Daily Archives: ஒக்ரோபர் 4th, 2012

காலை எழுந்ததும் ‘விளையாட்டு’…!

காலையில் பலருக்கும் பிடிக்காத ஒரு சத்தம் அலாரம் அடிக்கும் கிணிகிணி ஒலிதான்… படு கடுப்பாக இருக்கும். எழுந்திருக்கவே வெறுப்பாக இருக்கும்… ஆனால் மாத்தி யோசிச்சுப் பாருங்களேன், அந்த அதிகாலை நேரத்தில் உங்கள் துணையுடன் உல்லாசமாக இருந்தால் எப்படி இருக்கும்… கேட்கவே ஜாலியா இருக்குல்ல.. தொடர்ந்து படியுங்கள்…

காலையில் வைத்துக் கொள்ளும் உறவு உங்களது அன்றைய நாளை மிக சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும், உற்சாகமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறதாம். மன ரீதியாக மட்டுமல்லாமல் உடல் ரீதியாகவும் நீங்கள் புத்துணர்ச்சியுடன் செயல்பட மார்னிங் செக்ஸ் கை கொடுக்கிறதாம்.

காலை உறவில் ஈடுபட முடிவு செய்து விட்டால் அதற்காக சில ஆயத்தங்களையும் செய்து கொள்ளத் தவறாதீர்கள். அதுதொடர்பான டிப்ஸ் இதோ…

– முதல் நாள் இரவே உங்களது பற்களை நன்றாக துலக்கி விடுங்கள். பிறகு உங்களது படுக்கைக்குப் பக்கத்திலேயே மின்ட் போன்ற வாய்ச் சுத்தம் தரும் பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். எழுந்திருக்கும்போது அதை போட்டுக் கொள்ள உதவும். வாய் நாறினால் உறவும் நாறிப் போய் விடுமே…

– காலையில் உடலும், மனதும் படு பளிச்சென இருக்கும். எனவே புதிய புதிய விஷயங்களை பரீட்சார்த்தமாக செய்து பார்க்க காலைதான் சரியான சமயமாம். எனவே வித்தியாசமாக எதையாவது செய்து பார்க்கலாம்.

– எழுந்ததுமே இருவரும் சில நிமிடங்களைத் தழுவுதலுக்காக ஒதுக்குங்கள். பிறு மெல்ல மெல்ல உடைகளைக் களையுங்கள்.

– புதிய பொசிஷன்களை காலையில் செய்து பார்க்கலாம். ஸ்பூனிங் பொசிஷன் ரொம்ப எளிதானது. எனவே அதை காலையில் செய்து பார்க்கலாம்.

– உறவை முடித்ததும், குளிக்கச் செல்லும்போது சேர்ந்தே போகலாம். இருவரும் சேர்ந்து குளிக்கும்போது கிடைக்கும் சுகமே அலாதியானது. உடல்கள் நீரில் இணைந்து பிணையும்போது மனதுக்குள் ஏற்படும் சுகம் சொல்லில் வடிக்க முடியாததாக இருக்கும். இருவருக்கும் இடையிலான பாசப்ப பிணப்பை அது கூட்டித் தரும்.

காலையில் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது நமது உடலிலிருந்து வெளியாகும் ஆக்ஸிடாசின் என்ற வேதிப் பொருள் உடலைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுகிறதாம்.

அதுமட்டுமல்லாமல் காலையிலேயே சுறுசுறுப்பாக ஆரம்பிப்பதால் அன்றைய நாள் முழுவதும் அந்த சுறுசுறுப்பு நம்முடனேயே இருக்குமாம். மேலும் காலையில் நடந்ததை நினைத்து நினைத்து மனதும் கூட உற்சாகமாக இருக்குமாம்.

வாரத்திற்கு 3 முறையாவது காலையில் செக்ஸ் வைத்துக் கொள்வது நல்லது என்கிறார்கள் செக்ஸாலஜிஸ்ட்டுகள். அப்படியானால் மற்ற நாட்களில் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.. மற்ற நாட்களில் இரவுக்கு மாறி விடுங்கள்… வாரத்தில் 7 நாட்களும் செக்ஸ் வைத்துக் கொண்டால் தப்பே இல்லை….!!!

“சும்மா சொல்லக்கூடாதுங்க, புழல் சிறை சொர்க்கம்’: சிறை பறவையின் நேரடி அனுபவம்

வாழ்க்கை என்பது மிகச்சிறந்த கலை. நல்லவர்களாக வாழ்தல் இந்த சமூகத்திற்கு நாம் செய்யும் தொண்டு. பிறர் மாதிரி வாழாமல், பிறருக்கு மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும் என, முனைப்பு காட்டுவோர் உண்டு. இதற்கு எதிர்மறையானவர்களும் இருக்கத் தான் செய்கின்றனர்.சிறைக்கு செல்லாமல் இருந்தால், பன்னீர் செல்வத்திற்கு தூக்கம் வராதாம். வளசரவாக்கம் காவல் நிலையத்தில், அப்பாவி போல் உட்கார்ந்து இருந்தவரிடம் உரையாடிய போது, புழல் சிறையில் இருக்கும் செடிகள் எல்லாம் தன்னை பார்க்காமல் எப்படி இருக்கிறதோ என, கவலைப்பட்டார்.

அவருடன் பேசியதிலிருந்து…

எதற்காக காவல் நிலையத்தில் உட்கார்ந்து இருக்கிறீர்கள்?
திருட்டு பயல போலீசு புடுச்சா, காவல் நிலையம் தான் கதி.

உங்களை பார்த்தால் அப்படி தெரியவில்லையே…
உங்க வீட்டில் சைக்கிள் இருக்கா, அது காணாமல் போனா நான் யாருன்னு உங்களுக்கு தெரிந்துவிடும்.

சைக்கிள் மட்டும் தான் திருடுவீர்களா?
மத்த பயலுக மாதிரி, பெரிய, பெரிய சமாச்சாரமெல்லாம் நமக்குத் தெரியாது; அது தேவையும் இல்லை. வீட்டுக்கு முன்னாடி பித்தளை பாத்திரம், இரும்புச் சட்டி, சைக்கிள திருடி விற்கிறதுக்குள்ள நான் படுறபாடு உங்களுக்குத் தெரியாது.

திருடுவது தவறு என்று தெரியவில்லையா?
சின்ன வயதில் இருந்து திருடுவதால் தவறு என்று தோணவில்லை. ஆரம்பத்துல பயமாத்தான் இருந்தது. இப்ப பழகிப்போச்சு…

எத்தனை வயதில் இருந்து…
விருகம்பாக்கம் ஏரி கரைதான் நான் பிறந்து வளர்ந்தது. படிப்பு ஏறல. பத்து வயசுல திருட ஆரம்பிச்சேன். இப்ப நாற்பது ஆகுது. திருடிக்கொண்டே இருக்கிறேன்.

வேலைக்கு போகக்கூடாதா?
நல்லா இருக்கே உங்க கேள்வி. என்ன பற்றி கேள்விபட்ட யாராவது வேலை கொடுப்பாங்களா? தினமும் குடிக்க வேண்டும். அதற்காக திருடுகிறேன்.

குடிப்பழக்கம் திருடனாக்கி விட்டது என்கிறீர்களா?
என் வாழ்வில் பட்ட அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன். உங்க காலில் விழுந்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன். யாரும் குடிக்காதீங்க. சின்ன வயசுல நண்பர்களுடன் குடிக்க ஆரம்பித்தேன். அதன் பின் 24 மணி நேரமும் போதையில்தான் இருப்பேன். யாருகிட்டேயும் சண்டைக்கு போகமாட்டேன். வாயில் இருந்து வரும் வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியாது. குடிக்கு அடிமையானதால், மனைவி பிரிந்து விட்டாள். அந்த சோகமும் வாட்டி வதைக்க, மேலும் குடிக்க ஆரம்பித்தேன். வயிறு பட்டினி கிடந்தாலும், மண்டைக்குள்ள போதை இருக்கணும். குடிக்க கையில் காசு இருக்காது. ஆனால், குடிக்க வேண்டும்; என்ன செய்வது. அதனால், திருட ஆரம்பிதேன்.

முதல் திருட்டு அனுபவத்தை சொல்லுங்கள்…
விருகம்பாக்கத்தில், சைக்கிளில் ஒருவர் வேலைக்கு சென்று வருவார். அவர் எங்கெல்லாம் போகிறார். சைக்கிளை எந்த இடத்தில் நிறுத்துகிறார் என்பதை தொடர்ந்து நோட்டமிட்டேன். அவர் கண்ணயர்ந்த சமயம் பார்த்து திருடி விட்டேன். குடிகாரனாக இருந்தவன் திருடனாகி விட்டேனே என, நினைத்து அன்று இரவு தூக்கமே வரவில்லை. சைக்கிள் விற்ற காசு தீர்ந்து போனதும், மீண்டும், மீண்டும் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்தேன். ஒரு நாள் போலீசில் மாட்டிக் கொண்டேன்.

சிறைக்கு சென்ற அனுபவம்?
சிறைக்கு போவதும், வருவதுமே வாழ்க்கையாகிப் போனது. மத்திய சிறையில் காலடி எடுத்து வைத்தபோது, அடிப்பார்களோ என, பயமாகத்தான் இருந்தது. பெரிய, பெரிய ரவுடிகள் இருப்பார்கள், அவர்களிடம் மாட்டிக் கொண்டு உதைபடப் போகிறோம் என்று தான் நினைத்தேன். மத்திய சிறை கொடுமையானது தான், சும்மா சொல்லக்கூடாதுங்க, புழல்சொர்க்கம். மணியடிச்சா சாப்பாடு, வாரத்தில் ஒரு நாள் கோழிக்கறி, உள்ளேயே கால்பந்து விளையாட்டு என, பொழுது போகும். சிறை அதிகாரிகள் அன்பானவர்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளிகளாகி விட்டவர்களை திருத்தும் மிக அற்புதமான இடம் அது.சிறை ரவுடிகள் பற்றி சொல்லுங்கள்பன்னீர்செல்வம் ரொம்ப “ஜாலி’யான ஆளு. அதனால ஆடச்சொல்லி, பாடச்சொல்லி கேட்பாங்க. சிறைக்குள் தனிமையில் அழுகிற ரவுடிகளை பார்த்து இருக்கிறேன். அவுங்களுக்கு பயம் அதிகம். அதனால் தான் கத்தியை மூன்றாவது கைபோல் பாவித்து வரு கிறார்கள். கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவுன்னு அவுங்களுக்கும் தெரிகிறது.

அங்கு என்னவெல்லாம் கிடைக்கிறது?
பெண்ணைத் தவிர எல்லாம் கிடைக்கும். கட்டு கட்டா துட்டு செலவு செய்தால், சகலவிதமான வசதிகளுடன் இருக்கலாம்.

இரண்டு பீடி கட்டுகள் தானே சிறைக்குள் அனுமதி?
மனுவுல வருபவர்கள் இரண்டு பீடி கட்டு தான் கொண்டு வர வேண்டும். என்னைப் போன்று இருப்பவர்களுக்கு துண்டு பீடி கூட கிடைக்காது. அதற்காக, பீடி உள்ளவர்களை சுற்றி பெரும் கூட்டம் வட்டமடித்துக் கொண்டே இருக்கும். அவுங்க சொல்கிற வேலையெல்லாம் கேட்கணும். துணி துவைத்து தந்தால், ஒரு பீடி கொடுப்பாங்க. அந்த பீடியில், ஸ்டிக்கர் வரை குடித்தால் அரை நாள் ­­தாங்கும். விரல் பிடிக்கும் பகுதி வரை குடித்தால் ஒரு நாள் ஓடிப்போகும். அடுத்த பீடி கிடைக்கும் வரை, துண்டு பீடியை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியது தான்.

கஞ்சா எப்படி வருகிறது?
அலைபேசி வழியில் வியாபாரம் முடிந்து விடுவதால், சிறைக்கு பின்புறத்தில் இருந்து, இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டு இருப்பவர்கள், ரப்பர் பந்தை சிறைக்குள் வீசுவார்கள். அதில் இருக்கும் கஞ்சா பொட்டலத்தில், இது இன்னாருக்கு என்பதற்கான அடையாளம் இருக்கும். அதை வேறு யாரும் எடுக்க மாட்டார்கள். சிறை கண்காணிப்பாளரிடம் மாட்டிக்கொண்டால், தனிமை சிறையில், போட்டு விடுவார்கள். சாப்பிடுவது, மலம் கழிப்பது எல்லாமே அங்கே தான். அந்த சிறைக்கு மட்டும் போகவே கூடாது.

“சிம்’ கார்டெல்லாம் வைத்திருப்பார்களா?
கழிப்பறை பீங்கானை அடியில் அறுத்து, அதில் சிம்கார்டு பதுக்கி வைத்திருப்பார்கள், அலைபேசி இருக்கும் இடம் யாருக்குமே தெரியாது. சிறை வாசிகள் கண்களாலேயே பேசிக்கொள்வார்கள். தலையில் கை வைத்தால், வீட்டுக்கு பேச வேண்டும் என, அர்த்தம். அதன்படி அலைபேசி உரையாடலுக்கு ஏற்பாடுகள் நடக்கும்.

சிறையை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அது சொர்க்கம். மணியடிச்சா சோறு, வாரம் தோறும் சிக்கன். உடல் நிலை சரியில்லை என்றால், பேருந்து பிடித்து மருத்துவரைத் தேடி அலைய வேண்டியதுஇல்லை. அங்கேயே மருத்துவ மனை இருக்கிறது. மனமும், உடலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.

வெளியில் இருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?
வெளியில் இருப்பது பிடிக்கவே இல்லை. எந்த சைக்கிளை பார்த்தாலும், திருடலாமா என்று தான் நினைக்க தோன்றுகிறது. அழுக்குபடிந்த ஆடையுடன் அலைய வேண்டியுள்ளது. சிறையில் அப்படி அல்ல. தும்பை பூ போல் தூசி படியாமல் இருக்கலாம். திருந்துவதற்கு சிறை மிகவும் அற்புதமான இடம்.

திருந்த மனம் இல்லையா?
போலீசு மனது வைத்தால், சிறைக்குள் போய் விடுவேன். நான் வளர்த்த செடிகள் எல்லாம் எப்படி இருக்கிறதோ தெரியவில்லை.இவ்வாறு பன்னீர் செல்வம் தெரிவித்தார்

நன்றி- தினமலர்

எனது அன்பு வாசக நண்பர்களுக்கு ஒரு விளக்கம்

பல வாசக நண்பர்கள் இதில் காணப்படும் பதிவுகள் பல்வேறு வலைதளங்களில் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்வது என்னவென்றால் எனது வலைதளத்தின் முகப்பிலேயே கூறியுள்ளேன்,இந்த வலைதளத்தில் காணப்படும் அனைத்து பதிவுகளுமே பல்வேறு வலைதளங்களில் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகளில் நான் படித்தவைகளில் எனக்கு பிடித்த பதிவுகளை காப்பி செய்து பதிவுகளாக வெளியிட்டுள்ளேன். ஏனெனில் பல்வேறு வலைதளங்களில் குறிப்பிட்ட பதிவுகளை தேடி கண்டு பிடிப்பது அனைவருக்கும் கடினம் மற்றும் பல்வேறு பதிவுகள் குறிப்பிட்ட காலத்திற்கு பின் அழிக்கப்பட்டுவிடும். மேலும் சிலர் ஏன் மூல பதிவுகளுக்கு லிங்க் அளிக்ககூடாது மற்றும் நன்றி தெரிவித்து வெளியிடக்கூடாது என கேட்டுள்ளனர். பல பதிவுகள் பல்வேறு வலைபக்கங்களில் காணப்படுகிறது அதில் எந்த வலைதளத்திற்கு லிங்க் கொடுப்பது யாருக்கு நன்றியினை தெரிவித்து கொள்வது. தனி நபரால் வெளியிடப்படும் சொந்த ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு மட்டுமே நன்றி தெரிவிப்பது முறையாகும். பெரும்பாலான கட்டுரைகளில் ஆசிரியருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பதிவுகளில் மட்டுமே தவறுதலாக ஆசிரியர் பெயர் விடுபட்டு இருக்கலாம் என தெரிவித்து கொள்கிறேன்.இனிவரும் பதிவுகளில் ஆசிரியர் பெயரை விடுபடாமல் குறிப்பிட முயற்சிக்கிறேன்.தங்கள் மேலான ஆதரவுக்கு நன்றி.

மின்னணு விரல் நுனிகள்!

Finger 

`எல்லா தகவல்களையும் என் விரல் நுனியில் வைத்திருக்கிறேன்’ என்று சிலர் சொல்லக் கேட்டிருப்போம். விரல் நுனிக்கும் தகவல்களுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. ஆனால், தகவல்களை சேகரிக்க நம் விரல் களும் ஒரு வகையில் உதவத்தான் செய்கின்றன. நாம் இந்த உலகத்தை, சுற்றுச்சூழலை உணர நமக்கு ஐந்து புலன்கள் உண்டு. அவற்றில் ஒன்று தொடுஉணர்வு.
இந்த தொடு உணர்வு மூலம் தகவல்களை சேகரிக்க, நம் விரல்கள்தான் நமக்கு பெரிதும் உதவுகின்றன. உதாரணமாக, தகவல்களை துல்லியமாக சேகரிக்கக்கூடிய நவீன கருவி களைப் போன்றவை நம் விரல்கள் என்று சில வல்லுனர்கள் குறிப்பிடுவதைச் சொல்லலாம்.
ஆனாலும், நம் விரல்களால் தொட்டு உணர்ந்துகொள்ள முடியாத எண்ணற்ற பொருட்களும் நம்மைச் சுற்றி இருக்கத்தான் செய்கின்றன. விரல்களின் இந்த இயலாமையை போக்க வந்துவிட்டது `மின்னணு விரல் நுனிகள்’ என்று அட்டகாசப்படுத்துகிறார்கள் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.
விரல்களின் நுனியில் (சிறிய உறை போல) அணிந்துகொள்ளக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மின்னணு விரல் நுனி கருவி விரல்களின் தொடு உணர்வுத் திறனை பல மடங்கு அதிகமாக்கக் கூடியவை. இதனை அணிந்துகொண்டு எந்த ஒரு பொருளைத் தொட்டாலும், அந்த கருவியிலிருந்து வெளியாகும் தனித்துவமான அதிர்வலைகள் விரல்களை வந்து சேரும். இந்த அதிர்வுகளின் மூலமே விரல்களின் தொடுஉணர்வுத்திறன் பல மடங்கு மேம்படு கிறது என்கிறார் ஆய்வாளர் ரோஜர்.
முக்கியமாக, மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளுக்கு இந்த மின்னணு விரல் நுனிகள் மிகவும் பயனுள்ளதாய் இருக்கும் என்கிறார் ரோஜர் என்பது குறிப்பிடத்தக்கது.
மனித விரல்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கும் இந்த மின்னணு விரல் நுனிகளில் வளையும் தன்மையுள்ள மின்சார சர்கியூட் ஒன்று உண்டு. இதில், சில நானோ மீட்டர்கள் தடிமன் உள்ள தங்க மின் முனைகளாலான படலங்கள், பாலிஇமிட் பிளாஸ்டிக் எனும் ஒரு வகை பிளாஸ்டிக் படலங்களுக்கு நடுவே சான்ட்விச் செய்யப்பட்டிருக்கும். இந்த அமைப்புக்கு `நானோ ஜவ்வு’ என்று பெயர்.
பின்னர், விரல் போன்ற வடிவமைப்புள்ள ஒரு சிலிக்கான் ரப்பர் குழாயில் நானோ ஜவ்வு ஒட்டப்படுகிறது. முக்கியமாக, நானோ ஜவ்வில் உள்ள ஒரு மின்சார சர்கியூட்டின் ஒரு பக்கம், விரல் நுனிகளுடன் நேரடி தொடர்பில் இருக்கும் வண்ணம் நானோ ஜவ்வு பொருத்தப்படுகிறது. சர்கியூட்டின் மறுபக்கத்தில் அழுத்தம், வெப்பம் அல்லது மின்சார பண்பான ரெசிஸ்டன்ஸ் போன்றவற்றை பதிவு செய்யும் சென்சார்களை பொருத்திக்கொள்ளும் வசதியும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கருவியை அணிந்து கொள்பவருக்கு `எலெக்ட்ரோடாக்டைல் தூண்டுதல்’ எனப்படும் ஒரு மின்சார செயலின் மூலம் `சிலிர்ப்பு அல்லது கூச்ச உணர்வு’ ஏற்படும். இதற்கு கருவியிலிருந்து வரும் மின்சாரம் (வோல்டேஜ்) தோலின் மீது பாய்வதே காரணம். சென்சார்களால் கட்டுப்படுத்தப்படும் இந்த மின்சாரத்தின் அளவு தொடப்படும் பொருளைப் பொறுத்தே அமையுமாம்.
மிகவும் சுவாரசியமான இந்த மின்னணு விரல் நுனிகளின் பயன்கள் என்ன?
அறுவை சிகிச்சைக்கு பயன்படும் கையுறைகளில் இந்த விரல் நுனிகளைப் பயன்படுத்தலாம். நானோ ஜவ்வு பொருத்தப்பட்ட கை யுறைகளால் ஒரு திசுவின் தடிமன் அல்லது பொதிவினை உணர முடியுமாம். மேலும், இதை அணிந்துகொள்ளும் ஒரு அறுவை சிகிச்சை நிபுணரால் திசுக்களை லேசாக சீவி விடவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மணிக்கட்டில் கட்டக்கூடிய, ஹை ப்ரீகுவன்சி ஏ.சி. மின்சாரத்தை வெளிப்படுத்தும் மின்கலம் ஒன்று பொருத்தப்பட வேண்டியது அவசியம் என்கிறார் ரோஜர்.
மின்னணு விரல் நுனிகளின் பயன்கள் அறுவை சிகிச்சையோடு நின்றுவிடவில்லை. அதையும் தாண்டி, மிகவும் முக்கியமான, உயிர்வாழ்தலுக்கு இன்றியமையாத இதயத்தின் மின்சார செயல்பாடுகளுடைய 3டி மேப்பை கொடுக்கவல்லதாம் இந்த கருவி. இதயத்தை சுற்றி பொருத்தப்படக்கூடிய நானோ ஜவ்வினால் ஆன உறையின் மூலம் சாத்தியப்படும் இந்த பயன் ஒழுங்கற்ற இதயத்துடிப்பை சரிசெய்துவிடுமாம்.
இன்னும் சுவாரசியமாக, ஒரு வித பலூன் மூலம் நானோ ஜவ்வினை இதயத்துக்குள் செலுத்தி, பின்னர் அந்த பலூனை ஊதுவதன் மூலம் நானோ ஜவ்வு இதயத்தின் உட்புற சுவரின் மீது ஒட்டுமாறு செய்துவிடலாமாம். இந்த மருத்துவ முயற்சியை செயல்படுத்த மெட்ரானிக் என்னும் நிறுவனத்தின் உதவியை நாடியிருக்கிறார் ரோஜர்.
இது தவிர, விளையாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனமான ரீபோக்குடன் இணைந்து, விளையாட்டில் பயன்படக்கூடிய, உடலில் அணியும் வகை மின்சாரக் கருவிகளை தயாரிக்கும் எண்ணமும் இருக்கிறதாம் ஆய்வாளர் ரோஜருக்கு.

எக்ஸெல் தொகுப்பில் டெக்ஸ்ட் டிசைன்

எக்ஸெல் தொகுப்பில் டெக்ஸ்ட் டிசைன்


தாங்கள் அமைத்திடும் ஒர்க்ஷீட் மிக அழகாக இருப்பதை யார் தான் விரும்ப மாட்டார்கள்? செல்கள், அதில் உள்ள டேட்டாக்கள், மேலே உள்ள பார்முலாக்கள், சார்ட்கள் என அனைத்தும் அழகான தோற்றத்தில் இருந்தால், அதனைத் தயாரித்த நம்மை மற்றவர்கள் பாராட்டாவிட்டாலும், நம் மனதிற்கு நிறைவாக இருக்கும் அல்லவா! இது சார்ந்த ஓர் அம்சத்தை இங்கு பார்ப்போம்.
எக்ஸெல் ஒர்க் ஷீட் லே அவுட் மற்றும் டிசைன் செய்வதில் அனைவரும் பொதுவான பிரச்னை ஒன்றைச் சந்திப்பார்கள். செல்கல் டேட்டா டெக்ஸ்ட் உள்ள அளவிற்கு அதிகமான இடத்தை எடுத்திருக்காது. இதனால் டேட்டா உள்ள செல்களில் அதிகமான காலி இடம் இருக்கும். இது ஒர்க் ஷீட் டிசைனில் விரும்பாத தோற்றத்தினைத்தரும்.
இந்த பிரச்னையைத் தீர்க்க எக்ஸெல் இரண்டு வழிகளைத் தருகிறது. டெக்ஸ்ட்டை நெட்டாக அமைக்கலாம்; அல்லது சுழற்றி ஒரு கோணத்தில் வைக்கலாம். எந்த செல்கள் டெக்ஸ்ட்டை மாற்றி அமைத்திட வேண்டுமோ அந்த செல்களைத் தேர்ந்தெடுக் கவும். பின் இதில் மவுஸ் ரைட் கிளிக் செய்தால் மெனு ஒன்று கிடைக்கும்.இதில் Format Cells என்பதில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள பல டேப்களில் அலைன்மெண்ட் என்பதனைத் தேர்ந்தெடுத்தால் நெட்டாக, படுக்கை வசமாக, குறிப்பிட்ட கோணத்தில் சாய்வாக டெக்ஸ்ட்டை அமைத்திட வழிகள் தரப்பட்டிருக்கும். உங்கள் டிசைன் கற்பனைக்கேற்ப டெக்ஸ்ட்டை அமைத்திட கட்டளை தேர்ந் தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது காலி இடம் இல்லாமல் டெக்ஸ்ட் அமைக்கப்பட்டு அழகான தோற்றத்தில் இருக்கும்.

செல்களில் பார்டர் நீக்கம்

ஒர்க்ஷீட்டில் உள்ள செல்களில் உள்ள பார்டரை நீக்க ஒரு சிறிய, விரைவான வழி உண்டு. பொதுவாக ஒரு செல்லில் உள்ள மதிப்பின் பால், ஒர்க்ஷீட் பார்ப்பவரின் கவனத் தை ஈர்க்க, அதில் பார்டர்களை இணைத்து ஏற்படுத்துவது உண்டு. செல் அல்லது பல செல்களில் ஏற்படுத்தப்பட்ட பார்டர்களை மட்டும் நீக்க ஓர் அருமையான வழி உண்டு. அந்த செல்களைத் தேர்ந்தெடுத்த பின்னர், Ctrl+_ கீகளை அழுத்தவும். அதாவது கண்ட் ரோல்+ஷிப்ட் மற்றும் அண்டர்ஸ்கோர் கீ. செல் லில் உள்ள பார்டர்கள் மட்டுமே நீக்கப்படும். மற்ற பார்மட்டுகள் அப்படியே இருக்கும்.

வலது இடதாக செல் பயணம்

எக்கச்சக்கமான டேட்டாவுடன் ஒர்க் ஷீட் அமைத்து எக்ஸெல் பயன்படுத்துபவரா நீங்கள்? அப்படியானால் ஒரு முனையில் உள்ள செல்லில் இருந்து அடுத்த முனை வரை செல்வது பல வேளைகளில் உங்களுக்கு எரிச்சலைத் தரும் செய்கையாக இருக்கும். தொடர்ந்து ஸ்குரோல் செய்து வலது இடது மூலைக்குச் செல்வீர்கள். அல்லது பேஜ் அப் அல்லது பேஜ் டவுண் கீயைப் பல முறை தட்டி மேலும் கீழுமாகச் சென்று டேட்டா உள்ள கடைசி செல்லைச் சென்று அடைவீர்கள். டேட்டா தரப்பட்டுள்ள கடைசி செல்லுக்குச் செல்ல வேறு எளிதான வழியே இல்லையா? என்று நீங்கள் மனதிற்குள் எண்ணிக் கொண்டு அது குறித்துத் தேடாதவராய் இருந்தால் கீழ்க்காணும் செயல்முறைய மேற்கொள் ளுங்கள்.
டேட்டா தரப்பட்டுள்ள கடைசி செல்லை ஆங்கிலத்தில் “edge” என்று அழைக்கிறோம். ஒரு டேட்டா ரேஞ்சில் (Data Range) இறுதியாக டேட்டாவைக் கொண்டிருக்கின்ற செல்லை இது குறிக்கிறது. டேட்டா ரேஞ்ச் என்பது தொடர்ச்சியாக டேட்டாவைக் கொண்டிருக்கின்ற செல்களாகும். ரேஞ்ச் என்பதன் முடிவில் ஒரு காலியான படுக்கை வரிசை அல்லது நெட்டு வரிசை இருக்கும். அதன் பின்னால் மேலும் ஒரு டேட்டா ரேஞ்ச் தொடங்கலாம்.
இனி எப்படி முனைக்குச் செல்வது என்று பார்க்கலாம். இந்த டேட்டா ரேஞ்சில் ஏதேனும் ஒரு செல்லைத் தேர்ந்தெடுத்து அதில் கர்சரை வைத்திடவும். கர்சர் செல்லின் முனையில் வைக்கப்பட வேண்டும். அப்படி வைக்கப்படுகையில் அந்த கர்சர் நான்கு வழி அம்புக் குறியாக மாறுவதைக் காணலாம். இனி இருமுறை மவுஸைக் கிளிக் செய்திடுங்கள். உடனே டேட்டா ரேஞ்சின் முனைக்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள்.
நீங்கள் செல்லின் வலது முனையில் கர்சரை வைத்து கிளிக் செய்தால் வலது முனைக்கும் இடது முனையில் கிளிக் செய்தால் இடது முனைக்கும் செல்வீர்கள். அதே போல செல்லின் கீழாக கர்சரை வைத்து டபுள் கிளிக் செய்தால் கீழ் முனைக்கும் மேலாகக் கர்சரை வைத்து டபுள் கிளிக் செய்தால் மேல் முனைக்கும் எடுத்துச் செல்லப்படுவீர்கள். இதன் மூலம் ஒரு மூலைக்குச் செல்ல பல முறை கீகளை அழுத்தும் வேலை மிச்சமாகிறது.