Daily Archives: ஓகஸ்ட் 14th, 2012

போ.. சோர்வே.. போ..

 

கண்ணாடியில் பார்க்கும்போது முகத்தின் ஜொலிப்பு மங்கி, கண்களுக்கு அடியில் கறுப்பு படிந்து, சோர்ந்து போய் இருப்பது போல் தோன்றுகிறதா? கவலையை விடுங்கள். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, சோர்வை போக்கி, முகத்தை பளிச்சென்று மாற்றிவிடலாம்.

வெளியே போய்விட்டோ, பயணம் போய்விட்டோ வீடு திரும்பும்போது ஒரு தேக்கரண்டி கோதுமை மாவோ அல்லது கடலை மாவோ எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தக்காளி கூழ் சேர்த்து குழைத்து முகத்தில் பூசுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள்.

முட்டை வெள்ளைக் கரு இரண்டு தேக்கரண்டி, அரை தேக்கரண்டி தேன், கால் தேக்கரண்டி எலுமிச்சை சாறு போன்றவைகளை கலந்தும் முகத்தில் பூசி, பத்து நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவி நீக்குங்கள். இவ்வாறு செய்தால் முகத்தில் தென்படும் சோர்வு நீங்கிவிடும்.

ஒரு வைட்டமின் மாத்திரை, இரண்டு தேக்கரண்டி தயிர், ஒரு தேக்கரண்டி ஓட்ஸ் ஆகியவைகளை கலந்து முகத்தில் தேய்த்தாலும் நல்ல பலன் கிடைக்கும். பயணம் முடிந்து சோர்ந்து வரும்போது உருளைக்கிழங்கு சாறு, பால், தயிர் போன்ற ஏதாவது ஒன்றை முகத்தில் பூசி, ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்வது நல்லது. ஒரு தேக்கரண்டி கோதுமையை வறுத்து அரைத்து, அதில் அரை தேக்கரண்டி சர்க்கரை, சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசுவதும் முகத்தை பளிச்சென்று மாற்றும்.

கண்களின் புத்துணர்ச்சிக்கு தேவையான விஷயங்களை பார்ப்போம். வெள்ளரிக்காயை கொத்தி நறுக்கி சிறிது நேரம் பிரிஜ்ஜில் வையுங்கள். குளிர்ந்த பின்பு கண்களை மூடிக்கொண்டு இமைகளின் மேல் வையுங்கள். பால், மினரல் வாட்டர், சிறிய ஐஸ் துண்டுகள் போன்றவைகளை பயன்படுத்தி இமைகளில் மென்மையாக மசாஜ் செய்யலாம். பன்னீரில் பஞ்சை முக்கி, கண்களை மூடிக்கொண்டு கண்களின் மீது வைத்தாலும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

சோர்வை நீக்க குளியல் மிக அவசியம். ராமச்சம் தைலம் இரண்டு தேக்கரண்டி எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பக்கெட் தண்ணீரில் அதைக் கொட்டி கலந்து குளியுங்கள். உற்சாகம் கிடைக்கும். இரண்டு தேக்கரண்டி வினிகரை, ஒரு பக்கெட் தண்ணீரில் கலந்து குளித்தாலும் உற்சாகம் பெறலாம். வியர்வை நாற்றத்தையும் போக்கலாம்.

எலுமிச்சை இலைகளை இடித்து தண்ணீரில் போட்டு சூடாக்கியும் குளிக்கலாம். நல்லெண்ணெயை தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் வைத்திருந்து, பின்பு தலைக்கு குளித்தாலும் உற்சாகம் கிடைக்கும். ஆமணக்கு எண்ணெயை தலையில் இரவில் தேய்த்து, காலையில் பயறு தூள் பயன்படுத்தி தலையை கழுவி குளிப்பதும் நல்லது. தேங்காய் பாலை தலையில் தேய்த்து, பத்து நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு குளித்தாலும் உடலுக்கு உற்சாகம் கிடைக்கும்.

பாப்கான் சாப்பிடுங்க ஆரோக்கியமா வாழலாம்

ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் இருந்தால், பாப்-கார்ன் வாங்கி சாப்பிடுங்கள். பாப்-கார்னில் அதிகமான அளவு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏனெனில் பாப்-கார்ன் மக்காசோனத்தினால் செய்யப்படுகிறது. அதனால் அதன் சத்துக்கள் போய்விடுகின்றன என்று நிறைய பேர் நினைக்கின்றனர். ஆனால் அது தான் தவறு, பாப்-கார்னில் இனிப்பு அல்லது உப்பு என்று சுவைக்காக எதை சேர்த்தாலும், அதில் இருக்கும் சத்துக்கள் மாறாமல் இருக்கும். இப்போது அந்த பாப்-கார்னில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்று பார்ப்போமா
தானியங்களில் ஒன்றான மக்காசோளத்தால் செய்யப்படும் பாப்-கார்னில் அதிகமான அளவு நார்ச்சத்துக்கள், மற்ற பழங்கள் மற்றும் காய்களில் இருப்பதைப் போன்று, இதிலும் அடங்கியுள்ளன. ஆகவே ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போது, சிப்ஸ் மற்றும் பர்கர் போன்றவைகளை சாப்பிடுவதை விட, இந்த பாப்-கார்ன் மிகவும் சிறந்தது.
மேலும் பாப்-பார்னில் பாலிஃபினால் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது என்றும் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற சத்துக்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இதில் இருக்கும் பாலிஃபினால் உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கின்றன.
அதுமட்டுமல்லாமல், பாப்-கார்னில் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான அளவு சத்துக்களில் 13% சத்துக்கள் கிடைக்கின்றது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பசியின்மை, புற்றுநோய், வயிற்றில் ஏற்படும் பிரச்சனை, இதய நோய் போன்றவை ஏற்படாமல் கட்டுப்படுத்தும். அதிலும் உடலில் செரிமானத் தன்மையை அதிகரிப்பதோடு, அழகான சருமத்தையும் தரும்.
நார்ச்சத்துக்களில் இரு வகைகளான கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் என்று இருக்கின்றன. அதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நீரில் கரையக்கூடியவை, கரையாத நார்ச்சத்துக்கள் நீரில் கரையாமல், அதனை பெருங்குடல் வழியாக உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றிவிடும். அத்தகைய கரையாத நார்ச்சத்துக்கள் பாப்-கார்னில் அதிகம் இருப்பதால், உடலில் செரிமான விரைவில் ஏற்படுவதோடு, மலச்சிக்கலையும் சரிசெய்யும். மேலும் இதனை சாப்பிடுவதால், அடிக்கடி பசிக்காமல் இருக்கும். இதனால் உடல் பருமன் அதிகரிக்காமல் இருக்கும்.