Daily Archives: ஒக்ரோபர் 1st, 2012

அடடே, இதுவும் ஆச்சரியம்!

 

விசேஷம், ஆனாலும் இவையெல்லாமே வித்தியாசம் என்று உங்களுக்கும் சில சமயம் சொல்லத் தோன்றும். அப்படி சொல்லக்கூடியவற்றில் இம்மாதிரியான வித்தியாசமான உயிரினங்களும் இருக்கலாமே…

மாரஸ் ஒர்தோகானா

Fish03

பார்ப்பதற்கு சரவெடியைப் போல் தோன்றும். இவை நுண்ணுயிரி வகையைச் சேர்ந்தவை. ஒரு வகையில் பார்க்க இவை ஜெல்லி மீன்கள் போலவும் தோற்றம் தருகின்றன.

அக்ஸோடில்

Fish07

ஒருவகை பல்லி இனத்தைச் சேர்ந்த இவை, மீன்களைப் போல தண்ணீரில் வாழ்பவை. நடக்கும் மீன் என்று அழைக்கப்படும் இவை, பல வண்ணங்களில் காணப்படும். இவை தண்ணீரில் வளைந்து நெளிந்து நீந்தும்போது பல்லி நீந்துவது போல் தெரியும்.

கோமோண்டோர் நாய்

Bit02

இவ்வகை நாய்கள் 30 இஞ்ச் வரை வளரக் கூடியவை. உடல் முழுவதும் பின்னல்கள் போல் முடிகள் வளர்ந்து காணப்படும். கிராமத்தில் உள்ள விவசாயிகள் தோட்டங்களில் வைக்கோல் போர் வைத்திருப்பார்கள். கொஞ்சம் தூரத்தில் நின்று பார்த்தால் இது ஒரு குட்டி வைக்கோல் போராகத்தான் தெரிகிறது.

கிறிஸ்துமஸ் ட்ரீ புழு

Fish04

டியூப் போன்ற வடிவமைப்பு கொண்ட இந்த வகைப்புழுக்கள் பார்வைக்கு கிறிஸ்துமஸ் மரத்தின் இலைத்திட்டுகள் போல காட்சி தருகின்றன. மூச்சு விடவும், ஏதேனும் உணவு உட்கொள்ளவும் இந்த இலைத் திட்டுகளை பயன்படுத்திக் கொள்கின்றன. அதேநேரம் ஏதாவது ஆபத்து அறிகுறிகளை உணர்ந்தால் உடனே இந்த கிறிஸ்துமஸ் மரம் போன்ற வடிவத்தை உள் ளிழுத்துக் கொள்கின்றன.

பிலாப் பிஷ்

இதுவும் ஒரு வகை மீன் இனம் தான். இந்த வகை மீன்கள் 12 இஞ்ச் வரை வளரக்கூடியவை. இவை ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதி கடல் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை நம்மவர்கள் சாப்பிடும் பட்டியலில் இல்லாவிட்டாலும் 800 மீட்டர் ஆழத்தில் மற்ற மீன்களோடு வாழ்வதால் மீனவர்கள் வலையில் அந்த மீன்கள் மாட்டும்போது இவையும் மாட்டி உயிரிழக்கின்றன. இதனால் இந்த மீன் இனம் இப்போது அருகி வருகிறது என்பது கொஞ்சம் அதிர்ச்சியான தகவல் தான்.

ஸீ ஏஞ்சல்

Fish01

கடலில் ஒரு தேவதை போல் காட்சியளிக்கும் இவை உண்மையில் நத்தை இனத்தைச் சேர்ந்தவை. அண்டார்டிகா கடலில் வாழும் இவை டேரோ போட்ஸ் என்ற நத்தை இனத்தை உட்கொண்டு வாழும்.

நோய்களைக் கண்டறியும் `டி.என்.ஏ.’ கம்பிகள்!

மின்சாரத்தை கடத்த மனிதர்கள் அலுமினிய மற்றும் செப்பு கம்பிகளை பயன்படுத்துகிறார்கள். அதுபோல, நமது மரபணுக்களில் ஏற்படும் பிழைகளைக் கண்டறிந்து சரி செய்வதற்கான ரசாயன சமிக்ஞைகளை கடத்தும் ஒரு கம்பியாக, மரபுப்பொருளான டி.என்.ஏ.வை இயற்கை அன்னை பயன்படுத்துகிறாள் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார் அமெரிக்க ஆய்வாளர் ஜாக்விலின் கே.பார்டன்.
இந்த அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான அமெரிக்காவின் மிக உயரிய அங்கீகாரமான `நேஷனல் மெடல் ஆப் சயின்ஸ்’ என்னும் விருதினை பெற்றிருக்கிறார் ஜாக்விலின் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இயற்கையால் சரி செய்யப்படாத மரபணுப் பிழைகளே புற்றுநோய் போன்ற நோய்களுக்கும், முதுமையில் தோன்றும் உடல் மற்றும் மனத்தளர்வுக்கும் காரணம் என்கிறது அறிவியல்.
`டி.என்.ஏ. என்பது மிகவும் நுட்பமான, பிரத்தியேகமான ஒரு கம்பி’ என்கிறார் அமெரிக்காவின் கலிபோர்னியா தொழில்நுட்ப ஆய்வு மையத்தின் முனைவரான ஜாக்விலின். டி.என்.ஏ.வின் இந்த நுட்பமான தன்மையே மரபணு பிழைகளைக் கண்டறியும் ஒரு மின்சார பயோசென்சராக அதனை மாற்றுகிறது என்கிறார் ஜாக்விலின்.
இயற்கையில், டி.என்.ஏ.வானது எப் போதும் பாதிப்பு அல்லது சேத மடைந்துகொண்டுதான் இருக்கிறதாம். உதாரணமாக, மிக அதிகப்படியான சூரிய ஒளியால் பாதிப்படையும் தோல் உயிரணுக்கள் அல்லது சிகரெட் புகையிலிருந்து வரும் கார்சினோஜென்களால் பாதிப்படையும் நுரையீரல் உயிரணுக்கள் போன்றவற்றை சொல்லலாம். அதிர்ஷ்டவசமாக, வளைந்துசெல்லும் ஏணிப்படிகளைப் போன்ற அமைப்புடைய டி.என்.ஏ.வை சுற்றி, எப்போதும் ரோந்து பணியில் ஈடுபடும் சில பிரத்தியேக புரதங்களைக் கொண்டு நம் உயிரணுக்கள் டி.என்.ஏ. பாதிப்புகளை சரி செய்து கொள்கின்றன.
இந்த புரதங்கள் நம் டி.என்.ஏ.வில் உள்ள சுமார் 3 பில்லியன் பேஸ் பேர்கள் அல்லது அடிப்படைக் கூறுகளை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருக்கின்றனவாம். இதன்மூலமே கார்சினோஜென்கள் மற்றும் இதர ஆபத்துகளால் ஏற்படும் டி.என்.ஏ. பாதிப்புகள் அவ்வப்போது சரி செய்யப்பட்டு புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

டி.என்.ஏ.வுடைய பேஸ்கள் ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட செப்பு நாணயங்களைப் போன்றவையாம். அதுமட்டுமில்லாமல், சரியான வகையில் நேர்படுத்தப்பட்டு, நல்ல நிலையில் இருக்கும் செப்பு நாணய அடுக்குகள் மின்சாரத்தை கடத்தக்கூடியவையாம். ஆனால் அதேசமயம், இத்தகைய செப்பு நாணய அடுக்கில் இருக்கும் ஒரு நாணயமானது அங்குமிங்கும் மாறிவிட்டாலோ அல்லது சரியாக அடுக்கப்படாவிட்டாலோ அந்த அடுக்கு மின்சாரத்தை கடத்தும் திறனை இழந்துவிடும் என்கிறார் ஜாக்விலின்.
அதுபோலவே, டி.என்.ஏ.வில் இருக்கக்கூடிய பேஸ்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டாலோ அல்லது புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய டி.என்.ஏ. மாற்றங்கள் போன்ற வேறு விதமான பாதிப்புகள் டி.என்.ஏ.வில் ஏற்பட்டாலோ, டி.என்.ஏ. கம்பியில் தடை ஏற்பட்டு மின்சாரமானது டி.என்.ஏ. வழியாக சரியாக பாயாமல் அல்லது கடத்தப்படாமல் போய்விடுமாம்.
ஒரு மின்சார கம்பியின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு பாயும் போது மின்சாரத்தை உற்பத்திசெய்யும் எலக்ட்ரான்கள், டி.என்.ஏ.வின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கும் பாய்கின்றன என்று நிரூபித்தார் ஜாக்விலின்.
புற்றுநோய் மற்றும் இதர நோய்களை ஏற்படுத்தக் கூடிய டி.என்.ஏ. மாற்றங்கள் அல்லது மியூட்டேஷன்களை கண்டறிந்து சொல்லும் மருத்துவ நோய் அறியும் கருவிகள் மற்றும் பயோசென்சார்களில் பயன்படுத்த, 34 நானோமீட்டர் நீளமுள்ள டி.என்.ஏ.வே போதுமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
டி.என்.ஏ. தனது மின்சார பண்புகளை பயன்படுத்தியே டி.என்.ஏ. பாதிப்புகளை சரிசெய்யும் புரதங்களுக்கு சமிக்ஞை செய்கிறது என்கிறது ஜாக்விலின் தலைமையிலான ஆய்வு. ஆக, டி.என்.ஏ.வானது மின்சாரத்தை சரியாக கடத்தாதபோது, அதுவே டி.என்.ஏ. பாதிப்புகளை சரிசெய்யும் புரதங்களை செயல்படத் தூண்டும் சமிக்ஞையாகி விடுகிறது என்கிறார் ஜாக்விலின்.
இந்த அறிவியல் உண்மைகள் மற்றும் புரிதல்களைப் பயன்படுத்தி, நமது உயிரணுக்களில் உள்ள மரபணுக்களில் ஏற்படும் டி.என்.ஏ. பாதிப்புகளைக் கண்டறியும் கருவிகளான டி.என்.ஏ. சிப்களை, தற்போது உருவாக்கிக்கொண்டு இருக்கிறது ஜாக்விலின் தலைமையிலான ஆய்வுக்குழு.
இத்தகைய டி.என்.ஏ. சிப்பானது, டி.என்.ஏ.வில் ஏற்படும் மியூட்டேஷன்கள் காரணமாக அதன் மின்கடத்தல் திறனில் நிகழும் மாற்றங்களைக்கொண்டு, நோய்கள் மற்றும் நோய் ஏற்படும் ஆபத்துகளை கண்டறிய உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்ப்யூட்டருக்குப் புதியவரா? – ஆப்பரேட்டிங் சிஸ்டம்

டாஸ், விண்டோஸ், யுனிக்ஸ், லினக்ஸ் எனப் பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப்பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். அது பற்றிய சில எளிமையான குறிப்புகள் இங்கே தரப்படுகின்றன.

கம்ப்யூட்டரின் உயிர்


நமது உடலை இயங்க வைக்க உயிர் தேவை. உயிரற்ற உடலைக் கொண்டு எந்தப் பயனுமில்லை. அதுபோல் கம்ப்யூட்டர் என்ற ஹார்ட்வேரை (அதாவது உடலை) இயங்க வைக்க ஆப்பரேட்டிங் சிஸ்டம் (அதாவது உயிர்) தேவை. ஆப்பரேட்டிங் சிஸ்டம் இல்லாத கம்ப்யூட்டரைக் கொண்டு எந்தப் பயனுமில்லை. அதை ஒரு அலங்காரப் பொருளாக வேண்டுமானால் பார்த்துக் கொண்டிருக்கலாம். கம்ப்யூட்டரும், ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஒன்றையொன்று சார்ந்து நிற்கின்றன. இது இல்லாமல் அது இல்லை; அது இல்லாமல் இது இல்லை.

ஆப்பரேட்டிங் சிஸ்டம்

உலோகம் மற்றும் பிளாஸ்டிக் கொண்டு ஆக்கப்பட்ட உயிரற்ற ஒரு பொருள்தான் கம்ப்யூட்டர். கார், பைக், மிக்ஸி, டிவி போன்ற பொருட்களை எடுத்துக் கொண்டால், இன்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்று வரையறுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்ன வேலையைச் செய்ய வேண்டும் என்று கம்ப்யூட்டருக்கு வரையறுக்கப்படவில்லை. தருகிற ஆணைகளை (Instruction) ஒழுங்காகப் பின் பற்றும்படி அதற்குக் கூறப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் பின்பற்ற வேண்டிய ஆணைகள் அடங்கிய பட்டியலை புரோகிராம் என அழைக்கிறோம். புரோகிராமை கம்ப்யூட்டர் இயக்குகிறது (Execute) எனச்சொல்லுவது, ஒவ்வொரு ஆணையையும் வரிசையாக மேற்கொள்வதைத்தான் குறிக்கிறது.
குறிப்பிட்ட தேவையை நிறைவேற்ற ஒரு புரோகிராம் எழுதப்படலாம். எடுத்துக்காட்டாக தேதியையும், நேரத்தையும் காட்ட ஒரு புரோகிராம் எழுதலாம். வேர்ட் பிராசசிங் வேலையை செய்ய ஒரு நீண்ட புரோகிராம் தேவைப்படலாம்.
நாம் இயக்குகிற எல்லா புரோகிராம்களும் கொண்ட தொகுப்பை சாப்ட்வேர் என்கிறோம். கம்ப்யூட்டருக்கு உயிரைக் கொடுப்பது சாப்ட்வேரின் ஒரு பிரிவான ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அப்ளிகேஷன் சாப்ட்வேர், சிஸ்டம் சாப்ட்வேர் என இரு வகையாக சாப்ட்வேரைப் பிரிப்பார்கள். சிஸ்டம் சாப்ட்வேரின் மறு பெயர்தான் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். கம்ப்யூட்டருக்கும், அப்ளிகேஷன் சாப்ட்வேர்களுக்கும் இடையில் இருந்து ஒரு பாலமாக செயல்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும்.

என்ன வேலைகளைச் செய்கிறது?

கம்ப்யூட்டரில் பல பணிகளை மேலாண்மை (Management) செய்வது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அவை என்ன வெனப் பாருங்கள்.
1) உள்ளீடு/வெளியீடு (Input/ Output)
2) நினைவக (Memory) மேலாண்மை
3) பணி (Task) மேலாண்மை
4) பைல் மேலாண்மை
கீபோர்டு, மானிட்டர், பிரின்டர் போன்ற ஹார்ட்வேர் உறுப்புக்களைக் கண்காணித்து அவற்றிடம் வேலை வாங்குவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. எடுத்துக்காட்டாக ஒவ்வொரு தடவையும் கீபோர்டில் உள்ள கீகளை நீங்கள் அழுத்தும் பொழுது, ஆப்பரேட்டிங் சிஸ்டம் கண்காணித்து, அந்த கீகள் குறிக்கிற எழுத்துக்களை மானிட்டரில் வெளிப்படுத்துகிறது.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள நினைவகத்தின் அளவை அறிந்து அதைப் புத்திசாலித்தனமாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்திக் கொள்ளும். நினைவகத்தில் தான் தங்குவதற்கான இடம், அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் தங்குவதற்கான இடம், நீங்கள் டைப் செய்கிற விவரங்களை அமைக்கும் இடம், டிஸ்க்கிலுள்ள பைலை படிக்கும் பொழுது அதன் விவரங்களை வைக்க வேண்டிய இடம் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே தீர்மானிக்கிறது.
பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்க முடியும். Multitask என இதை அழைப்பார்கள். இவ்வாறு பல பணிகளில் ஈடுபடும்போது ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையே பிணக்கு எதுவும் ஏற்படாமல், சிக்கலின்றி வழி நடத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட பணியை இரு சிறு கூறுகளாகப் பிரித்து இரண்டு சிபியுக்களிடம் (CPU) கொடுத்து வேலையை முடிக்கவும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் தெரியும்.
நீங்கள் உருவாக்கும் பைல்கள், மற்றும் அப்ளிகேஷன்களுக்கான பைல்கள் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே பராமரிக்கிறது. பைலைச் சேமிக்க, அழிக்க, வேறிடத்துக்கு நகர்த்த, பெயர் மாற்றம் செய்ய போன்ற வேலைகளை நீங்கள் கட்டளை தருகையில் ஆப்பரேட்டிங் சிஸ்டமே அவற்றை மேற்கொள் கிறது.

ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வகைகள்

எவ்வளவு நபர்கள், எவ்வளவு பணிகள் ஒரு நேரத்தில் பயன்படுத்த மேற்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பிரிக்கிறார்கள். மூன்று வகைகள் நமக்கு கிடைக்கின்றன:
1) ஒரு பயனாளர் – ஒரு பணி
(Single User Single task)
2) ஒரு பயனாளர் – பல பணி
(Single User Multi task)
3) பல் பயனாளர் / பல பணி
(Multy User Multi task)
ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே, அதுவும் ஒரு பணியினை மட்டுமே ஒரு பயனாளர்/ஒரு பணி என்ற வகை ஆப்பரேட்டிங் சிஸ்டத் தில் செய்ய முடியும். அடுத்த பணியை செய்ய விரும்பினால், முதல் பணியை அவர் மூட வேண்டும். பழைய DOS ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான எடுத்துக்காட்டாகும். இப்போது இதனை இவ்வகையில் நாம் பயன்படுத்துவதில்லை ஒரு நேரத்தில் ஒருவரை மட்டுமே ஆனால் அவர் எவ்வளவு பணிகளை வேண்டுமானாலும் செய்யும்படி அனுமதிக்கிற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை ஒரு பயனாளர்/பலபணி எனலாம். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான எடுத்துக்காட்டாகும். ஒரே நேரத்தில் பல பயனாளர்கள் நுழையும் படியும், அவரவர்கள் தங்களுக்கு வேண்டிய பல பணிகளை செய்யும்படியும் தயாரிக்கப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பற்பயனாளர்-பலபணி எனலாம். யுனிக்ஸ், லினக்ஸ், விண்டோஸ் என்டி, விண்டோஸ் சர்வர் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இதற்கான எடுத்துக்காட்டுக்களாகும்.

ஆயுர்வேதம்: உணவே பிடிக்கவில்லை என்று சொல்லலாமா?

பாலுடன் புளிப்பான பழங்களைச் சேர்த்து கூழாகச் செய்து, "மில்க் ஷேக்’ சாப்பிடுவது மிக மிகக் கெடுதல். இதுபோன்ற, முரண்பாடான உணவுகளை, தினசரி உண்பதால், கர்ப்பத்திலுள்ள சிசு, பிறக்கும்போதே வியாதியால் தாக்கப்படுகிறது. பிறக்கும் குழந்தைகள், தோல் நோய், சுவாச நோயுடன், உணவு ஒவ்வாமை நோயும் சேர்ந்து பிறக்கின்றன.
இரண்டு வயது குமாருக்கு உணவு என்றாலே விஷம் போன்றது! அரிசி, பால், நெய், கோதுமை, பருப்பு வகைகள், பட்டாணி, சுண்டல், கடலை, முட்டை யாவுமே அவனுக்கு ஒவ்வாத உணவு. இவைகளில் ஏதாவது ஒன்று சிறிதளவு உடலில் பட்டாலோ அல்லது உடலுக்குள் சென்றாலோ அது விஷம் போலமாறி உயிரையே பாதிக்கும். இதுபோன்ற ஒரு வியாதி, இந்தியக் குழந்தைகளிடம் காண்பதில்லை.
ஆனால், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில், இந்தப் புதிய நோய் பரவலாகத் தோன்றியுள்ளது. அங்கு பிறக்கும் இந்தியர்களின் குழந்தைகளும் பெருவாரியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

உடல் தடிப்பு?


மேற்கத்திய நாடுகளில் இந்த நோய்க்கு எந்த சிகிச்சையும் இல்லாததால், அவர்கள் ஆயுர்வேத சிகிச்சையை நாடி வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில், எங்களது வைத்திய சாலையை நாடி வந்த குழந்தைகள், ஆயுர்வேத சிகிச்சையைப் பெற்றுப் பயனுற்றனர்.
இன்று புதுப் புதுவியாதிகள் மக்களைத் தாக்குகின்றன. நோயால் தாக்கப்படும் குழந்தைகள், நாம் நாள்தோறும் உட்கொள்ளும் உணவுகளை, உண்ண இயலாத நிலையில் உள்ளனர்.
உதாரணமாக இரண்டு வயதுள்ள கிருஷ்ணனுக்கு, கோதுமை, ஒவ்வாத உணவு. கோதுமையால் சமைத்த ரொட்டி, பூரி என, எது சாப்பிட்டாலும், வாந்தி, பேதி, உடல் முழுவதும் சிவந்த தடிப்புகள், உதடுகளில் வீக்கம், உடல், முழுவதும் அரிப்பு ஏற்படும்.
இந்த அறிகுறிகள் ஒரு சிறிய பருக்கை அளவு உணவு சாப்பிட்டால், அரை மணி நேரத்திற்குள் அவனைத் தாக்கும். அந்த வீட்டில் கோதுமை சமைத்தாலே, காற்றில் அந்த மாவின் அம்சம் அவன் நுகர்வதால், அவனுக்கு உடல் பாதிக்கப்படும்.

பாலும், "அலர்ஜி’

கோபாலுக்கு இரண்டரை வயது. அவனுக்குப் பால் அதி பயங்கர, "அலர்ஜியை’ உண்டு பண்ணும். ஒரு துளி பால் அவனுள் சென்றால் வாந்தி, பேதி, மூச்சுத்திணறல், உடல் தடிப்பு, உடல் முழுவதும் அரிப்பு கண்கள் சிவந்து, மிகவும் மோசமான உடல் நிலைக்குத் தள்ளப்படுவான். இதைத் தவிர பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, முட்டை, கோதுமை யாவுமே இவனுக்கு ஒவ்வாத உணவுப்பொருட்கள்.
மேற்கத்திய நாடுகளில், பெருவாரியாகப் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள், இதற்குக் காரணம் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதற்கு மற்றுமொரு காரணம், புதிய உணவு வகைகள் என்றும், சிலர் கூறுகின்றனர்.

பாலுடன், புளிப்பு சேர்க்காதீர்கள்

கர்ப்ப காலத்தில் தாயின் உணவுப் பழக்கங்களும், இந்த வியாதிக்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும். பொதுவாக, பாலுடன் புளிப்பான உணவுகளை சேர்த்து உண்பது. ஒவ்வாத அல்லது விருத்தமான ஒரு உணவுப்பழக்கம்.
தயிருடன் பழங்களைக் கலந்து உண்பது மற்றுமொரு விருத்தமான உணவு. இது போன்ற விருத்தமான உணவுகளை, அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால், அது உடலிலேயே தங்கி, பல வியாதிகளுக்கு அஸ்திவாரம் போடுகிறது. பாலுடன் புளிப்பான பழங்களைச் சேர்த்து கூழாகச் செய்து, "மில்க் ஷேக்’ சாப்பிடுவது மிக மிகக் கெடுதல்.
இது போன்ற, விருத்தமான அல்லது முரண்பாடான உணவுகளை, தினசரி உண்பதால், கர்ப்பத்திலுள்ள சிசு, பிறக்கும் பொழுதே வியாதியால் தாக்கப்படுகிறது. பிறக்கும் குழந்தைகள், தோல் நோய், சுவாச நோயுடன், உணவு ஒவ்வாமை நோயும் சேர்ந்து பிறக்கின்றன.

கபம், வாயு சீற்றம்

ஆயுர்வேத சிகிச்சையின் கண்ணோட்டத்தில், இக்குழந்தைகளுக்கு, கபம், வாதம், பித்தம் ஆகிய மூன்று தோஷங்களின் சீற்றத்தையும், உடலில் காணலாம். முக்கியமாக கபமும், வாயுவும் இந்த நோயில் மிக அதிகமாக சீற்றமடைந்து உடலைத் தாக்குகின்றன.
அலர்ஜி குழந்தைகளில் பலருக்கு சுவாச நோய் சேர்ந்து வருவதால், படிப்படியாக அக்குழந்தைகள் பயன்படுத்தும், "இன்ஹேலர், ஸ்டிராய்டு, ஆன்டிஹிஸ்டாமின்’ போன்ற மருந்துகளைக் குறைத்து, பதிலாக, ஆயுர்வேத மருந்துகள் அளிக்கப்படுகின்றன.
இவ்வாறு, சில வாரங்களில் அவர்களுக்கு, ஒவ்வாத உணவுகளில், சில முக்கிய உணவுகளை, சிறிய அளவில் ஆயுர்வேத மருந்துகளுடன் இணைத்துக் கொடுத்து, நாளடைவில் உடலில், விஷத்தன்மையை மாற்றி உணவை ஜீரணிக்குமாறு உகந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
டாக்டர் பி.எல்.டி. கிரிஜா
சஞ்சீவனி ஆயுர்வேத யோகா மையம்