Advertisements

Daily Archives: மே 17th, 2012

20,000 தளங்களில் வைரஸ்: கூகுள் எச்சரிக்கை

ஏறத்தாழ 20 ஆயிரம் இணைய தளங்கள், மெயில்களைத் திருப்பி அனுப்பும் ஜாவா ஸ்கிரிப்ட் கொண்ட வைரஸ்களால் தாக்கப்பட்டிருப்ப தாக, கூகுள் நிறுவனம் எச்சரித் துள்ளது. இந்த தளங்களில் உள்ள சில பக்கங்களை மட்டும் இந்த வைரஸ் தாக்கி யிருக்கவும் வாய்ப்புள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. எனவே, இந்த தள நிர்வாகிகள் தங்கள் தளங்களில் “eval(function(p,a,c,k,e,r)” என்று வரி கொண்டுள்ள குறியீடுகள் உள்ளனவா என்று சோதனை செய்திட வேண்டும். இது எச்.டி.எம்.எல்., ஜாவா ஸ்கிரிப்ட் அல்லது பி.எச்.பி. பைல்களில் இருக்கலாம். இந்த தளங்கள் இருந்து இயங்கும் சர்வர் கம்ப்யூட்டர்களில், சர்வர்களை வடிவமைக்கும் கான்பிகரேஷன் பைல்களிலும் இவை இருக்க வாய்ப்புள்ளது. இதனால், இந்த தளங்களில் ஒரு சில பக்கங்களைப் பார்வையிடும்போது மட்டும் இந்த வைரஸ் தன் வேலையைக் காட்டும். இந்த மால்வேர் புரோகிராம் பதிந்திருக்கும் குறியீட்டு வரிகளை நீக்கி, தளத்தைப் பார்வையிடுவோரின் கம்ப்யூட்டர்கள் பாதிக்காமல் இருப்பதைத் தள நிர்வாகிகள் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், தளங்களைப் பதிந்து இயக்க ஒத்துக் கொண்டு இடம் தந்துள்ள சர்வர் உரிமையாளர்களும் இந்த பாதுகாப்பு நடவடிக்கையினை எடுக்க வேண்டும். இவ்வாறு கூகுள் அனைவரையும் எச்சரித் துள்ளது.
இது போல பல முறை கூகுள் இத்தகைய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. ஸ்பேம் மெயில்கள் மற்றும் அவை வழியாக மால்வேர் புரோகிராம்கள் பரவாமல் காப்பது தன் கடமை எனவும் கூகுள் அறிவித்துள்ளது. இதற்கெனவே பல முறை எச்சரிக்கை செய்திகளைக் கூகுள் தந்து வருகிறது. இந்த முயற்சிகளை ரகசியமாக மேற்கொள்ளாமல், அனைத்து இணைய தள நிர்வாகிகளும் அறிந்து கொள்ளும் வகையிலேயே இவை வெளியிடப்பட்டு வருகின்றன.
கூகுள் எச்சரிக்கைகள் நிச்சயம் பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தும். சென்ற ஆண்டில், கூகுள் “co.cc” என்ற டொமைன் பிரிவிலிருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட தளங்களை விலக்கி வைத்தது. இவற்றை இணைய வெளியில் வைரஸைப் பரப்பும் கிரிமினல்கள் பயன்படுத்தி வந்ததால், இந்த நடவடிக்கையை கூகுள் எடுத்தது.
மொத்தமாக இணைய தளங்களுக்கு தங்கள் சர்வர்களை வாடகைக்கு விடுபவர் கள், கூகுள் எச்சரிக்கையை சிரமேற்கொண்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்த நிறுவனத்தின் சர்வர்கள் அனைத்திலும் மால்வேர் புரோகிராம்கள் நுழைய வாய்ப்புண்டு. எனவே தான் தன்னுடைய எச்சரிக்கைகள் அனைத்தையும் வெளிப்படையாகவே அனைவரும் அறியும் வண்ணம் கூகுள் வெளியிட்டு வருகிறது.

Advertisements

இது நாகரீகம்

* மனித இனம் தோன்றிய பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமே வரலாற்றுக்கு முற்பட்ட காலம். இதற்கு வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்றாலும், அவர்களின் நினைவாக விட்டுச் சென்ற பானை ஓடுகள், கல், உலோகக் கருவிகள், எலும்புத் துண்டுகள், குகை ஓவியங்கள் ஆகியவை வரலாற்று சாட்சிக்கு எச்சங்களாக அமைந்துள்ளன. புதிய கற்காலம்தான் மனிதனை சற்று வசதியான நாகரீக வாழ்விற்கு அழைத்துச் சென்றது.

* ஆதி மனிதனின் காலத்தை பல வகையாக பிரிக்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். தொடக்கம், பழைய கற்காலம் எனப்படுகிறது. இது ஆதி மனிதன் உயிர் வாழ்ந்த காலம். இக்காலம் ஏறத்தாழ 3 லட்சம் ஆண்டு நீடித்தது. இக்காலத்தில் மனிதன் ஆடையற்று திரிந்தான். பேசத் தெரியாது. நிலையான வாழ்வு இல்லை. நாடோடி வாழ்க்கையாக அலைந்தான்.

* கற்கால மனிதன் மனதிலேயே கலை உணர்ச்சிகள் தோன்ற ஆரம்பித்தன.மொழி தோன்றுவதற்கு முன்பாக, தனது மனதில் தோன்றும் கற்பனை மற்றும் கண்ணால் பார்த்த உருவத்தை ஓவியமாக தீட்ட ஆரம்பித்தான். பெரும்பாலும் தாம் வாழ்ந்த குகைகளில் தாம் வேட்டையாடிய விலங்குகளின் உருவங்களை மனிதன் வரைந்தான். புதிய கற்காலத்தில் மண்ணால் செய்த பல உருவங்கள் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் குகைகளில் கிடைத்தன.

* பழைய கற்காலத்திற்கும், புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலம் சுமார் 4000 ஆண்டுகள் நீடித்தது. அப்போது மனிதர்கள் ஆற்றின் கரைகளில் வாழ்ந்தனர். கல், மரம், எலும்பு முதலியவற்றை ஆயுதமாக்கி வேட்டையாடி வாழ்ந்தனர். நாயைப் பழக்கி, தனக்குத் துணையாக்கிக் கொண்டனர். ஆடு, மாடு, குதிரை இவற்றின் இறைச்சியை உணவாக உண்டனர். சிக்கி முக்கிக் கல் மூலம் இறைச்சியை நெருப்பினில் வாட்டி, சாப்பிட ஆரம்பித்த நிகழ்வே, சமையலின் தொடக்கம்.

* கி.மு. 6000 முதல் கி.மு. 4000 வரையிலான இடைப்பட்ட 2000 ஆண்டு கால வாழ்க்கையே புதிய கற்காலம். இக்காலத்தில் கற்களைத் தீட்டி, கூர்மையாக்கி ஆயுதமாக பயன்படுத்த ஆரம்பித்தான் மனிதன். இதன் மூலம் வேட்டையாட, உணவைத் தேட புதிய முறை கண்டான். விலங்குகளை வளர்க்க, மேய்க்கப் பழகினான். ஓரளவு விவசாயம் செய்யவும் கற்றுக் கொண்டான். விதவிதமான உணவுப் பொருட்களை சமைத்து சாப்பிட ஆரம்பித்தான்.

* புதிய கற்காலத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியே உலோக காலம். சில உலோகங்களை அறிந்து அதன் மூலம் ஆயுதம், ஆபரணம், பாத்திரம் செய்து பயன்படுத்த ஆரம்பித்தனர். நாகரீகத்திற்கு `பிள்ளையார் சுழி’ போட்ட காலமும் இதுதான். பரிணமா வளர்ச்சிக் காலம் என்றும் சொல்லலாம். இந்தியாவில் முதலில் அறியப்பட்ட உலோகம் செம்பு. தென்னிந்தியாவில் முதலில் அறியப்பட்ட உலோகம் இரும்பு. சீனா. எகிப்து, மெசபெடோமியா பகுதி மக்கள் முதலில் கண்ட உலோகம் வெங்கலம்.

* அடுத்த நாகரீக காலத்தில்தான் மனிதனின் வளர்ச்சி `எக்ஸ்பிரஸ்’ வேகமெடுத்தது. உலகில் இந்தியா, எகிப்து, சீனா, கிரேக்கம், ரோம், பாபிலோன், சுமேரியா போன்ற நாடுகளில் நாகரீகம் தழைத்தோங்கி இருந்தது. இந்த நாகரீகம் நதிக்கரையில்தான் ஆரம்பமாகி நிலைத்தது. நைல் நதிக்கரையில், சீனாவில் மஞ்சள் நதிக்கரையில், யூப்ரடீஸ் – டைகிரிஸ் நதிக்கரையில் என குறிப்பிட்டு சொல்லலாம். வீடு, நிலம், விவசாயம், ஆடை என ஒரு சுகமான வாழ்வின் தொடக்கமாக இக்காலம் கருதப்படுகிறது.

மறையும் பிரவுசர் மெனுக்கள்

பிரவுசர்கள் அனைத்துமே மிக வேகமாக புதிய பதிப்புகளை வெளியிட்டுள்ளன. புதிதாக வரும் பிரவுசர்களில், இணைய தளங்களுக்கு அதிக இடம் தர வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மெனுக்கள் எல்லாம் மறைத்து வைக்கப்படுகின்றன. பல வாசகர்கள், இந்த பிரவுசர்களில் பைல் மெனுவே இல்லை. இதனை உடனே பெற ஒரு ஷார்ட்கட் உண்டு; ஆனால், மறந்து விட்டது. அதனைக் கூறவும் என்றெல்லாம் கடிதங்கள் அனுப்புகின்றனர்.
பைல் மெனு பழைய கால சங்கதியாகிக் கொண்டு வருகிறது. இப்போது பிரவுசர்களில் தரப்படும் இன்டர்பேஸ் எனப்படும் இடைமுகங்கள் எல்லாம், வேறுவகையான சிறிய மெனு கட்டமைப்பில் தரப்படுகின்றன. ஒன்றுக்கொன்று மறைத்து வைக்கப்பட்ட மெனுக்கள் எல்லாம் இடம் பெறுவதில்லை. ஆனாலும், சிலர் எனக்கு முந்தைய பிரவுசர்களைப் போல் மெனுக்கள் தேவை என விருப்பம் தெரிவிக்கின்றனர். பழைய தோற்றத்தில் மெனுக்கள் கிடைக்கும் வழிகளையும் இந்த பிரவுசர்கள் கொண்டுள்ளன. ஆனால், ஒவ்வொரு பிரவுசருக்கும் ஒரு வகையான வழி உள்ளது. அவற்றை இங்கு காணலாம்.
மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசரில், வழக்கமான மெனுவிற்குப் பதிலாக, “Firefox” என்னும் பட்டன் தரப்பட்டுள்ளது. இதில் கிளிக் செய்வதன் மூலம் பிரவுசர் செட்டிங்ஸ் மாற்றலாம்; இணைய தளங்களில் உள்ள டெக்ஸ்ட்டை பிரிண்ட் செய்திடலாம். பழைய மெனு முறை வேண்டும் என்றால், இந்த இளஞ்சிகப்பு வண்ண பட்டனில் கிளிக் செய்திடவும். இந்த பட்டன் விண்டோவின் இடது மேல் புறத்தில் தரப்பட்டுள்ளது. இங்கு கிடைக்கும் கீழ்விரி பட்டியலில், வலது பக்கம் கீழாகச் செல்லவும். இதில் “Options” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது கூடுதலாக ஆப்ஷன்ஸ் பட்டியல் ஒன்று கிடைக்கும். இங்கு “Menu Bar” என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்; இப்போது “File,” “Edit,” மற்றும் “View” ஆகிய பட்டன்கள் உள்ள மெனு லே அவுட்டிற்கு மாறுவீர்கள். ஏதேனும் ஒரு வேளையில், ஒரு காரணத்திற்காக, பழையபடி எந்த மெனுவும் இல்லாத இடைமுகம் வேண்டும் எனில், மெனு பாரில் “View” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். “Toolbars” என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் “Menu Bar” என்ற ஆப்ஷனில் எதிரே உள்ள டிக் அடையாளத்தினை நீக்கவும்.
துரதிருஷ்டவசமாக, கூகுள் தரும் குரோம் பிரவுசரில், பழைய மெனுக்களைக் கொண்டு வருவதற்கான செட்டிங் எதுவும் தரப்பட வில்லை. மெனு பார் இடத்தில் “Bookmarks” என்ற டூல்பாரினைக் கொண்டுள்ளது. இதன் மூலம் நமக்குப் பிடித்த பேவரிட வெப்சைட் களின் பட்டியலை இதில் பெறலாம். பிரவுசரின் மேலாக டூல் பார் தேவை என்றால், முதலில் திரையின் மேல் வலது புறத்தில் காட்டப்படும், பைப் ரிஞ்சு (“Wrench”) ஐகான் மீது கிளிக் செய்திடவும். இங்கு “Bookmarks” எனப்படும் துணை மெனுவினைத் திறக்கவும். இதில் “Show Bookmarks Bar” என்ற ஆப்ஷனில் கிளிக் செய்தால், திரையின் மேல் பகுதியில், புக்மார்க்ஸ் மெனு கிடைக்கும். இதனை பார்வையிலிருந்து நீக்க வேண்டும் எனில், மீண்டும் “Bookmarks” மெனு சென்று, “Show Bookmarks Bar” என்பதில் கிளிக் செய்திடவும்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ல் வழக்கமான அனைத்து டூல்பார்களும் நீக்கப்பட்டன. இதனால் எந்த மெனு பார் மற்றும் டூல்ஸ் காட்டப்பட வேண்டும் என்பதனை நாம் செட் செய்திட முடிவதில்லை. ஆனால், இதனை மீட்டுக் கொண்டு வர மைக்ரோசாப்ட் அருமையான ஒரு வழியைக் காட்டியுள்ளது. எளிதாக, “Alt” பட்டனை அழுத்தவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மெனு பாரினை கொண்டு வந்திடும். மீண்டும் இதனை அழுத்த அனைத்தும் மறைந்துவிடும்.