Daily Archives: செப்ரெம்பர் 7th, 2012

ரத்தக் குழாய் அடைப்பும், இதய நோயும்!

 

து, கொலஸ்டிரால் எனப்படும், கொழுப்புப் பொருட்கள் சிறிது சிறிதாக ரத்தக் குழாய்களின் உட்புறம் படிவதனால் ஏற்படும் அடைப்பு ஆகும். எங்கெல்லாம் இப்படிக் கொழுப்புப் பொருட்கள் படிந்து குவிகின்றனவோ, அங்கெல்லாம், ரத்தக் குழாயைச் சுருங்கச் செய்கின்றன. அதன் விளைவாக, இதயத்துக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. இப்படி குறைவாக ரத்தம் அளிக்கப்படும் நிலையைத் தான், "இஸ்கெமியா'(ischemia) என்றழைக்கின்றனர்.

அஞ்ஜினா என்றால் என்ன?:
அஞ்ஜினா என்பது, சில நிமிடங்களே நீடிக்கக் கூடிய, ஒரு வகையான நெஞ்சுவலி அல்லது சுகவீனம். அதை, இதயம் அதிக ரத்தம் கேட்டு அழுவதாக எடுத்துக் கொள்ளலாம். இதயத்துக்கு வேண்டிய பிராணவாயு மற்றும் ஊட்டச் சத்துக்கள், தேவையான அளவுக்குக் கிடைக்காமையைக் குறிக்கும், ஓர் அறிகுறி தான் அது. இந்த வலியைப் பொதுவாக, நெஞ்சின் இடது அல்லது வலது புறத்தில் அல்லது நெஞ்சின் முன்புறம் அல்லது கைகளின் மேற்பகுதியில் உணரலாம். குறிப்பாக, இடது மேல் பகுதியில், மேல் முதுகில், தோள்களில், தொண்டையில், முகவாய்க்கட்டை அல்லது தாடையில் அல்லது வயிற்றின் மேல் பகுதியில் உணர முடியும்.
நாம் சும்மா இருக்கும் போது, ஓய்வு நேரத்தில் தோன்றாமலும், மருந்துகளால் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருந்தால், அதைக் கட்டுக்குள் உள்ள (Stable angina) அஞ்ஜினா என்கிறோம். அஞ்ஜினா அளவு அதிகமாகி, அடிக்கடி மற்றும் ஓய்வு நேரத்திலும் வலி தோன்றி, மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால், அதைக் கட்டுமீறிய அஞ்ஜினா (Unstable angina)என்கிறோம். இது, மாரடைப்பில் கொண்டு போய்விடக் கூடும்.
முழு ஓய்விலிருந்தும், மருத்துவ சிகிச்சை மேற்கொண்டும், பலனில்லாமல், வலி தொடர்ந்து நீடித்தால், நோயாளிக்கு அவசரமாக கொரானரி அஞ்ஜியோகிராபியும் (Coronary Angiography)அதைத் தொடர்ந்து, அஞ்ஜியோபிளாஸ்ட்டி (Angioplasty) அல்லது கொரானரி பைபாஸ் அறுவைச் சிகிச்சையும் செய்ய வேண்டியிருக்கும். அஞ்ஜியோகிராபி என்பது, ரத்தக் குழாய்க்குள் ஒரு திரவத்தைச் செலுத்தி, எக்ஸ்-ரே படம் எடுத்தல். அஞ்ஜியோபிளாஸ்ட்டி என்பது, அடைப்பு அகற்றல். பைபாஸ் சர்ஜரி என்பது, ரத்தக் குழாய்களை வழிமாற்றிப் புறவழியில் இதயத்துக்கு ரத்தம் செலுத்துதல்.

டாக்டர் கிரிநாத்

அப்பல்லோ மருத்துவமனை, சென்னை.

காமாலை: கண்டறிந்து குணப்படுத்தலாம்!

வாயுவும், பித்தமும் சேர்ந்து, சீற்றமடைந்த காமாலைக்கு, "ஹரீமகம்’ என்று பெயர். இந்த நோய்க்கு உகந்த சிகிச்சை சரிவர அளிக்கப்படாமல், நோய், உடலிலேயே தங்கி விட்டால், உடல் உறுப்புகள் கடினமாகி, இந்த நோயை குணப்படுத்துவதும் கடினமாகி விடும்.
திருச்சியில், மஞ்சள் காமாலை நோய் பரவியுள்ளதாகவும், தடுப்பூசி போட்டும், குழந்தைகளை இந்நோய் தாக்கியுள்ளதாகவும், இதனால், பயந்த மக்கள், தங்கள் வீடுகளை காலி செய்து, வேறிடம் சென்றுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. சென்னையில் அரசு மருத்துவமனை ஒருநாள் நடத்திய இலவசப் பரிசோதனையில் மட்டும், 448 மக்களை காமாலை (Hepatitis B&C) தாக்கியுள்ளது என்றும் செய்தி வெளியாகி உள்ளது.
மேலும், இதற்குள்ள மருந்துகள், இரண்டு வாரத்திற்கு ஒரு முறை, 2 – 3 ஆண்டுகள் எடுக்க வேண்டும் என்றும், மேலும், இந்த மருந்துகளுக்கு பக்க விளைவுகள் கடுமையாக இருப்பதால், முதல் இரண்டு நாட்கள், அவர்களை மருத்துவமனையில் தங்க வைத்து, மருந்து வினியோகம் செய்து, பக்கவிளைவுகளைக் கண்காணித்த பின், வீட்டுக்கு அனுப்புவதாகவும் கூறப்பட்டது.
இந்தியாவில், காமாலை நோய்க்கு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, ஆயுர்வேத – சித்த மருந்துகளால், சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு, மக்கள் குணமடைவது உலகறிந்த உண்மை. ஆங்கில மருத்துவத்தில், "ஹெபடைடிஸ்’ அல்லது "ஜாண்டிஸ்’ என்ற பெயர்களால், மஞ்சள் காமாலை அழைக்கப்படுகிறது. உடலில் எரிச்சல், அஜீரணம், உடல் தளர்ச்சி, உணவில் விருப்பமின்மை, வயிற்றுக் குமட்டல், வாந்தி, ஜுரம் ஆகியவை, இந்த நோயின் அறிகுறிகள். முக்கியமாக, நோயாளிக்கு, பசியின்மையும், வயிற்றுக் குமட்டலும் காணப்படும். உடலில் சீற்றமடைந்த பித்தம், உடலெங்கும் பரவி, கண்கள், தோல், நகங்கள், முகம் யாவற்றையும், மஞ்சள் நிறமாக மாற்றி விடும். மலமும், சிறுநீரும், சிவப்புக் கலந்த மஞ்சளாகத் தோற்றமளிக்கும். இந்த நோய், ஏன் நம் மக்களை அதிகமாகத் தாக்குகிறது என்ற கேள்வி எழலாம். நம் மக்கள், ஏராளமாக ரத்த சோகையால் அவதிப்படுகின்றனர். ரத்த சோகை உள்ள நோயாளிகளை, காமாலை நோய் வெகு எளிதில் தாக்கும். உதாரணமாக, ரத்த சோகை பிடித்த ஒருவர், பித்தத்தைச் சீற்றமடையச் செய்யும் உணவுப் பழக்க வழக்கங்களைக் கடைபிடித்தால், சீற்றமடைந்த பித்தம், ரத்தம், தசைகள் இவைகளை எரித்து, உடலெங்கும் பரவி, மஞ்சள் நிறத்துடன் காமாலை நோயை உண்டாக்கும். இதை தவிர, உடலுக்கு கெடுதலை விளைவிக்கும், தீக்ஷணமான, உஷ்ணமான குணங்களை உடைய உணவுகள், சாராயம் போன்றவை, மருந்துகளின் பக்கவிளைவு இவையாவும், காமாலை நோய்க்கு காரணங்கள்.
காமாலை நோயில் பலவகைகள் உள்ளன. நோயாளி வெள்ளை நிறத்தில் மலம் கழிப்பது, கண்கள், சிறுநீர், தோல் இவைகளில் மஞ்சள் நிறம், அடிவயிற்றிலும், இதயப் பகுதியிலும் பாரம், வயிற்றில்,"குறுகுறு’ என்ற ஓசை ஆகியவை தோன்றினால், பித்தத்தின் பாதை, கபத்தால் அடைக்கப்பட்டு தோன்றிய காமாலை என்று கணித்து, அதற்குள்ள சிகிச்சை அளிக்கப்படும். வாயுவும், பித்தமும் சேர்ந்து, சீற்றமடைந்த காமாலைக்கு, "ஹரீமகம்’ என்று பெயர். இந்த நோய்க்கு உகந்த சிகிச்சை சரிவர அளிக்கப்படாமல், நோய், உடலிலேயே தங்கி விட்டால், உடல் உறுப்புகள் கடினமாகி, இந்த நோயை குணப்படுத்துவதும் கடினமாகி விடும்.
காமாலை நோய், நீண்ட நாட்கள் உடலில் தங்கினால், மலமும், சிறுநீரும், கருத்த மஞ்சள் நிறமாக வெளிவரும். உடலில் அதிக வீக்கம் தோன்றும். வாய், கண்கள், மலம், சிறுநீர் இவற்றில் ரத்தம் கலந்து வரும். உணவில், ருசியின்மை, உடலில் எரிச்சல், மயக்கம், தாகம், மலச்சிக்கல், தலைச்சுற்றல், சோர்வு, மனக்கோளாறு, ஜீரண சக்தி முற்றிலும் குன்றி விடுதல் ஆகிய அறிகுறிகள் தோன்றி, உயிரையே பாதிக்கும்.
காமாலை நோய்க்கு, ஆயுர்வேத – சித்த மருத்துவத்தில், சிறந்த சிகிச்சைகள் உள்ளன. இந்த நோய், உடலை முழுமையாகத் தாக்கு முன்னரே, உடலின் பசியின்மை, குமட்டல் போன்ற அறிகுறிகளையும், நோயாளியின் உணவுப் பழக்க வழக்கங்களையும் வைத்து, நோய் வருமுன் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
காமாலை நோய்க்கு முக்கியமான சிகிச்சை என்பது, பத்திய உணவு. பித்தத்தின் சீற்றத்தைத் தணிக்கும் எல்லா உணவுகளும், காமாலைக்கு உகந்த உணவுகள். உப்பு, புளிப்பு, காரம், உடலுக்கு உஷ்ணமான உணவு, ஜீரணத்திற்கு கடுமையான உணவு யாவும், காமாலை வியாதியில் தவிர்க்க வேண்டிய உணவுகள். காமாலை நோய்க்கு கஷாயங்கள், சூரணங்கள், பஸ்மங்கள், நெய் மருந்துகள், லேகியங்கள் என, பல்வேறு விதங்களில் தயாரிக்கப்படும் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. காமாலை நோயாளிக்கு மருந்து அளிக்கும் முன், பேதி செய்யப்பட்டு, பித்தத்தின் சீற்றத்தை குறைத்து, சிகிச்சை துவங்கும். காமாலை நோயைக் குணப்படுத்த அனேக மூலிகை மருந்துகள், நம் கிராமப் பகுதிகளில் காணலாம். தமிழகத்தில் இந்த நோய்க்கு, கீழா நெல்லி மூலிகை பழக்கத்தில் இருந்து வருகிறது. அதிமதுரம், உலர்ந்த திராட்சை, சீந்தில் கொடி, ஆடாதோடை போன்ற மூலிகைகளைக் கொண்ட கஷாயங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர, உலோகம் என்றும் இரும்பு கலந்த சேர்க்கை மருந்துகள் மிகவும் சிறந்தவை. இவ்வாறு காமாலை சம்பந்தப்பட்ட நோய்களுக்கு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, ஆயுர்வேத – சித்த மருத்துவம் சிறந்த சிகிச்சை அளித்து வருகிறது.

டாக்டர் பி.எல்.டி., கிரிஜா
சஞ்சீவனி ஆயுர்வேத யோகா மையம்
63, காமராஜ் அவென்யு முதல் தெரு,
அடையாறு, செ ன்னை – 20.
sanjeevanifoundation@gmail.com

எக்ஸெல் நுணுக்கங்கள்

1. ஸ்டார்ட் அப் போல்டர் (Startup Folder): சென்ற இதழில் டெம்ப்ளேட் குறித்தும் குறிப்பிட்ட ஒர்க்புக்குடன் எக்ஸெல் திறப்பது பற்றியும் டிப்ஸ்கள் தரப்பட்டன. இவை XLStart போல்டரின் அடிப்படையிலேயே இயங்குபவையாகும். இன்னொரு இடத்தையும் இந்த பைல்களுக்கென உருவாக்கலாம்.
1. File டேப் கிளிக் செய்து பின்னர் Options என்பதனை Help பிரிவின் கீழ் கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2007 தொகுப்பில், ஆபீஸ் பட்டனை கிளிக் செய்து, பின்னர் Excel Options என்பதைக் கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2003 தொகுப்பில், Tools மெனுவிலிருந்து Options தேர்ந்தெடுக்கவும்.
2. இடதுபுறம் கிடைக்கும் பிரிவில் Advanced என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் 2003ல் General டேப்பினைத் தேர்ந்தெடுகக்வும்.
3. General பிரிவில், புதிய startup போல்டருக்கான ட்ரைவ் வழியை (path) அமைக்கவும்.
4. பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
அடுத்து எக்ஸெல் இயங்குகையில், ஏற்கனவே மாறா நிலையில் அமைக்கப்பட்ட XLStart போல்டரிலிருந்தும், நீங்கள் மாறாக அமைத்த போல்டரிலிருந்தும் ஒர்க்புக்களைப் பெற்று இயக்கும்.
2. பைல் வடிவம் (File Format): பல நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து எக்ஸெல் ஒர்க்புக்களைப் பெற்றுப் பணியாற்றுகையில், அவை வெவ்வேறு எக்ஸெல் பதிப்புகளில் உருவாக்கப்பட்டவையாக இருக்கும். இவற்றின் பார்மட்கள் பல்வேறாக இருப்பதால், இது குறித்த பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும். எக்ஸெல் 2007 மற்றும் 2010 பதிப்புகளில் .xlsx பார்மட்களில் ஒர்க்புக் இருக்கும். எக்ஸெல் 2003 பயன்படுத்தினால், அந்த பைலின் பார்மட்டினை மாற்ற வேண்டியதிருக்கும். இந்த பார்மட் மாற்றுவது எளிதான வேலை என்றாலும், நாள் ஒன்றில் அடிக்கடி இந்த மாற்றத்திற்கென வேலை பார்ப்பது நேரம் மற்றும் உழைப்பு வீணாகும் செயலாகத் தோன்றும். இதற்குப் பதிலாக நீங்கள் உருவாக்கும் பைலின் பார்மட்டை, மாறா நிலையில் .துடூண் ஆக இருக்கும்படி செய்துவிடலாம். இந்த பார்மட்டில் உள்ள ஒர்க்புக்கினை எந்த எக்ஸெல் தொகுப்பிலும் திறந்து பணியாற்றலாம். இவ்வாறு மாறா நிலையை மாற்ற கீழ்க்காணும் செட் அப் வழிகளை மேற்கொள்ளவும்.
1. File டேப் கிளிக் செய்து பின்னர் Options என்பதனை Help பிரிவின் கீழ் கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2007 தொகுப்பில், ஆபீஸ் பட்டனை கிளிக் செய்து, பின்னர் Excel Options என்பதைக் கிளிக் செய்திடவும்.
2. இடதுபுறம் கிடைக்கும் பிரிவில் Save என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. Save Workbooks என்ற பிரிவில், Save Files In This Format என்ற ஆப்ஷன் கீழ்விரி மெனுவில் Excel 972003 Workbook (*.xls) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. அடுத்து ஓகே கிளிக் செய்திடவும். இந்த தீர்வினை மாறா நிலையில் மேற்கொள்கையில், சில புதிய எக்ஸெல் பைல் அம்சங்கள் உங்களுக்குக் கிடைக்காது. இதனை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அல்லது இதற்கான compatiability pack தொகுப்பினை http://www.microsoft.com/ enus/download/details.aspx?id=3 என்ற முகவரியிலிருந்து தரவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.
3. டெக்ஸ்ட் தள்ளல்(Text Wrap): அது என்ன டெக்ஸ்ட் தள்ளுவது? என்று யோசிக்கிறீர்களா? எக்ஸெல் ஒர்க்புக் செல் ஒன்றில், நீளமான டெக்ஸ்ட் ஒன்றை டைப் செய்தால், எக்ஸெல் அந்த டெக்ஸ்ட் செல்லின் வலது எல்லைக் கோட்டினைத் தள்ளியவாறே செல்லும் படி அமைத்திருக்கும். அடுத்த செல்லில், டேட்டா எதுவும் இல்லை என்றால், முழு டெக்ஸ்ட் வரியும் காணக் கிடைக்கும். ஆனால், அடுத்த செல்லில் டேட்டா அமைத்தால், புதிய டேட்டா மட்டுமே தெரியும். முதல் செல்லில் டைப் செய்த டேட்டா மிகக் குறைந்த அளவே காட்டப்படும். இது எக்ஸெல் தொகுப்பின் மாறா நிலையில் உள்ள, வரிகளின் ஒழுங்கு படுத்தும் தன்மையாகும். இதனை alignment attribute எனக் கூறுவார்கள். இதனை Normal styleஐ அட்ஜஸ்ட் செய்வதன் மூலம் மாற்றி அமைக்கலாம். இதனையே அனைத்து ஒர்க்புக்குகளிலும் ஏற்படும்படி அமைக்க விரும்பினால், Normal style மாற்றத்தினை book.xltx என்ற பைலில் ஏற்படுத்த வேண்டும். கீழ்க்காணும் மாற்றங்களைச் செயல்படுத்தவும்.
1. Home டேப்பில் கிளிக் செய்திடவும். பின்னர், Styles குரூப்பில் Cell Styles என்னும் கீழ்விரி மெனுவில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2003 தொகுப்பில் Format மெனுவிலிருந்து Style தேர்ந்தெடுக்கவும்.
2. இப்போது கிடைக்கும் காலரியில், Normal என்பதில் ரைட் கிளிக் செய்திடவும். இப்போது Modify என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் 2003 தொகுப்பில், Style Name கண்ட்ரோல் பிரிவில் Normal என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து என்பதில் கிளிக் செய்து நிலை 4க்குச் செல்லவும்.
3. Style டயலாக் பாக்ஸில் Format கிளிக் செய்திடவும்.
4. Alignment டேப்பில் கிளிக் செய்திடுக. இதில் உள்ள Text Control பிரிவில் Wrap Text என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
5. ஓகே இருமுறை கிளிக் செய்து வெளியேறவும்.
இந்த மாற்றங்களை ஏற்படுத்துகையில், ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். Normal styleஐ மாற்றினால், அது அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக்கில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தும். அனைத்து ஒர்க்புக்குகளிலும் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால், பைல் டெம்ப்ளேட்டில் மாற்ற வேண்டும். அப்போது புதியதாக உருவாக்கப்படும் அனைத்து ஒர்க்புக்குகளிலும் ஸ்டைல் மாற்றிக் காட்டும்.
4. கமெண்ட் எழுத்துவகை அளவு (Comment Font Size): எக்ஸெல் ஒர்க்புக்கில், கமெண்ட் என்னும் குறிப்புகளை அமைக்கையில், மாறா நிலையில் உள்ள எழுத்தின் உருவினை அல்லது அளவினை பலர் மாற்ற விரும்புகின்றனர். இதனை நிலைத்த மாற்றமாக அமைக்கவும் எண்ணுகின்றனர். இதனை மாற்றுவது எளிது என்றாலும், அதனையே அடிப்படையாகக் கொள்ள, சற்று சுற்றி வளைத்து செயல்பட வேண்டியுள்ளது. நேரடியாக எக்ஸெல் தொகுப்பில் இந்த மாற்றத்தினை மேற்கொள்ள முடியாது. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் செட்டிங் ஒன்றை மாற்ற வேண்டும். நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவராக இருந்தால், கீழ்க்காணும் மாற்றங்களை ஏற்படுத்தவும்.
1.டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்தும் கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும்.
2. கிடைக்கும் விண்டோவில் Appearance டேப்பில் கிளிக் செய்து, பின்னர் Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.
3. Item என்ற கீழ்விரி மெனுவில் ToolTip என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இங்கு எழுத்துருவின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுத்து, ஓகே கிளிக் செய்திடவும்.
5. அடுத்து Apply என்பதில் கிளிக் செய்து, பின்னர் ஓகே என்பதிலும் கிளிக் செய்திடவும்.
விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்துபவர்கள், கீழ்க்காணும் மாற்றங்களை மேற்கொள்ளவும்.
1.டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்தும் கிடைக்கும் மெனுவில் Personalize தேர்ந்தெடுக்கவும்.
2. அடுத்து Window Color என்பதில் கிளிக் செய்திடவும்.
3. தொடர்ந்து Advanced Appearance என்பதில் கிளிக் செய்திடவும்.
4. Item என்ற கீழ்விரி மெனுவில் ToolTip என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
5. இங்கு எழுத்துருவின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுத்து, ஓகே கிளிக் செய்திடவும். தொடர்ந்து Save Changes என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.
இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்த மாற்றம் எக்ஸெல் கமெண்ட்டில் மட்டும் ஏற்படுத்தப்பட மாட்டாது. அனைத்து tiptype விண்டோக்களிலும் இந்த மாற்றம் ஏற்படும். எனவே நீங்கள் ஏற்படுத்திய இந்த மாற்றத்தினை, அதே கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சத்துக்கள் நிறைந்த பச்சை வாழைப்பழம்

வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல்படுகிறது. விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம் தான் என்கிறார்கள். வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி பல் ஈறுகளையும் எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்களையும் உறுதியுடன் இருக்க உதவுகிறது. இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உருவாக வைட்டமின் ஏ- யையும் உடல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிக் கொடுக்கிறது.
மக்னீசியம் பொட்டாசியம் சோடியம் பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் வாழைப்பழத்தில் தாராளமாக இருப்பதால் இரத்த ஓட்டம் தங்குத் தடையின்றிச் சீராக இருக்கவும். முக்கியமாக இரத்தக் கொதிப்பு ஏற்படாமலும் பாதுகாத்து வருகிறது. நாம் தினமும் சாப்பிடும் இரண்டு வாழைப்பழங்கள் இரத்தக் கொதிப்பை எளிதில் கட்டுப்படுத்தும்.
நாம் சாப்பிடும் உணவில் பொட்டாசியமும் சோடியமும் இருந்தால் தான் நம் உடலில் உள்ள நெகிழ்ச்சிப் பொருள்கள் சம நிலையில் இருக்கும். பொட்டாசியம் உப்புக் குறைந்தால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். நாம் சாப்பிடும் அனைத்துப் பொருள்களிலும் சோடியம் உப்பு இருக்கிறது. ஆனால், பொட்டாசியம் இல்லை. இந்தக் குறையை தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் நீக்கி விட முடியும்.
சத்துக்கள்
எங்கும் எப்போதும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழத்தில் இல்லாத சத்துக்களே கிடையாது. இதில் கர்போஹைடிரேட், புரதம், சிறிய அளவில் கொழுப்பு குளூக்கோஸ், நார்ச்சத்தும் ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் கால்சியம், , சோடியம், பாஸ்பரஸ், சல்பர், மக்னீசியம், இரும்பு, சிறிய அளவில் செம்புச்சத்தும் மற்றும் வைட்டமின் பொட்டாசியம் 400 மில்லி கிராம், திஷீறீஷீநீவீஸீ 20 மைக்ரோ கிராம், விட்டமின், ரிபோஃபிளேவின், தயாமின் சி, 10 மில்லி கிராம், விட்டமின் பி 6-.6 மில்லி கிராம். முதலான உணவுச் சத்துக்களும் கி, ஙி, சி வைட்டமின்களும் சத்துக்கள் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.
மருத்துவக் குணங்கள் :
வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.
வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.
வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.
உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம். வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.
நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.
வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் (Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது. இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 1 1/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மூளை வலிமை (Brain Power): வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது மூளைத்திறன் அதிகரித்ததோடு, பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வாழையின் ஒவ்வொரு பாகமுமே மருத்துவ குணங்கள் கொண்டவை.

பாவம் விலகி புண்ணியம் கிடைக்க…

ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்து படுக்கையிலிருந்து எழும் போதும், இரவு படுக்கைக்கு போகும் போதும், ஏதாவது ஒரு பகவான் நாமாவைச் சொல்ல வேண்டும். விடியற்காலையில் எழுந்திருக்கும் போதே, "பகவானே… இன்றைய பொழுது நல்லபடியாக போக வேண்டும். எண்ணிய காரியங்கள் நிறைவேற வேண்டும்…’ என்று தியானம் செய்வது நல்லது.
அதேபோல், இரவு படுக்கும்போதும், "பகவானே… உன் அருளால் இன்றைய பொழுது நல்லபடியாக போயிற்று. இரவு நான் தூங்கும்போது, நீ, என்னை ரட்சிப்பாயாக…’ என்று தியானித்தபின் படுப்பதும் நல்லது.
இந்த ஜென்மா நிரந்தரமானதல்ல. என்றோ ஒரு நாள் போக வேண்டியது; அது எப்போது, எப்படி போக வேண்டும் என்பது முன்னதாக விதிக்கப்பட்டு விடுகிறது; அதை மாற்ற முடியாது. அகாலத்தில் ஏற்படக் கூடிய மரணத்தை, பகவான் தடுத்து விடலாம். ஆயுள் முடிந்தவனை அவராலும் காப்பாற்ற முடியாது.
எப்போது முடிகிறது என்று தெரியாதபடியால், தினமும் அவனை தியானம் செய்து வந்தால், ஒரு சில ஆபத்துகள் நீங்கலாம். மரணம் என்பதை சில நாள் தள்ளிப் போடலாம். அப்படியே ஒருநாள் போய் விட்டாலும், பகவான் நாமா சொன்ன புண்ணியம் அவனுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.
விடியற்காலையில் எதை எல்லாம் நினைத்தால், எல்லா பாவங்களும் விலகி, புண்ணியம் கிடைக்கும் என்பதை, பகவானே ஒரு பட்டியல் கொடுத்திருக்கிறார். இதை விடியற்காலையில் நினைக்க மறந்தாலும், கடைசி காலத்திலாவது நினைக்கலாம் என்று ஒரு மாற்று யோசனையையும் கூறியுள்ளார். அப்படி நினைக்க வேண்டியவை:
பகவான், கஜேந்திரன், கஜேந்திரனும், முதலையும், மலைகள், காடுகள், தேவ விருட்சங்கள், பிரம்மா, விஷ்ணு, பாற்கடலில் பகவானின் ஆபரணங்களான ஸ்ரீவத்சம், சங்கு, கருடன், ஆதிசேஷன், லட்சுமிதேவி, நாரதர், பிரகலாதன் பகவானுடைய அவதாரங்களான சூரியன், சந்திரன், அக்னி, பசு ஆகியவை.
விடியற்காலையில் எழும்போதே இந்த ஞாபகம் தானா வருகிறது? பால் பாக்கெட் வந்தாச்சா, பால்காரன் வந்தாச்சா, காபி ரெடியா? இந்த ஞாபகம் தானே வருகிறது. காலையில் இரண்டு விஷயங்களுக்கு கோபம் வரும். ஒன்று, பால் வராமல் காபி தயாராகாவிட்டால் கோபம் வரும்.
அடுத்தது, காலையில் வழக்கமாக வரும் செய்தித்தாள் வராவிட்டால் கோபம் வந்துவிடும். உள்ளுக்கும், வாசலுக்கும் அலைவான். தெருக்கோடி வரை எட்டி எட்டிப் பார்ப்பான். காபியும், செய்தித்தாளும் சரியான நேரத்துக்கு வந்து விட்டால் போதும், அவனுக்கு ஒரே மகிழ்ச்சி.
இப்படி இதையே நினைத்துக் கொண்டிருப்பவனுக்கு, மேலே சொன்ன பகவான், கஜேந்திரனின் ஞாபகம் எப்படி வரும்? அதையும் தான் கொஞ்சம் நினைத்துப் பாருங்களேன்!