Daily Archives: செப்ரெம்பர் 16th, 2012

மட்டன் கீமா புலாவ்

மட்டன் வகை உணவுகளில் தனி ருசி இந்த மட்டன் கீமா புலாவ். இதன் அட்டகாச ருசியில் சாப்பிடும் போது நீங்களே அளவு தாண்டி விடுவீர்கள். செய்து பார்த்து ருசிப்போமா?

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி – 2 கப்
கொத்துக்கறி – 300 கிராம்
தயிர் – 2 கப்
வெங்காயம் – 1
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
லவங்கம் – 6
ஏலக்காய் – 8
மிளகு – 1/2 டீஸ்பூன்
பாதாம் – 1/4 கப்
பிஸ்தா – 1/4 கப்
காய்ந்த திராட்சை – 1/2 கப்
குங்குமப்பூ – 1/2 டீஸ்பூன்
நெய் – 5 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 5 டேபிள் ஸ்பூன் நெய் விடவும். நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் மிளகு, ஏலக்காய், லவங்கம், தயிர், இஞ்சி பூண்டு விழுது, பாதாம், பிஸ்தா, கிஸ்மிஸ், குங்குமப்பூ சேர்த்து சுத்தம் செய்த கொத்துக்

கறியை சேர்த்து வதக்கவும். போதுமான உப்பு சேர்க்கவும். தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் கறியை வேக விடவும்.

பிரஷர் போனதும் திறந்து பாசுமதி அரிசியை சேர்த்து 4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும்.

மட்டனும் அரிசியும் வெந்ததும் மூடியைத் திறந்து ஒரு கிளறு கிளறி மட்டன் கீமா புலாவை பரிமாறவும். இதே முறைப்படி கொத்துக்கறிக்கு பதிலாக மட்டன் அல்லது சிக்கன் சேர்த்தும் மட்டன் புலாவ், சிக்கன் புலாவ் செய்யலாம்.

எக்ஸெல் ஆல்ட்+ஷிப்ட்

எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீகளுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம்
F1 +ALT+SHIFT: புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும்.
F2 +ALT+SHIFT: அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும்.
F3 +ALT+SHIFT: நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம்.
F6+ALT+SHIFT: ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக் விண்டோக்கள் திறக்கப்பட்டிருப்பின் தற்போதைய ஒர்க்புக்கிற்கு முந்தைய ஒர்க்புக் விண்டோ திறக்கப்படும்.
F9 +ALT+SHIFT: திறந்திருக்கும் அனைத்து ஒர்க்ஷீட்களிலும் அனைத்து ஒர்க் புக்குகளிலும் அனைத்து கால்குலேஷன்களும் செயல்படுத்தப்படும்.
F10 +ALT+SHIFT: ஸ்மார்ட் டேக்கிற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட் டேக் திறக்கப்பட்டிருந்தால் அடுத்த டேக் சென்று அதற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும்.
F11 +ALT+SHIFT: மைக்ரோசாப்ட் ஸ்கிரிப் எடிட்டர் திறக்கப்படும்.
F12 +ALT+SHIFT: பிரிண்ட் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.

அபிஷேகம் முடிய ஆறு மணி நேரம்

 

siva lingam

சிவலிங்க வழிபாடு என்பதே பெருமையும், சிறப்பும் வாய்ந்தது தான். ஒரு சிவலிங்கம் இருந்தாலே அந்த இடத்தில் இறைவனின் ஆசி பூரணமாக நிறைந்திருக்கும். அதிலும் நூற்றுக்கணக்கான லிங்கங்கள் ஒரே இடத்தில் அமையப் பெற்றிருந்தால் அந்த இடத்தின் சிறப்பு எப்படிப்பட்டதாக இருக்கும் என்று எண்ணும்போது உள்ளம் பூரிக்காமல் இருக்காது.
* தஞ்சாவூர் பெரிய கோவில் எனும் பெருவுடையார் கோவிலின் பிரகாரத்தில் 252 சிவலிங்கங்கள் உள்ளன. மேலும் நவக்கிரகங்களாக 9 லிங்கங்கள் இருக்கின்றன. இங்கு வரும் பக்தர்கள் அனைத்து சிவலிங்கங்களையும் கண்டு வணங்க வேண்டும்.
* தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பர்வதவர்த்தனி சமேத ராமலிங்க சுவாமி கோவிலில், 108 சிவலிங்கங்கள் ஒரே இடத்தில் அமையப்பெற்றுள்ளன. இங்குள்ள ஒவ்வொரு சிவலிங்கத்திற்கும் 9 குடம் நீர் ஊற்றி அபிஷேகம் செய்யும் முறை இருந்து வருகிறது. இதற்கு குறைந்தது 6 மணி நேரம் வரை பிடிக்கும்.
* தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே வீரசிங்கம் என்ற ஊரில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. மேலும் பழமையான வைத்தியநாதர் – வாலாம்பிகை கோவிலும் இருக்கிறது. அருட் தன்மையில் சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலுக்கு இணையானது. மக்களின் நோய், நொடிகளை தீர்த்து வைக்கும் தலமாக இது விளங்குகிறது. இந்த கோவிலில் மேல்புறம் உள்ள பிரகாரத்தில் 276 சிவலிங்கங்கள் உள்ளன. தமிழ்நாட்டிலேயே அதிக சிவலிங்கங்களை கொண்ட கோவில் இதுதான்.
* கும்பகோணம் அருகே உள்ள உடையாளூரில் உள்ள சிவன் கோவிலில் ஒரே இடத்தில் 18 வகையான சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. மேலும் உடையாளூரில் ஒட்டத்தோப்பு என்ற இடத்தில் பூமியில் புதைந்த நிலையில் ஒரு சிவலிங்கம் பாணம் மட்டும் உள்ளது. இதனை ராஜராஜ சோழனின் நினைவு சிவலிங்கம் என்று அந்த பகுதி பொதுமக்கள் வழிபாடு செய்து வருகிறார்கள்.