Advertisements

Daily Archives: செப்ரெம்பர் 15th, 2012

தமிழகத்தில் 3 ஆண்டுகளில் மட்டும் 92,363 பேருக்கு எச்ஐவி, எய்ட்ஸ் முதலிடத்தில் ஆந்திர மாநிலம்

தமிழகத்தில் ஆண்டுக்கு 25 ஆயிரம் பேருக்கு  எச்.ஐ.வி தொற்று மற்றும் எய்ட்ஸ் நோய் உள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட் பாட்டை மீறுவதாலும், விலைமாதர்களை நாடுவதாலும் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொற்றுகளால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மத்திய மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தபோதும் சில மாநிலங்களில் மட்டுமே எச்ஐவி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
தமிழகத்தில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 92,363 பேர் எச்ஐவி, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரம் மூலம் தெரியவந்துள்ளது.  சில மாநிலங்களில் ஆண்டு தோறும் எச்.ஐ.வி, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளவர்கள் விவரம்:
மாநிலம் : 2009-10 2010-11 2011-12     2012 ஏப்ரல்- ஜூன் வரை
ஆந்திரா :     69,155          76,650            61,121                      9363
டெல்லி :      8,228            3,559              5,359                        1,656
கர்நாடகா :    38,276         38,276             42,043                      7,400
கேரளா :     2,551            2,539               1,958                        550
புதுச்சேரி :   227              246                   250                            39
தமிழ்நாடு  :  25,812         25,812              24,837                     3,532

நன்றி-தினகரன்

Advertisements

அதில் திருப்தியில்லையா? விரக்தி அதிகரிக்குமாம்!

ஆர்வமும், ஆசையும் அதிகமாக இருந்தால்தான் துணையுடன் உற்சாகமாக உறவில் ஈடுபடமுடியும். ஆனால் செக்ஸ் குறித்த சிந்தனைகள் இல்லாமலோ, அது பற்றிய ஆசையோ குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்திதான் எஞ்சியிருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். சர்வதேச பெண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் நினைவுகளும், அது தொடர்பான எண்ணங்களும் நம்மை உயிர்போடு வைத்திருக்கும். அதேசமயம் பாலுணர்வு குறைவாக இருந்தாலோ, நாம்மால் துணையுடன் இயல்பாக உறவில் ஈடுபடமுடியவில்லை என்றாலோ ஒருவித குற்ற உணர்வு ஆட்கொள்ளும். இது தொடர்பாக செக்ஸ் ஆர்வம் குறைவாக இருந்த 5098 பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த பெண்களிடம் கடந்த 12 மாதங்களில் செக்ஸ் விஷயத்தில் எப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள், அந்த காலகட்டத்தில் அவர்களின் செக்ஸ் வாழ்க்கை எப்படி இருந்தது. செக்ஸ் வைத்துக் கொள்ளாதபோது அவர்களிடம் விரக்தித் தன்மை எந்த அளவுக்கு இருந்தது என்பது உள்பட பல அம்சங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பெண்களின் பல்வேறு குணாதிசயங்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அப்போது செக்ஸ் ஆர்வம் குறைவாக உள்ள பெண்களிடையே விரக்தி அதிகம் இருந்ததாம். பலருக்கு செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியே இல்லாத நிலையும் காணப்பட்டதாம். மேலும் தங்களால் செக்ஸ் வாழ்க்கையில் பூரணமாக ஈடுபட முடியவில்லையே என்ற ஆதங்கம் அதிகம் இருந்ததாம்.

ஆய்வின் முடிவில், செக்ஸ் வைத்துக் கொள்ளாத சமயங்களில் அல்லது செக்ஸ் ஆர்வம் குறைவாக இருந்த சமயங்களில் இவர்கள் பெருமளவில் விரக்தியுடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செக்ஸ் ஆர்வம் குறைவாக இருந்தபோதெல்லாம் இவர்களுக்கு எதிர்மறையான சிந்தனைகள் அதிகம் இருந்ததாகவும் ஆய்வு கூறுகிறது.

இயல்பான செக்ஸ் வாழ்க்கை உடையவர்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் மிகவும் குறைந்த அளவே வருவதாகவும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறும் இந்தக் கழகத்தின் மாநாட்டில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

`தனிநபர் கடன்’ பெற நினைக்கிறீர்களா?

 

`தனிநபர் கடன் (பெர்சனல் லோன்) வேண்டுமா?’ என்று கேட்டு உங்களுக்கு இதுவரை செல்போன் அழைப்பு வரவில்லை என்றால் அதிசயம்.
அந்த மாதிரி அழைப்பின்போது, `அதெல்லாம் வேண்டாம்’ என்று நீங்கள் பட்டென்று செல்போனை அணைத்திருந்தாலும், சம்மதித்திருக்கலாமோ என்ற லேசான எண்ணமும் உள்ளுக்குள் ஓடியிருக்கலாம். பணத் தேவை இல்லாதவர் யார்?
`பாதுகாப்பற்ற கடன்’ என்பதால், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் அதிகம்.
நீங்கள் தனிநபர் கடன் பெறுவது என்று முடிவெடுத்தால் எந்தெந்த அடிப்படையான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று இப்போது பார்க்கலாம்…

* முதலாவது, எந்த நிலையில் தனிநபர் கடனுக்குப் போவது? நீங்கள் கடன் பெறும் வகையில் சொத்தோ, `செக்யூரிட்டி’யோ இல்லாதபோது. உதாரணத்துக்கு, நீங்கள் உங்களுக்குச் சொந்தமான ஒரு வீட்டை, வீட்டுக் கடனுக்கான `செக்யூரிட்டி’யாக கொடுத்திருந்தால், மறுபடி அதை வைத்துக் கடன் பெற முடியாது.
* மாதாந்திரத் தவணையை தவறாது செலுத்த முடியும் என்றால் மட்டுமே தனிநபர் கடனுக்கு முயற்சியுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் கடன் சுழலுக்குள் சிக்கிக்கொள்வீர்கள்.
* ஓர் அவசரநிலை, அதற்காக உடனடியாகப் பணம் தேவைப்படுகிறது என்கிறபோது. அந்த மாதிரியான வேலைகளில் நீங்கள் தனிநபர் கடன் குறித்து யோசிக்கலாம். காரணம், இக்கடனுக்கு குறைவான ஆவணங்களைச் சமர்ப்பித்தால் போதும். `பிராசசிங்’ நேரமும் குறைவு.
* உடனடியாக முடிக்க வேண்டிய அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் தனிநபர் கடனை நாடுவது என்பதில் உறுதியாக இருங்கள். உங்களின் கடைசி வழியாக மட்டுமே இது இருக்க வேண்டும். ஆனால் `கிரெடிட் கார்டு’ மூலம் பணம் எடுப்பதற்கு முன்னால் தனிநபர் கடனைப் பற்றி யோசிக்கலாம். உங்களின் `ஜாலியான’ தேவைகளான சூதாடுவது, சுற்றுலா செல்வது, கார் வாங்குவது போன்றவற்றுக்குத் தனிநபர் கடன் பெறுவது உங்களை சிக்கலில் ஆழ்த்திவிடும்.
தனிநபர் கடன் என்றதும் எல்லோருக்கும் இயல்பாகவே அதிக வட்டி ஞாபகம் வரும். ஆனால் தனிநபர் கடனில் மேலும் பல கட்டணங்களும் மறைந்திருக்கின்றன. அவையும் சேர்ந்ததுதான் தனிநபர் கடன்.
எனவே, பிற கட்டணங்கள், மறைமுகக் கட்டணங்களை சம்பந்தப்பட்ட வங்கியில் நன்றாக விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள். அதை விடுத்து பின்னர், இவை பற்றியெல்லாம் முன்பே ஏன் தெரிவிக்கவில்லை என்று வங்கியுடன் மல்லுக்கு நிற்காதீர்கள்.

இறுதிக் கட்டத்தில் விண்டோஸ் 8

முற்றிலும் மாறுபாடான இயக்கமாக வடிவமைக்கப்பட்ட விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். வரும் அக்டோபர் 26ல் இது வெளியிடப்படும் எனவும் மைக்ரோசாப்ட் கூறியுள்ளது. இதன் முன்னோட்டமாக, சென்ற ஆகஸ்ட் 1 அன்று, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள, கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்களுக்கு இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்து, இனி பொதுமக்களுக்கான வழங்கல் அக்டோபர் 26ல் நடைபெறும். அதே நாளன்று, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் டேப்ளட் பிசி, விண்டோஸ் ஆர்.டி. ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விஷயத்தில் இன்னும் ஒரு விஷயம் மர்மமாகவே உள்ளது. அது இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் விலையாகும். சிஸ்டம் பில்டர்கள் என அழைக்கப்படும் கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்களுக்குக் கூட என்ன விலைக்கு வழங்கப்படுகிறது என்பது குறித்து மைக்ரோசாப்ட் இன்னும் மவுனம் சாதித்து வருகிறது. அதே போல விண்டோஸ் 8 வாங்க விரும்பும் பொதுமக்களுக்கான விலையும் அறியப்படவில்லை.
இந்த முறை மைக்ரோசாப்ட் மக்களின் தேவையைப் பெரிய அளவில் நிறைவேற்றியாக வேண்டும். விண்டோஸ் 8, பொதுமக்களுக்கு வெளியாகும் நாளில், குறைந்தது 5,000 மெட்ரோ அப்ளிகேஷன் புரோகிராம்கள், தரவிறக்கம் செய்து கொள்ள ஏதுவாக மைக்ரோசாப்ட் ஸ்டோரில் கிடைக்கவேண்டும். தற்போது ஒரு சில நூறு அப்ளிகேஷன்கள் மட்டுமே கிடைக்கின்றன.
விண்டோஸ் விஸ்டா சிஸ்டத்திற்கு ஏற்பட்ட மோசமான தோல்விக்குப் பின்னர், விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அறிவித்த நாளில் சரியாக, அதற்குத் தேவையான அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களுடன் மைக்ரோசாப்ட் வெளியிட்டது. விஸ்டா சிஸ்டம் 20% பயனாளர்களைக் கூட அடையாத நிலையில், தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள மைக்ரோசாப்ட் அனைத்து முயற்சிகளையும் சரியாக எடுத்து, விண்டோஸ் 7 சிஸ்டத்தினை வெளியிட்டது. இப்போதும் அதே கடப்பாடுடன் மைக்ரோசாப்ட் செயல்படும் என எதிர்பார்ப்போம்.

`கங்கா ஸ்நானம்’ யாருடைய பாவத்தை போக்கும்?

 

கங்கையில் நீராடினால் கடின பாவமும் கரைந்தோடும் என்பது நம்பிக்கை. ஆனால் அந்த கங்கை நீராடல் என்ற புனிதமான செயலை எப்படி செய்ய வேண்டும்? கங்கைக்கு சென்று நீராடினால் நாம் இதுவரை செய்த அனைத்து பாவங்களும் நீங்கி விடும் என்று பலரும் நினைக்கிறார்கள். அவர்களின் நினைப்பு உண்மைதான். ஆனால் அதன்பிறகும் பலரின் பாவங்கள் நீங்குவதில்லையே அது ஏன்?.
சிவபெருமானும், பார்வதியும், ஒரு முறை ஹரித்துவார் நகரை வலம் வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆயிரக் கணக்கான மக்கள், கங்கை நதியில் `ஸ்நானம்’ செய்து திரும்பிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்ததும் பார்வதிதேவி, சிவபெருமானை பார்த்து கேட்டார். `சுவாமி! கங்கையில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கி விடும் என்கிறார்கள். ஆனாலும் இங்கு வந்து நீராடும் பக்தர்களின் பாவங்கள் நீங்கியது போன்றே தெரியவில்லையே? அதற்கான காரணம் என்ன?’ என்றார்.

IND02141B

அதற்கு சிவபெருமான், `கங்கையில் நீராடினால் தானே பாவம் நீங்கும். இவர்கள் யாரும் ஸ்நானம் செய்யவில்லை. மாறாக, கங்கையில் தங்கள் உடலை நனைத்துக் கொண்டுதான் வருகிறார்கள்’ என்று கூறினார்.
சிவனின் பேச்சால் வெகுவாக குழம்பி போனார் பார்வதிதேவி. ஆகையால் அந்த பேச்சின் அர்த்தம் புரியாமல், `என்ன சுவாமி சொல்கிறீர்கள்! உடலை நனைத்துக் கொள்வது என்பது நீராடுவது தானே?’ என்று கேட்டார்.
`உனக்கு சரியாக விளங்க வில்லை தேவி. நாளை, நான் நடத்தும் விளையாட்டை பார்த்து நீயே புரிந்து கொள்வாய்’ என்றார்
சிவபெருமான்.அன்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் கங்கைக்கு செல்லும் பாதை சேரும், சகதியுமாக காணப்பட்டது. மேலும் அந்த வழியில் ஒரு பெரிய பள்ளமும் இருந்தது. மறுநாள் காலை, சிவபெருமான் ஒரு முதியவர் வேடம் பூண்டு அந்த பள்ளத்தில் விழுந்து வெளியேற முடியாமல் தவிப்பது போல் பாவனை செய்தார். பார்வதி தேவியும், மூதாட்டி வேடத்தில் பள்ளத்தின் அருகில் நின்று `ஐயோ! என்னவர் குழியில் விழுந்து விட்டாரே! யாராவது கைகொடுத்து இவரை தூக்கி விடுங்களேன்?’ என்று பொய்யாக பரிதவித்து கொண்டிருந்தார்.
கங்கையில் மூழ்கி விட்டு வந்தவர்களில் பலர், இப்போதுதான் குளித்து விட்டு வருகிறோம். இவரை காப்பாற்றி, சேற்றை பூசிக் கொள்ள வேண்டுமா? என்ற எண்ணத்தில் சென்று கொண்டிருந்தனர். ஒரு சிலர் காப்பற்ற முன்வந்தனர். அவர்களிடம் மூதாட்டி உருவில் இருந்த பார்வதி, `என் கணவர் எந்த பாவமும் அறியாதவர். ஆகையால் பாவம் அற்றவர்கள் தாம் இவரை தொட வேண்டும். பாவம் செய்தவர் யாரேனும் தொட்டால் அவர்கள் அக்கணமே சாம்பலாகி விடுவர்’ என்று ஒரு குண்டையும் தூக்கிப் போட்டார்.
`அப்படியானால் நான் இவரைத் தொட லாயக்கில்லை’ என்றபடி அனைவரும் சென்று விட்டனர். கங்கையில் நீராடியபடி சென்ற ஒருவர் கூட அந்த முதியவரை தூக்கி விட முன்வரவில்லை. கடைசியில் ஒரு வாலிபன் முன்வந்தான். அவனிடமும் பார்வதி, தன் கணவரை பாவம் செய்தவர்கள் தொட்டால் பஸ்பமாகி விடுவார்கள் என்றார்.
அதற்கு அந்த வாலிபன், `நான் பாவம் அற்றவன் என்பதில் என்ன சந்தேகம். இப்போது தானே கங்கை நதியில் நீராடி, எனது பாவங்களை நீக்கி விட்டு வருகிறேன். ஆகவே நான் பஸ்பமாக மாட்டேன்’ என்று கூறியதுடன், அந்த முதியவரையும் தூக்கி விட்டான். அப்போது அவனுக்கு சிவபெருமானும், பார்வதியும் காட்சியளித்து அருளாசி வழங்கினர்.
பின்னர் பார்வதியை நோக்கி, `இப்போது உனக்கு புரிந்திருக்கும் தேவி. நம்பிக்கையுடன், கங்கையில் நீராடும் போது தான் ஒருவனின் பாவங்கள் விலகும்’ என்றார் சிவபெருமான்.