Daily Archives: செப்ரெம்பர் 26th, 2012

சில்லறை வணிகத்தில் வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!!

காதிபத்தியங்கள் பல இருந்தாலும் அவற்றின் தலைவனாகவும் மேலாதிக்கச் சக்தியாகவும் அமெரிக்கா இருப்பதைப் போல, சில்லறை வணிகத்தில் பல பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தாலும், வால்மார்ட் அவை அனைத்துக்கும் மேலான ஒரு பயங்கரமான அழிவுச் சக்தி. அமெரிக்க இராணுவம் நடத்தும் ஆக்கிரமிப்புப் போருக்கும் வால்மார்ட் தொடுக்கும் வர்த்தகப் போருக்கும் பெரிய வேறுபாடு கிடையாது — துப்பாக்கி ஒன்றைத் தவிர.

அமெரிக்க மேலாதிக்கத்திற்க்கும் வால்மார்ட்டுக்கும் இடையிலான தொப்புள் கொடி உறவைப் புரிந்து கொள்ள உதவும் சமீபத்திய உதாரணம் ஒன்று இருக்கிறது. அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை எப்படியாவது நிறைவேற்றுவதற்கு மன்மோகன் சிங் நியமித்த தூதர்களில் முக்கியமானவர் வால்மார்ட்டின் இந்தியக் கூட்டாளியான மிட்டல். சில்லறை வணிகத்திற்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்திற்கும் உள்ள தொடர்புதான் வால்மார்ட்டுக்கும் மறுகாலனியாக்கத்திற்கும் உள்ள தொடர்பு.

மலிவு விலை என்பதுதான் மக்களை வீழ்த்த வால்மார்ட் ஏந்தியிருக்கும் ஆயுதம். இந்த ஆயுதத்தின் மூலம் உலக மக்களின் உணவு, உடை, பழக்க வழக்கங்கள், பண்பாடு முதல் அவர்களுடய அரசியல் கருத்துகள் வரை அனைத்தையும் மாற்றுகிற வால்மார்ட், நுகர்தலே மகிழ்ச்சி, நுகர்தலே வாழ்க்கை, நுகர்தலே இலட்சியம் என்று அமெரிக்க சமூகத்தையே வளைத்து வசப்படுத்தி வைத்திருக்கிறது வால்மார்ட். அதற்குப் பலியான அமெரிக்க மக்கள், தம் இரத்தத்தில் ஊறி சிந்தனையையும் செரித்து விட்ட வால்மார்ட் எனும் இந்த நச்சுக் கிருமியிடமிருந்து விடுபடமுடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் உடலுக்குள் நுழைந்து விட்டது அந்த நச்சுக்கிருமி. இதனை எதிர்த்த போராட்டம் நீண்டது, நெடியது. அந்தக் கிருமியின் வரலாற்றைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வது இந்த தொற்று நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் எதிர்த்துப் போராடவும் உதவும்.

வால்மார்ட்

ரண்டாம் உலகப்போரில் உளவுத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற சாம் வால்டன், அமெரிக்காவின் அர்கன்ஸாஸ் மாநிலத்தின் ரோஜர்ஸில் வாங்கிய தள்ளுபடி விற்பனைக் கடைதான் வால்மார்ட். துவக்க காலத்தில் மற்ற பலசரக்குக் கடைகளில் விற்கப்படாத மிக மலிவான பொருட்களும், மற்ற கடைகளில் விற்கப்படும் பொருட்களை சந்தை விலையை விட மலிவாகவும் விற்றது வால்மார்ட்.

உறுதியாக நட்டம் விளைவிக்கக் கூடிய இந்த வியாபார உத்தியை மேற்கொள்ள சாம்வால்டன் இரண்டு வழிமுறைகளைக் கையாண்டார். ஒன்று, ஊழியர்களுக்கு மிகக் குறைந்த சம்பளம், இரண்டாவது, உற்பத்தியாளர்களிடம் குறைவான விலையில் சரக்கெடுப்பது. இந்தக் கொள்கைகள் காரணமாக வால்மார்டின் வளர்ச்சி மெதுவாக இருப்பினும் 1969ம் ஆண்டுக்குள் 31 மில்லியன் டாலர் ஆண்டு வருமானத்துடன் தன் முதல் கடைக்கு 200 மைல் சுற்றளவிற்குள்ளாகவே 32 கடைகளைத் திறந்தார் சாம் வால்டன்.

இந்த வணிகமுறையினால் வருமானத்தை மீறி கடன்பட்ட சாம் வால்டன், தன் நிறுவனத்தைக் காப்பாற்ற அதிரடியாக மேலும் பல கடைகளை திறந்தால்தான் சாத்தியம் என்பதை உணர்ந்து பல வங்கிகளிடம் கடன் கோரினார். வங்கிகள் சாம் கோரியது போல் அல்லாமல் கடனுக்கு வரம்பு விதித்தனர். வங்கிகளை நம்பிப் பயனில்லை என உணர்ந்த சாம் பங்குச் சந்தையின் உதவியை நாடினார். அமெரிக்காவின் அந்நாளைய சட்டப்படி எந்த ஒரு நிறுவனமும் முதல்முறை நேரடியாக தன் பங்குகளை விற்க முடியாது, வேறொரு நிதி நிறுவனத்தின் மூலமாக மட்டுமே பங்குகளை விற்க முடியும்.

இந்தப் பணிக்கு சாம் இரண்டு பெரும் கிரிமினல் வங்கிகளை தனக்காக அமர்த்தினார். ஒன்று, அமெரிக்க உளவுத்துறையின் அடியாளாக அறியப்பட்டு, ஆயுதம் மற்றும் போதை மருந்து கடத்தலுக்காக 1990இல் தண்டிக்கப்பட்ட அர்கன்ஸாஸின் ஸ்டீபன்ஸ் வங்கி. மற்றொன்று, ஆங்கிலேய அரசுக்கு கைக்கூலியாக இருந்து, அமெரிக்கப் புரட்சிக்கு துரோகமிழத்த பாஸ்டன் தேசிய வங்கி. பின்னாளில் ஒயிட்வெல்ட் ஸ்விஸ் கடன் வங்கி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த வங்கி, போதைப் பொருள் கடத்தல் மற்றும் நிதி ஊழலுக்காகவும் 1985இல் தண்டிக்கப்பட்டது.

இந்த இரண்டு கிரிமினல் வங்கிகளும் 1970இல் 4.5 மில்லியன் டாலர் பணத்தை சாம் வால்டனுக்குப் பங்குச் சந்தை மூலமாகப் பெற்றுத் தந்தனர். இதற்குப் பிரதி உபகாரமாக கிரிமினல் பேர்வழி ஸ்டிபன்ஸை வால்மார்டின் ஒரு இயக்குனராக்கினார் சாம் வால்டன்.

70களில் பங்குச் சந்தையின் உதவியை நாடியது வால்மார்ட். 80களிலோ நாப்தா, எஃப்.டி.ஏ.ஏ போன்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் மூலம் தென் அமெரிக்க நாடுகளையும் கனடாவையும் ஊடுருவ வால்மார்டின் உதவி அமெரிக்கப் பங்குச் சந்தைக்குத் தேவைப்பட்டது. வால்மார்ட் தயாராக இருந்தது.

உலகமயமாக்கம் வால்மார்ட்டின் அசுர வளர்ச்சி

வால் மார்ட் ! மலிவு விலையில் மரணம் !!

2010ல் வால்மார்ட் – படத்தை அழுத்தி பெரியதாக பார்க்கவும்

தகவல் தொழில்நுட்பப் புரட்சியைத் தொடர்ந்து அத்துறையில் கொள்ளை இலாபமீட்டுவதற்கான வாய்ப்பு இருப்பதை உணர்ந்து கொண்ட அமெரிக்க முதலாளிகள், தம் மூலதனத்தை உற்பத்தித் துறையிலிருந்து அதற்கு மாற்றினர். அமெரிக்கச் சந்தைக்குத் தேவையான நுகர்பொருட்களை மலிவான ஊதியத்தில் உற்பத்தி செய்து தரும் ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் போக்கு அதிகரித்தது. பல அமெரிக்க உற்பத்தித் தொழில்கள் அழிந்தன. தொழிலாளர்கள் வேலையிழந்தனர். ஏழை நாடுகளின் கொத்தடிமைக் கூடாரங்களில் உருவாக்கப்படும் மலிவு விலை பொருட்களை நுகரும் சமூகமாக அமெரிக்கா மாறியது.

இத்தகைய பொருட்களை அமெரிக்காவெங்கும் விற்பனை செய்யும் ஒரு பிரம்மாண்டமான நிறுவனமாக வால்மார்ட் உருவாகியிருந்தது. அமெரிக்காவின் மற்ற உற்பத்தியாளர்களும் பெருவணிகர்களும் வால்மார்டின் குறைந்த விலை கொள்முதலுக்கு அடிபணியாவிட்டால் அழிந்து விடக்கூடிய நிலைக்கு அமெரிக்காவின் பல தொழில்களை மாற்றியிருந்தது வால்மார்ட். வால்மார்ட்டை உலகமயமாக்கலின் சிறந்த ஆயுதமாகக் கண்டு கொண்ட அமெரிக்க பங்குச் சந்தை, வால்மார்ட்டிற்கு பணத்தை வாரியிறைத்தது. வால்மார்ட் வெறித்தனமாக வளர்ந்தது.

80களின் இறுதி வரை 70,000 சதுரஅடி பரப்பிலான பிரம்மாண்டமான கடைகளை நடத்தி வந்தது. (மற்ற அமெரிக்கப் பெருவணிகக் கடைகளின் சராசரி அளவு 40,000 சதுர அடி). போட்டியாளர்களை அழிக்க ஆணி முதல் உணவு வரை 1,20,000 பொருட்களை விற்கும் 2,00,000 சதுரஅடி பரப்பிலான (4 கால்பந்து மைதானம் அளவில்) சூப்பர் சென்டர்களை 1987 முதல் வால் மார்ட் நிறுவனம் துவங்கியது.

1990ல் அமெரிக்காவில் வெறும் 5 சூப்பர் சென்டர்களை கொண்டிருந்த வால்மார்ட், அடுத்த 12 ஆண்டுகளில் 1268 சூப்பர் சென்டர்களை நிறுவி 25,000% வளர்ச்சியடைந்தது. இதே காலகட்டத்தில்தான் உலகமயமாக்கல் கொள்கையைப் பயன்படுத்தி அயல்நாடுகளிலும் கால்பதிக்கத் துவங்கியது.

1990ல் மெக்ஸிகோவில் ஒரே ஒரு கடை மட்டும் திறந்திருந்த வால்மார்ட், இன்று அர்ஜென்டினா, பிரேசில், கனடா, கோஸ்டாரிகா, சீனா, எல்சால்வடார், ஜெர்மனி, குவாதிமாலா, ஹோன்டுராஸ், ஜப்பான், மெக்ஸிகோ, நிகராகுவா, போர்டோரிகோ மற்றும் பிரிட்டன் முதலிய நாடுகளில் 2700 கடைகளைத் திறந்திருக்கிறது. பலநாடுகளில் சில்லறை வணிகத்தில் முதல் இடத்தில் இருக்கிறது.

வளர்ச்சியின் மர்மம்

வால்மார்ட்

வால்மார்டின் வளம் – படத்தை அழுத்தி பெரியதாக பார்க்கவும்

வால்மார்டின் இந்த அசுரத்தனமான வளர்ச்சிக்கும், அமெரிக்க ஏகபோகங்கள் ஏழை நாடுகளைதனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொண்டு அழித்து வருவதற்குமான உறவு தற்செயலானதல்ல. இத்தனை ஆயிரம் கடைகளைக் கட்டத் தேவையான பல லட்சம் கோடி டாலர்கள், வரிச்சலுகைகளாகவும், இன்றைய தேதியில் வால்மார்டின் கடன் எத்தனை லட்சம் கோடி என்று வெளியே தெரியாத அளவிற்கு கடன் பத்திரங்களாகவும் உலகின் முன்னணி வங்கிகள், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் காப்பீடு நிறுவனங்களின் ஆண்டறிக்கைகளில் மறைந்துள்ளன.

இந்த வால்மார்ட் சாம்ராஜ்ஜியம் உலகம் முழுவதிலிருந்தும் உறிஞ்சும் பல லட்சம் கோடி டாலர்களும் நிறுவனத்தின் பங்குகளில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் வைத்திருக்கும் சாம் வால்டனின் குடும்பத்தின் வயிற்றுக்குள் செல்கிறது. லாப ஈவுத்தொகை (Dividend) மூலமாக மட்டும் ஆண்டுக்கு 5 பில்லியன் டாலர்களைக் கொள்ளையடிக்கும் சாம் வால்டன் குடும்பத்தினர், அமெரிக்காவின் முதல் 10 பணக்காரர்களின் வரிசையில் 5 முதல் 9 இடம் வரை நிரம்பியுள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பைக் கூட்டினால் உலகின் நிரந்தரப் பணக்காரக் குடும்பமே இவர்கள்தான்.

உலக அரசியலின் படுபிற்போக்கு சக்திகளான புஷ், டிக் செனி வகையறாக்களுக்கு சாம் வால்டன் குடும்பம்தான் நிரந்தரப் புரவலர்கள். அமெரிக்காவில் கல்வியை முற்றிலுமாகத் தனியார்மயமாக்குவதற்குத் தீவிரமாக முயலும் கும்பல்களுக்கும் தலையாய புரவலராக இருப்பதுடன், பின்தங்கிய நாடுகளை அதன் பிடியில் வைத்திருக்கும் பல அரசுசாரா நிறுவனங்களையும் வால்டன் குடும்பம் பராமரித்து வருகிறது.

உலகமயமாக்கல் கொள்ளைக்காகத் திட்டமிட்டே வளர்க்கப்பட்ட வால்மார்ட் இன்று 6100 கடைகள், 18 லட்சம் ஊழியர்கள், ஆண்டு விற்பனை 312.4 பில்லியன், லாபம் மட்டும் 11.2 பில்லியன் என உலகத்தின் மிகப் பெரிய கம்பெனியாகியுள்ளது. 42 மணி நேரத்திற்கு ஒரு புதிய கடை என திறந்த வண்ணம் உள்ளது. வால்மார்ட் ஒரு நாடாக இருந்திருந்தால் உலகின் 21வது பணக்கார நாடாக இருந்திருக்கும். இதன் ஆண்டு வருமானம் பல ஏழை நாடுகளின் வருமானத்தை விடவும் அதிகம்

வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!!

ஒரு வால்மார்ட் சூப்பர் சென்டரின் உள்ளே….

ஏகபோகத்தின் வீச்சு

வாரத்திற்கு 10 கோடி அமெரிக்கர்கள் வால்மார்ட்டின் கடைகளில் பொருட்கள் வாங்குகின்றனர். அமெரிக்காவின் மொத்த பலசரக்கு மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனையில் 35%, மொத்த மருந்து மாத்திரை சந்தையில் 25%, வீட்டு உபயோகப் பொருட்கள், சோப்பு, ஷாம்பு போன்றவைகளில் ஏறத்தாழ 40%, ஆடியோ வீடியோ விற்பனையில் 25%  என்று அமெரிக்கச் சந்தையையே தனது கோரப்பிடிக்குள் கைப்பற்றி வைத்திருக்கிறது வால்மார்ட்.

அமெரிக்காவின் மிகப்பெரிய செய்தித் தாள் விற்பனையாளரும் வால் மார்ட்தான். வெளிவரும் பத்திரிகைகளில் ஏறத்தாழ 20% வால்மார்ட் மூலம் விற்பனையாகிறது. அமெரிக்கச் சந்தையில் இப்படியென்றால் மெக்ஸிகோ போன்ற நாடுகளின் மொத்தச் சந்தையில் 50% வால்மார்ட்டின் கையில் இருக்கிறது.

அதேபோல பிரொக்டர் அண்ட் காம்பிள் (விக்ஸ் கம்பெனி), லீவைஸ் (ஜீன்ஸ் கம்பெனி), ரெவ்லான் (அழகு சாதனங்கள்) போன்ற பல முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் தமது பொருட்களில் 20% – 40% வரை வால்மார்ட் மூலமாகவே விற்பனை செய்கின்றன.

இத்தகைய ஏகபோகத்தின் மூலம் உற்பத்தியாளர்களைத் தன்னை அண்டிப் பழக்கும் அடிமைகளாகவே மாற்றியிருக்கிறது வால்மார்ட். தன்னுடன் வர்த்தகம் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களையே ஆட்டிப் படைக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னால் தமது பொருட்களின் விற்பனை விலை என்ன என்பதை பல பன்னாட்டு நிறுவனங்கள் வால்மார்டிற்குச் சொல்லி வந்தன. இன்றோ சந்தையைத் தன் பிடியில் வைத்திருக்கும் வால்மார்ட், தான் சொல்கிற பொருளை, கோருகிற விலையில் இந்நிறுவனங்கள் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்று நிர்ப்பந்தம் செலுத்துகிறது.

வால்மார்டிற்குப் பிடிக்கவில்லையா, பத்திரிகையின் அட்டை வடிவமைப்பு மாற்றப்பட வேண்டும், வால்மார்ட் ஆட்சேபித்தால் காசெட்டின் பாடல் வரிகள் தணிக்கை செய்யப்பட வேண்டும். வால்மார்ட் கோரினால் பொருட்களின் நிறத்தை மாற்ற வேண்டும். விலையைக் குறைக்கும் பொருட்டு உற்பத்திப் பொருளின் தரத்தைக் குறைக்கச் சொன்னால் அதையும் செய்யவேண்டும். அமெரிக்க மக்களின் தலைவலி காய்ச்சலுக்கான மாத்திரையை முடிவு செய்வது கூட வால்மார்ட்தான்.

தனது ஆணைக்குக் கட்டுப்பட மறுக்கும் நிறுவனங்களின் பொருட்களை வால்மார்ட் விற்பனை செய்யாது. அதே போன்ற வேறு நிறுவனத்தின் பொருட்கள் ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும்.

ஏற்கெனவே சீனாவிலிருந்து அமெரிக்கா செய்து வரும் இறக்குமதியில் 15%க்கு மேல் வால்மார்டின் பங்குதான். பிரிட்டனும் ரஷ்யாவும் பல்வேறு வெளி நாடுகளிலிருந்து செய்யும் இறக்குமதியின் மொத்த மதிப்பைக் காட்டிலும் வால்மார்ட் செய்யும் இறக்குமதியின் மொத்த மதிப்பு அதிகம்.

வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!!

உற்பத்தியைக் கட்டுப்படுத்துதல்

ஒவ்வொரு நாளும் பென்டான்வில் எனப்படும் வால்மார்ட்டின் தலைமையகத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்து உற்பத்தியாளர்கள் படையெடுக்கிறார்கள். அவர்களை இனவாரியாகப் பிரித்து தனியறைகளில் அமர்த்தி வால்மார்ட் தலைகீழ் ஏலத்தைத் துவங்குகிறது.

அதாவது, யார் மிகக் குறைவான விலையைக் கூறுகிறார்களோ அவர்களுக்கே அவ்வாண்டு ஒப்பந்தம் மீண்டும் அடுத்த ஆண்டு சென்ற ஆண்டின் விலையை விடக் குறைத்துக் கொடுக்க அந்நிறுவனங்கள் நிர்பந்திக்கப்படும். கச்சாப் பொருட்களின் விலையேற்றம், ஊழியர்களின் ஊதிய உயர்வு என அந்நிறுவனங்கள் மறுத்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, புதிதாக ஏலம் துவங்கும். வால்மார்டின் மூலமாக இந்நிறுவனங்களின் வியாபாரம் பன்மடங்கு அதிகரித்தாலும், கட்டுப்படியாகாத உற்பத்திச் செலவினால் பல நிறுவனங்கள் திவாலாகின்றன. அல்லது அமெரிக்காவில் ஆலைகளை மூடிவிட்டு, உற்பத்தியை சீனா, பங்களாதேஷ், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு மாற்றியிருக்கின்றனர்.

அமெரிக்காவின் ஐந்து பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஜெனரல் எலக்டிரிகல்ஸ், வால்மார்டின் நிர்பந்தத்தினால் தனது உற்பத்தியை மெக்ஸிகோவிற்கும், சீனாவிற்கும் பிற ஆசிய நாடுகளுக்கும் மாற்றிவிட்டது. அமெரிக்க (IUE) யூனியனின் கூற்றுப்படி கடந்த ஏழு ஆண்டுகளில் ஜெனரல் எலக்டிரிகல்ஸில் மட்டுமே 1,00,000 தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர்.

பிளாஸ்டிக் கச்சா பொருள் விலை கடுமையாக உயரவே, தனது தயாரிப்புகளின் விலையைக் கூட்ட முடிவெடுத்தது அமெரிக்காவின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ‘ரப்பர் மெய்ட்’. வால்மார்ட் விலையுயர்விற்கு சம்மதிக்கவில்லை. மாறாக ரப்பர்மெய்டின் பொருட்களை விற்பதை நிறுத்தியது. அதன் விளைவாக ரப்பர்மெய்ட் நிறுவனம் திவாலாகி தனது நிறுவனத்தை போட்டிக் கம்பெனியான நியுவெல்லிடம் விற்றுவிட்டது. இன்று நியூவெல் நிறுவனம் தொடர்ந்து வால்மார்ட்டுடன் வர்த்தகம் செய்வதற்காக தனது 400 ஆலைகளில் 69ஐ மூடிவிட்டு ஆசியாவிற்கு உற்பத்தியை மாற்றியது. இதனால் இந்நிறுவனத்தில் இதுவரை வேலை இழந்தோர் 11,000 பேர்.

இதேபோன்று லீவைஸ், தாம்சன் டி.வி, உள்ளிட்டு விற்பனையில் கொடிகட்டிப் பறந்த பலப்பல அமெரிக்க நிறுவனங்களை மூடச்செய்து 15 லட்சம் அமெரிக்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையை அழித்திருக்கிறது வால்மார்ட்.

உழைப்புச் சுரண்டல்

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களை மடக்கிப் போட்டு வியர்வைக் கடைகள் எனப்படும் கொடூரமான கொத்தடிமைக் கூடாரங்களை வால்மார்ட் இரகசியமாக நடத்துகிறது. சீனா மற்றும் இதர ஆசிய நாடுகளிலோ வெளிப்படையாகவே இவை நடத்தப்படுகின்றன. இங்கு ஆணி, பொம்மைகள், மின்விசிறிகள் போன்ற பல்லாயிரம் விதமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

நாளொன்றுக்கு 13 முதல் 16 மணி நேரம் வேலை, வார விடுமுறை கிடையாது என்று தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படும் இது போன்ற கூடாரங்களில் விழாக்கால, பண்டிகை விற்பனை சீசன்களில் 20 மணி நேரம் வரை தொழிலாளர்கள் வேலை வாங்கப்படுகிறார்கள்.

நினைத்தே பார்க்க முடியாத இந்தக் கொடூர வேலைக்கு மாதச்சம்பளம் 42 டாலர்கள். இது சீனாவின் குறைந்தபட்ச கூலியை விட 40% குறைவு. இந்த தொழிலாளர்கள் 7 அடிக்கு 7 அடி அறையில் 12 பேர் அடைக்கப்பட்டு அதற்கு வார வாடகை 2 டாலர்களும், மட்டமான உணவிற்கு வாரத்திற்கு 5.50 டாலர்களும் வசூலிக்கப்படுகிறது. இந்த வேலைக் கொடுமையினால் அவர்கள் நோய்வாய்ப்பட்டால் அது அவர்களுடைய சொந்தச் செலவு. சீனாவில் மட்டும் வால்மார்டிற்கு இது போன்ற 5000 கொத்தடிமைக் கூடாரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏழை நாடுகளின் தொழிலாளர்களைப் போலவே தனது சொந்த ஊழியர்களையும் வால்மார்ட் ஒடுக்குகிறது. உலக அளவில் வால்மார்ட்டின் ஊழியர்கள் 15 லட்சம் பேர். ஆனால், எங்குமே பெயருக்குக் கூட ஒரு தொழிற்சங்கம் கிடையாது. முன்னர் எந்தக் காலத்திலாவது ஏதாவது ஒரு தொழிற்சங்கத்தில் ஒருவர் இருந்திருந்தால் கூட அவருக்கு வால்மார்ட்டில் வேலை வாய்ப்பு இல்லை.

அதே போல எந்தக் கடையிலாவது தொழிற்சங்கம் அமைக்கப்படும் எனச் சந்தேகித்தால் அந்தக்கடை ஊழியர்களை ரகசியக் காமிராக்கள் கொண்டு கண்காணித்து சந்தேகத்திற்கு உரிய நபர்களை நிர்வாகம் பணிநீக்கம் செய்கிறது. தனது தலைமையகத்தில் இதற்கென்றே உருவாக்கி வைத்திருக்கும் சிறப்பு தொழிற்சங்க எதிர்ப்புப் படையை வரவழைத்து கருங்காலிகளை உருவாக்கி, சங்கம் அமைக்கும் முயற்சியை முளையிலேயே கிள்ளுகிறது.

தொழிற்சங்கங்கள் இருக்கும் மற்ற நிறுவனங்களின் ஊழியர்களை விட வால்மார்ட் ஊழியர்களின் சம்பளம் 23% குறைவு. வால்மார்ட் ஊழியர்களில் மூன்றில் இரண்டு பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். காப்பீடு செய்யவில்லையென்றால் மருத்துவமே பார்த்துக் கொள்ள முடியாது என்ற நிலையில் உள்ள அமெரிக்காவில், வெறும் 38% வால்மார்ட் ஊழியர்களுக்கு மட்டுமே மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.

சிறப்பு விற்பனை நாட்களில் தனது ஊழியர்களை வெளியில் செல்லக்கூட அனுமதிக்காமல், கடையில் வைத்துப் பூட்டும் வால்மார்ட், கூடுதல் பணி நேரத்திற்கு தொழிலாளிகளுக்கு ஒரு பைசா கூட ஓவர்டைம் வழங்குவதில்லை. பெண் தொழிலாளிகளுக்கு ஆண்களை விட குறைவான சம்பளம், ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க மறுப்பது, குழந்தைத் தொழிலாளர் முறை என நீண்டு கொண்டே செல்கின்றன வால்மார்டின் தொழிலாளர் விரோதக் கொள்கைகள்.

இந்தக் கொடுமைகளை எதிர்த்து கனடா நாட்டில் வால்மார்டின் இறைச்சிக்கடை ஊழியர்கள் சங்கம் அமைத்தவுடன், அந்நாடு முழுவதுமுள்ள தனது கடைகளில் இறைச்சிப்பகுதியையே இழுத்து மூடி தொழிலாளர்களுக்கு மிரட்டல் விடுத்தது. தனது தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்காக அமெரிக்காவின் 38 மாநிலங்களில் வழக்குகளைச் சந்தித்து வருகிறது வால்மார்ட். இது தவிர அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய வழக்கான 16 லட்சம் முன்னாள், இந்நாள் வால்மார்ட் ஊழியர்கள் இணைந்து தொடுத்துள்ள வழக்கும் அதன்மேல் நிலுவையில் உள்ளது.

வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!!

அடுத்த குறி இந்தியா

சமூகச் செல்வங்களான உழைப்பையும், உற்பத்தியையும் தின்று செரித்து, வேலையின்மையையும், வறுமையையும் எச்சங்களாக விட்டுச் செல்லும் பொருளாதாரப் புற்று நோய் வால்மார்ட். இதன் அடுத்த இலக்கு இந்தியா. சில்லறை வணிகத்தை நம்பி வாழும் 4 கோடி குடும்பங்கள், பல கோடி விவசாயிகள் ஆகியோருடைய வாழ்க்கையையும், 10 லட்சம் கோடி மதிப்பு கொண்ட உலகின் நான்காவது பெரிய சில்லறை விற்பனைச் சந்தையுமான இந்தியாவை விழுங்க பல்லாயிரம் கோடி முதலீட்டுடன், வருகிறது வால்மார்ட்.

மலிவு விலையில் கிடைக்கிறது என்பதால் நாம் மரணத்தை வாங்கப் போகிறோமா?

ஆட்டமா… தள்ளாட்டமா…! குடிகாரன் பேச்சு…! விடிஞ்சா போச்சு…!!

"நாளை முதல் குடிக்க மாட்டேன், சத்தியமடி தங்கம், இன்னிக்கு ராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்,” என்ற பாடலை "அரை மப்பில்’ பாடியபடி மேலும் ஒரு "கட்டிங்’ போடுவதற்காக… மனைவியிடம் கெஞ்சுவது போல் கொஞ்சி பணம் கேட்பார் கணவர்.""ராத்திரி ஆனா… சனியனோட தொல்லையா போச்சு. இதெல்லாம் என்னைக்கு தான் உருப்படப்போகுதோ தெரியல,” என மனைவியின் அன்பு(?) பேச்சை பொருட்படுத்தாமல், "கட்டிங்’ போடுவதிலேயே கணவரின் கவனம் செல்லும்.தூங்குவது போல் போக்கு காட்டும் குழந்தைகள், பெற்றோரின் சண்டையை கவனித்து கொண்டிருக்கும். "இதுக… திருந்தவே… திருந்தாது,’ என பெற்றோர் பற்றி, ஒரு முடிவுக்கு வரும் குழந்தைகள் தூங்கி விடும்.
பத்து பதினைந்து சிகரெட்டுகளை ஊதி தள்ளி, இரவு 2 மணி வரை, படுக்கையில் அங்கும், இங்கும் புரண்டும், உருண்டும் தூக்கம் வராமல் திணறுவார். மல்லாக்கப்படுத்தபடி கால்மேல் கால்போட்டு யோசிப்பார். ஒரு வழியாக தூங்க, அதிகாலை ஆகி விடும்.மறுநாள் காலை 8 மணி வரைக்கும் கண் விழிக்க முடியாது. முந்தைய நாள் போட்ட "மப்பு’ தலையை குடைந்து வலியை ஏற்படுத்தும். கை, கால்கள் வீங்கிப் போயிருக்கும். "வேலைக்கு செல்ல வேண்டுமே…!,’ என வேண்டா, வெறுப்பாக எழ முடியாமல் எழுந்து தயாராவார். வேலைக்கு சென்றாலும் பணியில் கவனம் செலுத்த முடியாது.இது நடுத்தர குடும்பத்தை சேர்ந்த "குடி’கார கணவரால் நடக்கும் அன்றாட நிகழ்வுகள்.நாளை முதல் குடிக்க மாட்டேன், என சத்தியம் செய்தவர் மறுநாள் அந்தி மயங்கும் நேரத்தில் ஆளும் மயங்க ஆரம்பித்து விடுவார். பிறகென்ன, "குடிகாரன் பேச்சு… விடிஞ்சா போச்சு தானே…?’இப்படி தினமும் மது குடிப்பதால், கை, கால் நடுக்கம், வியர்வை, குழப்பநிலை, வலிப்பு நோய் வரும். கல்லீரல், வயிற்றுப் புண், ரத்தக்கசிவு, கணையம், நரம்பு பாதிப்புகள் என அத்தனை நோய்களும் உடம்பை ஆட் கொள்ளும். குடியால் நம்மைத் தேடிவரும் நோய்கள் பற்றி ஒரு கணம் சிந்தித்தால், "பாட்டில்’ திறக்க மனம் வராது…. குடிப்போர்கள் சிந்திப்பார்களா…?
குடிப்பவர் எண்ணிக்கையை குறைப்பது எப்படி?தமிழகத்தில், "டாஸ்மாக்’ கடைகளை மூடி "குஜராத் போல்’ மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்ற விவாதங்கள், கோரிக்கைகள் எழுந்துள்ளன. மதுக்கடையை முழுமையாக மூடிவிட்டால், கள்ளச்சாராயம் பெருகி விடும்; அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்ற கருத்தும் உண்டு.நம் மாநிலத்தில் 6 ஆயிரத்து 823 "டாஸ்மாக்’ கடைகள் உள்ளன. கடந்த ஆண்டு, 15 ஆயிரம் கோடிக்கு மது விற்பனை நடந்தது. இந்த ஆண்டு, 18 ஆயிரம் கோடிக்கு விற்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே அரசிற்கு இது ஒரு நல்ல வருமானம் தான். வருமானத்தை இழக்க அரசு விரும்பவில்லை என்றால், "டாஸ்மாக்’ கடைகள் செயல்படுவது தொடர்பாக, சில கட்டுப்பாடுகளை அரசு விதிக்க வேண்டும்.
*கடைகள் திறக்கும் நேரத்தை, பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை என குறைக்கலாம்.
* ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் (சராசரியாக 25 தினங்கள்)அனைத்திலும் விடுமுறை அளிக்கலாம்.
* 21 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும், உரிய ஆவணம் காட்டினால் மட்டுமே, மது விற்க வேண்டும். (அமெரிக்காவில், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தான், மது விற்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது)
* கடைகளுக்கு வெளியே, மது வகைகளின் விலைப்பட்டியல் வைத்தால், வாங்க வருபவர் சற்று தயங்கலாம்.
* கடைகளின் எண்ணிக்கையை குறைக்கலாம். மருத்துவமனை, பள்ளி, கோயில் அருகில் இருந்து சில கி.மீ., தூரத்திற்கு கடைகள் வைக்க கூடாது என்பதை தீவிரப்படுத்தலாம்.

போதையேறி போச்சு:


மதுரை அரசு மருத்துவமனை மதுபோதை மறுவாழ்வு மையத்தில், 2011ம் ஆண்டில் 273 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். இந்தாண்டு ஆகஸ்ட் வரை, 204 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்தாண்டை விட, இருமடங்கு அதிகம். இதுதவிர தினமும் 50 பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.

தேர்வில் "பாஸ் மார்க்’ இல்லை வாழ்வில் "டாஸ்மாக்’ உண்டு!

"நா ஸ்டெழியாத்தான் நிக்கிழேன்’- என்று, அவிழும் வேட்டியை அள்ளி மடித்துக் கட்ட முயன்று தோற்கும் கணவனை, ஊர்சிரிக்கும் முன், சத்தமின்றி வீட்டுக்குள் திணிக்கும் மனைவியையும், "பாழாய் போகிறானே அன்பு மகன்’ என, மனம்வெதும்பும் தாய், தந்தையையும் நம்மூரில் நாளும் காணலாம். இப்படி, "போதையில் பாதை மறந்தோரை’ எந்தச் சமூகமும் மதிப்பதே இல்லை."ஒரு ஜாலிக்காக… எப்போதாவதுதான்… கம்பெனி கிடைக்கும்போது மட்டும்… என்ற "சால்ஜாப்பு’களுடன் துவங்கி… "கவலையை துறக்க, காதலியை மறக்க…’ என்று கூறி, "பிரிகேடியர்’, "நெப்போலியன்’,என (மதுபான வகையினரை) கையோடு "அழைத்து’ச் செல்கின்றனர். கல்லூரி இளைஞர்களும் மதுவைப் பழகி, தேர்வில் "பாஸ் மார்க்’கைவிட… வாழ்வில் "டாஸ்மாக்’ போதுமென, குடிக்கு அடிமையாகி வருகின்றனர். வாழும் காலத்தில், வம்பை விலைக்கு வாங்கி, திடகாத்திர பருவத்தில், திமிராய் திரியவைத்து, உழைப்பை மறக்கடித்து ஊனநிலைக்கு கொண்டு செல்கிறது குடிப்பழக்கம். இதனால் குடும்பமே சிதைவடைந்து போகிறது. "கோயில் நகர்’ மதுரையில் தெருவுக்கு தெரு கோயில்களை பார்த்தோம் அன்று! இன்று பார்…பார்…என்று "பார்கள்’ தான் பார்வையில் படுகின்றன. இங்கு மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இதே நிலமை தான். வறுமை, வசதி எப்படி என்றாலும் மதுவில் மயங்கி எழுகின்றனர் மதுரை வாசிகள்!

பாரில் மது அருந்திவிட்டு டூவீலரில் செல்லலாமா?

மது அருந்திவிட்டு, "எப்படியாவது வீடு போய் சேர்ந்துவிடலாம்’ என்று போதையில், அசட்டு நம்பிக்கையில், வாகனம் ஓட்டி விபத்தில் சிக்குவது மதுரையில் அதிகம். இதுகுறித்த புள்ளிவிபரம் போலீசாரிடம் இல்லை.போலீசார் கூறியதாவது: குடித்து விட்டு வாகன விபத்தில் சிக்கினால், குடும்பத்துக்கு பணப்பலன்கள் கிடைக்காது. இதற்காக, நாங்களும், டாக்டர்களும், குடிபோதையால் விபத்து ஏற்பட்டதாக சான்று தருவதில்லை. குடிபோதையில் வாகனம் ஓட்டி சிக்கினால், மத்திய போக்குவரத்து வாகன சட்டப்படி, முதல் முறை ரூ.2 ஆயிரம் வரையும், அடுத்த முறை ரூ.5 ஆயிரம் வரையும் அபராதம் விதிக்கிறோம். ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய ஆர்.டி.ஓ.,வுக்கு பரிந்துரைக்கிறோம், என்றனர்.
"அரசுதான் மதுக்கடை நடத்துகிறது. பாரில் மது அருந்திவிட்டு, தூரத்தில் உள்ள வீட்டிற்கு நடந்து செல்ல முடியாது. எனவே டூவீலரில், காரில் புறப்பட்டால், போதையில் வந்ததாக வழக்குப்பதிவு செய்கிறார்கள் என "குடிமகன்கள்’ குமுறுகிறார்களே’ என கேட்டதற்கு, ""கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கவே, மதுக்கடைளை அரசு நடத்துகிறது. அதற்காக, போதையில் வாகனம் ஓட்டி விபத்தில் சிக்குவதை அனுமதிக்க முடியுமா? இதனால்தான் அபராதம் விதிக்கிறோம்,’ என்கின்றனர் போலீசார்.

குடித்தால் மனிதன் ஓர் இயந்திரம்

மனநல மருத்துவ நிபுணர் சி.ராமசுப்ரமணியன்:

குடிப்பழக்கத்திற்கு அடிமையாவதும் ஒருவித நோய். இதற்கென மருந்துகள், நிபுணர்கள் உள்ளனர். இதை குணப்படுத்தலாம். உள்மன கொந்தளிப்பு, மனஉளைச்சல், உணர்வுக்கு வடிகாலாக சிலர், மதுவை நாடுகின்றனர். பிரச்னைகளை அறிவுபூர்வமாக, ஆக்கபூர்வமாக தீர்ப்பதற்கு பதில், இம்மாதிரி ரசாயன பொருட்களை தேடுகின்றனர். இந்தப் பொருள், செயற்கையான மகிழ்ச்சி, தைரியம், உத்வேகத்தை தருகிறது. இதன் "வீரியம்’ குறையும்போது, மகிழ்ச்சியும், உற்சாகமும் குறைகிறது.இப்பழக்கம் உடல், நரம்பு மண்டலம், மனநிலையை பாதிக்கிறது. எனவே தனிப்பட்ட நபர், ஒரு இயந்திரம் போலாகிறார். செல்லமுத்து அறக்கட்டளையின், "திரிசூல்’ அமைப்பு நடத்திய ஆய்வில், குடிப்பழக்கத்திற்கு ஆளானவர் மனநிலை மட்டுமின்றி, அவரை சார்ந்துள்ள மனைவி, மக்கள் மனநிலையும், உடல் நிலையும் பாதிப்பது தெரிகிறது. தந்தையால்,குழந்தைகள் தீயபழக்கத்திற்கு ஆளாகின்றனர்.

டாஸ்மாக்- மூடப்பட்டால்?

அரசு திடீரென டாஸ்மாக்கை மூடி விட்டால் என்ன செய்வீர்கள் என்று, ராமநாதபுரம் பாண்டுகுடியை சேர்ந்த ஆர்.சந்தோஷ்குமாரிடம், கேட்டபோது: டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால், மிக்க சந்தோஷம். வாரம் ஒரு நாள், அல்லது இரண்டு நாள் குடிப்பதையும் நிறுத்தி விடுவேன். ஒரு துயரத்தை மறக்க, குடித்து விட்டு, வீடு திரும்புவதற்குள், பல பிரச்னைகள் உருவானது. இது பணமும், மானமும் மிஞ்சும். உடலும், உள்ளமும் புத்துணர்ச்சியோடு இருந்து வாழ்வு சிறக்க வழிகாண்பேன்.கள்ளு வேணும்

பி.அங்குச்சாமி, திண்டுக்கல்:

எதையும் மெதுவாகத்தான் விட முடியும். அது போல திடீரென குடி ஓட்டத்தை நிறுத்தினால், உடல் சோர்ந்து போய்விடும். அரசு டாஸ்மாக் கடையை மூடினால், உடனடியாக கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும்.

மது குடிக்கனும்னா… புதுச்சேரி செல்லணும்

கே.கே.காளிதாஸ், 77, மூத்த குடிமக்கள், ஓய்வூதியர் நலச் சங்க தலைவர், மதுரை: நாங்க இளைஞராக இருந்த காலத்தில், இந்தளவுக்கு மது கிடைக்காது. கல்லூரியில் படிக்கும் போது, எனக்கு மதுன்னா என்னன்னு தெரியாது. ஆனால் சிலர் மருத்துகடையில் விற்கப்படும் "ஜிஞ்சர்பிரியை’ தண்ணீர் கலந்து குடிப்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். இப்ப மாதிரி, தெருவுக்கு தெரு மதுக்கடைகள் கிடையாது. போதையில் தெருவில் யாரும் கிடப்பதை பார்க்க முடியாது. கிராமங்களில் தென்னை, பனை மரங்களில் இறக்கப்படும் கள்ளை, சிலர் திருட்டுத்தனமாக குடிப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். நகரில் இருப்பவர்களுக்கு அதுவும் தெரியாது. அந்த காலத்தில் ஏதாவது பார்ட்டி என்றால், வீடுகளில் டிபன் சமைத்து கொடுப்போம். மது குடிக்க புதுச்சேரி, காரைக்காலுக்கு செல்வதுண்டு. தற்போது பள்ளி பருவத்தில், மதுவுக்கு அடிமையாகும் அளவு, அரசு டாஸ்மாக் கடைகளை திறந்திருப்பது வேதனை.

மது குடித்த நாட்கள்

ராஜா (ஷெனாய்நகர், மதுரை):

நான்ஆம்னிபஸ் டிக்கெட் ஏஜன்ட். 15 வயதில் கஞ்சா பழக்கம் இருந்தது. 25 வயதில் திருமணத்திற்குப் பின் குடிப்பழக்கம் ஏற்பட்டது. 10 ஆண்டுகள் அதிகளவு மது குடித்தேன். அதிகாலை 5 மணிக்கு துவங்கி, இரவு தூங்கும் வரை போதையில் மிதப்பேன். இந்நாட்களில் மனைவி, குழந்தைகள், உறவினர் யாரும் என்னை ஒரு ஆளாகவே மதிக்கமாட்டார்கள். ஒரு கட்டத்தில் எனக்கு "வலிப்பு’ நோய் வந்தது. அதன் பின், நான் மதுரை செல்லமுத்து அறக்கட்டளையின், "திரிசூல்’ அமைப்பில் சேர்ந்து, உடல், மனரீதியாக, சிகிச்சை, கவுன்சிலிங் பெற்றேன்.தற்போது 5 ஆண்டுகளாக குடிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. தற்போது வீட்டுக்கு பணம் கொடுக்கவில்லை என்றாலும், என்னை யாரும் தவறாக பேசுவதில்லை. மதுகுடித்த நாட்களில், வாழ்க்கையை வீணாக்கிவிட்டதாக தற்போது உணர்கிறேன்.

பல லட்ச ரூபாய் இழந்தேன்

மதுரை அரசு மருத்துவமனை மது போதை மறுவாழ்வு மையத்தில் கணவனுக்கு சிகிச்சை அளித்து வரும் மாதவி, கொட்டாம்பட்டி (ஊர், பெயர் மாற்றப்பட்டுள்ளது): நான்
பத்தாம் வகுப்பு படிக்கும் போதே திருமணமாகி விட்டது. சொந்த அத்தை பையன் தான். திருமணத்திற்கு முன்பே குடிப்பழக்கம் இருந்திருக்கிறது. ஆனால் எப்போதாவது என்பதால், பிரச்னையில்லை. இரண்டு குழந்தைகள் பிறந்தபின், அவரது குடிப்பழக்கம் அதிகமாகி விட்டது. அரசு ஊழியர் என்பதால், சம்பளம் சரியாக வந்தது. கடந்த ஓராண்டாக தொடர்ந்து குடிக்க ஆரம்பித்ததால், கை, கால் நடுக்கம் வந்து உடல் நலம் பாதித்தது. ஏற்கனவே தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று, பல லட்ச ரூபாய் இழந்துள்ளேன். குடிக்கக்கூடாது என பொண்டாட்டி, பிள்ளை, சொந்த, பந்தம் யார் சொன்னாலும் கேட்பதில்லை. குடித்துவிட்டு, சந்தேகப்பட்டு அடிப்பார். அவர் மனம் திருந்தி, பிள்ளைகளுக்காக வாழவேண்டும்.

இன்று முதல் குடிக்காதீர்

மதுரையில் செயல்படும் "சாந்திசேனா’ அமைப்பினர், டாஸ்மாக் கடைகள் முன்பு துண்டு பிரசுரங்கள் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த அமைப்பின் செயலர் வினாபா கூறியதாவது: விடுமுறை நாட்களில் தான், டாஸ்மாக்கை தேடி அதிகம் பேர் வருகின்றனர். எங்கள் இயக்கத்தினரும் அந்த நாட்களில், கடைகளின் வாசல் பகுதிகளில் நின்று, "குடியை ஒழிப்போம், குடும்பநலம் காப்போம்’ என்ற வாசகம் அடங்கிய துண்டு பிரசுரங்களை கொடுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இப்படி வழங்கும் போது, ஆதரவை விட எதிர்ப்பு தான் அதிகம். அதைபற்றி நாங்கள் கவலைப்படுவது இல்லை.திருந்த வேண்டும் என முயற்சிக்கும் பலரை, இதற்கான மையங்களில் சேர்த்து, அவர்களை குடியிலிருந்து, முற்றிலும் மீட்டெடுத்துள்ளோம். மதுக்கடைகளை அரசு நடத்தக்கூடாது, என நாங்கள் வழக்கும் தொடர்ந்துள்ளோம், என்றார்.

திருந்தியதால் மரியாதை

வாசுதேவன் (புதுப்பட்டணம், ராமநாதபுரம்): பி.ஏ., வரை படித்த நான், கூட்டுறவு சங்க ஊழியராக உள்ளேன். நண்பர்களுடன் சேர்ந்து மதுக்குடிக்கத் துவங்கினேன். ஏழாண்டுகள், எந்நேரமும் மதுவுக்கு அடிமையானேன். வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். அக்கவலையில், அதிகம் குடிக்கத் துவங்கினேன். குடும்பத்தையே மறந்த நான், இரவு வீடு திரும்புவதுகூட இல்லை.இதனால் குழந்தைகளின் படிப்புக்காக, என்னைப் பிரிந்த மனைவி, அவரது வீட்டுக்குச் சென்றுவிட்டார். திரிசூல் அமைப்பினர் தந்த ஆலோசனையால், தற்போது நான் திருந்திவிட்டேன். இதனால் எனக்கு சமூகத்தில் மரியாதை அதிகரித்துள்ளது. வங்கியிலும் என்னை நம்பி நகையைக் கூட தருகின்றனர்.

நன்றி-தினமலர்

ஓரம் போ ! வால்மார்ட் வண்டி வருது !

 

 

தொலைக் காட்சிகளில் மன்மோகன் சிங் சில்லறை வணிகத்தில் அந்நிய  முதலீடு அனுமதிக்கப்படுவது பற்றி விலாவாரியாக விளக்கம் கொடுத்துவிட்டார். பிரதமர், பெரிய பொருளாதார நிபுணர், அவருக்கு தெரியாததா? என்று படித்த இந்திய நடுத்தர வர்க்கத்தின் சில பேர் எந்தச் சம்பளமும் வாங்காமல் பிரசாரத்தில் இறங்கிவிடுவார்கள். ஆனால் மன்மோகன்சிங் வார்த்தைகளில் எவ்வளவு நம்பிக்கை வைக்கலாம் என்று அவரின் இணை பிரியாத சகா, உலக வங்கி கொடுத்த உறவுக் காரர் மாண்டேக்சிங் அலுவாலியாவிடம் கேட்டுப் பார்ப்போமா!

2002 டிசம்பர் 19 அன்று இதே மன்மோகன்சிங் (நாம் இதை சொல்லாவிட்டால் அது அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் இந்திரன் என்று கூட சொல்லுவார்கள்) நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர். அப்போது சிறுவணிகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படக்கூடாது என்று பேசியிருக்கிறார். பிறகு மும்பை வர்த்தகர் சங்கத்திற்கு சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படாது என்று நிதியமைச்சர் உறுதி அளித்துள்ளார் என்று கடமை உணர்வோடு கடிதமும் எழுதியுள்ளார். இவர் மட்டுமல்ல 2001 டிசம்பர் 16 அன்று காங்கிரஸ் கட்சியின் தலைமைக் கொறடா தாஸ் முன்சி சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீடு "தேச விரோதம்" என்று முழங்கியிருக்கிறார். இன்றைய அமைச்சர் கமல்நாத்தும் உணர்ச்சி பொங்க எதிர்த்திருக்கிறார். மன்மோகன் சிங்கே இப்படி பேசி இருக்கிறாரே ? என்று செய்தியாளர்கள் அலுவாலியாவிடம் கேட்டபோது " ஒவ்வொரு ஆளும் எப்போது என்ன பேசுகிறார் என்று என்னால் ஞாபகத்திற்கு கொண்டு வர இயலாது " என்று பதில் சொல்லி இருக்கிறார். இதுதான் மன்மோகன்சிங்கின் வார்த்தைகளுக்கு இருக்கிற மரியாதை. வடிவேல் பாணியில் இது வேற வாய் என்றுதானே அலுவாலியா சொல்லுகிறார். இன்னும் பத்து வருசம் கழித்து எந்த வாய் பேசுமோ நமக்கு தெரியாது.

யாருக்கு லாபம்!

சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீடு வருவது யாருக்கு லாபம்! யாருக்கு கொண்டாட்டம் என்று பாருங்களேன்.பிக்கி, சி.ஐ.ஐ, அசோச்செம் போன்ற பெருந் தொழிலதிபர்கள் அமைப்பு வரவேற்றுள்ளார்கள். அசோச்செம் ஒருபடி மேலே போய் எதிர்க் கட்சிகளும் எதிர்க்கக் கூடாது என்று அறிவுரை கூறியுள்ளது. அமெரிக்கப் பத்திரிக்கைகள் பாராட்டியுள்ளன.ரத்தன் டாடா இம்முடிவு அந்நிய முதலீட்டாளர் மத்தியில் நமது கௌரவத்தை உயர்த்தும் என்கிறார். ஏன் இவர்கள் இவ்வளவு குதூகலிக்க வேண்டும்? ஏற்கனவே இந்திய பெரும் தொழிலதிபர்கள் அந்நிய முதலீட்டுடன் கூட்டு வைத்துள்ளனர். வால்மார்ட் நிறுவனத்துடன் பாரதி நிறுவனம் 50 : 50 இணை வினையில் பின்புல ஆதரவைப் பெற்றுள்ளனர். டெஸ்கோ நிறுவனம் டாடாவின் ஸ்டார் பஜார் நிறுவனத்திற்கு இத்தகைய ஆதரவை அளித்துள்ளது. பன்னாட்டு முதலீட்டிற்கு அனுமதி தரும்போது தங்களது பங்குகளை மிக நல்ல விலையில் விற்று லாபம் பார்த்துக் கொள்ளலாம் என்ற கணக்கும் உள்ளது. உலகம் முழுக்க ஆண்டிற்கு 30 லட்சம் கோடி வருமானம் பார்க்கிற வால்மார்ட்டிற்கு கசக்கவா செய்யும்! இன்னும் 18 மாதங்களுக்குள்ளாக இந்தியாவில் முதல் கடையை திறந்து விடுவதாக பரபரக்கிறார்கள். இவர்களுக்கு எங்கே வியாபாரம் கிடைக்கும்! ஏற்கனவே சில்லறை வியாபாரச் சட்டியில் இருப்பது தானே! அதனால்தான் சிறு வியாபாரிகள் பயப்படுகிறார்கள்.

இது என்ன ஜனநாயகம்!

போன நவம்பர் 2011 ல் பிரதமர் கொடுத்த வாக்குறுதி என்ன! ஓர் கருத்தொற்றுமை ஏற்பட்ட பின்னர்தான் அந்நிய முதலீடு பிரச்சினையில் முடிவெடுப்போம் என்பதுதானே!

இப்போது என்ன கருத்தொற்றுமை வாழ்கிறது! ஆளுங்கட்சியை உள்ளே இருந்து ஆதரிக்கிற தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கின்றன. வெளியே இருந்து ஆதரிக்கிற முலாயம், மாயாவதியும் எதிர்க்கிறார்கள். பி.ஜே.பி எதிர்க்கிறது. இடதுசாரிகள் ஊசலாட்டம் இல்லாமல் உறுதியோடு எதிர்ப்பவர்கள். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கருத்தொற்றுமை  கிடையாது. கேரள மாநில காங்கிரஸ் முதல் அமைச்சர் உம்மன் சாண்டி என்ன கூறுகிறார் " சிறுவணிகத்தில் லட்சக் கணக்கானவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அந்நிய முதலீட்டு அனுமதி அவர்களைப் பாதிக்கும். கிராமங்களில் கூட நல்ல சிறு வணிகக் கட்டமைப்பை வைத்துள்ளோம்.எனவே இம்முடிவு கேரளாவுக்கு நல்லதல்ல"

இப்படி யாரையுமே ஏற்றுக் கொள்ளச் செய்ய இயலாத போது அந்நிய முதலீட்டைத் திணிப்பது என்ன ஜனநாயகம்! 123 கோடி மக்கள் வாழ்கிற நாட்டில் 36 கோடி மக்கள் இருக்கிற 11 மாநிலங்கள் மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளன. மன்மோகன்சிங் கண்டுபிடித்த குறுக்கு வழி என்ன தெரியுமா. ஏற்றுக் கொள்கிற மாநிலங்களில் மட்டுமே அனுமதிக்கப் போகிறோம் என்கிறார். முதலாளித்துவம் சந்தையில்தான் தேசத்தை காண்பார்கள் என்பதற்கு அசல் நெய்யில் செய்யப்பட்ட உண்மை இது.

உலக அனுபவம் என்ன ?


உலகமயம் பற்றி உபதேசிக்கிற மன்மோகன் சிங்கும், மாண்டேக் சிங் அலுவாலியாவும் அந்நிய முதலீடு உலகம் முழுவதும் ஏற்படுத்தி  இருக்கிற விளைவுகளை பார்க்க வேண்டாமா? தாய்லாந்தில் 67 சதவீத சிறுவணிக கூடங்கள் மூடப்பட்டு விட்டன. அலுவாலியாவிடம் ஊடகக்காரர்கள் கேட்ட போது "இத்தகைய ஆய்வுகள் பற்றி எனக்கு தெரியாது" என்று கூறியுள்ளார். மெக்சிகோவில் 1991 இல் வால்மார்ட் அனுமதிக்கப்பட்டது. இப்போதோ 50 சதவீத சந்தை அவர்கள் கையில். இதற்காக 120 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுத்ததாக வால்மார்ட் மீது குற்றச்சாட்டு வேறு. மாதத்திற்கு 11 கடை வீதம் 21 ஆண்டுகளில் 2765 கடைகளை விரித்துள்ளார்கள். 11 கோடி மக்கள் உள்ள அந்த நாட்டில் இவர்கள் உருவாக்கிய வேலை வாய்ப்பு வெறும் இரண்டு லட்சமே. இழந்ததோ எக்கச்சக்கம். இதைப் பற்றி அலுவாலியாவிடம் கேட்டால் "இன்றைக்கு இருக்கிற சிறு வணிகர்களின் சந்தை பங்கு அப்படியே இருக்கும் என்று நினைத்தால் முற்றிலும் தவறு. டாக்ஸிகள் வந்த போது குதிரை வண்டிகள் குறைந்து போயின. அதற்கு பிறகு குதிரை வண்டிகள் எண்ணிக்கை கூடவா செய்தது!" என்று சொல்லுகிறார். இதை விட ஒப்புதல் வாக்குமூலம் ஏதாவது வேண்டுமா? பன்னாட்டு நிறுவனங்கள் ஏகபோகத்தை நிறுவ நிறுவ சிறு கடைகள் காணாமல் போகும் என்பதே உண்மை.

விவசாயிகளுக்கு என்ன கிடைக்கும் ?


இரண்டு லட்சம் விவசாயிகள் கடந்த பத்து ஆண்டுகளில் தற்கொலை செய்த போது வராத கண்ணீர் இப்போது குடம் குடமாய் ஆட்சியாளர்களால் வடிக்கப்படுகிறது. சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு வருவதால் விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் பிரிட்டனின் அனுபவம் என்ன? அங்கு சில்லறை உணவுச் சந்தையில் 60 சதவீதத்தை நான்கு நிறுவனங்கள் மட்டுமே வைத்துள்ளன. அமெரிக்காவிலும் 60 சதவீதச் சந்தையை 5 நிறுவனங்களே வைத்துள்ளன. இப்படி ஏகபோகங்கள் வளர்ந்தால் விவசாயிகளின் நிலைமை என்ன? இதோ பிரிட்டன் ராயல் பால் உற்பத்தியாளர் சங்கம் புலம்புவதை பாருங்கள். விற்கிற காசில் 40 சதவீதம் கூட கைகளுக்கு வரவில்லை என்கிறார்கள். ஐரோப்பிய இணையத்தின் நாடாளுமன்றம் 2008 இல் "மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள் தங்களது அசுர பண பலத்தை பயன்படுத்தி விவசாயிகளின் விலைகளை தரைமட்டத்திற்கு இறக்கி இருக்கின்றன. நியாயமற்ற நிபந்தனைகளையும் அவர்கள் மீது சுமத்தி இருக்கின்றன" என்று செய்துள்ள பதிவு ஏன் இவர்கள் கண்களில் படவில்லை.

நுகர்வோருக்கும் ஆப்பு


பிரிட்டன் நாடாளுமன்றத்தில் 25 ஆண்டுகளாக உறுப்பினராக உள்ள இந்தியரான கெயித் வாஸ் இந்திய அரசின் இம்முடிவு பற்றி "கவனமாக இருங்கள். சில்லறை வணிகத்தை நவீன படுத்தலாம். ஆனால் தாரைவார்க்க கூடாது. ஏகபோகங்கள் உருவாவது சாமானிய மக்களுக்கு நல்லதல்ல" என்கிறார். யு.என்.ஐ குளோபல் ஸ்டடி – 2012 அறிக்கையின் படி "பெரிய நிறுவனங்கள் லாப வெறிக்காக தேவையற்ற செலவுகளை குறைப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் விவசாயிகள் மீதும், சிறிய துணை நிறுவனங்கள் மீதும், ஓட்டு மொத்த சமுகத்தின் மீதும் இச்செலவுகள் ஏற்றப்படுகின்றன" என்று கூறுகிறது. இந்த அறிக்கைகள் எல்லாம் ஏன் ஆட்சியாளர்களால் தூக்கி எறியப்படுகின்றன? ஆனால் அலுவாலியா சொல்லுகிறார். இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட சில்லறை வர்த்தகம் 6 சதவீதம் மட்டும் தான். ஆகவே ஏகபோகம் உருவாகாது என்பது அவர் வாதம். நாமும் இதே தான் சொல்லுகிறோம். இங்கு சந்தைக்கான வாய்ப்பு ரொம்ப உள்ளதால் தான் பன்னாட்டு நிறுவனங்கள் படை எடுக்கின்றன. அப்புறம் குதிரை வண்டிக்கு ஏற்பட்ட கதி தான்.அமெரிக்காவில் மாதம் ஒரு முறையோ வாரம் ஒரு முறையோ கடைகளுக்கு செல்பவர்கள் தான் அதிகமாம். இங்கேயோ தினமும் பையை தூக்குவோர் தான் நிறைய என்கிறார் அலுவாலியா. அதை தான் நாமும் சொல்லுகிறோம். வால்மார்ட் வரவில்லை என்று யார் அழுதார்கள்?

கூடாரத்திற்குள் ஒட்டகம்


10 லட்சம் மக்களுக்கு அதிகமாக உள்ள நகரங்களில் தான் அனுமதிக்க போவதாக அரசு அறிவித்துள்ளது. இது ஏதோ கட்டுப்பாடு அல்ல. இந்த நகரங்களில் தான் தங்களுக்கான சந்தை இருப்பதாக பன்னாட்டு நிறுவனங்கள் கருதுகின்றன. ஆகவே கூடாரத்திற்க்குள்  மூக்கை நுழைக்க அனுமதி கேட்கின்றன. சென்னை கோவை மதுரையை குறி வைக்கிற இவர்கள் விழுப்புரத்திற்கும், ஈரோட்டிற்க்கும், விருதுநகருக்கும் பின்னர் வருவார்கள். அனுமதி தருகிற பதினோரு மாநிலங்களில் தான் அனுமதிக்க போவதாக சொல்லுகிறார்கள். ஆனால் 82 நாடுகளுடன் இவர்கள் போட்டுள்ள சர்வதேச தொழில் உடன்பாடுகளின் படி சொந்த முதலீட்டிற்கும், மூன்றாவது நாட்டின் முதலீட்டிற்கும் தருகிற வாய்ப்புகளை மற்ற நாடுகளுக்கும் மறுக்க கூடாது என்பதே. நீல்கிரிஸ் கடையை திறக்க ஒரு மாநிலம் அனுமதித்தால் அவ்வளவு எளிதாக பன்னாட்டு மூலதனத்திற்கு அனுமதி மறுக்க முடியாது என்று அர்த்தம். மறுத்தால் கோர்ட்டுக்கு இழுக்கப்படலாம். எனவே கூடாரமே ஒட்டகம் வசமாக எத்தனை ஆண்டுகள் என்பதே கேள்வி.

ஆகையால் தான் ஓரம் போ என்கிறார்கள்.

க.சுவாமிநாதன்

லேட்டஸ்ட் ட்ரீட்மெண்ட்!

குறட்டைக்கு குட்பை!


"யுவுலோ பாலேட்டோ ஃபேரிஞ்சியல் பிளாஸ்டி…(யு.பி.பி.)’ சொல்லும் போதே தாடையை சற்றே அங்குமிங்கும் அசைக்க வேண்டியிருக்கிறதல்லவா! ஆமாம்! குறட்டையைக் கட்டுப்படுத்துவதற்கான லேட்டஸ்ட் சிகிச்சை தான் இது.
"மூச்சுக் குழாய் விரிவøயாமல் போவதே குறட்டைக்கான முக்கிய காரணம். தூங்கும் போது இந்தப் பிரச்னை அதிகம் வாட்டி எடுக்கும். அருகில் தூங்குபவர் துன்பத்துக்கு அளவே கிடையாது. மூக்கினுள் இருக்கும் பாலிப்களாலும் குறட்டை வரும். மூச்சுக்குழாய்க்குள் இருக்கும் வளையம் போன்ற அமைப்பு விரியாமல் போனால் போச்சு. இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். மூளைக்கு காற்று போவது தடைபடும். இது ஒரு அசாதாரண நிலை. இதற்கு மருந்து மாத்திரைகள் வேலைக்கு ஆகாது. ஆனால் இந்த யு.பி.பி. சிகிச்சை நல்ல சாய்ஸ்!’ என்கிறார் இ.என்.ட்டி… நிபுணர் ராமகிருஷ்ணன்.

கருப்பைக் கட்டிகளுக்கு கல்தா!

சமீபகாலமாக பெண்களுக்கு பெரும் தொல்லை எது தெரியுமா? கருப்பையில் வளரும் நார்த்திசுக் கட்டிகள் (ஃபைப்ராய்ட்ஸ்) தான். சிறிதும், பெரிதுமாக இருக்கும் இந்தக் கட்டிகள் கேன்சராக மாறாது என்பது ஒன்றே பெரிய ஆறுதல்.
"உண்மை. ஆனால் கருப்பையில் உள்ளே, வெளியே… என உருவாகும் இந்தக் கட்டிகளால் மாதவிலக்கின் போது அதீத வலி வரும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம், ரத்தப்போக்கு… என ஆபத்துகள் அணிவகுக்கும்…!’ என்கிறார் பிரபல மகப்பேறு மருத்துவர் மிருதுபாஷிணி கோவிந்தராஜன்.

இதற்கான லேட்டஸ்ட் சிகிச்சை என்ன?

சிலமணி நேரங்களில் செய்யக் கூடிய ஆபரேஷன்கள் இருக்கு. "மேக்னட்டிக் ரெஸோனன்ஸ் கைடட் ஃபோகஸ்டு அல்ட்ரா சவுண்ட் (எம்.ஜி.ஆர். எஃப்.யு.எஸ்) சிகிச்சையின் மூலம் "ஃபைப்ராய்டுகளை’ அழித்து விடலாம். பொதுவாக இந்த நார்த்திசுக் கட்டிகளை அகற்ற கருப்பையையே ரிமூவ் செய்து விடுவதும் உண்டு. இருந்தாலும் இந்த நவீன சிகிச்சையின் மூலம் எந்த உறுப்பும் அகற்றப்படாது. மாறாக, பாதிப்புகளை மட்டும் நீக்கி கட்டிகளுக்கு கல்தா கொடுக்கலாம்!’

ராஜநாகத்தை கடித்தே கொன்ற நேபாள விவசாயி!

பத்திரிகை உலகில், இளம் செய்தியாளர்களுக்கான பயிற்சியின் போது, "மனிதனை, பாம்பு கடித்தால், அது செய்தியல்ல, மனிதன், பாம்பை கடித்து இறந்தால் அது தான் செய்தி!’ என, வேடிக்கையாக குறிப்பிடுவதுண்டு. ஆனால், அதுவே நிஜமாகி, நேபாள நாட்டின் கிராமம் ஒன்றில், இந்த அதிசயம் நடந்துள்ளது.
நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டில் இருந்து, 200 கி.மீ., தொலைவில் உள்ளது பிர்ராத் நகர். அதன் அருகே, பிக்ரம் நிராவ்லா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முகமது சல்மோதின். இரவு நேரத்தில், தன் விவசாய நிலத்தை பார்வையிடச் சென்றார். அப்போது அவரை பாம்பொன்று கடித்தது. ஆனால், இருட்டில் பாம்பை அவர் பார்க்கவில்லை.
உடனடியாக வீட்டுக்குச் சென்ற அவர், டார்ச் லைட்டை எடுத்து, மீண்டும் நிலத்திற்கு திரும்பி, பாம்பை தேடினார். சம்பவம் நடந்த அதே இடத்திலேயே, ராஜநாகமொன்று படுத்திருந்தது. அதை சற்றும் தாமதிக்காமல் பிடித்து, அதன் உடலில் பல இடங்களில் நறுக் நறுக்கென்று கடித்தார். அவரது கடியை தாங்க முடியாமல் பாம்பு இறந்தது.
பாம்பை எடுத்துக் கொண்ட அவர், கிராம மக்களிடம் காண்பித்து நடந்தவற்றை விளக்கினார். அப்போது அவர் கூறுகையில், "பாம்பு நம்மை தீண்டினால் பயப்படாமல், அந்த பாம்பை கடித்து கொன்றால், அதன் விஷம் நம்மை எதுவும் செய்யாது என, என்னிடம் ஒருவர் தெரிவித்தார். அதை அப்படியே நம்பிய நான், என்னை கடித்த ராஜநாகத்தை கடித்து கொன்றேன்…’ என்றார்.
ஒருநாளுக்கும் மேலாக, பாம்பின் விஷம், இவரை ஒன்றும் செய்யவில்லை. வழக்கம்போல் தன் பணிகளை செய்து வருகிறார். இருப்பினும், அவரது வீட்டினரும், உறவினர்களும் வற்புறுத்தியதால், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வியந்தனர். காரணம், அவரது ரத்தத்தில், ராஜநாகம் கடித்து அதன் விஷம் கலந்ததற்கான அறிகுறி தென்படவே இல்லை. மருத்துவமனையில் இருந்து மகிழ்ச்சியாக வீட்டுக்குத் திரும்பினார்.
அவரை கடித்த பாம்பு, நேபாளத்தில் பொதுவாக காணப்படும் ராஜநாக வகையைச் சேர்ந்தது என்றும், அது விஷத்தன்மை அற்றது என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர்.
இருப்பினும், இங்கு ஆண்டுதோறும் பாம்பு கடிக்கு, 20 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் ஆயிரம் பேர் பலியாகி வருகின்றனர் என, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

வால்மார்ட்

இந்தியாவில், ஆண்டுக்கு 25.65 லட்சம் கோடி ரூபாய்க்கு சில்லரையில் வர்த்தகம் நடக்கிறது என, பொருளாதார நிபுணர்கள் கணக்கிட்டு உள்ளனர்.இதில், மளிகை பொருட்கள், ஆடைகள், காலணிகள், நகைகள், "வாட்ச்’ போன்ற தனிநபர் நுகர்வு பொருட்கள், அழகு சாதனங்கள், மருந்துகள், புத்தகங்கள், அறைகலன்கள், பாத்திரங்கள், பேன், லைட், பிரிட்ஜ் உட்பட மின் சாதனங்கள்; கணினி, செல்போன் உட்படமின்னணு பொருட்கள், புகையிலைபொருட்கள், சில்லரை கட்டுமானபொருட்கள் ஆகியவற்றின் சில்லரை வர்த்தகம் அடக்கம்.

பெரிய கடைகள்:

இப்படி, பரந்து விரிந்த சில்லரை வர்த்தக தொழிலில், பல இடங்களில் கடைகளை நடத்தும் பெரிய நிறுவனங்களின் பங்கு வெறும் ஆறுசதவீதம் தான் என, வர்த்தககூட்டமைப்புகளின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இந்தியாவில், மளிகைபொருட்கள் தவிர, மற்ற பொருட்களின்வர்த்தகத்தில், பெரிய நகரங்களைபொருத்த வரை பெரிய நிறுவனங்கள் தான் கோலோச்சி வருகின்றன.ஒவ்வொரு மாநிலத்திலும், போத்தீஸ், சென்னை சில்கஸ், கல்யாண் குழுமம், அலுக்காஸ்குழுமம், போன்ற பெரிய சில்லரைவர்த்தக நிறுவனங்கள் உருவாகி உள்ளன. அவை தற்போது, அண்டைமாநிலங்களிலும், தங்கள் கிளைகளைதுவக்கி வருகின்றன. லைப்ஸ்டைல், ஷாப்பர்ஸ் ஸ்டாப், லேண்ட்மார்க், வெஸ்ட் ஸைட், ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் போன்ற நிறுவனங்கள் பலமாநிலங்களில் கடைகளை நடத்தி வருகின்றன.இவற்றை விற்பனை செய்யும் சிறிய கடைகள் இருந்து வந்தாலும், அவற்றை அந்தந்த பகுதி மக்கள் மட்டுமேநாடுகின்றனர். இதனால், பெரிய நகரங்களில், சிறிய கடைகளின் முக்கியத்துவம் குறைந்து கொண்டே வருகிறது.மளிகை பொருட்களை பொறுத்தவரை, நீலகிரீஸ், ரிலையன்ஸ் பிரஷ், ஸ்பென்ஸர்ஸ், மோர் போன்ற பெரிய கடைகள் கடந்த ஐந்துஆண்டுகளாகவே, தங்கள் வர்த்தகத்தைவிரிவுபடுத்தி, வளர்ந்து வருகின்றன.இதனால், பல கிளைகள் கொண்ட பெரிய கடைகளின் வரவோ, விரிவாக்கமோ, நம் நாட்டில்புதிதல்ல.

மளிகை பொருட்கள்:

மொத்த சில்லரை வர்த்தகத்தில், மளிகை பொருட்களின் பங்கு 61 சதவீதம்.மளிகை வர்த்தகத்தில், பெரியநிறுவனங்கள் இருந்து வந்தாலும், இவை, பெரிய அளவில் ஊடுருவவில்லை. இதனால், சில்லரை வர்த்தகத்தில் பெரிய நிறுவனங்களின் பங்கில், மளிகை பொருட்களின் பங்கு 18 சதவீதம் தான் என, தேசிய வேளான் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) தெரிவிக்கிறது. அதாவது, மொத்த சில்லரை வர்த்தகத்தில் ஒரு சதவீதம் தான்.மேலும், நபார்டின்கணிப்புப் படி பெரிய நிறுவனங்களின் மளிகை வர்த்தகத்தால், சிறிய கடைகளின் விற்பனை குறையவில்லை என, தெரிகிறது.இதற்கு, சிறிய கடைகள் வழங்கும் கடன் வசதி, சிறிய அளவிலான விற்பனை,வீட்டிற்கு பொருட்களை கொண்டு தரும் வசதி, ஆகியவை காரணங்களாக கூறப்படுகின்றன. 60 சதவீதம் நுகர்வோர்,காய்கறிகள், பழங்கள், முட்டை, பால், இறைச்சி போன்றவற்றை, அவரவர் பகுதியில் உள்ள சிறிய கடைகளில்வாங்குவதையே விரும்புவதாக நபார்டு நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.தற்போது, மளிகை வர்த்தகத்தில், பெரியகடைகள் ஏற்படுத்தியுள்ள குன்றிய தாக்கம் மற்றும் நுகர்வோரின் விருப்பங்களைகணக்கில் கொள்ளும் போது, வெளிநாட்டுநிறுவனங்கள், சிறிய கடைகளுக்கு, உடனடியாக பெரிய பாதிப்பை ஏற்படுத்துமா என்பதுகேள்விக்குறியாக உள்ளது.

ரூ.224.50 லட்சம் கோடி!

டிலாய்ட் பொருளாதார ஆய்வு நிறுவனம்ஒவ்வொரு ஆண்டும், "க்ளோபல்பவர்ஸ் ஆப் ரீடெய்லிங்க்’ என்றஅறிக்கையை வெளியிடுகிறது. இதில், உலகில் சில்லரை வர்த்தகத்தில் முன்னிலையில்இருக்கும் 250 நிறுவனங்கள் பற்றிஆய்வு விவரங்கள் வெளியிடப்படுகின்றன.

2012ம்ஆண்டிற்கான, இந்த அறிக்கையின்விவரங்கள் படி;

*உலகின்முன்னணி சில்லரை வர்த்தக நிறுவனங்களின், ஒரு ஆண்டிற்கான, மொத்தவிற்பனை – 224.50 லட்சம் கோடிரூபாய்

*இதில், 52.50 லட்சம் கோடி ரூபாய் விற்பனை, இந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் நடத்தும்கடைகளில் இருந்து வந்தது.

*ஒவ்வொருநிறுவனத்தின் சராசரி ஆண்டு விற்பனை – 89,860 கோடி ரூபாய்

*250 முன்னணிநிறுவனங்களில், 147 நிறுவனங்கள்வெளிநாடுகளில் கடைகள் வைத்துள்ளன.

முனணியில் உள்ள 10 நிறுவனங்கள்

நிறுவனம் தாய் நாடு செயல்படும் நாடுகள்

வால்மார்ட் அமெரிக்கா 16

கேரேபோர் பிரான்ஸ் 33

டெஸ்கோ இங்கிலாந்து 13

மெட்ரோ ஜெர்மனி 33

தி குரோகர் கோ. அமெரிக்கா 1

ஷ்வார்ஸ் ஜெர்மனி 26

காஸ்ட்கோ அமெரிக்கா 9

தி ஹோம் டிப்போ அமெரிக்கா 5

வால்கிரீன் அமெரிக்கா 2

ஆல்டி ஜெர்மனி 18

கோலி சோடாவிற்குவால்மார்டில் இடம் கிடைக்குமா?

சில்லரை வணிகத்தில் அன்னியமுதலீட்டை அனுமதிப்பதால், தமிழகத்தில்மட்டும், 22 லட்சம் சில்லரைவியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், உள்ளூர் தயாரிப்புக்கள் எல்லாம், மறைந்து அன்னிய நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை மட்டும் வாங்கும்நிலைக்கு தள்ளப்படுவோம் என்ற, கருத்துமுன் வைக்கப்படுகிறது.வியாபாரிகள்தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதைப் பற்றி கவலைப்படாமல், சில்லரைவணிகத்தில், அன்னிய முதலீட்டைநேரடியாக அனுமதிக்கும் முடிவை, மத்தியஅரசு எடுத்து உள்ளது. இதனால், பொருட்களின் விலை குறையும், தரமான பொருட்கள் கிடைக்கும் என்பதோடு, நாட்டின் பொருளாதாரமும் மேம்படும் என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இது ஏமாற்று வேலை எனவும், இது சிறு வணிகர்களின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகமுடக்கும் செயல் என, வணிகர்கள்சங்கங்கள் கொதிப்படைந்துள்ளன. இதுகுறித்து, அனைத்து தரப்புவிஷயங்களையும் அலசி, ஆராய்ந்துபார்ப்போம்…

உள்ளூர்தயாரிப்புகள் காணாமல் போகும்:

த.வெள்ளையன்தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை :

சில்லரை வணிகத்தில் அன்னியமுதலீட்டை அனுமதிப்பதால், உள்ளூர்தயாரிப்புகள் காணாமல் போகும். கொக்ககோலா, பெப்சி போன்றவை வந்து,உள்ளூர் தயாரிப்பு பானங்கள் காணாமல் போனதே உதாரணம்.அன்னிய நிறுவனங்கள், அதிக பட்ச முதலீடு, அதிரடிவிளம்பரம், அரசியல் உதவிகள், அநியாய வியாபாரம் என்ற கொள்கையுடன் தான்வருகின்றன.போட்டியாளர்கள் மற்றும்உள்ளூர் வியாபாரிகளை திட்டமிட்டு அழிப்பர். உள்ளூர் தயாரிப்புக்களை மொத்தமாக வாங்கி, அதை புழக்கத்தில் விடாமல் முடக்கி, அழித்துவிட்டு, அவர்களின்தயாரிப்புக்களை விற்பனை செய்வர். உற்பத்திபொருட்களை, ஒட்டுமொத்தமாக நேரடிகொள்முதல் செய்வர். உள்ளூர்வியாபாரிகளுக்கு தர மாட்டார்கள்.இதனால், குறிப்பிட்ட ஒரு பொருளை வாங்கச் செல்லும்பொதுமக்கள், காய்கறி முதல் கார் வரைஎல்லாம் கிடைக்கும் என்ற விளம்பரத்தால், எல்லா பொருட்களையும் அங்கேயே வாங்க விரும்புவர்.இதனால், தமிழகத்தில்நேரடியாகவும், மறைமுகமாகும் சில்லரைவர்த்தகத்தின் மூலம் பயன்பெற்று வரும், 40 லட்சம் வியபாரிகளின் வாழ்க்கை பாதிக்கப்படும்.உற்பத்தியாளர்களிடம் நேரடி கொள்முதல் செய்து, அப்படியே விற்பதால், விலைகுறையும் என, பிரதமர் கூறுகிறார். இது அறிவு சார்ந்த கருத்து அல்ல. உற்பத்தியாளர்களிடம் நேரடி கொள்முதல் செய்யும்நிறுவனங்கள், அவற்றை கிடங்குகளில்பதுக்கி, உலக அளவில் வர்த்தகம்செய்வதால், விலை அதிகம் கிடைக்கும்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்கள்.பிறஇடங்களில் உள்ள மட்டமான பொருட்கள் இங்கு இறக்குமதியாகும்.தரமில்லாத பொருட்களையும் மக்கள், அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை வரும். இதனால், சில்லரைவியாபாரிகள் மட்டுமின்றி, பொதுமக்களும்பாதிக்கப்படுவர். மத்திய அரசு, இதை தடுக்காது. அமெரிக்காவின் உத்தரவுக்கு பணிந்து, மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவை எதிர்க்க வேண்டியது நமது கடமை.

சில்லரைவியாபாரிகள் ஒட்டு மொத்தமாக முடங்குவர்:

விக்கிரமராஜாதலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கபேரமைப்பு :

சில்லரை வர்த்தகத்தில் அன்னியமுதலீட்டை அனுமதிப்பதால், காய்கறிசந்தைகள், சிறிய உணவகங்கள் எல்லாம்இழுத்து மூடப்படும். வால்மார்ட்போன்ற, வெளிநாட்டு நிறுவனங்கள்இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும். வால்மார்ட்நிறுவனம், 27 லட்சம் கோடி ரூபாய்முதலீட்டில் வர்த்தகம் செய்கிறது.இந்தநிறுவனம், சீசன் கால பொருட்களைஒட்டுமொத்தமாக வாங்கும். தமிழதத்திற்குஆண்டுக்கு, 5,000 டன் நெல்தேவையெனில், விவசாயிகளிடம், அதை ஒரே நாளில் கொள்முதல் செய்யும். விலை குறைவாக இருந்தாலும், கையில் உடனே பணம் கிடைக்கிறதே என, விவசாயிகளும் உற்பத்திப் பொருட்களை தர முன்வருவர். காய்கறி உள்ளிட்ட எல்லாஉற்பத்திப் பொருட்களும் அவர்களிடம் செல்வதால், சந்தைக்கு வராது.இந்தசந்தைகளால் பயனடையும் , 22 லட்சத்திற்கும்மேற்பட்ட சில்லரை வியாபாரிகள் வாழ்க்கை பாதிக்கப்படும். ஆரம்பத்தில் உள்ளூர் தயாரிப்புகளை வாங்கும் அன்னிய நிறுவனங்கள், சில ஆண்டுகளில் சில்லரை வியாபாரிகள்ஒட்டுமொத்தமாக முடங்கியதும், உள்ளூர்தயாரிப்புக்கள் வாங்குவதை முற்றிலும் கைவிடுவர். ஏற்கெனவே, நம் பகுதியில்தயாரித்த, கோல்ட் ஸ்பாட், வின்சென்ட், போன்ற குளிர் பானங்கள் காணாமல்போய், பெப்சி, கோக் போன்றவற்றின்ஆதிக்கம் வந்துள்ளதே உதாரணம். வெளிநாட்டுநிறுவனங்களின் வருகையால், தமிழகத்தில், எல்லா நிலைகளிலும் வியாபாரிகள் பாதிக்கப்படுவர். இந்த நிறுவனங்களுக்கு ஆதரவாகத்தான், உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தையும் மத்தியஅரசு கொண்டு வந்துள்ளது. இதைதடுத்து வியாபாரிகளும், மக்களும்போராட வேண்டும்.

விவசாயிகளுக்கும்பாதிப்பு வரும்

வேல்சங்கர்தலைவர், தமிழ்நாடு உணவுப்பொருள்வியாபாரிகள் சங்கம் :

கிராமப்புறங்களில் விவசாயிகளுக்குதேவையான கட்டமைப்புகளை, அன்னியநிறுவனங்கள் செய்து கொடுத்த பின்புதான், அன்னிய நிறுவனங்களை அனுமதிப்போம் என, மத்திய அரசு கூறுகிறது. வெளிநாடுதொழில்நுட்பங்களை வாங்கி, பல கோடிரூபாயில் நாம் ராக்கெட் செலுத்துகிறோம். விவசாயிகளுக்கு கட்டமைப்பு செய்ய, அன்னிய
நிறுவனங்களை ஏன் அழைக்க வேண்டும்.நாட்டின்வளம் நம் கையில்தான் இருக்க வேண்டும். அன்னியர்களிடம் விடக்கூடாது. ஆரம்பத்தில் கூடுதல் விலை கொடுத்து வாங்குவோர். நாளடைவில் விலையை பாதியாக குறைப்பர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவர். உற்பத்தியாளர்களை சார்ந்து தொழில் செய்தவியாபாரிகளும் பாதிக்கப்படுவர். அமெரிக்காவின்பொருளாதாரம் சீரழிந்ததுபோல், நம்நாடும் சீரழியும் நிலை வரும். அன்னியமுதலீட்டு அனுமதியை கைவிட்டு, விவசாயிகளுக்குதேவையான கட்டமைப்பு வசதிகளைச் செய்து தர, மத்திய அரசு முன் வரவேண்டும்.

"அன்னியநிறுவனங்களின் இறக்குமதியால் விவசாயிகள் அழிந்துவிடுவர்’:

டாக்டர். மோகன் ,செயலர், தமிழ்நாடுநெல், அரிசி மொத்த வியாபாரிகள்மற்றும் அரிசி ஆலை உரிமையாளர் சங்கங்களின் சம்மேளம் :

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு என்பதுவரவேற்புக்குறியது அல்ல. அது இந்தியவிவசாயிகளின் பொருளாதாரத்தை பின்னோக்கி தள்ளிவிடும். அன்னிய முதலீட்டை எலக்ட்ரானிக், விமான போக்குவரத்து உள்ளிட்ட மற்ற எந்த துறையில் வேண்டுமானாலும்அனுமதிக்கலாம். ஏனெனில் அதில் நாம்பின் தங்கி உள்ளோம். ஆனால்உணவுப்பொருள் துறையில் அத்தகைய நிலை இல்லை.இந்தியாவில், 58.8 சதவீதமக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். 20 கோடி வணிகர்கள் உள்ளனர். அன்னியமுதலீட்டை அனுமதித்தால் அவர்களின் வாழ்வாதாரம் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்படும்.அன்னிய முதலீடு உள்ளே வருவதால், 10 கோடி பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள்கிடைக்கும் என்பது நடைமுறைக்கு உதவாத வாதம். அதனால், 20 கோடி பேர் சுயவேலை வாய்ப்பை இழந்து, அன்னியமுதலீட்டாளர்களிடம் வேலைக்காரர்களாக மாறும் நிலைதான் ஏற்படும்.இந்தியாவிற்குள் வரும் போது, குறைந்த விலையில் உணவுப்பொருட்களை கொடுக்கும்அன்னிய முதலீட்டு நிறுவனங்கள், ஒருசில மாதங்களில் தங்களின் சர்வாதிகாரத்தை செயல்படுத்துவர்.அதன் மூலம் அவர்கள் நிர்ணயிக்கின்ற விலைக்கு பொருட்களை வாங்கவேண்டிய நிலைக்கு நுகர்வோர் தள்ளப்படுவர். உதாரணத்திற்கு குளிர்பானங்கள், குடிநீர் பாட்டில்களின் விலை உயர்வை நாம் அறிவோம்.மொத்தத்தில் அவர்கள் இந்திய விவசாயிகளிடம் பொருட்களை வாங்க மாட்டார்கள். உலக சந்தையில் குறைந்த விலைக்கு வாங்கி, இங்கு தங்களை வளர்த்துக்கொள்வர். இங்கு உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு நமதுவிவசாயிகள் நிர்ணயிக்கும் விலையை அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இது தான் அன்னிய முதலீட்டின் நிலை.

விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்

ஜெயக்குமார் தலைவர், சென்னை பெருநகர சரக்கு வாகனபோக்குவரத்துஏஜென்டுகள் சங்கம்:

அன்னிய முதலீட்டால் தொழில் வளர்ச்சி மேம்படும். இந்தியா விவசாய நாடுதான். ஆனால் அதற்குரிய வளர்ச்சி திட்டங்கள் மிகவும்குறைவு. அடிப்படையில் நான் ஒருவிவசாயி. இன்றும், 10 ஏக்கரில் மஞ்சள், கரும்பு ஆகியவற்றை பயிரிட்டு வருகிறேன் என்றாலும் நஷ்டத்தையே சந்திக்கவேண்டி உள்ளது.விளை பொருளை உற்பத்திசெய்யும் விவசாயி அதற்குரிய விலையை நிர்ணயம் செய்ய முடியாத வியாபார நெருக்கடிநாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்நிலை மாறினால்தான் பொருளாதாரம் மேம்படும். ஆனால் இப்போது வரை விவசாயிகளிடம் இருந்து பொருட்களை கொள்முதல் செய்யும்இடைத் தரகர்கள்தான் அதிக லாபம் அடைகின்றனர். இதனால், 75 சதவீதம்இடைத்தரகர்களின் ஆதிக்கம் உள்ளது. அவர்களின்ஆதிக்கத்தால், உழைக்கின்றவிவசாயிகள் பலவீனமாகி விடுகின்றனர்.அவர்களின்உழைப்புக்கேற்ற வருவாய் கிடைப்பதில்லை. அதனால்தான் பலர் விவசாய நிலத்தை விற்று, வேறு தொழில்களுக்கு மாறிவிடுகின்றனர். விவசாய நிலங்கள் "கான்கிரீட்’ காடுகளாக மாறி வருவதால் மழை குறைந்து, இயற்கை வளமும், பொருளாதாரமும் சீர்குலைந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அன்னியமுதலீட்டு நிறுவனங்கள் இங்கு வருவது வரவேற்கத்தக்கது. அவை, விளை பொருட்கள்உற்பத்தி செய்யப்படும் விவசாய பகுதிகளுக்கு நேரடியாக சென்று, அவற்றுக்குரிய விலை கொடுத்து கொள்முதல்செய்யும். மேலும் விவசாயிகளுக்குஉதவும் வகையில் மானியம் மற்றும் கடனுதவிகளை அளித்து, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும். இது போன்ற மாற்றத்தால் நாட்டில் வேகமான பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

பாதிக்குமா?பாதிக்காதா?

சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீடு குறித்து, எக்கச்சக்ககேள்விகள் எழுந்துள்ளன. அவற்றிற்குபதில்களை தேடுவோம்…

அன்னிய நிறுவனங்கள் வந்தால்,அரசு கூறுவதுபோல், உணவு பொருட்கள் வினியோகத்திற்கான கட்டமைப்பு மேம்படுமா?

இந்தியாவில், காய்கறி, பழங்கள் போன்றதோட்டக்கலை பயிர்கள், ஒவ்வொருஆண்டும், கட்டமைப்பு வசதிஇல்லாததால், 30-40 சதவீதம் வரைவிணாவதாக அரசின் ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இதில், குளிரூட்டுவசதிக்கான தேவைக்கும், இருப்புக்கும்மட்டும் உண்டான வித்தியாசம், 2.50 கோடிடன் என, கூறப்படுகிறது.அன்னிய நிறுவனங்கள் வந்தால், இந்த குளிரூட்டு வசதிகளை மேம்படுத்த முடியும், ஆனால், குளிரூட்டு வசதிகள் இந்த பயிர்கள் வீணாவதில் ஒரு பங்கு தான்.நிபுணர்கள் கருத்து படி,தோட்டக்கலை பயிர்களை, தோட்டத்தில் இருந்து சந்தைக்கு கொண்டு செல்லும் போது தான் பெருமளவு நஷ்டம்ஏற்படுகிறது.இது, சாலைகள் மேம்பட்டால் மட்டுமே சரியாகும். அதனால், அன்னிய நிறுவனங்கள் இதில் பங்களிக்க முடியுமா என்பது சந்தேகம் தான்.மேலும், இந்த வகையான கட்டமைப்புகளை உருவாக்குவது அரசின் பொறுப்பு. இதற்காக, எண்ணற்ற திட்டங்கள் வகுக்கப் பட்டு, சரியாக செயல்படுத்தப் படாததால், அவை தோல்வி அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த அளவிலானாலும், கட்டமைப்புகள் எந்த அளவிற்கு மேம்படும்?

நம் நாட்டில், மொத்த விற்பனையில், 100 சதவிதம்அன்னிய முதலீடு, 2006ம் ஆண்டு முதல், அனுமதிக்கப் படுகிறது.சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீட்டிற்கு அரசு அனுமதி அளிக்கும் என்று தெரிந்து, அன்னிய நிறுவனங்கள் இங்கு ஏற்கனவே மொத்தவிற்பனை தொழிலை துவங்கிவிட்டன.வால்மார்ட்நிறுவனம், "பெஸ்ட் ப்ரைஸ்’ என்ற பெயரில், 17 இடங்களில் செயல்படுகிறது. ஜெர்மனியின்மெட்ரோ நிறுவனம், "மெட்ரோ கேஷ்அண்டு கேரி’ என்ற பெயரில், 11 இடங்களில் செயல்படுகிறது. பிரான்ஸின் கேரேபோர் நிறுவனம், "கேரேபோர் ஹோல்சேல் கேஷ் அண்டு கேரி’ என்ற பெயரில், டில்லி மற்றும் ராஜஸ்தானில் செயல்படுகிறது.அதாவது, பொருட்களை வாங்கிசேமித்து வைக்கும் நிர்வாக அமைப்புகள், கிடங்குகள் ஆகியவை உருவாக்கப்பட்டு விட்டன. கடைகளை தொடங்குவது மட்டும் தான் மிச்சம்.இவை, கடந்த ஆறு ஆண்டுகளாகஉருவாகிய பின்பும், வேளான்பொருட்களின் வினியோக கட்டமைப்புகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை.கால போக்கில் இவற்றை விரிவுபடுத்த வாய்ப்புஉள்ளது. இருப்பினும் எந்த அளவிற்குமேம்படும் என, தெரியவில்லை.

பெரிய நிறுவனங்களின் நேரடி கொள்முதல் மூலம்விவசாயிகளுக்கு, நல்ல விலைகிடைக்கும் என, அரசு கூறுகிறதேஉண்மையா?

இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகள், விவசாயிகளின் சந்தைபடுத்தும் பலவீனத்தைபயன்படுத்தி கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர், என்பது பாட புத்தகங்களிலேயே உள்ள விஷயம்.தேசிய வேளான் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு), கடந்த ஆண்டுநடத்திய ஆய்வில், ஸ்பென்ஸர்ரீட்டெயில் சூப்பர்மார்க்கெட்டுகளில் எடுக்கப்பட்ட தகவலின் படி, நேரடி கொள்முதல் மூலம் விவசாயிகளுக்கு, 8 சதவீதம் வரை அதிக விலை கிடைப்பதாகதெரியவந்தது.உள்நாட்டில், பெரிய சில்லரை வர்த்தக நிறுவனங்கள் ஏற்கனவேநேரடி கொள்முதலில் ஈடுபட்டு உள்ளன. இது, அன்னிய நிறுவனங்கள் வந்தால் அதிகரிக்கும்.இது தவிர, நேரடி கொள்முதல் மூலம் வளை பொருட்கள் வீணாவது, 7 சதவீதம் வரை குறையும் என, நபார்டுகணக்கிட்டு உள்ளது. இதுவும், விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை தரும்.

நேரடி கொள்முதலினால் ஏதாவது அபாயம் உள்ளதா?

நேரடி கொள்முதலில், பெரிய நிறுவனங்கள், விவசாயிகளிடம்குறிப்பிட்ட பயிர்களுக்கான ஒப்பந்தத்தை செய்து கொள்ளும். அதில், எத்தனை ஏக்கரில்பயிரிடப்பட வேண்டும், எவ்வளவுவேண்டும், பயிர்களின் ரகம், தரம், அளவு, நிறம் உள்ளிட்டவைகுறிப்பிடப்படும்.அதாவது, சூப்பர்மார்கெட்டுகளில் பெரும்பான்மையானோர்வாங்குவதற்கு ஏதுவாக இந்த அளவுகோல்கள் உருவாக்கப்படும்.இதனால், பயிர் பன்மைபாதிக்கப்படும் அபாயம் உண்டு. காலபோக்கில், இந்த ஒப்பந்தங்கள்அதிகரித்தால், மலை வாழைப்பழம், மாகாளி கிழங்கு போன்றவை, விவசாயிகளால் கைவிடப்படும் நிலை ஏற்படலாம். இதன் தாக்கம் தெரிவதற்கு பல ஆண்டுகளாகும். ஆனால், பெரிய நிறுவனங்கள் முழுமையாக, அனைத்து இடங்களுக்கும் ஊடுறுவினால் மட்டுமே இது நடக்கும்.மேலும், ஒப்பந்தம் செய்து கொள்ளும் விவசாயிகள், நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, தகுந்த நிறத்திலோ, தகுந்தவளைவுடனான வாழைப்பழத்தை விளைவிக்காவிட்டாலோ, அந்த பயிர் ஏற்றுக்கொள்ளப் படாது. இதனால், சமயத்தில், விவசாயிகள் நஷ்டம் அடைய வாய்ப்பு உள்ளது.

அன்னிய நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து அனைத்து பொருட்களையும் மலிவு விலையில் இறக்குமதிசெய்து, உள்ளூர் கடைகளை "போண்டி’ ஆக்கிவிடுமா?

என்ன இறக்குமதி செய்தாலும்,அது இந்திய அரசின் இறக்குமதி வரன்முறைகளுக்குள் தான் செய்யமுடியும். அதாவது, அன்னிய நிறுவனங்கள் எதை இறக்குமதி செய்தாலும், அதையே இந்திய நிறுவனங்களும் செய்வதற்கு எல்லாவசதிகளும் உள்ளன.அதனால், அன்னிய நிறுவனங்களால் எல்.சி.டி., டி.வி.,யின் விலை திடீரென 2,000 ரூபாய்குறைத்து விற்பனை செய்ய முடியாது. உலகமெங்கும், சாம்சங் போன்ற டி.வி., நிறுவனங்கள் தான்செயல்படுகின்றன. அதனால், அன்னிய நிறுவனங்களால்,பெரும்பாலான பொருட்களில், உள்நாட்டு நிறுவனங்கள் வழங்காத அதிரடி சலுகைகளை வழங்க முடியாது.

சிறிய மற்றும் உள்நாட்டு கடைகள், அன்னிய நிறுவனங்களின் வருகையால் பாதிக்கப்படுமா?

சில்லரை வர்த்தகம் என்பது மளிகை பொருட்களின்வர்த்தகம் மட்டும் அல்ல (இந்தியாவில்சில்லரை வர்த்தகம் கட்டுரையை பார்க்கவும்). மளிகை பொருட்கள் தவிர மற்ற பொருட்களுக்கான வர்த்தகத்தில், உள்நாட்டு நிறுவனங்கள் நன்கு வளர்ந்துள்ளன. உதாரணத்திற்கு ஜவுளி, நகை போன்ற பொருட்களின் வர்த்தகம்.அதனால், இவை அன்னிய நிறுவனங்களின் வருகையால் பெரிய அளவில் பாதிக்கப்படவாய்ப்பில்லை.ஆனால், நம் நாட்டில், மொத்த சில்லரை வர்த்தகத்தில், மளிகை வர்த்தகம் தான் 61 சதவீதத்தைபிடித்து உள்ளது. இதில், பெரிய நிறுவனங்களின் பங்கு வெறும் ஒரு சதவிதம்தான். இதனால், அன்னிய நிறுவனங்கள் வந்தாலும், இது பெரிய அளவு அதிகரிக்குமா என்பது சந்தேகம்தான்.மேலும், நபார்டு ஆய்வின் படி,60 சதவீதத்திற்கும் மேலான மத்தியதர வர்க்கத்தினர், மளிகை பொருட்கள் வாங்குவதற்கு, சிறிய கடைகளையே விரும்புவதாக தெரியவந்து உள்ளது. (மேலும், தகவலுக்கு, வால்மார்ட்தோல்விகள் பகுதியை படிக்கவும்)இந்தியாபரந்து விரிந்த நாடு என்பதால், பெரியநகரங்களில், அன்னிய நிறுவனங்களால், பாதிப்பு ஒரளவிற்கு ஏற்பட்டாலும், மற்ற இடங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.

சுய தொழில் பாதிக்கப்படுமா?

தேசிய மாதிரி மதிப்பீடு நிறுவனம், 2004-05ல் எடுத்த வேலை வாய்ப்பிற்கான மாதிரிமதிப்பீட்டின் படி, 3.50 கோடி பேர்சில்லரை வர்த்தக தொழிலில் ஈடுபட்டு இருந்தனர். நாட்டில், வேலைபார்க்கும்வயதில் உள்ளவர்களில், இது 7.30 சதவீதம்.நம் நாட்டை பொறுத்தவரை, குறைந்தமுதல் வைத்து, சுலபமாக தொடங்கக்கூடிய சிறு தொழில் கடை வைப்பது தான்.ஏனெனில், பொருள் உற்பத்திபோன்ற தொழில்களுக்கு, அதிக முதல்தேவைப்படுவதோடு, அரசாங்கத்தின்எண்ணற்ற விதிகளாலும், ஊழலாலும், உற்பத்தி தொழிலில் இறங்குவது சற்று சிரமமானவிஷயம் தான்.சில்லரை வர்த்தகத்தில், காலப் போக்கில், பெரிய நிறுவனங்களின் ஆதிக்கம் முழுமையாகி விட்டால், சிறு கடைகள் போடுவதற்கான வாய்ப்புகள்குறைந்துவிடும். இதனால், முதலை கொஞ்சம் கொஞ்சமாக ஈட்டி வரும்சமுதாயங்களால், கடைகள் அமைத்து, தங்கள் சமுதாயத்தினரின் முதலை பெருக்குவதற்கானவாய்ப்பு குறையும் அபாயம் உள்ளது.

சிறு உற்பத்தியாளர்களின் பொருட்களுக்கு பெரியகடைகளில் இடம் கிடைக்குமா?

வீட்டிலேயே ஊறுகாய் போடுவோர், முறுக்கு சுற்றுபவர்கள், அப்பளம் தயாரிப்பவர்கள், கோலி சோடா தயாரிப்பவர்கள் என, நம் நாட்டில், சிறு, குறுஉற்பத்தியாளர்களின் எண்ணிக்கை ஏராளம். தற்போது, இவர்கள், சிறு கடைகள் மூலம் தங்கள் பொருட்களை விற்றுவருகின்றனர். உள்நாட்டு "சூப்பர்மார்கெட்’டுகளில் இவர்களது பொருட்களுக்கு இடம் இருப்பதாக தெரியவில்லை.அதே போல், வெளிநாட்டு நிறுவனங்களின் "சூப்பர்மார்கெட்’டுகளிலும்இவர்களது பொருட்களுக்கு இடம் கிடைக்காது. "சூப்பர் மார்க்கெட்’ தொழிலின்ஆதிக்கம் முழுமையாகிவிட்டால், சிறுஉற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவர் என்பதில் சந்தேகம் இல்லை. பெப்ஸி, கோக்க கோலா, போன்றகுளிர்பானங்கள் வந்தபோதே கோலி சோடா மற்றும் உள்ளூர் குளிர்பானங்களின் விற்பனைஅடிபட்டது. அது தொழில் போட்டிரீதியான தோல்வி.ஆனால், வளர்ந்து வரும் ஒரு சந்தையில், பொருளை விற்க இடம் கிடைக்காதது வாய்ப்புபறிக்கப்படுவதால் ஏற்படும் தோல்வி.என்னதான், அரசு விதிகளின் படி, அன்னிய நிறுவனங்கள், 30 சதவீதம்பொருட்களை உள்நாட்டு சிறு மற்றும் உற்பத்தியாளர்களிடம் வாங்க வேண்டும் என்றுஇருந்தாலும். இதிலும், வசதியுள்ள உள்நாட்டு நிறுவனங்கள் தான்பயன்பெறுவரே தவிர. உண்மையிலேயேசந்தைப்படுத்துதல் தேவைப்படும், சிறு, குறு உற்பத்தியாளர்கள் பயன் பெற மாட்டார்கள்.

வால்மார்டின் தோல்விகள்:

வால்மார்ட், பல நாடுகளில் செயல்படும், உலகிலேயேபெரிய சில்லரை வர்த்தக நிறுவனமாக இருந்தாலும், கால் பதித்த அனைத்து இடங்களிலும் வெற்றி பெறவில்லை. முக்கியமாக, ஜெர்மனி, தென் கொரியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தோல்வியடைந்துஉள்ளது. இந்தோனேசியாவில் இருந்துஅரசியல் காரணங்களால் வெளியேறிய வால்மார்ட், ஜெர்மனி மற்றும் தென் கொரியாவில் தொழில் ரீதியாக தோல்வி அடைந்தது.

ஜெர்மனி:

1997ம் ஆண்டில் ஜெர்மனியில்நுழைந்த வால்மார்ட், 2006ம் ஆண்டு, சுமார் 95 கடைகளை மூடிவிட்டு கிளம்பிவிட்டது. இதில், அந்த நிறுவனத்திற்கு6,900 கோடி ரூபாய் வரை நஷ்டம்ஏற்பட்டு இருக்கலாம் என, தொழில்நிபுணர்கள்கணக்கிட்டு உள்ளனர்.இந்ததோல்விக்கான காரணங்கள் குறித்து, ஜெர்மனிநாட்டின், பிரெமன் பல்கலை, ஓர் ஆய்வு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், வியூகத்தில் பிழை, நிர்வாகதடுமாற்றம், பலத்த போட்டி மற்றும் ஜெர்மானிய சட்டங்களை மதிக்காததால் ஏற்பட்ட கெட்ட பெயர் ஆகியவை, முக்கிய காரணங்களாக குறிப்பிடப் பட்டு உள்ளன.

வியூகத்தில் பிழை

ஜெர்மனியில் ஏற்கனவே இயங்கி வந்த இரண்டு சில்லரைவர்த்தக நிறுவனங்களை வாங்கித்தான் வால்மார்ட் நுழைந்தது. இந்த இரண்டு நிறுவனங்களின் நிர்வாகங்களும், ஊழியர்களும் சரியாக ஒருங்கிணைக்கப் படவில்லை.நிர்வாக தடுமாற்றம்: முதலில், அமெரிக்க நிர்வாகிகளை வைத்தே வால்மார்ட் நடத்தவிரும்பியது. இவர்களுக்கு ஜெர்மானியகலாசாரம், மொழி ஆகியவற்றின் பரிச்சயம் இல்லாததால், ஊழியர்களிடையேஅதிருப்தியை ஏற்படுத்தினர். மேலும், இது, ஏற்கனவே இருந்த ஜெர்மானிய நிர்வாகிகளிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பலத்த போட்டி:

ஜெர்மனியில், வால்மார்ட் நுழைவுக்கு முன்பே, மெட்ரோ, ஆல்டி, லிடில், நார்மா, ரீவீ போன்ற பெரியசில்லரை வர்த்தக நிறுவனங்கள் கோலோச்சி வந்தனர்.வால்மார்ட் நிறுவனத்தின் வியூகம், "குறைந்த விலை, சிறந்த சேவை’ என்ற அடிப்படையில் இருந்தது. ஆனால், ஜெர்மனியில், ஆல்டி போன்றநிறுவனங்கள் குறைந்த விலை வியூகத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்ததால், வால்மார்ட் அவர்களை வெல்ல முடியவில்லை.மேலும், சிறந்த சேவை என்ற பெயரில் வால்மார்ட் அமெரிக்க பாணியில், நுகர்வோர் வரவேற்பு போன்ற விஷயங்களை அமைத்தது. இது ஜெர்மானிய கலாசாரத்தில் பழக்கம் இல்லைஎன்பதால், சில நுகர்வோர், வரவேற்பாளர்கள் தங்களை தாக்க வந்ததாக கருதி போலீஸில் புகார் கொடுத்தனர்.

ஜெர்மானிய சட்டங்கள்:

மூன்று முக்கிய ஜெர்மானிய சட்டங்களை வால்மார்ட்மதிக்காததாகவும், அதனால், அதற்கு கெட்ட பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுஉள்ளது. அந்த சட்டங்கள்;

1. பெரிய நிறுவனங்கள்காரணம் காட்டாமல், எந்த பொருளையும்அதன் உற்பத்தி விலைக்கு கீழ் விற்க அனுமதி இல்லை.

2. அனைத்து "கார்பரேட்’ நிறுவனங்களும் வரவு, செலவுகணக்குகளை காண்பிக்க வேண்டும்.

3. காலியான பிளாஸ்டிக்மற்றும் உலோக குளிர்பான குப்பிகளை, நுகர்வோர்கடைகளில் கொடுத்தால், அதற்கு அந்தகடை பணம் கொடுக்க வேண்டும்; அல்லதுஅந்த வகையான பொருட்களை விற்பனை செய்யக் கூடாது.

தென் கொரியா:

தென் கொரியாவில் 1997ல், சில்லரை வர்த்தகத்தில்அன்னிய முதலீடு அனுமதிக்கப் பட்டது. வால்மார்ட் 1998ல்நுழைந்தது. ஆனால், எட்டு ஆண்டுகளுக்குள்,2006ம் ஆண்டு தோல்வி அடைந்து வெளியேறியது.இது குறித்து, தென் கொரியாவின், ஹான்யாங்பல்கலை ஒர் ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. அதில், போட்டி, இட பற்றாக்குறை மற்றும் கொரியர்களின் நுகர்வுபழக்கங்கள், முக்கிய காரணங்களாககுறிப்பிடப் பட்டு உள்ளன.

போட்டி:

வால்மார்ட் நுழைவதற்கு முன்பே, கொரியாவில் பெரிய சில்லரை வர்த்தக நிறுவனங்கள்நன்கு வளர்ந்து இருந்தன. அவற்றில், ஷின்செகே, லோட்டே, சாம்சங் மற்றும்எல்ஜி முன்னணி வகித்தன.தற்போது, ஷின்செகே நடத்தும் "இ-மார்ட்’ தான் தென் கொரியாவில் முதன்மை சில்லரை வர்த்தகநிறுவனம்.உள்நாட்டு நிறுவனங்கள் பலஆண்டுகளாக நன்கு செயல்பட்டு வந்ததாலும், அவர்களின் நுகர்வோர் கலாசார புரிதலாலும், அவர்களை போல் குறைந்த விலையை வால்மார்ட் கொடுக்க முடியாததாலும், வால்மார்ட் நிறுவனத்திற்கு பின்னடைவு ஏற்பட்டது.

இட பற்றாகுறை:

அனைத்து நகரங்களிலும் உள்நாட்டு வர்த்தகர்கள்முக்கிய இடங்களை கைப்பற்றி வைத்திருந்ததால், வால்மார்ட் நிறுவனத்திற்கு கடைகளை அமைக்க தகுந்த இடங்கள் கிடைக்கவில்லை.

நுகர்வு பழக்கங்கள்:

கொரிய நுகர்வோர், நடந்து செல்லும் தூரத்தில் உள்ள கடைகளையே விரும்புகின்றனர். கொஞ்சம், கொஞ்சமாக, தேவைக்கு ஏற்பமட்டுமே பொருட்களை வாங்குகின்றனர்.
கடைகளில், ஊழியர்கள் அவர்களுக்கு உதவ வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர். அனைத்துகடைகளிலும் சுவைத்து பார்ப்பதற்கும், பயன்படுத்தி பார்ப்பதற்கும், அழகான பெண்களை வைத்து இலவசங்கள் கொடுப்பது வழக்கம். கடைகளில், ஒரு கொண்டாட்டம் போன்ற சூழல் எப்போதும் நிலவ வேண்டும் என, எதிர்பார்ப்பர்.இதில், எதையுமே வால்மார்ட்நிறுவனத்தால் சரியாக செய்ய முடியவில்லை. வால்மார்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட கடைகளை, கிடங்குகள் போல் இருந்ததாக கருதினர். மேலும், வால்மார்ட், குறைந்த விலைகளை விளம்பரப்படுத்தியதை அவர்கள்விரும்பவில்லை. அதனால், வால்மார்ட் கடைகளுக்கு செல்வதை கவுரவகுறைச்சலாக அவர்கள் நினைத்தனர்.கொரியநுகர்வோரை பொறுத்தவரை, இறைச்சி, மீன் போன்ற விஷயங்கள் அவர்கள் கண்களுக்குமுன்பே துண்டு போடப் பட வேண்டும். அது, நல்ல நிலையில் உள்ளதா என்பதை சோதித்து தான்வாங்குவர். இந்த வசதியை உள்நாட்டுநிறுவனங்கள் தங்கள் "சூப்பர்மார்கெட்’டுகளுக்கு உள்ளளேயே உருவாக்கினர். வால்மார்ட் அதை செய்யவில்லை. அதே நேரத்தில் கொரியர்கள் மிகவும் விரும்பும்தங்கள் பாரம்பரிய உணவுகளையும் வால்மார்ட் போதிய அளவில் தரவில்லை.வால்மார்ட் கடைகளில், மளிகை பொருட்களோடு, மின்மற்றும் மின்னணு பொருட்கள், அறைகலன்கள்என, அனைத்து வகை பொருட்களும் ஒரேஇடத்தில் விற்கப்பட்டன. இதையும்கொரியர்கள் விரும்பவில்லை. கொரியாவில்வெற்றிபெற்ற டெஸ்கோடெஸ்கோ, இங்கிலாந்தைசேர்ந்த, உலகில் மிகப்பெரிய சில்லரைவர்த்தக நிறுவனங்களில் ஒன்று. டெஸ்கோ, தென் கொரியாவில் நுழைந்தவுடன், சாமர்த்தியமாக, சாம்சங் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டுக் கொண்டது. கொரியாவில் "சாம்சங்டெஸ்கோ’ என்ற பெயரில் கடைகளைநடத்தியது. ஸாம்சங் ஏற்கனவே சில்லரைவர்த்தகத்தில் செயல்பட்டு வந்ததால், கொரிய நுகர்வோரின் விருப்பத்திற்கு ஏற்ப, டெஸ்கோ கடைகளை அமைக்க முடிந்தது. இதனால், தென் கொரியாவில், டெஸ்கோ, நல்ல வெற்றி பெற்றது.

மார்பகப் புற்றுநோயும் வீட்டு வேலையும்!

 

HouseWork

`இந்த வீட்டு வேலையில இருந்து ஒருநாளு கூட ஓய்வில்ல…’ என்று அலுத்துக்கொள்வது இல்லத்தரசிகளின் வழக்கம். ஆனால் குடும்பத் தலைவிகள் தொல்லையாகக் கருதும் வீட்டு வேலைகள், அவர்களுக்கு நன்மையே செய்கின்றன. ஆம், எப்போதும் சுறுசுறுப்பாக வீட்டு வேலை செய்யும் குடும்பப் பெண்மணிகளுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் 13 சதவீதம் குறைகிறதாம்.
வீட்டு வேலை, நடைப்பயிற்சி, தோட்ட வேலை, உடற்பயிற்சி என்று சுறுசுறுப்பாக ஏதாவது ஒன்றில் ஈடுபட்டிருக்கும் இல்லத்தரசிகளுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் குறைகிறது என்கிறது, ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்று.
இந்த ஆய்வுக்காக, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 8 ஆயிரம் பெண்கள் ஆராயப்பட்டனர். அவர்களின் உணவு, வாழ்க்கை முறை மற்றும் மார்பகப் புற்றுநோய்க்கு உள்ள தொடர்பு அலசப்பட்டது.
அப்போது, வேலை குறைந்த வாழ்க்கை முறையை வாழ்பவர்களை விட, எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் சற்றுக் குறைவு என்று தெரியவந்தது. அதாவது, 13 சதவீதம். `கொஞ்சம்’ வேலை செய்பவர்கள் அல்லது மிதமாக வேலை செய்பவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் 8 சதவீதம் குறைகிறதாம்.
இதுதொடர்பாக இங்கிலாந்தின் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த சாரா வில்லியம்ஸ் கூறுகையில், “தற்போதைய கண்டுபிடிப்பு, முற்றிலும் புதிதல்ல. ஆனால், சுறுசுறுப்பான செயல்பாடு மார்பகப் புற்றுநோய் வாய்ப்பைக் குறைக்கும் என்ற முந்தைய ஆய்வு முடிவுகளை இது உறுதி செய்கிறது. இப்புதிய ஆய்வில் நல்ல விஷயம் என்னவென்றால், இது `ஜிம்’மில் செய்யும் உடற்பயிற்சியை மட்டும் கவனிக்கவில்லை, மாறாக, சுவாசத்தை அதிகப்படுத்தும் எந்த வேலையையும் கவனத்தில் கொண்டிருக்கிறது. அதனால் ஏற்படும் நன்மையைத் தெரிவித்திருக்கிறது” என்கிறார்.

கூரான பொருள் குத்துவது ஏன்?

 

pin

கூரான ஊசி, பொருட்களின் ஊடே ஏன் சுலபமாகத் துளைத்துக்கொண்டு செல்கிறது என்று நீங்கள் வியந்ததுண்டா? துணியின் வழியாகவோ, அட்டையின் வழியாகவோ கூரான ஊசியை எளிதாகச் செலுத்த முடிகிறது. ஆனால் மழுங்கலான ஆணியைச் செலுத்துவது மிகவும் கடினமாயிருக்கிறதே, ஏன்? கூரான ஊசியைச் செலுத்தும்போது முழுச் சக்தியும் அதன் முனை மீது செலுத்தப்படுகிறது. ஆனால் மழுங்கலான ஆணியின் முனையின் பரப்பு அதிகமாயிருப்பதால் அதே சக்தி அதிகப் பரப்பின் மீது செயல்பட வேண்டியிருக்கிறது. எனவே, அதே சக்தியைச் செலுத்தினாலும், மழுங்கலான ஆணியால் எளிதாக துளைத்துச் செல்ல முடிவதில்லை.
அழுத்தத்தைக் குறிக்கும்போது சக்தியின் அளவை மட்டுமின்றி, அது செயல்படும் பரப்பின் அளவையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.
ஒரு நபருக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று சொன்னால் அதிலிருந்து இது அதிகமா, குறைவா என்று கண்டுகொள்ள முடியாது. ஏனெனில் இச்சம்பளம் மாதத்துக்கா, வருடத்துக்கா என்று நமக்குத் தெரியாது. அதுபோலவே ஒரு சக்தியின் செயல், அது ஒரு சதுர சென்டிமீட்டர் மீது பரவியுள்ளதா, ஒரு சதுர மில்லி மீட்டரில் நூறில் ஒரு பங்குப் பரப்பின் மீது பரவியுள்ளதா என்பதைச் சார்ந்திருக்கிறது.
பனிச்சறுக்கு மட்டைகள் நம்மை பொலபொலப்பான வெண்பனியின் மீது எளிதில் எடுத்துச் செல்கின்றன. அவை இல்லாவிட்டால் நாம் பனியினுள் அழுந்திவிடுவோம். ஏன்?
பனிச்சறுக்கு மட்டைகளை அணிந்துகொள்ளும்போது உடல் எடை அதிகப் பரப்பின் மீது பரவியுள்ளது. மட்டைகளின் பரப்பு, நமது உள்ளங்கால்களின் பரப்பை விட 20 மடங்கு அதிகமாயிருக்கிறது என்று வைத்துக்கொண்டால், மட்டைகள் அணிந்திருக்கும்போது வெண்பனியின் மீது நாம் செலுத்தும் அழுத்தம், அவை இல்லாமல் இருக்கும்போது செலுத்தும் அழுத்தத்தை விட 20 மடங்கு குறைவாக இருக்கும். ஏற்கனவே கூறியபடி, பனிச்சறுக்கு மட்டைகளை நாம் அணிந்துகொண்டால்தான் வெண்பனி நம்மைத் தாங்கும். அவை இல்லாவிட்டால், பனியினுள் நாம்புதைய வேண்டியதுதான்.

தவறு செய்தவர்களை மன்னியுங்கள்!-செப்., 27 நரசிங்க முனையரையர் குருபூஜை

தவறு செய்யாத மனிதர்களே பூமியில் இல்லை. இறைவன் கூட மனிதனாகப் பிறக்கும் போது, தர்மத்தைக் காப்பதற்காக, மனித இயல்புக்கேற்ப சில சமயங்களில் வாழ்க்கை நியதிகளை மீற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதே நேரம், தவறு செய்தவர்களை ஒரேயடியாக வெறுத்து விட வேண்டும் என்ற அவசியமில்லை.
நம்மில் பலர், சிலரால் ஏமாற்றப்பட்டிருக் கலாம், வஞ்சிக்கப்பட்டிருக்கலாம். அவர்கள் நமக்கு செய்த துரோகம், நம் இதயத்தில் தீராத காயத்தை ஏற்படுத்தி இருக்கும். ஆனாலும், அவற்றை மறந்து மன்னிப்பதே, இறைவனின் சன்னிதானத்தில் நமக்கு பெருமையைத் தரும். அத்தகைய பெருமைக்கு சொந்தக்காரர் தான், மாமன்னர் நரசிங்க முனையரையர்.
திருமுனைப்பாடி நாட்டை ஆட்சி செய்தவர் நரசிங்க முனையரையர். இவரது நண்பர் சடையனார், திருநாவலூரில் வசித்து வந் தார். சடையனாரின் மனைவி இசைஞானியார். இவர்களுக்கு பிறந்த மகனே சுந்தரர். குழந்தை சுந்தரர் மிகவும் அழகாக இருப்பார். இக்காலத்தில், குழந்தைகள் நடை வண்டி ஓட்டி விளையாடுவது போல, அன்று, சிறு தேர்களை குழந்தைகள் ஓட்டி விளை யாடுவர். குழந்தையான சுந்தரரும் அவ்வாறு விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில், மன்னர் நரசிங்க முனையரையர் அவ்வழியாக தேரில் வந்தார்.
சிறுதேரை, பல குழந்தைகள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந் தாலும், சுந்தரரின், "பளிச்’ அழகு, முனையரையரை கவர்ந்தது. அந்த குழந்தையைத் தானே வளர்த்தால் என்ன என்ற எண்ணம் மேலிடவே, குழந்தை யின் பெற்றோரைப் பற்றி விசாரித்தார். அந்த குழந்தை, தன் நண்பர் சடையனாரின் குழந்தை என்பதை அறிந்து மகிழ்ந்தார். அவரிடம் பேசி, குழந்தையை அரண்மனையிலேயே வளர்க்க அனுமதி கேட்டார். சடை யனாரும் ஒப்புக்கொண்டார்.
பக்தனுக்கு அடிப்படை குணம் இரக்கம். அது நிறையவே இருந்தது மன்னர் முனையரையரிடம்; அவர் சிறந்த சிவபக்தர்.
ஒருமுறை, திருவாதிரை திருநாளன்று மன்னர், பக்தர் களுக்கு பொன்னும், மணியும் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த வரிசையில் ஒரு பெண் பித்தனும் நின்றான். அவனுக்கு பெண் பித்து காரணமாக நோய் ஏற்பட்டிருந்தது. உடலில் புண்கள் நிறைந்து காணப்பட்டன. அவனுடன் வரிசையில் நின்றவர்கள் ஒதுங்கி நிற்க ஆரம்பித்தனர்.
அவனுக்கு ஆறுதல் தருவார் யாருமில்லை. மன்னர், அவனை கண்டதும் கையெடுத்து வணங்கினார். யாரொருவர் உடல் முழுவதும் திருநீறு அணிந்து சைவப்பழமாகக் காட்சியளிக் கிறாரோ, அவர் விரோதி ஆயினும் அவர்களுக்கு சேவை செய்வது மன்னரின் பழக்கம். அந்த பித்தனும் மேனியெங்கும் திருநீறு பூசி வந்ததால், மன்னர் அவனை மார்போடு அணைத்து ஆறுதல் கூறினார். அவனுக்கு நோய் இருந்தாலும், இரக்கத்துடன் அவனைத் தழுவியது, அவனுக்கு பெரும் ஆறுதலைத் தந்தது. எல்லாரும் வெறுத்த நிலை யில், நாட்டின் மன்னன், கடவுள் போல ஆறுதல் அளித்தது இதமாய் இருந்தது. அவனுக்கும் பொருட்களை வாரி வழங்கினார் மன்னர். இவ்வாறு தவறு செய்து துன்பப்படும் உயிர்களிட மும் கருணை காட்டிய வள்ளலாகத் திகழ்ந்தார் முனையரையர்.
சுந்தரரை வளர்ப்பு மகனாகப் பெற்ற இவர், கொடுத்து வைத்தவராகவும் விளங்கினார். சுந்தரர் சிவ பெருமானின் நண்பராகும் பேறு பெற்றார். அத்தகைய பிள்ளையை வளர்க்கும் பாக்கியத்தை இறைவன் முனையரையருக்கு அளித்தார். அதன் காரணமாகவும், சிவத் தொண்டு காரணமாகவும், நரசிங்க முனையரையரும் நாயன்மார் வரிசையில் இடம் பெற்றார். அவரது குருபூஜை, புரட்டாசி மாதம், சதயம் நட்சத்திரத்தில் அனுஷ்டிக் கப்படுகிறது. இந்நாளில், சிவாலயங்களில் உள்ள நாயன்மார் சன்னிதியில் பூஜை செய்ய வேண்டும். நரசிங்க முனையரையருக்கு பட்டு வஸ்திரம் சாத்த வேண்டும். தவறு செய்தவர்களையும் மன்னிக்கும் மனோ நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.