Daily Archives: ஜூலை 8th, 2012

வேலைக்கு தகுதியில்லாத பி.டெக்.,பட்டதாரிகள்

கடந்த 2011 ஆம் ஆண்டிற்கான பொறியியல் பட்டதாரிகளுக்கான, தேசிய வேலைவாய்ப்பு அறிக்கை, மத்திய தொலைத் தொடர்பு துறையால் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், பி.டெக்., படிப்போரில், 8 சதவீதம் மாணவர்கள் மட்டுமே வேலை பெறத் தகுதியானவர்கள் என, அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

55 ஆயிரம் பேரிடம் ஆய்வு:ஐ.டி., நிறுவனங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் தனியார் மென்பொருள் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று, நாடு முழுவதும் உள்ள, 250 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில், 2011 ஆம் ஆண்டு தொழில்நுட்ப பட்டம் பெற்ற, 55 ஆயிரம் மாணவர்களிடம் ஆய்வு நடத்தியது.இந்த ஆய்வில், மாணவர்களின் தொழில்சார்ந்த தொழில்நுட்ப அறிவு மற்றும் மென்திறன் ஆகியவை சோதிக்கப்பட்டன.இவற்றை கண்டறிய, மாணவர்களின் ஆங்கில மொழிப் புலமை, கணக்கிடும் திறமை, தர்க்கம் சார்ந்த சிந்தனை மற்றும் கணிப்பொறி புரோகிராம் எழுதும் திறமை ஆகியவை அளவுகோலாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

மென்திறன்கள்:பெரிய மற்றும் நடுத்தர ஐ.டி., நிறுவனங்கள் வளாக நேர்காணலில், மென்திறன் மற்றும் தொழில்நுட்ப திறன்களில், பயிற்சி அளிக்க தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். இந்த பயிற்சி குறைந்தது, 3 முதல் 6 மாதங்கள் வரை நடக்கும். அதன் பின்னர், தான் அவர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர். இந்த ஆய்வில், ஐ.டி., முடித்து திரும்பும் மாணவர்களில், 17.5 சதவீத மாணவர்கள் மட்டுமே பயிற்சி அளிக்கும் அளவிற்கு தொழில்நுட்பத் திறன் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 46 சதவீத மாணவர்கள் தொழில்நுட்ப அறிவு குறைவு காரணமாகவும், 54 சதவீத மாணவர்கள் மென்திறன் குறைவு காரணமாகவும் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்டவை:டில்லியில் படித்த மாணவர்களில், 40 சதவீதம் பேருக்கும் பிகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் படித்தவர்களில், 35 சதவீதம் பேருக்கு இரண்டாவது மூன்றாவது இடங்களிலும் உள்ளனர். கல்லூரிகளின் எண்ணிக்கை உயர்ந்த அளவிற்கு, பொறியியல் கல்வி தரம் உயரவில்லை.

தமிழ்நாட்டில்… : தமிழ்நாட்டில், 525 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், 1.50 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் ஆண்டு தோறும் படிப்பை முடித்து வெளியே வருகின்றன.
தமிழ்நாட்டில் படித்தவர்களில், 10 சதவீத மாணவர்கள் மட்டுமே, ஐ.டி., நிறுவனங்களில் பணி பெறக்கூடிய திறமை உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதித் திறனில் தமிழகம், 16வது இடத்தில் அதாவது கடைசியில் உள்ளது.ஆறு முக்கிய மெட்ரோ நகரங்களில், சென்னை மற்றும் புற நகரில் உள்ள மாணவர்கள் தான் கடைசி இடத்தில் உள்ளனர்.

சென்னை தான் கடைசி:மெட்ரோ நகரங்களில் டில்லியில் இருந்து ஐ.டி., படித்து வரும், 39.78 சதவீத மாணவர்களிடம் ஐ.டி., கம்பெனிகளில் பணி பெறுவதற்கான திறமை உள்ளது. கோல்கட்டா இரண்டாம் இடத்திலும், பெங்களூரு மூன்றாவது இடத்திலும் உள்ளது. சென்னை, 8.35 சதவீத திறனுடன் கடைசி இடத்தில் உள்ளது.

இது குறித்து, பிரபல மனிதவள நிறுவனம் மா பா கன்சல்டன்சி நிறுவன நிர்வாக இயக்குனர் லதா கூறியதாவது:கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தரம் குறைந்தது இதற்கு முக்கிய காரணம். கல்லூரி முடித்த மாணவர்கள் பல தனியார் கல்லூரிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப் படுகின்றனர். பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை உயர்ந்து அளவிற்கு, கல்வியின் தரம் உயர்த்தப்படவில்லை. மாணவர்களிடம் ஐ.டி., துறை குறித்து விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. எனினும், தென்னிந்தியாவில் ஓரளவு நல்ல நிலையில் தான் ஐ.டி., துறையினர் உள்ளனர். சேவைப்பணிகளான பி.பி.ஓ., பணிகளில் தான் நாம் பின்தங்கி உள்ளனர்.
இவ்வாறு லதா கூறினார்.

உஷார்., உஷார்., ஒரு வைரஸ் வருகிறது ; டி.என்.எஸ்.,சேஞ்சர் மூலம் அபாயம் வருமா ?

ஏய் வைரஸ் வரப்போகுதாமே என்ன செய்யப்போகிறாய் என்ற பேச்சுத்தான் தற்போது எங்குப்பார்த்தாலும் தகவல் பரிமாறக்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் இணையத்தை முடக்கி உங்களின் கணினியை செயல் இழக்கச்செய்து விடும். இது புதிதாக தாக்குதலை தரப்போவதில்லை என்ற நிம்மதியான தகவல் வல்லுநர்கள் தெரிவித்தாலும் ஏற்கனவே உங்கள் கம்ப்யூட்டரில் இந்த வைரஸ் இருந்தால் வரும் 9 ம்தேதி அம்பேல்தான் என்கின்றனர். கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள்.

டி.என்.எஸ்.,( டொமைன் நேம் சிஸ்டம் ) என்பது நாம் வைத்துள்ள தளத்தின் முகவரியை கணினிக்கு புரியும் வகையில் ஐ.பி.எண்ணாக மாற்றி அந்த தளங்கள் திறக்க உதவுகிறது. தற்போது டி.என்.எஸ்.,சேஞ்சர் ( அலூரியன் மால்வேர் ) என்ற வைரஸ் உருவாக்கி இதன் மூலம் உங்கள் சிஸ்டத்தை செயல் இழக்கச்செய்யும் நாச வேலையில் அயல்நாட்டவர்கள் 7 பேர் இறங்கினர் . இது கடந்த நவம்பரில் பரப்பி விடப்பட்டது. இதன் மூலம் பல கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டன. மேலும் பாதிப்பில் இருந்து தப்பிக்க இதனை அமெரிக்க உளவு பிரிவு எப்.பி.ஐ., மாற்று சர்வரை நிறுவி உதவியது. இந்த சர்வரை நிறுத்திட முடிவு செய்திருப்பதால் இந்த வைரஸ் மீண்டும் வரும் 9 ம் தேதி செயல்பட துவங்கி விடுமாம். இதனால் உலகம் முழுவதும் பல லட்ச கம்யூட்டர்கள் செயல் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறியுங்கள் : எனவே டி.என்.எஸ்., சேஞ்சர் என்ற வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று அறிந்து முன்சோதனை செய்து கொள்ளவும். பெரும் கார்ப்ரேட் நிறுவனங்கள் ஆண்டி வைரஸ் வைத்திருப்பதால் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். நடுத்தரமானவர்கள் இது போன்று ஆண்டிவைரஸ் வைக்காத பட்சத்தில் பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம். எனவே தங்களின் கம்ப்யூட்டர்களில் இது போன்று வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறிய நீங்கள் www.dns-ok.us கிளிக் செய்தால் பாதிக்கப்டாமல் இருந்தால் பச்சைக்கலரில் வரும். பாதிக்கப்பட்டிருக்குமானால் சிவப்பு நிற இமேஜ் வரும். வரும் 9 ம்தேதி என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர் இன்டர்நெட் உபயோகிப்பாளர்கள்.

வைரசை முற்றிலுமாக அழிக்க : ஒருவேளை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் முதலில் இந்த படிவத்தை forms.fbi.gov/dnsmalware பூர்த்தி செய்யவும். உங்கள் கணினியில் இருந்து அந்த

 

வைரசை நீக்குவது எப்படி என இங்‌கே விளக்கம் தரப்பட்டுள்ளது. விண்டோஸ் XP, Vista, 7 கணினிகளுக்கு: DNS Changer வைரசை கணினியில் இருந்து நீக்குவதற்காக பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான அவிரா ஒரு புதிய மென்பொருளை உருவாக்கி உள்ளனர். இந்த லிங்கில் Avira DNS Repair சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

 

டவுன்லோட் ஆகியதும் exe பைலை இரண்டு கிளிக் செய்து இன்ஸ்டால் செய்ய தொடங்கியவுடன் கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதுக்காப்பாக உள்ளது. ஆகவே இந்த மென்பொருள் உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகாது.ஒருவேளை பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மென்பொருள் அந்த வைரசை கண்டறிந்து உங்கள் கணினியில் இருந்து அழித்து விடும்.

 

மேக்(Mac) கணினிகளுக்கு: மேக் கணினிகளில் இருந்து இந்த வைரசை நீக்க இந்த மென்பொருளை DNS Changer Removal Tool டவுன்லோட் செய்து நீக்கி கொள்ளலாம்.

புதிய தேசிய தொலைதொடர்பு கொள்கை

அண்மையில் மத்திய அமைச்சரவை, “”புதிய தேசிய தொலை தொடர்புக் கொள்கைத் திட்டம் 2012”க்கு ஒப்புதல் அளித்துள்ளது. தகவல் தொழில் நுட்பத் துறையில் புதியதாகத் தொழில் தொடங்கு பவர்களுக்கும், இணையத் தொடர்பினைத் தொடர்ந்து மேற்கொண்டிருப்பவர்களுக் கும், மொபைல் போன் வாடிக்கையாளர் களுக்கும் இது மகிழ்ச்சி தரும் பல விஷயங்களைத் தந்துள்ளது.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், பாதுகாப்பான, நம்பி செயல்படக் கூடிய, அனைவரும் குறைந்த கட்டணத்தில் பயன்படுத்தக் கூடிய உயர்ந்த தரம் மிக்க தொலைதொடர்பு வசதிகளை அளிப்பதாகும். இதன் மூலம் சமுதாய பொருளாதார வளர்ச்சி மிக வேகமாக உயரும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் முக்கிய அம்சங்கள்:
1. கிராமப்புறங்களில் தொலைதொடர்பு வசதிகளை இப்போதைய 39 சதவிகிதத் திலிருந்து 70 சதவிகிதமாக 2017 ஆம் ஆண்டுக்குள் உயர்த்தி, 2010ல் 100% ஆக உயர்த்துவது.
2. குறைந்தது 2 Mbps வேகத்தில் அனைவருக்கும் இன்டர்நெட் இணைப்பினை வழங்குவது.
3. இந்தியாவிலேயே தொலை தொடர்பு சாதனங்களைத் தயாரிக்க அடிப்படை வசதிகளையும், தொழில் நுட்ப அறிவையும் அளிப்பது.
4. நெட்வொர்க் இணைப்புகள் மற்றும் சாதனங்களை ஒருங்கிணைப்பது.
5. ஸ்பெக்ட்ரம் அலைவரிசையினை, தொலைதொடர்பு துறையின் அனைத்து பிரிவுகளும் பயன்படுத்தும் வகையில் அளிப்பது.
6. ஸ்பெக்ட்ரம் அலைவரிசையினைப் பயன்படுத்த உரிமம் வழங்குவதனை எளிமைப்படுத்தி, இணைய வழியில் விண்ணப்பித்து உரிமம் பெறுவதனை அமல்படுத்துதல்.
7. மொபைல் போன் பயன்பாட்டில், மொத்த இந்தியாவினையும் ஒரு மண்டலமாகக் கொண்டு வருவது; ரோமிங் கட்டணத்தை அடியோடு ரத்து செய்வது மற்றும் ஒரே எண்ணை எந்த மண்டலத் திற்கும் சென்று, அந்த மொபைல் சேவை நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்ளும் உரிமை தருதல்.
8. சேவையை மற்றவர்களுக்கு மாற்றி விற்பனை செய்தல்.
9. இன்டர்நெட் வழிமுறை மூலம் பேச வசதி தருதல்.
10. ஐ.பி.வி.6 பெயர் அமலாக்கம் மற்றும் கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையை வளர்த்தல்.
நுகர்வோர் விரும்பும் அனைத்து பிரிவுகளையும் இந்த இலக்குகள் குறி வைத்துள்ளன என்பதில் சந்தேகமில்லை. இந்த இலக்குகள் அடையப்பட்டால், நிச்சயம் இந்தியப் பொருளாதாரம் உயரும் என்பதில் சந்தேகம் இல்லை.

பேசும் செடிகள்!

செடிகள் காற்றில் ஆடுவதைப் பார்த்திருப்பீர்கள். அவை அவ்வாறு ஆடுவதன் மூலம் ஒன்றுக்கொன்று பேசுகின்றன என்ற அதிசயத் தகவலைக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள். தாவரங்கள் ஒலிக்கு `ரெஸ்பான்ஸ்’ காட்டுவது மட்டுமல்ல, தாங்களே சில ஒலிகளை வெளியிடவும் செய்கின்றன என்கிறார்கள் இவர்கள்.

இந்த ஆய்வை மேற்கொண்ட பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அதிசக்தி வாய்ந்த ஸ்பீக்கர் களை பயன்படுத்தினர். அதன்மூலம் சோளப் பயிர்கள் தமது வேர்ப் பகுதியிலிருநëது வெளியிட்ட `கிளிக்’ ஓசையைக் கேட்டனர்.

காற்றில் செடிகள் தமது விருப்பம் ஏதுமில்லாமல் இயல்பாக ஆடுவது போலத் தோன்றினாலும், உண்மையில் அவை அப்போது தொடர்ந்து `உரையாடி’க் கொண்டு இருக்கின்றனவாம்.

தாவரங்கள் ஏற்படுத்தும் அதே அலைவரிசையிலான ஒலியைத் தொடந்து ஏற்படுத்தியபோது, தாவரங்கள் அதை நோக்கி வளரத் தொடங்கியிருக்கின்றன. தாவரங்கள் பொதுவாக வெளிச்சம் நோக்கி வளரும் என்று நமக்குத் தெரியும். ஒலியும் அவற்றை ஈர்க்கிறது என்பது தற்போது உறுதியாகியிருக்கிறது.

எக்ஸெட்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிடும் தகவல் இன்னும் வியப்பை ஏற்படுத்துகிறது. அதாவது, முட்டைக்கோஸ் தாவரமானது ஒருவித வாயுவை வெளியிட்டு, வெட்டுக்கிளிகள், செடிகளை வெட்டும் கத்திரிகள் குறித்து பிற தாவரங்களை எச்சரிக்கின்றனவாம்.

மனிதர்களின் காதுகளுக்குக் கேட்காத ஒலி மொழியில் செடிகள் பேசிக்கொள்கின்றன என்பதற்கு இவ்வாறு உறுதியான ஆதாரம் கிட்டியிருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மொழி என்பது மனிதர்களின் கண்டுபிடிப்பு என்று இனியும் நாம் பெருமையடித்துக் கொள்ள முடியாது!