Daily Archives: ஓகஸ்ட் 8th, 2012

செருப்பு வாங்கும் போது…

செருப்பை தேர்ந்தெடுக்கும் போது, அழகு மற்றும் அளவு ஆகியவை பொருத்தமாக இருக்கும்படி கவனித்துக் கொள்ள வேண்டும்.
செருப்புகளை தேர்ந்தெடுத்து அணிந்து, நான்கைந்து அடி நடந்து பார்த்து, சரியானதாகவும், நடப்பதற்கு வசதியாகவும் இருந்தால் தான் வாங்க வேண்டும். அதிக இறுக்கமான செருப்புகளை அணியக் கூடாது. விலை குறைந்த செருப்புகளை விட, விலை கூடுதல் என்றாலும், தரமான, பாதங்களுக்கு ஏற்ற செருப்புகளையே வாங்க வேண்டும்.
தோல் செருப்புகளை, தண்ணீரில் நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நனைத்தால், செருப்பின் ஆயுளும் குறையும், பாதங்களுக்கு பொருத்தம் இல்லாமல் அழகும் கெட்டு விடும். தரையில் வழுக்காமல், கிரிப் உள்ள செருப்புகளையே பயன்படுத்த வேண்டும். மேலும், அழுத்தம் இல்லாமலும், அதிக கனமாக இல்லாமலும், மிருதுவாகவும் செருப்பு இருக்க வேண்டும்.
மழைக்காலத்தில், ரப்பர் செருப்புகளை அணியக் கூடாது. ஏனென்றால், அது நடக்கும்போது, வழுக்கி விடுவதுடன், துணிகளில் சேற்றை வாரி இறைத்து விடும். வயதான பெண்கள், வாதநோய் ஏற்பட்டவர்களும், குளிரான இடங்களிலும், ஈரத்தன்மைஉள்ள இடங்களிலும், செருப்பு அணியாமல் நடக்கக் கூடாது.
பொதுவாக பெண்களின் பாதங்கள் மென்மையானவை. ஆதலால், ஒருபோதும் இறுக்கமான செருப்புகளையோ, ஷூக்களையோ அணியக் கூடாது. அப்படி அணிந்தால், ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். பிளாஸ்டிக் செருப்புகளை விட, தோல் செருப்புகளும், ஷூக்களுமே சிறந்தவை. கால்களில் நோய் உள்ளவர்கள், உடல் பலம் குறைந்தவர்கள் போன்றோருக்கு, பிளாஸ்டிக் செருப்புகளால் உடலில் அதிக உஷ்ணம் ஏறி, சோர்வு ஏற்படும். கண்களும் எரிச்சலடையும். மேலும், அதிக வியர்வையும் தோன்றும். எனவே, பிளாஸ்டிக் செருப்புகளை தவிர்த்தல் நல்லது.
எவ்வளவு அவசரமாக இருந்தாலும், செருப்புகளையும், ஷூக்களையும் துடைத்து, உள்ளே ஏதாவது இருக்கிறதா? என பார்த்து அணிய வேண்டும். செருப்பு, ஷூக்களுக்கு அடிக்கடி பாலிஷ் செய்ய வேண்டும். இதனால், செருப்புகளுக்கு அழகும், ஆயுளும் கிடைக்கும். பாலிஷ் செய்யும் போது, செருப்பில் இருக்கும் ஈரத் தன்மையும் நீங்கி விடும்.
உங்களுக்கு செருப்பு வாங்குவதற்காக, அளவை கொடுத்து, இன்னொருவரை அனுப்பாதீர். நீங்களே சென்று தேர்ந்தெடுப்பது தான் சிறந்தது.
அடுத்தவர்களின் செருப்புகளை அணியக் கூடாது. இதனால், தோல் நோய் ஏற்படும். ரப்பர், பிளாஸ்டிக் செருப்புகளை அணியும் பெண்கள், அவற்றை தினமும் கழுவி சுத்தம் செய்து உபயோகிக்க வேண்டும்.

பூமி வாழ, கரப்பான்பூச்சிகள் வேண்டும்!

 

Cockroach1

கரப்பான்பூச்சியைப் பார்த்தாலே இல்லத்தரசிகள் பலரும் அலறியோடுவார்கள். ஆனால் பூமி என்றென்றும் ஜீவித்திருக்க, இந்தச் சிறு பூச்சிகள் அவசியம் என்கிறார் ஒரு விஞ்ஞானி. பூமியின் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதில் கரப்பான்பூச்சிகளின் பங்கு முக்கியமானது என்கிறார் இவர்.
ஸ்ரீனி கம்பம்படி என்ற அந்த இந்திய வம்சாவளி ஆய்வாளர், அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக உயிரியல் துறைப் பேராசிரியர். அவர், உலகின் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வகையான கரப்பான்பூச்சி இனங்கள் திடீரென மறைந்திருப்பது கவலைக்குரியது என்று வருத்தப்படுகிறார்.
“பெரும்பாலான கரப்பான்பூச்சிகள் அழுகும் கழிவுப்பொருட்களைச் சாப்பிடுகின்றன. பின்னர் தாங்கள் வெளியேற்றும் கழிவின் மூலம் பூமிக்கு நைட்ரஜனை செலுத்துகின்றன. அந்த நைட்ரஜனை தாவரங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன” என்று விளக்கம் அளிக்கிறார் ஸ்ரீனி.
எனவே இனிமேல் நாம் கரப்பான்பூச்சிகளைப் பார்த்து முகம் சுளிக்காமல் இருப்போம்!

சிறிய வீடும் பெரிதாக தெரியும்

நெருக்கடியான இன்றைய சூழலில் சின்னதாய் வீடு கிடைப்பதே சிரமமான செயலாக உள்ளது. இருக்கும் இடத்தில் எவ்வாறு அழகுபடுத்துவது என்பதே அனைவரின் மனதிலும் எழும் கேள்வி. சின்ன இடத்தைக் கூட சிறப்பாக அழகுபடுத்தலாம் என்கின்றனர் வீட்டு உள் அலங்கார நிபுணர்கள்.
சின்ன இடத்திற்கேற்ப நாற்காலிகள் மேஜைகளை தேர்வு செய்து போடுவது இடத்தை பெரிதாக்கி காட்டும். அடர்த்தியான நிறங்களில் பர்னிச்சர்களை தேர்வு செய்யவும். முடிந்தவரை மடக்கி வைக்கும் பொருட்களாக இருந்தால் நல்லது. கண்ணாடி இல்லாத வீட்டினை பார்க்க முடியாது அழகான தொங்கும் கண்ணாடிகளை சுவர்களில் அழகாக பொருத்தினால் சிறிய இடம் கூட மிகப்பெரிய இடம் போல தோற்றமளிக்கும்.
வீட்டுச்சுவர்களுக்கு ஏற்ற வால்பேப்பர் ஒட்டுவது வீட்டின் நீள, அகலத்தை அதிகரிக்கும். அதேபோல் இதமான நிறங்களான ப்ளூ, வயலட், பச்சை போன்ற வர்ணங்களை சுவர்களுக்கு அடிப்பதும் வீட்டை பெரிதாக்கி காட்டும். சீலிங்கும், சுவரும் தொட்டுக்கொள்ளும் இடத்தில் அழகான பார்டர் போல வால்பேப்பரில் ஒட்டுவது அறையின் அகலத்தை அதிகமாக்கி காட்டும்.
சிறிய அறையில் ஜன்னல் இல்லாமல் இருக்கிறதா? கவலை வேண்டாம். ஓவியங்களை சுவர்களில் தொங்கவிட வீடு அழகாவதோடு ஜன்னல் இல்லாத குறையை நீக்கும். சிறிய இடம்தான் இருக்கிறதா ஒரே அலமாரியில் அனைத்தையும் அடுக்குவது போல உள்ள வசதியான அலமாரியை தேர்தெடுப்பது நல்லது.
புத்தகங்களை அடுக்க ஏற்ற உயரமான அலமாரிகளை தேர்ந்தெடுத்து வாங்கவேண்டும். அவை பழமையை பறைசாற்றும் வகையில் இருப்பது நலம். அதே சமயம் கண்களை உறுத்தாத வகையிலும் இருக்கவேண்டும்.