Daily Archives: செப்ரெம்பர் 13th, 2012

புற்றுநோய் வர காரணம் ? (ஆனந்தவிகடன் கட்டுரை)

Pages from anantha vikadan12.9.2012_Page_2Pages from anantha vikadan12.9.2012_Page_3

பயர்பாக்ஸ் இயக்கத்தினை வேகப்படுத்த

பல பயனாளர்கள், தங்களின் மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசர் முன்பு இயங்கியதைக் காட்டிலும் மெதுவாக இயங்குவதாகவும், சில வேளைகளில் கிராஷ் ஆகி நிற்பதாகவும் கேள்விகளை எழுப்பி உள்ளனர். இது போன்ற தகவல்களைப் படிக்கையில், ஆமாம், எனக்குக் கூட இது போல ஏற்படுகிறது என்று ஒத்துக் கொள்கின்றனர். இதற்கான தீர்வினை இங்கு காணலாம்.
1. ப்ளக் இன் நீக்கம்: ப்ளக் இன் புரோகிராம்கள், பயர்பாக்ஸ் பிரவுசர் ப்ளாஷ், சில்வர்லைட், ஜாவா மற்றும் ஆபீஸ் புரோகிராம்களை நிர்வகிக்க உதவுகின்றன. ஆனால், பல ப்ளக் இன் புரோகிராம்கள் நமக்குத் தேவையே இல்லை. இவை இயங்கிக் கொண்டிருப்பதால், பயர்பாக்ஸ் பிரவுசர் இயக்கம் சற்றுத் தாமதம் அடையலாம். எனவே இவற்றின் இயக்கத்தை நிறுத்தலாம். இதில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ப்ளக் இன் புரோகிராம்களை நாம் நீக்கவோ அல்லது அன் இன்ஸ்டால் செய்திடவோ முடியாது; அவற்றின் இயக்கத்தை முடக்கி வைக்கலாம். ஏதேனும் எக்ஸ்டன்ஷன் புரோகிராமின் ஒரு பகுதியாக அமைக்கப்படும் ப்ளக் இன் புரோகிராம்களை மட்டுமே நீக்கலாம். அந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராமினை நீக்கினால், அவை தாமாக நீக்கப்படும்.
ப்ளக் இன் புரோகிராமினை முடக்கி வைக்க, பயர்பாக்ஸ் பட்டனில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் கீழ்விரி மெனுவில், Addons என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Addons Manager புதிய டேப் ஒன்றைத் திறக்கும். இந்த டேப்பின் இடது பக்கம் காணப்படும் Plugins டேப் மீது கிளிக் செய்திடவும். இங்கு நீங்கள் முடக்கி வைக்க விரும்பும் ஒவ்வொரு ப்ளக் இன் எதிரே Disable பட்டனை இயக்கிவைக்கவும். முடக்கி வைக்கப்படும் ப்ளக் இன் புரோகிராம்கள் கிரே கலரில் காட்டப்படும். இவை மீண்டும் இயக்கப்பட வேண்டுமாயின், இங்கு மீண்டும் சென்று, Disable பட்டனைத் தேர்ந்தெடுத்ததை ரத்து செய்திட வேண்டும். முடக்கி வைக்கப்பட்ட ப்ளக் இன் புரோகிராம்கள் அனைத்தும் ப்ளக் இன் பட்டியலில் இறுதிக்குக் கொண்டு செல்லப்படுவதனைக் காணலாம்.
சில ப்ளக் இன் புரோகிராம்களிலேயே அவற்றை அன் இன்ஸ்டால் செய்திட வழி காட்டப்பட்டிருக்கும். அவை தேவை இல்லை எனில் அன் இன்ஸ்டால் செய்துவிடலாம். ப்ளக் இன் புரோகிராம்களை முடக்கி வைப்பதில் கவனம் வேண்டும். Flash புரோகிராமிற்குத் தேவையான ப்ளக் இன் புரோகிராம்களை முடக்கக் கூடாது. ஏனென்றால், இணையத்தில் இவை அடிக்கடி தேவைப்படும்.
2. எக்ஸ்டன்ஷன் நீக்கம்: பயர்பாக்ஸ் பிரவுசர் அதற்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களுக்குப் பெயர் பெற்றது. பலர் இதற்கென இவற்றை வடிவமைத்து இணையத்தில் இலவசமாகத் தந்து வருகின்றனர். பலவற்றை, மொஸில்லா தன் இணையதளத்தில் தருகிறது. விளம்பரங்களைத் தடுக்க, வீடியோ பைல்களை டவுண்லோட் செய்திட, சமூக வலைத் தளங்களில் இணக்கமாகச் செயல்பட, ஏன் மற்ற பிரவுசர்களுக்கான கூடுதல் அம்சங்களை இங்கு பயன்படுத்த என எத்தனையோ பணிகளுக்கு எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் கிடைக்கின்றன. எந்த அளவிற்கு இந்த புரோகிராம் களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறோமோ, அந்த அளவிற்கு பயர்பாக்ஸ் வேகம் குறைவாக இருக்கும். எனவே தேவைப்படாத எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை இயங்கா நிலையில் அமைப்பதே நல்லது.
மேலே கூறியபடி Addons Manager ஐத் திறக்கவும். இங்கு எக்ஸ்டன்ஷன் புரோகிராம் பட்டியல் கிடைக்கும். இவற்றில் எவை எல்லாம் தேவையில்லையோ, அவற்றின் எதிரே உள்ள Disable பட்டனை இயக்கிவைக்கவும். பயர்பாக்ஸ் ரீ ஸ்டார்ட் செய்திட உங்களிடம் அனுமதி கேட்கும். கொடுக்கவும். அப்போதுதான், நீங்கள் மேற்கொண்ட செயல்பாடு அமலுக்கு வரும்.
3. பிரவுசிங் டேட்டா நீக்கம்: பயர்பாக்ஸ் நாம் இணையத்தில் செல்லும் தளங்கள் குறித்த தகவல்களைத் தொடர்ந்து சேகரித்து வரும். தேடல்கள், தள முகவரிகள், குக்கீகள் எனப் பல வகையான பைல்களாக இவை இருக்கும். இவை தொடர்ந்து சேரும்போது, இவற்றின் சுமையால், பிரவுசர் வேகம் குறைந்து இயங்கலாம். எனவே இவற்றை நீக்குவது நல்லது. இதற்கு பயர்பாக்ஸ் பட்டன் கிளிக் செய்து, History | Clear Recent History எனத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் Clear Recent History டயலாக் பாக்ஸில், பலவிதமான ஆப்ஷன் கிடைக்கும். குறிப்பிட்ட நாள் குறித்து பிரவுசிங் ஹிஸ்டரியை நீக்கலாம். அல்லது அனைத்தையும் நீக்கலாம். அழித்துவிட்டால், மீண்டும் கிடைக்காது என்று அப்போது ஓர் எச்சரிக்கை செய்தி கிடைக்கும். அழிப்பது உறுதியாகிவிட்டபடியால், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
அனைத்தையும் நீக்காமல், குறிப்பிட்ட இணைய தளத்திற்கான ஹிஸ்டரியை வைத்துக் கொண்டு மற்றவற்றை நீக்கலாம். இதற்கு பயர்பாக்ஸ் பட்டன் கிளிக் செய்து, டைக்கும் மெனுவில், History | Show All History எனச் செல்லவும். இங்கு Library dialog box கிடைக்கும். எந்த இணைய தளத்திற்கான ஹிஸ்டரியை அழிக்க திட்டமிடுகிறீர்களோ, அதனைப் பார்த்ததற்கான உத்தேச நாளைத் தேர்ந்தெடுக்கவும். அந்த காலத்தில் பார்த்த இணைய தளங்கள் அனைத்தும் வலது பக்கத்தில் பட்டியலிடப்படும். இதில் நீங்கள் இலக்கு வைத்த இணைய தளத்தைத் தேர்ந்தெடுத்து, அதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், Forget About This Site என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். ஹிஸ்டரி அழிக்கப்படும்.
4. தானாக ஹிஸ்டரி அழிக்கப்படுதல்: பயர்பாக்ஸ் பிரவுசரை மூடுகையில், பிரவுசிங் ஹிஸ்டரி சார்ந்த டேட்டா தானாக அழிக்கப்படும் வகையில் செட் செய்திடலாம். பயர்பாக்ஸ் பட்டன் கிளிக் செய்து, மெனுவில் Options தேர்ந்தெடுக்கவும். Options டயலாக் பாக்ஸில், டூல் பாரில் Privacy பட்டனைக் கிளிக் செய்திடவும். இதில் ஹிஸ்டரி பிரிவில் Use custom settings for history என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Clear history when Firefox closes என்று உள்ளதன் எதிரே உள்ள செக் பாக்ஸில் டிக் செய்திடவும்.
இப்போது Settings பட்டனைக் கிளிக் செய்திடவும். இங்கே Settings for Clearing History டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில், நீங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரை மூடுகையில் எவற்றை எல்லாம் நீக்க வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி தேவையற்ற குப்பைகள் உங்கள் பிரவுசரில் சேராது. உங்கள் பிரவுசரின் இயக்கமும் வேகமாக இருக்கும்.

விண்டோஸ் 8: புதிய மவுஸ் மற்றும் கீ போர்ட்

சர்பேஸ் டேப்ளட் மூலம் ஹார்ட்வேர் பிரிவில் மைக்ரோசாப்ட் இறங்கப் போகிறது என்ற செய்தியைக் கேட்டு ஆரவாரம் செய்தவர்களுக்குத் தீனி போடும் வகையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
விண்டோஸ் 8 சிஸ்டத்தில் கிடைக்கும் கீகளுடன் இயங்கும் வகையில், புதிய வகை மவுஸ் மற்றும் கீ போர்ட்களை மைக்ரோசாப்ட் தயாரித்து வழங்க இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாகவே மைக்ரோசாப்ட் கீ போர்டுகளையும், மவுஸ்களையும் தயாரித்து வழங்கி வருகிறது. ஆனால், இப்போது வர இருக்கும் கீ போர்ட்களும், மவுஸும் சற்று மாறுபாடு கொண்டதாக இருக்கப் போகின்றன. Wedge, the Sculpt, மற்றும் the Touch என மூன்று மாடல்களில் இவை வெளியாகின்றன. இவற்றின் பயன்பாடு பெரும்பாலும் விண்டோஸ் 8 டேப்ளட் பிசிக்களின் செயல்பாட்டினை ஒட்டியே அமைந்துள்ளதாக ஒரு குறிப்பு தெரிவிக்கிறது.
சென்ற ஜூலை 30ல் இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில், புளுடூத் வசதியுடன் கூடிய இரண்டு மாடல் கீ போர்ட் மற்றும் மவுஸ் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இவை Wedge Touch Mouse, the Wedge Mobile Keyboard, the Sculpt Touch Mouse, and the Sculpt Mobile Keyboard எனவும் கூறப்பட்டது. இவை விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் மட்டுமின்றி, விண்டோஸ் ஆர்.டி., விண்டோஸ் 7 மற்றும் டேப்ளட் பிசிக்களுடன் இணைந்து செயலாற்றும். மேலும் மேக் சிஸ்டம் ஓ.எஸ்.எக்ஸ் பதிப்பு 10.6 மற்றும் 10.7 ஆகியவற்றுடனும் இவை இயங்கும். Wedge Touch Mouse மற்றும் Sculpt Touch Mouse ஆகியவற்றில், நாம் டேப்ளட் பிசி ஒன்றின் டச் ஸ்கிரீன் திரையில் விரல்களைக் கொண்டு என்ன செயல்பாடுகளை மேற்கொள்வோமோ, அவற்றை மேற்கொள்ளலாம்.
Wedge Touch Mouse நான்கு வகையான டச் ஸ்குரோலிங் இயக்கம் கொண்டதாக இருக்கும். நம் பாக்கெட்டில் எடுத்துச் செல்லும் வகையில், அளவில் சிறியதாக இருக்கும். புளுடூத் 4 தொழில் நுட்பம் இதில் இயங்கும். இதனால், இதனை இணைக்கத் தேவையான கேபிள் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. புளுடூத் இயக்கத்துடன், ப்ளூ ட்ராக் இயக்கமும் இதில் கிடைக்கும். இதனால், எந்த தளத்திலும் இதனை இயக்கலாம். சிறப்பான செயல்பாடு கிடைக்கும். மேலும் இதில் உள்ள பேக் அப் (Backpack Mode) மூலம் இதன் மின் சக்தி தேவையற்ற வகையில் வீணாவது தடுக்கப்படுகிறது. இதன் விலை 70 டாலர் அளவில் இருக்கலாம்.
Wedge Mobile கீ போர்ட் தடிமன் குறைவாகக் கொண்டதாக வடிவமைக்கப்படுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தின் ஹாட் கீகள் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் மீடியா இயக்குவதற்கான கீகளும் தரப்பட்டுள்ளன. இதிலும் புளுடூத் இயக்கம் கிடைக்கிறது. இந்த கீ போர்டில் கவர் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இதனை டேப்ளட் பிசியின் ஸ்டாண்டாகவும் பயன்படுத்தலாம். இதன் விலை 80 டாலர் என்ற அளவில் இருக்கும்.
தடிமன் பற்றிக் கவலை இல்லை என எண்ணுபவர்களுக்கு Sculpt கீ போர்ட் உகந்ததாக இருக்கும். Sculpt கீ போர்ட் வழக்கமான கீ போர்டாக வடிவமைக்கப் பட்டு, சில கூடுதல் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. நான்கு முனைகளும் வளைவாக இருப்பதால், இதனை வைத்து இயக்கப் போதுமான இடம் மட்டும் இருந்தால் போதும். விண்டோஸ் 8 சிஸ்டம் ஹாட் கீகள் தனியே தரப்பட்டுள்ளன. இதன் பேட்டரி 10 மாதங்களுக்கு மின் சக்தியைத் தரக் கூடியதாக அமைந்துள்ளது. கீ போர்டிலிருந்து எந்த இயக்கமும் கம்ப்யூட்டருக்கு குறிப்பிட்ட காலம் வரை செல்லவில்லை எனில், மின் சக்தி மிச்சப்படுத்தும் வகையில் ஸ்லீப் மோடுக்குத் தானாகச் சென்றுவிடுகிறது. மேலே கூறப்பட்ட பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் இணைந்து இதனை இயக்கலாம். விண்டோஸ் விஸ்டா சிஸ்டத்துடனும் இதனை இயக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. இதன் விலை 50 டாலராக இருக்கலாம்.
Sculpt மவுஸ் நான்கு வழி இயக்கம் கொண்டுள்ளது. புளுடூத் இயக்கம் உள்ளடக்கியது. இதன் விலை 50 டாலராக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன் மைக்ரோசாப்ட் டச் மவுஸ் (Touch Mouse) ஒன்றையும் தருகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தின் அசைவுகள் வழி இயக்கத்திற்கு இது துணை புரிகிறது. ஸ்வைப்பிங், இரு விரல் கொண்டு இயக்குவது, மூன்று விரல் கொண்டு ஸூம் செய்வது, முன்னரும் பின்னரும் செல்ல, போன்ற செயல்பாடுகளை இதன் மூலமும் மேற்கொள்ளலாம். இதன் விலை 80 டாலர் அளவில் இருக்க வாய்ப்புள்ளது.
இந்த சாதனங்களினால், இனி கம்ப்யூட்டர் வைத்து இயக்கும் டேபிள்களில் கூட மாற்றங்கள் ஏற்படலாம்.
வயர்லெஸ் மற்றும் டச் ஸ்கிரீன் செயல்பாட்டுக்கு உதவும் வகையில் கீ போர்டும் மவுஸும் அமைய இருப்பதால், மாற்றங்களையும், சாதனங்களை இயக்கும் வகையில் முற்றிலும் புதிய வழிகளையும் எதிர்பார்க்கலாம். இந்த சாதனங்கள் அனைத்துமே, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 8 சிஸ்டம் பயன்படுத்துபவர்களின் வேலைப் பளுவினை எளிதாகவும், இனிமையாகவும் அமைக்க எடுத்துக் கொள்ளும் தீவிர முயற்சிகளின் அடையாளங்களே. எப்படியாவது, தன் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மக்கள் விரும்பும் சிஸ்டமாக மாற்ற, அனைத்து வழிகளிலும் மைக்ரோசாப்ட் திட்டமிட்டு உழைத்திடும் என நாம் எதிர்பார்க்கலாம். இவற்றின் மூலம் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெற்றியை ஈட்டலாம்.

சொத்து அடமானக் கடன் பற்றித் தெரியுமா?

 

நமது நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்பவை கடன்கள். சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் நமது அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், பொருளாதார இறக்க நிலையில் இருந்து மீள்வதற்கும் கடன்கள் கைகொடுக்கும்.
அந்த வகையில்தான் வருகிறது, சொத்து அடமானக் கடன். இதுவும் வீட்டுக் கடன் வாங்குவது போலத்தான்.
உயர்கல்வி பயில்வது, தனக்கு அல்லது பிள்ளைகளுக்குத் திருமணம் செய்வது, வீட்டைப் புதுப்பிப்பது, மருத்துவச் சிகிச்சை மேற்கொள்வது, தொழிலை விரிவாக்கம் செய்வது, வாகனம் வாங்குவது என பல்வேறு தேவைகளுக்கு வீட்டை அடமானம் வைத்துக் கடன் பெற்றுக்கொள்ளலாம்.
வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு, வர்த்தகக் கட்டிடங்களுக்கான கிரயப் பத்திரங்களை அடமானமாக வைத்து இக்கடனைப் பெறலாம். மாதச் சம்பளக்காரர்கள், சுயதொழில் செய்பவர்கள் என அனைவருக்கும் இக்கடன் கிடைக்கும்.

நீங்கள் அடமானம் வைக்கும் சொத்து, அது அமைந்திருக்கும் பகுதியின் உள்ளாட்சி அமைப்பின் அங்கீகாரத்தைப் பெற்றதாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
இன்னொரு விஷயம், சொத்து மதிப்பு முழுமைக்கும் கடனை எதிர்பார்க்கக் கூடாது. சொத்து மதிப்பில் 50 முதல் 70 சதவீதம் வரை கடன் கிடைக்கும்.
சொத்து அடமானக் கடன் வழங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனம், பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு இக்கடனை வழங்கும். அதாவது கடன் கோருபவரின் மாத வருமானம், திரும்பச் செலுத்தும் திறன், சொத்தின் மதிப்பு ஆகியவை கடன் தொகையை நிர்ணயிக்கும் காரணிகளாக அமையும். சொத்து அடமானக் கடனை அதிகபட்சம் 15 ஆண்டுகளில் திரும்பச் செலுத்தலாம். இந்தக் காலம் வங்கிக்கு வங்கி வேறுபடும்.
இந்த வேளையில் உங்களுக்கு இன்னொரு சந்தேகம் எழக்கூடும். அது, பூர்வீகச் சொத்தை அடமானமாக வைத்துக் கடன் பெற முடியுமா என்பது. அந்த வகையிலும் தாராளமாகக் கடன் பெற முடியும். ஆனால் அந்தச் சொத்தில் உங்களுக்கு உரிமை இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை அளிக்க வேண்டியது அவசியம். மேலும், சொத்து பிரிக்கப்படவில்லை என்றால், இதர சட்டப்படியான வாரிசுகளும் சேர்ந்து கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.