Daily Archives: செப்ரெம்பர் 19th, 2012

இப்படித் தொடங்குங்கள்…!

படுக்கை ரெடி, துணையும் ரெடி, மூடும் ஓ.கே… எல்லாம் ஆயத்தமான நிலையில் இருந்தாலும், சிலருக்கு எப்படித் தொடங்குவது, எங்கிருந்து தொடங்குவது, எப்படித் தொடருவது என்பதில் குழப்பம் வரும். அப்படிப்பட்ட குழப்பத்தை ரொம்ப ஈசியாக சமாளிக்கலாம்.. எப்படின்னு கேட்கறீங்களா.. தொடர்ந்து படியுங்கள்.

அருமையான செக்ஸ் இன்று நமக்குத் தேவை என்று நீங்கள் முடிவு செய்து விட்டால் முதலில் அமைதியாக வேலைகளைத் தொடங்க வேண்டும். ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கலையா என்ற பழமொழி செக்ஸுக்கும் பொருந்தும். எவன் ஒருவன் நிதானமாக செயல்படுகிறானோ அவனுக்கே அட்டகாசமான செக்ஸ் அமையும் என்கிறார்கள் அனுபவஸ்தர்கள்.

தொடுதல்தான் செக்ஸ் உணர்வுகளை தீ போல கொளுந்து விட்டு எரியச் செய்ய நல்லதொரு ஊடகமாகும். எனவே இருவரது உடல்களிலும் உங்களது தொடுதல்கள் எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு உணர்வுகளும் பற்றிக் கொண்டு எரியும், தொட்டுத் தொடருவதில் ஒரு பெரும் சுவாரஸ்யம் உருவாகும்.

தொடுதலை இரண்டு வழிகளில் செய்யலாம். உதடுகள் மூலமாகவும் செய்யலாம், விரல்கள் மூலமாகவும் செய்யலாம். இதில் உங்களது துணைக்கு எது ஓ.கே. என்பதை தெரிந்து கொண்டு, வெட்கப்படாமல் வாய் விட்டுக் கேளுங்கள், நீங்களும் உங்களுக்கு எது சவுகரியம் என்று சொல்லுங்கள், தப்பில்லை.

சிலருக்கு உதடுகள் மூலம் உடல் எங்கும் கோலம் போடுவது பிடிக்கும். துணைக்கும் கூட அது பிடித்திருந்தால் உதடுகளிலேயே ஆரம்பியுங்கள். சிலருக்கு தலையிலிருந்து கீழே போவது பிடிக்கும், சிலருக்கு காலிலிருந்து தொடங்குவது பிடித்திருக்கும்.

நாம் காலிலிருந்து தொடங்குவோம். முதலில் துணையின் கால் விரல்களை மென்மையாகப் பிடித்து சொடுக்கு எடுங்கள். சொடுக்கெடுக்கும்போது வலிக்கக் கூடாது, மென்மையாக, சுகமாக இருக்க வேண்டும். சொடுக்கு எடுக்கும்போதே பலருக்கு சொக்க ஆரம்பித்து விடும். அப்படி ஒரு சுகத்தை உங்களது கை விரல்கள் துணையின் கால் விரல்களுக்குப் பாய்ச்ச வேண்டும்.

பிறகு உள்ளங்காலை மெதுவாக வருடிக் கொடுங்கள். கூடவே செல்ல மொழிகளையும் பேசுங்கள். பாதம் ரொம்ப வலிக்குதாடா செல்லம், இப்ப நல்லாருக்கா, சுகமா இருக்கா என்று கொஞ்சியபடியே தொடருங்கள்.

பாதம் முடிந்து விட்டதா.. அப்படியே மெதுவாக மேலே வாருங்கள். இப்போது காலுக்கு வந்து விட்டோம். கால் பகுதியைப் போல ஒரு சுவாரஸ்யமான ஏரியா எதுவுமே கிடையாது. பார்க்க சாதாரணமாக இருக்கும். ஆனால் ஏகப்பட்ட முருங்கைக்காய் சமாச்சாரம் காலில்தான் உள்ளது.

குறிப்பாக காலின் பின்புறம் ஏகப்பட்ட உணர்ச்சி நரம்புகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அதாவது கெண்டைக்காலில். இந்தப் பகுதியில் உங்களது உதடுகளால் மெதுவாக முத்தமிட்டு அப்படியே தொடருங்கள். உணர்ச்சிகளின் உந்துதலால் உங்களது துணை நெளிவதைப் பார்க்கலாம்.

காலில் தொடங்கி அப்படியே தொடைப் பகுதிக்கு வாருங்கள். இந்த இடமும் உணர்ச்சிகரமான ஒரு பகுதிதான். தொடையில் உங்களது உதடுகள் விளையாடும் விதத்தைப் பொறுத்து துணையின் கொதிப்பு கூடும். தொடைகளில் பற்றிக் கொண்ட தீ அணைவதற்கு முன்பு அப்படியே இரு கால்களின் மையப்பகுதிக்கு அதாவது முக்கியப் பகுதிக்குச் செல்லுங்கள்.

இந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. அதை நீங்களாகவே செய்ய முடியும். அந்த இடத்தில் நீங்கள் என்ன செய்தாலும் அது லாபமாகவே முடியும். விரல்களையும் கூட முடிந்தவரை பயன்படுத்தலாம், பாதுகாப்பாக இருக்கட்டும் எது செய்தாலும்.

பின்னர் வயிற்றுக்கு வாருங்கள். தொப்புளில் முத்தமிடுங்கள். வயிற்றுப் பகுதி முழுவதும் உங்கள் உதடுகள் மற்றும் நாவால் வருடுங்கள், முத்தமிடுங்கள், விரல்களால் கோலம் போடுங்கள்.

பிறகு இடுப்புப் பகுதி. இங்கு முத்தமிடும்போது உங்களது துணை மின்னல் தாக்கியதைப் போல நெளிவதைப் பார்க்கலாம். முத்தமிடுவதன் மூலம் இடுப்பின் வழியாக உணர்ச்சிகளுக்கு மொத்தமாக நீங்கள் அறைகூவல் விடுக்கலாம்.

பிறகு மார்பு. பெண்களின் மார்புப் பகுதிகளும் உணர்ச்சிகளின் கொந்தளிப்புக் கூடம்தான். இந்த உறுப்புகளில் உங்களது விளையாட்டு எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து நீங்கள் காமத்தில் வெல்லலாம்.

பிறகு முகத்திற்குப் போங்கள். உதடுகளில் உதடுகளைப் பொருத்தி இதழ் அமுதம் பருகுங்கள். கன்னத்தில் முத்தமிடுங்கள். காதுகளில் மென்மையாக முத்தமிடுங்கள், நாவால் வருடுங்கள். விரல்களால் தலைமுடி கோதுங்கள், கண்களில் முத்தமிடுங்கள். தலையில் முத்தமிடுங்கள்.

இப்படி ஒவ்வொன்றாக செய்து வரும்போதே உங்களது துணை முழுமையான உறவுக்குத் தயாராகி விடுவார். எல்லாம் சரியான நிலைக்கு வந்து விட்டது என்பதை உணரும்போது உறவுக்குள் புகுங்கள்…

விநாயகர் தகவல்கள்


ஜ்யேஷ்டராஜன்!

விநாயகருக்கு ஜ்யேஷ்டராஜன் எனும் பெயரும் உண்டு. முதலில் உதித்தவர் என்பதே அதன் பொருள்.

விநாயகர் தத்துவம்!

யானை முகம் ப்ரணவ சொரூபம், மூன்று கண்கள் சோம, சூர்ய, சக்தியையும்; ஐந்து கரங்கள், பஞ்ச கிருத்தியங்களையும்; பெரிய வயிறு, கண்டங்கள் தன்னுள் அடங்கியிருப்பதையும், உணர்த்துவதுடன், மனித உருவில் ஜீவாத்மாவையும், யானை உருவில் பிரம்ம சொரூபத்தையும் கொண்டு இரண்டும் இணைந்த வடிவமாக உள்ளார் விநாயகர்.

விநாயகரும், கூடாத நட்சத்திரமும்!

வாரத்தில் ஒவ்வொரு கிழமைக்கும், ஒவ்வொரு கூடாத நட்சத்திரம் உண்டு. அந்தக் கிழமையும், அந்த நட்சத்திரமும் சேர்ந்து விடும் நாட்கள், கூடாத நாட்கள் எனப்படும். அந்தக் கூடாத நாட்களில், நடந்த புராண நிகழ்ச்சிகளில் ஒன்று, விநாயகருடன் தொடர்புடையது. வியாழக்கிழமை கேட்டை நட்சத்திரத்தில் திரிபுரசம்ஹாரத்திற்கு சிவபெருமான் செல்லும்போது, விநாயகரால் தேரின் அச்சு ஒடிக்கப்பட்டது. வியாழனில் கேட்டை நட்சத்திரமாயின், சுப காரியங்களை விலக்க வேண்டும்.

அம்மாவே தெய்வம் உலகிலே!-(செப்., 19 விநாயகர் சதுர்த்தி)

ஆவணி வளர்பிறை சதுர்த்தி திதியையே விநாயகர் சதுர்த்தி என்கிறோம். வியாசர் எழுதிய, 18 புராணங்களில் ஒன்று, பிரமாண்ட புராணம். இதில், லலிதோபாக்யானம் என்ற பகுதி இருக்கிறது. அதில், விநாயகரின் பிறப்பு பற்றி வித்தியாசமாகக் கூறப்பட்டுள்ளது. அன்னை பராசக்தி, லலிதாம்பிகை என்ற பெயரில், தேவர்களுக்கு உதவி செய்ய வந்தாள். பண்டாசுரன் என்பவன் தேவர்களைக் கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிக்க வேண்டு மென, தேவர்கள் அம்பாளிடம் முறையிட்டனர்.
அம்பாளும், அவர்கள் மீது கருணை கூர்ந்து, பண்டாசுரனு டன் போர் தொடுக்க கிளம்பினாள். அவளுடன் தேவப்பெண்கள் மட்டுமே அடங்கிய படை ஒன்றும் கிளம்பியது. அவர்கள் அக்னி கோட்டை அமைத்து பாதுகாப் பாக தங்கியிருந்தனர். பண்டா சுரனுக்கு, விசுக்ரன் என்ற படைத்தளபதி இருந்தான். அவன் மந்திர தந்திரம் அறிந்தவன். அம்பாளின் படையை அடக்குவது எப்படி என்று யோசித்தான். பலத்தால், அவர்களை அடக்க முடியா தென்பதை அவன் அறிவான். எனவே, மந்திரத்தை பயன் படுத்தி, ஒரு யந்திரம் செய்தான். அதற்கு, "விக்ன யந்திரம்’ என்று பெயர். விக்னம் என்றால் தடை.
அந்த யந்திரத்தின் தன்மை என்ன தெரியுமா?
யாருக்கு சாதகமாகப் போரிடு கிறார்களோ, அவர்களுக்கு எதி ராகவே மனநிலையை திருப்பி விட்டு விடும். அந்த யந்திரத்தை, அவன் அக்னி கோட்டைக்குள் வீசி விட்டான். அது உள்ளே வந்து விழுந்ததோ இல்லையோ, சக்தியின் படைகளின் மனமும் மாறிவிட்டது.
"இந்த அம்பாள் என்ன பெரிய ஆளா! இவள் சக்தி வாய்ந்தவளாக இருந்தால், சிவனுடைய மனைவி என்ற அந்தஸ்து பெற்றவளாக இருந்தால், தனியாக நின்றே பண்டாசுரனை ஜெயித்திருக்கலாமே! நம்மை இவள் அழைத்து வந்திருக்கிறாள் என்றால், அவளை விட, நம் வீரத்தை அதிகம் நம்புகிறாள் என்று தானே பொருள்! இப்படிப்பட்டவளுக்காக, நாம் ஏன் வீணாக அசுரர்களைப் பகைத்து உயிரிழக்க வேண்டும்! இந்தப் போரில் நாம் பங்கேற்கக்கூடாது…’ என்று முடிவெடுத்தனர்.
ஆனால், இந்த லீலைகள் எல்லாவற்றையுமே அம்பாளே செய்கிறாள் என்பது படைகளுக்கு தெரியாது. இந்த விக்னத்தைக் களைய, சிவசக்தி அம்சத்துடன் ஒருவன் வந்தாக வேண்டும்! அவனை உலகமே முழுமுதற்கடவுளாக வணங்க வேண்டும் என்பதல்லவா அவளது நோக்கம்.
எனவே, அவள் அக்னி கோட்டைக்கு சிவனை வரவழைத் தாள். அவரை நோக்கி சிரித்தாள். அந்த சிரிப்பின் அழகில் சொக்கிப்போன சிவனும் சிரித்தார். அவர்களது சிரிப்பிலேயே அவதரித்தார் வெள்ளைக் கொம்பனான விநாயகப் பெருமான்.
தங்கள் அன்பு மகனை உச்சிமோந்த பெற்றோர், "விநாயகா… நீ அக்கினி கோட்டைக்குள் கிடக்கும் யந்திரத்தை கண்டுபிடித்து, அதை அழித்து விடு’ என்றனர்.
விநாயகரும் அந்த யந்திரத்தை தன் தந்தத்தால் குத்தி சின்னா பின்னமாக்கினார். யந்திரம் அழிந்ததுமே, அம்பாளுடன் சென்றிருந்த படைகளின் மனம் மாறியது. "ஆகா… நமக்குள் ஏ@தா மாற்றம் ஏற்பட்டதே! அது எப்படி? அம்பாளுக்கு எதிராக நடந்து விட்டோமே…’ என வருந்தினர். அம்பாளின் திருப் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்டனர்.
அம்பாள் அவர்களைத் தேற்றி, "இது எல்லாமே என்னால் நடந்தது. நாம் செய்யப் போகும் இந்த தர்மயுத்தம் மட்டுமல்ல, இவ்வுலகில் எந்தச் செயலைத் துவங்கினா<லும் அது தடையின்றி வெற்றிகரமாக முடிய, என் மகன் விக்னேஸ் வரனை வணங்கிய பிறகே துவங்க வேண்டும் என்பதற்காகவே, இந்த நாடகத்தை நிகழ்த்தினேன்…’ என்றாள். பின், படையினர் தீரமாகப் போரிட்டு, பண்டாசுரனை அழித்தனர்.
அம்மாவின் கட்டளையை நிறைவேற்ற பிறந்த பிள்ளை விக்னேஸ்வரர். விக்னம் என்றால் தடை. ஈஸ்வரர் என்றால் கடவுள். தடைகளை நீக்குபவர் என்பதால் விநாயகருக்கு, "விக்னேஸ்வரர்’ என்ற பெயர் வந்தது. இளைஞர்களே… உங்கள் அன்னையை தெய்வமாக மதித்து, அவளது விருப்பத்தை நிறைவேற்றுங்கள். விநாயகர் சதுர்த்தி நன்னாளில் உறுதி எடுப்பீர்களா!

அப்பப்பா… அத்தனையும் பாம்பப்பா..!

 

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். இன்னும் பயந்தவர்களுக்கோ பாம்பை பார்த்ததுமே தொடை நடுங்கும். ஓட்டம் பிடிக்கவும் தோன்றாமல் பாம்பை பார்த்த மாத்திரத்தில் செயலற்றுப்போகிறவர்களும் உண்டு.

உண்மையில் பாம்புகள் தங்கள் உயிருக்கு ஆபத்து என்று வரும்போதுதான் அவை தாக்க முற்படுகின்றன.

பயத்தினூடே சில பாம்பு வகைகள் பற்றி தெரிந்து கொள்ளலாமா?

பிளாக் மம்பா

black mamba-1 ஆப்பிரிக்க காடுகளில் காணப்படும் மிகப் பெரிய பாம்பான இது கடித்தால் நேரடியாக நரம்பு மண்டலத்தை பாதிக்கும். அடுத்த 20 நிமிடங்களில் கடி பட்டவரால் பேச முடியாது. ஒரு மணி நேரத்தில் கோமா நிலை. அடுத்த 6 மணி நேரத்தில் மரணம் என்று கதை முடிந்து விடும்.

மற்ற பாம்புகள் கடித்தால் ரத்தம் வழியாக மெதுவாய் தான் விஷம் ஏறும். அதற்குள் கடிபட்டவர் மருத்துவம் செய்து கொள்ளலாம். இந்த பாம்பிடம் கடிபட்டால் அதற்கு சாத்தியமில்லை. என்றாலும் இப்போது ஆன்டிவெனின் என்ற மருந்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை உடனடியாக உடலில் செலுத்தினால் 75 சதவீதம் பிழைக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

***

எஜிப்தியன் கோப்ரா

ஆப்பிரிக்காவில் காணப்படும்இது பாலைவனங்களில் பார்க்கமுடியும்.எலிகள் மற்றும்கோழிகளைத்தேடி சமயங்களில்மனிதர்களின்வீட்டுக்கே வந்து விடும்.கோப்ரா வகையில் இது மிககொடிய விஷம் கொண்ட பாம்பாகும். 5 அடி முதல் 8 அடி வரை இது வளரும்.

இது கடித்தால் விஷம் நரம்பு மண்டலத்தை தாக்கி, இதயத்திற்கும் நுரையீரலுக்கும் செல்லும் நரம்புகளை செயலிழக்கச் செய்து விடும். அதனால் மரணம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

***

குரோட்டலஸ் அடமென்டஸ்

இது வைபர் வகையை சார்ந்தது. இது முயல்கள் தங்கும் குழிகளை தேர்ந்தெடுத்து வாழும். இது கடித்தால் ரத்தம் வராதே தவிர, கடிபட்டவர் உடம்பில் உள்ள பைப்ரோஜென்னை உறைய வைத்து விடும்.

***

ருசெல் வைப்பர்

russel viper-1 ஆசியா கண்டத்தில் காணப்படும் இந்தப் பாம்பு, இந்தியாவில் உள்ள முதல் நான்கு விஷத்தன்மை கொண்ட பாம்புகளில் ஒன்று. இதன் நீளம் சுமார் 51/2 அடி. இந்த பாம்பு கடித்தால் முதலில் வலி உண்டாகும். பின்பு கடிபட்ட இடம் வீங்கும். ரத்தம் வரும். ரத்த அழுத்தம் குறையும்.

இதயத்துடிப்பு குறையும். சிலருக்கு வாந்தி வரும். முகம் வீங்கும்.

இந்தக்கடியின் வலி இரண்டு வாரங்கள் முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும். அதன்பிறகு இதயத்துடிப்பு நிற்கும்.

***

மொயாம்பிக் ஸ்பிட்டிங் கோப்ரா

mozambique spitting cobra.-1 இதன் தாயகமும் ஆப்பிரிக்கா தான்.ஆப்பிரிக்காவில் காணப்படும் விஷப்பாம்பு வகைகளில் இதற்கு இரண்டாவது இடம். இது விஷத்தை கக்கி எதிரிகளை செயலிழக்கவைத்துவிடும். விஷம் கண்ணில் பட்டால் பார்வை போய்விடும். தற்காப்புக்காகவே இதுவிஷத்தை கக்குகிறது. இதன்விஷம் 51/2 முதல் 81/2 அடிதூரம்வரை மிகத்துல்லியமாக சென்று எதிரியை பதம் பார்த்து விடும். இதனால் தான் சிங்கம், புலி போன்ற பெரிய விலங்குகள் கூட இதன் எதிரில் நின்று ரிஸ்க் எடுப்பதில்லை.

***

ஐலண்ட் தைபான்

inland taipan-1 ஆஸ்திரேலியாவில் காணப்படும் இந்த வகை பாம்புகள் தரையில் வாழும் பாம்புகளிலேயே கொடிய விஷம் கொண்டவை. பெரும்பாலும் இது எதிரியை தாக்க முற்படாமல் தப்பிச் செல்லவே முயலும். எலி வளைகளில் வாழும் இதன் வேட்டை நேரம் காலையில் தான். ஒரு தரம் கடிக்கும் போது இதன் விஷப்பல்லில் இருந்து 110 மில்லி கிராம் அளவு விஷம் வெளியேறும். நாகப்பாம்பை விட இதன் விஷத்தன்மை 750 மடங்கு அதிகம்.

***

ஆஸ்திரேலியன் பிரவுன் ஸ்நேக்

இதுவும் ஆஸ்திரேலியாவில் வாழும் பாம்பு வகை தான். தரையில் வாழும் பாம்புகளில் கொடிய விஷம் கொண்ட பாம்புகளில் இதற்கு இரண்டாவது இடம். இது தன்னைவிட மிகவும் பலம்கொண்ட விலங்குகளாகப்பார்த்து வேட்டையாடும்.இதில்வேடிக்கை என்னவென்றால், இந்தப் பாம்பின் எதிரில் நீங்கள் ஆடாமல் அசையாமல் நின்றால் உங்களை ஒன்றும் செய்யாது. நீங்கள் அசைந்தால் மட்டுமே உங்களைத் தாக்கும். இதன் விஷம் முதலில் நரம்பு மண்டலத்தை தாக்குவதோடு, ரத்தத்தையுைம் உறைய வைத்து விடும்.

மற்ற பாம்புகள் எதிரிகளை எதிர்கொள்ளும்போது தோற்பது போல் தெரிந்தால் உயிர் பிழைக்கும் பொருட்டு ஓடித் தப்பிக் கொள்ளும். இந்த பாம்போ உயிர் உள்ளவரை போராடும்.

***

மலைப்பாம்பு (பைத்தான்)

MalaiPambu இந்த வகைப் பாம்புகள் விஷம் இல்லாதவை. தண்ணீர் கரையோரங்களில் காணப்படும் இவை, உலகிலேயே 6-வது பெரிய பாம்பு ஆகும். 19 அடி வரை வளரும். இவற்றின் விருப்ப உணவு பறவைகள்.பன்றிகளையும் ஆடுகளையும் சாமர்த்தியமாக வீழ்த்தி உணவாக்கிக் கொள்ளும்.

***

 

 

டைகர் ஸ்நேக்

ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதியில் இவ்வகைப் பாம்புகள் காணப்படும். இதன் உடலைப் பார்ப்பதற்கு புலி போல இருப்பதால் இந்தப் பெயர். இந்தப் பாம்பு கடித்தால் கால் மற்றும் கழுத்தில் வலி ஏற்படும். மிகவும் வியர்க்கும். மூச்சுத்திணறல் ஏற்படும். சமயத்தில் பக்கவாதம் கூட ஏற்பட்டு விடக்கூடும்.

***

காமன் டெத் ஆடட்

common death adder1 இதன் தாயகம் ஆஸ்திரேலியா. இது சிறிதளவே பயங்கரமானது. ஒருபோதும் இது உணவைத் தேடிப் போகாது. தன்னைத் தேடி வரும் இரைக்காக பல நாட்கள் கூட பட்டினி கிடக்கும். இது இரை தேடும் விதம் புத்திசாலித் தனமானது. இலைகளுக்குள் மறைந்து கொண்டு இலைகளை அசைக்கும். அசைவிற்கான காரணம் தெரிந்து கொள்ள விரும்பி ஆர்வத்துடன் வரும் விலங்கை உடனடியாகத் தாக்கி குற்றுயிரும் குலை உயிருமாக்கி விடும். பின்னர் அந்த விலங்கு சாகும்வரை காத்திருந்து அதனை உணவாக்கிக் கொள்ளும். இது மறைந்திருந்து இரையை தாக்கி கொல்வதால், காட்டுக்குள் தொழில் ரீதியாக வந்து போகும் மனிதர்கள் கூட இந்த பாம்பு பற்றிய உயிர் பயத்திலேயே நடமாட வேண்டியிருக்கிறது.

பாம்பு பற்றிய பயம் கொஞ்சமும் இன்றி அவற்றை காட்டுக்குள் சென்று பிடிக்கும் வன ஆய்வாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப் பார்த்ததும் எத்தனை கொடிய விஷப்பாம்பு என்றாலும் நடுங்கித்தான் போகிறது..! இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது இது தானோ…!

***

அடிக்கடி வரும் கோபம் உயிரை பறிக்கும் காலன்…

டிக்கடி கோபப்படுவது இருதயம் செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி மரணத்தை நிகழ வைக்கிறது. சிறப்பாக வாழ நினைப்போர் சினத்தை அடக்க வேண்டும். கோவை கே.ஜி மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் கூறியதாவது:
மனித உடலில் மூளையைவிட இருதயம் முக்கியமானது. நிறைய பேருக்கு இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுகிறது. இருதயத்தில் ஓட்டையுடன் பல குழந்தைகள் பிறக்கின்றன. இதனால், குழந்தையின் வளர்ச்சி குறைவாக உள்ளது. இக்குழந்தைகளை கவனிக்காமல் விட்டுவிட்டால் ஒரு கட்டத்தில் நீல நிற குழந்தைகளாக மாறிவிடும். அப்படி மாறிய பிறகு இருதய பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்கும்போது கடும் சிக்கல் ஏற்படும். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் இருதய நோயை முற்றிலும் குணப்படுத்த முடியும்.
இன்றைய தலைமுறையினர் பலருக்கு அடிக்கடி கோபம் கொப்பளிக்கிறது. கோபத்தை தற்காலிக பைத்தியம் என்றே சொல்லலாம். அடிக்கடி கோபப்படுவதால் ரத்த அழுத்தம் 160-80 என எகிறுகிறது. நாம் எண்ணியது நடக்காவிட்டால், சொல்வதை யாராவது கேட்காவிட்டால் நமக்கு கோபம் வருகிறது. கோபம் தற்காலிக உணர்வுதான். ஆனால், அந்த நேரத்தில் செயல்பாடுகளை நாம் உணர்வதில்லை. அதனால்தான் கோபத்தை தற்காலிக பைத்தியம் என்கிறோம். தற்போது இருதய நோய் பள்ளி மாணவர்களையும் தாக்குகிறது.
கோவையில் ஒரு பள்ளியில் 1,500 மாணவ, மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில், 8 பேருக்கு இருதய நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பள்ளி பருவத்திலேயே இருதய நோயை கண்டறிய �கார்டியோ ரிஸ்க் யூத்� என்னும் புதிய திட்டம் கே.ஜி மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருதயம் நன்றாக இருந்தால்தான் ஒரு மனிதன் நன்றாக இருக்கமுடியும். மாணவர்கள் மட்டுமின்றி, 40 வயதை கடந்த பெரியவர்கள் கண்டிப்பாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கொழுப்பு சத்துள்ள உணவு வகைகளை தவிர்க்கவேண்டும்.
எண்ணெயில் பொறித்து எடுத்த மிக்சர், முறுக்கு, போண்டா, வடை, பஜ்ஜி, சிப்ஸ் போன்ற உணவுகளை அடியோடு தவிர்க்கவேண்டும். அத்துடன், புகை பிடிப்பது, பாஸ்ட் புட் சாப்பிடுவது, இனிப்பு ஆகியவற்றையும் தவிர்க்கவேண்டும். உணவு பழக்கவழக்கத்தை மாற்றி, தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும். இவற்றை கடைபிடித்தால் மாரடைப்பு நோயில் இருந்து தப்பிக்கலாம். விலைமதிப்பற்ற மனித உயிரை காப்பாற்ற முடியும்.
இருதய நோய்க்கு பல்வேறு அதிநவீன சிகிச்சை கே.ஜி மருத்துவமனையில் அளிக்கப்படுகிறது.
கோபப்படும் நேரத்தில் செயல்பாடுகளை நாம் உணர்வதில்லை. அதனால்தான் கோபத்தை தற்காலிக பைத்தியம் என்கிறோம். கோபம் வரும்போது அட்ரினலின் ஹார்மோன் சுரக்கிறது. அதுவே, உடலின் ரத்தக்குழாயை சுருக்கி விடுகிறது.
உடலில் ரத்தம் செல்வது குறைவதால், முகத்தில் அதிக ரத்தம் தேங்கி, முகம் சிவப்பாகிறது. அதிக கோபம் வரும்போது, அதிகமான அளவு ரத்தத்தை இருதயம் பம்ப் செய்ய வேண்டியிருக்கிறது. கோபப்படுவதால், மனம் மட்டுமின்றி உடலும் கெட்டுப்போகிறது. கோபத்தால் பணம், பதவி, மரியாதை எல்லாமே போய்விடுகிறது. உச்சகட்டமாக உயிரும் போய்விடுகிறது. எது கிடைக்கவில்லை என கோபப்படுகிறமோ, அதனால் ஏற்படும் இழப்பு, கிடைக்கிறதைவிட அதிகமாக உள்ளது.

 

நன்றி-தினகரன்

இளமையில் `சறுக்கும்’ இந்தியா!

 

இளமை…! வாழ்வின் வசந்த காலம், உடம்பில் சூடாக ரத்தம் ஓடும் துடிப்பான பருவம் என்றெல்லாம் பேசிக் கொண்டே போவோம். ஆனால் ஒருவரை `இளைஞர்’ என்று எந்த வயது வரை சொல்லலாம் என்று கேட்டால் ஆளுக்கு ஆள் கருத்து மாறுபடும்.

டீனேஜ் பசங்க, `20 வயது தாண்டிட்டாலே `யூத்’துங்கிறது காத்தோட போச்சு பாஸ்’ என்பார்கள். இன்னும் சிலர், `இருபத்தஞ்சு வயசு வரை சொல்லலாம்’ என்பார்கள். 30 வயதைத் தாண்டிய முதுஇளைஞர்கள், `ஒரு முப்பத்தஞ்சு, முப்பத்தாறு வரை…?’ என்று இழுப்பார்கள்.

நாம் இதுபற்றிச் சிந்தித்திருக்கிறோமோ இல்லையோ, அரசாங்கம் இதுகுறித்து யோசித்திருக்கிறது.

இப்போதைக்கு `அதிகாரப்பூர்வமாக’ இளமைப் பருவம் என்பது `13 வயது முதல் 35′ வயது வரை. அதை `16 முதல் 30′ என்று மாற்ற நினைக்கிறது மத்திய அரசு. இதனால், நானும் இளைஞன்தான் என்று மனதுக்குள் மார்தட்டிக் கொண்டிருந்த இளைஞர்கள் பலர் இனி `வெளியே’ தள்ளப்படுவார்கள்.

Sun14

புதிய இளமைக் கொள்கைக்கான வரைவு மசோதாவை வெளியிட்டிருக்கிறார், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான்.

புதிய மசோதாவின்படி இளமையை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, திட்டங்களை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளது அரசு. அதாவது, 16 வயது முதல் 20 வயது வரை உள்ளவர்களை இலக்காக வைத்து கல்வித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். 20- 25 வயதுக்காரர்களுக்கு வேலைத் திறனை வளர்க்கும் திட்டங்கள், 25-க்கு மேல் 30 வரையுள்ள `சீனியர்’ இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பு, தொழில்முனைவுத் திட்டங்கள் உருவாக்கப்படும்.

இந்தியா தனது இளமையான காலகட்டத்துக்குள் பிரவேசிக்கப் போகும் நிலையில், மத்திய அரசின் `இளமை வரையறை’ ஒரு முக்கியமான விஷயமாகக் கருதப்படுகிறது. ஆம், 2020-ம் ஆண்டுவாக்கில் இந்தியர்களின் சராசரி வயதாக 29 இருக்கும்.

முந்தைய இளமை கணக்குப்படி நாட்டில் சரிபாதிப் பேர் `இளைஞர்கள்’. ஆனால் தற்போது அரசாங்கம் 5 ஆண்டுகளை தள்ளுபடியாக அறிவித்துவிட்டால், இந்த 50 சதவீதம் பேரில் 10 சதவீதம் பேர் இளைஞர்கள் என்ற தகுதியை இழந்துவிடுவார்கள்.

சரி, இளமையை வரையறுக்க அரசு முனைப்புக் காட்டுவது ஏன்? அப்போதுதான் பல்வேறு அமைச்சகங்களும் இளைஞர்களுக்கான திட்டங்கள், கொள்கைகளை ஒரே சீராக உருவாக்க முடியும் என்கிறார்கள்.

இளமைக்கான முந்தைய வரையறை கொஞ்சம் பொருத்தமற்றதாக இருப்பதாகக் கூறுகிறார், விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான்.

“உதாரணமாக ஒரு பெண் 18 வயதில் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றால், அக்குழந்தைக்கு 13 வயதாகும்போது அப்பெண்ணுக்கு 31 வயதாகும். இருவருமே அதிகாரப்பூர்வமாக இளைஞர்கள் வட்டாரத்தில் வந்துவிடுவார்கள்” என்கிறார்.

“சரியான இளமைப் பருவத்தினரை அரசுத் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பதுதான் நோக்கம். வயது விஷயத்தில் அமைச்சகங்களுக்குள் குழப்பம் வரக் கூடாதில்லையா?” என்கின்றனர் அதிகாரிகள்.

18 வயதை எட்டினால்தான் `மேஜர்’ என்று மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ஏற்கனவே தெளிவாக வரையறை செய்துள்ளது. இதற்கிடையில், மத்திய அரசின் புதிய இளமை வட்டத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.

பாலிவுட் நடிகை மினிஷா லம்பா, “இந்தியாவைப் பொறுத்தவரை 35 வயது வரை இளமையாகக் கருதப்படுகிறது. அதை 30 ஆகக் குறைக்க வேண்டியது என்ன அவசியம்? இன்று ஒருவர் மருத்துவ அல்லது பொறியியல் படிப்பை முடிக்க 25 வயதாகிறது. அவர்கள் `ஸ்பெஷலைஸ்’ செய்தாலோ, பி.எச்டி. பண்ணினாலோ மேலும் வயது கூடும். அப்போது அவர்களுக்கு இளைஞர்களுக்கான எந்த நலத் திட்டப் பயன்களும் கிடைக்காமல் போகுமே?” என்கிறார்.

மற்றொரு நடிகையான நவுஹீத் சைருசி, “பிளாஸ்டிக் சர்ஜரி முதல் அழகுச் சிகிச்சைகள் வரை இன்று ஒருவரை இளமையாகத் தோன்றச் செய்ய எண்ணற்ற விஷயங்கள் வந்துவிட்டன. இந்நிலையில், இளமைக்கு ஒரு வயது வரம்பு நிர்ணயிப்பதால் என்ன பிரயோஜனம்?” என்று கேட்கிறார்.

விளம்பரத் துறையைச் சேர்ந்த பிரகலாத் கக்கர் இன்னொரு சிக்கலான கேள்வியை முன்வைக்கிறார், “பெரும்பாலான அரசியல் கட்சிகளின் இளைஞர் பிரிவுத் தலைவர்கள் 40 வயதைத் தாண்டியவர்கள். இப்போது அவர்களை எல்லாம் நீக்கமுடியுமா?”-

என்கிறார்.அமெரிக்கா இளைஞர்கள் என்று 16 முதல் 34 வயதினரை குறிப்பிடுகிறது. சீனா, 15 முதல் 29 வயதினரை குறிப்பிடுகிறது. ஆஸ்திரேலியா 15 முதல் 24 வயதை இளமை என்கிறது. ஐக்கிய நாட்டு சபையும் ஆஸ்திரேலிய கணக்கைத்தான் பின்பற்றுகிறது. இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வரையறை எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். நாமும் இளைஞன்தான் என்றே எண்ணிக் கொள்வோம். மகள் வயது ஹீரோயினுடன் `டூயட்’ பாடும் `முதிய’ கதாநாயகர்கள் இருக்கும் தேசத்தில் எல்லோரும் அப்படி நினைத்துக்கொள்வதில் ஒன்றும் தப்பில்லை!

***

இந்திய `இளமை’

Sun13 * இந்தியாவில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். 47 சதவீதத்தினர் 20 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள்.

* 54 சதவீத இளவட்டத்தினர் படித்துக் கொண்டே பணம் சம்பாதிக்கின்றனர்.

* 15 முதல் 24 வயதுக்கு உட்பட்ட ஆண்களில் ஐந்தில் ஒருவர் திருமணமானவர். அதே வயதில் நாட்டின் சரிபாதிப் பெண்கள் திருமணமானவர்கள்.

* 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டோரில் ஆண்களில் 64 சதவீதத்தினரும், பெண்களில் 34 சதவீதம் பேரும் வேலை பார்க்கிறார்கள். நகர இளைஞர்களை விட கிராமப்புற இளைஞர்கள் அதிகமாக வேலைவாய்ப்புப் பெற்றிருக்கிறார்கள் என்பது ஓர் ஆச்சரியச் செய்தி.

* தேசிய கிராமப்புறப் பகுதி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், ஒரு கிராமப்புற இளைஞர் நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் 100 ரூபாய் சம்பாதிக்கிறார். இதனால், கிராமப்புறப் பகுதி செலவழிப்பு, கடந்த மூன்றாண்டுகளில் மும்மடங்காக உயர்ந்து 40 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.

பர்மா சட்னி

 

தினமும் தேங்காய் சட்னி, வெங்காய சட்னி தானா என்று அலுத்துக் கொள்பவர்களுக்காக இதோ பர்மா சட்னி. டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்றது. இதோ செய்முறை:

தேவையானவை:

பெரிய வெங்காயம் – 3
பச்சை மிளகாய் – 4
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தாளிக்கத் தேவையான அளவு
கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம்பழச்சாறு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ரீபைன்ட் எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் கடலைமாவை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், கடலை மாவை தண்ணீர் விட்டு நீர்க்கக் கரைத்து வதங்கிய வெங்காயத்துடன் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விடவும். சிறிது கெட்டியானதும் இறக்கி வைத்து எலுமிச்சம்பழ சாறு சேர்க்கவும்.

கடலை மாவில் தண்ணீர் குறைவாக ஊற்றி கரைத்து ஊற்றினால் சட்னி ரொம்பவே கெட்டியாக இருக்கும். நீர்க்க கரைத்தால் தான் கடலைமாவு வெந்ததும் சட்னி சரியான பதத்தில் இருக்கும். சிறிது கொத்தமல்லி தூவி பரிமாறலாம்.

சப்பாத்தி, பூரி போன்றவைகளுக்கு மட்டுமின்றி இட்லி தோசைக்குக் கூட தொட்டுக் கொள்வதற்கு ஏற்றது, இந்த பர்மா சட்னி.

கூகுள் டூடில் பார்க்க விருப்பமா?

கூகுள் தன் தேடல் தளத்தில், விடுமுறை நாட்களிலும், சிறப்பு நிகழ்வுகள் கொண்ட நாட்களிலும், தன் கூகுள் லோகோவினை அந்த நாளுக்கேற்ப உருவாக்கும். இதனை டூடில் (“Doodle”) என அழைக்கின்றனர். இது பார்ப்பதற்கு ரசிக்கும் வகையில் இருக்கும். பின்னர் அந்த நாளுக்குப் பின்னர், வழமையான லோகோ காட்டப்படும். "அடடா! மிக நன்றாக, வேடிக்கையாக இருந்ததே; காப்பி செய்திடாமல் போய்விட்டோமே’ என்று கவலைப்படுபவர்கள் பலர் இருக்கின்றனர்.
இவர்களின் கவலையைப் போக்கும் வகையில் கூகுள் ஓர் ஏற்பாடு செய்துள்ளது. கூகுள் தளம் செல்லுங்கள். சர்ச் கட்டத்தில் “Google Doodles” என டைப் செய்திடுங்கள். முதல் விடையாக www.google.com/doodles/ என்ற தளம் காட்டப்படும். இந்த தளம் சென்றால், கூகுள் டூடில்ஸ் அனைத்தும் சேர்த்து வைத்திருப்பதனைக் காணலாம். இடது பக்கம் ஆண்டு வாரியாகத் தேடிக் காணும் வசதியும், வலது பக்கம் நாடு வாரியாகக் காணும் வசதியும் தரப்பட்டிருக்கும். இதில் நமக்குத் தேவையானதைக் கிளிக் செய்து காணலாம். இதில் ஏதாவது ஒரு டூடிலில் கிளிக் செய்தால், அதனை ஏன்,எதற்காக, எப்படி உருவாக்கினார்கள் என்ற தகவல் கட்டுரையையும், டூடில் உருவாகும் பல்வேறு படிநிலைகளையும் காணலாம்.

சேரிடம் அறிந்து சேர்

 

சுத்தமான சோம்பேறிகள் எப்படி சம்பாதிப்பது என முடிவு கட்டித் தொடங்கிய இயக்கமே, நாத்திக இயக்கம்.
உலகத்தின் மற்றப் பகுதிகளிலே, நம்பி நாத்திகர்களானவர்கள் உண்டு.
தமிழ் நாட்டில் பெரும்பாலும் திருடர்களும், அயோக்கியர்களுமே நாத்திகர்களானார்கள்.
திருவிழாவில் வழி தவறிப்போன குழந்தை, தேர்ச்சக்கரத்தில் சிக்கிக் கொண்டது போல், நான் இதில் சிக்கிக் கொண்டேன்.
தவறான சேர்க்கையாலே, பிறப்பின் அர்த்தத்தை மாற்ற முயற்சித்தேன்.
நான் யார் என்று புரியாத காரணத்தாலே, தங்களைப் பொறுத்தவரை கெட்டிகாரர்களாக இருந்தவர்கள் வலையில் விழுந்தேன்.
என்ன செய்வது? பக்குவமற்ற நிலை.
சின்ன வயதில் என் தாத்தா என்னைத் தோளிலே தூக்கி வைத்துக் கொள்வார்.
நான் ஆகாயத்திலுள்ள நட்சத்திரங்களைக் காட்டி, `அவை என்ன தாத்தா?’ என்பேன்.
`நட்சத்திரங்கள்’ என்பார்.
`அப்படியென்றால் என்ன?’ என்று கேட்பேன்.
உடனே அவர் எனக்குப் புரிகின்ற பாஷையில் சொல்லத் தொடங்குவார்.
`அதாவது ஆகாயத்தில் தேவர்கள் இருக்கிறார்கள் அல்லவா, அவர்களெல்லாம் சுருட்டுப் பிடிக்கிறார்கள். அதுதான் இது!’ என்பார்.
நான் நம்பி விடுவேன்.
மழை பெய்யும்; `இது என்ன தாத்தா?’ என்பேன்.
`தேவர்களெல்லாம் குளிக்கிறார்கள்; அது தான் இது!’ என்பார்.
அதையும் நம்பி விடுவேன்.
இருபது வயதிலும் இப்படிப்பட்ட பக்குவத்தில் நான் இருந்தேன் என்பதை வெட்கமில்லாமல் ஒப்பு கொள்கிறேன்.
இல்லையென்றால் எவனோ ஒரு நாத்திகனோடு நட்பு ஏற்பட்டு, நான் நாத்திகனாகி இருப்பேனா?
ஒரு மாயா வாதம், போலித்தனம்-மனது அறிந்தே சொன்ன பொய், நாத்திகம் என்பது.
வாழ்க்கையில் அலுத்தவர்கள், சலித்தவர்கள், எவ்வளவோ காலம் கடவுளை வேண்டியும் பயனில்லையே என்று நினைத்தவர்கள்-இவர்களெல்லாம் சிக்கிக்கொண்ட வலையே நாத்திகம்.
சிக்கிக் கொண்ட ஈக்களைக் கடித்துத் தின்ன முயன்ற சிலந்திகளே, அதன் தலைவர்கள்.
அதற்கு அவர்கள் பூசிய சாயம், `பகுத்தறிவு’ என்பது.
சட்டையைக் கறுப்பாகப் போட்டுக் கொண்டு துக்கம் கொண்டாடிய அவர்கள், உள்ளத்தையும் `கறுப்பாகவே’ வைத்திருந்தார்கள்.
பெண்டாட்டியைக் கோவிலுக்கு அனுப்புவார்கள்; பிள்ளையை ஜாதகம் எழுதி வாங்கி வரச் சொல்வார்கள்; மேடையில், `எல்லாம் பொய்’ என்று பேசுவார்கள். நான் அதை நம்பினேன்.
அதுவரை கேளாத புதிய விஷயமாக இருந்ததால் அதைச் சொல்வதைப் பெருமை என்று நினைத்தேன். எதையும் மறுப்பது அறிவுக்கு அடையாளம் என்று முடிவு கட்டினேன்.

இவ்வளவு கூத்தும், இரண்டு மூன்று ஆண்டுகளே.
ஆயினும், இந்த அனுபவங் களையும், அந்தத் தலைவர்களையும் என்னால் மறக்க முடியாது.
பொய்யும் அயோக்கியத்தனமும் நிறைந்த ஒரு உலகத்தை, புனித உலகமாகச் சித்திரித்த அந்தக் கெட்டிக்காரர்களை, எப்படி நான் மறக்க முடியும்?
அவர்கள் கடவுளைப் பற்றிய கதைகளின் மீதும், புராண இதிகாசங்களின் மீதும் விளையாடினார்களே தவிர, அடிப்படைக் கடவுள் தத்துவத்திற்குச் சரியான விளக்கமும், மறுப்பும் கொடுக்க முடியவில்லை.
அதனால் தான், நான் விரைவிலேயே அதிலிருந்து மீண்டு விட்டேன்.
பிறப்புக்கு முந்தியதென்ன? இறப்புக்குப் பிந்தியதென்ன?
விஞ்ஞானிகளே திண்டாடும் இந்தக் கேள்விக்கு, இந்த அரைவேக்காடுகள் என்ன பதில் சொல்ல முடியும்?
`அம்மிக் குழவி சாமி’ என்றும், `அந்தக் கல்லை உடைத்து ரோடு போடுவோம்’ என்றும் ஊர்ச்சாப்பாட்டைச் சாப்பிட்டுக் கொண்டு திமிர் பிடித்துப் பேச முடிந்ததே தவிர, இன்னின்ன காரணங் களால் கடவுள் இல்லை என்று எவனுமே விளக்கம் சொன்னதில்லை.
அதிலே, சிக்கிக்கொண்ட நானும், அவர்கள் பாணியிலேயே, `அடியே, காஞ்சி காமாட்சி! மதுரை மீனாட்சி! காசி விசாலாட்சி! உங்களுக்கு ஏனடி மண்டபங்கள்?’ என்று பேசத் தொடங்கினேன்.
எந்த வெயிலிலும், வற்றிப் போகக்கூடிய அந்தக் காட்டு வெள்ளம் என்னையும், இழுத்துக் கொண்டு போயிற்று.
நாத்திக வாதம் ஒரு போலித்தனம் என்பதை என்னால் உணர முடியவில்லையே, அப்போது!
அவர்களை மட்டுமே குறை சொல்லி என்ன பயன்? அந்தப் பக்குவம் எனக்கில்லையே, அப்போது!
நான் யார் என்பதை முற்றிலும் அறியவில்லையே அப்போது!
மகத்தான காவியங்களைப் படைக்கக் கூடிய உள்ளறிவு எனக்கிருப்பதாகத் தோன்றவில்லையே, அப்போது!
கூட்டம் கூடுவார்கள்; ஆட்டம் போடுவார்கள்; வசூல் செய்வார்கள்; வாழ்க்கை நடத்துவார்கள்; நானோ கைச்செலவு செய்து கொண்டு, கத்திக் கொண்டிருப்பேன்.
காரைக்குடிக்குப் போகும் போதெல்லாம் சில செட்டியார்கள் கேட்பார்கள், `ஏண்டா தம்பி, எவ்வளவோ பெரிய திறமையை வைத்துக்கொண்டு இந்தக் கூட்டத்தில் போய்க் கிடக் கிறாயே’ என்று.
அப்போது எனக்குப் புரிந்ததில்லை.
பல்லாயிரம் ஆண்டு காலப் பண்பாடுகளைப் பற்றிய வரலாற்று அறிவு எனக்குக் கொஞ்சம் கூட இருந்ததில்லை என்பதை, வெட்கத்தோடு ஒப்புக்கொள்கிறேன்.
அந்த இரண்டு மூன்று ஆண்டுகள், நானும் கறுப்புச் சட்டை போட்டிருந்தேன்.
பார்ப்பதற்கே அருவறுப்பானதும், வெயில் காலத்துக்கு ஒத்து வராததுமான கறுப்புச் சட்டையை, நான் விருப்பத்தோடு தான்
போட்டேன்.சீதையைப் பற்றியும், திரவுபதியைப் பற்றியும் கேவலமாக எழுதினேன்; கம்பனைக் கேலி செய்தேன்.
சுய உணர்வில்லாத செம்மறி ஆடு, கசாப்புக் கடைக்குத் தானே போய்க் கழுத்தை நீட்டுவது போல, நீட்டினேன்.
நல்ல வேளை; கத்தி விழும் முன்பாகவே புத்தி வந்து வெளியேறினேன்.
நாத்திகன் சொல்வது என்ன?
திரும்பத் திரும்ப ஒன்றுதான்.
`சூரியன் இயற்கையாக வருகிறது; சந்திரன் இயற்கையாக வருகிறது; பிள்ளை தகப்பனாலே பிறக்கிறது; மரணம் இயற்கையாகவே நடக்கிறது; இதிலே கடவுள் என்றொருவன் இல்லவே இல்லை’ என்பதே அது.
அதிலே எனக்குப் புரியாத ஒன்று, சில தகப்பன்மார்கள் இருந்தும் அவர்களுக்குக் குழந்தை இல்லையே ஏன்?
அதுவும் இயற்கைதானா? இல்லை, அவன் ஆண் மகன் இல்லையா?
நான், யாரையும் குறிப்பிடவில்லை; பொதுவாகவே சொல்கிறேன்.
எல்லாமே இயற்கையாக நடக்கும் என்றால், செத்துப் போன பிறகு, தானே ஏன் அந்தச் சடலம் சுடுகாட்டுக்குப் போகக் கூடாது?
அப்போது மட்டும் நான்கு பேர் தேவைப்படுகிறதே, ஏன்?
இந்தச் சிந்தனை, என் கண்களைத் திறந்தது.
உள்ளே இழுக்கும் காற்று, பிராணன்; வெளியே விடும் காற்று, அபானன், இந்தக் காற்றைப் பத்திரமாகப் பாதுகாக்க உடம்பிலே எந்த மூடியும் இல்லை. ஆனால், ஓட்டைகளோ ஒன்பதிருக்கின்றன!
தினம் தினம் போய்ப் போய் வந்து கொண்டிருக்கும் காற்று, ஒரு நாள் போனால் திரும்புவதில்லை.
முன்பே குறிப்பிட்டுள்ள இந்தக் கேள்வியும், என் கண்களைத் திறந்தது.
நான் ஆசைப்படுவது எனக்குக் கிடைக்கவில்லை; `அதுதானடா விதி’ என்பாள், என் தாய்.
அந்த வாசகமும் என் அறிவுக்குத் தீனி போட்டது.
நான் படித்தது குறைவு; தோன்றிய கற்பனைகள் அதிகம்.
`இது ஏதோவொரு அருள்’ என்பார்கள் பெரியவர்கள்.
`கடவுளின் அருளா?’
அப்படியொரு கேள்வி எனக்குள் எழுந்தது.
உலக வரலாறு என் உணர்வுக்குப் புதிய உரம் ஏற்றிற்று.
கோவலனின் விதியிலிருந்து சர்வாதிகாரி ஹிட்லரின் விதி வரையில் சிந்தித்துப் பார்த்தேன்.
மாபெரும் விஞ்ஞானி கூட, சர்ச்சுக்குப் போவதைச் சிந்தித்தேன்.
இறையுணர்வு என்பது தவிர்க்க முடியாதது என்றும், அதை மறுப்பது ஒரு வியாபாரத் தந்திரமே என்றும் எனக்குத் தோன்றிற்று.
1949-இல் நாத்திகம் பேசத் தொடங்கிய நான், 1954-இல் `மங்கையர் திலகம்’ என்ற படத்தில் துளசி பூஜைப் பாட்டெழுதி விட்டேன்.

`எங்கள் குலதேவி நீயே, ஸ்ரீ துளசி அம்மா அன்புத் தாயே’ என்று தொடங்கும் பாடல் அது.
அப்போதும், இப்போதும் அந்தக் கட்சியில், என்னை எதிர்ப்பதற்கென்றே ஒருவர் இருக்கிறார்; அவர் உடனே அதை ஒரு பெரிய பிரச்சினையாக்கினார்.
ஆனால், திரு. அண்ணா அவர்கள் என்னோடு பேசும் போது, `உனக்குச் சரியென்று பட்டதைச் செய்; கடவுள் இல்லவே இல்லை என்ற கொள்கையில் எனக்கும் உடன்பாடல்ல!’ என்றார்.
அதைத் தொடர்ந்து தான், `ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்று அவர் கோஷம் கொடுத்தார்.
மூன்று வருஷங்கள் நாத்திகனாக இருந்த நான், கடவுள் பாடல்கள் எழுதத் தொடங்கினேன்.
நாளாக நாளாகக் கடவுள் தத்துவங்கள் மலரத் தொடங்கின.
இந்த நிலையில், `நான் யார்?’ என்பதைக் கண்டு கொள்ள எனக்கு இவ்வளவு காலங்கள் தேவைப்பட்டன.
ஆகவே, உனக்கு நான் சொல்வது, `உன்னையே நீ ஒழுங்காக அறிய வேண்டும்’ என்றால், முதலில் யாரோடு சேருகிறாய் என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
நீ யாரோடு சேருகிறாயோ, அவனது குணத்தை மட்டுமல்ல, பிறப்பையும் பார்க்க வேண்டும்.
நன்மைகள், தீமைகள் ஓரளவுக்குப் பிறப்பிலிருந்தே உருவாக்கப்படுகின்றன.
ஸ்ரீ ஆதி சங்கரர் சொன்னபடி, நல்ல உறவுகள் ஏற்பட்டால், `என் வீடு, என் சொத்து’ என்ற எண்ணம் மறைந்து விடும்.
அந்த எண்ணம் மறைந்து விட்டால், அது தேவை, இது தேவை என்ற ஆசை மறைந்து விடும்.
அந்த ஆசை மறைந்து விட்டால், சலனமற்ற நிம்மதி கிடைக்கும்.
நிம்மதியான வாழ்க்கையில் ஆன்மா சாந்தியடையும்.
ஆகவே, உன்னையே நீ அறிவதின் முதற்படி, `சேரிடம் அறிந்து சேர்’ என்ற பழமொழியாகும்.