Daily Archives: செப்ரெம்பர் 2nd, 2012

ஆரோக்கியம் தரும் அழகு நகங்கள்!

"அழகு என்பது முக வசீகரம் அல்ல. நிஜமான ஆரோக்கியம் தான் அழகு. ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள் தான் தங்கள் லட்சியத்திலும் சாதிக்கிறார்கள்” என்கிறார், ஸோனல்.

Km03 இவர் நக வடிவமைப்புக் கலைஞர். ஒவ்வொருவர் விரல்களின் அமைப்புக்கேற்ற விதத்தில் அவர்களின் நகங்களை அழகுபடுத்துவதோடு, அவர்கள் விரல்களை வசீகரிக்கும் விதத்தில் நக வடிவமைப்பையும் செய்கிறார்.

பலருக்கும் கைவிரல்கள் அழகாக இருக்கும். ஆனால் நகங்களை பார்த்தாலோ அழுக்கு படிந்து காணப்படும். அந்த அழுக்கு நகங்களைக் கொண்ட கையுடன் சாப்பிட்டு நோய்க்கு ஆளாகிறார்கள். கிராமங்களில் இந்த மாதிரி அழுக்கு நகங்களைக் கொண்டவர்களை சர்வ சாதாரணமாக பார்க்க நேரும்போது ஆரோக்கியம் குறித்த அவர்கள் அறியாமை கவலை தருகிறது என்கிறார் இவர்.

"மாணவர்கள் நகம் வெட்டிக்கொண்டு தான் பள்ளிக்கு வர வேண்டும். அப்படி மறந்தோ, அல்லது அலட்சியமாகவோ நகம் வெட்டாமல் வரும் மாணவர்களை உடற்பயிற்சி ஆசிரியர்கள் கண்டிப்பதுண்டு. இந்த கண்டிப்புக்குப் பின்னாக அவர்களின் உன்னதமான ஆரோக்கியம் இருக்கிறது என்பது தான் உண்மை.

சுத்தம் சுகம் தரும் என்பதை தெரிந்து கொண்டால் சிறு பருவத்திலேயே நகங்களை பராமரிக்கும் எண்ணம் வந்து விடும். அப்போது சுகாதாரக் குறைவுக்கு ஒருபோதும் நகம் காரணமாக இருக்காது” என்றவர் இன்னும் தொடர்கிறார்.

"பூர்வீகம் ராஜஸ்தான் மாநிலம் என்றாலும் நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை தான். அசன்மெட்ரிகுலேசன் பள்ளியில் பள்ளிப்படிப்பு. எம்.ஒ.பி. வைஷ்ணவா கல்லூரியில் பட்டப் படிப்பு. பட்டப் படிப்பில் நான் படித்தது பிஎஸ்.சி.யில் எலெக்ட்ரானிக் மீடியா. தொடர்ந்து பெங்களூரில் 6 மாத கோர்சாக கற்றுக்கொண்டது நக பாதுகாப்பு படிப்பு. இதுதான் என்னை இந்தத் துறையில் தனித்து அடையாளம் காட்டுகிறது.

Km05

இந்தப் படிப்பை முடித்த கையோடு சிங்கப்பூர் போய் அங்கும் பயிற்சி மேற்கொண்டபோது இதில் இன்னும் புதிய நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன். இனி நம்மாலும் நக அழகுக் கலைஞர்களை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தபோது, சென்னை ஆழ்வார்பேட்டையில் இந்த `நெய்ல் ஸ்பா’வை தொடங்கினேன். நகம் பற்றிய விழிப்புணர்வு உள்ளவர்கள், நகத்தின் மூலம் தங்களை எப்படி புத்தழகு படுத்திக் கொள்ளலாம் என்று விரும்புகிறவர்கள் என ஆர்வப்பட்ட அத்தனை பெண்களும் வந்தார்கள்.

வடஇந்தியாவில் இந்த மாதிரியான நக வடிவமைப்பு நிலையங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் தென்னிந்தியாவில் இது தான் முதல். அதுவும் முதல் நக வடிவமைப்பு நிலையமே சென்னையில் தான் என்பது நிஜமாகவே எனக்கான பெருமையாக எடுத்துக் கொள்கிறேன். அழகு குறித்த ஆர்வம் கொண்ட பெண்கள், நக ஆரோக்கியம் குறித்த கவனம் கொண்ட பெண்கள் என இரு தரப்பாரும் வருவதால் இந்த நக அழகுக்கலை பெண்களிடம் அழகு சார்ந்த ஆரோக்கியம் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

முதலில் வெர்மிலியான் நெயில் ஸ்பா பற்றி சொல்கிறேன். கை மற்றும் கால்களை அழகுபடுத்தும் பணியை இது செய்கிறது. நகங்களை வெட்டி அழகுபடுத்துதல், கைகளுக்கு மசாஜ் என எல்லாம் இந்த முறையில் உண்டு.

அடுத்தது பெசிக மெனி முறை. இம்முறையில் கைகளை முதலில் வெதுவெதுப்பான நீரில் மூழ்க வைப்போம். பின்பு நகங்களை அழகாக வடிவமைத்து மசாஜ் செய்து நெயில் பாலிஷ் போடுவோம்.

Km06

வெர்மிலியான் மேனி

வெதுவெதுப்பான பாலில் உங்கள் கால் மற்றும் கைகளை சிறிது நேரம் வைத்து தேன் மற்றும் கரும்பு மூலம் ஸ்கரப் செய்வது இதன் ஸ்பெஷல்.

வெர்மிலியான் பெடி

கால் நகங்களில் உள்ள அழுக்கை அகற்றி நகத்தை அழகாய் வெட்டி தேன் மற்றும் பால் கொண்டு ஸ்கரப் செய்வது இதன் ஸ்பெஷல்.

நெயில் வைட்டனிங்

நகத்தில் உள்ள கறைகளை அப்புறப்படுத்தி அவற்றை பளிச்சென வைப்பதே இதன் சிறப்பு.

பேசிக் பெடி

நல்ல வெதுவெதுப்பான நீரில் கால்களை முக்கி மசாஜ் செய்து நகங்களை வடிவமைப்பது இம்முறையில் சிறப்பாக வரும்.

மண் கொண்டு பாதங்களுக்கு சிகிச்சை செய்யும் முறைக்கு `அன் இன்டிமேட் ஜர்னி’ என்று பெயர்.

நெயில் ஆர்ட்

Km04 இம்முறையில் நகத்தில் அழகான ஓவியம் வரையப்படும். இவை நெயில்பாலிஷ் போல அல்லாது நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும். இவற்றில் கற்கள், முத்துக்கள், சிலிட்டர் ஆகியவை அழகுபடுத்த உபயோகிக்கப்படும்.

இப்போது இளைஞர்கள் பலரும் ஸ்டைலாக ஒரு பக்க கம்மல் அணிந்து கொள்கிறார்கள். பெண்களை பின்பற்றி ஆண்கள் இந்த ஸ்டைலுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் நக அழகில் பெண்கள் இன்னும் அடுத்த கட்டம் போய் விட்டார்கள். நகத்தில் ஓட்டை போட்டு நக மாட்டி அணிந்து கொள்கிறார்கள். நன்கு மெனிக்யுர் செய்யப்பட்ட விரல்களில் இது ரொம்ப அதிகமாகவே பளிச்சிடும்.

இம்மாதிரி அலங்காரங்களுக்கு வாய்ப்பில்லா தவர்கள் மறக்காமல் வளர வளர நகங்களை வெட்டி அழுக்கு சேராமல் பார்த்துக் கொண்டாலே போதுமானது.”

இது பெண்களுக்கு மட்டும் தானா?

ஆண்களுக்கு வட மாநிலங்களில் இதற்கான நிலையங்கள் உள்ளன. ஆனால் சென்னையில் நான்பெண்களுக்கு மட்டுமே இந்த நக வடிவமைப்பை தொடர்ந்து வருகிறேன். இதில் என் பாதுகாப்பு விஷயமும் இணைந்து இருக்கிறதே”

உஷார் பார்ட்டி தான்!

கூந்தலை பராமரிக்க…

பெண்களின் கூந்தலை மூன்று விதமாக பிரிக்கலாம். அவை வறண்ட கூந்தல், எண்ணெய் தன்மை நிறைந்த கூந்தல், சராசரி தன்மை கொண்ட கூந்தல்.
*வறண்ட கூந்தலை உடையவர்களுக்கு, எப்போதும் முடி காய்ந்து, வறண்டு போயிருக்கும். இந்த கூந்தலை சீவிமுடிப்பது சிரமமான விஷயம். இவர்கள் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை சூடாக்கி, தலையில் தடவி, விரல் நுனிகளால், 20 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
* எண்ணெய் தன்மை நிறைந்த கூந்தல் அழுக்கும், தூசும் நிறைந்திருக்கும். இவர்கள், தினமும் கூந்தலை கழுவி அலச வேண்டும். ஹேர் டானிக்கை தினமும் தேய்க்கலாம். இவர்கள் தினமும் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
* சராசரி தன்மை கொண்ட கூந்தலை உடையவர்கள், கூந்தலில் அதிக கவனம் கொள்ள வேண்டும். தினமும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை தலையில் தேய்த்து, சிறிது நேரம் மசாஜ் செய்யவும். 10 நாட்களுக்கு ஒருமுறை செம்பருத்தி இலை அல்லது பாசிப்பயிறு மாவு ஆகியவற்றை பயன்படுத்தி தலையை அலசவும். இவர்கள் அதிகமாக வெயிலில் நடமாடக் கூடாது. தலையில் வெயில்படுவது முடிக்கு நல்லதல்ல.