப்படுத்தலாம். பார்வைக் காக பயன்படுத்தப்படும் லென்ஸ்களில் மூன்று வகைகள் உள்ளன. அவை Rigid, semi soft, softஎனப்படும். ஒவ்வொரு வகை கான்டாக்ட் லென்சும், வெவ்வேறு வகை பாலிமரில் தயாரிக்கப்படுகிறது.

காஸ்மெட்டிக் கான்டாக்ட் லென்ஸ் என்பது என்ன?

கண்களின் அழகை மேம்படுத்த காஸ்மெட்டிக் `கான்டாக்ட் லென்ஸ்’ பயன்படுகிறது. கண்களின் தோற்றத்தை சீரமைக்க பிராஸ்தெட்டிக் (prosthetic) கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தலாம். காஸ்மெட்டிக் கான்டாக்ட் லென்சுகள் பல நிறங்களில் கிடைக்கின்றன. உடைக்கு தகுந்த நிறத்துக்கு ஏற்றபடி அவைகளை தேர்வு செய்யலாம்.

கான்டாக்ட் லென்சை எவ்வளவு நேரம் தொடர்ச்சியாக கண்களில் வைத்திருக்கலாம்?

பொதுவாக கான்டாக்ட் லென்ஸ்கள் கண்ணில் பொருத்திய சில மணி நேரத்தில் அகற்றப்பட வேண்டும். மீண்டும் மறுநாள் பொருத்திக் கொள்ளலாம். பொதுவாக இவைகளை 8 முதல் 10 மணிநேரம் வரை கண்களில் வைத்திருக்கலாம். தற்போதைய புதிய வரவான `Extended wear’‘ என்ற கான்டாக்ட் லென்சை 14 முதல் 16 மணிநேரம் வரை கண்களில் பொருத்திக்கொள்ளலாம். தற்போது தினமும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய `Daily disposable‘ லென்ஸ்களும், ஒரு வாரம் மட்டும் பயன்படுத்துவ தற்கானவைகளும், ஒரு மாதம் மட்டும் பயன்படுத்தக்கூடியவைகளும் உள்ளன.

கான்டாக்ட் லென்ஸ்களை பாதுகாப்பது எப்படி?

கான்டாக்ட் லென்ஸ்களை தினமும் பிரத்யேகமான திரவத்தில் கழுவிய பிறகே கண்ணில் பொருத்த வேண்டும். சுத்தமாக பயன்படுத்த வேண்டும். அணிந்துகொண்டு கண்களை கசக்கக்கூடாது. பயன்பாடு முடிந்ததும் கழற்றி பாதுகாக்கவேண்டும். இதனை அணிந்து கொண்டே தூங்கக்கூடாது. இவைகளை பாதுகாப்பதும், பராமரிப்பதும் எளிது.

கான்டாக்ட் லென்ஸ்களால் பக்கவிளைவுகள்?

அவற்றை நாம் பார்வை மற்றும் அழகுக்காக பொருத்திக்கொள்கிறோம். அதனால் எந்த பாதிப்போ, பக்கவிளைவுகளோ இல்லை.

கான்டாக்ட் லென்ஸ் எந்த வயதில் இருந்து அணியலாம்?

12 வயதுக்கு மேற்பட்டவர்கள் கான்டாக்ட் லென்ஸ் அணியலாம். ஆனால் லேசர் சிகிச்சை 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே செய்யப்பட வேண்டும்.

லேசர் சிகிச்சையால் என்ன பலன்?

18 வயதுக்கு மேற்பட்டவருக்கு கண்ணில் பவர் (கண்ணாடியின் அளவுகோல்) மாறுவதில்லை. எனவே 18 வயதுக்கு மேல் `லேசிக்’ செய்து கொண்டால் கண்களில் உள்ள பார்வைக் குறைவை முழுமையாக சரி செய்ய இயலும். லேசிக் செய்த பின்பு கண்ணாடி மற்றும் கான்டாக்ட் லென்ஸ் அணிய தேவையில்லை. `லேசிக்’ பார்வைக் குறைபாட்டை நிரத்தரமாக சரிசெய்யும்.

தற்போது லேசிக் சிகிச்சை முறையில் மேலும் ஒரு வளர்ச்சியாக இன்ட்ரா லேசிக் (Intra lasik) முறை உள்ளது. இதில் அனைத்து சிகிச்சைகளையும் மிக நுண்ணிய லேசர் கதிர்கள் மூலமாக செய்யப் படுகிறது. அமெரிக்காவில் இந்த சிகிச்சைக்கு உள்படுகிற வர்கள் ராணுவம் மற்றும் விமான போக்குவரத்திலும் பணிபுரியலாம். இந்தியா விலும் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

விளக்கம்: டாக்டர். அருள்மொழி வர்மன்
(கண் சிகிச்சை நிபுணர்), சென்னை-40.

`விடியோ கேம்’ நன்மை!


விடியோ கேம் குறித்த எதிர்மறையான விஷயங்களைத்தான் நிறையப் படித்திருப்பீர்கள். அதுபற்றிய ஒரு நல்ல விஷயம் இதோ…

ஒன்றாக விடியோ கேம் விளையாடும் தம்பதிகளிடையே இணக்கமும், திருப்தியும் அதிகரிக்கிறதாம்.

பிரிகாம் யங் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு தெரிவிக்கும் தகவல் இது.

பட்ட மாணவர்கள் மிசலி ஆல்ஸ்ட்ராம், நீல் லண்ட்பர்க் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில் 349 தம்பதிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர்.

அதில், தம்பதியாக விடியோ கேம் விளையாடுவோரில் 76 சதவீதம் பேர், இப்பழக்கம் தங்களின் திருமண வாழ்வில் நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்தனர்.

இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆல்ஸ்ட்ராம், “எல்லா விடியோ கேம்களும் மோசமல்ல. சில வேடிக்கையான விளையாட்டுகள், அடுத்தவருடன் இணைந்து விளையாடும்போது நெருக்கத் தைக் கூட்டும். விடியோ கேமில் நீங்கள் என்ன செய்கிறீர்கள், எவ்வளவு நேரம் ஆகிறது, அது எவ்வாறு உங்களின் வேலை, தூக்கம், குறிப்பாக உறவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கவனித்துப் பாருங்கள்” என்கிறார்.

வண்ண விளையாட்டு

உங்களால், விரைவாக, வண்ணங்களை அடையாளம் கண்டு கொள்ள முடியுமா? இது என்னங்க முடியாதா? என்று நீங்கள் கேட்கும் கேள்வி புரிகிறது. வண்ணங்களைக் கண்டறிவதில் நாம் எவ்வளவு வல்லவர்கள் என சோதனை செய்தால் தான் தெரியும். இதற்கென ஓர் இணைய தளம் http://color.method.ac என்ற முகவரியில் இயங்குகிறது.
இந்த தளத்தில் நுழைந்தவுடன் நம்மை வரவேற்பது வண்ணத்திலான ஒரு சக்கரம். விளையாடத் தொடங்கும் முன் நம் கம்ப்யூட்டரின் பிரைட்னஸ், காண்ட்ராஸ்ட் ஆகியவற்றைச் சரி செய்திட வேண்டும். அப்போது தான் இந்த விளையாட்டை நாம் சரியாக விளையாட முடியும். இதனைச் சரி செய்த பின்னர், நாம் விளையாடத் தயார் என்பதனைத் தெரிவித்தவுடன், வண்ணத் திலான ஒரு வளையம் சுழலும். வளையத் தின் நடுவே ஒரு வண்ணம் காட்டப்படும். அதே வண்ணம், சுழலும் வளையத்தில் எங்கு உள்ளது என்பதனை, மவுஸால் சரியாகக் கிளிக் செய்து காட்ட வேண்டும். இங்கு தான் பிரச்னையே உள்ளது. வளையத்தில் வண்ணங்கள் கட்டங்களில் இருக்காது. தொடர்ந்து வண்ணங்கள் பூச்சாகக் காட்டப்படும். அது சுழன்று கொண்டிருப்பதால், சரியான வண்ணம் எந்த இடத்தில் உள்ளது எனக் கணித்து, மவுஸால் கிளிக் செய்திட வேண்டும். கிளிக் செய்யப்படும் வண்ணம் தவறாக இருக்கலாம்; ஓரளவிற்கு சரியாக இருக்கலாம்; சரியாக இருக்கலாம் மற்றும் மிகச் சரியாக இருக்கலாம். இந்த முடிவுகள் காட்டப்பட்டு அடுத்த நிலைக்கு நாம் செல்வோம்.
அடுத்த நிலையில், இரண்டு இடங்களில் இந்த வண்ணம் இருக்கும். இரண்டையும் சுட்டிக் காட்ட வேண்டும். நீங்கள் வெற்றி பெற்று முன்னேறுகையில், விளையாட் டில் இன்னும் சற்று கடினமான சவால்கள் தரப்படும். இரண்டு இடங்கள் நான்காக மாறும். இப்படியே சவால்கள் உயரும்.
நீங்கள் வண்ணத்தை பிரித்தறிய முடியாத பார்வைக் குறைவு உள்ளவரா? நீங்களும் இதனை விளையாடும் வகையில், வண்ணங்கள் சில உருவங் களில் தரப்பட்டு, அதனைக் கண்டறியும் வகையில் தரப்படும்.
உங்கள் குழந்தைகளுக்கு மட்டுமின்றி, உங்களுக்கும் ஆவலைத் தூண்டும் வகையில் இந்த விளையாட்டு தரப்பட்டுள்ளது.

கறிச் சுண்டைக்காய் பச்சடி


தேவையானவை

பிஞ்சு சுண்டைக்காய் – 1/2 கப்

துவரம்பருப்பு – 1/2 கப்

பெரிய வெங்காயம் – ஒன்று

தக்காளி – 2

பச்சைமிளகாய் – 4

புளி – நெல்லிக்காய் அளவு

கடுகு – 1/2 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்

சோம்பு – 1/2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் – சிறிதளவு

பெருங்காயத்தூள் – சிறிதளவு

எண்ணெய் – தாளிக்க

செய்முறை

* துவரம் பருப்பை சிறிது பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

* புளியை தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி, பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.

* சுண்டைக்காயை இரண்டிரண்டாக நறுக்கவும். அல்லது அம்மியில் வைத்து தட்டிக் கொள்ளவும்.

* வாணலியில் சிறிது எண்ணெயை காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு, பெருங்காயம் போட்டு தாளிக்கவும்.

* தொடர்ந்து வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் சுண்டைக்காயை சேர்த்து வதக்கி அடுப்பை சிம்மில் வைத்து மூடி இரண்டு நிமிடம் வேக விடவும்.

* சுண்டைக்காய் வெந்ததும், தக்காளி, உப்பு, புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

* பச்சை வாசனை போனதும் வெந்த துவரம் பருப்பைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். பச்சடி ரெடி.