பன்றிகளுக்காக பிரத்யேக கிராமம்!

சீனமக்கள் விரும்பி உண்ணும் இறைச்சி வகைகளில், பன்றி இறைச்சிக்கு முக்கியமான பங்கு உண்டு. இந்தாண்டில் மட்டும், 15 லட்சம் டன் எடையுள்ள பன்றி இறைச்சியை இறக்குமதி செய்ய, சீன அரசு திட்டமிட்டுள்ளது. சீனாவில் தொழிற்சாலைகள் அதிகரித்து விட்டதால், பன்றிகளை வளர்ப்பதற்கு தகுந்த சூழல் இல்லை என்றும், அதனால் தான், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதாகவும் பேச்சு எழுந்துள்ளது.
இந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், ஜாங்குபு என்ற, மரங்கள் சூழ்ந்த குளு, குளு பிரதேசத்தில், பன்றிகளை வளர்ப்பதற்காக, பிரத்யேகமாக ஒரு கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. பன்றிகள் வசிப்பதற்காக இங்கு, கான்கிரீட்டாலான, 600 சிறிய குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும், பத்தாயிரம் ரூபாய் செலவில் அமைக்கப் பட்டுள்ளன.
இங்கு பன்றிகள் விளையாடுவதற்காகவும், உற்சாகமாக வலம் வருவதற்காகவும், பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தினமும், காலை 8 மணிக்கு, குடில்களில் இருந்து திறந்து விடப்படும் பன்றிகள், மாலை 5 மணிவரை, மற்ற பன்றிகளுடன் சேர்ந்து விளையாடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றன. பன்றிகளுக்கான கிராமத்தை பராமரித்து வரும் அதிகாரிகள் கூறுகையில், “இயற்கையான சூழலில் வளரும் பன்றிகளின் இறைச்சி தான், மிகவும் ருசியாக இருக்கும். மார்க்கெட்டிலும் இதுபோன்ற பன்றிகளுக்கு தான் கிராக்கி அதிகம். அதனால் தான், இந்த கிராமத்தை உருவாக்கியுள்ளோம்…’ என்கின்றனர். ருசிக்க தெரிந்தவர்கள்.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 4,054 other followers

%d bloggers like this: