Monthly Archives: ஒக்ரோபர், 2012

மனைவி மீது உங்களுக்கு ‘இன்டரஸ்ட்’ குறைய ஆரம்பிச்சிருச்சா…?

உங்களது கணவர் இப்போதெல்லாம் முன்பு போல உங்களிடம் நெருங்கி வருவதில்லையா…உங்களுடன் அதிக நேரம் செலவிடாமல் ஒதுங்கிப் போகிறாரா… முத்தமிடுவதில்லையே, அன்பு காட்டுவதில்லையா, உங்களை விட்டு விலகிப் போவது போல உணர்கிறீர்களா… இது பல குடும்பங்களில் இன்று அரங்கேறிக் கொண்டிருக்கும் விஷயம்தான்..ஆனால் இதை நீங்கள் தைரியமாக சந்திக்க முன்வர வேண்டும்.

மீண்டும் உங்கள் பக்கம் உங்களது கணவரைத் திருப்ப முடியும். அதற்கு நம்பிக்கையும், சில மெனக்கெடல்களும் மட்டுமே தேவை.

முதலில் ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்பதற்கான காரணத்தைப் பார்ப்போம்…

படுக்கை அறை விளையாட்டில் மனைவியிடமிருந்து போதிய ஈடுபாடு வராமல் போகும்போது ஆண்களுக்கு மனைவி மீதான ஈர்ப்பு குறையலாம். மனைவி தனக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை என்ற ஏமாற்றம் அவர்களை மனைவியிடமிருந்து விலகிப் போக உந்தலாம்.

திருமணத்திற்குப் பிறகு, குழந்தை பெற்ற பிறகு பெரும்பாலான பெண்கள் ஏகத்துக்கும் குண்டடித்து விடுகிறார்கள். இதுவும் கணவர்கள், மனைவியரை விட்டு விலக ஒரு முக்கியக் காரணமாம். பல பேர் அப்படி இல்லை என்றாலும் மெஜாரிட்டி ஆண்களுக்கு மனைவி எப்போதும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம். இப்படி குண்டாக இருக்கும் பெண்களிடம் செக்ஸ் அப்பீல் குறைவதால்தான் அவர்கள் கணவர்கள் பார்வையில் சற்று சலிப்பை ஏற்படுத்துவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

குழந்தை பிறப்புக்குப் பின்னர் பெரும்பாலான பெண்களுக்கு பிறப்புறுப்பு தளர்ந்து, பெரிதாகி விடும். இதனால் உடல் உறவின்போது போதுமான சந்தோஷம் ஆண்களுக்குக் கிடைப்பதில்லை. ஆரம்பத்தில் இருந்ததைப் போல பெண்ணுறுப்பு இறுக்கமாக இல்லாதது பல ஆண்களுக்கு சோர்வைத் தருகிறதாம்.

கணவர் மோகத்துடன் நெருங்கி வரும்போது பெண்கள் விலகிப் போக ஆரம்பித்தால் அது கணவர்களை அப்செட் ஆக்கி விடுமாம். இதுவும் கூட மனைவியரிடமிருந்து ஆண்கள் நழுவிச் செல்ல ஒரு காரணமாம்.

பல கணவர்களுக்கு அலுவலக வேலை மண்டையைப் பிய்ப்பதாக இருக்கும். மாங்கு மாங்கென்று வேலை பார்த்து ஆய்ந்து ஓய்ந்து வீடு திரும்புபோதும் பிழியப்பட்ட கரும்பு போல மாறியிருப்பார்கள். எனவே செக்ஸ் மூடு அவர்களை அண்டுவது கடினம். இதுபோன்ற ஆண்களுக்கு செக்ஸ் மீதே ஒரு வெறுப்பு வந்து மனைவியரிடம் நெருங்காமல் தள்ளிப் போக ஆரம்பிப்பார்கள், உறவுகளை தள்ளிப் போடவும் செய்வார்கள்.

இது சில காரணம்தான், இதையும் தாண்டி பல காரணங்கள் இருக்கலாம். இப்படிப்பட்ட காரணங்களால்தான் கணவர்கள், பெரும்பாலும் மனைவியரை விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கிறார்களாம். உங்க வீட்டுக்காரர் இந்த லிஸ்ட்டில் வருகிறாரா என்று பாருங்கள், வந்தால் உடனே சரி செய்யப் பாருங்கள்…

சுற்றித்திரியும் உயிரணுக்களும், புற்றுநோயும்

 

sci1

நாம் வாழும் இந்த பூமி எப்போதுமே சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது. அதுபோலவே, நம் உடலிலும் லட்சக்கணக்கான உயிரணுக்கள் எப்போதும் சுற்றிக்கொண்டே இருக்கின்றன. அவை, வேலை வெட்டி எதுவும் இல்லாமல் சுற்றவில்லை. சில உயிரணுக்கள் உடலின் நோய் எதிர்ப்புக்காக கிருமிகளை எதிர்கொள்கின்றன, சில உடலிலுள்ள காயங்களை ஆற்றுகின்றன. இன்னும் சில உயிரணுக்கள், நம் உடலின் பாகங்களுக்கு ஏதோ ஒரு வகையில் பயனளித்துக்கொண்டு இருக் கின்றன.
ஆனால், இப்படி பல காரணங்களுக்காக சுற்றித்திரியும் இந்த உயிரணுக்களின் செயல்பாடுகளில் ஏதேனும் தவறு நிகழ்ந்துவிட்டால், பின்விளைவுகள் புற்றுநோய் மற்றும் பரவும் புற்றுநோய் ஏற்படுவதாக கூட இருக்கலாம்.
துரதிஷ்டவசமாக, இந்த சுற்றித்திரியும் உயிரணுக்கள் எப்படி செயல்படுகின்றன என்பது குறித்த திட்டவட்டமான புரிதல் இதுவரை ஏற்படவில்லை. ஆனால், இப்போது கொஞ்சம் புரிந்திருக்கிறது என்கிறார் அமெரிக்காவின் கால்டெக் ஆய்வு மையத்தின் பேராசிரியர் பால் ஸ்டெர்ன்பெர்க்.
புற்றுநோயைப் பொறுத்தவரை, தொடக்க நிலை புற்றுநோயை கண்டறிவது மற்றும் அவை எப்போது பரவும் புற்றுநோயாக மாறுகின்றன என்பதைக் கண்டறிவது போன்றவை நம்மால் முடியும். ஆனால், சுற்றித்திரியும் உயிரணுக்கள் நம் உடலை சுற்றிவரும்போது செய்யும் ஏதோ செயலால்தான் புற்றுநோயும், பரவும் புற்றுநோயும் ஏற்படுகின் றன. அது என்னவென்றுதான் இன்னும் நம்மால் கண்டறிய முடியவில்லை என்கிறார் ஸ்டெர்ன்பெர்க்.
சுற்றித்திரியும் உயிரணுக்களின் அந்த மர்மமான செயலைக் கண்டறிய, சீனோராப்டிடிஸ் எலிகன்ஸ் (சி.எலிகன்ஸ்) எனும் புழுவில் உள்ள `லின்க்கர் செல்’ எனும் சுற்றித்திரியும் உயிரணுக் களை ஆய்வு செய்தது ஸ்டெர்ன்பெர்க்கின் ஆய்வுக்குழு. இந்த லின்க்கர் செல்கள், சி.எலிகன்ஸின் இனவிருத்தி வளர்ச்சியின் போது அதன் உடல் முழுவதும் சுற்றி வருகின்றன.
அளவில் சிறியதாக இருக்கும் இந்த புழுவின் மரபணுக்களில் பல மனிதர்களிலும் இருக்கின்றன. மேலும், மைக்ரேஷன் அல்லது உயிரணுக்கள் சுற்றித்திரிவது எனும் உயிரியல் நிகழ்வு, பரிணாமத்தில் பல நூற்றாண்டுகளாய் தொடர்ந்து வரும் ஒன்று என்கிறார் ஸ்டெர்ன்பெர்க்கின் துணை ஆய்வாளர் மிஹோகோ காத்தோ.
இந்த புழுக்கள் அல்லது மனிதர்களின் ஒவ்வொரு உயிரணுவிலும், குறிப்பிட்ட ஒரு வேலை அல்லது பல வேலைகளைச் செய்யும் ஆயிரக் கணக்கான மரபணுக்கள் இருக்கின்றன. இவற்றில் மூன்றில் ஒரு பங்கு மரபணுக்கள், ஒரு உயிரணுவில் எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கின்றன.
உயிரணுக்கள் சுற்றித்திரியும் போது எந்த வகையான மரபணுக்கள் செயல்படுகின்றன என்பதைக் கண்டறிய, லார்வா வளர்ச்சி நிலையில் உள்ள சி.எலிகன்ஸ் புழுவின் லின்க்கர் செல்கள் அதிசக்தி மைக்ராஸ்கோப் கொண்டு சேகரிக்கப்பட்டன. 12 மணி நேரத்துக்கு முன்பு மற்றும் பின்பு என, இரு கால நிலைகளில் சேகரிக்கப்பட்ட லின்க்கர் செல்களில் எந்தெந்த மரபணுக்கள் செயல்படுகின்றன என்பது, சீக்குவென்சிங் மற்றும் கம்பியூட்டேஷனல் அனாலிசிஸ் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. இதற்கு ட்ரான்ஸ்கிரிப்ஷனல் புரொபைலிங் என்று பெயர்.
இதன்மூலம், ஒரு குறிப்பிட்ட லின்க்கர் செல்லின் ஆரோக்கியமான சுற்றித்திரிதல் குறித்த புரிதல் ஏற்படும். இந்த புரிதலைக் கொண்டு ஒரு சுற்றித்திரியும் உயிரணு எப்படி அதன் சுற்றுச்சூழலில் பயணிக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும் என்கிறார் ஸ்டெர்ன்பெர்க். புற்றுநோய் பரவுதல் அல்லது மெட்டாஸ்டேசிஸ் குறித்த தற்போதைய நம் பார்வையில், புற்றணுக்கள் சுற்றித்திரியும் போது சில தடைகளை சந்திக்கின்றன. புற்றுநோய் பரவ வேண்டுமானால், அவை அந்த தடைகளை முறியடிக்க அல்லது தாண்டிச் சென்றாக வேண்டும். அதற்காக, புற்றணுக்கள் மரபணுக்கோப்பில் உள்ள ஏதோ ஒரு வழியைத்தான் கையாளுகின்றன.
ஆக, சுற்றித்திரியும் உயிரணுக் களின் பல்வேறு வகையான செயல்பாடுகளை புரிந்துகொள்வதன் மூலம், சுற்றித்திரிவதற்காக அவை பயன்படுத்தும் குறிப்பிட்ட மரபணுக்களை கண்டறிந்து அவற்றை செயலிழக்கச் செய்யும் புதிய வகையான மருந்துகளை உற்பத்தி செய்யலாம் என்கிறார் ஸ்டெர்ன்பெர்க்.
இதற்காக, லின்க்கர் செல் மைக்ரேஷனுடன் தொடர்புடைய, ஆனால் இதற்கு முன்பு ஆய்வு செய்யப்படாத, சி.எலிகன்ஸ் மற்றும் மனிதர்களில் உள்ள மரபணுக்களை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது ஸ்டெர்ன்பெர்க்கின் ஆய்வுக்குழு. இதன்மூலம், பரவும் புற்றுநோய்க்கான புதிய மருந்துகள் மட்டுமல்லாது, அதனை தொடக் கத்திலேயே கண்டறியும் பரிசோதனைகளையும் உருவாக்கலாம் என்கிறார் ஸ்டெர்ன்பெர்க்.

முனைவர் பத்மஹரி

பைல்களை சேவ் செய்திட இணைய தளங்கள்

கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறை இப்போதுதான் நமக்கு முழுமையாகக் கிடைத்தாலும், இணைய தளங்களில் இலவசமாகவும் கட்டணம் செலுத்தியும் பைல்களை சேவ் செய்து வைத்திடும் வசதி பல ஆண்டுகளாய் நமக்குக் கிடைத்து வருகிறது. நாம் உருவாக்கும் அனைத்து பைல்களையும், நமக்குக் கிடைக்கும் எல்லாவிதமான பைல்களையும் நம் பெர்சனல் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் அல்லது பிளாஷ் ட்ரைவ், சிடி, டிவிடிக்களில் சேவ் செய்து வைக்கலாம். ஆனால் பதிவினை வாங்கிக் கொள்ளும் இந்த மீடியாக்கள் எல்லாம், என்றாவது ஒரு நாளில் கெட்டுப் போய் பைல்களை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். எனவே இத்தகைய மீடியாக்களில் சேவ் செய்து வைப்பதுடன், சேவ் செய்து பாதுகாத்து தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளும் வசதியினைத் தரும் இணைய தளங்களிலும் நம் பைல்களை சேவ் செய்து வைத்திடலாம். அத்தகைய சேவை தரும் தளங்களை இங்கு காணலாம்.

1. மைக்ரோசாப்ட் ஸ்கை ட்ரைவ் (Microsoft Sky Drive):


இந்த தளத்தில் பைல்களை சேவ் செய்து வைத்திட 7 ஜிபி அளவு இடம் தரப்படுகிறது. முதலில் 25 ஜிபி அளவு தரப்பட்டது. பின்னர், இது குறைக்கப்பட்டது. இருப்பினும் முன்பு பதிந்து கொண்டவர்களுக்குத் தொடர்ந்து 25 ஜிபி அனுமதிக்கப்படுகிறது. நம் குடும்ப உறுப்பினர்களின் போட்டோக்கள், வீடியோ பைல்களை அதிக எண்ணிக்கையில் சேவ் செய்து வைத்திட இது நல்ல தளம். இதில் ஒரு குறைபாடு உள்ளது. இதற்கு எந்த பாதுகாப்பும் இல்லை. எனவே பெர்சனல் தகவல்கள் அடங்கிய தனி நபர் பைல்களை இதில் சேவ் செய்து வைப்பதனைத் தவிர்க்கலாம். தளத்தின் இணைய முகவரி: http://windows.microsoft.com/enUS/skydrive/home

2.மோஸி ஹோம் ப்ரீ (Mozy Home Free):

இலவசமாக 2ஜிபி வரை இத்தளத்தில் பைல்களை சேவ் செய்திடலாம். கூடுதலாக இடம் வேண்டும் எனில் கட்டணம் செலுத்த வேண்டும். இதன் சிறப்பு, இந்த தளத்தில் உங்கள் அக்கவுண்ட்டை செட் செய்து விட்டு, குறிப்பிட்ட போல்டர்களை தேர்ந்தெடுத்து அமைத்தால், பைல்கள் தாமாகவே ஒருங்கிணைக்கப்பட்டு சேவ் செய்யப்படும். இதன் தள முகவரி: http://mozy.com/home/free

3. ஐ ட்ரைவ் (IDrive):

இத்தளம் நமக்கு இலவசமாக 5 ஜிபி இடம் தருகிறது. குறிப்பிட்ட பெர்சனல் கம்ப்யூட்டர் என்றில்லாமல், உங்களுடைய பெர்சனல் கம்ப்யூட்டர், மேக் கம்ப்யூட்டர், ஐபோன், ஐபேட் மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் உங்கள் சாதனம் எதிலிருந்தும் பைல்களை இந்த தளத்திற்குக் கொண்டு சென்று சேவ் செய்திடலாம். ஆனால் பயன்படுத்தும் மொத்த அளவு 5 ஜிபி ஆக இருக்க வேண்டும். இங்கு பைல்கள் 256bit AES என்கிரிப்ஷன் என்ற தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி சேவ் செய்யப்படுகின்றன. இதற்கான கீ உங்களுக்கு மட்டுமே அறிவிக்கப்படும். இந்த ட்ரைவில் கூட பதிந்து வைக்கப்பட மாட்டாது. எனவே முற்றிலும் பாதுகாப்பானது. இத்தளத்தில் கட்டணம் செலுத்தி இடம் பெற திட்டமிடுபவர்களுக்குப் பல்வேறு கட்டணத் திட்டங்கள் உள்ளன. இதன் தள முகவரி: http://www.idrive.com/index.html

4. சுகர் சிங்க் (SugarSync):

இந்த தளமும் இலவசமாக 5 ஜிபி இடம் தருகிறது. அனைத்து வகை ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் (Android device, iPhone, iPad, BlackBerry, and Kindle Fire) இயங்கும் கம்ப்யூட்டர்களிலிருந்து பைல்களை மாற்றலாம். பெர்சனல் கம்ப்யூட்டரிலிருந்து மேக் கம்ப்யூட்டருக்கு பைல்களை மாற்ற விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல தளம். பைல்களைச் சுருக்கிப் பதிய இந்த தளம் TLS (SSL 3.3) தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்திகிறது. எனவே நம் பைல்கள் பாதுகாப்பாகப் பதியப்படுகின்றன. கட்டணம் செலுத்தி, கூடுதலாக இடம் பெற்றுக் கொள்ளலாம். இந்ததள முகவரி: https://www.sugarsync.com/?source=myss

5. ஏ ட்ரைவ் (A Drive):

இலவசமாய் 50 ஜிபி அளவு இடம் கொடுக்கும் இந்த தளம். ஸ்டோரேஜ், பேக் அப், பகிர்ந்து கொள்ளல், எடிட் செய்தல், எங்கிருந்தும் பைல் டவுண்லோட் செய்தல் எனப் பலவகை வசதிகளைத் தருகிறது. பைல்களை பகிர்ந்து கொள்ளும் ஷேரிங் வசதியின் மூலம், உங்கள் அலுவலக அலுவலர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் என எவருடனும் இதில் சேவ் செய்யப்படும் பைல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். குறிப்பிட்ட பைலுக்கு இந்த தளம் தரும் லிங்க்கினை மின் அஞ்சலில் அனுப்பி, பெறும் நபரை இந்த ட்ரைவிலிருந்து பைலைப் பெற்றுக் கொள்ள அனுமதிக்கலாம். இணைய வெளியில் இருந்தவாறே, இதில் சேவ் செய்யப்பட்ட பைல்களை எடிட் செய்திடலாம். நீங்கள் சேவ் செய்த பைல்களை எளிதாகத் தேடிப் பெறவும் வசதி தரப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்திப் பெற முன் வருபவர்களுக்கு 50 ஜிபிக்கு மேலாக 10 டெரா பைட் வரை இடம் தரப்படுகிறது. இந்த தள முகவரி: http://www.adrive.com/

6.கூகுள் ட்ரைவ் (Google Drive):

இலவசமாய் 5 ஜிபி ஸ்டோரேஜ் இடம் தருகிறது. பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் மேக் கம்ப்யூட்டரின் பைல்களை இணைக்கலாம். மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியும், ஆன்லைன் எடிட்டிங் வசதியும் குறிப்பிடத்தக்க வசதிகளாகும். நேரடியாக இந்த ட்ரைவில் பைல்களைப் பதியலாம். இதில் தரப்படும் தேடல் வசதிகள் மிகவும் அருமை எனச் சொல்ல வேண்டியதில்லை. கூடுதலாக இடம் தேவைப்படுவோர் கட்டணம் செலுத்திப் பெறலாம். இதன் தள முகவரி: https://drive.google.com/start?authuser=0#home
இந்த தளங்களுடன் கீழே குறிப்பிட்டுள்ள சில தளங்களும் சேவ் செய்திடும் வசதியையும், மற்ற மேலே குறிப்பிட்ட சில வசதிகளையும் தருகின்றன. அவற்றின் பெயர், ஸ்டோரேஜ் இடம் மற்றும் முகவரிகள் கீழே தரப்பட்டுள்ளன.

1. உபுண்டு ஒன் (Ubuntu One):

5 ஜிபி இடம். முகவரி: https://one.ubuntu.com/

2. பாக்ஸ் (Box):

5 ஜிபி இடம். பைலின் அளவு 100 எம்.பி.க்குள்ளாக இருக்க வேண்டும். தள முகவரி: https://www.box.com/

3. ட்ராப் பாக்ஸ் (Drop Box):

2ஜிபி இடம். கட்டணம் செலுத்துபவர், ஓராண்டு முன் கூட்டியே செலுத்தினால், 17% கட்டணச் சலுகை தரப்படுகிறது. தள முகவரி: https://www.dropbox.com/pricing

4. கொமடா பேக் அப் (Comodo Backup):

5 ஜிபி இடம். Volume Shadow Copy என்ற தொழில் நுட்பத்தில் பைல்கள் சேவ் செய்யப்படுகின்றன. பாதுகாப்பானது. இதன் தள முகவரி: http://backup.comodo.com/

5. மிமீடியா (Mi Media):

7 ஜிபி இடம். இதன் தள முகவரி: http://www.mimedia.com/

6. மை அதர் ட்ரைவ் (MyOtherDrive):

2 ஜிபி இடம். பைல்களைச் சுருக்க AES 128bit தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன் தள முகவரி: http://www.myotherdrive.com/

7. படி பேக் அப் (BuddyBackup):

இந்த தளம் உங்கள் பைல்களை உங்கள் கம்ப்யூட்டரிலேயே சுருக்கிப் பதிந்து, பின்னர் தன் தளத்திற்குக் கொண்டு செல்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட பேக் அப் பைல்களை இதில் உருவாக்கலாம். நண்பர்களுடன் பைல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இதன் தள முகவரி: http://www.buddybackup.com/

மேரி கோம் பதவியும் உயர்ந்தது..

 

குத்துச்சண்டை நாயகி மேரி கோம், சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறார். காரணம், நாடெங்கும் அழைத்துப் பாராட்டு விழாக்கள் நடத்துகிறார்கள். பார்க்கிறவர்கள் எல்லாம் வாழ்த்து மழை பொழிகிறார்கள்.

இதுமட்டுமல்ல, மேரி கோம் இப்போது போலீசில் எஸ்.பி.யாகவும் பதவி உயர்வு பெற்றிருக்கிறார். இதுவரை இவர் டி.எஸ்.பி.யாக இருந்தார்.

Marokom வெளிப்படையாகவே சந்தோஷமாகத் தெரியும் மேரி கோம், தனது கடின உழைப்பும், கடுமையான பயிற்சிகளும் தன்னை உடல்ரீதியாக மட்டுமின்றி, மனரீதியாகவும் வலுவானவராக்கி இருப்பதாகக் கூறுகிறார்.

“ஒரு பெண்ணாக நான் மிகக் கடினமாகப் பயிற்சி செய்தேன். இந்த இடத்தை அடைவதற்காக எனது உடம்பை நானே தண்டித்துக்கொண்டேன். ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாகவும், போலீஸ் அதிகாரியாகவும் நான் உறுதியானவள் ஆகியிருக் கிறேன். தற்காப்புக்காக ஒவ்வொரு பெண்ணுமே குத்துச்சண்டையைக் கற்றுக்கொள்வது நல்லது என்று நான் நினைக்கிறேன்” என்கிறார் மேரி கோம்.

தனக்குப் பின்னணியில் தன்னுடைய குடும்பம், குறிப்பாகக் கணவர் இருந்ததாகக் கூறுகிறார் மேரி.

“நான் எனது கணவரின் உதவியில்லாவிட்டால் இவ்வளவு உயர்ந்திருக்க மாட்டேன். அதேவேளை யில் நான் எனது குழந்தைகளை மிகவும் `மிஸ்’ செய்கிறேன். முடிந்தவரை கிடைக்கும் நேரத்தை யெல்லாம் அவர்களுடன் கழிக்கிறேன். எனக்கு கிடைக்கும் மெடல்களின் முக்கியத்துவத்தை அறியாத அளவுக்கு அவர்கள் ரொம்ப சின்னப் பசங்க. ஆனால் டி.வி.யில் என்னைப் பார்க்கும்போதெல்லாம் பெருமைப்படுகிறார்கள்” என்கிறார்.

தற்போது மேரி கோம் ஒரு பிரபலம் ஆகிவிட்டதால் ரியாலிட்டி ஷோ மாதிரியான தொலைக்காட்சி வாய்ப்புகள் வருகின்றன. அவற்றை ஏற்பீர்களா என்று கேட்டால், “ஏன் ஏற்கக் கூடாது? நான் டி.வி.யில் தோன்ற விரும்புவது பணத்துக்காக அல்ல, அந்த அனுபவத்துக்காக” என்கிறார் `பட்’ டென்று.

அப்படியானால் நடிப்பீர்களா என்ற கேள்வியைப் போட்டால் அவசரமாக இடம் வலமாகத் தலையசைக்கிறார்.

“என்னால் அழகாகப் பேசக் கூட முடியாது. அப்படியிருக்கும்போது நீளமான வசனங்களை எப்படி என்னால் ஒப்பிக்க முடியும்? நடிப்பு எனக்கு விருப்பமான விஷயமல்ல” என்கிறார் மேரி கோம் புன்னகையோடு.

மேரி கோம் பற்றி நமக்குத் தெரியாத ரகசியம், இவர் ஒரு `சாப்பாட்டு ராணி’ என்பது.

உணவுகள் குறித்த தனது நினைவுகள், விருப்பங்களைப் பகிர்ந்துகொள்கிறார் மேரி கோம்.

நினைவில் இருக்கும் முதல் உணவு ஞாபகம்: அரிசிச் சாதமும், மசித்த சோளமும் சாப்பிட்டது.

பிடித்த உணவுகள்: மணிப்பூரி உணவுகள். குறிப்பாக, `என்கா அடோய்பா தோங்பா’. இது ஒரு மணிப்பூரி பாணி மசித்த மீன் குழம்பு.

குடும்பத்துக்காகச் சமைக்க விரும்புவது: புதிய சோதனை முயற்சிகளில் ஈடுபடுவது எனக்குப் பிடிக்கும். எனவே வெளிநாட்டில் ஒரு புதிய உணவு வகை செய்முறையை அறியும்போதெல்லாம் அதை வீட்டில் தயாரிக்க முயற்சிப்பேன். காரணம், வீட்டினர் அதை ருசித்துப் பார்க்க வேண்டும் என்ற எனது ஆசைதான்.

பயணத்தின்போது: `சைனீஸ்’ உணவு வகைகளை நிறைய சாப்பிடுவேன்.

சாப்பிட்டதிலேயே சிறந்த சாப்பாடு: இதற்குப் பதில் சொல்வது கடினம். அதிர்ஷ்டவசமாக நான் நிறைய பயணம் செய்திருக்கிறேன், உலகின் மிகச் சிறந்த ஓட்டல்களில் தங்கியிருக்கிறேன். அப்போது பல உணவு வகைகளை ரசித்துச் சாப்பிட்டிருக்கிறேன். எப்படியிருந்தாலும், வீட்டுச் சாப்பாடே எப்போதும் சிறந்தது.

இனிப்புகளில் பிடித்தது: எனக்கு அவ்வளவாக இனிப்புப் பிடிக்காது. நான் சமையலை என் அம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.

சாப்பாட்டுத் தோழர்கள்: எனது கணவரும், நண்பர்களும்.

அம்மாவின் சமையலில் பிடித்தது: அவரே எங்கள் தோட்டத்தில் விளைவிக்கும் மசாலாப் பொருட்களை கலந்து செய்து தரும் எல்லா உணவுகளும் பிடிக்கும். பூண்டு, இஞ்சி, மஞ்சள் மற்றும் சில உள்ளூர் மசாலாப் பொருட்கள் சேரும்போது அம்மாவின் உணவுக்கு அபார ருசி வந்துவிடும்.

மிகவும் அருமையான உணவுகளைப் படைக்கும் நாடு: சீனா.

நேரத்தில் சில விந்தைகள்!

ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்கள் அடங்கியுள்ளன. ஒரு நிமிடத்தில் 60 வினாடிகள் அடங்கியுள்ளன. இம்மியளவு நேரமான வினாடியை நாம் அலட்சியம் செய்கிறோம். அதை நாம் பொருட்படுத்துவதில்லை. வீணாக்குகிறோம்.
ஆனால் வினாடி, உயிர்த்துடிப்பு நிறைந்தது. வினாடிப் பொழுதில் உலகில் எத்தனையோ அதிசயங்கள் நடந்துவிடுகின்றன.
அந்த வினாடியையும் தற்போது விஞ்ஞானிகள் எத்தனையோ ஆயிரம் பிரிவுகளாகப் பிரித்திருக்கின்றனர். கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்குதான் தெரிந்திருந்தது.
நிமிடங்களையும், வினாடிகளையும் ஒரு பொருட்டாகக் கருதாத நாம், ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்குக்கு மதிப்புக் கொடுப்போமா? இருந்தபோதும், வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதைத் தெரிந்துகொள்வோம்.
ஆகாய விமானங்களும், மோட்டார்களும், ரெயில் களும், செல்போனும் இல்லாத காலத்துக்கு நாம் கற்பனை ரதத்தில் பயணம் செய்து பார்ப்போம்.
இந்தக் காலத்தில் நேரம் போவது தெரியவில்லை. அவ்வளவு வேகமாக வாழ்க்கை சுழல்கிறது. ஆனால் அந்தக் காலத்தில் நேரம் போவது ஒரு யுகமாகத் தோன்றியது. பண்டைய நாட்களில் நேரத்தைத் துல்லியமாகத் தெரிந்துகொள்வதற்கான அவசியம் இல்லை. அலுவல கம் அல்லது பள்ளிக்குச் செல்வதற்கு நேரமாகிவிட்டது என்று எச்சரிக்கை செய்வதற்குக் கடிகாரங்கள் பிறக்கவில்லை.
பண்டைக் காலத்து மக்கள் நேரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்காவிட்டாலும், நேரத்தை அறிந்துகொள்ள விரும்பினர். அவர்கள் நேரத்தை அறிவதற்குச் சில உபாயங்களையும், சாதனங்களையும் உபயோகப்படுத்தினர். சூரியக் கடிகாரங்கள், மணல் கடிகாரங்கள் போன்றவை அந்தக் காலத்து மக்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தன.

எனினும் இந்த இயற்கைக் கடிகாரங்கள், நிமிடங்களையோ, அவற்றின் பிரிவுகளாகிய வினாடிகளையோ தெரிவிக்கவில்லை. அவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டிய தேவையும் பண்டைக் காலத்து மக்களுக்கு ஏற்படவில்லை. நிமிட முள் 18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், வினாடி முள் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பும்தான் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப காலத்தில் நாம் தெரிந்துகொண்ட, வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்தின் நுட்பங்களை அறிவோம். இவ்வளவு சிறிது நேரத்தில் என்ன நிகழ முடியும் என்ற அலட்சியமான எண்ணம் நமக்கு ஏற்படுவது இயற்கைதான். ஆனால் இந்த நுண்ணிய நேரத்தில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடைபெறும். சில உதாரணங்களைப் பார்ப்போம்.
வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு என்ற இம்மி நேரத்தில் ஒரு ரெயில் சுமார் 2 செ.மீ. தூரம் செல்லும். அதே நேரத்தில் ஒலி சுமார் 34 செ.மீ. தூரமும், விமானம் ஒன்றரை அடியும் செல்லும். சூரியனைப் பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது அல்லவா? அது தனது சுழலும் பாதையில் சுமார் 40 அடி பயணம் செய்திருக்கும். ஒளியைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அதன் வேகம் மிக அதிகம் என்பது நமக்குத் தெரியும். வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்தில் அது 300 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்திருக்கும்.
இன்னும் ஓர் உதாரணத்தை பார்க்கலாம். நம்மைச் சுற்றிலும் எண்ணற்ற உயிர்கள் உள்ளன. அவற்றுக்குச் சிந்திக்கும் திறன் இல்லை. எனினும் வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு அவற்றுக்கு முக்கியமாக இருக்கிறது. உதாரணமாக கொசுக்கள் இந்த நேரத்தில் 6 லட்சம் தடவை தமது சிறகுகளை அடித்துக்கொள்கின்றனவாம்.
நாம் பொதுவாக அறிந்த துரிதமான நேரம், `கண்ணிமைக்கும் நேரம்’ என்பதுதான். இது உண்மையில் ஒரு வினாடியில் ஆயிரத்தில் 400 பங்குதான்!

விண்டோஸ் 8: பைல் ஹிஸ்டரி

தற்போது சோதனைப் பதிப்பாக நுகர்வோருக்குத் தரப்பட்டுள்ள விண்டோஸ் 8 சிஸ்டத்தில், ""பைல் ஹிஸ்டரி”என்ற புதிய வசதி அனைவரின் கவனத்தைக் கவர்வதாக உள்ளது. இந்த செயல்பாடு, லைப்ரரீஸ், காண்டாக்ட்ஸ், பேவரிட்ஸ் மற்றும் டெஸ்க்டாப்பில் உள்ள அனைத்து பைல்களுக்கும் பேக் அப் எடுக்கிறது. மாறா நிலையில், ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் ஒரு முறை அனைத்தையும் ஸ்கேன் செய்கிறது. பைல்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களை தனி ட்ரைவில் எழுதி வைக்கிறது.
இந்த இடத்திலிருந்து பயனாளர்கள், தங்கள் பைல்களின் பேக் அப் காப்பிகளைப் பெறலாம். ஒரு குறிப்பிட்ட பைல், சில நாட்களுக்கு முன்னதாக, ஒரு நாளில் இருந்த நிலையில் பெற விரும்பினால், இந்த ட்ரைவிலிருந்து பெறலாம். பைல் ஒன்று கெட்டுப் போய்விட்டால், முந்தைய நிலையிலிருந்தும் File History மூலம் அதனைப் பெறலாம்.
இந்த வசதியைப் பெற, விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலமாகச் செல்ல வேண்டும். குறிப்பிட்ட இடம் சென்று அல்லது பைல் சென்று, எக்ஸ்புளோரர் ரிப்பனில் History பட்டனை அழுத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட லைப்ரேரி, போல்டர் அல்லது தனி பைலின் முந்தைய ஹிஸ்டரி முழுவதும் காட்டப்படும். நமக்குத் தேவையான நிலையில் அந்த பைலை எடுத்துக் கொள்ளலாம். நாம் பெற விரும்பும் பைல், காட்டப்படும் பட்டியலில் எது எனத் தெரியாவிட்டால், பைல் பெயர், மாற்றப்பட்ட முக்கிய சொற்கள், நாள் குறித்து தேடியும் அறியலாம். அல்லது பைல் பிரிவியூ காட்சி பெற்று, தேவையான காட்சியைக் கிளிக் செய்து பைலைப் பெறலாம். மவுஸ் கிளிக் செய்தும் பெறலாம்; டச் ஸ்கிரீனைச் சற்று தட்டியும் பெறலாம். ஏற்கனவே விண்டோஸ் 7 சிஸ்டத்தில், Backup and Restore என ஒரு செயல்பாடு இருந்து வருகிறது. இந்த செயல்பாடுதான் சற்று மேம்படுத்தப்பட்டு ""பைல் ஹிஸ்டரி” என இப்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தில் கிடைக்கிறது. இந்த தகவல்கள் Building Windows 8 blog என்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வலைமனையில் தரப்பட்டுள்ளன.

பின்னணி நிறத்தை மாற்றலாம்

வேர்ட் தொகுப்பில் நெடு நேரம் பணி புரிவோர் பலர் தங்கள் கண் பார்க்கும் சக்தியில் மாற்றம் இருப்பதாகச் சொல்லக் கேட்கலாம். இதற்குக் காரணம் பெரும்பான்மையானவர்கள் வெள்ளைப் பின்னணியில் கருப்பு வண்ணத்தில் எழுத்துக்களைப் பார்ப்பது தான் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்கு மைக்ரோசாப்ட் மாற்று வழி ஒன்று வைத்துள்ளது. பின்னணி மற்றும் எழுத்துக்களின் நிறத்தை மாற்றி வைத்தும் இயக்கும் வகையில் இவ்வழி உள்ளது. முதலில் Start, All Programs, Microsoft Word வழியாகச்சென்று வேர்ட் பைல் ஒன்றைத் திறக்கவும். பின்னர் Tools என்பதில் கிளிக் செய்திடவும். கீழாக விரியும் மெனுவில் Options என்னும் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். பின் விரியும் டயலாக் பாக்ஸில் General என்னும் டேபைத் தட்டி புதிய விண்டோ பெறவும். அதில் முதலாவதாக “Blue background, white text.” என்று இருக்கும் . அதனைத் தேர்ந்தெடுக்கும் வகையில் அதன் முன் உள்ள கட்டத்தில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தி பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி வேர்ட் டாகுமென்ட் திறந்தால் அது நீலக் கலரில் வெள்ளை வண்ணத்தினாலான எழுத்துக்களைக் காட்டும்.

`ஆஹா’ சொல்ல முடியாத ஆர்கா!

 

திமிங்கல வகைகளில் பயமுறுத்தக் கூடியது ஆர்கா எனப்படும் கில்லர்வேல்ஸ் வகைகள். பொதுவாக கடலுக்குள் வெள்ளைச்சுறா தான் ஆபத்து என்பார்கள். இது அதையும் வேட்டையாடி விடும். அதனால் எந்தச் சுறா என்றாலும் இந்தச் சுறாவைப் பார்த்தால் உயிர் காக்கும் ஓட்டத்தை தொடங்கி விடும்.

Orca இந்த ஆர்கா வகைகள் கூட்டமாய் வேட்டையாடும். இவை டால்பின் வகை என்றாலும், டால்பின்களைப் பார்த்தாலும் இரையாக்கிக் கொண்டுவிடும்.

இந்த ஆர்காவின் குட்டிகளை சுறாக்கள் வேட்டையாட முயலும். அப்போது தாய் ஆர்கா அவற்றை ஒரே முட்டாக முட்டித் தள்ளி தலை குப்புற திருப்பிப் போட்டு விடும். அதன்பிறகு அந்த சுறா மீண்டும் திரும்பி இயல்புக்கு வருவதற்கு நேரம் பிடிக்கும். அதற்குள் அந்த சுறா உயிரோடு இருக்குமா என்பது சந்தேகம். இதனால் குட்டி ஆர்காக்களை வேட்டையாட வரும் சுறாக்கள் ரொம்பவும் யோசிக்கும். சுற்று வட்டாரத்தில் தாய் ஆர்கா கண்ணில் படவில்லை என்று தெரியவந்த பிறகே அதை வேட்டையாடத் துணியும்.

ஆர்கா திமிங்கலம் சீல்களை விரும்பி உண்ணும். சீல்களை இவை பிடிப்பதே தனியழகு. ரொம்ப கிட்டத்தில் ஓசைப்படாமல் வந்து திடீரென தண்ணீரை அதிரடியாக கலக்கும். இந்த திடீர் அதிர்ச்சியில் நிலை குலைந்து போகும் சீல்கள், என்ன ஏதென்று சுதாரிப்பதற்குள் ஆர்காவின் வயிற்றுக்குள் இரையாக இருக்கும்.

சமயத்தில் மனிதர்களையும் இவை தாக்கும் என்பது மட்டும் தான் இந்த சுறாக்களின் சாகசத்தை ரசிக்க முடியாமல் செய்கிறது.

பக்க எண்ணை விருப்பப்படி அமைக்க

நாம் உருவாக்கும் ஆவணங்களில், பக்க எண்களை அமைப்பதில், வேர்ட் நமக்கு எளிய சில வளைந்து கொடுக்கும் வழிகளைத் தருகிறது. நம் ஆவணங்களில், குறிப்பிட்ட ஓர் இடத்திலிருந்து, குறிப்பிட்ட எண் அல்லது முதல் எண்ணிலிருந்து தொடங்க நாம் எண்ணலாம். எடுத்துக் காட்டாக, நம் ஆவணத்தின் தொடக்கத்தில், அந்த ஆவணத்தில் கூறப்படும் பொருள் குறித்த அறிமுக விளக்கம் இரு பக்கங்களில் இருக்கலாம். எனவே நாம், மூன்றாவது பக்கத்தை ஆவணத்தின் தொடக்க நிலையாகக் கொண்டு, மீண்டும் பக்கம் ஒன்று எனத் தொடங்க திட்டமிடலாம். இதற்குக் கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.

வேர்ட் 2007ல்:


1. டாகுமெண்ட்டைத் திறந்து, எங்கு மீண்டும் முதல் எண் தொடங்க வேண்டுமோ, அந்த பக்கத்தில், அந்த இடத்தில் கர்சரை வைத்துக் கொள்ளவும்.
2. ரிப்பனில் Page Layout டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இந்த Page Setup குரூப்பில் Breaks என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து Next Page என்பதில் கிளிக் செய்திடவும்.
3. உங்கள் டாகுமெண்ட்டில் section break தோன்றும். அதனைத் தொடர்ந்து கிடைக்கும் டெக்ஸ்ட், புதிய பக்கத்தின் தொடக்கத்தில் இருக்கும்.
4. இனி ரிப்பனில் Insert டேப்பினைக் காட்டவும்.
5. புதிய பக்கத்தில் இன்னும் உங்கள் கர்சர் இருக்க வேண்டும். நீங்கள் கொடுத்த செக்ஷன் பிரேக் அடுத்து இது இருக்கும். அடுத்து Header & Footer குரூப்பில் Page Number என்பதில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து Format Page Numbers என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் இப்போது Page Number Format என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும். இந்த டயலாக் பாக்ஸில், Page Numbering என்ற பிரிவில், Start At என்ற ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடவும். அதில், இருக்க வேண்டிய பக்க எண்ணைத் தரவும். அடுத்து ஓகே கிளிக் செய்து, Page Number Format டயலாக் பாக்ஸை மூடவும்.
நீங்கள் பயன்படுத்துவது முந்தைய வேர்ட் புரோகிராமாக இருப்பின், கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.
1. எந்த பக்கத்தில், எந்த பகுதியிலிருந்து புதிய பக்க எண்ணைத் தர வேண்டுமோ, அந்த இடத்தில் கர்சரை அமைக்கவும்.
2. அடுத்து Insert மெனுவில் Break என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் இங்கு Break டயலாக் பாக்ஸைக் காட்டும்.
3. அடுத்து Next Page ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடவும்.
4. இதன் பின்னர், ஓகே கிளிக் செய்திடவும்.
5. இதனைத் தொடர்ந்து, கர்சர் அமைத்த இடத்திலிருந்து உள்ள டெக்ஸ்ட் புதிய பக்கத்தில் காட்டப்படும். இவ்வாறு கிடைத்தவுடன் Insert மெனுவினைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Page Numbers டயலாக் பாக்ஸைத் திறக்கும்.
6. அடுத்து Format பட்டனைக் கிளிக் செய்திடவும். அடுத்து வேர்ட் Page Number Format டயலாக் பாக்ஸைக் காட்டும்.
7. இந்த டயலாக் பாக்ஸில், Page Numbering என்ற பிரிவில், Start At என்ற ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடவும். அதில், இருக்க வேண்டிய பக்க எண்ணைத் தரவும். அடுத்து ஓகே கிளிக் செய்து, Page Number Format டயலாக் பாக்ஸை மூடவும்.
8. அடுத்து ஓகே கிளிக் செய்து, Page Number Format டயலாக் பாக்ஸை மூடவும்.

ஒரே இரவில் 2, 3, 4 ‘ரவுண்டு’ போகனுமா…?

செக்ஸ் ஒரு அனுபவ ஆட்டம்.. அனுபவம் கூடக் கூட ஆட்டத்திலும் நேர்த்தி, முழுமை, நிபுணத்துவம் வந்து விடும். இதில் கற்றுத் தேரும் வரை நாம் செக்ஸுக்கு அடிமை.. கற்றுத் தெளிந்து விட்டால் செக்ஸ் நமக்கு அடிமையாகி விடும்.

ஆரம்பத்தில் பெரும்பாலானோர் வாரத்திற்கு பலமுறை செக்ஸ் வைத்துக் கொள்வது சகஜமானது. சிலர் தினசரி கூட ராத்திரி ரவுசில் இறங்குவார்கள். ஆனால் போகப் போக அது குறைந்து கொண்டே வரும்.. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக. வாரத்திற்கு சில முறை, பிறகு மாதத்திற்கு சில முறை என்று குறுகிக் கொண்டே போய் விடும்.

புதிதாக திருமணமானவர்களுக்கு எப்போதுமே செக்ஸ் நினைவுதான் கொஞ்ச நாளைக்கு அதிகமாக இருக்கும். இதற்காகத்தான் அவர்களை அடிக்கடி தொந்தரவு செய்யக் கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஆனால் அதுவே நாளாக நாளாக ஆர்வம் குறையும் அல்லது அதுதான் பக்கத்திலேயே இருக்கே, பிறகெதற்கு பதறியடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விடும்.

இருப்பினும் திருமணமாகி நீண்ட காலத்திற்குப் பிறகும் கூட, ஒரே நாளில் 2 அல்லது 3 முறை அல்லது அதற்கு மேலும் உறவு கொள்வது எளிதானதுதான் என்று கூறுகிறார்கள் செக்ஸாலஜிஸ்டுகள்.

செக்ஸ் என்றால் என்ன … ஆண் பெண் இருபாலாருக்கிடையே ஏற்படும் ஈர்ப்புதான், ஹார்மோன் ரசவாதம்தான். இதில் உடம்பு மட்டுமல்ல, மனசும் கூட முக்கியக் காரணம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது போல உறவில் ஈடுபாடு கூடும்போது உறவின் எண்ணிக்கையையும் நாம் நிச்சயம் கூட்ட முடியும்.

நடுத்தர வயதைக் கடந்த சிலருக்கு, முன்பு போல நாம் இப்போதும் அதிக அளவில், அதாவது ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை உறவு கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அப்படி்த தோன்றும்போது அதை செயலாற்ற உடனே களத்தில் இறங்கி விட வேண்டும். அதற்கேற்ப மனதையும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்று இரவு நமக்கு அன்லிமிட்டெட் என்று முடிவு செய்து விட்டால் மாலையிலேயே மனதளவில் ரெடியாகி விடுங்கள். சீக்கிரமே சாப்பிட்டு விடுங்கள். படுக்கைக்குப் போகும் போது சாப்பாடு செரித்திருக்க வேண்டும். மனசை பளிச்சென வைத்துக் கொள்ளுங்கள். உடலையும் ஆயத்த நிலைக்குக் கொண்டு வாருங்கள். கூடுமானவரை இரவு 9 மணிக்குள் படுக்கை அறைக்குள் புகுந்து கொள்வது நல்லது.

முதல் உறவில் அதி வேகம் காட்டுவதைத் தவிர்க்கவும். அதற்காக சுவாரஸ்யமான தருணங்களை மிஸ் செய்ய வேண்டியதில்லை. வழக்கம் போல உற்சாகமாக ஈடுபடுங்கள். உறவை முடித்த பின்னர் இருவரும் நன்கு ரிலாக்ஸ் ஆகிக் கொள்ளுங்கள். பிறகு சூடான பால் சாப்பிட்டு விட்டு இருவரும் ஹாயாக சிறிது நேரம் படுத்தபடி பேசிக் கொண்டிருங்கள்.

சாதாரணமான முறையில் இல்லாமல் செக்ஸியாக, உறவை மையமாகக் கொண்டு பேசிக் கொண்டிருங்கள். அப்போதுதான் மூடு மாறாது. இப்படியே ஒரு ஒரு மணி நேரம் ஓடட்டும். அதன் பின்னர் அடுத்த உறவுக்குத் தயாராகலாம்.

2வது முறையை வேறு விதமாக செய்ய ஆரம்பியுங்கள். இதனால் உங்களுக்குள் சோர்வு ஏற்படாது, மாறாக புத்துணர்வும், புது அனுபவமும் கிடைக்கும்.

இந்த 2வது உறவு உங்களுக்குள் பெரும் நம்பிக்கையை மட்டுமல்லாமல், பெருத்த சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் கொண்டு வந்து சேர்க்கும். மீண்டும் தேவைப்பட்டால், மறுபடியும் ஒரு சின்ன பிரேக், பிறகு சின்னதாக ஒரு முன் விளையாட்டு என்று ஆரம்பித்து தொடருங்கள்…

மிகவும் இளம் வயதினராக இருந்தால் 4, 5 என்று கூட தாண்டிப் போக முடியும். அதுவே நடுத்தர வயதினராக இருந்தால் 2 அல்லது 3 வரை போகலாம். அதற்கு மேலும் முடிந்தால் போகலாம், தவறில்லை. அதேசமயம், உடல் சோர்வையும், வலியையும் மனதில் கொண்டு சற்றே சமர்த்தாக செயல்படுவது நல்லது.

பெண்களைப் பொறுத்தவரை 2 உறவுக்கு மேல் போகும்போது பிறப்புறுப்பில் லூப்ரிகன்ட் குறைய வாய்ப்புள்ளது. எனவே அதற்கேற்றார் போல திட்டமிட்டுக் கொள்வது நல்லது. உங்களுக்கு முடியும் என்பதற்காக அவரைப் போட்டு பாடாய்ப்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். போதிய அளவில் உங்களது துணையின் பிறப்புறுப்பில் லூப்ரிகன்ட் தன்மை இருக்கிறதா என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படவும்.