பீர் விலை ரூ.10 வரை உயர்வு: ‘குடி’மகன்கள் அதிர்ச்சி

டாஸ்மாக் கடைகளில் பீர் விலை ரூ.5 முதல் ரூ.10 வரை இன்று காலை முதல் உயர்ந்தது. இதனால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழகம் முழுவதும் 6,804 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு 30,000க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். கடந்த 3 மாதங்களில் மட்டும் கூடுதலாக 108 கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் கோடை காலத்தில் பீர் தட்டுப்பாடு, டாஸ்மாக் கடைகளில் குளிர்ச்சியில்லாத பீர் அதுவும் அதிக விலைக்கு விற்கின்றனர் என குடிமகன்கள் புகார் கூறினர். இதையடுத்து கடந்த 11ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளில் எந்தெந்த ரகங்களில் என்னென்ன பாட்டில்கள் உள்ளன என்று கடை வாரியாக கணக்கெடுக்கும் பணி நடந்தது. இப்பணி முடிந்ததும் ஒவ்வொரு மதுக்கடைகளிலும் இருந்தும் டாஸ்மாக் பிராந்திய அலுவலர்களுக்கு ஸ்டாக் நிலவரம் தெரிவிக்கப்பட்டது.

பீர் குறைந்தபட்சம் ரூ.65ல் இருந்து ரூ.95க்கு விற்கப்பட்டது. பீர் விலையை உயர்த்துவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சவுண்டையா தலைமையில் நேற்று முன்தினம் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று காலை முதல் பீர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.10 வரை விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் காலையில் பீர் வாங்க டாஸ்மாக் கடைகளுக்குச் சென்றவர்கள் விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த ஆண்டு 285 லட்சம் சேஸ் பீர் பாட்டில்கள் விற்கப்பட்டன. இந்த ஆண்டு 384 சேஸ் பீர் பாட்டில்கள் விற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை ஏற்றத்தால் இந்த நிதியாண்டில் டாஸ்மாக் பீர் விற்பனையில் மட்டும் சுமார் ரூ.300 கோடி லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 4,055 other followers

%d bloggers like this: