Daily Archives: ஜூலை 6th, 2012

ரொமான்ஸ்க்கு ஏற்ற நேரம் இரவுதான்… இது ஜூலியின் சாய்ஸ்

ஹாலிவுட் ஜாலி தம்பதிகள் ஏஞ்சலினா ஜூலி – பிராட் பிட் தம்பதியர் தங்களின் ரொமான்ஸ்க்கு ஏற்ற இடமாக நீச்சல்குளம், வாட்டர் பால்ஸ் அருகில் உள்ள குளுமையான பிரதேசங்களைத்தான் பயன்படுத்துகின்றனராம். அதேபோல் இரவு நேரத்தில் மட்டுமே தங்களின் ரொமான்ஸ்ஸை வைத்துக்கொள்கின்றனராம்.

உலகம் முழுக்க ரொமான்ஸுக்கு உகந்த நேரம் இரவு என்பது ஹாலிவுட் டாப் ஸ்டார் ஏஞ்செலீனா ஜூலிக்கும் பொருத்தமாகவே உள்ளது. அவரும் கூட காதல் கணவர் பிராட் பிட்டுடன் ஹாப்பியாக செலவழிக்க இரவு நேரங்களையே தேர்ந்தெடுப்பாராம். பகல் நேரங்களில் மூச்!.

காதலுக்கும், காமத்துக்கும் நேரம் காலம் கிடையாது என்பார்கள். அதற்காக நேரம் காலமே தெரியாமல் அதிலேயே மூழ்கியிருப்பதும் தவறு என்றும் கருத்து உண்டு. இது ஹாலிவுட் ஜாலி தம்பதியருக்கும் தெரியும் போலும். அதனால்தான் தங்களுடைய ரொமான்ஸ் நேரத்தை படு கவனமாக தேர்ந்தெடுத்து அதை பக்காவாக பயன்படுத்துகின்றனராம். இதனால்தான் அவர்களுடைய காதல் வாழ்க்கை படு இனிமையாக இருக்கிறதாம்.

எனக்கு இரவு நேரங்கள்தான் மிகவும் பிடிக்கும். பி்ட்டுக்கும் அப்படித்தான். எங்களது வீட்டுக்குள் நுழையும் அளவுக்கு இன்னும் பாப்பராஸிகளின் தொல்லை இல்லை. எனவே அந்த தனிமையும், அதனுடன் இணையும் இனிய மெல்லிசையும், அழகான இருளும், மெல்லிய வெளிச்சமும் எங்களை மீண்டும் காதல் காலத்திற்கு கூட்டிச் சென்று விடும்.அந்த இரவு நேரங்கள்தான் எங்களின் சக்தியாக விளங்குகிறது. இருவரும் மனம் விட்டுப் பேச, சுவையாக உரையாட அது வாய்ப்பு தருகிறது. எங்களது காதல் இன்று வரை நீர்த்துப் போகாமல் இருக்கவும் இதுதான் காரணம்.

எங்களது தனிமையை நாங்கள் தீர்மானித்து விட்டவுடன், முதலில் ஆறு குழந்தைகளையும் முன்கூட்டியே சாப்பாடு கொடுத்து அவர்களது வேலைகளை முடித்து விட்டு, தூங்கச் செய்து விடுவோம். அதில் ஏதாவது ஒன்று வீம்பு செய்யும், வம்பு பண்ணும். இருப்பினும் சாப்பாடு தேவையென்றால் அவர்களே எடுத்து சாப்பிட்டுக் கொள்ளும் அளவுக்கு பழக்கி வைத்திருப்பதால் பெரிய அளவில் பிரச்சினை வந்ததில்லை.பிறகு இருவரும் எங்களது ரொமான்ஸை ஆரம்பிப்போம்.

இன்று கணவன், மனைவியரிடையே நெருக்கம் இல்லாமல் போவதற்கு இப்படிப்பட்ட தனிமைகள் கிடைக்காததே காரணம். அதை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். நாங்கள் இதற்காக மெனக்கெடுகிறோம். இனிமையான வாழ்க்கையை தொடருகிறோம்.

படுக்கை அறை மட்டுமே ரொமான்ஸ்க்கு ஏற்ற இடம் என்று பெரும்பாலோனோர் கூறுகின்றனர். ஆனால் சமையலறையும், நீச்சல்குளமும் கூட ரொமான்ஸ்க்கு ஏற்ற இடம்தான் என்கின்றனர். அதேபோல நீச்சல் குளத்தின் அருகில் உள்ள குளுமையும், வாட்டர்பால்ஸ் அருகில் உள்ள இடமும் எங்களின் ரொமான்ஸ்க்கு அற்புதமான இடம். ஏனெனில் அம்மா, அப்பா என்பதைத் தாண்டி இன்னமும் நாங்கள் காதலர்கள்தான். இது போன்ற உணர்வு எல்லோருக்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் கணவன், மனைவியாகவும் நாம் வெற்றிகரமாக செயல்பட முடியும் என்கிறார் ஜூலி.

பிஸியான சூழ்நிலையிலும் தங்களுக்கு என நேரம் ஒதுக்கும் இந்த ஹாலிவுட் தம்பதியரைப் போல எல்லோருமே நேரத்தை ஒதுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். என்கின்றனர் நிபுணர்கள்.

ஒயினில் தயாரித்த உடை!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சில புதுமை விரும்பி விஞ்ஞானிகள், போதை தரும் ஒயினில் தயாரான உடையை வடிவமைத்துள்ளனர். பெரிய கொப்பரையில், போதை தரும் ஒயினை ஊற்றி, அதில், “அசேடாபாக்டர்’ என்ற பாக்டீரியாவை கலக்கின்றனர். இதையடுத்து, அந்த ஒயின், நுரை ததும்பிய கெட்டியான திரவமாக மாறி விடுகிறது. இந்த திரவத்தை மேலும் பக்குவப்படுத்தி, மேலும், சில ரசாயனப் பொருட்களை சேர்த்து, மென்மையான இழைகளாக அதை மாற்றி விடுகின்றனர். இதைத் தொடர்ந்து, நாம் விரும்பும் வடிவத்தில், அதை மாற்றி, ஆடைகளாக தயாரிக்கின்றனர். இந்த புதுமையான உடைகளை வடிவமைக்கும் பணி, இன்னும் முழுமையடையவில்லை என்றாலும், சோதனை ரீதியான உடை தயாராகி விட்டது. சமீபத்தில், ஒரு இளம் பெண்ணுக்கு, இந்த உடைகளை அணிவித்து அழகு பார்த்தனர். ஒயினே போதை தரும் விஷயம். இதில், ஒயினில் தயாரிக்கப்பட்ட உடை எப்படி இருக்கும் என்று கேட்கவும் வேண்டுமா. இந்த புதுமையான உடை தயாராவதற்கு முன்னரே, அதை வாங்குவதற்காக, ஏராளமான இளம் பெண்கள், முன்பதிவு செய்து வருகின்றனர்.

எளிதில் பைல் பெற்றுத் திறக்க

வேர்ட் தொகுப்பில் பைல் ஒன்றைத் திறக்க Open மெனுவில் கிளிக் செய்கிறோம். அந்த விண்டோவில் கிடைக்கும் பட்டியலில் அனைத்து டாகுமெண்ட் பைல்களும் கிடைக்கின்றன. ஆனால் நாம் விரும்பும் பைலை, இந்தக் குவியலில் தேடி எடுக்க நேரமாகிறது. இதனைத் தவிர்க்க என்ன செய்யலாம்? இதற்கான சுருக்கு வழி ஒன்று உள்ளது.
வேர்ட் Open டயலாக் பாக்ஸைத் திறந்து காட்டி, அதன் கர்சர் , File Name என்ற கட்டத்தில் நிற்கிறது. நீங்கள் N என்ற எழுத்தில் தொடங்கும் டாகுமெண்ட் பைல்களின் பட்டியலை மட்டும் பெற விரும்பினால், N*.doc என டைப் செய்து என்டர் தட்டவும். உடன், அந்த ட்ரைவில் உள்ள டைரக்டரிகள், அல்லது போல்டர்கள் முதலாவதாகவும், பின்னர் N என்ற எழுத்தில் தொடங்கும் பைல்கள் அடுத்ததாகவும் கிடைக்கும். இனி இதில் நீங்கள் விரும்பும் பைலைத் தேர்ந்தெடுத்து திறக்கலாம். அதிக பைல்களை ஒரு போல்டரில் வைத்திருக்கை யில் இந்த கட்டளை உங்களுக்குப் பயன் தரும். டாகுமெண்ட் பைல்கள் மட்டுமின்றி, வேறு எக்ஸ்டன்ஷகள் கொண்ட பைல்களை யும் பட்டியலிட்டுக் கேட்கலாம். எடுத்துக்காட்டாக, டெக்ஸ்ட் பைல் ஒன்றைத் திறக்க வேண்டும் எனில் பொதுவாக *.txt எனக் கொடுத்துப் பெறலாம். இந்த வகைப் பைல்களில் கு என்ற எழுத்தில் தொடங்கும் பைல் மட்டும் வேண்டும் எனில், S*.txt என டைப் செய்து பட்டியலைப் பெறலாம்.

உடலில் வாழும் பாக்டீரியா வகையை நிர்ணயிக்கும் மரபணுக்கள்!


நாம் விரும்புகிறோமோ இல்லையோ, நம் உடலுக்கு உள்ளேயும், தோலின் மேற்பரப்பிலும் கோடிக்கணக்கில் பாக்டீரியாக்கள் பிள்ளை குட்டிகளுடன், குடியும் குடித்தனமுமாக வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. மேலும், மனித உடலுக்கு உள்ளேயும், மேலேயும் வாழும் குறிப்பிட்ட சில வகை பாக்டீரியாக்கள், சில நோய்களுடன் தொடர்புடையவையாய் இருக்கின்றன என்கிறது சமீபத்திய ஆய்வு.

ஆனால், `யார் உடலில் எந்த வகையான பாக்டீரியாக்கள் இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பது எது?’ என்பது மட்டும் இன்னும் ஒரு மர்மமாகவே தொடர்கிறது.

`இதன் பின்னணியில் ஒரு மரபியல் காரணம் இருக்கிறது என்பது தெரியும். ஆனால் இந்த கூற்று எவ்வளவு ஆழமானது என்பது மட்டும் புரியவில்லை’ என்கிறார் கார்னெல் பல்கலைக்கழகத்தின் மரபியலாளர் ரான் ப்ளெக்மேன்.

மனித உடலுக்கு உள்ளேயும், மேலேயும் வாழும் நுண்ணுயிரிகளை வகைப்படுத்தி பட்டியலிட, ரான் தலைமையிலான ஆய்வுக்குழு மனித நுண்ணுயிரி பிராஜெக்ட் தகவல்களை ஆய்வு செய்தது.

மனித தோல், வாய், மலம் மற்றும் இதர பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் பாக்டீரியாவின் டி.என்.ஏ. இருக்கிறதா என்று பரிசோதிப்பதே மனித நுண்ணுயிரி பிராஜெக்ட் முயற்சியின் நோக்கம். ஆனால், இத்தகைய பரிசோதனைகளின்போது மேற்குறிப்பிட்ட மாதிரிகளில் சிறிதளவு மனித மரபுப் பொருளும் கலந்து விடுகின்றன.

அதனால், பாக்டீரிய டி.என்.ஏ. தகவல்களில் கலந்திருக்கும் மனித டி.என்.ஏ. தகவல்களை சேகரித்து, அதிலிருந்து சுமார் 100 பேருடைய மரபணு புரொபைல் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. அதன்பிறகு மனித மற்றும் பாக்டீரிய டி.என்.ஏ. தகவல்களை ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.

பரிசோதனையின் முடிவில், 51 வெவ்வேறு மனித மரபணு மாற்றங்களுக்கும், உடலுக்கு உள்ளேயும் மேலேயும் உள்ள சுமார் 15 உடல் பகுதிகளில் வாழும் சில வகை பாக்டீரியாக்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது.

முக்கியமாக, இந்த பரிசோதனையில் கண்டறியப்பட்ட சில மனித மரபணுக்களும் அவற்றுடன் நெருங்கிய தொடர்புடைய பாக்டீரியாக்களும் சில நோய்களுடன் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.

உதாரணமாக, சர்க்கரை நோய்க்கு காரணமான இன்சுலின் ஹார்மோனை உற்பத்தி செய்யும் றிசிஷிரி 2 மரபணுவுக்கு அருகில் மரபணு மாற்றங்களை உடையவர்களின் குடலில், `பாக்டீரியாய்ட்ஸ்’ எனப்படும் ஒரு வகை பாக்டீரியாக்கள் மிகவும் அதிகமான எண்ணிக்கையில் இருந்தன.

சுவாரசியமாக, இந்த மரபணு மாற்றம் டைப் 2 சர்க்கரை நோயுடன் சம்பந்தப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. அதுபோலவே அதிகமான பாக்டீரியாய்ட்ஸ் பாக்டீரியாக்களும் டைப் 2 சர்க்கரை நோயுடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், காயங்கள் சம்பந்தமான நோய்களுடன் தொடர்புடைய சிஙீசிலி 12 மரபணு மாற்றங்களை உடையவர்களின் தோலில் `க்ரானுலிகாட்டெல்லா’ எனப்படும் ஒரு வகை பாக்டீரியாக்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தது. இந்த பாக்டீரியாக்கள் தோல் காயங்களுடன் சம்பந்தப்பட்டவை என்பது இதற்கு முன்பே தெரிந்த செய்தியாகும்.

இது `கோழிக்கு பிறகு முட்டையா? இல்லை முட்டைக்கு பிறகு கோழியா?’ போன்ற பிரச்சினையாகும் என்கிறார் ஆய்வாளர் ரான் ப்ளெக்மேன். அதாவது, `ஒரு சில வகையான மரபணு மாற்றங்கள் உள்ளவர்களின் உடலில் குறிப்பிட்ட வகையான பாக்டீரியாக்கள் குறிப்பிட்ட நோய்களை ஏற்படுத்துகின்றனவா அல்லது குறிப்பிட்ட சில மரபணு மாற்றங்களால் நோய்கள் ஏற்பட்டு அதனால் சில வகையான பாக்டீரியாக்கள் அதிக எண்ணிக்கையில் வளருகின்றனவா?’ என்பது இன்னும் புரியவில்லையாம்.

`எது எப்படியோ, குறிப்பிட்ட சில நோய்களால் ஏற்படும் ஆபத்தினை நிர்ணயிக்க குறிப்பிட்ட பாக்டீரியா கலவைகளை மருத்துவர்கள் அடையாளம் காட்டிகளாக பயன்படுத்தலாம்’ என்கிறார் பெஞ்சமின் வாய்ட். இவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் மரபியலாளர் ஆவார்.

ஆனால் அதற்கு முன்பு மரபணுக்கள், நோய்கள் மற்றும் நுண்ணுயிரிகள் இவை மூன்றும் தொடர்புடையவை என்பதை புள்ளி விவரத்துடன் ஆய்வாளர்கள் நிரூபிக்க வேண்டியது அவசியம் என்கிறார் மரபியலாளர் பெஞ்சமின். நம் உடலில் எந்த வகையான பாக்டீரியாக்கள் வாழ வேண்டும் என்பதை நாமும் ஒரு வகையில் நிர்ணயிக்கிறோம் என்னும் புதிய அறிவியல் உண்மையை ஆதாரங்களுடன் முன்வைக்கிறது இந்த ஆய்வு. ஆக, நம் உடலில் வாழும் பாக்டீரியாக்கள் ஒரு வகையில் நம் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன என்பதை இந்த ஆய்வின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

முனைவர் பத்மஹரி

வேர்ட் டிப்ஸ்….புல்லட் பாய்ண்ட்ஸ்

புல்லட் பாய்ண்ட்ஸ்
வேர்டில் டெக்ஸ்ட்டின் சில பாகங்களை முக்கியப்படுத்தவும் கோர்வையாக வரிசைப் படுத்திக் காட்டவும் புல்லட் பாய்ண்ட்ஸ் பயன்படுத்துகிறோம். இதற்கு வழக்கமாக பார்மட் மெனு சென்று இதற்கான பிரி வினைத் தேர்ந்தெடுக்கிறோம். அல்லது டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து மெனு பாரில் அதற்கான ஐகானைக் கிளிக் செய்கிறோம். இதற்குப் பதில் புல்லட் அமைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டில் கர்சரை வைத்து பின் கண்ட்ரோல்+ஷிப்ட்+எல் அழுத்தினால் போதும். தானாக புல்லட் அமைந்துவிடும். கண்ட்ரோல்+ஷிப்ட்+என் அழுத்தினால் இந்த புல்லட் பாய்ண்ட்கள் நீங்கிவிடும்.

பாரா தொடக்க இடைவெளி
வேர்ட் தொகுப்பைப் பயன்படுத்துபவர் களுக்கு இந்த குறிப்பு மிகவும் பயனுள்ள தாக இருக்கும். நாம் அனைவருமே பாராவில் இன்டென்ட் என்று சொல்லப்படும் முதல் வரி ஸ்பேஸ் இடைவெளி விட்டு டெக்ஸ்ட்டை அமைப்போம். இதில் இன் டென்ட் மற்றும் ஹேங்கிங் இன்டென்ட் என்று வகைகள் உண்டு. இன்டென்ட் என்பது நாம் வழக்கமாக பாராவின் முதல் வரியில் முன் இடைவெளி விட்டு அமைப்பது. ஹேங்கிங் இன்டென்ட் என்பது முதல் வரி தவிர்த்து மற்ற வரிகளை இன்டென்ட் செய்து ஸ்பேஸ் விட்டு அமைப் பது. இதற்கு கீ போர்டில் இருந்து கைகளை எடுத்து பின் மவுஸ் தேர்ந்தெடுத்து சரியான இடத்தில் கர்சரை வைத்து பின் மீண்டும் கீ போர்டு பயன்படுத்தி இன்டென்ட் அமைக் கிறோம். மவுஸ் இல்லாமல் கீ போர்டு மூலம் இன்டென்ட் அமைக்கக் கீழ்க் குறிப் பிட்டுள்ள கீகளைப் பயன்படுத்தவும்.
Ctrl + M : இந்த கீகளை அழுத்தினால், மொத்த பாராவும் அரை அங்குலம் நகர்ந்து கொடுக்கும். மேலும் அதிகம் நகர்ந்து செல்ல அடுத்தடுத்து கொடுக்கவும்.
Ctrl + Shift + M : இந்த கீகளை அழுத்தினால், அரை அங் குலம் இன்டென்ட் இருப்பதைக் குறைக்கும். அதாவது ஏற்கனவே கொடுத்த இடை வெளியை முழு பாராவிற்கும் குறைக்கும்.
Ctrl + T : இந்த கீகள் ஹேங்கிங் இன்டென்ட் இடைவெளியை ஒரு டேப் ஸ்பேஸ் அளவிற்கு வலது புறமாக நகர்த்தும்.
Ctrl + Shift + T : ஹேங்கிங் இன்டென்ட் இடைவெளியை ஒரு டேப் ஸ்பேஸ் அளவிற்குக் குறைக்கும்.
கீ போர்டு மூலமாகவே இன்டென்ட் அமைப்பது எளிதாக உள்ளதா!

டிப்ஸ்… டிப்ஸ்….
வேர்ட் டாகுமெண்ட்டில் உடனடியாக ஸ்பெல்லிங் சோதனை மேற்கொள்ள எப்7 அழுத்தவும்.
ஹைபன் பயன்படுத்திய சொற்கள் பிரி யாமல் இருக்க வேண்டும் என்றால் ஹை பன் டைப் செய்திடுகையில் கண்ட்ரோல் +ஷிப்ட் கீகளை அழுத்திக் கொள்ளுங்கள்.
குறிப்பிட்ட இரண்டு சொற்கள் வரி ஓரங்களில் பிரியாமல் அமைய வேண்டும் என்றால் கண்ட்ரோல்+ஷிப்ட்+ஸ்பேஸ் பயன்படுத்துங்கள்.
திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத் திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள். அதே போல் திரையில் தெரியும் பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Down அழுத்தவும்.

பகவானை அடையும் மார்க்கம்!

நாம் பகவானை அடைய வேண்டுமானால், பல ஜென்மாக்களில், பகவானை வழிபட்டு பக்தி செய்திருக்க வேண்டும். ஒரே ஜென்மாவில் இது சாத்தியமில்லை. பகவான், மேல் தட்டில் நின்று கொண்டு, கைகளை நீட்டி, நம்மை வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறான். நாம் தாம் ஒவ்வொரு படியாக ஏறி, அவனை அடைய வேண்டும். அப்படி ஏறி, கடைசி படிக்கு போய்
விட்டால், அவன், தன் கைகளை நீட்டி, நம்மை அழைத்துக் கொள்வான். இது தான் வாழ்க்கையின் லட்சியமாக இருக்க வேண்டும்.
நாம் கடைசி படிக்கு போய்விட்டாலும் கூட, கால் தவறி கீழே விழுந்து விட்டால், மறுபடியும் முயற்சி செய்து மேல்படிக்குப் போக வேண்டும்.
இங்கே ஒரு படி என்பது, ஒரு ஜென்மா. இப்படி, பல ஜென்மாக்களிலும் அவனையே வழிபட்டு வந்தால், ஏதாவது ஒரு ஜென்மாவில், அவனை அடையலாம். அது, எந்த ஜென்மா என்பது தான் தெரியாது. அதனால், தொடர்ந்து ஒவ் வொரு ஜென்மா விலும் வழிபட்டுக் கொண்டே வர வேண்டும். இதற்கு, ஒவ்வொரு ஜென்மாவிலும் மனிதப்பிறவி எடுக்க வேண்டும். ஆனால், இங்கேயும் ஒரு சங்கடம் உள்ளது. அடுத்து மனிதப் பிறவியே கிடைத்து விடுமா? அவனவன் செய்த பாவ புண்ணியங்களுக்குத்
தகுந்தபடி தான் மறு ஜென்மா ஏற்படு கிறது. புண்ணியசாலியாக இருந்தால், மீண்டும் மனிதப் பிறவி கிடைக்கும். அப்போதும் பகவானை வழிபட வேண்டும். நற்கதி பெற வேண்டும் என்ற புத்தி ஏற்பட வேண்டும்.
இப்படியே பல ஜென்மாக்களிலும் பகவானை பக்தி செய்து, கடைசி ஜென்மாவில் அவனை அடைய வேண்டும். நடுவில் ஏற்படும் ஜென்மாக்களில், தொடர்ந்து பக்தி செய்து வர முடியுமா என்றால், முடியும். அதற்கு, ஸத் சங்கத்தின் தொடர்பு இருக்க வேண்டும். ஒருவன் கோவிலுக்குப் போக கிளம்புகிறான். வழியில் ஒரு நண்பன் வருகிறான். “டேய்… வாடா… இன்னிக்கு
தியேட்டரில் புதுப் படம் ரிலீஸ் ஆகிறது. முதல் ÷ஷா பார்த்து விட்டு வரலாம்…’ என்று கையை பிடித்து இழுக்கிறான். இவன் திட சித்தமுள்ளவனாக இருந்தால், “நான் சினிமாவுக்கு வரவில்லை…’ என்று சொல்லி, கோவிலுக்குப் போவான். இல்லாவிட்டால், நண்பனோடு சேர்ந்து, சினிமாவுக்கோ, சூதாட்ட கிளப்புக்கோ தான் போக வேண்டியிருக்கும். அதுவுமில்லாவிட்டால் தெருவோரம் நடக்கும் ரிக்கார்டு டான்சுக்கு போய், வேடிக்கை பார்த்துவிட்டு வருவான்.
கோவிலுக்கு போக கிளம்பியவன், தகாத சகவாசத்தினால், வேறு எங்கேயோ போய் வருகிறான். இப்படி இருந்தால், பல படிகளை கடந்து பகவானை அடைவது எப்படி? அதனால்தான், “நல்லவர்களோடு சேர்ந்திரு… ஸத் சங்கத்தை, நாடு…’ என்றனர். இப்படி செய்து தான் பகவானை அடைய முடியும். சும்மா சினிமாவும், ரிக்கார்டு டான்சும் பகவானை அடையும் மார்க்கமல்ல. தெரிகிறதா?