Daily Archives: ஜூலை 18th, 2012

குழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு: நிபுணர்கள் தரும் ஆலோசனை

பண்டைய காலங்களில் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டால் பெண்களுக்கு மட்டுமே குறை இருப்பதாக கருதப்பட்டது. இதனால் குழந்தை பிறக்காததை காரணம் காட்டி பெண்ணை ஒதுக்கி வைத்து விட்டு இரண்டாம் தாரம் கூட ஆண்கள் திருமணம் செய்து கொண்டனர். தற்போது விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக சோதனை செய்யப்பட்டதில் ஆண்களின் விந்தணுக்களில் குறைபாடு இருந்தாலும் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும் என்று கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சை முறைகளும் வந்து விட்டன. எனவே சரியான அளவில் விந்தணுக்களை அதிகரிக்க உளவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.

நமது கற்பனைக்குக் கூட எட்டாத கடவுளின் அற்புதங்களின் ஒன்று மகப்பேறு. ஆணின் விந்துவும், பெண்ணின் முட்டையும் சேர்ந்தால் கரு உண்டாகும். இந்த சேர்க்கை நிகழாவிட்டால், கருத்தரிப்பு ஏற்படாது. மாதவிடாய் முடிந்த 14 அல்லது 15 நாளில், பெண்ணின் சினைப்பைகளிலிருந்து சினைமுட்டை (Ovum) வெளிபடும். இது ஒரு நாள் தான் உயிரோடு இருக்கும். அதற்குள் உடலுறவு நிகழ்ந்தால் கர்ப்பம் உண்டாகும்.

உடலுறவிற்கு பின் கோடிக்கணக்கான ஆணின் விந்து அணுக்கள் பெண்ணுறுப்பில் விழும். இவை ஆவேசத்துடன் முன்நோக்கி நகர்ந்து கர்பப்பையை நோக்கி நீந்தி ஒடும். ‘ஸ்பீட்’ என்ன தெரியுமா? ஒரு செ.மீ. கடக்க கிட்டத்தட்ட 3.2 நிமிடங்கள் (8 நிமிடங்களில் 1 அங்குலம்) ஆகும். கடக்க வேண்டிய தூரம் (பெண்ணுறுப்பிலிருந்து கர்பப்பையின் தூரம்) 15 லிருந்து 25 செ.மீ. இருக்கும். இவை கர்பப்பையை அடைய நீந்துவதற்கு உதவுவது வழவழப்பான விந்து திரவம். இலக்கை அடையும் முன்பே லட்சக்கணக்கான விந்தணுக்கள் சோர்வடைந்து விழுந்து விடும். வலிமையும், நகரும் துடிப்பும் உடைய விந்தணுக்கள் தான் முட்டையை அடையும். இந்த மிகச் சிறிய (புள்ளி அளவே உள்ள) முட்டையை உயிரணுக்கள் முட்டி, முட்டி மோதும். இவற்றில் சிறந்த ஒரே ஒரு உயிரணு தான் முட்டையின் வெளிச் சவ்வை துளைத்து உள்ளே நுழையும். நுழைந்த உடனே, வேறு அணுக்கள் உள்ளே புகாதபடி சினை முட்டையில் சவ்வுப் பகுதி கதவு போல் மூடிக் கொண்டு விடும்! ஒரே ஒரு விந்தணுக்குத் தான் அனுமதி!

சாதாரணமாக ஒரு ஆணின் ஒரு மில்லி லிட்டர் விந்தில் குறைந்த பட்சம் 4 கோடி விந்தணுக்கள் இருக்க வேண்டும். அதிக பட்சமாக 12 கோடி கூட இருக்கும். இந்த குறைபாடு தான் முக்கியமான பிரச்சனை. ஆண்களின் விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுவதற்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. உடலில் சூடு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை சோதனை செய்து கண்டறியலாம். புற்றுநோய் அறிகுறிகள் இருந்தாலோ, மூளையில் குறைபாடு இருந்தாலோ விந்தணு உற்பத்தி பாதிக்கும். அதேபோல் மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, சரியான உடற்பயிற்சி இன்மை, டெஸ்டோஸ்டிரன் சுரப்பு குறைபாடினாலும் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும்.

முருங்ககாயை நன்கு வேக வைத்து சாப்பிட்டு வந்தால் காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து ஒரு அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும். நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும். அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடவேண்டும். பின்னர் ஒரு டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும். அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும். கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.

ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

வெள்ளைப்பூண்டு விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும். இதேபோல் தர்பூசணி பழம் சாப்பிடுவதன் மூலம் விந்தணு உற்பத்தி பெருகும் என்று ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. தினசரி ஒருமணிநேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும். இது உடலில் ரத்த ஒட்டத்தின் அளவை அதிகரிக்கிறது. இதனால் டெஸ்டோடிரன் ஹார்மோன் சுரப்பும் அதிகரிக்கும். அதேபோல் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியும் அதிகரிக்கும். இது விந்தணு உற்பத்தியை அதிகரிக்கிறது.

வேர்ட்: கூடுதல் நுணுக்கங்கள்

இரண்டு வாரங்களுக்கு முன்னர், “வேர்ட் தொகுப்பை நம் வசமாக்க’ என்று, அதன் மாறா நிலையில் உள்ள சில அமைப்புகளை மாற்றுவது குறித்து ஐந்து செட்டிங்ஸ் நுட்பங்களை வெளியிட்டோம். தொடர்ந்து இன்னும் சிலவற்றை வரும் நாட்களில் பார்க்கலாம் என்று அந்தக் கட்டுரையின் முடிவை அடுத்து, பல வாசகர்கள் அனைத்தையும் தொடர்ந்து தருமாறு வேண்டிக் கொண்டு பல கடிதங்களை அனுப்பி உள்ளனர். இதோ இன்னும் ஐந்து வழி முறைகளைக் காணலாம்.
1. மினி டூல்பார் (Mini Toolbar): நாம் டெக்ஸ்ட் ஒன்றை தேர்ந்தெடுக்கையில், வேர்ட் மினி டூல் பார் ஒன்றைக் காட்டுகிறது. இதில் பல பார்மட்டிங் ஆப்ஷன்ஸ் அடங்கியுள்ளது. இந்த டூல் பார் பளிச் எனக் காட்டப்படாமல், மங்கலாகத் தெரியும். இருப்பினும் பலர் இது எதற்கு வீணான காட்சி என எண்ணி, எஸ்கேப் கீ அழுத்தி மறைய வைப்பார்கள். இதனை நிரந்தரமாகத் தோன்றாமல் இருக்கும்படி செட் செய்திடலாம்.
1. File மெனு கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007 தொகுப்பில், Office பட்டனை அழுத்தி பின்னர் Word Options என்பதில் கிளிக் செய்திடவும்.
2. தேவைப்பட்டால், இடது பக்கம் உள்ள பிரிவில் (Left pane) General என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் User Interface Options என்ற பிரிவில், Show Mini Toolbar On Selection என்னும் ஆப்ஷனில் உள்ள கட்டத்தில் டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். இனி, நீங்கள் டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கையில், மினி டூல் பார் காட்டப்பட மாட்டாது. மீண்டும் இது வேண்டும் என்றால், மேலே கூறியுள்ளபடி சென்று, இறுதி ஆப்ஷனில், டிக் அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும்.
2. ட்ராயிங் கேன்வாஸ் (Drawing Canvas): வேர்ட் புரோகிராம் கொண்டிருக்கும் Drawing Canvas படம் வரைவதற்கான ஒரு தனி அடுக்கினைத் தருகிறது. இதில் அமைக்கப்படும் ஆப்ஜெக்ட்டுகள் ஒரு தனி இடத்தை எடுத்துக் கொள்வதுடன், இவ்வாறு வைக்கப்படும் அனைத்து ஆப்ஜெக்ட்களும் ஒரு குழுவாகவே இயங்கும். வேர்ட் புரோகிராமினைப் பயன்படுத்தும் பலர் இந்த கேன்வாஸ் படிமத்தைப் பயன்படுத்துவது மிகக் கடினமான ஒன்றாக இருப்பதாகக் கூறி உள்ளனர். பெரும்பாலானவர்களுக்கு இது தேவையே இல்லை. நீங்கள் இன்னும் வேர்ட் 2003 பயன்படுத்துபவராக இருந்தால், இந்த வேர்ட் கேன்வாஸ் வசதியை முடக்கி விடலாம். கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்படவும்.
1. Tools மெனுவிலிருந்து Options தேர்ந்தெடுக்கவும்.
2. கிடைக்கும் விண்டோவில், General டேபில் கிளிக் செய்திடவும்.
3. General Options பிரிவில் Automatically Create Drawing Canvas When Inserting AutoShapes என்பதில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்து விடவும்.
4. ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
வேர்ட் 2007 மற்றும் வேர்ட் 2010 தொகுப்புகளில், வேர்ட் கேன்வாஸ் மாறா நிலையில் முடக்கப்பட்டுள்ளது. இவற்றில் அது முடக்கப்படாமல் இருந்தால், வேர்ட் பயன்படுத்துகையில், ஒருவர் இதனை இயக்கி இருக்க வேண்டும். இதனை மீண்டும் இயங்கா நிலையில் வைத்திட கீழ்க்குறிப்பிட்டுள்ளபடி செயல்படவும்.
1. Tools மெனுவிலிருந்து Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007ல், Office பட்டன் அழுத்தி, பின்னர் Word Options என்பதில் கிளிக் செய்திடவும்.
2. இடது பிரிவில் Advanced என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. Editing பிரிவில், Automatically Create Drawing Canvas When Inserting AutoShapes என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
4. பின்னர், ஓகே கிளிக் செய்து மூடவும்.
3.நார்மல் டாட் எக்ஸ் (Normal. dotx): வேர்ட் தன்னுடைய புதிய டாகுமென்ட்களை Normal. dotx என்ற கட்டமைப்பில் (Template) வைக்கிறது. ஆனால், இந்த டெம்ப்ளேட் கொண்டுள்ள செட்டிங்ஸ் அமைப்பு, நம் தேவைகளுக்கு இணையாக இருக்காது. எனவே இந்த Normal.dotx கட்டமைப்பில் நம் தேவைகளுக்கேற்ப சில மாற்றங்களை மேற்கொள்ளலாம். பொதுவாக, பலரும் விரும்பும் மாற்றம் இதில் தரப்பட்டுள்ள எழுத்துரு மற்றும் அதன் பாய்ன்ட் அல்லது பைகா அளவு. இதில் டெம்ப்ளேட் அளவில் மாற்றங்களை ஏற்படுத்தக் கீழ்க்காணும் செட்டிங்ஸ் அமைக்கவும்.
1. புதிய டாகுமென்ட் ஒன்றைத் திறந்து அதில் Home டேப்பில் கிளிக் செய்திடவும்.
2. கீழ்புறம் வலது பக்கத்தில் உள்ள அம்புக்குறியை கிளிக் செய்து Font groupற்கான டயலாக் பாக்சைப் பெறவும்.
3. இந்த டயலாக் பாக்சில், தேவையான மாற்றங்களை மேற்கொள்ளவும். நீங்கள் வேர்ட் 2003 பயன்படுத்துபவராக இருந்தால், Format மெனுவிலிருந்து Font தேர்ந்தெடுத்து, கிடைக்கும் டயலாக் பாக்சில் இந்த மாற்றங்களை ஏற்படுத்தவும். எடுத்துக்காட்டாக, மாறா நிலையில் உள்ள எழுத்துருவிற்குப் பதிலாக, Arial எழுத்துருவினை நீங்கள் விரும்பலாம். அதன் அளவும் 12 ஆக இருக்க திட்டமிடலாம்.
4. இந்த டயலாக் பாக்சை மூடும் முன், Set As Default என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் 2003 தொகுப்பில், Default என்பதில் கிளிக் செய்திடவும்.
5. அடுத்து கிடைக்கும் உறுதிப்படுத்தலுக்கான டயலாக் பாக்சில், Normal டெம்ப்ளேட்டின் அடிப்படையில் உருவாக்கப்படும் அனைத்து டாகு மென்ட்களுக்கும் நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை அமல்படுத்தத் தேவையான ஆப்ஷ னைத் தேர்ந்தெடுக்கவும்.
6. அடுத்து இருமுறை ஓகே கிளிக் செய்து வெளியேறவும். சிலர், தங்களுடைய டாகுமென்ட்களில், மார்ஜின் மற்றும் ஸ்டைல் போன்றவற்றைத் தாங்கள் விரும்பும் வகையில் அமைக்க எண்ணுவார்கள். இவர்கள் நார்மல் டெம்ப்ளேட்டில் இந்த மாற்றங்களை ஏற்படுத்தாமல், custom template ஒன்றில் விரும்பும் மாற்றங்களை ஏற்படுத்திப் பயன்படுத்துவது நல்லது.
4. சொல் தேர்வு (Word Selection): வேர்ட் டாகுமென்ட் ஒன்றில் ஒரு சொல்லில் அதன் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்த பின்னர், அடுத்து இருக்கும் சொல்லிலும் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்தால், வேர்ட் அந்த சொல் முழுவதையும் தேர்ந்தெடுக்கிறது. நமக்குத் தேவையோ இல்லையோ, வேர்ட் சொல் முழுமையுமே தேர்ந்தெடுக்கும். ஏனென்றால், மாறா நிலையில் இது போல அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாற்ற,
1. File டேப் கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007ல் Office பட்டன் கிளிக் செய்து Word Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2003ல், Tools மெனு பெற்று Options தேர்ந்தெடுக்கவும்.
2. இடது புறம் கிடைக்கும் பிரிவில் Advanced என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2003ல் Edit டேப்பினைத் தேர்வு செய்து கிளிக் செய்க.
3. Editing Options பிரிவில், When Selecting, Automatically Select Entire Word என்பதன் எதிரே உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும்.
4. பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி சொற்களைத் தேர்வு செய்கையில், நாம் விரும்பும் வகையில் அதனைப் பகுதி பகுதியாகத் தேர்வு செய்திடலாம்.
5. எழுத்து, இலக்கண பிழை மற்றும் பார்மட்டிங் (Spelling, Grammar and Formatting): வேர்ட் நாம் டெக்ஸ்ட்டை டைப் செய்திடுகையில், தானாகவே சொற்களில் உள்ள எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகளைக் கண்டறிந்து, சொற்களின் கீழாக சிகப்பு வண்ணத்தில் நெளிவு கோடுகளை இட்டுக் காட்டுகிறது. இதே போல பார்மட்டிங் வகையில் பிரச்னை இருந்தாலும் காட்டுகிறது. சிகப்பு கோடு இருந் தால், வேர்ட் பயன்படுத்தும் சொல்லில் அந்த சொல் இல்லை என பொருள். அதாவது, அந்த சொல் இல்லை; அல்லது நாம் தவறாக அதனை டைப் செய்திடுகிறோம். பச்சை வண்ணத்தில் கோடு இருந்தால், அது இலக்கணப் பிழையைக் குறிக்கும். பார்மட்டிங் வகையில் பிழை இருந்தால், அது நீல நிறத்தில் கோடிட்டுக் காட்டப்படும்.
இந்த பிழை சுட்டும் வசதி நமக்கு நல்லதுதான். தவறுகள் இன்றி டெக்ஸ்ட் அமைக்க முடியும். ஆங்கிலம் நமக்கு இரண்டாவது மொழி என்பதால், இந்த வசதி கட்டாயம் நமக்குத் தேவை. ஆனால், ஒரு சிலருக்கு இது அவர்கள் கவனத்தைத் திருப்பும் செயலாக அமைகிறது.
மேலும், ஆங்கிலம் அல்லாத மொழியில் டைப் செய்திடுகையில் ஏறத்தாழ ஒவ்வொரு சொல்லையும் எழுத்துப் பிழை இருப்பதாக வேர்ட் புரோகிராம் காட்டும். ஏனென்றால், பிற மொழிச் சொற்களை அதன் கீ அழுத்தங்களுக்கேற்ப ஆங்கிலச் சொற்களாக எடுத்துக் கொண்டு, அதனை தவறானது என்று வேர்ட் காட்டும். இந்த சிகப்பு, பச்சை நீல வண்ணக் கோடுகள் தேவை இல்லை; காட்டப்பட வேண்டாம் என எண்ணினால், கீழ்க்கண்டவாறு செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்.
1. File டேப் கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007ல் Office பட்டன் கிளிக் செய்து Word Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2003ல், கூணிணிடூண் மெனு பெற்று Oணீtடிணிணண் தேர்ந்தெடுக்கவும்.
2. இடது பிரிவில் Proofing என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2003ல், Spelling & Grammar டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. When Correcting Grammar and Spelling In Word என்ற பிரிவில் முதல் மூன்று ஆப்ஷன்ஸ் Check Spelling As You Type, Use Contextual Spelling, மற்றும் Mark Grammar Errors As You Type முன்பு டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். வேர்ட் 2003ல் Contextual Spelling ஆப்ஷன் தரப்படவில்லை.
4. பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
டாகுமெண்ட்களில் நீல நிற நெளிவு கோடுகள் ஏற்படாமல் இருக்க, கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொள்ளவும்:
1. File டேப் கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007ல் Office பட்டன் கிளிக் செய்து Word Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2003ல், Tools மெனு பெற்று Options தேர்ந்தெடுக்கவும்.
2. இடது புறம் கிடைக்கும் பிரிவில் Advanced என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2003ல் Edit டேப்பினைத் தேர்வு செய்து கிளிக் செய்க.
3. Editing Options பிரிவில், Keep Track Of Formatting என்பதன் கீழ் Mark Formatting Inconsistencies option என்பதன் எதிரே உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். வேர்ட் 2003ல், Editing Options பிரிவில், Mark Formatting Inconsistencies என்பதன் கீழ் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
4. பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
ஆங்கில மொழியைப் பயன்படுத்துவதில், நன்கு அதனைக் கற்று, பெரிய திறமைசாலியாக இருந்தாலும், அவற்றைக் கையாள்கையில் தவறுகள் ஏற்படுவது உண்டு. எனவே மேலே குறிப்பிட்டுள்ள திருத்தும் வசதியை மாற்றாமல் இருப்பது நல்லது. இருப்பினும், இதனை ஒரு பிரச்னையாகக் கருதினால், மேலே கண்டபடி மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

இவர்களும் அமைச்சர்கள்தான்…!

பிரான்சு நாட்டு அமைச்சரவை கூட்டம் நடக்கிறதென்றால், மீடியாக்கள் மட்டுமல்ல, ஏராளமான இளைஞர்களும், கைகளில் கேமரா வுடனும், வாய்களில் வழிந்தோடும் ஜொள்ளு<டனும், அமைச்சரவை கூட்டம் நடக்கும், எலிசி அரண்மனை முன் குவிந்து விடுகின்றனர். முன்பெல்லாம், அமைச்சரவை கூட்டம் நடந்தால், அதை ஏற்பாடு செய்யும் அதிகாரிகள், சோம் பல் முறிப்பது வழக்கம். “இவர்களுக்கு வேறு வேலை இல்லை. மாதம் தோறும் அமைச்சரவை கூட்டத்தை கூட்டி, என்ன செய்யப் போகின்றனர்…’ என, விரக்தியில் புலம்புவர்.
இப்போது நிலைமை அடியோடு மாறி விட்டது. அமைச்சரவை கூட்டம் நடக்கும் அன்று, அதி காலையிலேயே, அட்டகாச மான உடைகளை அணிந்து, ஸ்மார்ட்டாக ஆஜராகி விடுகின்றனர் அதிகாரிகள். இந்த அதிசய மாற்றங் களுக்கு காரணம். பிரான்சு அமைச்சரவையில் உள்ள நான்கு இளம் பெண்கள் தான்.
நடுத்தர தொழில் துறை இணை அமைச்சராக, பெலூர் பெல்லாரின் என் பவரும், கலாசார துறை அமைச்சராக, அருலி பிலிப் பிட்டி என்பவரும், பெண் கள் உரிமைத் துறை அமைச்சராக, நஜாத் வல்லாட் பெக்காமும், புவியியல் துறை அமைச்சராக, டெல்பின் பாத் என்பவரும் <உள்ளனர்.
இவர்கள் அமைச்சரவை கூட்டத்துக்கு வந்ததுமே, அங்கு இளமை மட்டுமல்ல, உற்சாகமும் களை கட்டி விடுகிறது. அழகான உடை, ஸ்டைலிஷான கைப் பைகள், கைகளில் பைல்களுடன், ஒய்யாரமாக இவர்கள், அமைச்சரவை கூட்டத்துக்கு வரும் அழகே தனி. சில நேரங்களில், இவர்களை பார்க்கும்போது, அமைச்சர்கள் என்பதே மறந்து போய், பேஷன் ஷோவிற்கு கேட்வாக் போகும் மாடல்களைப் போல் தோன்றமளிக்கின்றனர். “நம்ம ஊரிலும் இப்படி இளமையான அமைச்சர்கள் இருந்தால்…’ என, கற்பனை சிறகை விரித்து விடாதீர்கள். அதெல்லாம் ரொம்ப ஓவர்.

பிக்சட் டெபாசிட்: 5 ஆலோசனைகள்

வங்கியில் `பிக்சட் டெபாசிட்’ செய்யும் எண்ணத்தில் இருக்கிறீர்களா? அப்படியானால் இவற்றைப் படியுங்கள்…

1. பிக்சட் டெபாசிட் பாதுகாப்பு

நிதி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நீங்கள் எந்த நிதி நிறுவனத்தைத் தேர்வு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது. அதேவேளையில் வங்கிகளைப் பொறுத்தவரை, ஒரு வங்கியின் அனைத்துக் கிளைகளிலும் வாடிக்கையாளர் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் வரையிலான முதலீட்டுக்கு டெபாசிட் இன்சூரன்ஸும், கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷனும் காப்பீடு அளிக்கின்றன. எனவே நீங்கள் ரூ. 3 லட்சம் முதலீடு செய்யப் போகிறீர்கள் என்றால், அதை வெவ்வேறு வங்கிகளில் 3, 4 முதலீடுகளாகப் பிரித்துச் செய்யுங்கள். அது உங்கள் பணத்துக்குப் பாதுகாப்பாக அமைவதோடு, அவசரமாகப் பணம் தேவைப்பட்டால் மொத்த டெபாசிட்டையும் உடைக்க வேண்டியிராது.

உங்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் தொகையை மட்டும் `பிரிமெச்சூர் வித்டிராவல் பெனால்டி’ தொகை செலுத்திப் பெறலாம். மற்ற டெபாசிட்கள் அதுபாட்டுக்கு வளர்ந்துகொண்டிருக்கும்.

2. `டெபாசிட் ஏணி’

உங்கள் பணத்தை பல்லாண்டு காலத்துக்கு குறைவான வட்டி விகிதத்துக்கு முடக்கிப் போடும் அபாயத்தை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? வட்டி விகிதங்கள் பல்லாண்டு கால சுழற்சியில் நகரும் என்பதால், பிக்சட் டெபாசிட்கள் நிலையற்ற தன்மைக்கு உள்ளாகக் கூடியவை. இதைத் தவிர்க்க, பல்வேறு காலகட்ட அளவு கொண்ட `பிக்சட் டெபாசிட் ஏணி’யை உருவாக்குங்கள். உதாரணமாக நீங்கள் ரூ. 4 லட்சம் முதலீடு செய்யப் போகிறீர்கள் என்றால், அதை தலா ஒரு லட்சமாகப் பிரித்து, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு ஆண்டு கால அளவுகளுக்கு டெபாசிட் செய்யுங்கள். ஓராண்டு டெபாசிட் தொகை முதிர்வடையும்போது, அதை நான்காண்டு டெபாசிட்டில் மறுமுதலீடு செய்யுங்கள். இப்படிச் செய்வதன் மூலம், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு வட்டி விகிதங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களில் நீங்கள் `பாலன்ஸ்’ செய்துகொள்ளலாம்.

3. முன்னதாகப் பணத்தைப் பெற்றால்…

பணத்தை நீண்டகாலத்துக்கு வங்கியில் போட்டுவைப்பதும், முதிர்வுக்கு முன் அதை எடுப்பதும் குறைவான `ரிட்டர்ன்’தான் கிடைக்கச் செய்யும். உங்கள் வங்கி, ஓராண்டு டெபாசிட்டுக்கு 9 சதவீத வட்டியும், 5 ஆண்டுகாலத்துக்கு 9.5 சதவீத வட்டியும் வழங்குகிறது என்றால், உங்களுக்கு முன்னதாகப் பணம் தேவைப்படலாம் என்ற நிலையில், நீண்ட காலத்துக்கு ஆசைப்படாதீர்கள்.

நீங்கள் ஐந்தாண்டுத் திட்டத்தில் முதலீடு செய்து, ஓராண்டுக்குப் பின் அதை உடைக்கிறீர்கள் என்றால், ஓராண்டு டெபாசிட்டுக்கு உரிய வட்டி விகிதம்தான் உங்களுக்குக் கிடைக்கும். அத்துடன், முன்கூட்டியே பணத்தை எடுப்பதற்கான அபராதத் தொகையும் விதிக்கப்படும் என்பதால், ரிட்டர்னில் அது ஒரு சதவீதம் அளவுக்குப் பாதிக்கும்.

4. டி.டி.எஸ்.

பிக்சட் டெபாசிட் மூலம் பெறப்படும் வட்டிக்கு முழுமையாக வருமான வரி உண்டு. வட்டித் தொகை ஓராண்டுக்கு ரூ. 10 ஆயிரத்துக்கு மேலே போனால், அந்தத் தொகையை நீங்கள் பெறுவதற்கு முன்பே வங்கியானது 10.3 சதவீத வரியைக் கழித்துக்கொள்ளும். அத்துடன் முடிந்துவிடுவதில்லை. உங்களின் வருடாந்திர வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு மேல் என்றால், இந்த வருவாயில் கூடுதல் தொகையை வரியாகச் செலுத்த வேண்டும்.

டி.டி.எஸ். தொகை பிடித்தம் செய்யப்படவில்லை என்றாலும், பிக்சட் டெபாசிட்கள், பத்திரங்கள் மூலமான வருமானம் குறித்து வருமான வரிக் கணக்கில் நீங்கள் தெரிவிக்க வேண்டும். வட்டிக்கான வரியானது பணம் சேரும் அளவு அடிப்படையில் கணக்கிடப்படும்.

5. குடும்பத்தினர் பெயரில் முதலீடு செய்தாலும்…

நீங்கள் உங்கள் மனைவி அல்லது கணவர், குழந்தைகள் பெயரில் டெபாசிட் செய்தாலும் உங்களால் வரியைத் தவிர்க்க முடியாது. நீங்கள் உங்கள் மனைவி அல்லது குழந்தைக்குக் கொடுக்கும் பணத்துக்கு வரி செலுத்தத் தேவையில்லை என்றாலும், அத்தொகை முதலீடு செய்யப்படும்போது அதன் மூலமë கிடைக்கும் வருமானம், பணம் கொடுத்தவரின் வருவாயுடன் சேர்க்கப்பட்டு வரி விதிக்கப்படும். எனவே ஒருவர் தனது மனைவி பெயரில் பிக்சட் டெபாசிட்களில் பணம் போடுகிறார் என்றால், கிடைக்கும் வட்டியானது கணவரின் வருமானமாகக் கருதப்படும்.

வயதுக்கு வராத குழந்தைகளின் பெயரில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளைப் பொறுத்தவரை விதி கொஞ்சம் மாறுபடுகிறது. அந்த முதலீடுகளில் கிடைக்கும் வருமானம், பெற்றோரின் வருவாயாகக் கருதப்படும்.

70 கோடி செங்கல்லில் ஆச்சரிய மாளிகை!-ஜனாதிபதி மாளிகை

புதிய ஜனாதிபதியை வரவேற்கத் தயாராகிவிட்டது, டெல்லியில் உள்ள `ராஷ்டிரபதி பவன்’ எனப்படும் ஜனாதிபதி மாளிகை.

இந்திய ஜனநாயகத்தின் கம்பீர அடையாளமாகத் திகழ்கிறது இந்த பாரம்பரிய மாளிகை. 1911-ம் ஆண்டில் ஆங்கிலேய அரசு கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்குத் தலைநகரை மாற்றியபோது `வைஸ்ராய் மாளிகை’யாகத்தான் இது உருவாக்கப்பட்டது. தற்போது ஜனாதி பதியின் அதிகாரப்பூர்வ இருப்பிடமாகத் திகழும் இம்மாளிகை, இந்தியா சுதந்திரம் பெற்ற போது `அரசு இல்லம்’ என்று மறுபெயர் சூட்டப்பட்டது. நாடு 1950-ல் குடியரசானபோது `ராஷ்டிரபதி பவன்’ என்ற தற்போதைய பெயரைப் பெற்றது.

புகழ்பெற்ற பிரிட்டீஷ் கட்டிடக் கலைஞர் சர் எட்வின் லாண்ட்சீர் லுட்யன்ஸ் மேற்பார்வையில் ஜனாதிபதி மாளிகை கட்டுமானப் பணி நடைபெற்றது. இதற்காக, பழைய ரெய்சினா, மால்ச்சா கிராமங்களில் இருந்து 300 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு 4 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

நான்காண்டுகளில் கட்டுமானப் பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், 1914-ம் ஆண்டு முதல் 1918-ம் ஆண்டு வரை நடைபெற்ற முதலாம் உலகப் போர், கட்டுமானப் பணியைப் பாதித்தது. கடைசியில், 1929-ம் ஆண்டு, மாளிகை பூர்த்தியானது.

ஜனாதிபதி மாளிகைக்கு ஆகும் செலவு என்று ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டது 4 லட்சம் பவுண்டுகள். ஆனால் கடைசியில் கணக்குப் பார்த்தபோது அது 8 லட்சத்து 77 ஆயிரத்து 136 பவுண்டுகளாக எகிறி யிருந்தது (அந்த காலத்தைய மதிப்பு இந்திய பணத்தில் ரூ. 2 கோடி).

* கடலெனப் பரந்து விரிந்திருக்கும் ஜனாதிபதி மாளிகை, நான்கு தளங்களில் 340 அறைகளைக் கொண்டுள்ளது.

* மாளிகையின் நீளம் 630 அடி. இது பிரான்சின் பிரபல வெர்செய்ல்ஸ் அரண்மனையை விட நீளமானது.

* மாளிகையின் மொத்த தளப் பரப்பளவு 2 லட்சம் சதுர அடி.

* இரும்பை மிகக் குறைவான அளவு பயன்படுத்திக் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது.

* மாளிகை கட்டுமானத்தில் 30 லட்சம் கன அடி கல்லும், 70 கோடி செங்கற்களும் பயன்படுத்தப்பட்டன.

முதலில் குடியேறியவர்கள்

ஜனாதிபதி மாளிகையில் முதலில் வசித்தவர் லார்டு இர்வின். அவர் இங்கு 1931-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி குடியேறினார். இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான ராஜாஜி, ஜனாதிபதி மாளிகையில் குடியேறிய முதல் இந்தியர்.

ராஜாஜியைத் தொடர்ந்து, இந்தியாவின் முதல் ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திர பிரசாத் இங்கு வசித்தார்.

விருந்தினர்கள், பணியாளர்கள் தங்க தனித்தனி பகுதி உள்ளது. ராஜாஜி, இதன் பிரதான வசிப்பிடப் பகுதி ரொம்பப் பெரிதாக இருப்பதாக நினைத்தார். எனவே அவர் விருந்தினர்களுக்கான பகுதியிலேயே தங்கினார். அதே வழக்கத்தை ராஜேந்திர பிரசாத்தும், அவருக்குப் பின்னால் வந்த ஜனாதிபதிகளும் பின்பற்றினார்கள். எனவே, மாளிகையின் உண்மையான வசிப்பிடப் பகுதியில் தற்போது இந்தியா வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தங்குகிறார்கள், அரசு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

மொகலாயத் தோட்டம்

ஜனாதிபதி மாளிகையின் கவரும் அம்சங்களில் ஒன்று, இங்குள்ள `மொகல் கார்டன்’ எனப்படும் மொகலாயத் தோட்டம். பச்சைப் போர்வையும், பலவண்ண மலர்களுமாய் 342 ஏக்கர்களுக்குப் பரந்திருக்கும் மொகலாயத் தோட்டம், ஜனாதி பதி மாளிகைக்குக் கூடுதல் அழகு சேர்க்கிறது. காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷாலிமர் தோட் டத்தை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக் கப்பட்ட மொகலாயத் தோட்டம், உலக முழுவதி லும் இருந்து பார்வையாளர்களை ஈர்க்கிறது. ஆனால் குறிப்பிட்ட காலமே இது திறந்து விடப்படுகிறது.

கால்களை மிருதுவாக்கும் மீன் கடி வைத்தியம்!

அதிக தூரம் நடப்பதால் சிலருக்கு பாதங்கள், விரல்களில் வலி ஏற்படும். பாதங்களை தடவி கொடுத்தாலோ, விரல் களில் சொடக்கு போட்டாலோ, ஒரு வித இதமான சுகம் ஏற்படும். ஆனாலும், சிறிது நேரத்திலேயே, மீண்டும் வலி ஆரம்பித்து விடும்.
இப்படிப்பட்ட பிரச்னை களால் பாதிக்கப்பட்டவர்களுக் காகவும், பாதங்களை அழகாக வைத்துக் கொள்ள விரும்பு வோருக்காகவும், பிரத்யேகமாக ஒரு சிகிச்சை முறை, உலகின் பல நாடுகளில் தற்போது செயல் படுத்தப்பட்டு வருகிறது.
“மீன் ஸ்பா’ என, அழைக் கப்படும் இந்த சிகிச்சை முறை யில், ஒரு சிறிய தொட்டிக்குள் தண்ணீரை நிரப்பி, அதற்குள், “கர்ரா ரூபா’ என்ற வகை சிறிய மீன்களை உலவ விடுகின்றனர். பின், பாதங்களை அழகாக்க விரும்புவோரின் கால்களை, அந்த தொட்டிக்குள் விடுகின்றனர்.
குறிப்பிட்ட சில நிமிடங்களுக்கு பின், கால்களை தொட்டியில் இருந்து வெளியில் எடுத்து விடலாம். மீன் கடிக்குப் பின், பாதங்கள் மிக அழகாக தோன்றுவதுடன், ஏற்கனவே அவற்றில் இருந்த வலி எல்லாம் மறைந்து, புத்துணர்வு ஏற்படு வதாகவும் கூறுகின்றனர்.
ஜப்பான், குரேஷியா, பெல் ஜியம், சீனா உள்ளிட்ட நாடு களைத் தொடர்ந்து, இந்தியா விலும் இந்த மீன் கடி வைத்தியம் பிரபலமாகி வருகிறது.

உயிருக்கு குறிவைக்கும் `உயர் ரத்த அழுத்தம்’

உலகை அச்சுறுத்தும் நோய்களில் குறிப்பிடத்தக்கது, உயர் ரத்த அழுத்த நோய். இது எச்சரிக்கை அறிகுறிகளை கொடுக்காமல், ஓசையின்றி மனிதனை கொல்லும் நோயாகும். இளம் வயதினர் கூட இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 70 லட்சம் பேர் இந்த நோயால் இறக்கிறார்கள். இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக நோயை ஏற்படுத்துவதிலும் உயர் ரத்த அழுத்தம் முக்கிய காரணியாக செயல்படுகிறது.

* உயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன?

ரத்தக் குழாய் மூலம் இதயத்திலிருந்து ரத்தம் செல்லும்போது ரத்தக்குழாய் சுவர்களுக்கு எதிராக அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த அழுத்தமே ரத்த அழுத்தம் எனப்படுகிறது. ரத்த அழுத்த அளவானது இதயத்தின் சுருங்கிய இயக்க அழுத்தம், இதயத்தின் விரிந்த இயக்க அழுத்தம் என்னும் இரண்டு அழுத்தங்களை அடிப்படையாகக் கொண்டது.

இயல்பு நிலையில் இதயத்தின் சுருங்கிய அழுத்தம் 120 mm-Hg -ஆகவும், இதயத்தின் விரிந்த இயக்க அழுத்தம் 80 mm-Hg ஆகவும் இருக்க வேண்டும். அதாவது 120/80 mm-Hg என்றிருக்கவேண்டும். ஆனால் 140/90 mm-Hg- க்கு அதிகமாக ரத்த அழுத்த அளவீடு இருக்குமானால் அது உயர் ரத்த அழுத்தமாகும். இதன் மருத்துவப் பெயர் `ஹைப்பர்டென்சன்’ என்பதாகும். குறிப்பாக 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

* உயர் ரத்த அழுத்தத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது?

“ஸ்பிக்மோமேனோமீட்டர்” என்னும் ரத்த அழுத்த அளவீட்டுக் கருவியின் மூலம் ரத்த அழுத்தத்தை கண்டுபிடித்து விடலாம். ரத்த அழுத்த அளவு 140/90 னீனீ பிரீ ஆக இருந்தால், அந்த நோயாளியை மேற்கொண்டு பரிசோதிக்க வேண்டும். ஆனால் ஒரே ஒருமுறை மட்டும் அதிகமாக இருந்தால் ரத்த அழுத்த நோய் உள்ளதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. வெவ்வேறு சமயங்களில் மூன்று முறை அடுத்தடுத்த நாட்களில் பரிசோதித்த பிறகும் ரத்த அழுத்தம் உயர்வாக இருந்தால் அவரை உயர் ரத்த அழுத்த நோயாளி எனக் கூறலாம்.

* அறிகுறிகள்

கடுமையான தலைவலி.
தலைச்சுற்றல்.
காது இரைச்சல்.
குமட்டல்.
மனக்குழப்பம்.
மயக்க உணர்வு.

* ரத்த அழுத்த நோயின் விளைவுகள்:

சிறுநீரக நோய்.
மாரடைப்பு.
பக்கவாதம்.
இதயம் செயலிழத்தல்.
விழித்திரை நோய்

* உயர் ரத்த அழுத்த நோயை உருவாக்கும் முக்கிய காரணிகள்:

உடல் பருமன்.
மனஅழுத்தம்.
மனஉளைச்சல்.
அளவுக்கு அதிகமாக உப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுதல்.
அளவுக்கு அதிகமாக மது அருந்துதல்.
புகைப்பிடித்தல்.
சர்க்கரை நோய்.
இது பரம்பரை நோயாகவும் தொடர வாய்ப்புள்ளது.

* இந்த நோய் வராமல் தவிர்க்க:

அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய உப்பின் அளவை வெகுவாக குறைக்கவேண்டும்.

சராசரியாக தினமும் 4 கிராம் உப்பு எடுத்துக் கொள்ளலாம். (1 டீ ஸ்பூன் 2 கிராம்).

உணவில் அதிக அளவில் காய்கறிகளையும், கீரைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நார்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ள வேண்டும்.

கோதுமை, கம்பு, கேழ்வரகு போன்ற நார்ச்சத்துள்ள தானியங்களை அன்றாட உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

அன்றாடம் 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி செய்யுங்கள்.

மன உளைச்சல்களை தவிர்த்து மகிழ்ச்சியை உணருங்கள்.

ரத்த அழுத்த அளவையும் முறையாக பரிசோதியுங்கள்.

உயர் ரத்த அழுத்த நோய் இருப்பின் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை தவறாமல் சாப்பிடுங்கள்.

முன்னோர் அல்லது அம்மா- அப்பா எவருக்கேனும் இந்நோய் இருந்தால், மருத்துவரிடம் பரிசோதித்து, முறையான ஆலோசனைகளை பெறுங்கள்.

உயர் ரத்த அழுத்த நோய் இருப்பதாக தெரிந்தால், மாதம் ஒருமுறை தவறாமல் பரிசோதனை மேற்கொண்டு, டாக்டர்களின் ஆலோசனைப்படி
மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

* நோயாளிகள் செய்யக்கூடாதவை:

அப்பளம், சிப்ஸ், கருவாடு போன்ற எண்ணெயில் பொறித்த உணவுப் பொருட்களை உண்ணக் கூடாது.

டின்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பதப்படுத்திய உணவு வகைகளை அதிக அளவு சாப்பிடக் கூடாது.

துரித உணவுகளை தவிர்த்திடவேண்டும்.

மது, புகை, போதைப் பொருட்களை முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும்.

கொழுப்புச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களான இறைச்சி, முட்டை(மஞ்சள் கரு), எண்ணெய், நெய், வனஸ்பதி போன்றவற்றை அதிகமாக உண்ணக்
கூடாது.

வேலையிலோ, வாழ்க்கையிலோ அதிக மனஅழுத்தத்தை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது.

விளக்கம்: டாக்டர் கே.கிரீஷ்
MD (Gen Med) DM (Neuro) Mch (Neurosurgery)
சென்னை – 10