Daily Archives: செப்ரெம்பர் 1st, 2012

மாரடைப்புக்கு, "ஸ்டென்ட், பைபாஸ்’ தீர்வு கிடையாது

னிப்பு, எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவது; பழைய உணவை சூடாக்கிச் சாப்பிடுவது; காலை, 8.00 மணிக்கு மேல் தூங்குவது; எப்போதும் நொறுக்கு தீனி சாப்பிடுவது; காய்கறிகள் இல்லாமல் மூன்று வேளையும், அரிசி சாதத்தை சாப்பிடுவது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், தொப்பை, புகை பிடித்தல், மது அருந்துவது கிடையாது. இப்படிப்பட்டவர்களுக்கு, ஏன் மாரடைப்பு வருகிறது?
தினமும் நடை பயிற்சி, உடற்பயிற்சி செய்தால், ரத்த ஓட்டம் அதிகரித்து, ரத்தக் குழாய் அடைக்காமல் இருக்கும். நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு இதயம் வலுவாக இருக்கும். எந்நேரமும் எதிர்மறையாக இருப்பது; யாரையும் நம்பாமல், சந்தேகத்தோடு வாழ்வது; மூன்று வேளையும் சாப்பிடுவது; ஓசியில் கிடைத்தால், நிறைய சாப்பிடுவது; சிக்கன் பிரியாணி, இறால், முட்டை, மீன், மூளை என அனைத்தையும், ஒரே வேளையில் சாப்பிடுவது. அடிக்கடி இனிப்பு, எண்ணெய் பலகாரங்கள், பழைய உணவை சூடாக்கிச் சாப்பிடுவது; காலை, 8.00 மணிக்கு மேல் தூங்குவது; எப்போதும் நொறுக்கு தீனி சாப்பிடுவது; காய்கறிகள் இல்லாமல் மூன்று வேளையும், அரிசி சாதத்தை சாப்பிடுவது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். நல்ல மனநிலைக்கு, யோகா, தியானம் தேவை.மார்புவலி, மாரடைப்புக்கு, "ஸ்டென்ட், பைபாஸ்’ தீர்வு அல்ல; வாழ்க்கை முறை மாற்றம் தேவை.
மாரடைப்பில் எத்தனை வகை உண்டு? எந்த வயதினருக்கு மாரடைப்பு ஏற்படும்?
சர்க்கரையுடன் இருக்கும் மனிதர்களுக்கு மாரடைப்பு; ரத்தக் கொதிப்புள்ள மனிதர்களுக்கு மாரடைப்பு; அதிக டென்ஷன் உள்ளவருக்கு மாரடைப்பு; கெட்டக் கொழுப்புள்ளவருக்கு மாரடைப்பு; புகை பிடிப்பவர்களுக்கு மாரடைப்பு; தொந்தியுள்ளவருக்கு மாரடைப்பு; 60, 70, 80 வயதுள்ளவர்களுக்கு வரும் மாரடைப்பு; இளம்மங்கையர், 30, 40 வயதினருக்கு மாரடைப்பு; மற்ற வியாதிகளால் மாரடைப்பு – இப்படி, மாரடைப்பில் பல விதங்கள் உள்ளன. யாருக்கு, எப்போது மாரடைப்பு வரும் என, முன்கூட்டியே அறிவது சாலச் சிறந்தது. எந்த நேரத்தில் மாரடைப்பு வரும் என்பதை, முன் கூட்டி அறிவிப்பது மருத்துவரின் கடமை.
மாரடைப்பு ஏற்படாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?
ஊட்டச் சத்துக்களான, மாவு, கொழுப்பு, புரதம் தவிர, நுண்ணுயிர் சத்துகளான, வைட்டமின்கள், ஏ, டி, சி, பி, பி6, பி12, தாதுப் பொருட்களான, இரும்பு, மக்னீசியம், காப்பர், சோடியம், பொட்டாசியம், குளோரைடு என்ற, பல தாதுப் பொருட்கள், தேவையான அளவு இருக்க வேண்டும். இவற்றில் குறைபாடு ஏற்பட்டால், எரிச்சல், கால்களில் உணர்வு இல்லாமை, கண் எரிச்சல், உடல் அசதி, சோர்வு, கைகால் வலி, கால் மதமதப்பு, சதைப் பிடிப்பு, பசி இன்மை, இரும்புச் சத்து குறைபாடு ஆகியவை ஏற்படும்.
இயற்கை உணவுப் பொருள்களான காய்கறிகளில், பழங்களில், நிறைய கிடைக்கிறது. நம் முன்னோர்கள் தினமும், தெருவில் விற்கப்படும் காய்கறிகளை வாங்கி, உணவு சமைப்பர். இதனால், நிறைய நுண் சத்துக்கள் உடலுக்குக் கிடைத்தன. ஆனால் இன்று? காய்கறிகளையும், பாக்கெட் உணவுப் பொருள்களையும் பிரிஜ்ஜில் வைத்து, ஒரு வாரம், பத்துநாட்கள் வைத்து சமைத்து சாப்பிடுகிறோம். இவை வெறும் சக்கையே; நுண் சத்துக்களை இழந்து விடுகிறோம். காற்றோட்டத்தோடு உள்ள காய்களில் தான் நுண் சத்துக்கள் நிறைய உள்ளன. சமைத்த உணவு, மூன்று மணி நேரத்தில், சத்தை இழக்கிறது. இத்தகைய உணவு சாப்பிடுவதைத் தவிர்த்து, செடியிலிருந்து பறிக்கப்பட்டு, சில மணி நேரங்களே ஆன, பச்சைக் காய்கறிகளைச் சாப்பிட வேண்டும்.
அதிக இன்சுலின் சுரப்பு எப்படி ஆபத்தாகிறது? அது எப்படி ரத்தக் குழாயை அடைக்கும்?
தினமும், அரிசிச் சோறு, அரிசியால் தயாரிக்கப்படும் இட்லி, தோசை சாப்பிடுவது; பாலிஷ் செய்யப்பட்ட மைதாவினால் செய்யப்பட்ட பரோட்டா, ரொட்டி, கேக், நூடுல்ஸ், பிட்சா சாப்பிடுவது; குளிர்பானங்கள் குடிப்பது; உடற்பயிற்சி, உடல் உழைப்பு இல்லாமை; உப்பு சத்துள்ள உணவினால் உடலில் நீர் சேர்ந்து, ரத்தக் கொதிப்பு ஏற்படுதல்; அதிக கொழுப்பு உணவு சாப்பிடுதல் ஆகியவற்றால், கணையத்திலிருந்து, அளவுக்கு அதிகமாக இன்சுலின் சுரக்கும். இதனால் கணையம், வெகு சீக்கிரத்தில் சோர்ந்து, செயலிழந்து விடும். இதன் பாதிப்பாக, இன்சுலின் சுரப்பு குறையும். இதனால், உடலில் குளூக்கோஸ் அளவு அதிகரித்து, அது ஜீரணமாகாமல், கெட்ட கொழுப்புகளாக, டி.ஜி.எல்., – எல்.டி.எல்., ஆக மாறி, ரத்தக் குழாய் உட்சுவரில் படிந்து, அடைப்பை அதிகமாக்குகிறது.
டாக்டர் அர்த்தநாரி

நீரிழிவு நோய் மற்றும் இரத்த கோளாறு நீங்க பாகற்காய் சாப்பிடுங்க

ht1392 காய்கறி வகைகளில் பாகற்காய் மருத்துவத்தில் சிறந்து விளங்குகின்றது..
இரத்த கோளாறுகள்
பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு, இரத்த கொதிப்பு காரணமாக உண்டாகும் அரிப்பு மற்றும் இரத்த கோளாறு போன்ற வற்றிற்கு பாகற்காய் சிறந்த மருந்தாகும். இரண்டு ஸ்பூன் பாகற்காய் சாறுடன் எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல்நிலையில் மாற்றம் ஏற்படும். இரத்த கொதிப்பு இரத்த கோளாறுகள், போன்றவைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
காலரா மற்றும் வாந்தி பேதி
ஆரம்ப கட்டத்தில் ஏற்பட்டிருக்கும் காலரா மற்றும் வாந்தி பேதியை போக்க இரண்டு டீஸ்பூன் பாகற்காய் இலையின் சாறு, இரண்டு டீஸ்பூன் டீத்தூள், வெங்காயச்சாறு இரண்டு டீஸ்பூன், எலுமிச்ச சாறு இரண்டு டீஸ்பூன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் காலராவினால் ஏற்பட்ட வாந்தி பேதி குணமாகும். காலரா குணமாகும் வரை சாப்பிடவேண்டும்.
நீரிழிவு நோய்
பழத்த பாகற்காய் இரத்தம் மற்றும் சீறுநீரில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது ஏனெனில் பாகற்காய் செடியில் இன்சுலின் கொண்டுள்ளது. குறிப்பிட்ட அளவு பாகற்காயை  ஜீஸ் செய்து சாப்பிட்டால் ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பது மட்டுமின்றி குளுக்கோஸ் சகிப்பு தன்மையை அதிகரிக்கிறது.
கண் பிரச்சினைகள் நோய் எதிர்ப்பு
தொடர்ந்து பாகற்காய் சாறு சாப்பிட்டு வந்தால் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும். நல்ல தூக்கத்தை ஏற்படுத்தவும் பாகற்காய் சிறந்ததாகும். பாகற்காயில் அதிக பீட்டா கரோட்டின் மற்றும் பிற பண்புகள் அடங்கியுள்ளன. இது கண்ணில் ஏற்படும் சிக்கல்களை போக்க சிறந்த மருந்தாகும்.பாகற்காய் பழம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும்.
கல்லீரல் பிரச்சினை
பாகற்காற் பழத்தின் சாறு மது போதை மற்றும் நச்சுத் தன்மை நிறைந்த சிகிச்சைகளுக்கு சிறந்ததாகும்.. இது குடிப்பழக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.  
மூல வியாதி:
ஒரு டம்ளர் மோரில் மூன்று டீஸ்பூன் பாகற்காய் சாறு சேர்த்து மாதத்திற்கு மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலம் நோய் குணமாகும். மேலும் பாகற்காய் செடியின் வேர்களை பேஸ்ட் போல அரைத்து மூலம் ஏற்பட்டிருக்கும் இடத்தில் தடவ வேண்டும். இவ்வாறு செய்து வர மூலநோய் குணமாகும்.
சொரியாஸிஸ்
கைகளில் ஏற்படும் அரிப்பு, கால்களில் ஏற்படும் பூஞ்சை, தோல் தடிப்பு,சொரியாஸிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்க பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிடவேண்டும்.
சுவாச கோளாறுகள்
பாகற்காய் நச்சுத் தன்மையை அகற்றி இரத்தத்தை சுத்திகரிப்பதில்  முக்கிய பங்கு வகிக்கிறது. சுவாச கோளாறு மற்றும் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால் பாகற்காயை பொரியல் செய்தோ அல்லது ஜீஸ் செய்தோ சாப்பிட சுவாச கோளாறுகளில் ஏற்பட்ட பிரச்சனை தீரும்.