Daily Archives: ஜூலை 2nd, 2012

தளர்வா இருக்கே என்ற கவலையா உங்களுக்கு?

பிறப்புறுப்பு இறுக்கம் இன்றி தளர்வாக இருந்தாலோ, அரிப்பு போன்ற நோய் தொற்றுகள் இருந்தாலோ பெண்களுக்கு தாம்பத்ய உறவில் ஈடுபாடு இருக்காது. முக்கியமாக குழந்தை பிறந்த பிறகு இறுக்கம் தளர்ந்துவிட்டதாகவும், அதன் விளைவாக உறவில் நெருக்கம் குறைந்து விட்டதாகவும் பல பெண்கள் புலம்புவதுண்டு. இதனால் மனரீதியாக சிக்கல்களுக்கும் ஆளாவதுண்டு. இந்த தளர்வினை எளிதாக சரி செய்து விடலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

கெகெல் எனப்படும் பிரத்யேகப் பயிற்சியின் மூலம் அந்த இடத்தை மீண்டும் டைட்டாக்கலாம். சிறுநீர் கழிக்கிற போது அதைப் பாதியிலேயே அடக்கிக் கொள்கிற மாதிரியான பயிற்சிதான் இது. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சரியாகச் செய்கிற பட்சத்தில் கட்டாயம் பலனளிக்குமாம்.

ஒவ்வொரு பெண்ணின் பிறப்புறுப்பிலும் சுமார் பதினைந்து விதமான பாக்டீரியா கிருமிகள் குடியிருக்குமாம். அத்தனையும் நல்ல பாக்டீரியா. அதனால் கெட்ட கிருமிகள் அத்தனை லேசில் அங்கே நுழைய முடியாதாம். உடலின் மற்ற பகுதிகளைப் போலவே பிறப்புறுப்புக்கும் காற்றோட்டம் அவசியம். அப்போதுதான் அந்தப் பகுதி சுவாசிக்க முடியுமாம். அதற்கு இடம் கொடுக்காமல் எப்போதும் இறுக்கமான உள்ளாடை மற்றும் ஜீன்ஸ் அணிகிறவர்களுக்கு அடிக்கடி பிறப்புறுப்புத் தொற்று வர வாய்ப்புண்டாம்.

பல பெண்களையும் தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கும் விஷயம் அந்தரங்க உறுப்பில் உண்டாகும் அரிப்பு. அந்த இடத்தின் வறட்சி, இறுக்கமான உடை போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம். அரிப்பு ஒரு நாளைக் கடந்து தொடர்ந்தாலோ, பிறப்புறுப்பின் உள்ளே அரிப்பிருந்தாலோ, அது ஈஸ்ட் தொற்றாகவோ, பால்வினை நோயின் அறிகுறியாகவோ இருக்கக் கூடும்.

மாதம் ஒரு முறை மார்பக சுய பரிசோதனை வலியுறுத்தப்படுகிற மாதிரியே, பிறப்புறுப்பு சுய பரிசோதனையும் அவசியம். அந்த இடத்தில் காணப்படுகிற சிறிய கொப்புளங்கள், பருக்கள் போன்றவை அலட்சியப்படுத்தப்படலாம். ஆனால் வேறு ஏதேனும் வித்தி யாசங்களை உணர்கிற பட்சத்தில் அது உடனடியாக மருத்துவப் பரி சோதனைக்குட்படுத்தப் பட வேண்டும்.

ஐயாயிரத்தில் ஒரு பெண் குழந்தை வீதம் பிறப்புறுப்பும், கர்ப்பப்பையும் இல்லாமல் பிறப்பதுண்டு. ஆனாலும் செயற்கையாக பிறப்புறுப்பை வைக்கிற அளவுக்கு இன்றைய நவீன மருத்துவத்தில் வசதிகள் பெருகிவிட்டதால் கவலை வேண்டாம். குழந்தை பெற வாய்ப்பில்லாமல் போனாலும், அவர்களது செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படாமலிருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

நீங்கள் செலவாளி என்றால்…? இதைப் படியுங்கள்

ண விஷயத்தில் நீங்கள் எப்படி? பர்ஸில் இருக்கும் பணத்தைத் தாராளமாகச் செலவு செய்பவரா அல்லது யோசித்து பர்ஸை திறப்பவரா?

நிதி நிர்வாகத்தில் நீங்கள் எப்படி என்று உங்களை நீங்களே அறியலாம். இதோ இப்படி…

மாதக் கடைசியில், ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்காக நீங்கள் ஒரு புதிய ஆடை வாங்க வேண்டும். அப்போது…

அ. எனது வங்கிக் கணக்கு பலவீனமாக இருக்கிறது. எப்படி அவ்வளவு பணமும் செலவானது என்று எனக்கே தெரியவில்லை.

ஆ. விலை உயர்ந்த ஆடை வாங்குவதற்குத் தேவையான தொகை எனது வங்கிக் கணக்கில் உள்ளது. ஆடை மட்டுமல்ல, அழகான ஒரு ஜோடி ஷூக்களும் நான் வாங்கிக் கொள்ளலாம்.

மிக அருமையானதாகத் தோன்றும் ஒரு புதிய முதலீட்டுத் திட்டம் பற்றி நீங்கள் அறிகிறீர்கள். அவ்வேளையில்…

அ. நானே முடிவெடுப்பதற்குப் பதிலாக, என் அப்பா சொல்வதைக் கேட்பேன். முதலீட்டுத் திட்டங்கள் எல்லாம் `வேஸ்ட்’, வங்கியில் பணத் தைப் போட்டு வைத்திருப்பதே `பெஸ்ட்’ என்ற எண்ணம் கொண்டவர் எனது அப்பா.

ஆ. குறிப்பிட்ட முதலீட்டுத் திட்டம் பற்றி தகுதி வாய்ந்த நிதி ஆலோசகர்களிடம் மேலும் கேட்டறிந்தபிறகு அதில் பணம் போடுவேன்.

உங்கள் கிரெடிட் கார்டு ஸ்டேட்மென்ட் வந்திருக்கிறது, பயமுறுத்துகிறது. ஆனால், இன்னொரு நாள் காலணி ஷோரூமில் பார்த்த ஒரு புது ஜோடி ஷூ உங்கள் கண்ணுக் குள்ளேயே நிற்கிறது.

அ. ஒரே ஒரு கூடுதல் செலவால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. அடுத்த மாதத்தில் கொஞ்சம் இறுக்கிப் பிடித்துக்கொள்ளலாம் என்று நினைப்பேன்.

ஆ. அடுத்த மாதம் வரை ஆசையைத் தள்ளிப் போடலாம் அல்லது கொஞ்சம் பணம் சேர்த்துக் கொண்டு யோசிக்கலாம் என்று எண்ணுவேன்.

நீங்கள் வேலை பார்ப்பது ஒரு தனியார் நிறுவனத்தில். எனவே உங்களின் ஓய்வுக் காலத்தில் பென்ஷன் எதுவும் கிடைக்காது. இந்நிலையில்…

அ. பணம் நிறைய வரும்போது சேமித்துக்கொள்ளலாம். இது இஷ்டம் போல் செலவழிக்கும் நேரம் என்று தாராளமாய் இருப்பேன்.

ஆ. ஓய்வுக் காலம் பற்றி ஏற்கனவே சிந்தித்திருக்கிறேன். புத்திசாலித்தனமாக இப்போதே பல்வேறு முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்திருக்கிறேன்.

உங்களிடம் இருந்து பல நண்பர்கள் நிறையக் கடன் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அது பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. காரணம்…

அ. அவர்கள் எல்லாம் என் உயிர்த் தோழர்கள். எனவே பணத்தைத் திருப்பித் தராவிட்டாலும் பரவாயில்லை.

ஆ. இது முற்றிலுமாகத் தவிர்க்க முடியாத விஷயம். ஆனால் யார் எவ்வளவு வாங்கியிருக்கிறார்கள், எப்போது திருப்பித் தருவார்கள் என்று எனக்குத் தெரியும். பெரும்பாலும், நட்புக்குள் பணம் குறுக்கிடுவதைத் தவிர்ப்பேன்.

அதிகமாக `அ’ என்றால்…

பண விஷயத்தில் உங்களை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டிய நேரம் இது. நீங்கள் சேமிப்பிலும், சரியான முதலீடுகளிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசர அவசியம். அப்போதுதான் உங்களுக்குப் பணம் தேவைப்படும்போது தடுமாறாமல் இருப்பீர்கள்.

அதிகமாக `ஆ’ என்றால்…

பணம் உங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. உங்களின் புத்திசாலித்தனமான செலவு முறையாலும், சேமிப்பு, முதலீடுகளாலும், கடினமான நேரங்களில் நீங்கள் யாரிடமும் கையேந்த வேண்டியிராது.

வேர்ட்: கடைசி பக்கத்திலிருந்து பிரிண்ட்

அதிக பக்கங்களில் இருக்கும் வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைப் பிரிண்ட் எடுத்து முடிக்கையில், தாள்கள் எல்லாம் வரிசையாக பக்கம் 1,2,3 என இல்லாமல் 40,39 என இருப்பதைக் காணலாம். இதனை மீண்டும் ஒவ்வொரு தாளையும் சரி செய்திட இன்னும் அதிக நேரம் ஆகும். இதனை எப்படி மாற்றலாம்? அச்சிட்டபின் நமக்கு வேலை இல்லாமல் செய்திடலாம்?
கடைசி பக்கத்தை முதலில் பிரிண்ட் செய்து பின் அப்படியே இறுதியிலிருந்து முதல் பக்கம் வரை டாகுமெண்ட் ஒன்றை அச்செடுக்கும்படி செய்திடலாம். இவ்வாறு அச்சிட்டுப் பெற கீழே கொடுத்துள்ளபடி செட் செய்திடவும்.
Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். நிறைய டேப்களுடன் Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அதில் Print என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் “Printing options” என்ற பகுதியில் உள்ள “Reverse print order” என்பதில் கிளிக் செய்திடவும். பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடி வெளியேறவும்.