Daily Archives: ஓகஸ்ட் 12th, 2012

உறவு கொள்ள ஏற்ற இடம் பெட்ரூம் மட்டும்தானா?

எந்த ஒரு விசயத்தையும் ஒரே இடத்தில் ஒரே மாதிரியாக செய்தால் அது போரடிக்க ஆரம்பித்து விடும். திரும்ப திரும்ப ஒரே மாதிரியான உடை, ஒரே மாதிரியான வேலை, ஒரே மாதிரியான உணவு போன்றவை என்றால் சலிப்பு ஏற்பட்டு விடும். இது செக்ஸ் விசயத்திலும் பொருந்தும் என்கின்றனர் நிபுணர்கள். தாம்பத்ய உறவுக்கு பெட்ரூம் மட்டுமே சிறந்த இடமல்ல. வேறு சில இடங்களையும் பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.

வீட்டின் பால்கனி உறவு கொள்வதற்கு ஏற்ற இடமாம். எந்த இடைஞ்சலும் இல்லாமல் சரியான அரேஞ்ச்மென்ட் செய்து கொண்டால் அந்தரங்க உறவிற்கு பால்கனி அட்டகாசமான இடம் என்கின்றனர் நிபுணர்கள். அதேசமயம் பிறரின் கழுகுக் கண்களில் இருந்து தப்பித்துக்கொள்ளுங்கள் என்றும் எச்சரிக்கின்றனர்.

காரிலும் உற்சாகமாக உறவு கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள். இது சிறந்த இடம் என்கின்றனர். அதேபோல் அட்வென்சர் டைப் தம்பதியர் என்றால் வானமே கூரையாக உள்ள வனப்பகுதியில் டென்ட் அடித்து உங்கள் வாழ்க்கையை அனுபவிக்கலாம். அது வித்தியாசமான மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

நீச்சல் குளம் காதலுக்கு ஏற்ற இடமாம். தண்ணீரில் உறவு கொள்வது ஒரு புதிய அனுபவம் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் ஆள் இல்லாத லிப்டில் நீங்கள் இருவர் மட்டும் தனித்திருக்க நேரிட்டால் அந்த இடமும் உறவுக்கு அற்புதமான இடம்தானாம் ஆனால் லிப்டில் யாரும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொருப்பு என்கின்றனர் நிபுணர்கள்.

அதேபோல் சமையலறை என்பது சமைக்க மட்டுமல்ல சந்தோசமான உறவுக்கும் ஏற்ற இடமாம் அது சர்ப்ரைஸாகவும் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

`டிசைனர்’ தக்காளி ரெடி!

 

Tomato

`வாரக் கணக்கில் வைத்திருந்தாலும் அழுகிப்போகாத, காய்ந்து சுருங்கிப்போகாத, பார்ப்பதற்கு அழகான, சுவை மிகுந்த பழங்களும், காய்கறிகளும் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்’ என்று நம்மில் பலரும் கற்பனை செய்து பார்த்திருப்போம். ஆனால் யதார்த்தத்தில் கடைகளில் கிடைக்கும் பழங்களும் காய் கறிகளும் பரவாயில்லை ரகம்தான்.
உதாரணமாக, தக்காளியை எடுத்துக்கொள்ளலாம். இயற்கையில் தக்காளிகள் காய் பருவத்திலிருந்து பழமாக மாறும்போது சமமாக முற்றுவது இல்லை. அதனால் ஒரு தக்காளி பழத்தில் அங்கங்கு திட்டு திட்டாக பச்சை நிறம் மீதமிருக்கும். அதாவது ஒரு பழத்தில் சில பகுதிகள் காயாகவே இருக்கும்.
தக்காளிகளில் உள்ள இந்த பிரச்சினை கடந்த 1920 களில் ஒரு முடிவுக்கு வந்தது. சமமாக முற்றி பழம் முழுவதும் சிவப்பாக, ஒரே வண்ணமாக இருக்கும் ஒரு வித்தியாசமான, ஆனால் இயற்கையான தக்காளி ரகத்தை வியாபாரிகள் கண்டறிந்தனர். அதன்பிறகு அந்த ரகத்தை மட்டுமே உற்பத்தி செய்தனர்.
இந்த தக்காளி ரகம் சமமாக முற்றி ஒரே வண்ணத்தில் இருப்பதற்கு, இதில் உள்ள ஒரு மரபணு மாற்றம் (மியூட்டேஷன்) தான் காரணம் என்று தாவரவியல் விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள். இதற்கு காரணமான மரபணு `சமமாக முற்றும்’ மரபணு என்று அழைக்கப்பட்டது.
சமமாக முற்றி, பழம் முழுவதும் சிவப்பாக, அழகாக இருக்கும் இந்த தக்காளியில் ஒரு முக்கியமான பிரச்சினையும் இருக்கிறது. அதாவது நன்றாக முற்றி, சிவப்பாக, அழகாக இருந்தாலும் இந்த தக்காளி ரகம் ஏனோ சுவையாக இருப்பதில்லை. இந்த பிரச்சினைக்கான காரணத்தையும், தீர்வையும் கண்டறிய முற்பட்டார்கள் அமெரிக்க மற்றும் ஸ்பெயின் நாட்டு தாவரவியல் ஆய்வாளர்கள்.
`பொசிஷனல் குளோனிங்’ என்னும் பிரத்தியேகமான மரபணுவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, `சமமாக முற்றும்’ மரபணு இந்த தக்காளியின் மரபணுக் கோப்பில் உள்ள 10-வது குரோமோசோமில் இருப்பதை கண்டறிந்தார் முனைவர் பட்ட மாணவர் குவாங் கையென். அதன்பிறகு தக்காளியின் உணவு உற்பத்தியை கட்டுப் படுத்தும் புரதத்துக்கு காரணமான மரபணுவையும் கண்டுபிடித்தது இந்த ஆய்வுக்குழு.
பொதுவாக, ஒரு தாவரத்தின் உணவு உற்பத்தி அல்லது ஒளிச் சேர்க்கை முழுவதையும் அதன் இலைகளே கவனித்துக்கொள்கின்றன. ஆனால் தக்காளியை பொறுத்தவரை, அதன் உணவு உற்பத்தியில் சுமார் 20 சதவீதம் வளரும் தக்காளி பழத்தி லிருந்து கிடைக்கிறது. இதனால் தக்காளி பழத்தில் அதிக அளவு சர்க்கரையும், ஊட்டச் சத்துகளும் உற்பத்தி ஆகின்றன.
ஆனால், சமமாக முற்றும் மரபணுவில் ஏற்படும் மரபணு மாற்றம் காரணமாக தக்காளியில் உள்ள அதிகமான சர்க்கரை மற்றும் ஊட்டச் சத்துகளை உற்பத்தி செய்யும் புரதம் அழிக்கப்படுகிறது. அதனால் தான், சமமாக முற்றும் மரபணுவில் மாற்றம் உள்ள தக்காளி ரகத்தில் குறைவான அளவு சர்க்கரையும், ஊட்டச் சத்துகளும் உள்ளன என்கிறார் ஆய்வுக்குழுவின் தலைவர் ஜியோவானோனி.
சமமாக முற்றும் மரபணு மாற்றம் உள்ள தக்காளி ரகத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் சுவையான மற்றும் ஊட்டச் சத்து நிறைந்த தக்காளிகளை வியாபாரிகள் இழந்து விடுகிறார்கள். இதன் காரணமாக, தக்காளியின் சிவப்பழகில் மயங்கி அதனை வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்களும் பெரிதாக பயனடைவது இல்லை. மிகவும் பயனுள்ள இந்த அறிவியல் உண்மையை தக்காளி தொடர்பான இந்த புதிய ஆய்வு வெளிக்கொண்டு வந்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
இந்த கண்டுபிடிப்பின் மூலம் பல நன்மைகள் உண்டு என்கிறார் கள் ஆய்வாளர்கள். உதாரணமாக, கண்ணைக் கவரும் சிவப்பு வண்ண பழங்கள்தான் எங்களுக்கு வேண்டும் என்று அடம்பிடிக்கும் வியாபாரிகள், முற்றிய தக்காளி பழம் வரும்வரை தாவரங்களை வளரவிட்டு பின்னர் அவற்றை தேர்ந்தெடுத்து பயிர் செய்ய வேண்டியதில்லை. மாறாக, தக்காளி செடிகள் முளை பருவத்தில் இருக்கும்போதே அவற்றில் சமமாக முற்றும் மரபணு மாற்றம் இருக்கிறதா என்பதை டி.என்.ஏ பரிசோதனை மூலம் கண்டறிந்து மரபணு மாற்றமுள்ள செடிகளை தேர்ந்தெடுத்துவிடலாம்.
மற்றொருபுறம், `தக்காளியின் சிவப்பழகைப் பற்றியெல்லாம் எங்களுக்கு கவலையில்லை. அவற்றில் அதிக சுவையும், ஊட்டச் சத்துகளும் இருந்தால் போதும்’ (அதாவது சமமாக முற்றும் மரபணு மாற்றம் இருக்கக் கூடாது) என்று விரும்புபவர்கள், சமமாக முற்றும் மரபணு மாற்றம் இல்லாத தக்காளி பயிர்களை தேர்ந்தெடுத்து பயிர் செய்துகொள்ளலாம்.
அடடா இதுவல்லவோ தொழில்நுட்பம், இனி தக்காளிகளில் நாம் எந்த தரத்தை விரும்புகிறோமோ அதை தேர்ந்தெடுத்து பயிர் செய்துகொள்ளலாம். புதுயுக டிசைனர் தக்காளி ரெடி, பயிர் செய்து பயனடைய நீங்க ரெடியா என்கிறார்கள் தாவரவியலாளர்கள்.
முனைவர் பத்மஹரி

ப்ரான் கோல்டன் ப்ரை

இறாலை எந்தவிதத்தில் சேர்த்தாலும் வாசனை தூக்கிக்கொண்டு போகும். சாதத்துடன் சேரும் இறால் குழம்பு அதன் தனிச்சுவையில் ஈர்க்கும். இறாலைக் கொண்டு செய்யும் பிரான் கோல்டன் ப்ரையும் மணக்கும். நாவில் ருசிக்கும்.

தேவையான பொருட்கள்:

இறால் – 1/2 கிலோ
எலுமிச்சம் பழம் -2 (பிழிந்து சாறெடுக்கவும்)
வெள்ளை மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
முட்டை – 1
பிரெட் தூள் – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

இறாலை சுத்தம் செய்து கொள்ளவும். எலுமிச்சம்பழச்சாறில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கி இறாலில் புரட்டி சிறிது நேரம் ஊற வைக்கவும்.

முட்டையை அடித்து வைத்துக் கொள்ளவும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இறாலை முட்டையில் முக்கி ரொட்டித்தூளில் புரட்டியெடுக்கவும். இதை உதிரி உதிரியாக எண்ணெயில் போடவும். ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு இறால் பொன்னிறமாக ()வந்ததும் எடுத்து விடவும்.

இப்போது மணக்கும் `ப்ரான் கோல்டன் ப்ரை’ ரெடி.