Daily Archives: செப்ரெம்பர் 11th, 2012

கணினி

Virus: (வைரஸ்) கெடுதலை விளைவிக்கும் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம். கம்ப்யூட்டர் இயக்கத்தில் குறுக்கீடு தந்து எரிச்சலைத்தரும் என்பது முதல் கம்ப்யூட்டர் இயக்கத்தினையே முடக்கி வைக்கும் வரை பலவகையான நாச வேலைகளில் ஈடுபடும். கம்ப்யூட்டர்களுக்கிடையே பைல்கள் பரிமாறப்படுகையில் (இமெயில், சிடி,பிளாப்பி மற்றும் பிளாஷ் டிரைவ்) இவை அவற்றுடன் இணைந்து சென்று நாசத்தை உண்டாக்கும். இமெயில் மூலம் சென்ற பின்னர் அந்த கம்ப்யூட்டரில் இருக்கும் இமெயில் முகவரிகளுக்கு மெயில் அனுப்புவது போலத் தானும் சென்று நாச வேலையில் ஈடுபடும். வைரஸ் புரோகிராம் கள் பொதுவாக எந்த அறிகுறியும் காட்டாது கம்ப்யூட்டருக்குள் இருக்கும். ஏதாவது நாள் அல்லது செயல்பாட்டினை மேற்கொள்கையில் தூண்டிவிடப்பட்டு நாச வேலையை மேற்கொள்ளும்.
Control Panel: (கண்ட்ரோல் பேனல்) விண்டோஸ் இயக்கத்தின் ஸ்டார்ட் மெனுவில் தரப்படும் ஒரு டூல் என இதனைச் சொல்லலாம். இதன் மூலம் விண்டோஸ் இயக்கத்தின் அடிப்படைச் செயல்பாடுகளை செம்மைப் படுத்தலாம். அத்துடன் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் இணைந்த சாதனங்கள் செயல்படும் தன்மையையும் சீரமைக்கலாம்.
Taskbar: (டாஸ்க் பார்) விண்டோஸ் இயக்கத்தில் மானிட்டர் திரையில் கீழாக இயங்கும் நீள் கட்டம். இதில் ஸ்டார்ட் மெனு, விரைவாக அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க ஐகான்கள் அடங்கிய தொகுப்பு, இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் பைல்களுக்கான கட்டங்கள் மற்றும் கடிகாரம், பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்கள் ஆகியவை இருக்கும். இவற்றைத் தேவைப்படும்போது கிளிக் செய்து பெறலாம்.
USB Universal Serial Bus: (யுனிவர்சல் சீரியல் பஸ்) கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் பிற சாதனங்களை எளிதாக இணைத்துப் பயன்படுத்த ஒரு வழி. ஸ்கேனர், மவுஸ், பிளாஷ் ட்ரைவ், பிரிண்டர் எனத் தற்போது அனைத்து சாதனங்களும் இதன் வழியே தான் கம்ப்யூட்டருடன் இணைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும்போதே இதனைப் பயன்படுத்தி சாதனங்களை இணைக்கலாம், நீக்கலாம்.
Windows: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம். இன்று உலகின் பெரும்பாலான பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம். டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. தொடர்ந்து இதில் பல வசதிகள் தரப்படுகின்றன. கிராபிக்ஸ் அடிப்படையில் இதன் யூசர் இன்டர்பேஸ் அமைக்கப்பட்டிருப்பதால் பயன்படுத்த எளிதானது.
Hard Disk: (ஹார்ட் டிஸ்க்) பைல்களைப் பதிந்து வைத்து இயக்கப் பயன்படும் ஓர் அடிப்படை சாதனம். இதில் அனைத்து வகை பைல்களையும் பதியலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் (விண்டோஸ்), அப்ளிகேஷன் சாப்ட்வேர் (எம்.எஸ்.ஆபீஸ், பேஜ்மேக்கர் போன்றவை) மற்றும் இவற்றால் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தையும் இதில் பதியலாம். இதனை முறையாகவும் கவனமாகவும் கையாள வேண்டும். இது கெட்டுப் போவதைத்தான் ஹார்ட் டிஸ்க் கரப்ட் ஆகிவிட்டதாகக் கூறுவார்கள். ஒரு முறை கெட்டுப் போனால் அதனை மீண்டும் சரி செய்வது சிரமமான காரியம். எனவே இதில் பதியப்படும் பைல்களுக்கு நகல் எடுத்து தனியே இதைப் போன்ற வேறு சாதனங்களில் பதிந்து வைப்பது நல்லது.
Registry: (ரெஜிஸ்ட்ரி) விண்டோஸ் இயக்கத்துடன் இணைந்த ஒரு டேட்டா பேஸ் (தகவல் தளம்) இதில் அனைத்து ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் குறித்த தகவல்கள் எழுதப்பட்டு பதியப்பட்டிருக்கும். இவற்றுடன் பயன்படுத்துபவருக்கான விருப்பங்கள், செயல்பாடுகளுக்கான நிலைகள் உருவாக்கப்பட்டு பதியப்படும். விண்டோஸ் இயக்கம் இந்த தகவல் தளத்திலிருந்து தகவல்களைப் பெற்று செயல்படுவதால் சற்று கவனமாகவே இதனைக் கையாள்வது நல்லது.

கூந்தல் வளர…

அரைமுடி தேங்காயுடன், இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து அரைத்து, சாற்றை மட்டும் எடுத்து தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊற விடுங்கள். பின், வழக்கமான ஷாம்பூ அல்லது சீயக்காய் தேய்த்து தலைக்கு குளியுங்கள். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இவ்வாறு குளிக்கலாம். வெறும் தேங்காய்ப் பாலை தலைக்கு தேய்த்து ஊற வைத்தும் குளிக்கலாம்.
* கற்றாழையின் நடுவில், கத்தியால் நீளமாக ஒரு கீறல் போடுங்கள். உள்ளே உள்ள கொழ கொழப்பான சோற்று பகுதியில், கையளவு வெந்தயத்தைப் போட்டு, கற்றாழையை பழையபடி மூடி, நூலால் கட்டி விடவும். உள்ளே இருக்கும் சோற்றில் ஊறும் வெந்தயம், இரண்டு நாட்களில் முளை கட்டியிருக்கும். அதனுடன் கற்றாழையின் சோற்றையும் எடுத்து, நன்றாக அரைத்து வடையாக தட்டி வெயிலில் உலர்த்தி, தேங்காய் எண்ணெயில் போட்டு, ஊறவிட்டு தலைக்கு தினமும் பூசி வர, முடி நன்றாக வளரும். மேலும் தலைக்கு ஆயில் மசாஜ் செய்யவும் பயன்படுத்தலாம்.
* புதினா இலைகளை சுத்தமான தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதில் கிடைக்கும் டிகாஷனை தலைக்கு பூசி, ஊறவைத்தும் குளிக்கலாம். இதேபோல, செம்பருத்தி இலைகளை கொதி நீரில் போட்டு, டிகாஷனை எடுத்தும் குளிக்கலாம். செம்பருத்தி பூவை, தேங்காய் எண்ணெயில் ஊற போட்டு தொடர்ந்து பயன்படுத்தி வரலாம்.

பட்டினி கிடக்கும் பாம்புகள்

பைத்தியக்கார பாம்பு நோய்’ என ஒருவகை நோய் பாம்புகளை பிடித்துள்ளது. இந்நோய்க்கு ஆளாகும் பாம்புகள் தங்களைத் தாங்களே சுருக்குப் போட்டுக்கொள்ளும் என்பதை சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.

இந்த நோயின் பெயர் `மேட் ஸ்நேக் டிசீஸ்.’ இந்த நோய்க்கு ஆளான மலைப்பாம்பு வகைகள் உண்ட உணவை வாந்தி பண்ணிவிட்டு எந்நேரமும் பட்டினி கிடக்கும்.

பாம்புகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் மைக்கேல் என்ற புரொபசர் இதுபற்றி கூறுகை யில், இப்படி சுருக்குப் போட்டுக் கொள்ளும் பாம்புகள் அந்த சுருக்கில் இருந்து வெளியேற முடியாமல் கடைசியில் உயிரையும் விட்டு விடும். ஒருவகை வைரஸ் தான் இந்த சுருக்கு நோய்க்குக் காரணம். இந்த நோயால் இறந்த பாம்பு ஒன்றை பரிசோதித்தபோது குறிப்பிட்ட வைரஸ் அந்த பாம்பின் டி.என்.ஏ. வில் காணப்பட்டது” என்றார்.

இந்த நோய்க்கு எதற்கு பைத்தியக்கார பட்டம்? தன் சட்டையை தானே கிழித்துக் கொண்டு சமயங்களில் தன்னைத் தானே தாக்கிக்கொள்ளவும் செய்வானே, பைத்தியக் காரன். அதற்காகத்தான் இந்த பொருத்தமான பெயரை பாம்பு நோய்க்கும் சூட்டினார்கள் போலும்!

கிறுகிறுப்பு, குமட்டல் நீங்க ரோஜா சாப்பிடுங்க

ht1345 ரோஜாபூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரும். இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும். பெண்களுக்கு கர்பப்பையினுள் ஏற்படும் ரத்த ஒழுக்கை நிறுத்தும். மலமிளக்கும் குணமுடையது.
ரோஜா இதழ்களை ஆய்ந்து எடுத்து  ஒருகையளவு இதழை ஒரு பாத்திரத்தில் போட்டு  ஒரு டம்ளர்  தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து  இறக்கி வடிகட்டி, அதில் பாதி கசாயத்தை எடுத்துச் சர்கரை சேர்த்துக் காலையிலும், மறுபாதியை மாலையிலும் குடித்து வந்தால் மலர்ச்சிக்கல் விலகும். நீர் கட்டு உடையும், மூலச்சூடு தணியும்.
ரோஜா மொக்குகளில் ஒரு கையளவு கொண்டு வந்து ஆய்ந்து, அதை அம்மியில் வைத்து மைபோல அரைத்து, ஒரு டம்ளர் அளவு கெட்டியாக தயிரில் போட்டுக் கலக்கிக் காலை வேளையில் மட்டும் குடித்து விட வேண்டும். இந்த விதமாக மூன்றே நாட்கள் சாப்பிட்டால் சீத பேதி குணமாகும். தேவையானால் மேலும் மூன்று நாட்கள் கொடுக்க பூரணமாகக் குணமாகும்.
பித்தம் காரணமாகக் கிறுகிறுப்பு, குமட்டல், வாந்தி நெஞ்செரிவு மற்றும் பித்தக் கோளாறு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் போட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி, ருசிக்காக தேவையான அளவு சர்கரை சேர்த்துக் காலையில் ஒரு டம்ளர் அளவும், மாலையில் ஒரு டம்ளர் அளவும்,  கலக்கிக் குடித்து விட வேண்டும், இந்த விதமாக ஏழு நாட்கள் செய்து வந்தால் பித்தம் அறவே நீங்கி விடும். இந்தச் சமயத்தில் பித்த்தை உற்பத்தி செய்யும் பண்டங்களை சேர்க்க க்கூடாது.
ஆய்ந்து எடுத்த ரோஜா இதழ்கள், கால் கிலோ எடுத்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு, 150 கிராம் சுத்தமான தேனை அதில் விட்டு நன்றாகக் கிளறி வெய்யிலில் வைத்து விட வேண்டும். போட்டது முதல், காலையில் ஒரு தேக்கரண்டி, மாலையில் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட வேண்டும். காலையில் வெய்லில் வைத்து மாலையில் எடுத்து வைத்து விட வேண்டும். இந்த விதமாக இரத்தபேதி நிற்கும் வரை சாப்பிட வேண்டும். இதைத் தயாரிக்கச் சிரமமாகத் தோன்றினால் தமிழ் மருந்துக் கடைகளில் குல்கந்து என்று கேட்டால் கொடுப்பார்கள். அதை வாங்கி இதே அளவு சாப்பிட்டு வர வேண்டும்.
ஒரு சிலருக்கு அடிக்கடி தும்மல் வரும். இதை நிறுத்த ஒரு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை பாத்திரத்தில் போட்டு அரை டம்ளர் அளவு தண்ணீர் விட்டுச் சுண்டக் காய்ச்சி அந்தத் தண்ணீரை இறுத்து, காட்டுச் சீரகத்தில் ஒரு தேக்கரண்டியளவு அம்மியில் வைத்து அரைத்து ஒரு சுத்தமான துணியில் நனைத்து முகர்ந்து கொண்டேயிருந்தால் தும்மல் நிற்கும்.
பூவைக் குடிநீராக்கிக் கொப்பளிக்க வாய்புண், ரசவீறு குறையும். குடிநீராக வைத்து ரணங்களைக் கழுவி வரச் சதை வளர்வது ஆறும். ரோஜா பூவிலிருந்து பன்னீர் தயாரிக்கப்படுகிறது. ரோஜாபூவிதழ் 1500 கிராம், அதனுடன்  நாலரை லிட்டர் தண்ணீர் சேர்த்து வாளியிலிட்டு நன்கு காய்ச்சி வடிக்கும் நீரே பன்னீராகும். இது மணத்திற்கும், களிம்பு, சந்தனம் முதலியவற்றில் சேர்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
பன்னீர் 238 கிராம், மீன் கொழுப்பு 51 கிராம், வாதுமை எண்ணெய் 306 கிராம் ரோஜாப்பூ எண்ணெய் 10 துளி இவைகளை நன்கு கலந்து உடம்பில் உள்ள புண்களுக்கு போட்டு வர துர்நாற்றம் விலகும்.
ரோஜாப்பூ பன்னீரை கண்கள் சிவந்து எரிச்சில் இருக்கும் நேரம் சில துளிகள் விட்டு வந்தால் எரிச்சல் மாறும். கண் நோய் சம்பந்தமான மருந்துகள் தயாரிக்க பன்னீர் பயன்படுகிறது. சிலருக்கு அதிக வியர்வையின் காரணமாக உடலில் துர்நாற்றும் ஏற்படும். இவர்கள் குளிக்கும் நீரிடன் பன்னீரைக் கலந்து குளிக்க துர்நாற்றம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.

கூகுள் மெயில் பாதுகாப்பானதா?

கூகுள் மெயில் எனப்படும் ஜிமெயில் தளத்தினையும் அதன் வசதிகளையும் பயன்படுத்தாதவர்கள் இல்லை எனலாம். கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்துவோர் அனைவரும், இத்தளத்தினை தங்களின் மின்னஞ்சல் பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, பைல்களை மற்றும் முக்கிய புரோகிராம்களை சேவ் செய்து வைக்கவும் பயன்படுத்துகின்றன.
கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் தான் கூகுள் மெயில் செயல்படுகிறது. எனவே, நாம் இதில் பதிந்து வைக்கப்படும் பைல்கள் கிளவ்ட் கம்ப்யூட்டிங் வகையில் சேவ் செய்யப்பட்டு, நம் தேவையின் போது தரப்படுகின்றன. சரி, இவை என்றென்றும் பாதுகாப்பாக இருக்குமா? என் அதிமுக்கிய பைல்களை சேவ் செய்து வைத்துள்ளேனே? என்ற கேள்வி பலரின் மனதில் எழலாம்.
கம்ப்யூட்டரில் நாம் உருவாக்கும் பைல்கள் என்றும் பத்திரமாக இருக்க, ஒன்று அல்லது அதற்கும் மேலான எண்ணிக்கையில், நாம் காப்பி எடுத்து வைக்கிறோம். ஆனால், கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் நீங்கள் பைல்களை, ஜிமெயில் தளத்த்தில் சேவ் செய்வது போல, சேவ் செய்தால், அதற்கு ஒரு பேக் அப் காப்பி கூட எடுத்து வைத்திடத் தேவை இல்லை.
இது குறித்து கூகுள் பாதுகாப்பு இயக்குநர் ஆரன் பெஜன் பாம் என்பவரிடம் கேட்ட போது, "ஜிமெயிலில் உள்ள அனைத்தும், ஒன்றுவிடாமல் ஒன்றுக்கு மேற்பட்ட சர்வர்களில் சேவ் செய்து காப்பாற்றப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டால், வாடிக்கையாளர்களுக்கு இழப்பு குறித்து எதுவும் தெரியாது. தானாகவே இன்னொரு சர்வரில் உள்ள காப்பி பைல் கிடைக்கும்’ என்றார். இது கட்டணம் செலுத்தி ஜிமெயில் அல்லது கூகுளின் வேறு வசதிகளைப் பயன்படுத்துவோருக்காக இருக்கலாம். நம்மில் பெரும்பாலானவர்கள், ஜிமெயிலை இலவசமாகவே பெற்று பயன்படுத்தி வருகிறோம். நாம் பதிந்து வைத்திடும் பைல்களும் இதே போல பாதுகாப்பாக இருக்குமா என்ற சந்தேகம் நமக்கு எழலாம். இதற்குப் பதில் அளித்த ஆரன் பெஜன் பாம் இது குறித்து யாரும் சந்தேகம் கொள்ள வேண்டாம். நம்பிக்கையில் தான் நம் செயல்பாடே உள்ளது என்றார்.
நிறுவனங்கள் எல்லாம் மற்ற பெரிய நிறுவனங்களால், கையகப்படுத்தப்படும் காலம் இது. கூகுள் நிறுவனத்தை இன்னொரு நிறுவனம் வாங்கிவிட்டால், நம்மால் தேக்கி வைத்த பைல்கள் நமக்குக் கிடைக்குமா என்ற கேள்வியையும் சிலர் எழுப்புகின்றனர். நியாயமான கேள்வி என்றாலும், நிறுவனம் ஒன்று கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கைவிட்டு இழப்பினை ஏற்படுத்த எண்ணாது எனவே பலரும் நம்பிக்கையுடன் செயல்படுகின்றனர். மேலும், ஜிமெயில் POP and IMAP என இருவகை மின்னஞ்சல்களைக் கையாள்வதால், ஜிமெயில் தளத்தின் மீது நம்பிக்கையற்றவர்கள், ஜிமெயில் அஞ்சல்களை, அவுட்லுக் தண்டர்பேர்ட் அல்லது இடோரா போன்ற இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் மூலம் கம்ப்யூட்டரில் இறக்கி வைத்துக் கொள்ளலாம்.
அல்லது Filip Jurcícek தரும் இலவச ஜிமெயில் பேக் அப் (gmailbackup) புரோகிராமினைப் பயன்படுத்தி பேக் அப் காப்பி எடுத்து வைத்துக் கொள்ளலாம். இதனை http://www. gmailbackup.com/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.