அபிஷேகம் முடிய ஆறு மணி நேரம்

 

siva lingam

சிவலிங்க வழிபாடு என்பதே பெருமையும், சிறப்பும் வாய்ந்தது தான். ஒரு சிவலிங்கம் இருந்தாலே அந்த இடத்தில் இறைவனின் ஆசி பூரணமாக நிறைந்திருக்கும். அதிலும் நூற்றுக்கணக்கான லிங்கங்கள் ஒரே இடத்தில் அமையப் பெற்றிருந்தால் அந்த இடத்தின் சிறப்பு எப்படிப்பட்டதாக இருக்கும் என்று எண்ணும்போது உள்ளம் பூரிக்காமல் இருக்காது.
* தஞ்சாவூர் பெரிய கோவில் எனும் பெருவுடையார் கோவிலின் பிரகாரத்தில் 252 சிவலிங்கங்கள் உள்ளன. மேலும் நவக்கிரகங்களாக 9 லிங்கங்கள் இருக்கின்றன. இங்கு வரும் பக்தர்கள் அனைத்து சிவலிங்கங்களையும் கண்டு வணங்க வேண்டும்.
* தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பர்வதவர்த்தனி சமேத ராமலிங்க சுவாமி கோவிலில், 108 சிவலிங்கங்கள் ஒரே இடத்தில் அமையப்பெற்றுள்ளன. இங்குள்ள ஒவ்வொரு சிவலிங்கத்திற்கும் 9 குடம் நீர் ஊற்றி அபிஷேகம் செய்யும் முறை இருந்து வருகிறது. இதற்கு குறைந்தது 6 மணி நேரம் வரை பிடிக்கும்.
* தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே வீரசிங்கம் என்ற ஊரில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. மேலும் பழமையான வைத்தியநாதர் – வாலாம்பிகை கோவிலும் இருக்கிறது. அருட் தன்மையில் சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலுக்கு இணையானது. மக்களின் நோய், நொடிகளை தீர்த்து வைக்கும் தலமாக இது விளங்குகிறது. இந்த கோவிலில் மேல்புறம் உள்ள பிரகாரத்தில் 276 சிவலிங்கங்கள் உள்ளன. தமிழ்நாட்டிலேயே அதிக சிவலிங்கங்களை கொண்ட கோவில் இதுதான்.
* கும்பகோணம் அருகே உள்ள உடையாளூரில் உள்ள சிவன் கோவிலில் ஒரே இடத்தில் 18 வகையான சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. மேலும் உடையாளூரில் ஒட்டத்தோப்பு என்ற இடத்தில் பூமியில் புதைந்த நிலையில் ஒரு சிவலிங்கம் பாணம் மட்டும் உள்ளது. இதனை ராஜராஜ சோழனின் நினைவு சிவலிங்கம் என்று அந்த பகுதி பொதுமக்கள் வழிபாடு செய்து வருகிறார்கள்.

%d bloggers like this: