Daily Archives: ஓகஸ்ட் 21st, 2012

தாவரத் தங்கம்’ தெரியுமா?

 

ஒரு குறிப்பிட்ட காய்கறி வகையை `தாவரத் தங்கம்’ என்று அழைக்கிறார்கள். அது எது தெரியுமா? `கேரட்’தான்.
நம் மேனிக்கு தங்கம் போன்ற பளபளப்பைத் தருவதால்தான் கேரட்டுக்கு இப்பெயர். கேரட்டில் உள்ள `பீட்டா கரோட்டின்’, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும் சிறப்புத் தன்மையையும் கொண்டிருக்கிறது.
மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம், இந்த பீட்டா கரோட்டினில் உள்ள சிறப்பு அணுக்கூறுகள், புற்றுநோய்க்கு எதிரியாகவும் செயல்படுகின்றன.
இந்த பீட்டா கரோட்டினானது, வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டிருக்கிறது. நீண்டகாலமாக `அல்சர்’ உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் கேரட்டை நன்கு பிழிந்து சாறு எடுத்து வாரம் மூன்று தடவை வீதம் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், வயிறு மற்றும் குடல் சம்பந்தமான நோய்கள் குணமடையும். மறுபடியும் அது போன்ற பாதிப்புகள் ஏற்படாமலும் தடுத்துவிடும்.
சிலருக்கு வாயில் எப்போதும் துர்நாற்றம் இருந்துகொண்டே இருக்கும். எத்தனை தடவை பல் துலக்கினாலும், வாய் கொப்புளித்தாலும் அந்தத் துர்நாற்றம் போகாது. அதற்குக் காரணம் வாயோ, பற்களோ அல்ல. வயிற்றில் இருக்கும் கோளாறுதான். வயிற்றுக் குறைபாட்டைச் சரிசெய்தால் வாய் துர்நாற்றம் அகன்றுவிடும். அதற்கு, வாரம் ஐந்து நாட்கள் மட்டும் கேரட் சாறை சர்க்கரை, உப்பு சேர்க்காமல் அருந்திவர வேண்டும். அப்புறம், வாய் துர்நாற்றம் போயே போய்விடும்.
வாரத்துக்கு இரண்டு நாட்களாவது கேரட்டை சமையலில் பயன்படுத்துவது உடம்புக்கு நல்லது. காரணம், கேரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை அளிப்பதுடன், செரிமானத்தைத் தூண்டி நல்ல ஜீரண சக்தியையும் அளிக்கிறது.
கேரட்டை பச்சையாகவே சாப்பிடலாம் என்பது இதன் சிறப்பு. பற்களில் கறை உள்ளவர்கள் அடிக்கடி கேரட்டை பச்சையாக மென்று சாப்பிட்டால் அந்தக் கறை மறைந்துவிடும்.

தினசரி காயகல்பம் சாப்பிடுங்க ஆரோக்கியம் மேம்படும்.

கடும்பகல் சுக்கு என்பது பகல் உணவில் சுக்கு சேர்ப்பது ஆகும்… தேர்ந்த மாவு சுக்கு என்பது எல்லா ஊர்களிலும் கிடைக்கும். பூச்சி அரிப்பு, சொத்தை, இல்லாத சுக்கு அரைகிலோ வாங்கி வெயிலில் உலர்த்தி மேல் தோலை சீவி- நன்றாக இடித்து பொடி செய்து சலித்து 1 பாட்டிலில்  வைத்துக்கொள்ளவும்.
பகலுணவில் 1பிடி சாதத்துடன் 1ஸ்பூன் மேற்படி சுக்குப் பொடியைக் கலந்து பிசைந்து சாப்பிடலாம். ஒரு மண்டலம் வீதம் சாப்பிட எடுத்துக் கொள்ளவும். இவ்வாறு தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.  சுக்கு போலவே கடுக்காயும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். இதனை 1கிலோ வாங்கி உள்ளிருக்கும் கொட்யை நீக்கிப் பின் உலர்த்தி பொடி செய்து கலந்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
மாரை நேரத்தில் அரை டீஸ்பூன் எடுத்து பசும் பாலுடன் அல்லது தேனுடன் கலந்து சாப்பிட்டு வர உடல் நோய் அணுகாமல் கல்பம் போல் இறுகும். 
நாள்தோறும் சாப்பிட்ட பிறகு இரண்டு நெல்லிக்காய்களை தின்று வாருங்கள். அத்துடன் தினம் ஒரு முறை ஒரு சிட்டிகை கடுக்காய் பொடியையும் சேர்த்து சாப்பிட்டு வர எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். கேழ்வரகு மாவுடன் எள்ளும் சிறிது வெள்ளமும் சேர்த்து இடித்து அடை செய்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாகும்.
காயகல்பம் சிறுநீரக கோளாறுகளை நீக்குகிறது. சருமங்களில் ஏற்படும் சுருக்கங்கள், சொறி, சிரங்கு உள்பட அனைத்து விதமான தோல் வியாதிகளையும் போக்கி, சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது.
தோல் வியாதிகளை குணப்படுத்தும் மூலிகை மருந்துகளில் காயகல்பத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இது ரத்த சுத்திகரிப்பிற்கு பெரிதும் உதவுகிறது. அதனால், பருக்கள், கொப்புளங்கள் போன்றவை வராமல் தடுக்கிறது.
தலைமுடி உதிர்வதை தடுத்து, அதன் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் செல்களைத் தூண்டுகிறது. எப்போதும் இளமையுடன் இருக்கச் செய்கிறது. பொடுகு, பேன் தொல்லைகளைப்போக்குகிறது. இந்தியாவில் பொதுவாக காயகல்பம் அடங்கிய மூலிகைப் பொடிகளையே தலைக்குத் தேய்த்து இயற்கையான அழகுடன் ஜொலிக்கின்றனர்.
காயகல்பம் காய்ச்சல் உண்டாகாதவாறு தடுக்கிறது. காயங்கள், வீக்கம் போன்றவற்றால், உண்டாகும் வலிகளைப்போக்கி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கண் பார்வைத்திறனை அதிகரிக்கிறது. கண்எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல் போன்ற
கண் சம்பந்தமான குறைபாடுகளை போக்குகிறது.
ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை தந்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

சிங்கிள் பிரீமியம்’ பாலிசிகள் வீழ்ச்சி!

 

`சிங்கிள் பிரீமியம்’ பாலிசிகளின் விற்பனை வெகுவாகக் குறைந்து வருகிறது. பொதுவாக `ரிஸ்க்’கானவையாகக் கருதப்படும் சிங்கிள் பிரீமியம் பாலிசிகள் மீதான கவனத்தை காப்பீட்டு நிறுவனங்களும் குறைத்துக் கொண்டிருக்கின்றன. மாறாக, வழக்கமான பிரீமியம் பாலிசிகள் மீது கூடுதல் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன.
காப்பீட்டுக் காலம் முழுமைக்கும் ஒரே ஒரு முறை பிரீமியம் செலுத்துவதுதான் `சிங்கிள் பிரீமியம் பாலிசி’ எனப்படுகிறது. மற்ற காப்பீட்டுத் திட்டங்களுடன் ஒப்பிடும்போது இவற்றுக்கான பிரீமியம் அதிகமே.
`காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்’ (இர்டா) தெரிவிக்கும் தகவல்படி, 2012 நிதியாண்டில் சிங்கிள் பிரீமியம் பாலிசிகளின் விற்பனை 35 சதவீதம் அளவுக்குக் குறைந்து ரூ. 51 ஆயிரத்து 625 கோடியாகி உள்ளது.
இத்துறை வல்லுநர்கள் மேலும் வீழ்ச்சி இருக்கும் என்கிறார்கள்.

`முன்பு சிங்கிள் பிரீமியம் பாலிசிகள் நல்ல வளர்ச்சி கண்டன. ஆனால் தற்போது காப்பீட்டு நிறுவனங்கள் ரெகுலர் பிரீமிய வகைகளிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றன. இந்த ஆண்டு மே மாதத்தில் 38 சதவீத பாலிசிகளே சிங்கிள் பிரீமிய வகையாக இருந்தன. இந்த ஆண்டு இறுதியில் இது மேலும் சறுக்கி, 25 சதவீதமாகும்’ என்று காப்பீட்டுத் துறை சார்ந்த நிபுணர்களான அனுபவ் அடால்கா, ராஜீவ் வர்மா ஆகியோர்
கூறுகின்றனர்.மற்றொரு தனியார் காப்பீட்டு நிறுவனத்தைச் சேர்ந்த சாம்பசிவ ராவ் கூறுகையில், “சிங்கிள் பிரீமியம் பாலிசிகளின் பங்கு சீராகக் குறைந்து கொண்டே வருகிறது. இது மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனங்களும் இதில் தற்போது ஆர்வத்தைக் குறைத்துக் கொண்டிருக்கின்றன. அதற்குக் காரணம், ரெகுலர் பிரீமியம் வகைகள் தொடர்ந்து வருவாய் அளிக்கின்றன என்றால், சிங்கிள் பிரீமியம் வகைகள் ஆண்டுக்கு ஒரே வருவாயாக அமைகின்றன” என்கிறார்.
சிங்கிள் பிரீமிய வகைகளில் அதிகக் கவனம் செலுத்துவது `ரிஸ்க்’கானது, நிலையானது அல்ல என்று ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களை ஏற்கனவே காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் எச்சரித்திருந்தது.
அப்போது, சிங்கிள் பிரீமியம் வகைகளின் கிடுகிடு வளர்ச்சி, ஒழுங்குமுறை ஆணையத்தை யோசிக்க வைத்தது. காரணம், மொத்த பிரீமிய வருவாயில் சிங்கிள் பிரீமியத்தின் பங்கு 45 சதவீதம் முதல் 50 சதவீதமாக இருந்தது.
சிங்கிள் பிரீமியம் பாலிசிகள் தொடர்பான `இர்டா’வின் எச்சரிக்கையை தற்போது ஏற்றுக்கொண்டிருக்கிற ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், அந்த பாலிசிகளின் விற்பனைக்குக் கடிவாளம் போட ஆரம்பித்திருக்கின்றன.
`யூனிட்’ சார்ந்த காப்பீட்டுத் திட்டங்களின் (யூலிப்) விற்பனைச் சரிவும், சிங்கிள் பிரீமிய பாலிசி விற்பனை வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.
காப்பீட்டுத் துறையைச் சார்ந்த ஆயுள் காப்பீட்டு கவுன்சில் வெளியிட்டுள்ள தகவல்படி, 2011-12-ம் நிதியாண்டை முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது மொத்த பிரீமிய வருவாய் 3 சதவீதம் குறைந்து ரூ. 2 லட்சத்து 83 ஆயிரத்து 315 கோடியாகி இருக்கிறது.
அதேவேளையில், `யூலிப்’ திட்டங்கள் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2011-12-ல் 67 சதவீதம் அளவுக்குச் சரிவடைந்து ரூ. 17 ஆயிரத்து 445 கோடியாகி இருக்கின்றன.
“யூலிப் மற்றும் பென்ஷன் திட்டங்களில்தான் வாடிக்கையாளர்கள் அதிகம் சிங்கிள் பிரீமியத்தில் ஆர்வம் செலுத்தினார்கள். ஆனால் யூலிப் திட்டங்கள் பெரிதாக கைகொடுக்காத நிலையிலும், பென்ஷன் திட்டங்களும் பிரகாசிக்காத நிலையிலும் சிங்கிள் பிரீமியம் பாலிசிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன” என்று காப்பீட்டுத் துறை வல்லுநர்கள் விளக்கிக் கூறுகின்றனர்.