Daily Archives: செப்ரெம்பர் 4th, 2012

ஆண்களின் ஜி ஸ்பாட் எது? உங்களுக்குத் தெரியுமா?

 பெண்களைப் போல ஆண்களுக்கும் உணர்ச்சிப்புள்ளி இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொருவிதமான இடத்தில் உணர்ச்சியை தூண்டக்கூடிய புள்ளிகள் இருக்கின்றன. ஆண்களின் சரியான ஜி.ஸ்பாட் எது என்றும் அதனை எவ்வாறு கையாளுவது என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உறவின் போது தம்பதியர் இருவரும் இணைந்து ஒருவருக்கொருவர் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு அந்த கிளர்ச்சியிலே உறவில் ஈடுபடுவது ஒரு ரகம். இருவருமே இணைந்து சின்னச் சின்ன விளையாட்டுக்கள், தழுவல்கள், சில முத்தங்கள் என உறவை தொடங்குவது மற்றொரு ரகம். இதில் பெண்ணின் கிளர்ச்சியை தூண்ட எத்தனையோ விதமான டெக்னிக்குகளை கையாளுகின்றனர். பெண்ணின் உணர்ச்சிப்புள்ளி எங்கு இருக்கிறது என்று அந்த பெண்ணை கையாளத்தெரிந்த ஆணின் கைகளுக்குத்தான் தெரியும். ஏனென்றால் எங்கு தொட்டால் என்ன விதமான ஓசை கிடைக்கும் என்பதை உணர்ந்து தீண்டினால்தானே சரியான இசை கிடைக்கும்.

பெண்ணிற்கு எவ்வாறு ஜி-ஸ்பாட் எனப்படும் உணர்ச்சிப்புள்ளி இருக்கிறதோ அதேபோல ஆணுக்கும் உணர்ச்சிப்புள்ளி இருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். அந்த இடத்தை சரியாக அணுகினால் ஆண்கள் கிளர்ச்சியடைந்து உணர்ச்சிப்பிழம்பாக மாறுவார்கள் என்கின்றனர் நிபுணர்கள். ஆண்களின் ஜி ஸ்பாட் எது என்று பாக்ஸ் இதழில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்குறியின் அடியில் உள்ள புரஸ்டேட் ஆண்களின் ஜி.ஸ்பாட் என்று கூறியுள்ளனர். அந்த இடத்தில் தொட்டால் ஆண்களின் உணர்ச்சி அதிகரிக்கிறதாம்.

சில ஆண்களுக்கு மார்பின் காம்புப் பகுதியை வருடினால் உணர்ச்சியின் வேகம் அதிகரிக்கும், சிலருக்கு ஆண் குறியை வருடினால் கிளர்ச்சி ஏற்படும் என்றும் கூறுகின்றனர். காதுமடல், பின்கழுத்து, அக்குள் என பிற இடங்களும் ஆண்களின் உணர்ச்சியைத் தூண்டும் இடங்களாக நிபுணர்கள் கூறியுள்ளனர். ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு புரஸ்டேட் பகுதியை வருடுவதன் மூலம் அதிக அளவில் உணர்ச்சி தூண்டப்படுவதாக தெரிவித்துள்ளனர். புரஸ்டேட்டினை கைகளால் வருடுவதை விட வித்தியாசமான பொஸிசன்களில் புரஸ்டேட்டினை தடவுவதும் அதிக அளவில் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறதாம்

ஒன்றை பத்தாக்கும் முதலீடு

எப்படிடா வாராவாரம் திருச்சியில் இருக்கிற வீட்டுக்கு போயிட்டு வர்றே…?
அது ரொம்ப சிம்பிள்டா… காலையில் பேப்பரை பிரிச்சா ஏதாவது ஒருகுரூப் சென்னைக்க மிக அருகில் இடம்… விலைக்க வாங்கலாம் கூப்பிட்டு விளம்பரம் செய்திருப்பாங்க… அவங்களை காண்டாக்ட் பண்ணினா கூட்டிட்டு போவங்க… அப்படியே அந்த சைட்டில் இருந்து டவுன் பஸ் பிடிச்சு திருச்சிக்கு போயிடுவேன்.
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் நான் குமுதத்தில் படித்த நகைச்சுவை துணுக்கு இது. நிலைமை இன்னமும் ஒருசதுர அடிகூட முன்னேற வில்லை. இன்னமும் அதே லோல விளம்பரங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அதே போல திருச்சிக்கும் வேலூருக்கும் போக கூடியவர்கள் இந்த சைட் விசிட் சர்வீஸில் இன்றும் போய் கொண்டு தான் இருக்கிறார்கள்.
இன்றைக்கு எந்த சேனலை திறந்தாலும் எதாவது ஒரு சின்னத்திரை நட்சத்திரம் நிலம் வாங்க சொல்லி நச்சரித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
வீட்டுக்கு மிக மிக அருகில் விமான நிலையம், கொஞ்சம் தள்ளிப்போனால் கூப்பிடு தூரத்தில் ரயில்வே ஸ்டேஷன் என்று கதை விடும் இவர்களாலேயே பலரும் ரியல் எஸ்டேட்டை விட்டு விட்டு ஒதுங்கி ஓடுகிறார்கள். இவர்கள் சொல்லும் விலை ரொம்பவே குறைவாக இருக்கிறதே என்று போனால் உள்ளடி வேலைகள் பல செய்து கொடுத்த பணத்தையும் கிடைத்த நிலத்தையும் ஒரே தராசில் வைக்க முடியாமல் தடுமாறி விடுவார்கள். மிடில் கிளாஸ் மக்களின் ஆயுட்காலம் கனவு காணி நிலம்… அதற்காக எப்படியாவது உருண்டு புரண்டு பணத்தை சேமித்து முதலீடு செய்து விடலாம் என்பது அவர்களுடைய ஆசை. ஆனால் ஏமாற்றம் அடைபவர்கள் தாங்கள் அனுபவங்களை கண்ணீரோடு சொல்லும்போது மற்றவர்களும் பதறி சிதறி ஓடிவிடுகிறார்கள்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்… ரியல் எஸ்டேட்டை நல்ல மதலீடாக பார்க்கலாமா? என்றால் லாம் என்று தான் சொல்வேன். ஆனால் அதை சொல்வதற்கு முன் ஆயிரம் ஆயிரம் விஷயங்களை கவனித்து கொள்ள வேண்டும். ஏனென்றால் பொதுவாக போட்ட பணம் புதையலாக மாறுவது ரியல் எஸ்டேட் முதலீட்டில் தான். அதே சமயம் பூதம் புறப்பட்ட கதையாகவும் மாற வாய்ப்பிருக்கும் முதலீடும் அது தான்… அதனால் தான் சொல்கிறேன். பல விஷயங்களை கவனித்து முதலீட்டு முடிவை எடுங்கள் என்று.
இதே போன்ற முதலீடுகளில் நாம் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் உண்மையிலேயே நிலம் எங்கு என்று பார்ப்பது தான். ஏனென்றால் பளபளப்பாக முப்பதடி சாலை, மூன்றடிக்கு ஒரு தெருவிளக்கு என்றெல்லாம் சொல்லி ஒரு மனையை காட்டுவார்கள். அடடே நல்லாயிருக்கே என்று முடிவு செய்து முதலீடு செய்யலாம் என்று நினைக்குமபோது இந்த மனையில் எல்லா பிளாட்டும் விற்று தீர்ந்து விட்டது. இதே போல அடுத்த வளைவில் ஒரு மனை இருக்கிறது. ஒரு தெரு உள்ளடங்கி இருப்பதால் கொஞ்சம் விலை குறைவு எ“னறு சொல்வார்கள். நமக்கு இந்த மனையே நிறைவாக இருக்கும் அவர்கள் மீது நம்பிக்கை வந்து விடும். அட்வான்ஸை கொடுத்து விட்டு பத்திர பதிவுக்கு போனால் ஆயிரம் வில்லங்கத்தோடு இருக்கும் பணம் போய்விடும்.
முதலீடு என்பதே ஒன்று பத்தாக பெருக வேண்டும் என்பதை தான் நாமும் எல்லா கட்டுரைகளிலும் பேசுகிறோம். ரியல் எஸ்டேட் முதலீட்டிலும் அப்படித்தான். மனையை வாங்குவது என்று தீர்மானித்த பிறகு அது பத்தாண்டுகளுக்கு பிறகு என்னவாக இருக்கும் என்று யோசித்து பார்க்க வேண்டும். ஒரு வேகத்தில் சென்னையை ஒட்டிய பகுதி என்று செங்கல்பட்டு ஏரியாவில் மனைகளை வாங்கி குவித்தார்கள். அந்த மனைகள் இன்று ஓரளவுக்கு அவர்களுக்கு லாபம் ஈட்டி தரக்கூடிய முதலீடாக மாறியிருக்கிறது. அப்படி இருந்தால் ஓகே… மாறாக தேறவே தேறாத மனையாக பார்த்து பணத்தை போட்டு விட்டால் போட்டது போட்டபடியே கிடக்கும்.
இப்படி எந்த மனை வளரும் என்பதை கவனிக்க சுற்று புறத்தையும் செய்திகளையும் கவனித்து வந்தாதே போதும்… சென்னையில் இருந்து மகாபலிபுரம் சாலையில் மனை வாங்கி போட்டவர்கள் ஐ.டி. காரிடாராக அது மாறும் என்று தெரிந்து வாங்கியிருந்தால் உண்மையிலேயே நல்ல முதலீட்டாளர்தான். சும்மா வாங்கி போடுவோமே என்று நினைத்து வாங்கி போட்டிருந்தாலும் பரவாயில்லை. அடுத்த மனை வாங்கும்போது கவனமாக வாங்குங்கள்.
இப்படி அந்த பகுதியில் என்ன வரப்போகிறது. எதிர்காலத்தில் என்று தெரிந்து வாங்குவதில் இன்னொரு லாபம் இருக்கிறது. அந்த திட்டத்தில் நாம் வாங்க போகும் மனை மாட்டி கொள்ள வாய்ப்பிருக்கிறதா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.சென்னையின் புறநகரான சிறுசேரியில் பெரிய தொழிற்பேட்டை வரப்போகிறது என்று செய்தி கேள்விப்பட்டு அங்கே மனையில் முதலீடு செய்ய முடிவு செய்யும்போதே தொழிற்பேட்டைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தில் நம்முடைய மனையும் சேர்ந்து விடுமா என்பதை கவனிக்க வேண்டும்.
இப்போது இருக்கும் வசதி என்னவென்றால் அரசு திட்டங்களுக்காக மனை ஒதுக்கீடு செய்யப்படும்போதே அந்த மனையை பதிவு அலுவலகத்தில் குறித்து விடுவார்கள். அதனால் நாம் ஒரு மனையை பதிவு செய்ய செல்லும்போதே இது அரசு ஒதுக்கீட்டில் இருக்கும் மனை .. அதனால் பதிவு செய்ய முடியாது என்று சொல்லிவிடுவார்கள். ஆனால், அதற்கு முன்பே அட்வான்ஸ் என்ற பெயரில் பெரும் தொகையை கொடுத்திருந்தால் மாட்டி கொள்வோம். அதனால் தான் கவனமாக இருக்க வேண்டும் என்கிறேன். அட்வான்ஸ் கொடுக்கும் முன்பே வில்லங்க சான்றிதழை பார்த்து விடுவது நல்லது.
ரியல் எஸ்டேட் முதலீட்டில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் நிலம் யார் பெயரில் இருக்கிறது என்பதை பார்ப்பது தான். ஏனென்றால் பெரும்பாலான இடங்கள் உரிமையாளர்களிடம் இருந்துபவர் வாங்கி தரகர்கள் விற்பனை செய்வது தான். அந்த பவர் நடைமுறையில் இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். ஏனென்றால் ஒருவருக்கு கொடுத்த பவரை ரத்து செய்யும் அதிகாரம் உரிமையாளருக்கு இருக்கிறது. அது பவர் பெற்றவருக்கே கூட தெரியாமல் இருக்கலாம். அதனால் பத்திரங்களை பார்த்து வாங்குங்கள்.
நிலத்தில் போட்ட பணம் வீண் போகாது என்பது பொதுவான வழக்கு. ஆனால் ஒன்றுக்கு பத்து முறை ஆலோசித்து முதலீடு செய்தால் அந்த வழக்கு சொல் வாழ்க்கையாக மாறும். கவனமாக முதலீடு செய்யுங்கள். பூமி புதையலாக பொன்னைக் கொட்டிக்கொடுக்கும்.

குழந்தைகளுக்கு இருதய நோய் : கண்டுபிடிப்பது எப்படி?

 

"இருதயம்” என்பது ஒரு காரணப்பெயர். "இருதடம்” என்பது மருவி "இருதயம்” என்றாகிவிட்டது. தடம் என்பதற்கு வழி அல்லது பாதை என்று பொருள். இருதயத்திலும் இரண்டு பாதைகள் உள்ளன. ஒன்று நல்ல ரத்தம் செல்லுகின்ற வழி-தடம். மற்றொன்று சுத்தகரிக்கப்பட வேண்டிய அசுத்த ரத்தம் பாயும் வழி. இருதயம் நான்கு அறைகளை கொண்டது. இந்த நான்கு அறைகள் வலது புறம் இரண்டு (ஒன்று மேலே மற்றொன்று கீழே). இடது புறம் இரண்டு. அதே போல் ஒன்று மேலே மற்றொன்று கீழே. வலது புறத்தையும், இடது புறத்தையும் பிரிக்க தடுப்பு சுவர் போன்ற அமைப்பு உண்டு.

வலது புறம் முழுவதும் சுத்திகரிக்கப்பட வேண்டிய கரிமலவாயு அதிகமுள்ள அசுத்த ரத்தம் இருக்கும். இடது புறம் முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட பிராணவாயு அதிகமுள்ள நல்ல ரத்தம் இருக்கும். உட லில் உள்ள கெட்ட ரத்தம் வலது புறத்தில் மேலே அமைந்துள்ள "வலது ஏட்ரியம்” என்ற இடத்திற்கு வரும். அங்கிருந்து கீழே உள்ள "வலது வெண்டிரிக்கிளு”க்கு ரத்தம் செல்லும். கீழே சென்ற ரத்தம் மேலே வருவதை தவிர்க்க மூன்று இதழ் களை கொண்ட வால்வு ஒன்று உண்டு. இதற்கு "ட்ரை கஸ்பிட்” வால்வு என்று பெயர்.

கீழே வலது வெண்டிரிக்கிளுக்கு சென்ற அசுத்த ரத்தம், பம்ப் செய்யப்பட்டு நுரையீர லுக்கு சென்று அங்கு பிராண வாயு பரிமாற்றம் ஆன பின்னர் நல்ல, சுத்தமான ரத்தமாக இடது பக்கம் மேலே உள்ள "இடது ஏட்ரியம்” என்ற பகுதிக்கு வருகிறது. அசுத்த ரத்தத்தில் கரிமலவாயு அதிகம் இருப்பதால் அதன் நிறம் கருஞ்சிவப்பாக இருக்கும். சுத்தமான ரத்தம் நல்ல சிகப்பு நிறத்தில் இருக்கும்.

இடது ஏட்ரியத்தில் உள்ள சுத்தமான ரத்தம் மேலிருந்து கீழே, உள்ள "இடது வெண்டிரிக்கிளுக்கு” செல்கிறது. கீழிருந்து, ரத்தம் மேலே போகாதவாறு தடுப்பதற்கு இரண்டு இதழ்கள் கொண்ட வால்வு உண்டு, இதை "பை-கஸ்பிட்” என்று அழைக்கி றோம்.

வலது வெண்டிரிக்கிளிலிருந்து ரத்தம் நுரையீரல் வரைதான் செல்லவேண்டும், அதற்கு குறைந்த அளவு அழுத்தம் போதும். ஆகையால் அதன் சுவர்கள் மெல்லியதாக இருக்கும். ஆனால் இடது வெண்டிரிக்கிளிலிருந்து நல்ல ரத்தம் உடம்பில் உள்ள, அனைத்து பாகங் களுக்கும் செல்லவேண்டும். ஆகையால் அதிக அழுத்தம் வேண்டும், அதனால் இடது வெண்டிரிக்கிளின் சுவர்கள் தடிமனாக இருக்கும்.

குழந்தைகளுக்கு இருதய நோய் பிறவியிலே இருக்கலாம். பிறந்த பின்னரும் வரலாம். அந்த அடிப்படையில் குழந்தைகளுக்கு வரும் இருதய நோயை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று: உடம்பு "நீலம்பாரிக்கும்” நோய். இதை "சயனாடிக்” என்று கூறுவர். மற்றொன்று: நீலம் பாரிக்காத அதாவது "ஏ-சயனாடிக்” நோய். சயனாடிக் வியாதிகளில் அசுத்த ரத்தம், நல்ல ரத்தத்தோடு கலந்து விடுகிறது, இதனால் உடலில் நீல நிறம் பாய்கிறது.

குழந்தைகளுக்கு பிறவியிலேயே வரும் இருதய நோய்களைப் பற்றி முதலில் பார்ப்போம்.

இருதயம் வலது, இடதாக பிரிக்கப்படுகிறது என்று பார்த்தோம் அல்லவா. அந்த தடுப்பு சுவர் முழுவதுமாக மூடாமல் சிறிய இடைவெளி, துவாரம் போன்று இருக்கும். இதைத்தான் "இருதயத்தில் ஓட்டை” என்று கூறுவார்கள். இருதயத்தின் மேல் பகுதியான இரண்டு ஏட்ரியத்தின் நடுவே இந்த துவாரம் இருந்தால் இதை "ஏ.எஸ்.டி” என்றும், கீழே உள்ள இரண்டு வெண்டிரிக்கிளின் இடையே உள்ள தடுப்பு சுவரில் இந்த துவாரம் இருந்தால் அதை "வி.எஸ்.டி” என்றும் கூறுகிறார்கள்.

இருதயம் துடிக்கும் பொழுது சுருங்கி, விரிவடையும். சுருங்கும் பொழுது அழுத்தம் அதிகமாக உள்ள இடது புறத்திலிருந்து, தடுப்பு சுவரில் உள்ள துவாரம் (இடைவெளி) வழியாக நல்ல ரத்தம் கசிந்து, கெட்ட ரத்தத்தில் போய் கலந்து விடும். இது மறுபடியும் நுரையீரலுக்குச் சென்று சுத்திகரிக்கப்பட்டு விடும். நாளாக, நாளாக ரத்தத்தின் அளவு கூடுதலாக ஆவதால், வலது ஏட்ரியம், வெண்டிரிக்கிள் ஆகியவற்றின் சுவர்களில் சுருங்கி விரியும், இலாஸ்டிக் தன்மை சிறிது சிறிதாக குறைந்து, அதனுடைய அளவு பெரியதாகி விடும். இதனால் நுரையீரலுக்கு ரத்தம் சரியாக போகாது. அதனால் குழந்தைகள் சிறிது ஓடி, ஆடி விளையாடினாலும் மூச்சு வாங்கும்.

ஏதாவது ஒரு காரணத்தால் வலது புறம் உள்ள அசுத்த ரத்தம், இடது புறத்திலுள்ள நல்ல ரத்தத்தில் கலந்து விட்டால் உடல் முழுவதும் சுத்தம் செய்யப்படாத ரத்தம் பரவி நாக்கின் நுனி, உதடுகள் விரல் நகங்களின் கீழே, கரு நீலமாக மாறும். இதற்கு "சயனாடிக்” வியாதி என்று கூறுவர். இந்த குழந்தைகள் சிறிது அழுதாலும், நடந்தாலும் உடனே உடலில் மேலே சொன்ன இடங்கள் நீல நிறமாக மாறிவிடும், மூச்சு திணறல் ஏற்படும்.

குழந்தைகளுக்கு பொதுவாக காணப்படும் மற்றொரு வியாதி "எம்.வி.பி.எஸ்” எனப் படுகிறது. அதாவது இடது புறம் உள்ள இரண்டு இதழ்களை கொண்ட மைட்ரல் வால்வு களில் ஏதேனும் ஒரு இதழோ அல்லது இரண்டு இதழ்களுமோ, நீளம் அதிகமாக இருக்கும். இதனால் சரியாக மூடாமல், சற்று உள்நோக்கி மடங்கிவிடும். இதனால் நெஞ் சில் படபடப்பு, மயக்கம், பயம் போன்றவை தோன்றும். இது ஆசியாவில், அதிலும் இந்தியா வில் அதிகம் காணப்படும் வியாதி. பிறவியிலே குழந்தைகளுக்கு இது போன்ற பல வியாதிகள் இருக்கும்.

சில நோய்கள் பிறந்த பிறகு தொத்து வியாதிகளினாலோ அல்லது மற்ற காரணங்களி னாலோ வருகின்றன. குழந்தை பிறக்கும் பொழுது, தாய்க்கு பால்வினை நோய் இருப்பின் மைட்ரல் வால்வு சுருங்கிப்போய்விடும். அல்லது மரபு அணுக்களின் மாறுதலினால் மூட்டு வாதம்- ருமாட்டிக் ஜுரம் வந்தால் அது இருதயத்தை மிகவும் பாதிக்கும். பொதுவாக சில குழந்தைகளுக்கு அடிக்கடி ஜுரம் வரும். முட்டி வீங்கும், கை கால்களில் வலி என்று கூறும். சாதாரண ஜுரம் என்று நினைத்து அலட்சியமாக இருக்கக்கூடாது. குழந்தை ஓடி ஆடி விளையாடுவதால் கால்வலி என நினைத்து அலட்சியமாக இருக்கக்கூடாது. உடனே மருத்துவரிடம் சென்று ரத்தப் பரிசோதனை செய்து ருமாட்டிஸம் இருக்கா இல்லையா என்பதை தீர்மானித்து, அப்படி இருந்தால் அதற்கான மருந்து மாத்திரைகளை தந்தால் இருதயத்தை காப்பாற்றலாம்.

விளம்பரங்களின் கவர்ச்சியில் மயங்கி, கொழுப்பு அதிகமாக உள்ள தின்பண்டங்களையும், பாஸ்தா, பீசா, பர்கர், சிப்ஸ் போன்ற நொறுக்குத்தீனிகளை தினமும் அதிகமாக சாப்பிடுவ தாலும், உட்கார்ந்த இடத்திலேயே கணினியில் வீடியோ கேம்ஸ் ஆடுவதாலோ, உடல் எடை கூடுகின்றது. இதனால் பல இருதய நோய்கள் எளிதில் சின்ன வயதிலேயே வருகின்றன. சில குழந்தைகள் அசுத்தமான கலப்படமுள்ள, ஐஸ் மற்றும் ஐஸ் கட்டிகளை சாப்பிடு கின்றனர். இதனால் தொண்டையில் உள்ள டான்சில்களில் கிருமிகள் தாக்கி, டான்சில் சீழ் பிடித்து, ஜுரம் வரும். இப்படிவரும் சில கிருமிகள் இருதயத்தையும் தாக்கும்.

இந்த நோய்களுக்கான பொதுவான அறிகுறிகள் : மூச்சு திணறல், குறைவான உணவு உட்கொள்ளுதல், அதிகமாக வியர்த்தல், உடல் எடை மிகவும் கூடுதலாக இருத்தல், உடல் எடை அதிகரிக்காமல் இருத்தல், உடல் நீல நிறமாக மாறுதல், நடுக்கம், நெஞ்சில் பட படப்பு ஏற்படுதல், நினைவு இழந்து போகுதல், அடிக்கடி, இருமல், ஜுரம் வருதல், முட்டி வீங்கி, ஜுரம் வருதல்.

ஆரம்ப நாட்களிலேயே, அறிகுறிகளை அறிந்தால் சிகிச்சை பெற்று சரி செய்திடலாம்.

குழந்தைகளுக்கு ஏற்படும் இருதய நோய்களை கண்டறியவும், இலவசமாக சிகிச்சை பெறவும் அரிமா சங்கம் போன்ற பன்னாட்டு சேவை அமைப்புகளும் உதவுகின்றன.

– விளக்கம் : பேராசிரியர் சர். இரா.இராமகிருஷ்ணன்,
இருதய நோய் நிபுணர், சென்னை.