Daily Archives: ஓகஸ்ட் 19th, 2012

நல்ல பிள்ளை என்றால்…

பிள்ளைகளைப் பெறுவது பாக்கியம் என்பர். ஆனால், எல்லா பிள்ளைகளும் நல்ல பிள்ளையாக இருக்கின்றனரா? நல்ல பிள்ளை என்றால், யார் நல்ல பிள்ளை?
ஒருவருக்கு நான்கு பிள்ளைகள். எல்லாரையும் பாடுபட்டு வளர்த்து, நல்ல வேலை கிடைக்கச் செய்தார். ஒருவனுக்கு மும்பையில் வேலை, ஒருவனுக்கு டில்லியில் வேலை, ஒருவனுக்கு கோல்கட்டாவில் வேலை, ஒருவனுக்கு பெங்களூருவில் வேலை. இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. டாக்டர், "சந்தேகமான கேஸ்!’ என்று சொல்லி விட்டார்.
மும்பையில் இருக்கும் பையனுக்கு போன் செய்து உடனே வரச் சொன்னார். "இப்போது ஆபீசில் பிரமோஷன் நேரம். நான் அங்கு வந்தால், பிரமோஷன் பாதிக்கப்படும். நல்ல டாக்டரிடம் வைத்தியம் செய்து கொள்ளுங்கள்…’ என்று சொன்னான் அவன்.
டில்லியில் இருப்பவன், "நான் இப்போது வர¬ முடியாது. ஆபீசில் ஆடிட் நடக்கிறது. நான் அவசியம் இங்கே இருக்க வேண்டும். நல்ல டாக்டராகப் பார்த்து, வைத்தியம் செய்து கொள்ளுங்கள். பணம் வேண்டுமானால் அனுப்புகிறேன்…’ என்றான்.
அடுத்த பையன் கோல்கட்டாவிலிருந்து போன் செய்தான்… "என் மனைவிக்கு பிரசவ நேரம். ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து, நான் கவனித்துக் கொள்ள வேண்டும். அதனால், இப்போது வர¬முடியாது. நல்ல டாக்டராகப் பார்த்து வைத்தியம் செய்து கொள்ளுங்கள்…’ என்றான்.
நாலாவது பையன் பெங்களூருவிலிருந்து உடனே வந்து விட்டான். தகப்பனாருக்கு உதவியாக அவரோடு இருந்து கவனித்துக் கொண்டான். "ஏண்டா… நீ இங்கே இருந்தால் எப்படி? பெங்களூருல போய் வேலையில் சேர வேண்டாமா?’ என்று கேட்டார். அதற்குப் பையன், "உங்களை கவனித்துக் கொள்வதை விட, வேலை என்ன ¬முக்கியம்? இந்த வேலை இல்லா விட்டால், வேறு வேலை கிடைக் காதா? அதனால், உங்களை கவனித்துக் கொள்வதற்காக வேலையை ராஜினாமா செய்து விட்டு, வந்து விட்டேன்.
"ஒரு பிள்ளை என்பவன், தகப்பனாருக்கு கடைசி காலத்திலோ, உடல் நலமில்லாதபோதோ, கூடவே இருந்து கவனிக்க வேண்டியது கடமை அல்லவா? நீங்கள் எனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீர்கள். அதற்கு பலனாக, நான் வேறு என்ன செய்ய ¬முடியும்? உங்களுக்கு உடல் நலமில்லாத போது, நான் கூட இருந்து கவனிக்க வேண்டாமா? அப்படிச் செய்யாவிட்டால் இந்தப் பிள்ளையைப் பெற்றது எதற்கு?’ என்று சமாதானம் சொன்னான்.
அவருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. "நீ தான்டா என் நல்ல பிள்ளை!’ என்று சொல்லி, அவனை கட்டிக் கொண்டார். அதனால் தான், "பெற்றதெல்லாம் பிளளைகளல்ல!’ என்று கூறினரோ என்னவோ…
நல்ல பிள்ளை என்று பெயர் எடுக்க வேண்டும்.

பாவம், ஈமு கோழிகள்!

சென்ற ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் ஓர் அறிவிப்பு செய்தார்: "ஈமு கோழி வளர்ப்பு தொடர்பாக நாசிக் வட்டாரத்தில் சுமார் 2,000 விவசாயிகள், ரூ.200 கோடி அளவுக்கு ஏமாற்றப்பட்டுள்ளதாக வந்த புகார்களை விசாரிக்க சிஐடி போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்பதுதான் அது.

இதேபோன்று சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு, ஈமு கோழி வளர்ப்பு தொடர்பான விளம்பரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களது படத்தைப் பயன்படுத்தியதாக, தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஈமு கோழி நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டது. இது தவறுதலாக நடந்துவிட்டதாக அந்த நபர் மன்னிப்புக் கோரிய செய்தியும் வெளியாகியது.

இந்த இரண்டு சம்பவங்களையும் பத்திரிகைகள் மூலம் அறியவந்தவர்களுக்கு, இதில் ஏதோ குளறுபடி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அதிக அறிவும் ஆழ்ந்த அனுபவமும் தேவையில்லை. ஆனாலும் தமிழ்நாட்டில், பணம்படைத்த படித்தவர்களும் படிக்காத விவசாயிகளும் பல கோடி ரூபாயை ஈமு கோழி வளர்ப்பு திட்டத்தில் இழந்து நிற்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, ""……..மூடர் "விதிவசம்’ என்கிறார்கள். ஆமடா விதிவசம்தான். அறிவில்லாதவனுக்கு இன்பம் இல்லை என்பது ஈசனுடைய விதி”, என்கிற பாரதியாரின் வசனக் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

தற்போது பெருந்துறை சுசி ஈமு கோழிப்பண்ணை விவகாரத்தில் மட்டும் 12,000 பேர் சுமார் ரூ.200 கோடி முதலீடு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. கூட்டம் கூட்டமாக வந்து புகார் மனுக்களைக் கொடுக்கிறார்கள். இவர்கள் ரூ.1.5 லட்சம் முதல், ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர்.

முதலீடு செய்தவர்களுக்கு ஈமு கோழிகள் தரப்படும். அதை வளர்த்துக் கொடுக்க வேண்டும். இதற்காக மாதம்தோறும் கோழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஊக்கத் தொகை, போனஸ் என்றெல்லாம் ஒவ்வொரு நிறுவனமும் ஒரு தொகையைச் சொல்லி, மக்களைக் கவர்ந்துள்ளன. இப்போது ஊக்கத்தொகை கிடைக்கவில்லை என்கின்றபோது முதலீட்டைத் திரும்பக் கேட்கின்றனர் பணம் கொடுத்தவர்கள். ஆனால், முதலீடு வாங்கியவர்களையும் காணோம், முதலீடாகப் பெற்ற தொகை எங்கே போனது என்பதும் தெரியவில்லை. பாவம்,

ஈமு கோழிகள் தீனி போடக்கூட ஆள் இல்லாத நிலையில் தவிக்கின்றன. ஆனால் கால்நடைத்துறை சொல்கிறது, அவை 20 நாள்களுக்கு வெறும் தண்ணீரை மட்டுமே அருந்தி வாழும் என்று!

இதேபோன்று மக்கள் ஏமாந்துபோன சூழ்நிலை, அதிக வட்டி தருவதாக வாக்குறுதி அளித்த நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது. உறுதி அளித்தபடியே அதிக வட்டியை தொடக்கத்தில் இந்நிறுவனங்கள் கொடுத்தன. ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் முதலீடு முழுவதையும் இழக்க நேரிட்டது. இந்த நிறுவனங்கள் வேறு தொழில்களில் முதலீடு செய்வதாகச் சொல்லிக்கொண்டாலும், உண்மையில் அவ்வாறு செய்யவில்லை. மக்கள் கொடுத்த பணத்தை அப்படியே அவர்களுக்கு வட்டிக்காகத் திருப்பிவிட்டன. கடைசியில் மொத்தமாகச் சுருட்டிக்கொண்டன.

ஈமு கோழி வளர்ப்பில், முதலீட்டுக்கு இணையான ஈமு கோழிகள் முதலீட்டாளர் வசம் இருந்தாலும், அதனால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. ஈமு கோழிக்கான சந்தை இந்தியாவில் இல்லை. இந்தியாவில் ஈமு கோழிக்கறி உண்பாரும் யாரும் கிடையாது.

ஈமு கோழியை உயிருடன் ஏற்றுமதி செய்வதோ அல்லது வெட்டுவதோ கூடாது என்று ஆஸ்திரேலிய அரசு தடை விதித்தபோது, ஈமு கோழி வளர்ப்பு வெளிநாடுகளில் நடைபெறத் தொடங்கியது. அமெரிக்காவிலும்கூட இந்த முயற்சிகள் நடந்தன. ஆனால், ஈமு கோழியை வளர்த்து அதன் இறைச்சியில் கிடைக்கும் பணத்தைவிட, மாட்டிறைச்சி மூலம் அதிக வருவாய் கிடைப்பதை நடைமுறையில் உணர்ந்த அமெரிக்கர்கள் இத்திட்டத்தைக் கைவிடத் தொடங்கினர். கடைசியாக இந்தியாவில் இந்தத் திட்டத்தை இறக்குமதி செய்தார்கள்.

ஈமு கோழியின் விலை அதிகம் என்பதும், இதன் இறைச்சி, எண்ணெய், நகங்கள் எல்லாமும் விலை போகும் என்பதும் உண்மைதான். ஆனால், இதை யார் வாங்குகிறார்கள், சந்தையின் தேவைஅளவு என்ன என்று எந்த உண்மைகளையும் தெரிந்துகொள்ளாமல், முதலீடு செய்தவர்களின் அறியாமைதான் மோசடி செய்தவர்களின் முதலீடு.

"விவசாயத்தில் நஷ்டம். ஆகவே இதிலாவது கொஞ்சம் பணம் பார்க்கலாம் என்றுதான் ஈமு கோழி வளர்ப்புக்கு ஆட்பட்டோம்’ என்று அப்பாவித்தனமாக மக்கள் சொல்கிறார்கள். விவசாயம் பொய்த்தது என்பதற்காக பொய்யான திட்டங்களில் முதலீடு செய்யலமா? வானம் ஒருமுறை பொய்த்தாலும் மறுமுறை அள்ளிக்கொடுக்கும். இந்த மோசடிக்காரர்கள் இருந்த அனைத்து முதலீட்டையும் அல்லவா துடைத்துச் சென்றுவிட்டனர்.

தேக்கு மரம் வளர்த்து, 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதை வெட்டிப் பணம் தருகிறோம் என்கிற திட்டத்தில் ஒரு கன்றுக்கு சிறிய தொகை செலுத்தினால் போதும் என்றார்கள். 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மரம் இருக்குமா, நாம் இருப்போமோ, அல்லது அந்த நிறுவனம்தான் இருக்குமா என்று எதையுமே யோசிக்காமல் முதலீடு செய்தார்கள் தமிழர்கள்.

வட்டியைக் காட்டி, மரத்தைக் காட்டி, தங்கத்தைக் காட்டி, இறைச்சியைக் காட்டி ஏமாற்றியவர்கள் இப்போது மண்ணைக் காட்டியும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இது வேளாண் நிலமா, வீட்டுமனைக்கான அங்கீகாரம் பெற்றிருப்பது உண்மையானதுதானா? என்கின்ற எந்தக் கேள்விமுறையும் இல்லாமல் மனைகளை விற்கிறார்கள். "மண்ணுல போட்டா வீண் போகாது’ என்பது விவசாயத்துக்கான பழமொழி. வீட்டுமனைக்கானது அல்ல.

ஆசைக்கோர் அளவில்லை என்பார்கள். அறிவும் இல்லை!

மீன் மொய்லி

மீன் உணவுகளில் இது வித்தியாசமான சுவை. தேங்காய்ப்பால் கலவையில் உரிய மசாலாக்கள் சேரும்போது இதன் சுவை நாக்கில் நிரந்தரமாக ()தங்கி விடுகிறது. சமைத்து சுவைத்துப் பார்ப்போமா?

தேவையான பொருட்கள்

மீன் -1/2 கிலோ
வெங்காயம் -1 (நீளமாக நறுக்கியது)
இஞ்சி விழுது -1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -10 (நறுக்கியது)
தக்காளி -1 நீளமாக நறுக்கியது
தேங்காய் -1/2 மூடி(துருவியது)
கார்ன் மாவு -1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு -1/2 பழம்
உப்பு, எண்ணெய் -தேவைக்கேற்ப

செய்முறை:

மீனை உப்புப்போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும். இதை உடையாமல் ஜாக்கிரதையாக வறுக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெயைக் காய வைத்து, காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

துருவிய தேங்காயை வெதுவெதுப்பான நீரில் போட்டு ஊற வைத்து பிழிந்து பால் எடுத்து வைக்கவும்.

நீர் ஊற்றி அரைத்து இரண்டாம் பால் எடுக்கவும். இரண்டாவது எடுத்த தேங்காய்ப்பாலை வறுத்த மசாலாவில் ஊற்றி மீன் துண்டுகளை போடவும்.

இதை 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து சமைக்கவும். பின்பு முதலில் எடுத்த பாலை ஊற்றி எலுமிச்சம்பழச்சாறை சேர்த்து இறக்கவும். இப்போது மணக்கும் மீன் மொய்லி சுவையுடன் ரெடி.

***

2030ல் புகைப்பதால் இறப்பவர்களின் எண்ணிக்கை 8 மில்லியன்?

வளர்ந்து வரும் நாடுகளில் 40 சதவீத ஆண்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகை பழக்கத்துக்கும், புகையில்லாத போதை பழக்கத்துக்கும் அடிமையாகி உள்ளனர் என மருத்துவ ஆய்வு கூறுகிறது.

புகை பிடிப்பது, தன்மை தாமே அழித்து கொள்வதற்கு சமமாகும். நாட்டில் தற்போது புகை பிடிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும், இதே நிலை நீடிக்குமானால் 2030ம் ஆண்டில் சுமார் 8 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் புகை பழக்கத்தினால் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடலாம் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் புகைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதால் புற்று நோய் அதிகமாக தாக்கி வருகிறது. புகைப்பவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதம்  பேருக்கு நுரையீரல் புற்றுநோய் தாக்குகிறதென்றும் மருத்துவ ஆய்வு கூறியுள்ளது.

உலகில் புகை பிடித்தல் மற்றும் புகையிலை தொடர்பான பொருட்களை அதிகம் பயன்படுத்துவதில் சீனா முதலிடத்திலும்,  இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் ஆரோக்கியத்துக்கு கீரையை சாப்பிடுங்க

           நம்முடைய மூதாதையர்கள் சாப்பிட்ட அனைத்து உணவுப் பொருட்களுமே ஒரு வகையில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் நாம் அதிலிருந்து விலகிஞ் பெரும்பாலான உணவுகள் நம்முடைய ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் உள்ளது என்பதே ஏற்றுக்கொள்ள முடியாத கசப்பான உண்மை. ஆனால் இன்றைக்கும் ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படும் பெரும்பாலானவை உணவுப்பொருட்கள் தான்.
மருத்துவரை அணுகாமல் இருக்க என்ன செய்யனும். நாம் சரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை  வேண்டிய அவசியமில்லை. முதலில் கீரை வகைகளை பார்க்கலாம்.
கீரைகளை சுத்தமான நீரில் நன்றாக கழுவிவிட்டு சமைக்கவேண்டும். பழங்காலத்தில் இரவில் கீரையை சாப்பிடக்கூடாது என்பார்கள். அதற்கு காரணம் இருந்தது. அதாவது கீரைகளில் சிறுசிறு பூச்சிகள் அதிகம் இருக்கும். இரவு என்றால் நமக்கு தெரியாது என்பதால் அப்படி சொன்னார்கள். கீரைகள் அனைத்துமே ரத்த விருத்தியை உண்டாக்கும்.
தூதுவளை  கீரையை சாப்பிட்டால் இருமல், சளி மாறும். அகத்திக்கீரையை சாப்பிட்டால் கடுப்பு மாறும். கொத்தமல்லிக்கீரையை சாப்பிட்டால் சுக்ல விருத்தி உண்டாகும். கரி சலாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டால் கண்களுக்கு பலம் கிடைக்கும். சிறுகீரை சாப்பிட்டால் கண்புகைச்சல் குறையும். புதினா சாப்பிட்டால் பசியை தூண்டும். கீழா நெல்லியை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் மறையும்.
இதேபோல் பால் மற்றும் பால் பொருட்களும் நமது உடலுக்கு பலவிதத்தில் பலன் தருகின்றன. பசும்பால் தாதுக்கள் மற்றும் ஆண்மையை அதிகரிக்கும். எருமைப்பால் புத்தியை மந்தம் அடையச்செய்யும். ஆட்டின் பால் சாப்பிட்டால் ரத்தப்போக்கு நோய்கள் குறையும். மோர் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். வெண்ணை ஆண்மையை பெருக்கும். நெய் சாப்பிட்டால் புத்தி, ஞாபக சக்தி, ஆயுள் ஆகியவை அதிகரிக்கும். கரும்புச்சாறு ஆண்மையை உண்டாக்கும். தேன் கண்களுக்கு நல்லது. நல்லெண்ணை குளிர்த் தன்மை உடையது.
பச்சை காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை தொடர்ந்து பச்சையாகவோ, வேகவைத்தோ சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியம் மேம்படும். அதனால் மருத்துவரை அணுகாமல் இருக்க தினமும் கீரையை சாப்பிடுங்க.