Daily Archives: ஜூலை 10th, 2012

மனைவிக்கு அன்பு பரிசாய் அடிக்கடி முத்தம் கொடுங்கள்….

பெண்களின் உணர்வுகள் இதயத்திலிருந்து இயக்கப்படுகிறது. அவர்களுக்கு “காம உணர்வு” வாழ்க்கையில் தனிப்பட்ட விஷயமில்லை. அவர்களின் மனம் இதமாக இருப்பது அவசியம். கணவன் படுக்கையறைக்கு வெளியே எப்படி நடந்து கொள்கிறான் என்பதைப் பொருத்துத்தான் படுக்கையறையின் மகிழ்ச்சியிருக்கும். மனைவியைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, அதிரப் பேசுவது, மோசமாக நடந்துகொள்வது ஆகியவை அவளை பாதிக்கும். அன்பும் நெருக்கமும் இருவருக்கும் இடையில் இருந்தால்தான் உடல் உறவும் இன்பமாக இருக்கும். வேலையிலிருந்து திரும்பும் கணவன், மனைவிக்கு வாங்கிவரும் பரிசுப்பொருட்கள் அவளுக்கு மகிழ்ச்சியைத் தரும். இந்த மகிழ்ச்சி செக்ஸ் உறவை இரட்டிப்பாக்கும்.

பல பெண்கள், “என் கணவர் படுக்கையறையைத் தவிர மற்ற நேரங்களில் முத்தமிடுவதில்லை” என்ற மனக்குறை உள்ளவர்களாக இருக்கிறார்கள். பெண்களுக்கு வெறும் காமத்தை பின்னணியாகக் கொண்ட தொடுதல்களைவிட பரிவான, இதமான தொடுதல், மெல்ல அணைப்பது, கைகளைப் பற்றிக்கொள்வது, முத்தமிடுதல் ஆகியவை மிக முக்கியமானவையாகும். எனவே எப்பொழுதெல்லாம் உங்கள் மனைவி விரும்புகிறாரோ அப்பொழுதெல்லாம் ஒரு முத்தத்தைப் பரிசளியுங்களேன். உங்கள் மீதான காதலும் பாசமும் அதிகரிக்கும்.

உங்களின் உறவு இனிமையாக மாற, மனம் திறந்து பேசுங்கள். ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துங்கள். இதமான, உணர்வுப் பூர்வமான விஷயங்கள் மகிழ்ச்சியைப் பல மடங்காக்கும். உங்கள் மனைவி, உங்களைத் தழுவி இதமாக, கழுத்து, தலையை வருடிவிடுவது உங்களின் இதயத்தை எப்படித் துள்ள வைக்கிறது! அதுபோலத்தான் உங்களின் நெருக்கமும் அவர்களுக்கு மகிழ்ச்சிகரமானது என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஆண்களைப் பொருத்தவரை செக்ஸ் என்பது சாலையில் செல்லும் தெரிந்த நபரிடம், போகிற போக்கில் ” ஹலோ! எப்படி, வரட்டுமா…” என்பது போல இருக்கிறது. பல ஆண்கள் உச்சக்கட்டம் முடிந்தவுடன் துவண்டுபோய் சுருண்டுவிடுகிறார்கள். ஆனால் உறவுக்குப்பின்னும் நெருக்கம் இருக்க வேண்டும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பாகும்.

உறவின்போது ஆண்களிடம் “என்டார்பின்” இயக்குநீர் அதிகரிக்கும். இதனால் உணர்ச்சிகளை ஆண்கள் உடனடியாகக் கொட்டித் தீர்த்துவிடுவார்கள். பெண்களிடத்தில் இது மெதுவாக வேலை செய்யும். அதற்கு ஈடுகொடுத்து ஆண்கள் செயல்பட வேண்டும். இந்த இணக்கமான போக்கு பெரிய மாற்றங்களைச் செய்யும். அப்போது உறவில் மகிழ்ச்சி எல்லையற்றதாக மாறும்.

உச்சக்கட்ட நிலையைத் தொடவேண்டும் என்ற ரீதியலான உடலுறவு என்பது ஒரு நதியின் அடுத்த கரைக்குச் செல்வதில் கவனம் இருப்பதைப் போன்றது. செல்லும் வழியில் உள்ள ரசிக்கவேண்டிய பல விஷயங்கள் அந்த பரபரப்பில் மறைக்கப்படும். உடலுறவில் ஏற்படும் உச்சக்கட்ட நிலையைவிட, உடல் ரீதியான நெருக்கம், உணர்வுகளின், உணர்ச்சிகளின் நெருக்கம் மற்றும் முன்விளையாட்டுக்களின் மூலமாகப் பெண்கள் உச்சத்தைத்தொடுவார்கள்.

செக்ஸ் உறவில் உச்சக்கட்டம் என்பது ஒரு இன்பமான விஷயம். ஆனால், அது எப்பொழுது ஏற்படும் என்பதை கணிக்க முடியாது. ஒரு ஆய்வுப்படி 60 சதவீதம் பெண்கள் மட்டும்தான் உச்சக்கட்ட நிலையைத் தொட்டுள்ளார்கள். மனைவி உச்சக்கட்ட நிலையை அடைய கணவன் உதவ வேண்டும்.

உறவின் போது சில ஆண்கள் மூர்க்கத்தனமாகச் செயல்படுவார்கள். சிரிப்பதையும், புன்னகை செய்வதையும்கூட மறந்துவிடுவார்கள். இது தவறான செயலாகும். உடலுறவின்போது கலகலப்பாக இருப்பது அவசியம். ஜாலியான மூடில் பழகுவது அதிக மகிழ்ச்சியைத் தரும். மேலும் காதல் வயப்பட்டு, சில சின்னச் சின்ன சில்மிஷங்களைச் செய்ய வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனராம்.

பூமியின் தட்பவெப்ப நிலையின் பின்னணி!

உலகில் இன்று வெப்பப் பிரதேசங்களாக உள்ள சில பகுதிகள் பழங்காலத்தில் குளிர்ப் பிரதேசங்களாக இருந்து பின்னர் மாற்றம் அடைந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ஆனால் ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற பகுதிகள் எப்போதுமே ஒரே மாதிரியான வெப்பமான பிரதேசமாகவே இருந்து வந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தீர்மானிக்கின்றனர்.

பூமியின் பல்வேறு பகுதிகளில் நிலவும் தட்பவெப்பநிலை குறித்து புவியியல் அறிஞர்களால் பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன.

பூமியின் மீது படர்ந்து படிந்து கிடக்கும் பனிப் போர்வையின் இடமாற்றமே அந்தந்தப் பிரதேசத்தின் தட்பவெப்பநிலையைப் பிரதிபலிக்கிறது என்பது ஒரு கருத்து.

பூமியின் மீது படிந்துள்ள பனிக்கட்டியின் எடை மில்லியன் கன மைல்களாகும். இது பூமியின் மொத்தப் பரப்பில் 10 சதவீதம்.

ஆல்ப்ஸ் மலை மீதுள்ள பனிக்கூரையை புவியியல் அறிஞர்கள் நெடுங்காலமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இம்மலை மீதுள்ள பனிக்கட்டியின் தன்மையை ஒத்த பனிக்கட்டிகள் உலகின் பிற பகுதிகளிலும் காணப்படுவதைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.

ஓரிடத்தில் இருக்கும் பிரம்மாண்டமான பனிப் படிவங்கள் இடம் விட்டு இடம் நகரக்கூடும் என்றும், அவ்வாறு நகர்ந்து செல்லும்போது ஆங்காங்கே பிரம்மாண்ட பனிப் பாறைகளை விட்டுச் சென்றிருக்க வேண்டும் என்றும் அறிஞர்கள் கருதுகிறார்கள்.

இவ்வாறு பனிப் படலம் இடம் விட்டு இடம் மாறும்போது பனிப்படலம் போய்ச் சேர்ந்த இடம் குளிர்ச்சித் தன்மையையும், அது இடம் விட்டு நகர்ந்த பகுதி வெப்பத் தன்மையையும் பெற்றிருக்கக் கூடும் என்றும் அறிஞர்கள் நினைக்கின்றனர்.

பனிப் படலங்கள் இடம்பெயரும்போது ஆங்காங்கே பெரிய ஏரிகள் தோன்றின. அம்மாதிரி ஏரிகள் கனடாவிலும், அமெரிக்காவிலும் உள்ளன. பல பெரிய ஏரிகள், பனிப்படலங்கள் விட்டுச் சென்ற சின்னங்கள் என்றே கருதப்படுகின்றன.

பனிப் போர்வையின் வருகையும், விலகலும் தட்பவெப்பநிலையை மட்டுமல்லாமல் கண்டங்களின் உருவங்களையும் மாற்றி அமைக்கின்றன.

உதாரணமாக, அண்டார்டிகாவிலும், கிரீன்லாந்திலும் உள்ள பனிப் பாறைகள் அனைத்தும் உருகத் தொடங்கினால் கடல் மட்டமானது 200 அடிக்கு மேல் உயர்ந்துவிடும்.

அப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டால் கடல் ஓரத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் மூழ்கடித்துவிடும். அதே சமயத்தில் கிரீன்லாந்து, சைபீரியா, அலாஸ்கா, கனடா போன்ற பகுதிகளில் கடலை ஒட்டிய புதிய நிலப்பரப்புகள் தோன்றத் தொடங்கும்.

பூமியில் சிலசமயம் வெப்பம் கூடுதலாகவும், சில சமயம் குறைவாகவும் இருப்பதற்கு வேறு சில காரணங்களும் இருக்கக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள் சிலவற்றை அண்மைக் காலத்தில் கண்டிருக்கிறார்கள்.

இந்தக் காரணத்தை கரியமில வாயுவின் `பசுமைக் கூட விளைவு’ என்கிறார்கள்.

கரியமில வாயுவானது அகச்சிவப்பு கதிரியக்கத்தை அதிக அளவில் உட்கொள்கிறது. வானக் காற்றில் இந்த அகச்சிவப்பு கதிரியக்கம் அதிக அளவில் இருந்தால் அது இரவில் சூரிய உஷ்ணத்தில் வெப்பமடைந்து பூமியில் இருந்து வெப்பம் வெளியேறி ஓடுவதைத் தடுக் கிறது. அதன் காரணமாக வெப்பம் சேமித்து வைக்கப் படுகிறது. இதன் காரணமாக பூமியில் வெப்பச் சூழல் நிலவும். இதற்கு மாறாக வானக் காற்றில் கரியமில வாயு குறைந்தால் பூமி சிறுகச் சிறுகக் குளிர்ச்சியடையும்.

`பசுமைக்கூட விளைவை’ தடுக்கும் விதமாகத்தான் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.

கூகுள் தேடுதலில் கால வரையறை

இன்று தகவல் தேடுதலுக்குப் பலரும் பயன்படுத்துவது கூகுள் தேடல் தளத்தைத்தான். நாள் ஒன்றில், சராசரியாக நான் இருபது முறைக்கும் மேலாகப் பயன்படுத்துகிறேன். நம் தேடலும், கூகுள் தரும் முடிவுகளும் ஆச்சரியத்தை அளித்தாலும், சில வேளைகளில் நாம் தேடும் வகையில் தகவல் கிடைக்காது. தேவையற்ற தகவல்கள் வந்து குவிக்கப்பட்டிருக்கும். நாம் அண்மையில் 20 நாட்களுக்குள் வந்த தகவல்களைத் தேடுவோம். ஆனால், கூகுள் எப்போதோ, சில மாதங்களுக்கு, ஆண்டு களுக்கு முன்னர் வந்த தகவல்களையும் காட்டும். இவ்வாறு இல்லாமல், குறிப்பிட்ட நாட்களுக்குள் இணையத்தில் பதித்த தகவல்களை மட்டும் காட்டுமாறு நாம் கூகுளுக்கு ஆணையிடலாம்.
1. முதலில் நாம் தேடும் தேடல் சொல் அல்லது சொற்களை கூகுள் சர்ச் பீல்டில் அல்லது டூல் பாரில் அமைக்க வேண்டும்.
2. முடிவுகளுக்கான பட்டியல் காட்டப்படும். இதில் இடது பக்கப் பிரிவில் உள்ள Show search tools என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கால வரையறைகளை அமைக்கும் வகையில் சில ஆப்ஷன்ஸ் விரிக்கபடும். இதில் “Any time” என்பது மாறா நிலையில் அமைக்கப்பட்டிருக்கும். இதன் கீழாக “Past hour,” “Past 24 hours,” “Past 2 days,” என தொடர்ந்து பல ஆப்ஷன்ஸ் கிடைக்கும்.
4. இதன் கீழாக Custom range என்பதில் கிளிக் செய்திடவும்.
5. உடனே காலண்டர் ஒன்று காட்டப்படும். இதில் எந்த நாளிலிருந்து பதிக்கப்பட்ட தகவல் வேண்டும் என்பதை “From” பீல்டில் அமைப்பதன் மூலம் வரையறை செய்திடலாம்.
6. நீங்கள் பீல்டை காலியாக விட்டு விட்டால், இன்று வரை பதிக்கப்பட்ட தகவல்கள் கிடைக்கும். இல்லை எனில் இங்கும் நாள் ஒன்றைக் குறிப்பிடலாம்.
7. அடுத்து, Search என்பதில் கிளிக் செய்தால், நாம் குறிப்பிட்ட கால வரையறைக்குள் பதியப்பட்ட தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.
இது நமக்கு மிகவும் உதவும் ஒரு தேடல் வசதி. இதன் மூலம் நாம் விரும்பும் வகையில் முடிவுகளைப் பெறலாம்.