Daily Archives: செப்ரெம்பர் 22nd, 2012

தொடத் தொட மலர்வது பூ மட்டுமல்ல! பெண்ணும்தான்!!

ஸ்பரிசம் என்பது படுக்கை அறையில் முக்கிய அம்சம். ஒவ்வொரு செல்லும் மலரும் வகையில் தொடுவதற்கு கலைநயமும், கற்பனை வளமும் தேவை. கண்களால் தீண்டுதல், கைகளால் தீண்டுதல், இறகு, கர்ச்சிப், பூக்களால் தீண்டுதல் என பலவித தீண்டல்கள் இருக்கின்றன. தீண்ட தீண்ட தீயாய் எரியும், பின்னர் கூடலுக்கான தேடல் தொடங்கும் என்கின்றனர் கவிஞர்கள். எந்த விதமான தீண்டல்களை பெண்கள் விரும்புகின்றனர் என்று பெரிய பட்டியலே இருக்கிறது. நிபுணர்களும், அனுபவசாலிகளும் கூறியுள்ளதை படியுங்களேன்.

படுக்கை அறையில் எடுத்தோமா, கவிழ்த்தோமா என்று இருப்பதை யாரும் விரும்புவதில்லை. மெதுவாய் ஒரு பார்வை. இன்றைக்கு ஏதாவது ஸ்பெசலா இருக்குமா என்பதை பார்வையின் மூலமே கேட்டு தெரிந்து கொள்ளலாமாம். எதிர் தரப்பில் இருந்து கிரீன் சிக்னல் வந்து விட்டால் போதும் அப்புறம் உடனே அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்து விடவேண்டாம் மூடு மாறிவிடும். மெதுவாய் முன்னேறுங்கள்.

வேலை பார்த்து டயர்டா இருக்கா கை, கால் பிடிச்சு விடட்டா, மசாஜ் செய்யவா என்று தொடங்குங்களேன். ஒரு சிலருக்கு கைகளால் தொடுவது கிளர்ச்சியைத் தரும் சிலருக்கு சில பொருட்களைக் கொண்டு தொடுவது அதீத கிளர்ச்சியை கொடுக்கும்.காட்டன் கர்ச்சிப் கொண்டு உங்கள் துணையின் மேனியில் மெதுவாய் தீண்டுங்களேன். சிலிர்ப்பாய் ஒரு அனுபவம் ஏற்படும். அதுவும் முதுகுப் பிரதேசம் முன் விளையாட்டுக்கு ஏற்ற இடம். அந்த இடத்தில் கர்ச்சிப் வைத்து போடும் கோலம் அதிக கிளர்ச்சியை தருமாம்.

மயிலிறகு அல்லது மென்மையான பறவையின் ஒற்றை இறகினைக் கொண்டு நெற்றியில் தொடங்குங்கள். இந்த விளையாட்டு ஆண், பெண் இருவருக்குமே விருப்பமானது. நெற்றியில் ஒற்றை இறகைக் கொண்டு தீண்டும் இன்பத்திற்கு நிகர் வேறு எதுவும் கிடையாது என்கின்றனர் அனுபவசாலிகள். ஒவ்வொரு பகுதியாய் தொட தொட உணர்ச்சியின் வேகமும் கூடுமாம்.

திராட்சைப் பழம் சாப்பிட மட்டுமல்ல விளையாட்டுக்கு ஏற்றது. அதுவும் ப்ரிட்ஜில் வைத்த திராட்சை என்றால் இன்னும் சுவாரஸ்யம் அதிகம். உடலில் ஒவ்வொரு பகுதியிலும் ஜில் என்ற உணர்வு ஏற்பட்டு கிளர்ச்சியை அதிகரிக்கும்.

பூக்களால் தீண்டுவது ரொமான்ஸ் உணர்வை அதிகரிக்கும். அதுவும் ஒற்றை ரோஜாப்பூ ஒவ்வொரு இடமாய் தொட தொட அந்த இடத்தில் ஒவ்வொரு செல்லும் மலருமாம்.

சாக்லேட், ஐஸ்கிரீம் பிடிக்காத பெண்கள் இருக்கமாட்டார்கள். அவர்களுக்கு ஏற்ற விளையாட்டு இது. உடலின் மிக விருப்பமான இடங்களில் ஐஸ்கிரீம் அல்லது சாக்லேட் கிரீமினை பூசுங்கள். கைகளால் அல்ல சிறிய குச்சியை வைத்து மெதுவாய் கோலமிடுங்கள் உற்சாகம் அதிகரிக்கும். பின்னர் அந்த கிரீமினை மெதுவாய் சுவையுங்கள். செம டெஸ்ட் என்று நீங்களே சொல்லும் அளவிற்கு உணர்ச்சிக்குவியலாய் மாறிப்போவார் உங்கள் துணை.

இதுபோன்ற தீண்டல் விளையாட்டு சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. யாருக்கு எந்த விதமான விளையாட்டு பிடிக்குமோ அதை கேட்டு அதில் கற்பனையையும், கலை நயத்தையும் புகுத்துங்கள். அப்புறம் என்ன உங்களுக்கான நேரம் பொன்னான நேரமாகும் என்கின்றனர் நிபுணர்கள்.

உடம்பா? ரப்பரா?

 

உலகிலேயே அதிக வளையும் தன்மை கொண்டவர் டேனியல் பிரவ்னிங் ஸ்மித். ரப்பர் போல இவர் தன் உடம்பை இஷ்டத்துக்கு வளைப்பதால் இவரை `ரப்பர் பாய்’ என்று அழைக்கிறார்கள். ஒரு டென்னிஸ் ராக்கெட்டில் சர்வசாதாரணமாக நுழைந்து வெளிவருவது முதல், துணிமணி வைக்க பயன்படும் சின்ன பெட்டிக்குள் தன் உடலை மடக்கி குறுக்கி அமர்ந்து கொள்வது வரை தனது அதிரடி சாகசத்தால் பார்ப்பவர்களை அலற வைக்கிறார்.

தன் கழுத்தை 180 டிகிரி கோணம் வரை திருப்பும் இவருக்கு சின்னத்திரை புகழும் உண்டு. ஹிஸ்டரி மற்றும் டிஸ்கவரி தொலைக்காட்சியில் வரும் ஸ்டன் லீஸ், சூப்பர் ஹியூமன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் இவர் தான்.

அங்காவது ஆடாமல் அசையாமல் இருப்பாரா?

Km01

மொபைல் போன் வீசி எறியும் போட்டி!

மொபைல் போன்கள் பயன்பாடும், உற்பத்தியும் அதிகரித்துள்ளதால், அவற்றின் விலைகளும் மிகவும் மலிவாகி விட்டன. இதனால், மொபைல் போனில் சிறிய கோளாறு ஏற்பட்டால் கூட, அவற்றை தூக்கி எறிந்து விட்டு, புதிய போனை வாங்கி விடுகின்றனர். இவ்வாறு தூக்கி எறியப்படும் போன்களில் உள்ள பேட்டரிகளில், நச்சுத் தன்மை இருப்பதால், சுற்றுச் சூழலுக்கு பெரும் கேடு ஏற்படுகிறது. பின்லாந்து நாட்டில், இந்த பிரச்னை அதிகமாக உள்ளது. இதற்கு காரணம், அங்குள்ள நதிகளில், ஏராளமான மொபைல் போன்கள், தூக்கி எறியப்படுகின்றன. இவற்றில் உள்ள பேட்டரிகளில் இருந்து பரவும் நச்சுத் தன்மையால், நதிகளின் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது.
இந்த பிரச்னையை தவிர்ப்பதற்காகவும், இதுகுறித்து< மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், அங்குள்ள ஒரு அமைப்பு, கடந்த சில ஆண்டுளாக, மொபைல் போனை வீசி எறியும் போட்டியை நடத்துகிறது. பொதுமக்கள், தங்களிடம் உள்ள, பயன்படுத்தாத அல்லது கோளாறான மொபைல் போன்களை, இந்த போட்டியில் பங்கேற்று, தூக்கி எறியலாம். யார், அதிக தூரத்துக்கு வீசுகின்றனரோ, அவர்களுக்கு பரிசு அளிக்கப்படுகிறது. இவ்வாறு தூக்கி எறியப்படும் மொபைல் போன்கள் அனைத்தும், சேகரிக்கப்பட்டு, மறு சுழற்சி செய்யப்பட்டு, சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்து கொள்ளப்படுகிறது. சமீபகாலமாக, இந்த போட்டிக்கு, அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

300 கோடி முறை "ஆட் ஆன்’ தொகுப்புகள் தரவிறக்கம்

யர்பாக்ஸ் பிரவுசர் அதன் கூடுதல் பயன்பாட்டிற்கென அளிக்கப்படும் ஆட் ஆன் புரோகிராம்களுக்குப் பெயர் பெற்றவை. இவற்றை பிரவுசரில் இன்ஸ்டால் செய்தால், பல வசதிகள் நமக்குக் கிடைக்கின்றன. எனவே இவற்றைப் பலரும் விரும்புகின்றனர். இதனாலேயே பலர் பயர்பாக்ஸ் பிரவுசருடன் பயன்படுத்த பல ஆட் ஆன் புரோகிராம்களை வடிவமைத்து இலவசமாகத் தந்து வருகின்றனர்.
சென்ற வாரம், இந்த ஆட் ஆன் புரோகிராம்களின் தரவிறக்க எண்ணிக்கை 300 கோடியைத் தாண்டியது. இது ஏறத்தாழ இந்த உலகின் ஜனத்தொகையில் பாதியாகும். ஒரு நேரத்தில் இன்டர்நெட்டில் உலா வருபவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாகும். இதற்குக் காரணம் பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்தும் கோடிக் கணக்கான பயனாளர்களும், இந்த பிரவுசருக்கென இத்தகைய புரோகிராம்களை வடிவமைத்துத் தரும் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட புரோகிராம் டெவலப்பர்களுமே ஆவார்கள்.
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல், மொஸில்லா இந்த ஆட் ஆன் தொகுப்புகளைத் தர ஆரம்பித்தது. இதன் தள முகவரி https://addons.mozilla.org/enUS/firefox/. இந்த புரோகிராம்கள் மூலம், பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவர்கள், தாங்கள் விரும்பும் வகையில், பிரவுசரை வடிவமைத்துக் கொள்ள முடிகிறது. பயர்பாக்ஸ் பயன்படுத்துபவர்களில், 85% பேர் குறைந்தது ஒரு ஆட் ஆன் புரோகிராமினையாவது பயன்படுத்துகின்றனர்.
இவர்களில் பெரும்பான்மையானவர்கள், குறைந்தது ஐந்து ஆட் ஆன் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்துள்ளனர். இவற்றில் பிரபலமானவையாக கீழ்க்குறித்தவற்றைக் கூறலாம் AdBlock Plus, Firebug, NoScript, Personas Plus, மற்றும் Video Download Helper. மொஸில்லாவின் பயர்பாக்ஸ் ஆட் ஆன் காலரியில், பயர்பாக்ஸ் பயன்படுத்துபவர்கள் தயாரித்து அளித்த ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆட் ஆன் புரோகிராம்கள் உள்ளன.