Daily Archives: ஓகஸ்ட் 27th, 2012

எக்ஸெல்: கிழமைகளின் பெயர்கள்

எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், செல் ஒன்றில் கிழமைகளின் பெயரை டைப் செய்தால், அந்த பெயரின் முதல் எழுத்து தானாகப் பெரிய எழுத்தாக அமைக்கப்படுகிறது. எடுத்துக் காட்டாக, monday என டைப் செய்தால், அது Monday என மாற்றப்படும். இந்த மாற்றம் உங்களுக்குப் பிடிக்கவில்லை. ஏதோ காரணத்தினால், நீங்கள் டைப் செய்தபடியே ‘monday’ அமைய வேண்டும் என விரும்புகிறீர்கள். இதற்கான செட்டிங்ஸ் ஒன்றை எக்ஸெல் தொகுப்பில் அமைத்தால் போதும். ஒர்க்ஷீட்டைத் திறந்து கொள்ளுங்கள். இதில் Tools மெனு சென்று கிடைக்கும் மெனுவில், Auto Correct என்பதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். இப்போது எக்ஸெல் ஆட்டோ கரெக்ட் டயலாக் பாக்ஸினைக் காட்டும். இதில் Auto Correct என்ற டேப் தேர்ந்தெடுக்கப் படுவதனை உறுதி செய்திடவும். Capitalize Names of Days என்றுள்ள பாக்ஸில் செக் அடையாளத்தை எடுத்துவிட்டால், நீங்கள் விரும்பியபடி முதல் எழுத்து மாற்றப்பட மாட்டாது. பின்னர், ஓகே அழுத்தி வெளியேறவும்.

பயமுறுத்தும் சுறாக்கள்

 

கரைக்கு வந்தால் நாம் சாப்பிடுகிறோம். நாம் கடலுக்குள் போனால் நம்மை அவை சாப்பிட்டு விடுகின்றன என்று மீன்களை பற்றி வேடிக்கையாக சொல்வார்கள்.

இதை கேட்கவும் வேடிக்கையாகத்தான் இருக்கும். அதேநேரம் சுறாமீன்கள் நம் நினைவில் வந்து மோதினால் கொஞ்சம் இதயம் ஜிலீரிடத்தான் செய்யும். சுறாக்களின் கடல் வேட்டை அந்த அளவுக்கு அபாயகரமானது.

இதோ நம்மை பயமுறுத்தும் சில சுறா வகைகள்.

சாஷார்க்:

saw 3

வை நீளமூக்கை உடையவை. நீந்திக் கொண்டிருக்கும் போதே தம் நீள மூக்கால் மோதி இரையை செயலிழக்க வைத்து விடும். பெரும்பாலும் சிறிய மீன்கள் தான் இதன் விருப்ப உணவு.

பாஸ்கிங்ஷார்க்

basking-1

சுறா வகைகளில் இரண்டாவது பெரிய சுறாவான இது எப்போதும் தன் வாயைத் திறந்து கொண்டே நீந்தும். மூன்றடி திறந்திருக்கும் இந்த வாய்க்குள் பாசிவகைள், சிறு மீன்கள் உட்புகுந்து இரையின்தேவையை பூர்த்தி செய்து விடும். சராசரியாகஇந்த வகை சுறாக்கள் 20 அடி முதல்26 அடி வரைவளரும். ஆனால் அதிகபட்சமாக இவை 40 அடி நீளம் வளரும்.

சுத்தியல் தலை சுறா

hammer 2

சுத்தியல் தலை போன்ற தலை கொண்ட இந்த வகை சுறாக்கள் பார்வையாலேயே தூரத்தை நிர்ணயித்து விடுவதில் வல்லவை. இவை தனியாக போகாமல் கூட்டமாகவே போய் இரை வேட்டை நடத்தும். இவற்றுக்கும் பிரச்சினை. அதாவது வெயில் இவற்றுக்கு ஆகவே ஆகாது. அதிக வெயிலில் இதன் தோலின் நிறம் மாறும்.

அதை இவை நோயாக எண்ணிக்கொண்டு வெயிலுக்கு ஓடிஒளிந்து கொண்டிருக்கும் என்கிறார்கள், கடல் ஆய்வாளர்கள்.

பெரிய வாய் சுறா

mega 1

ந்த சுறாவை முதலில் கண்டறிந்ததே 1976-ம் ஆண்டில் தான். 51/2 மீட்டர் நீளமும் 1200 கிலோ எடையும் கொண்டவை இவை. இதுவும் வாயைத் திறந்து கொண்டு தான் நீந்தும். இவற்றின் விருப்ப உணவு ஜெல்லி மீன்கள், பாசிகள்.

நீளவால் சுறா

thresher 2 

டம்பில் பாதியை வாலாக கொண்டிருக்கும் இந்த வகை சுறாக்கள் அதிகபட்சம் 15 அடி வரை வளரும். இவை தன் வாலால் அடித்து தன் இரை மீன்களை திகைக்க வைக்கும்.அந்த அதிர்ச்சியில் இருந்து அவை சுதாரித்து தப்புவதற்குள் இந்த சுறாவின் அன்றைய இரைப்பட்டியலில் இணைந்து விடும்.

***

விண்டோஸ் சிஸ்டம் டிப்ஸ்

ஆட்டோமேடிக் ஸ்குரோலிங்: மிகப் பெரிய நீளமான டாகுமெண்ட்டைப் படிக்கையில் தானாகவே இந்த டாகுமெண்ட்டை ஸ்குரோல் செய்திடலாம். மவுஸ் கொண்டோ என்டர் கீ தட்டியோ,ஸ்குரோல் பாரில் மவுஸ் கொண்டு அழுத்தியோ செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. மவுஸை டாகுமென்ட் உள்ளே சென்று வீலைக் கிளிக் செய்திடவும். மவுஸின் கர்சர் நடுவில் புள்ளியும் அதனைச் சுற்றி இரண்டு அல்லது நான்கு அம்புக் குறிகள் கொண்ட கர்சராக மாறும். இரண்டு அம்புக் குறிகள் என்றால் டாகுமெண்ட் தானாக மேலும் கீழும் செல்லும். நான்கு அம்புக் குறிகள் என்றால் நான்கு பக்கங்களிலும் செல்லும். இப்போது மவுஸை அசைத்தால் அந்த அடையாளம் நகரத் தொடங்கும். அந்நிலையில் எங்கு கிளிக் செய்தோமோ அங்கு இதே போன்ற டூப்ளிகேட் கர்சர் ஒன்று இருக்கும். இப்போது டாகுமெண்ட் பக்கம் தானாக நீங்கள் அசைத்த திசையில் நகரத் தொடங்கும். மவுஸை அசைத்து அது ஸ்குரோல் ஆகும் வேகத்தினைக் கட்டுப்படுத்தலாம்.
போல்டருக்கு ஷார்ட் கட்: கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருமே புரோகிராம் களுக்கு ஷார்ட் கட்கள் அமை த்துப் பயன்படுத் துகிறோம். ஒரு சிலரே போல்டருக்கும் ஷார்ட் கட் அமைக்கலாம் என்பதனைத் தெரிந்து அவற்றிற்கும் ஷார்ட் கட்கள் அமை த்துப் பயன்படுத்தி வருகின்றனர். எப்படி அமைப்பது என்று பார்க்கலாம்.
டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து நியூ என்பதில் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ஷார்ட் கட் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது தோன்றும் சிறிய பாக்ஸில் போல்டர் உள்ள இடத்தின் பாத் அமைக்கவும். அடுத்து நெக்ஸ்ட் என்பதில் கிளிக் செய்து இதற்கு ஒரு பெயர் கொடுக்கவும். அதன்பின் பினிஷ் என்ற இடத்தில் கிளிக் செய்தால் ஷார்ட் கட் உருவாக்கப்பட்டு டெஸ்க்டா ப்பில் இடம் பெறும். இதில் கிளிக் செய்தால் நேராக போல்டருக்குச் செல்லலாம்.
குயிக் லாஞ்ச் (எக்ஸ்பி, விஸ்டா) ஸ்டார்ட் பட்டனின் வலது புறம் இருப்பது குயிக் லாஞ்ச் பார். அடிக்கடி பயன்படுத்தப்படும் புரோகிராம்களுக்கான ஷார்ட் கட் ஐகான்கள் இங்கு வரிசையாக வைக்கப் பட்டுள்ளன. இது உங்கள் கம்ப்யூட்டரில் தெரியவில்லை என்றால் கீழ்க்கண்டவாறு செயல்படவும். டாஸ்க்பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் டூல்பார்ஸ் என்ற இடத்தில் லெப்ட் கிளிக் செய்திடவும். இதில் பாப் அப் ஆகும் பிரிவுகளில் குயிக் லாஞ்ச் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் வெள்ளைக் கலர் பேடில் பென்சில் வைத்தது போல ஒரு ஐகான் தென்படும்.
இது டெஸ்க் டாப் பெறுவதற்கான ஐகான். பல புரோகிராம்களைத் திறந்து செயல்படுகையில் டெஸ்க்டாப் வேண்டு மென்றால் புரோகிராம்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக மூட வேண்டியதில்லை. இந்த ஐகானில் கிளிக் செய்தால் டெஸ்க் டாப் கிடைக்கும். மீண்டும் அழுத்த புரோகிராம்கள் கிடைக்கும். விஸ்டா சிஸ்டத்தில் இது புளு கலரில் இருக்கும்.

சிவம்

 

நாம் எப்படி வாழவேண்டும் என்பதை உணர்த்துவது – சிவசொரூபம். சிவனுடைய ஜாடமுடியிலிருக்கும் பிறை சந்திரன், நம்முடைய இன்பமும், துன்பமும் மாறி மாறி வளர்பிறை, தேய்பிறையாக வருவதை குறிக்கும்.
சிவனுடைய சிரசிலிருக்கும் கங்கை:
மனதை, கங்கை போல, தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கங்கையில் எத்தனை அழுக்குகள் வந்து சேர்ந்தாலும் அதன் தூய்மை கெடுவதில்லை. அதுபோல, ஆசாபாசங்கள் நம்மை வழித்தவறி போகச் செய்தாலும், நாம் தூய்மையை விட்டு அகலக்கூடாது.
ஒவ்வொரு நிமிடமும் பாவக்குழியிலே தள்ள நச்சுப்பாம்பாக சூழ்நிலை நமக்கு காத்திருக்கிறது. இதையே சிவனுடைய கழுத்தில் இருக்கும் பாம்பு எச்சரிக்கிறது.
மிருக உணர்ச்சிகள் நம்மை பாதிக்கா வண்ணம் உயர்ந்த உள்ளத்தோடு நாம் வாழவேண்டும் என்பதை சிவனுடைய புலித்தோல் ஆடை உணர்த்துகிறது. உடல் முழுவதும், சாம்பலை பூசியிருப்பது மனிதனுடைய முடிவு, பிடிசாம்பல்தான் ஆகவே அகங்காரத்தை விட்டொழிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. ஈசன் தன் உடம்பின் ஒரு பாகத்தில் தேவியை வைத்திருப்பது. வாழ்வில் நாம் காமத்தை வென்று, மோட்சத்தை அடையவேண்டும் என்பதற்காகத்தான்.