வேர்ட் டிப்ஸ்-எம்.எஸ். ஆபீஸில் டெக்ஸ்ட் அலைன்மெண்ட்

எம்.எஸ். ஆபீஸில் டெக்ஸ்ட் அலைன்மெண்ட்
ஒவ்வொரு சாப்ட்வேர் அப்ளிகேஷனும் டெக்ஸ்ட்டை ஒழுங்கு செய்வதில் பல்வேறு கீ தொடர்புகளைப் பயன்படுத்துகின்றன. மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பு கீழ்க் காணும் கீ இணைப்புகளை அவற்றிற்கு எதிரே குறிப்பிட்டுள்ள செயல்பாட்டிற்குப் பயன் படுத்துகிறது.
Ctrl + l – டெக்ஸ்ட்டை இடது புறமாக அலைன் செய்திட
Ctrl + r – டெக்ஸ்ட்டை வலது புறமாக அலைன் செய்திட
Ctrl + j – டெக்ஸ்ட்டை இருபுறமும் அலைன் செய்திட
Ctrl + e – டெக்ஸ்ட்டை நடுமையமாக அமைத்திட

 

எழுத்தின் அளவை அரைப் புள்ளி குறைக்க
வேர்டில் பயன்படுத்தப்படும் எழுத்து ஒன்றின் அளவைக் குறைக்க பாண்ட் பெயர் கட்டத்திற்குப் பக்கத்தில் இருக்கும் பாண்ட் சைஸ் கட்டத்தில் அளவு எண்ணைக் கொடுக் கலாம். எண் பெரிய அளவில் இருந்தால் எழுத்தின் அளவும் பெரிதாகும். இதனை ஒவ்வொன்றாக உயர்த்தலாம். அதே போல அவற்றைச் சிறியதாகவும் மாற்றலாம். ஆனால் ஓரளவிற்கு மேல் மிகவும் சிறியதாக மாற்றினால் அது திரையில் தெரியாது.
எழுத்தின் அளவைப் பாதியாகவும் வேர் டில் குறைக்கலாம். எடுத்துக்காட்டாக, அணூடிச்டூ எழுத்து வகையில் சில சொற்களை பாய்ண்ட் 30ல் வைக்கிறீர்கள். அந்த எழுத்து அளவு கொஞ்சம் குறைந்தால் நல்லது என்று எண்ணு கிறீர்கள். ஆனால் 29 உங்கள் தலைப்பின் இடத்திற்குச் சிறியதாக இருக்கிறது. இந்நிலை யில் அதனை 29.5 ஆகவும் அமைக்கலாம். அப்படியானால் இதனை கால் அளவு, அதாவது எட்டேகால் என, 8.25, என அமைக் கலாமா என்று ஒருவர் கேட்கலாம். அது முடியாது. கொடுத்துப் பார்த்தால் உங்களுக்கே இது தெரிய வரும்.
* வேர்ட் டாகுமெண்ட்டில் உடனடியாக ஸ்பெல்லிங் சோதனை மேற்கொள்ள எப்7 அழுத்தவும்.
* ஹைபன் பயன்படுத்திய சொற்கள் பிரியாமல் இருக்க வேண்டும் என்றால் ஹைபன் டைப் செய்திடுகையில் கண்ட்ரோல் +ஷிப்ட் கீகளை அழுத்திக் கொள்ளுங்கள்.
* குறிப்பிட்ட இரண்டு சொற்கள் வரி ஓரங்களில் பிரியாமல் அமைய வேண்டும் என்றால் கண்ட்ரோல்+ஷிப்ட்+ஸ்பேஸ் பயன்படுத்துங்கள்.
* திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத் திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள். அதே போல் திரையில் தெரியும் பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Down அழுத்தவும்.

 

சொற்களின் எண்ணிக்கை 0
சில வேளைகளில், டாகுமெண்ட்டில் அல்லது டாகுமெண்ட்டின் ஒரு பகுதியில் எத்தனை சொற்கள் உள்ளன என்பதற்கு Word Count கட்டளை கொடுத்து பார்ப்போம். அப்போது சொற்களின் எண்ணிக்கை 0 எனக் காட்டும். ஆச்சரியப்பட்டுப் போய் மீண்டும் டெக்ஸ்ட் தேர்ந்தெடுத்துக் கொடுப்போம். அப்போதும் எண்ணிக்கை 0 என வந்தால், நிச்சயம் தவறு வேறு எங்கோ உள்ளது என்று பொருள். இதற்குக் காரணம் நீங்கள் Word Count கட்டளை கொடுக்கும் முன்னர், ஏதேனும் ஒரு வரையப்பட்ட ஆப்ஜெக்ட் அல்லது படத்தைத் தேர்ந்தெடுத்திருப்பீர்கள். அதனால் தான் அதில் சொல் எண்ணிக்கை 0 எனக் கிடைக்கிறது. கட்டளை கொடுக்கும் முன், கர்சரை டெக்ஸ்ட் உள்ள இடத்தில் எங்கேனும் வைத்துப் பின்னர் மீண்டும் கட்டளை கொடுங்கள். இப்போது எண்ணிக்கை சரியாகக் கிடைக்கும்.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 4,055 other followers

%d bloggers like this: